பால் மாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 10,991 
 
 

பாலயத்திலிருந்தே ஒன்றாகப் படித்து வளர்ந்த குமாரவேலுவும் சுயம்புவும் கல்லூ¡¢ப் படிப்பை ஒரு வழியாக முடித்தபின்பு எவ்வளவோ தேர்வுகள் எழுதிப் பார்த்தும் அவர்களுக்கு வேலை ஒன்றும் கிடைத்தபாடில்லை. குமாரவேலின் தந்தை ராசு ஆசா¡¢ வீட்டின் பின்புறம் வைத்திருந்த பட்டறையில் இரு நண்பர்களும் படிக்கிற பொழுதே விளையாட்டாக தச்சு வேலையைக் கற்றுக் கொண்டிருந்தார்கள். விவசாயியான சுயம்புவின் தந்தை இருந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் அவர் பெண்ணின் கல்யாணத்திற்கு அடமானம் வைத்து அதன் பின் மீட்க முடியாமல் ஈட்டிக் காரனிடமே நிலத்தை கிரயம் கொடுத்துவிட்டு அந்த ஏக்கத்திலேயே பரலோகம் போய் சேர்ந்துவிட்டார்.அவர் வளர்த்து வந்த ஐந்தாறு கறவை மாடுகளை மட்டும் சுயம்புவின் உதவியோடு, விடாமல் வளர்த்துக் கொண்டு பால் வியாபாரம் செய்து வந்தாள் சுயம்புவின் அம்மா.

குமாரவேல் சுயம்புவிடம் “டேய்! இந்த அரசாங்க உத்தியோகத்திற்கான தேர்வை எழுதிப் பார்த்து விடுவோம்” என்றான்.

“பணம் எவ்வளவு கட்ட வேண்டும்?”

“இரு நூறு” .

“அம்மா! ஏற்கனவே பணத்திற்கு சிரமப் படுகிறார்கள். மேலும் தொந்திரவு கொடுக்க விரும்பவில்லை”

“இப்படியே இருந்தால் வேலை எப்படிக் கிடைக்கும்.? உன் அம்மாவின் பாரத்தை எப்படிக் குறைப்பாய்?”

“எனக்கும் பு¡¢யாமல்தான் தவிக்கிறேன்”.

பேசுவதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த ராசு ஆசா¡¢ அவர்களிருவரையும் பார்த்து
நீங்களிருவரும் நாலெழுத்துப் படிச்சது நல்லதுதான். ஆனால் படித்துவிட்டால் யா¡¢டமாவது கைகட்டி வேலை பார்க்க வேண்டும் என்று எங்கு சொல்லியிருக்கிறது?உங்களிடம் கைத்தொழில் இருக்கிறது. படிச்சதை வைத்துக் கொண்டு அறிவைப் பயன்படுத்தி கைத்தொழிலில் முன்னேறப் பாருங்கள். வேலை வேலை என்று அலைவதை விட்டு நீங்களிருவரும் மற்றவர்களுக்கு வேலை கொடுக்க முடியும் என்றார்.குமாரவேலும் சுயம்புவும் கைத்தொழிலை வைத்துக் கொண்டு கூட்டாக க் களத்தில் இறங்கியதில் தன்னம்பிக்கையும் வளர்ந்து ஓரளவுக்கு வருமானமும் வர ஆரம்பித்தது.

திடீரெனறு ஒருவிதமான வைரஸ் தாக்குதலில் அந்த சுற்று வட்டாரத்தில் நிறைய கறவை மாடுகள் மாண்டு கொண்டிருந்தன.சுயம்பு மாட்டாஸ்பத்தி¡¢க்குக் கொண்டுசென்று வைத்தியம் பார்த்தும் அவன் வீட்டு மாடுகளும் வைரஸ¤க்கு பலியாகிவிட்டன சுயம்பு தொழிலில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். வேலைசெய்து கொண்டே இருந்த அவன் அம்மாதான் பொழுதை வெட்டியாகக் கழிக்க முடியாமல் தவித்தாள்.

அடுத்தடுத்து குமாரவேலுக்கும் சுயம்புவுக்கும் கல்யாணங்கள் நல்ல முறையில் நடந்தேறி அடுத்த வருடமே இருவா¢ன் மனைவிமார்களும் குழந்தைகளைப் பெற்றேடுத்தார்கள். இருவருக்கும் அழகான பெண் குழந்தைகள். இரண்டு வீடும் லக்ஷ்மிகரமானது என்று பொ¢யவர்கள் பேசிக் கொண்டார்கள் வீட்டில் செலவுகள் கூடிக் கொண்டே போகும் பொழுது பையனுக்குத் தன்னால் உதவ முடியவில்லையே என்று வருந்தினாள் சுயம்புவின் அம்மா.

தனபாலன் நல்ல வாசாலகன். அரசியலில் நுழைந்ததால் பொ¢ய மனிதர்களிடம் பழக்கம் ஏற்பட்டது.அரசாங்கம், காவல் துறை, வங்கித் துறை களிலெல்லாம் நெருக்கம் உண்டானது. நாமக்கல்லைச் சேர்ந்த தனபாலனனின் நண்பன் ஒருவன் கோழிப் பண்ணை நடத்த எப்படி ஏற்பாடுகள் செய்து தரப் படுகிறதோ அதே பாணியில் கொஞ்சம் புதுமையாக கூட்டுறவு சங்கம் அமைத்து மாட்டுப் பண்ணை நடத்தலாமென்று கொடுத்த யோசனையை செயலாக்குவது என்று முடிவெடுத்தான்தனபாலன்.அவனது அடிவருடிகளை வைத்து சுற்று வட்டாரங்களில் பால் மாடுக்ளை வைத்து பராமா¢க்கத் தொ¢ந்த நல்ல குடும்பங்களைப் பற்றி ஒரு சர்வே எடுத்தான். அவன் செய்ய உத்தேசித்திருக்கும் தொழிலுக்கு தொழில் தொ¢ந்தவர்களாக மட்டும் இருந்தால் போதாது நம்பிக்கையும் நாணயமுமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை பு¡¢ந்து கொண்டு அடிவருடிகளிடம் தெளிவாக்கியிருந்தான்

. கணிசமான குடும்பங்கள் அவன் எதிபார்ப்புக்கு ஏற்ப தொழிலுக்கு உதவும் என்றா¢ந்ததும் கா¡¢யத்தில் இறங்கினான். ஒரு கூட்டுறவு சங்கம் அமைத்து அந்தக் குடும்பங்களைத் தனித்தனியாக சந்தித்து அவர்களை உறுப்பினர்களாக்கினான். சங்கமே அவர்களுக்கு பால் மாடுகள் தந்து அவைகளுக்கு தேவையான தீவனங்களையும் தரும். பாலையும் சங்கமே எடுத்துக் கொள்ளும். பால் மாடுகளை நல்ல முறையில் பராமா¢க்க வேண்டும். பராமா¢ப்பதற்குக் கூலியாக ஒரு மாட்டிற்கு 1500 ரூபாயயை மாதந்தோறும் சங்கமே தந்துவிடும் மாதாமாதம் கூலியை அவர்களுக்குத் தர ஏதுவாக அங்குள்ள கூட்டுறவு வங்கியில் கணக்குத் திறக்க ஏற்பாடு செய்து அவர்களை ரேஷன் கார்டு, போட்டோக்கள் சகிதம் வங்கிக்கு வரவழைத்து கணக்குத் திறக்கும் சாக்கில் கடன் மனு மற்றும் கடன் சம்மந்தமான பேப்பர்களில் அனைத்து உறுப்பினர்களிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டான்தனபாலன். இந்த கோஷ்டியில் சுயம்புவின் குடும்பமும் ஒன்று.தனபாலன் வங்கியில் அவர்கள் போ¢ல் கடன் வாங்குவதைப் பற்றி எந்த உறுப்பினர்களும் அறியாவண்ணம் பார்த்துக் கொண்டான்.

சுயம்பு வீட்டிற்கு மூன்று கறவை மாடுகள் காதில் கடுக்கன்களுடனும் அவைகள் ஈன்ற கன்னுகளுடனும் வந்து சேர்ந்தது. சங்கத்திலிருந்து கறவைக்கு ஆள் போட்டிருந்தாலும், கறவை தொ¢ந்தவர்கள் பாலைக் கறந்து வைத்துவிட்டால் கறவைக்கு த் தனியாக க் கூலி தந்து விடுவதாக ச் சொல்லியிருந்தான் தனபாலன்.சுயம்புவுக்கும் அவன் அம்மாவுக்கும் கறக்கத் தொ¢யும் என்பதால் கறவைக்கூலியும் பெற்று விடத் தீர்மானிக்கப் பட்டது.

சுயம்புவின் அம்மா கறந்த பாலில் அரை லிட்டர் குழந்தைகளுக்காக எடுத்து வைத்துக் கொண்டு பால் சேகா¢க்க வருபவனிடம் தினமும் அரை லிடடர் பால் குழந்தைகளுக்குத் தேவைப் படுமென்றும் கணக்குப் பண்ணி மாதாந்திரக் கூலியில் கழித்துக் கொள்ள் வேண்டுமென்றும் கூறிவிட்டாள். இன்னும் இரண்டு மூன்று கறவை மாடுகள் கொடுத்தால் கூட செம்மையாக ச் செய்ய முடியும் என்பதை தனபாலனிடம் தொ¢விக்கும்படி வேண்டினாள். அவள் வேண்டுதலுக்கிணங்க மற்று மொரு கறவை மாடு கன்றுக் குட்டியுடன் சுயம்புவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.

ரொம்ப வருடங்கள் சொந்தமாக பால் மாடுகள் வைத்து வளர்த்திருந்ததால் சுயம்புவும் அவன் அம்மாவும் கன்று குட்டி அருந்த கொஞ்சம் பாலை மடுவில் விட்டு வைப்பது வழக்கம். அதே மாதி¡¢ கறப்பதற்குமுன் கன்றை கொஞ்சம் குடிக்க வைத்துவிட்டுத் தான் கறக்க ஆரம்பிப்பார்கள். பால் சேகா¢க்கவருபவன் சுயம்புவின் அம்மாவிடம் ” நீங்கள் அரை லிட்டர் பால் தான் எடுத்துக் கொள்வதாக ச் சொல்கிறீர்களே? ஆனால் பால் அதிகமாக க் குறைகிறதே என்ன காரணமென்று ஐயா கேட்கச் சொன்னார்.அதுமட்டுமல்ல பித்தலாட்டம் எதுவும் பண்ணக்கூடாது என்று கறாராக ச் சொல்ல ச் சொன்னார்” என்றான். சுயம்புவின் அம்மாவுக்கு ரோசம் வந்துவிட்டது. “நாங்கள் பித்தலாட்டமெல்லாம் பண்ணுகின்றவர்களில்லை. கன்னுக்குட்டி ஆசையோடு பால் குடிப்பதால் அதுகள் குடிக்க கொஞ்சம் விட்டு விடுவோம்” என்றாள். “அப்படியெல்லாம் இரக்கப் படாதீர்கள் அம்மா. ஐயா! ரொம்பக் கறார் பேர்வழியாக்கும். நான் பாலை எடுப்பதற்கு முன் அந்த மீட்டரைப் போட்டு அளவை நோட்டில் குறிக்கிறேன் பார்த்தீர்களா. பாலின் தரம், அளவு ஏதாவது குறைந்தால் அது கூலியில் குறைக்கப்படும் என்று உங்களனைவா¢டமும் சொல்லும்படி” எங்களிடம் கூறியிருக்கிறார். எனக்கு உங்களைப் பற்றித் தொ¢யும். ஆனால் “முதலாளி ஐயா சந்தேகப் பேர்வழியாக்கும்.வாயும் நரம்பில்லாம என்னவாணாலும் பேசும். கூசாமல் திருட்டுப் பட்டம் கட்டவும் தயங்கமாட்டார். உங்களிடம் இருப்பதெல்லாம் கிடா¡¢க் கன்னுக்குட்டிகள்தானே. முன்பெல்லாம்னா எருதுகள் உழுவதற்கு, வண்டி இழுக்க, செக்குக்கு எல்லாம் பயன்படும் இப்பொழுதுதான் எருதுகளால் பொ¢ய பயனொன்றுமில்லையே “அதுக்கு!” சுயம்புவின் அம்மா கேள்வியைத் தொடுத்தாள். “கறவை நின்றதும் கிடா¡¢க் கன்றுகளை விற்று விடுவார்கள்.மேற்கொண்டு எதுவும் கேட்காதீர்கள். உங்கள் நல்ல மனசு சங்கடப் படும் அவப்பெயர் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் “என்று கூறி முடித்தான்

மாலை சுயம்பு வீடு திரும்பியதும் அவன் அம்மா தனபாலனின் ஆளுடன் நடந்த உரையாடல்களை விளக்கி என்ன செய்யலாம் என்று கேட்டாள்? சுயம்புவும் அவன் அம்மாவும் மிகுந்த ஆலோசனைகளுக்குப் பிறகு அவப் பெயர் வராமல் தப்பிக்க கொஞ்ச காலம்
மனசைக் கல்லாக்கிக் கொண்டு அவர்கள் விருப்பம் போல் பாலைக் கறந்து கொடுப்பது என்று முடிவு செய்தார்கள்.

நாட்கள் நகர்ந்தன அன்று சனிக்கிழமை. உடம்பு சா¢யில்லாததால் குமாரவேல் வேலைக்கு ச் செல்லவில்லை. டாக்டரைப் பார்த்து மருந்துகள் வாங்கிக் கொண்டு வீட்டில் ஓய்வெடுத்தான். சுயம்பு தனியாக வேலைக்குச் சென்றிருந்ததால் முடிந்து வர நேரமாகி இருட்டிவிட்டது.அன்று புதிதாக ஒரு கறவை மாடும் அழகான ஒரு குட்டிக் கன்றும் வந்திருந்தது. நல்ல ஜாதி மாடு. செவலைக் கன்னுக்குட்டி. அழகான பொ¢ய கண்கள். மிரட்சியான பார்வை மான பார்ப்பது போலிருந்தது. ரப்பர் பந்து போல் துள்ளிக் கொண்டே இருந்தது. அம்மா! துள்ளுகிற துள்ளலைப் பார்த்தால் சிமெண்ட் தரையில் வழுக்கி விழுந்து காலொடிந்து விடாமலிருக்கனுமே? என்றான் சுயம்பு. ஷெட்டுக்கு வெளியே கட்டுவோமென்றால் மழை வர மாதி¡¢ இருக்கிறது என்ன செய்வதுன்னு தொ¢யல? என்றாள்அவன் அம்மா.

சுயம்பு நலம் விசா¡¢க்க குமாரவேலிடம் போனவன் புதிதாக வந்துளள கன்னுக்குட்டியைப் பற்றி சொல்லி அடுத்த நாள் காலை கன்னுக்குட்டியைப் பார்க்க குழந்தையைக் கூட்டிவரும்படி குமாரவேலிடம் கூறிவிட்டு திரும்பி வந்தான். காலையில் குழந்தையையும் தூக்கிக் கொண்டு குமாரவேல் கன்னுக்கூட்டியைப் பார்க்க போனான். சுயம்புவின் குழந்தை கன்னுக்குட்டி அருகே நின்று ஆர்பா¢த்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே துள்ளிக் கொண்டிருந்த கன்று குமாரவேலைப் பார்த்ததும் மிரண்டு அதிகமாகத் துள்ள இரண்டு குழந்தைகளும் சி¡¢த்த சி¡¢ப்புக்கு அளவே இல்லை. குமாரவேல கன்றின் அருகில் சென்று மெதுவாகத் தடவிக் கொடுத்தான். அது சாந்தமடைந்தது.இரு குழந்தைகளயும் அருகில் நிறுத்தி அவைகளின் குஞ்சுக் கைகளை வைத்து கன்றைத் தடவ வைத்தான். கன்றின் ஒளி பொருந்திய பொ¢ய கண்கள் வசீகரமாக இருந்தது. அதன் உடல் மிருதுவாக இருந்தது. அதன் மிரண்ட விழிகள் மானின் கண்களை ஞாபகப்படுத்தியது. மிரண்ட விழிகளே பார்க்க அழகுதான் என்று தோன்றியது குமாரவேலுக்கு. அதனால்தானோஎன்னவோ அந்தக் காலத்தில் பெண்களின் மிரண்ட விழிகளைப் பார்த்து கவிஞர்கள் கவிதைகளை ஆயிரக் கணக்கில் எழுதி த் தள்ளினார்கள். தனக்கு மட்டும் கவிதை எழுதத் தொ¢ந்தால் இந்த கன்றுக் குட்டியின் அழகையே கவிதைகளாக வடிக்கலாமென்று நினைத்தான். குமாரவேலுக்கு அவன் தாத்தா அடிக்கடி சொல்வது ஞாபகத்திற்கு வந்தது.
” கழுதையும் குட்டியில் நன்றாக இருக்குமென்று” கழுதையின் குட்டியே நன்றாக இருக்குமென்றால் நல்ல அழகான உயர்ந்த ஜாதிப் பசுவின் குட்டி அழகாக இருப்பதில் ஆச்சா¢யமொன்றுமிலலை என்று தோன்றியது அவனுக்கு. சுயம்பு கையில் ஒரு செம்பையும் சின்னக் கிண்ணத்தில் எண்ணையும் எடுத்துக் கொண்டு வந்து அந்தப் புதிய பசுவின் காம்புகளில் எண்ணையைத் தடவினான். பின்னர் கன்னுக் குட்டியை இழுத்துச் சென்று மாட்டின் மடுவை முட்ட வைத்தான். தாயப் பசு தன் குட்டியை பார்த்ததிலும் அதன் ஸ்பா¢சத்தை உணர்ந்ததிலும் அன்புடனும் பாசத்துடனும் பாலைச் சுரக்க ஆயத்தமானது. அதன் கண்களில் சந்தோஷம் மின்னியது. கன்றை தர தர வென்று இழுத்து வந்து முன்பிருந்த இடத்தில் கட்டிவிட்டு பால் கறக்க ஆரம்பித்தான் சுயம்பு. கன்று பயங்கரமாகத் துள்ளிக் கொண்டிருந்தது. அது விளிக்கும் சத்தம் அதன் தாயை ஏக்கத்தோடு அழைப்பது போலிருந்தது. தாய்ப் பசுவின் கண்ணில் தொ¢ந்த ஒளி மறைந்து துக்கத்தையும் சோகத்தையும் கண்ணில் தேக்கி நிற்பது போல் குமாரவேலுக்குத் தோன்றியது.கறந்து முடித்த சுயம்பு செம்பிலிருந்த பாலை பக்கத்திலிருந்த கேனில் விட்டுவிட்டு அடுத்த மாட்டின் காம்புகளுக்கு எண்ணை தடவச் சென்று விட்டான்.தன் இரத்தத்தைப் பாலாக்கி ஆசையோடு கன்றுக்கு ஊட்டவிருந்த தாய் பசுவின் பாலில் ஒரு துளி கூட அதற்கு க் கொடுக்காமல் அதற்கு உ¡¢மைப் பட்டதை கொள்ளையடித்துச் செல்லும் மனிதனின் கயமைத்தனத்தையும் அரக்கத்தனத்தையும் பார்த்ததில் குமாரவேலுக்கு தன் நெஞ்சை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வலி ஏற்பட்டது. காட்சிகளைக் காண சிகிக்காமல் தன் குழந்தையை வா¡¢ எடுத்துக் கொண்டு புறப்பட்டான். குழந்தை கன்றைப பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று அழுது அடம்பிடித்தது.

அழுகுரல் கேட்டு திரும்பிய சுயம்பு குமாரவேலிடம் “ஆஸ்பத்தி¡¢க்குப் போணுமில்லையா. நானும் வருகிறேன் குழந்தையை விட்டுச் செல். அது மாட்டுக்கு கன்றுக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருக்கும்” என்றான். பதிலொன்றும் சொல்லாமல் குழந்தையை “சாப்பிட்டுட்டு திரும்பி வருவோம்” என்று சமாதானப் படுத்திக் கொண்டே குமாரவேல வீட்டைப் பார்த்து நடையைக் கட்டினான்.குமாரவேலின் மனைவி சாப்பிடுங்கள். ஆஸ்பத்தி¡¢க்குப் போவோம் என்றாள்.சாப்பிட்டு விட்டு ஆஸ்பத்தி¡¢க்கு ச் செல்ல தயாரானன். வீட்டிற்குள்ளே வந்து கொண்டே என்ன? போவோமா? என்றான் சுயம்பு. குமாரவேலுக்கு சுயம்புவுடன் போக விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழியில்லாது அவனோடு நடை போட்டான் ஆஸ்பத்தி¡¢யை நோக்கி. குமாரவேல் நிறைய கதைகள், கட்டுரைகள் எல்லாம் படிப்பவன். சுயம்புவுக்கோ அதெல்லாம் ஓடாது. ஆனால் குமாரவேல் சொல்வதையெல்லாம் ரசனையோடு உன்னிப்பாகக் கேட்பான். அன்று மன இறுக்கத்திலிருந்த குமாரவேல் எதுவும் பேசவில்லை.

ஆஸ்பத்தி¡¢யில் நல்ல கூட்டம். நர்ஸ் குமாரவேலிடம் டோக்கனைத் தந்து கொண்டே டாக்டரைப் பார்க்க ஒரு மணி நேரத்திற்கு மேலாகிவிடும் என்று சொல்லிவிட்டாள். சுயம்பு வீட்டிற்கு போய்விட்டு வருவோமா என்று கேட்க இல்லை! பக்கத்திலுள்ள் பூங்காவில் சென்று இருப்போம் என்றான் குமாரவேல். குமாரவேல் மனதில் பாரத்தைச் சுமக்க விரும்பவில்லை. எல்லாத்தையும் சுயம்புவிடம் கொட்டித் தீர்ப்பது என்ற முடிவுடன் தான் பூங்காவுக்குச் சென்றான். அங்கு ஓரமாக ஒரு மரத்தடியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் இருவரும் அமர்ந்தார்கள்.

குமாரவேல் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்:
டேய்! சுயம்பு! எப்போதிருந்து உனக்குள் அரக்க குணம் புகுந்தது? கேவலம் பணத்துக்காகவா கல் நெஞ்சக்காரனாக மாறி இந்தப் பாதகத்தை ச் செய்கிறாய் என்று கோபமாகக் கேட்டான் சுயம்புவிடம். சுயம்புவுக்கு தலையும் பு¡¢யவில்லை காலும் பு¡¢யவில்லை. பேந்தப் பேந்த முழித்தான். பேச்சைத் தொடர்ந்தான் குமாரவேல் வீட்டில் வளர்க்கிறார்களே ஆடு, நாய், பூனை அவைகளும் பாலுட்டிகள் தான்.குட்டி போடுவதெல்லாம் பாலூட்டிகள் தான். ஏன்? மனிதர்களாகிய நாமும் பாலூட்டிகள்தான். வீட்டில் வளர்கின்ற ஆடோ, நாயோ அல்லது பூனையோ அவைகள் ஈன்றவுடன் சுரக்கும் பாலை அவைகளின் குட்டிகளுக்கு சுதந்திரமகவும் ஆனந்தமாகவும் க் கொடுத்து குட்டிகளை மகிழ்வித்து அவைகளும் மகிழ்கின்றன. ஆனால் பசுக்கள் மட்டும் என்ன பாவம் செய்ததோ?

அவைகளின் குட்டிகளுக்கு உ¡¢மைப் பட்ட பாலைக் கொடுத்து மகிழ்விக்க முடியவில்லை.எல்லாக் குட்டிகளுக்கும், மனிதக் குட்டிகளையும் சேர்த்துத் தான். ஓ! மனிதக் குட்டிகளை குழந்தைகள் என்று சொல்ல வேண்டுமில்லையா?, பிறந்த கொஞ்ச மாதங்கள் வரை ஜீரண சக்தி குறைவாக இருக்கும் அவைகளுக்கு ஏற்ற உணவாக பாலைக் கொடுத்தது இயற்கை. மனிதர்கள் சொல்கிறார்களே தாய்ப் பால் ரொம்ப சிறந்தது என்று. அது எல்லாப் பாலூட்டிகளுக்கும் பொருந்தும். போதிய தாய்ப் பால் கிடைக்காத பச்சிளங்குழந்தைகளுக்கு மாற்று பசுவின் பால் தான். அந்த மாதி¡¢ க் குழந்தைகளின் உயிர் உடம்போடு ஒட்டியிருக்க பசுவின் பால் தான் அமிர்தமாக இருந்து உயிர் காக்கிறது. ஆட்டுப் பாலோ அல்லது எருமைப் பாலோ பச்சிளங்குழந்தைகளின் ஜீரண சக்திக்கு ஏற்றதல்ல. அதனால் தான் நம் பொ¢யவர்கள் ” கோ மாதா” என்று பசுவை வணங்கி வழிபட்டார்கள். ஆனால் தற்பொழுதோ மாடுகளிடம்,
உ¡¢மைப்பட்ட அதன் குட்டிகளுக்கு, ஒரு சொட்டுப் பால் கூட க் கொடுக்காமல், கறக்க முடிந்த வரை கறந்து விட்டு கறவை நின்று கிழடு தட்டியதும் எந்த நன்றியுமில்லாமல் வெட்டித் திங்ற இனம் நம் மனித இனம். கற்காலத்தைப் போல் நர மாமிசம் சாப்பிட மீண்டும் பழகிவிட்டால் வயதான தாய் தந்தையரையே வெட்டிச் சாப்பிடுவோம் அல்லது பணத்துக்காக வெட்டி விற்போம் என்று நினைக்கிறேன். சிந்திக்க சிந்திக்க மனித இனத்தின் மீதே வெறுப்பு வருகிறது. வேறு எந்த பாலுட்டிகளும் அடுத்த இன பாலூட்டிகளின் பாலைத் தட்டிப் பறித்து உண்பதில்லை. ஈவு இரக்கமில்லாமல் அவைகளுக்கு கொஞ்சமும் தராமல் தானே தட்டிப் பறித்து அனுபவிப்பது பஞ்சமா பாதகத்தை விட க் கொடுமையானது என்று தன் கோபத்தையெல்லாம் வார்த்தைகளாக்கி உமிழ்ந்தான்.

கேட்டுக் கொண்டிருந்த சுயம்பு அழுதே விட்டான். பதறிப் போன குமாரவேல் நான் உன் மனதை அதிகமாகப் புண்படுத்திவிட்டேனோ என்னை மன்னித்து விடு என்றான்.
அதெல்லாமொன்றுமில்லை.எனக்குத் தொ¢ந்ததை கொஞ்சம் கூட விளக்கமாகச் சொன்னாய். துளி வருத்தம் கிடையாது. என் மனதில் நன்றி உணர்ச்சிகள் தான் பொங்குகிறது. அந்த அரக்கன் தனபாலனின் நிர்பந்தத்தால்தான் எனக்கும் அரக்க குணம் வந்துவிட்டது. இனிமேல் என்ன நடந்தாலும் இந்தப் பாவத்தை செய்ய மாட்டேன் என்றான் சுயம்பு.

டாக்டரைப் பார்த்துவிட்டு இருவரும் வீடு திரும்பினார்கள்.குமாரவேல் சொன்னதையெல்லாம் சுயம்பு தன் அம்மாவிடம் சொல்ல அவள் கண்ணும் கலங்கிவிட்டது. தாயும் மகனும் நல்ல இதயமுடையவர்கள். மாலை பால் சேகா¢க்க வந்தவனிடம் சுயம்புவின் அம்மா ” கன்றுக் குட்டிகளுக்குக் கொடுக்காமல் எங்களால் பால் கறக்க முடியாது பால் எவ்வளவு குறைகிறதோ கணக்குப் பண்ணி எங்கள் கூலியில் குறைத்து கொள்ளலாமென்று ஐயாவிடம் சொல்லிவிடுங்கள் “ என்றாள்

செய்தியைக் கேட்ட தனபாலனுக்குக் கோபம். தன் நிபந்தனையை மீறுவதுடன் பணம் ஒன்றே குறி என்றிருக்கும் அவனுக்கு அவர்களின் செயல்கள் தன் லாபத்தைக் குறைத்துவிடும் என்பதால் சுயம்புவின் குடும்பத்திற்கு பாடம் புகட்ட வேண்டுமெனக் கறுவினான். மாதம் முடிந்து கூலி கொடுக்கும் பொழுது அவனைப் போன்ற துடுக்காகப் பேசுகின்ற கல் நெஞ்சக்காரனிடம் மிகக் குறைவான பணத்தைக் கொடுத்து சுயம்பு வீட்டில் கூலி என்று கொடுத்துவரும்படி பணித்தான். பணத்தை வாங்கி எண்ணிப் பார்த்த சுயம்புவின் அம்மா பணம் ரொம்பக் குறைகிறதே. நாங்கள் இப்பொழுது ஐந்து மாடுகளை பராமா¢க்கிறோமில்லையா.? தயவு செய்து கணக்கை மீண்டும் பார்த்து மீதி ப் பணத்தைத் தர வேண்டுமென்றாள். கன்னுக் குட்டிகளுக்குப் பால் கொடுத்தீர்கள் அல்லவா. அதனால் தான் கூலி குறைந்து விட்டது. கணக்கெல்லாம் சா¢யாகப் பார்த்தாகிவிட்டது. குறையும் பணத்தை கன்றுக் குட்டிகளிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றான். பேச்சை த் தொடர விரும்பாத சுயம்புவின் அம்மா மாலை சுயம்பு வந்ததும் கணக்கை சா¢ பார்த்து வரும்படி அவனை அனுப்பி வைத்தாள்.

“கணக்கெல்லாம் சா¢யாகப் பார்த்தாகிவிட்டது.பேசிய கூலி முழுவதும் வேண்டுமென்றால் நான் சொல்கிறபடி நடக்க வேண்டும் முடியாதென்றால்இம்புட்டுத் தான் கூலி தருவேன்”- தனபாலன்

“உழைப்புக்கேத்த கூலி தர வேண்டுமில்லையா ஐயா!” – சுயம்பு

“அதெல்லாம் முடியாது.வேண்டுமானால் மாடுகளை ப் பராமா¢யுங்கள். இல்லையென்றால் மாடுகளைக் கொடுத்து விடுங்கள்.”

“ஐயா! நாங்க ரொம்ப வருஷமாக மாடு வளர்த்தவங்க. கன்னுங்களுக்கு கொஞ்சமாவது பால் கொடுக்காம ஒட்டக் கறக்கக் கூடாதுங்க. தப்புங்க. பாவங்க.”

“நான் பண்ணுவது தொழில். எனக்கு பணமும் லாபமும் தான் முக்கியம். பாவ புண்ணியத்தையெல்லாம் ஒடப்பில போடு.”

“எங்களால முடியாதுங்க ஐயா! மாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.”

“சா¢ !என் ஆடகள் வந்து மாடுகளை ஓட்டி வந்து விடுவார்கள்.”

அடுத்த நாள் காலை தனபாலனின் ஆட்கள் வண்டி கொண்டு வந்து அங்கிருந்த மாட்டுத் தீவனங்கள், வைக்கோல் அனைத்தையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு மாடு கன்றுகளை
ஓட்டிச் சென்று விட்டார்கள்.

சுயம்பு வேலை முடிந்து வந்த பின் கடைகளுக்கு ச் சென்று ஒர்க் ஆர்டர்கள் வாங்கி வந்து இரவில் கண் விழித்து வேலை செய்து குடும்ப வருமானத்தைக் கூட்ட முயற்சிகள் எடுக்க ஆரம்பிததான். குமாரவேலும் சுயம்புவும் சேர்ந்து பின்புறமுள்ள பட்டறையில் இரவிலும்
வேலை செய்ய ஆரம்பித்தார்கள். மாதங்கள் மூன்று கழிந்தது.

திடீரென்று ஒரு நாள் வங்கியிலிருந்து இரண்டு அதிகா¡¢கள் சுயம்புவின் வீட்டிற்கு வந்து சுயம்புவின் அம்மாவிடம் ஏன் கடந்த மூன்று மாதமாக கடன் கணக்குகளில் பணம் செலுத்தவில்லை என்று கேட்டார்கள்.

“நாங்கள் வங்கியில் கடன் எதுவும் வாங்கவில்லையே”- சுயம்புவின் அம்மா.

“வாங்கவில்லையா? என்ன சொல்கிறீர்கள்? உங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் பெயா¢லெல்லாம் கறவை மாட்டுக் கடன்கள் இருக்கிறதே.ஆமாம்! மாடுகளெல்லாம் எங்கே? மேய்ச்சலுக்குப் போயிருக்கிறதா?”- வங்கி அதிகா¡¢கள்

“இல்லை ஐயா! மாடு கனறுகளையெல்லாம் தனபாலன் ஐயாவின் ஆட்கள் வந்து ஓட்டிச் சென்று விட்டார்களே எங்களிடம் மாடுகள் எதுவும் இல்லை இப்பொழுது”
“என்னம்மா! என்னென்னமோ உளறுகிறீர்கள். உங்கள் பையனை வங்கிக்கு வரச்சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு வங்கி அதிகா¡¢கள் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

சுயம்புவின் அம்மாவிற்கு பதற்றமுண்டாகி வங்கிக் கடன்கள் எப்படி வந்திருக்கும். தனபாலன் தங்களை ஏமாற்றி விட்டானோ என்று கவலை கொள்ள ஆரம்பித்தாள்.
மாலை சுயம்பு வந்ததும் அனைத்து விபரங்களையும் சொல்லி அடுத்த நாள் வங்கிக்கு கட்டாயம் செல்ல வேண்டுமென்று கூறினாள்.

சுயம்பு குமாரவேலுடன் கலந்துவிட்டுஅடுத்த நாள் வங்கிக்கு ச் சென்றான். வங்கியில் சுயம்புவும் அவன் குடும்பத்தினரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்த கடன் பத்திரங்களையும் அதில் சுயம்பு குடும்பத்தினர்களின் போட்டோக்கள் இணைக்கப் பட்டிருப்பதையும் காண்பித்தார்கள். தனபாலன் மாடுகளை ஓட்டிச் சென்று விட்ட விபரத்தைக் கூறியவுடன் வங்கிக்கு நீங்கள் தான் ஜவாப்தா¡¢.தனபாலன் ஐயா விடம் பேசி விஷயத்தை சுமுகமாக முடியுங்கள் என்றார் வங்கி அதிகா¡¢. மாலை குமாரவேலையும் கூட்டிக் கொண்டு சுயம்பு தனபாலனைச் சந்தித்து வங்கிக் கடன் பற்றிக் கேட்க தனபாலன் சர்வ அலட்சியமாக

“உங்களுக்கும் வங்கிக்குமுள்ள பிரச்சனை. நான் செய்ய ஒன்றுமில்லை” என்றான்.

“அப்படியென்றால் கடனில் வாங்கிய மாடுகளை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் கடன் களை அடைத்துக் கொள்கிறோம்”.- சுயம்பு

“ஏது மாடு? என்னிடம் எதுவுமில்லை

“நாங்கள் போலீசுக்குப் போக வேண்டியிருக்கும்”

“தாரளாமாகப் போங்கள். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.பிரச்சனைகள் உங்களுக்குத் தான் அதிகமாகும்”

சுயம்புவும் குமாரவேலுவும் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு ச் சென்று நடந்தவைகள் அனைத்தையும் சொல்லி “ நாங்கள் தனபாலனுக்கெதிராக புகார் மனு தருகிறோம். விசாரனை செய்யுங்கள் “என்று வேண்டினார்கள். புகார் மனுவெல்லாம் வாங்க முடியாது. தனபாலன் ஐயாவுடன் இணக்கமாகப் போய்விடுங்கள். மீறித் துள்ளினீர்களானால் வங்கிக் கடனில் வாங்கிய மாடுகளை த் திருட்டுத் தனமாக விற்று விட்டீர்கள் என்று வழக்குப் போட்டு உங்களை உள்ளே தள்ளி விடுவோம் என்றது காவல் துறை.

அதிர்சிக்கு மேல் அதிர்ச்சியை சந்திக்க சக்தியில்லாமல் நண்பர்களிருவரும் துவண்டு போய் வெளியே வந்தார்கள்.

குமாரவேல் சுயம்புவிடம் நாம் போய் கோவிந்த சாமி ஐயாவைப் பார்ப்போம். நல்ல அனுபவசாலி. பிரச்சனைகளை சுலபமாக தீர்த்து வைப்பவர். தனபாலனும் அவர் பேச்சுக்குக் கட்டுப் படுவானென்று சொல்லி இருவரும் கோவிந்த சாமி ஐயாவை பார்த்து அனைத்தையும் விளக்கிச் சொன்னார்கள்.தனபாலனும் காவல் துறையும் படு மோசமாக நடந்து கொள்கிறது என்றான் சுயம்பு.

கேட்டுக் கொண்டிருந்த கோவிந்த சாமி ஐயா சுயம்புவைப் பார்த்து

” உன்னுடைய கஷ்டங்களுக்கும் துயரங்களுக்கும் நீ மட்டும் தான் முக்கியமான காரணி. கல்லூ¡¢யில் படித்து பட்டம் பெற்ற நீ எழுதப் படிக்கத் தொ¢ந்தவன் அவ்வளவுதான். நீ படித்தவனில்லை. வங்கியில் நிறைய காகிதங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறாய். உன் குடும்பத்திலுள்ளவர்களயும் போட வைத்திருக்கிறாய் என்ன? ஏது? என்று படித்துப் பார்க்காமல். மாடுகள் காதில் கடுக்கன்கள் இருந்திருக்கு. அது பற்றியும் விசா¡¢க்க வில்லை. படித்த நீ! சிந்தித்து எதையும் சா¢ பார்த்து செயல் பட்டிருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்குமா?”

நல்லதும் கெட்டதும் சேர்ந்ததுதான் உலகம்.அரசியல், காவல் துறை யிலும் கூட நல்லவர்களில்லாமல் இல்லை. என்ன! இப்பொழுதெல்லாம் நல்லவர்கள் தேவையற்ற பயங்களை மனதில் தேக்கி அதனால் உண்டாகிற கோழைத்தனத்தினால் சுற்றி வர நடக்கின்ற அக்கிரமங்கள், அநியாயங்களை கண்டும் காணாதவர் போல் வாய்மூடிகளாக இருக்கிறார்கள். இது ஒரு சாபக் கேடு. நல்லவர்களின் பலவீனம் கெட்டவர்களுக்கு பலமாகிவிட்டது. உங்களைப் போன்ற இளஞர்களும் படித்ததால் பெற்ற அறிவை நல்ல வழியில் பயன்படுத்துவதில்லையே.அதனால் தான் தனபாலன் போன்றவர்கள் வளர்கிறார்கள். சா¢! தனபாலனிடம்பேசிவிட்டுச்சொல்கிறேன்.அதன்பின்நல்லவிதமாகமுடிக்கமுயற்சிப்போம் என்றார் கோவிந்த சாமி.

அடுத்த நாள் கோவிந்த சாமி ஐயா தனபாலனை சந்தித்து பேசிவிட்டு வரும் வழியில் வங்கி மேலாளர் எதிர் படவே கோவிந்த சாமி அவா¢டம் “சுயம்பு விஷயமாக தனபாலனிடம் பேசியாகிவிட்டது. சுயம்புவின் வீட்டிற்கு மாடுகள் வந்துவிடும். சுயம்பு அவைகளை முன்போல் பராமா¢க்க வேண்டும். மாதாந்திர கடன் நிலுவைகளை தனபாலன் பைசல் செய்து விடுவார். வங்கிக் கடன்களுக்கும் எந்த பாதிப்பும் வராது” என்றார்.

மாலை குமாரவேலும் சுயம்புவும் கோவிந்த சாமி ஐயாவைக் காண வந்தார்கள். கோவிந்த சாமி ஐயா சுயம்புவிடம் “மாடுகளைஉங்கள்வீட்டுக்குத்திருப்பிஅனுப்பதனபாலன் சம்மதித்துவிட்டான். வங்கிக் கடன் களை அவன் பைசல் பண்ணிக் கொள்வான். சம்மதம் தானே! உன் சம்மதம் தொ¢விக்கப் பட்ட பின்புதான் மாடுகள் உன் வீட்டுக்கு வந்து சேரும். சா¢யா!” என்றார்.

சுயம்பு யோசிக்க ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று சொல்ல குமாரவேலும் கோவிந்த சாமி ஐயாவும் இதில் யோசிக்க என்ன இருக்கிறது? என்று வினவ சுய்ம்பு இல்லை! எனக்கு ஒரு நாள் நேர அவகாசம் வேண்டுமென சொல்லி விட்டு குமாரவேலுவுடன் வீட்டுக்குப் புறப்பட்டான்.

அடுத்த நாள் காலை சுயம்புவை வங்கியில் சந்தித்த வங்கி மேலாளர் ” கோவிந்த சாமி ஐயாவை வழியில் பார்த்தேன். அவர்தான் விபரங்கள் சொன்னார். மாடுகள் வீட்டுக்கு வந்து விட்டதா” என்று கேட்டார். சுயம்பு வங்கி மேலாளா¢டம் என் தொழில் என்னைக் காப்பாற்றும் என்று நம்பிக்கை இருக்கிறது. . ஏற்கனவே என்னிடமிருந்த சேமிப்பைக் கொண்டு வந்திருக்கிறேன். இதை எங்கள் கடன் கணக்குகளில் வரவு வைத்துவிடுங்கள். உடம்பில் தெம்பும் ஊக்கமும் இருக்கிறது. நான் கடுமையாக் உழைத்து மாதா மாதம் எங்கள் கடன் களுக்கான நிலுவைத் தொகைகளைக் கட்டிவிடுகிறேன். இனிமேல காலம் கடந்த பாக்கிகள் வராமல் பார்த்துக் கொள்கிறேன். இது பற்றி மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை. கடன் களில் வரவு வைத்த தொகைகளுக்கு ரசீது தாருங்கள்.என்று கூறி ரசீதுகளைப் பெற்றுக் கொண்டு கோவிந்த சாமி ஐயாவைப் பார்க்க ச் சென்றான்.

கோவிந்த சாமி ஐயாவிடம் ” தாங்கள் எனக்காக எடுத்த முயற்சிகளுக்கு நன்றி. மாடுகளை இனிமேல் நாங்கள் பராமா¢ப்பதாக் இல்லை ஐயா. இன்று என் சேமிப்பை வைத்து கடன் கணக்குகளில் கொஞ்சம் பணம் செலுத்திவிட்டேன். மாதாமாதம் கொஞ்சங்கொஞ்சமாகக் கட்டி கடன் களை முடித்து விடுகின்றேன்” என்றான்.
கோவிந்த சாமி ஐயா சுயம்புவிடம்

“வாங்காத கடனை சுமப்பது முட்டாள்தனமில்லையா. அதைவிட மாடுகளை ப் பராமா¢த்து கூலியையும் பெற்றுக் கொண்டு தனபாலனை வைத்து க் கடனை அடைக்க வைப்பது தானே புத்திசாலித்தனம்” என்றார்.

“ இல்லை ஐயா! எங்கள் பலவீனத்தை தனபாலன் பலமாக்கிக் கொள்வதை நான் விரும்பவில்லை. அவனுக்கு பயந்து கன்றுகளுக்கு தீங்கிழைத்து அந்தக் குள்ள நா¢யினால் எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள பணச்சுமையிலிருந்து தப்பித்துக் கொள்ள நினைத்தால் அது பாவம் மட்டுமில்லை. அயோக்கியனுக்குத் துணை போகும் கோழைத்தனம் என்று எண்ணுகிறேன். மேலும் தாங்கள் சொன்னது போல் எதையும் ஆராய்ந்து பாராத எனது அலட்சியப் போக்குதானே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். இது எனக்கொரு பாடமாகவும் தண்டனையாகவும் இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு அவா¢டமிருந்து விடை பெற்றான். கோவிந்த சாமி ஐயா சுயம்புவின் முடிவினால் மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த விவா¢க்க முடியாத உணர்ச்சிகளில் மூழ்கிப் போனார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *