கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2013
பார்வையிட்டோர்: 8,435 
 

பருவதத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி தன வயிற்றில் பிறந்த இரண்டும் ரத்தினங்கள் என்று .தாயின் மீது எல்லையற்ற பாசம் வைத்துள்ள பிள்ளைகள் ஒவ்வொரு வீட்டில் உள்ளதுபோல் பிள்ளைகள் திருமணம் ஆனதும் மனைவி முந்தானையை பிடித்துக்கொண்டு போய்விடுவதுபோல் இல்லாமல் திருமணம் ஆகியும் பருவதத்தின் மீது உள்ள பாசமும் அன்பும் ,மரியாதையும் கொஞ்சங்கூட குறையாமல் இருக்கிறார்களே …… மாதாமாதம் தாய் பருவதத்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது என பார்க்கப்போவதும் அவளுக்கு வேண்டிய ஹார்லிக்ஸ் ,விவா, வைட்டமி மாத்திரைகள் ,செலவுக்கு பணம் என்று போட்டி போட்டுக்கொண்டு செய்தார்கள் .என்ன சொல்லியும் பருவதம் மட்டும் தன் கணவர் வாழ்ந்த வீட்டை விட்டு போக மறுத்துவிட்டாள் வேலை நிமித்தம் தாயை பிரிந்திருக்க வேண்டிய கட்டாய நிலை இரண்டு பிள்ளைகளுக்கும் மூன்றாம் வீட்டு கோகிலா தன வீட்டு சண்டையை பருவதத்திடம் வந்து சொன்னபோதுகூட அவளுக்கு தன் பிள்ளைகளை நினைத்து பெருமையாக இருந்தது உண்மையில் கோகிலா பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளா அவர்கள் ?இல்லை அவளது உயிரை பறிக்கவந்த எமன்களா ?என்று கூட வேகப்பட்டதுண்டு. நல்ல வேலை பருவதம் பாக்கியம் செய்திருக்கிறாள் இல்லையெனில் அவள் பிள்ளைகள் அவளிடம் பாசமழை பொழிவார்களா ?என எண்ணிஎண்ணி பெருமை பட்டுக்கொண்டாள் .திடீரென்று உடம்புக்கு முடியாமல் படுத்துவிட்டாள்பருவதம் .பிள்ளைகளுக்கு தொந்திரவு கொடுக்கக்கூடாது என்றுதான் முதலில் நினைத்தாள்ஆனால் மற்ற பிள்ளைகள் போலவா நம் பிள்ளைகள் ,சொல்லாவிட்டால் கோபித்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என நினைத்து பக்கத்து வீட்டு வெங்கட்டிடம் சொல்லி தந்தி கொடுக்கச்சொன்னாள்.
தந்தி கிடைத்ததும் அடுத்த ரயிலிலேயே புறப்பட்டு வந்தனர் பிள்ளைகள் தங்கள் குடும்பத்துடன் என்னவோ ஏதோ என்று.

“இல்லப்பா ..சும்மா தான் உடம்புக்கு சுகமில்லை ,சொல்லாவிட்டால் கோபித்துக்கொல்வீர்கலேன்னு பயந்துதான் தந்தி கொடுக்கச்சொன்னேன் “பருவதம் கூறியதும் மருமகள் இரண்டு பேரும்ஒருவருக்கொருவர் ஜாடை காட்டிவிட்டு பின் கட்டிற்கு போய்விட்டார்கள் .

விஜய் சொன்னான் “எனக்கு லீவே இல்லையம்மா ,தந்திஎன்றதும் பதைபதைத்து போய்விட்டேன் .

“எனக்கு அடிக்கடி உடம்பிற்கு முடியாமல் போய் விடுகிறது உங்களை யாராவது கொஞ்ச நாளைக்கு என்னுடன் இருந்தால் தேவலை..”என்றாள்பருவதம் அடுத்தவன் பாலா முந்திக்கொண்டான்

“எனக்கு இன்னும் ஒரு வாரத்தில் இன்ஸ்பெக் ஷன்இருக்கு அதை தவ்ர்த்தால் பிரமோஷனேபோயிடும் விஜய்நீ வேணா ஒரு வாரம் தங்கிட்டு வா ,ஒரு வாரத்திற்கு பின் நான் வர முயற்சிக்கிறேன்

…”என்ன பாலா ,புரியாமல் பேசறே ?நான் இல்லையின்னா எங்க ஆபீசில் அந்த வேலையைசெய்ய ஆளே இல்லை நான் அடுத்த ரயிலிலேயே வந்து விடுகிறேன் என்று சொல்லியல்லவா வந்திருக்கிறேன் நீ புரியாம பேசிகிட்டு…”எரிச்சலோடு சொல்ல –
பருவதத்திற்கு லேசாகப்புரிந்த்து பின்பிள்ளைகளின்உண்மை சொருபம் ,உடனடியாக அவள் சொன்னாள்;

“நீங்க எனக்காக கஷ்டப்படவேண்டாம் பா ,நான் எப்படியாவது பார்த்துக்கொள்கிறேன் .நீங்க உங்க இஷ்டப்படியே ஊருக்குப்போய் சேருங்க …” இரவு …

“என்னடா பாலா அம்மா உடம்பு மோசமா இருக்கு து ,இனி ரொம்ப நாளைக்கு தாங்காது போலிருக்கே ..அதுக்குள்ளே நம் காரியங்களை செட்டில் பண்ணிட வேண்டியதுதான்” என்றான் விஜய்

“நீசொல்றதும் உண்மைதான் விஜய் நான் முதலில் பேச்சை ஆரம்பிக்கிறேன் நீயும் வந்து கலந்துக்க நாம இங்க இருக்கிரச்சேயே வக்கீலை வைத்து செட்டில் பண்ணிடுவோம் ”

“அதுதான் சரி ..”ஆமோதித்தனர் மருமகள்கள் இருவரும்

இதை எல்லாம் கேட்டுக்கொண்டு தூங்குவதுபோல் படுத்திருந்த பருவதத்தின் நெஞ்சு வேகமாகத்துடித்தது உடலில் உள்ள ரத்தமெல்லாம் தலைகேறிவிட்டதுபோல்உஷ்ணம்
தலை சுற்றியது .ஓஹோ ..இத்தனை கேவலமானவர்களா நம் பிள்ளைகள் ?பெற்றவளிடம் பாசத்தால் அல்லவா அவர்கள் உருகுகிறார்கள் என்று நினைத்தேன் எல்லாம் வேஷம் ,லாப நஷ்ட கணக்கை பார்க்காத உறவே உலகில் இல்லைபோலும் ஏனில்லை ?உண்மையான அன்புக்கு ,பாசத்துக்கு ,லாபாஎது ?நஷ்டமேது ?இவர்கள் எப்படி இருந்தாலு இவர்கள் என் பிள்ளைகள் இவர்களைப்போல் நானில்லை ,என் பாசம் உண்மையானது என்பதை காட்டிட வேண்டும் .அவர்கள் என்னிடம் பாகம் கேட்பதற்குள் நானே அவர்களிடம் பத்திரத்தை கொடுத்துவிடவேண்டும் “தீர்மானித்துக்கொண்டாள் .அடுத்தநாள் ……..விஜயும் பாலாவும் பருவதத்திடம் வந்து அமர்ந்தனர் .அவள் ஒன்றும் தெரியாதது மாதிரி படுத்திருந்தாள்

“‘அம்மா உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணுமே ..”மெதுவாக பேச்சை எடுத்தான் விஜய்

“நான் கூட ஒரு முக்கிய விஷயம் பேசணும் ,பாலா அந்த பீரோவில் மேல்தட்டில் சில கடிதங்கள் வைத்திருக்கேன் எடுத்துவ்வ் “என்று கட்டளை இட்டாள்பருவதம்
பாலா குழம்பியவனாய் பொய் எடுத்து வந்தான் அவள் அதை கையால் வாங்கிப்பார்த்துவிட்டு பின்னர் விஜியிடம் ஒரு பத்திரத்தையும் பாலாவிடம் ஒரு பத்திரத்தையும் கொடுத்தால்.

“அம்மா ….இது…-‘இரண்டுபேரும் அதிர்ச்சியோடு கேட்க ..

“உங்கள் இஎருவருக்கும் என்னிடம் உள்ள சொத்துக்களை இரண்டு பாகமாக ப்போட்டுஎழுதப்பட்ட பத்திரம் இது நீங்கள் என் ஈது வைத்திருக்கும் பாசத்திற்கு வலை அல்ல ,,பங்கு , என் பிள்ளைகள் ஊர் பிள்ளைகள் மாதிரி அல்ல என்று நேற்று வரை நினைத்திருந்தேன் ஆனால் நீங்களும் சராசரிதான் என்று இரவே கண்டு கொண்டேன் .அதனால்,ஏற்கனவே செட்டில் பண்ணியதை என்று உங்கள் கையில் கொடுத்துவிட்டேன் .இனி என்னை உயிரோடு எரிப்பதா ?இல்லை போனபின்பு புதைப்பதா ?அது உங்கள் விருப்பத்திற்கே விட்டுவிட்டேன் ..சரிதானே ?”

அரை முழுவதும் ஒரே நிசப்தம்

இரண்டு மகன்களின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது ,

“அம்மா ,இந்த பத்திரம் வேண்டாம் நீ உயிரோடு இருந்தால் போதும் .எங்களை மன்னித்துவிடும்மா “என்று தாயின் கால்களைப்பிடித்துக்கொண்டு கதறினர்

தினபூமி –கதைபூமி 12-9-1997

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)