பட்டமரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2021
பார்வையிட்டோர்: 5,047 
 
 

“சின்னத்தம்பி! நாலு பொரோட்டா, ரெண்டு ஆப்பாயில்” சாணார் ஓட்டலில் வேலைபார்க்கும் சப்ளையர் இளமதியன் சத்தம் போட்டுச் சொன்னதும் “ரெடி என்றவாறு வேகமாக பொரோட்டோ மாவைப் பிசைந்து சிறு உருண்டைகளாக வைத்திருந்ததில் நாலு உருண்டைகளை சப்பாத்தி கட்டையால் உருட்டி தோசைக்கல்லில் போட்டான். ரெண்டு முட்டைகளை உடைத்து அதே தோசைக்கல்லில் ஆப்பாயில் போட்டான்.”

சின்னத்தம்பி குடும்பம் சுமாரான குடும்பம் தான். அவனது அப்பா மூக்கையா வேர்க்கடலை, சோளம் இவற்றைத் தள்ளுவண்டியில் வேகவைத்து விற்பார்.

அப்படித்தான் அன்றொரு நாள், பக்கத்து ஊர் மஞ்சுவிரட்டு,வி யாபாரம்ந ன்றாகஇ ருக்கும்எ னக ருதி தள்ளுவண்டியில் சரக்குகளை நிறைய வைத்துக்கொண்டு மாடு விடும் திடல் பக்கம் வெளியே ஓரமாக நின்று மூக்கையாவும், சின்னத்தம்பியும் விற்பனை செய்துகொண்டு இருந்தனர். அப்போது சின்னத்தம்பி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு அவரோடு வேலைபார்த்தான். மாடுகள் ஆங்காங்கே கட்டப்பட்டு இருந்தன. ஒன்றரை மணியளவில் மாடுவிடும் தொழுவில் வானம் விட்டார்கள்.

மாடு விட நேரம் நெருங்க நெருங்க வியாபாரம் அமோகமாக இருந்தது. “உன்ன பெரிய டாக்டராக ஆக்கனும் ராசா” அவ்வப்போது அவனிடம் சொல்லி வந்தார் மூக்கையா. அவனும் மகிழ்ச்சியுடன் கேட்டவர்க்கு எல்லாம் வேர்க்கடலையை பொட்டலம் போட்டுக்கொடுத்தான்.

மேளதாளம் இசைக்க வெடிகள் வெடிக்க கோயில் மாடு விடப்பட்டதும் அடுத்தடுத்து மாடுகள் விடப்பட்டன. சில மாடுகள் அலறி அடித்துக்கொண்டு ஓடின. சில கூட்டத்துக்குள் நுழைந்து பலரையும் சேதப்படுத்திக் கொண்டு சென்றன.

பெரிய கொம்புகளைக் கொண்ட குள்ளமான மாடு ஒன்று கூட்டத்தைக் கண்டு மிரண்டு தள்ளுவண்டியில் தாவியது. மூக்கையாவும் சின்னத்தம்பியும் ஓடுவதற்குள் அதன் கொம்புமூ க்கையாவின் ெநஞ்சில்கு த்திதூ க்கிப்போட்டு விட்டு ஓடியது.

“அம்மா.. அம்…மா” என்று தனது கைகளை நெஞ்சுக்கு கொண்டு வருவதற்குள் உடலை இரத்தம் நனைத்தது. துடிதுடித்தவாறு அதே இடத்தில் இறந்தார் மூக்கையா. சின்னத்தம்பியை தள்ளுவண்டி விழுந்து காத்தது என்று தான் சொல்லவேண்டும். அவன் மீளாத துயரில் ஆட்பட்டான். இந்தக் கொடூரமான செயலைக் கண்ட அவனது அம்மா பித்து பிடித்து அலைந்தாள். அவன் வாழ்க்கையோ வினாக்குறியாகவே நின்றது.

பைத்தியம் பிடித்த அம்மா, சோத்துக்கு என்ன பண்றது. எப்புடி படிக்கிறது. அப்பா பாத்த வேலைய ராத்திரில தொடர்ந்து பாக்கனும்னா முதல் போடனுமே. சொல்லிக்கிறமாறு உறவுக்காரங்களும் இல்ல. விழி பிதுங்கி நின்ற சின்னத்தம்பிக்கு சாணார் ஓட்டல் தான் வாழ்க்கை கொடுத்தது.

அரசுப் பள்ளியில் பதினோராம் வகுப்பில் முதல்பிரிவு எடுத்து படித்தான். பகலில் பள்ளிக்குச் செல்வது மாலை ஆறுமணி முதல் பத்து மணி வரை சாணார் ஓட்டலில் பொரோட்டா போடுதல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளை செய்தான். ஊதியமாக தினமும் முப்பது ரூபாய் கொடுத்தார்கள். அதைக் கொண்டு தன் தாயையும் பராமரித்து வந்தான். சகநண்பர்களில் சிலர் இவன் நன்றாக படிப்பதைக் கண்டு பொறாமை கொண்டார்கள். சிலர் இவனது நிலை உணர்ந்து அன்போடு பழகினார்கள்.

தற்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அடுப்பு வேலை என்பதால் உடல் வேர்த்து விறுவிறுததது. கட்டியிருந்த பழைய கயிலியில் தன் முகத்தைத் துடைத்தான்.

“என்ன பொரோட்டா ஆப்பாயில் ரெடியா”

“ம்… ரெடி…”

“ஏன்டா மூக்க மவனா, ஒங்க அப்பாரு மாடுகுத்தி செத்துப்போயிட்டான். ஒங்க ஆத்தாவும் பித்துப்புடுச்சு அலையிறா. நீ கெட்ட கேடுக்கு பள்ளிக்கொடத்துக்கு போறியாம்ளோ” சாப்பிடவந்த இராமன் சொன்னதும் தனது காதுகளில் வாங்காதவனாய் வேலை பார்த்தான். தனக்கும் அம்மாவுக்கும் பத்து பொரோட்டாவும் கொஞ்சம் குருமாவும் கட்டிக்கொண்டு முப்பது ரூபாயை வாங்கி தன் சட்டைப் பைக்குள் வைத்தவாறு இரவு பதினொன்னே கால் மணிக்கு வீடு வந்து சேர்ந்தான்.

அம்மாவைக் காணாததால் வீதியெங்கும் தேடி அலையும் போது கடைசி பஸ்ஸை விட்டு இறங்கிய அருளானந்தமும் அவன் அப்பா ஜோசப்பும் அவனைப் பார்த்தார்கள்.

“டேய் சின்னத்தம்பி விடிஞ்சா பப்ளிக் பரிச்ச. இங்கே என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே” என்றான் அருளானந்தம்.

“எங்க அம்மாவ காணம்டா அதான் தேடுறேன்” மீண்டும் தேட ஆரம்பித்தான். முச்சந்தி பிள்ளையார் கோயிலில் அவன் அம்மா படுத்திருந்தாள். அவளை மெதுவாக ஊட்டினான். அவளோ கொஞ்சம் திங்கவும், கொஞ்சம் துப்பவுமாக புலம்பிக்கொண்டே இருந்தாள். அவள் உண்ட பிறகு மீதமிருந்ததை தானும் சாப்பிட்டுவிட்டு இரண்டு குவளை தண்ணீர் குடித்தான். அதற்குள் அவள் வீட்டு மூலையில் கால்களை நுடக்கி தூங்கிக் கொண்டிருந்தாள்.

தேர்வு என்பதால் இரவு முழுவதும் படித்தான். நல்லமுறிைல் தேர்வு எழுதினான்.

ஒரு நாள் மதியம். “ஏம்பா ஒங்க ஆத்தா சின்னக் கொளத்துக்குள்ள இருக்குற கெனத்துல குதிக்கப் போறேன், குதிக்கப்போறேனு கத்துறா என்னய ஒரு மாறியா பாக்கவும் நா வந்துட்டேன். வேகமா போ…” என்றார் சைக்கிளில் வந்தவர்.

வேகமாக ஓடினான். ஆனால் அங்கு அவள் நிற்கவில்லை. கண்கள் கிணற்றை உற்றுப் பார்த்தது. ஒருவேளை குதித்துவிட்டாளோ… பதட்டமானவன்… கிழக்குப் பக்கமாக பார்த்தான். அவள் தூங்கிக்கொண்டு இருந்தாள். அவளை அன்பாக பேசி முகத்தை துடைத்துவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்தான். விடுமுறை நாட்கள் என்பதால் முழுநேரமும் வேலை பார்த்தான். மே இருபத்தெட்டாம் தேதி ரிசல்ட் வருவதாக அருளானந்தம் சொன்னான். தேர்வு முடிவும் வெளியானது. முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் புகைப்படமும, மாலை நாளிதழில் வெளியாகியிருந்தது. அதில் மாநிலத்திலேயே இரணடாவது இடத்தை சின்னத்தம்பி பெற்றிருந்தான். அவனது புகைப்படமும் வெளியாயிருந்தது.

அன்று மாலை, பத்திரிகையாளர் சிலர் இவனைப் பேட்டி காண்பதற்காக வந்தனர். அவனது வீட்டுக்குச் சென்றபோது அவனுடைய அம்மா ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தாள். இது யாரோ என எண்ணியவாறு பக்கத்தில் இந்த ஒருவரிடம் “சின்னத்தம்பி வீடு எது” என்றார் ஒருவர்.

அவரோ, “அந்தக் குடிசை தான். அது அவனப் பெத்தவ. அவன் சாணார் ஓட்டலுல தான் வேலபாக்குறான்.” சொல்லிக்கொண்டே தனது ஆடுகளை ஓட்டிச் சென்றார்.

அங்கு வந்த பத்திரிகையாளரில் ஒருவர் தலையில் உருமாக்கட்டு இடுப்பில் பழைய கிழிந்து போன கயிலி, கழுத்தில் ஒரு கருப்புக் கயிறுடன் தோசை சுட்டுக் கொண்டிருந்த சின்னத் தம்பியிடம் “இங்க சின்னத்தம்பினு ஒரு பையன் வேலை பாக்றான்ல அவனபாக்கனும்” என்றார்.

அவனோ உருமாக்கட்டை அவிழ்த்து விட்டு “நான்தாங்க” என்றான். அவனைக் கண்டதும் மெய்சிலிர்த்து நின்றனர். அப்போது அந்த ஓட்டல் முதலாளியும் சப்ளையர் இளமதியனும் அருகில் வந்தனர்.

அவனிடம் பலவாறு கேள்விகளை கேட்கும் பொழுது அவனுடைய அம்மா, கையில் தட்டுடன் தலையை சொரிந்தவாறு புலம்பிக்கொண்டு பஸ்டாண்ட் பக்கம் வந்தாள். அவளைக் கண்டதும் ஓடிப்போய் கூட்டிவந்தான். அவனைப்பற்றி ஓட்டல் முதலாளி அவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். “தான் பெரிய டாக்டராக வேண்டும் என்பது அவனது கனவு” என இளமதியனும் சொல்லிமுடித்தார். பத்திரிகையாளர்களோ அவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவன் சொல்வதையும் குறித்துக் கொண்டனர்.

“தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் சகிப்புத் தன்மையும் இருந்து செயல்பட்டால் வெற்றியை வாழ்வில் பெறலாம். இதற்கு சின்னத்தம்பி ஓர் உதாரணம் எழுதினார் பத்திரிகையாளர் ஒருவர். ”

தன்தாயை குணப்படுத்த வேண்டும்; தாய்நாட்டைக் காக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடும் உயர்ந்த உள்ளத்தோடும் பாராட்டுச் சான்றிதழை அரசு விழாவில் தமிழக முதல்வர் கையால் வாங்கினான்.

பட்டமரமாக போய்விடுமோ என்று எண்ணிய சின்னத்தம்பி வாழ்க்கையில் முதல் முறையாக துளிர்விட்டது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

என் இயற்பெயர் தீ.திருப்பதி. சோலச்சி என்பது யார்......? இதற்கான விளக்கத்தை எனது "முதல் பரிசு " சிறுகதை நூலில் என்னுரையில் பதிவு செய்துள்ளேன். நான் புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு (1997-1998) படிக்கும்போது எனக்கு அறிவியல் ஆசிரியராக இருந்தவர் தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள். என் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் ஊர் நடுவிலே இருந்த புளியமரத்தடியில் வாடி வதங்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *