கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 7,804 
 
 

வஜ்ரவேலுவுக்கு கொஞ்ச நாளாகவே ஒரு பாரம் மனதில். கரெக்டா சொன்னா அவன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்ட நாளில் இருந்து.

வஜ்ராவேலுவுக்கு வயசு 50 ஆகிறது. ஒரு விபத்தில் முதல் மனைவியை இரண்டு வருடம் முன்னால் இழந்த அவன், இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொண்டது தன் மகனுக்காக. ஆனால் அவன் இரண்டாம் மனைவிக்கும் மகனுக்கும் ஒத்துப் போகவில்லை. தன் தாயிடத்தில் இன்னொருத்தியை வைத்துப் பார்க்க அவன் மகனுக்குப் பிடிக்கவில்லை. மனத்தாங்கல் முற்றி சண்டையில் முடிந்து மகனை வேறு ஸ்கூல் மாற்றி ஹாஸ்டலிலும் தங்க வைத்து விட்டான்.

மாலதிக்கு (அவன் இரண்டாம் மனைவி) வயசு 27 தான். வயசு வித்தியாசம் ரொம்ப இருந்தாலும் அவள் மனம் கோணாது தான் வஜ்ரவேலு நடந்துகொண்டு வருகிறான். அவளுக்கு பிடித்த விஷயங்களை தானும் ரசிக்க கற்றுக் கொண்டு விட்டான். யூத்புல்லான சினிமா, பாடல்கள், ஆடைகள் என்று அவன் நெருங்கிய நண்பர்கள் கேலி செய்யும் அளவுக்கு மாறி விட்டான்.

இப்படி இருக்கும் போது ஒரு தடவை ஒரு பிசினஸ் விஷயமாக மதுரை போக வேண்டி வந்தது. அப்படியே ஒரு வாரம் கோடைக்கானல் போகலாமே என்று மாலதி சொல்ல, அவனுக்கு அந்த ஐடியா பிடித்து போய் விட்டது. உடனே ஜாலி ட்ரிப் செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். நல்ல வசதியான காட்டேஜ் புக் செய்தான். அங்கேயே சமைத்து சாப்பிட வசதிகளும் இருந்ததால் வெளியே போக வேண்டிய வேலையும் இல்லை! ebay மூலமாக ஆர்டர் செய்து வாங்கி வைத்திருந்த இளம் பெண்களின் அந்தரங்க உபயோகத்துக்கான lingerieகளையும் மறக்காது எடுத்து வைத்து கொண்டான். ஒரு இருவது வயது குறைந்தால் போல உணர்ந்தான்.

அந்த நாளும் வந்தது. தேனிலவுக்கு செல்லும் தம்பதிகளை போல இருவரும் குதூகலமாகச் சென்றார்கள். பிசினஸ் முடித்து கோடைகானலும் சென்றார்கள்.

முதல் இரண்டு நாட்கள் வெளியிலேயே செல்லவில்லை. காட்டேஜே கதியென்று இருந்தார்கள். வஜ்ரவேலு முடிந்த வரை மாலதிக்கு ஈடு கொடுத்தான். ஆனால் வயது என்று ஒன்று இருக்கிறதே? மாலதி முகத்தில் எந்த விதமான ஏமாற்ற உணர்வையும் காட்டவில்லை என்றாலும் வஜ்ரவேலு குற்ற உணர்வில் வருந்தினான்..

மூன்றாம் நாள் காலையில் “என்னங்க இன்னைக்கு கொஞ்சம் வெளில சுத்திட்டு வரலாமா? போட்டிங், மார்க்கெட் போகணம்.” என்றாள் மாலதி சரியென்று சொல்லி, குளித்து முடித்து, காலை பிரேக் பாஸ்ட் முடித்து இருவரும் வெளியில் சென்றார்கள். போட்டிங் போன இடத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது.

இவர்கள் ஏறிய போட்டில் இவர்களுக்குப் பின் ஒரு 27-3௦ மதிக்க தக்க இளைஞன் ஏறினான். சிறிது தூரம் செல்லும் வரை அவன் மாலதியை உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தான். வஜ்ராவேலுவுக்கு கோவமாக வந்தது. என்னவென்று கேட்க நினைத்த போது ” மாலதி, நீங்க… நீ…. மாலதி தானே? நான் கண்ணன்” என்றான் அவன். தன் அழகான கண்களை அகலமாக விரித்த மாலதி , “கண்ணன்? வாவ்…. எத்தன நாள் ஆச்சு உன்னப் பார்த்து. எங்க இருக்க? என்ன பண்ற? கல்யாணம் ஆயிடுச்சா?” என்று கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினாள். பின்னர் திடீரென்று ஏதோ உறைத்தது போல இவன் பக்கம் திரும்பி, “என்னங்க, இவன் கண்ணன் என் school and collage mate. கண்ணன் இவர் என் husband Mr. Vajravelu என்று பரஸ்பர அறிமுகம் செய்து வைத்தாள். வஜ்ரவேலு அவள் கணவன் என்று கேட்ட கண்ணன் முகம் மாறியது. இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “hello sir” என்று சொல்லி கை கொடுத்தான். பின்னர் ஒரு ஐந்து நிமிஷம் மாலதியும் அவனும் பேசிக் கொண்டு இருந்தார்கள். ஏற்கனவே கலவர உணர்வில் இருந்த வஜ்ரவேலு அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று கவனிக்கவில்லை.

ஒரு முனை வரை சென்ற போட் திடீரென்று திரும்பியபோது அவன் சுய நினைவுக்கு வந்தார். மாலதியும் கண்ணனும் இன்னமும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போதுதான் கவனித்தான் கண்ணன் அடிக்கடி அவளை தொட்டுப் பேசுவதை. அப்படி என்னதான் பேசுவானோ தெரியவில்லை, அவனுடைய பேச்சை சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்த மாலதி கலகலவென்று சிரித்துக்கொண்டும் இருந்தாள். இவன் கவனிப்பதைப் பார்த்த மாலதி “என்னங்க கண்ணன் சொல்றான் இதுக்கு அப்புறம் குணா குகை போலாம்னு. அதுக்கு அப்பறம் trekking கூட போலாம்னு சொல்றான். போலாமாங்க?” என்று கேட்டாள்.

அவள் முகத்தைப் பார்த்தான் வஜ்ரவேலு. ஒரு பிரகாசம். ஒரு புன்னகை. இது வரை பார்க்காத மாலதி. ரொம்ப சந்தோஷமாகத் தெரிந்தாள். அவன் மனதிற்குள் ஒரு மின்னல். போட் திரும்பவும் கரை சேர்ந்தது. கீழே இறங்கிய வஜ்ரவேலு மாலதியைப் பிடித்து இறக்குவதற்காக திரும்பினார். அதற்கு அவசியமே இல்லாமல் அவள் கண்ணன் கையைப் பிடித்து கொண்டு இறங்கிக்கொண்டு இருந்தாள்.

“எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு மாலதி. நான் காட்டேஜுக்கு போறேன். கண்ணனுக்கு okனா நீ அவனோட போயிட்டு வந்துடேன்.” என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் நடக்கத் தொடங்கினான். அவன் மனம் இப்போது லேசானது போல உணர்ந்தான்.

– பெப்ரவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *