நான் வாங்கிண்டு வந்த வரம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 2,728 
 

கோபால் ரயில்வேயில் நடு நிலை குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார்.அதே ‘செக்ஷனில்’ அவரைப் போலவே குமாஸ்தாவாக வேலை செய்து வந்த சந்திரன்.

சந்திரனும்,கோபாலும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

கோபாலின் மணைவி மாலா மின்சார வாரியத்தில் வேலை செய்து வந்தாள்.அதே வாரியத்தில் வேலை செய்து வந்தாள் சந்திரனின் மணைவி கமலா.இருவரும் மிகவும் நெருங்கிய தோழிகள்.

என் பெற்றோர்கள் மாதம் ஒரு தடவை,என்னை அழைத்துக் கொண்டு கோபால் வீட்டுக்குப் போவார்கள்.நான் அவர்கள் குழந்தைகள் சுதாவுடனும்,மகேஷூடனும் விளயாடிக் கொண்டு இருப்பேன்.

இரண்டு வாரம் ஆனதும் கோபாலும்,அவர் மணைவியும் தங்கள் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவார்கள்.நான் சுதாவுடனும்,மகேஷூடனும் விளையாடிக் கொண்டு வந்த்தால் எனக்குப் பொழுது போவதே தெரியாது.

நான் அருகில் இருந்த ஒரு பள்ளி கூடத்தில் படித்துக் கொண்டு வந்தேன்.எனக்கு வயது நான்கு.ஒரு நாள் என் அம்மாவுக்கு ஒரு நாள் திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது.

என் அப்பா என்னையும் கூட அழைத்துக் கொண்டு,என் அம்மாவை மருத்துவ மணைக்கு அழைத்துப் போனார்.மருத்துவ மணயில் இருந்த டாகடர் என் அம்மாவுக்கு ‘ஆஞ்சியோ’ பண்ணிப் பார்த்து விட்டு “சார்,உங்க மணைவிக்கு ‘ஹார்ட்டில்’ மூன்று இடங்களில் அடைப்பு இருக்கிறது, உடனே அவங்களுக்கு ‘பை பாஸ் சர்ஜரி’ பண்ணணும்” என்று சொல்லி விட்டார்.

உடனே என் அம்மா கமலாவுக்கு ‘போன்’ பண்ணி தன்னுடைய உடம்பு சமாசாரத்தை பற்றீ சொல்லி விட்டு,மானேஜரிடம் ‘லீவு’ சொல்ல சொன்னாள்.சந்திரனும்,கோபாலுக்கு ‘போன்’ பண்ணி மாலா உடம்பு சமாசாரத்தை சொல்லி ஆபீஸ் மானேஜரிடம் ஒரு வாரம் ‘லீவு’ சொல்லச் சொன்னார்.

டாக்டர் சொன்னதைக் கேட்டு மிகவும் அதிர்ந்துப் போய் விட்டார் என் அப்பா.நான் ஒன்னும் புரியாமல் என் அப்பா கண்களில் இருந்து கண்ணிரைப் பார்த்து விட்டு,அப்பாவைப் பார்த்து “ஏம்பா அழறேள்.அம்மாவுக்கு என்ன ஆச்சு” என்று கேட்டேன். என் அப்பா எனக்கு ஒரு விவரமும் சொல்லா மல் “நான் அப்புறமா எல்லா விவரமும் சொல்றேன்” என்று சொல்லி விட்டு டாக்டரைப் பார்த்து “சா¢, டாக்டர் நீங்க அவங்களுக்கு’ பை பஸ் சர்ஜரி’ பண்ணுங்க” என்று சொன்னார்.

டாக்டர் என் அம்மாவை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துப் போய், என் அம்மாவுக்கு ‘பை பாஸ் சர்ஜரி’ பண்ணி விட்டு,எட்டு மணி நேரம் கண்காணித்து விட்டு,பிறகு என் அம்மாவை ஒரு ‘ரூமி’ல் கொண்டு வந்து விட்டார்.

“சார்,இவங்க ‘ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு.இனிமே,இவங்க குழந்தைப் பெத்துக்காம இருக்கற து தான் நல்லது.நான் குடுக்க வேண்டிய ‘மெடிக்கல் அட்வஸை’ குடுத்து இருக்கேன்.இனிமே உங்க இஷ்டம்” என்று டாகடர் சொன்னதும்,என் அப்பா ”டாக்டர்,நீங்கோ சொன்னா மாதிரி நாங்க இருந்து வறோம்”என்று சொன்னார்.

என் அப்பா சொன்னதைக் கேட்ட எனக்கு ஓறளவுக்கு என் அம்மா உடம்பு பற்றி தெரிந்தது.

என் அம்மா இரண்டு நாள் மருத்து ம¨ணையில் இருந்த பிறகு, டாகடர் சொன்னதால் என் அப்பா என் அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

என் அம்மா ஒரு மாத பூரண ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு மறுபடியும் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தாள்.என் அம்மாவின் மானேஜர் என் அம்மா உடல் நிலையை மனதில் கொ,அம்மாவுக்கு அதிக சிரமம் இல்லாத வேலைகளை கொடுத்து வந்தார்.

எனக்கு அப்புறமாக குழந்தைகள் பிறக்காத்தால் என் அம்மாவும் அப்பாவும் என்னை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்கள்.நான் எதைக் கேட்டாலும் ‘இல்லை’ என்று சொல்லாமல் வாங்கிக் கொடுத்து என்னை சந்தோஷமாக வைத்துக் கொண்டு வந்தார்கள்.

நான் B.com முதல் வருஷம் ‘பாஸ்’பண்ணீன வருடத்தில் சுதாவுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் ஏற்பாடு ஆகி இருந்தது.என் பெற்றோர்களும்,நானும் சுதாவின் கல்யாணத்துக்கு போய், நாலு வேளையும்,அந்த குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து விட்டு வீட்டுக்கு வந்தோம்.

அந்த வருடம் மகேஷ் B.Com ‘பாஸ்’ பண்ணி விட்டு ‘பாங்க்’ பா¢¨க்ஷ எழுதினான்.அவனுக்கு இரண்டு வருடம் ‘பாங்கில்’ வேலை கிடைக்கவில்லை.ஆனால் மகேஷ் விடாமல் ‘பாங்க்’ பா¢ஷை எழுதி வந்தான்.

நான் B.com ‘பாஸ்’ பண்ணினதும்,மகேஷைப் போலவே ‘பாங்க்’ பா¢ஷை எழுதினேன்.என் அதிர்ஷ்டம் நானும்,மகேஷூம் ‘பாங்க் பா¢ஷை ‘பாஸ்’ பண்ணினோம்.’பாங்க் ட்ரெயினிக்’ முடிந்ததும், எங்க ரெண்டு பேருக்கும் ஒரே ‘பாங்க்’ கிளையில் ‘போஸ்டிங்க்’கிடைத்தது.

இருவரும் சந்தோஷமாக அந்த கிளையில் வேலை செய்து வந்தோம்.

அந்த வயதில் வரும் ‘பருவ ஈர்ப்பு’ எங்கள் இருவருக்கும் இருந்து வந்தது.நான் அந்த ‘ஈர்ப்பை’ மனதில் போட்டு வந்தேன்.மகேஷ் ஒரு நாள் என்னுடன் கூட ‘லன்ச்’ சாப்பீட்டுக் கொண்டு இருந்த போது என்னைப் பார்த்து “ரமா,நம்ம ரெண்டு குடும்பமும் மிகவும் நெருங்கிய குடும்பம்.உன்னே எனக்கும்,என்னே உனக்கும் சின்ன வயசிலே இருந்து ரொம்ப நன்னாத் தெரியும்.ரெண்டு பேருக்கும் இப்போ ‘பாங்கிலே’ நல்ல வேலை கிடைச்சு இருக்கு.எனக்கு உன்னே கல்யாணம் பண்ணிக் கொள்ள ரொம்ப ஆசையா இருக்கு.உன் அபிப்பிராயம் என்ன.இந்த கல்யாணத்லே உனக்கு சம்மதமா.நீ ‘சா¢’ ன்னு சொன்னா,நான் எங்க அம்மா,அப்பா கிட்டே சொல்லி ஜாதகப் பா¢வர்த்தணை பண்ண ஏற்பாடு பண்றேன்”என்று சொல்லி விட்டு ரமாவின் முகத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

ரமா வெட்கபட்டுக் கொண்டே சம்மதம் சொன்னாள்.மகேஷ் சந்தோஷப் பட்டு ரமாவை ‘தாங்க்’ பண்ணீனான்.

பார்க்க அழகு தேவதைப் போல் இருந்த ரமாவின் மேல்,கிளை மானேஜர் ராமனுக்கு ஆசை இருந்தது.

‘எப்படியாவது ரமாவை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று ஆசைப் பட்டு, அந்த மானேஜர் ரமாவை காரணம் இல்லாமல் தன் ‘ரூமு’க்கு கூப்பிட்டு பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்தார்.ரமாவுக்கு மானேஜர் அடிக்கடி காரணம் இல்லாமல்,தன்னை அவர் ‘ரூமு’க்குக் கூப்பிட்டு கொண்டு வந்தது பிடிக்கவில்லை.

‘அவர் கிளை மானேஜர் ஆச்சே.நாம போகாட்டா தப்பா எடுத்துண்ட போறாரே’ என்று நினைத்து,ரமா அவர் அழைக்கும் போது எல்லாம்,அவர் ‘ரூமு’க்குப் போய் பேசி விட்டு வந்தாள்.

‘பாங்க்’ முடிந்து வீட்டுக்குப் போகும் போது ரமா ரகசியமாக மகேஷிடம் மானேஜர் ராமன் தன்னை அடிக்கடி காரணம் இல்லாமல்,தன் ‘ரூமு’க்குக் கூப்பிட்டு பேசுதை சொல்லி,மகேஷை சீக்கிரமாக ஜாதகப் பா¢வர்த்தணைக்கு ஏற்பாடு பண்ணச் சொன்னாள்.மகேஷ் சந்தோஷமாக ஒத்துக் கொண்டு உடனே ஏற்பாடு பண்ணுவதாகச் சொன்னான்.

ரமா வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் மகேஷ் ‘லன்ச்’ நேரத்திலே கேட்டதையும்,அதற்கு அவள் சம்மதம் சொன்னதையும் வெட்கப்பட்டுக் கொண்டெ சொன்னாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

மாலை மனி நாலு இருக்கும்.சந்திரன் மணைவி சுடாகப் போட்டு இருந்த வாழைக்காய் பஜ்ஜியை ரசித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.மகேஷூம் தன் அப்பா பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டு பஜ்ஜியை சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.கமலா மூனு பேருக்கும் சூடாக ‘டீ’யைப் போட்டுக் கொண்டு வந்து ‘டைனிங்க் டேபிளில்’ வைத்து விட்டு முகத்திலே வழிந்த வேர்வையை துடைத்துக் கொண்டு இருந்தாள்.

இது தான் நல்ல சமயம் என்று நினைத்து மகேஷ் தன் அம்மா அப்பாவைப் பார்த்து “அம்மா, அப்பா,நான் ரமாவை கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ஆசைப் படறேன்.நான் ‘லன்ச்’ நேரத்லே அவளே கேட்டேன்.அவ வெக்கப் பட்டுண்டு ‘சரி’ன்னு சொன்னா.நீங்கோ ரமாவின் அம்மா,அப்பா வைப் பாத்து எங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண முடியுமா” என்று மென்று முழுங்கிக் கேட்டான்.

“அப்படியா,ரமா உன்னே கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னு சொல்லிட்டாளா.கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.நான் நாளைக்கு ‘ஆபீஸி’ல் கோபாலை சந்திச்சு அவர் சம்மதததைக் கேக்கறேன்” என்று சொல்லி முடிக்கவில்லை கமலா “நானும் மாலாவை நாளைக்கு ஆபீஸ்லே நீ சொன்னதைப் பத்தி கேக்கறேன்” என்று சொன்னதும் மகேஷ் இருவரையும் ‘தாங்க்’ பண்ணீனான்.

கோபாலும்,மாலாவும் சம்மதம் சொல்லவே ஜாதகப் பரிவர்த்தணை பண்ணி, ஜாதகங்கள் பொருந்தி இருக்கவே வாத்தியாரைக் கூப்பிட்டு ‘நிச்சியதார்த்துக்கு ’ஒரு முஹ¥ர்த்த நாள் பார்த்து எல்லா ஏற்பாடுகளும் பண்ணினார்கள் இரு குடும்பத்தாரும்.

கோபால் மாலா தம்பதிகள் ‘நிச்சியதார்த்துக்கு’ ஒரு சின்ன ‘ஹாலாக’ப் பார்த்து ஏற்பாடு பண்ணி,ஜவுளிகள் எல்லாம் வாங்கி விட்டு.மகேஷூக்கு ஆறு சவரனில் ஒரு தங்க செயினும்,ஒரு வைர மோதிரமும் வாங்கினார்கள்.

குறிப்பிட்ட முஹ¥ர்த்த நாளில் மகேஷ், ரமா ‘நிச்சியதார்த்தம்’ விமா¢சையாக நடந்தது.அடுத்த மாதம் மார்கழியாக இருந்ததாலும்,தை மாதத்தில் வந்த கடைசி முஹ¥ர்த்தத்தில் கல்யாணம் ஏற்பாடு ஆகி இருந்தது.

அடுத்த நாள் மகேஷூம் ரமாவும் மானேஜரிடம் தங்களுக்கு ‘நிச்சிதார்த்தம்’ நடந்த சந்தோஷ சமாசாரதை சொன்னார்கள்

”அப்படியா.’அட்வான்ஸ் கங்கிராஜுலேஷன்ஸ்’ பார் யுவர் ஹாப்பி மாரேஜ்’ என்று சொல்லி மகேஷின் கையைப் பிடித்து குலுக்கி சொன்னார் மானேஜர்.இருவரும் அவருக்கு ‘தாங்க்ஸ்’ சொல்லி விட்டு ‘ரூமை’ விட்டு வெளியே போனதும் மானேஜர் ராமன் மனம் கொதித்தது.

அவர் தன் மனதில் ‘எனக்குக் கிடைக்கவேண்டிய தங்கப் பதுமையை நீ கல்யாணம் பண்ணிக்கப் போறயா மகேஷ்.அவ உனக்கு கிடைக்காமாட்டா.அவ என்னுடைய மணைவி.உனக்கு வெறுமனே நிச்சியதார்த்தம் தானே நடந்து இருக்கு.உங்க கல்யாணமே நடக்க நான் விட மாட்டேன்’ என்று கறுவினார்.

மகேஷூம், ரமாவும் ‘பாங்க்’ வேலை முடிந்து சாயங்காலம் வீட்டுக்கு வரும் போது ஹோட்டலி லும்,பார்க்கிலும் சந்தோஷமாக நேரத்தை கழித்து சந்தோஷப் பட்டுக் கொண்டு வந்தார்கள்.

ஒரு நாள் அந்த மாதிரி சந்தோஷமாக இருந்த போது,“ரமா,இந்த பாழானப் போன மார்கழி மாசம் குறுக்கே வராம இருக்கக் கூடாதா.தை மாச ஆரமபத்லே நமக்கு ஒரு முஹ¤ர்த்த நாள் அமை யக் கூடாதா.நான் இன்னும் கிட்டத் தட்ட ரெண்டு மாசம் காத்துண்டு இருக்கணும்,உன்னே கல்யா ணம் பண்ணிக்க.ஒரு நாள் போறது ஒரு யுகமா இருக்கு”என்று மகேஷ் சொன்னதும் “எனக்கும் அப்படித் தான் இருக்கு.என்ன பண்றது.நமக்கு முஹுர்த்த நாள் அமையறது நம்ம கையிலா இருக்கு சொல்லுங்கோ.நாம பொறுமையாத் தான் இருந்துண்டு வரணும்”என்று சொல்லி வருத்தப் பட்டாள் ரமா.

‘மகேஷை எப்படியாவது ஒரு ‘கேஸில்’ மாட்டி விடணும்’என்று தீவிரமாக யோஜைனைப் பண்ணிக் கொண்டு இருந்தார் கிளை மானேஜர்.

வழக்கமாக ‘காஷில்’ உட்காரும் வரதன்,அன்று காலை ‘தனக்கு உடம்பு சா¢ இல்லை.ரெண்டு நாள் லீவு வேண்டும்’ என்று கேட்டார்.மானேஜர் அவருக்கு ‘லீவை சாங்க்ஷன்’ பண்ணி விட்டு மகேஷைக் கூப்பிட்டு “மகேஷ்,காஷியர் வரதன் ரெண்டு நாள் லீவு.நீங்க ரெண்டு நாளேக்கு’ காஷில்’ வேலைப் பண்ணுங்க”என்று சொன்னதும் மகேஷ் ஒத்துக் கொண்டு ‘காஷில்’ வேலை பண்ண ஆரம்பித்தான்.

அந்த கிளையில் வேலை பண்ணி வந்த பியூன் பீட்டர் ரொம்ப ஏழை.அவனுக்கு மூன்று பெண் குழந்தைகள்.உடம்பு சா¢ இல்லாத மணைவி,வயதான பெற்றோர்களுடனும் ஒரு சின்ன வாடகை வீட்டில் வசித்து வந்தான்.

மணி பதினொன்று அடித்தது.’காஷில்’ நிறைய பேர்கள் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

மானேஜர் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. ‘இந்த மகேஷ் ‘காஷில்’ இருக்கும் போது தான் அவனை ஒரு ‘கேஸில்’ மாட்டி விடணும்’ என்று யோஜனைப் பண்ணி பியூனை தன் ‘ரூமு’க்குக் கூப்பீட்டார்.

பீட்டர் மானேஜர் ரூமுக்குள் வந்ததும் மானேஜரைப் பார்த்து “’குட் மார்னிங்க் சார்’”என்று சொன்னான்.மானேஜர் பீட்டரை தன் அருகில் கூப்பிட்டு அவன் கையிலே ஒரு ரெண்டாயிரம் ரூபாயை திணித்து விட்டு “பீட்டர்,நீ எனக்கு ஒரு உதவி பண்ணணும்” என்று சொன்னதும் பீட்டர் ஒரு நிமிஷம் யோஜனைப் பண்ணினான்.

பிறகு மாதக் கடைசியாக இருந்ததால் மானேஜர் கொடுத்த ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு “சொல்லுங்க சார்.உங்களுக்கு நான் என்ன உதவி பண்ணனும்” என்று கேட்டார்.

உடனே மானேஜர் பீட்டா¢டம் மெதுவாக” பீட்டர், நான் ‘காஷில்’ இருக்கும் மகேஷை ‘அர்ஜெண்டா’ கூப்பிட றேன்னு அவர் கிட்ட சொல்லி என் ‘ரூமு’க்கு வரச் சொல்லு.மகேஷ் ‘கேபினை’ விட்டு வந்ததும்,நீ அவர் ‘காஷ்’ ஒரு பெட்டியிலே இருந்து ஒரு ரெண்டாயிரம் ரூபாய் கட்டை யாருக்கும் தெரியாம எடுத்துக் கிட்டு வந்து, மகேஷ் என் ‘ரூமை’ விட்டுப் போனதும் என் கிட்டே குடு.சா¢யா”என்று சொன்னார்.

‘இது மேலிடத்து சமாசாரம்.நமக்கு என்ன.நமக்கு மாசக் கடைசி செலவுக்கு ரெண்டாயிரம் ரூபா கிடைச்சு இருக்கு’ என்று நினைத்து சந்தோஷப் பட்டு பீட்டர் “சரி சார்” என்று சொல்லி விட்டு, மானேஜர் ‘ரூமை’ விட்டு வெளீயே வந்து மகேஷ் உட்கார்ந்துக் கொண்டு இருந்த ‘காஷ் கேபினுக்கு’ வந்து “சார், உங்களே மானேஜர் ‘அர்ஜெண்டா’ கூப்பிடறார்” என்று சொன்னதும் மகேஷ் ‘காஷ்’ கொடுக்க வேண்டியவருக்கு ‘காஷை’க் கொடுத்து விட்டு,’காஷில்’ இருந்து பழக்கம் இல்லாத மகேஷ் ‘கேபினை’ப் பூட்டாமலே,வெளியே வந்து மானேஜர் ‘ரூமு’க்குப் போனான்.

பீட்டர் மானேஜர் சொன்னது போல ஒரு ரெண்டாயிரம் ரூபாய் கட்டை யாரும் பார்க்காமல் இருக்கும் போது எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு விட்டு,’கேபினுக்கு’வெளியே நின்றுக் கொண்டு இருந்தான்.

மகேஷ் மானேஜரிடன் பேசி விட்டு தன் ‘கேபினு’க்கு வந்ததும் பீட்டர் மானேஜர் ரூமுக்கு வந்து அவன் பாக்கெட்டில் இருந்து ரெண்டாயிரம் ரூபாய் கட்டை மானேஜரிடம் ரகசியமாகக் கொடுத்து விட்டு மானேஜர் ‘ரூமை’ விட்டு வெளியே வந்து தன் வேலையைக் கவனிக்கப் போனான்.

அன்று சாயந்திரம் பாங்க் வேலை நேரம் முடிந்ததும் மகேஷ் மீதி இருக்கும் ‘காஷை’ எண்ண ஆரம்பித்தான்.அவனுக்குத் தேள் கொட்டியது போல இருந்தது. ‘காஷில்’ ரெண்டு லக்ஷ ரூபாய் ‘ஷார்ட்’ வந்தது.

பத்து தடவை மறுபடியும்,மறுபடியும் எண்ணீனான்.வேர்த்துக் கொட்டியது அவனுக்கு.என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான்.எல்லோரும் ஒருவர் ஒருவராக ‘பாங்கை’ விட்டு வெளியே போய்க் கொண்டு இருந்தார்கள்.மகேஷ் ‘காஷில்’ தனியாக உட்கார்ந்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த ரமா,தன் வேலையை முடித்துக் கொண்டு மகேஷிடம் வந்தாள்.

மகேஷ் கண்களில் கண்ணீர்ர் மல்க “ரமா,‘காஷ் பாலன்ஸ்லே’ ரெண்டு லக்ஷ ரூபா ‘ஷார்ட்’ வறது.நான் எல்லோருக்கும் ‘காஷை’ சா¢யாத் தான் எண்ணிக் குடுத்தேன்.எப்படி ரெண்டு லக்ஷ ரூபா ‘ஷார்ட்’ வறதுன்னே எனக்குத் தெரியலே” என்று சொன்னான்.மகேஷ் சொன்னதைக் கேட்டுத் தூக்கி வாரிப் போட்டது ரமாவுக்கு.என்ன பண்ணுவது என்று அவளுக்கும் தெரியவில்லை.

இதற்கிடையில் மானேஜர் தன் ரூமை விட்டு மகேஷ் ‘கேபினு’க்கு வந்து “என்ன மகேஷ். எல் லோரும் வீட்டுக்குப் போயாச்சு.நீங்களும்,ரமாவும் மட்டும் இன்னும் இருக்கீங்க.என்ன விஷயம்” என்று கேட்டார்.

கண்களில் கண்ணீர் மல்க “சார்,மீதி ‘காஷில்’ ரெண்டு லக்ஷ ரூபா ‘ஷார்ட்’ வறது” என்று மகேஷ் சொன்னதும் மானேஜர் “என்ன மகேஷ் எப்படி ரெண்டு லக்ஷ ரூபா ‘ஷார்ட்’ வரும்.நீங்க ‘பாங்க்’க்கு வந்தவங்களுக்கு சா¢யாத் தானே ‘காஷ்’ குடுத்தீங்க” என்று கேட்டதும் மகேஷ் “சார் நான், ‘காஷ்’ வாங்க வந்தவங்களுக்கு எல்லாம் சா¢யாத் தான் பணம் குடுத்தேன்” என்று சொன்னான்.

“நான் ஒன்னும் பண்ண முடியாது.’காஷ் ஷார்ட்’ ரொம்ப சீரியஸ்ஸான சமாசாரம்.நான் உங்க மேலே ‘ஆக்ஷன்’ எடுத்தே ஆகணும்” என்று சொல்லி போலீஸ்க்கு ‘போன்’ பண்ணினார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்ததும் மானேஜர் எல்லா விஷயத்தையும் விவரமாகச் சொல்லி,மகேஷை அன்று இரவு போலீஸ் ஸ்டேஷனில் வைத்துக் கொண்டு,நாளைக்குக் கோ¡ர்ட்டுக்கு அழைத்து வரச் சொன் னார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷை தன்னுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் விட்டார்.

ரமா உடனே வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் ‘பாங்கில்’ நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னாள்.உடனே கோபால் சந்திரனுக்கு ரமா சொன்ன விஷயத்தை கவலையுடன் சொன்னார்.

சந்திரன் கமலாவை அழைத்துக் கொண்டு மகேஷ் ‘லாக் அப்பில்’ இருந்த போலீஸ் ஸ்டேஷனு க்கு ஓடிப் போய்,அங்கு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பார்த்து “சார்,என் பையன் நிரபராதி சார். அவனை தயவு செஞ்சி வெளியே விடுங்க”என்று கெஞ்சினார்.”அப்படி எல்லாம் விட முடியாது சார். நான் நாளைக்கு உங்க பையனை கோர்ட்டில் ஆஜர் படுத்தப் போறேன்.நீங்க அங்கே வந்து சொல்ல வேண்டியதை சொல்லி உங்க பையனை இட்டுக் கிட்டுப் போங்க.இன்னிக்கு ராத்திரி அவர் போலீஸ் ஸ்டேஷனில் தான் இருக்கணும்.நீங்க அவர் கிட்டே ஒரு பத்து நிமிஷம் பேசி விட்டுப் போங்க” என்று சொன்னார்.

சந்திரனும் கமலாவும் பத்து நிமிஷம் மகேஷூடன் பேசி விட்டு அழுதுக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.வீட்டுக்கு வந்ததும் சந்திரன் ‘ஹை கோர்ட்டில்’ ஒரு ‘லீடிங்க் லாயராக’ வேலை செய்து வந்த மாமா ராமநானுக்கு போன் பண்ணி “மாமா,நான் சந்திரன் பேசறேன்.மகேஷை இன்னி க்கு ‘காஷில்’ உக்கார சொல்லி இருக்கார் மானேஜர்.மகேஷ் சாயங்காலம் ‘பாலன்ஸ் காஷ்’ எண்ணும் போது ரெண்டு லஷ ரூபா ‘ஷார்ட்’ வந்து இருக்கு.மானேஜர் போலீஸ்க்கு ‘போன்’ பண்ணி அவனை ‘அரெஸ்ட்’ பண்ண வச்சு இருக்கார்.மகேஷ் ‘லாக் அப்பில்’ இப்போ இருக்கான்.நாளைக்கு மகேஷை கோர்ட்டில் ஆஜர் பண்ணப் போறாளாம்.நீங்கோ தயவு செஞ்சி அவனுக்காக ‘அப்பியர்’ ஆகி, மகேஷ் ‘கேஸ்’க்கு வாதாடி,அவனை எப்படியாவது அவனை வெளியே கொண்டு வர முடியுமா” என்று அழ மாட்டாத குரலில் கேட்டார்.

“மகேஷ் எந்த போலீஸ் ஸ்டேஷன்லே ‘லாக் அப்லே’ இருக்கான்னு சொல்லு.நான் மத்ததே பாத்துக்கறேன்” என்று மாமா கேட்டதும்,சந்திரன் “மாமபலம் போலீஸ் ஸ்டேஷன்லே” என்று சொன் னார்.“சரி.நான் மேலே ஆக வேண்டியதைக் கவனிக்கறேன்.நீ நிம்மதியா இருந்துண்டு வா”என்று சொல்லி விட்டு ‘போனை ஆப்’ பண்ணீனார் ராமநாதன்.

அடுத்த நாள் மகேஷ கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்

’ஜட்ஜ்’ இரு பக்க வாதங்களையும் கேட்டு விட்டு “ரெண்டு லக்ஷ ரூபாய் மக்கள் பணம்.குற்ற வாளி ரெண்டு லஷ ரூபாயை உடனே ‘பாங்கு’க்கு கட்டணும்.’காஷ்’ வேலையில் அஜாக்கிறதையாக இருந்ததால் தான் பாங்க் பணம் ‘ஷார்ட்’ ஆகி இருக்கு.அதற்கு குற்றவாளி தண்டணையை அனுபவி த்தே ஆகணும்.முதல் முறையாக இருப்பதால்,குற்றவாளிக்கு ஒரு வருட சாதாரண சிறை தண்டனை தீர்ப்பை அளிக்கறேன்” என்று சொன்னதும் போலீஸ் மகேஷ மறுபடியும் போலீஸ் ‘வானில்’ ஏற்றீப் போய் விட்டார்கள்.

சந்திரனும் காலாவும் அழுதுக் கொண்டே வீட்டுக்கு வந்தார்கள்.விஷயம் கேள்விப் பட்டு அக்கம் பக்கத்து ‘ப்லாட்’டில் இருந்தவர்களும்,சுதாவும்,அவள் கணவனும்,மாமனாரும்,மாமியாரும் சந்திரன் வீட்டுக்கு வந்தார்கள்.

எல்லோரும் மகேஷ்க்கு கிடைத்த தண்டணையைப் பற்றி தங்கள் வருத்ததை தெரிவிதார்கள்.

“நீங்கோ என்ன நினைச்சுண்டானாலும் சா¢.எங்களுக்கு என்னவோ நீங்கோ மகேஷூக்கு நிச்சியம் பண்ணி இருக்கும் பொண்ணு, ரொம்ப ராசியே இல்லாதவ போல தோண்றது.வெறுமே நிச்சியதார்த்தம் தான் ஆகி இருக்கு.இதுக்குள்ளே வரப் போற ஆத்துக்காரரை ஜெயிலுக்கு அனுப்பி இருக்காளே.அந்த மாதிரி ஒரு ராசி இல்லாத பொண்ணே நீங்கோ மகேஷ்க்கு கல்யாணம் பண்ணி வக்க வேண்டாம்.வேறே ஒரு நல்ல பொண்ணாப் பாத்து மகேஷ்க்கு கல்யாணத்தே பண்ணுங்களேன்” என்று ஒரு வாய் வைத்தார் போல சொன்னார்கள் எல்லோரும்.

அவர்கள் அத்தனை பேரும் ஒரு வாய் வைத்தார் போல சொன்னது கமலாவுக்கும் சந்திரனுக் கும் உண்மையாக இருக்குமோ என்கிற சந்தேக விதையை வித்தது.

அன்று சாயங்காலம் சந்திரனும் கமலாவும் மகேஷ் ஜெயிலில் பார்க்க போன போது,வீட்டுக்கு வந்த எல்லோரும் சொன்னதை சொல்லி,“எங்களுக்கும் அவா சொல்றது உண்மையாக இருக்கும்ன்னு தான் தோண்றது. மகேஷ்,ரமா உனக்கு வேணாம்.நாம இந்தக் கல்யாணத்தை நிறுத்திட்டு,வேறே ஒரு நல்ல பொண்ணைப் பார்த்து,உனக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு அபிப்பிராய படறோம்.நீ என்ன சொல்றே” என்று கேட்டதும் மகேஷ் ஆடிப் போய் விட்டான்.

அப்படி எல்லாம் அவசரப் பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்கோ.ரமா மேலே எந்த தப்பும் இல்லே. நான் தான் கொஞ்ச அஜாக்கிறதையா,என் ‘கேபினை’ பூட்டாம மனேஜரேப் பாக்கப் போனேன். ’பாங்க்லே’ இதே யாரோ பாத்துண்டு இருந்து,அந்த ரெண்டு லக்ஷ ரூபாயை எடுத்துண்டு இருக்கா. நீங்கோ எனக்கு வேறே எந்த பொண்ணையும் பாக்க வேணாம்” என்று கெஞ்சினான் மகேஷ்.

ஆனால் சந்திரனும் கமலாவும் “நாங்க எந்த விஷப் பரிக்ஷயும் பண்ணத் தயாரா இல்லே. ஆத்துக்கு வந்த அத்தனை பேரும் ஒரு வாய் வச்சு சொன்னது போல சொல்லி இருக்கா.இனிமே நாம சா¢யான ‘ஆக்ஷன்’ எடுக்காம இருக்கக் கூடாது.அது பயித்தியக்காரத்தனம்.நீ அவா போட்ட ஆறு செயின் சங்கிலியையும்,வைர மோதிரத்தையும் கழட்டி எங்க கிட்டேக் குடு.நானும் அம்மாவும் அவா ஆத்துக்குப் போய் தங்க சங்கிலையையும்,வைர மோதிரத்தையும் குடுத்துட்டு ‘எங்களுக்கு இந்த கல்யாணத்லே சம்மதம் இல்லே’ன்னு சொல்லிட்டு வறோம்” என்று பிடிவாதமாகச் சொல்லவே, மகேஷ் அம்மா அப்பா பேச்சைத் தட்ட முடியாமல் தங்க சங்கிலியையும்,வைர மோதிரத்தையும் கொடுத்து விட்டு “அம்மா,அப்பா நீங்கோ ரெண்டு பேரும் ரொம்ப அவசரப் படறேள்ன்னு எனக்குத் தோண்றது. இன்னும் கொஞ்சம் யோஜனைப் பண்ணி பண்ணுங்கோ” என்று கெஞ்சினான் மகேஷ்.

“நாங்க உனக்கு எப்பவும் நல்லதே தான் பண்ணுவோம்.நீ ரமாவே மறந்துடு ”என்று சொல்லும் போது ஜெயில் அதிகாரி ஒருவர் வந்து “சார் நேரம் ஆயிடுச்சி” என்று சொல்லவே சந்திரனும்,கமலாவும் மகேஷிடம் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

அடுத்த நாள் காலையிலே எழுந்து சந்திரனும் கமலாவும் காபியைக் குடித்து விட்டு ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு கோபால் வீட்டுக்கு வந்தார்கள்.

சந்திரனையும் கமலாவையும் பார்த்த கோபால் தம்பதிகள் “வாங்கோ,வாங்கோ.எங்களுக்கு கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.நமக்கு பகவான் ஏன் இந்த சோதனையைக் குடுத்து இருக்கார். நாங்க மூனு பேரும் உங்க ஆத்துக்கு வரலாம்ன்னு தான் இருந்தோம்.அதுக்குள்ளே நீங்களே வந்துட் டேள்” என்று சொல்லி வரவேற்றார்கள்.”ரெண்டு பேரும் சோபாவிலே உக்காருங்கோ.உங்க ரெண்டு பேருக்கும் ‘காபி’யே போட்டுண்டு வறேன்” என்று சொல்லி விட்டு சமையல் ‘ரூமு’க்குப் போனாள் கமலா.

சந்திரன் முகத்தை கோவமாக வைத்துக் கொண்டு “நாங்க உங்க ஆத்துக்கு ‘காபி’ சாப்பிட ஒன்னும் வறலே.இந்தாங்கோ நீங்கோ நிச்சியதார்த்ததுக்கு போட்ட ஆறு சவரன் தங்க செயினும், வைர மோதிரமும்.உங்க பொண்ணு ரொம்ப ராசியே இல்லாதவன்னு எங்களுக்கும்,எங்க உறவுக்காரா ளுக்கும்,எங்க ‘ப்ரெண்ட்ஸ்களுக்கும்’ படறது.நாங்க உங்க பொண்ணே நிச்சியம் பண்ண வேளே, அவ எங்க பையனை ஜெயிலுக்கு அனுப்பி இருக்கா.எங்களுக்கு இந்த கல்யாணத்லே கொஞ்சம் கூட சம்மதம் இல்லே.நாங்க எங்க பையனுக்கு வேறே ஒரு பொண்ணேப் பாத்து கல்யாணத்தே பண்றதா இருக்கோம்” என்று சொல்லி விட்டு தங்க செயினையும்,வைர மோதிரத்தை யும் ‘டைனிங்க் டேபிள்’ மேலே வைத்து விட்டு,மணைவியை அழைத்துக் கொண்டு கிளம்பிப் போய் விட்டார்.

கோபால் அவர்கள் கூடவே போய் “சந்திரன்,நான் சொல்றதே கொஞ்ச கேளுங்கோ” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது சந்திரன் “இந்த கல்யாணத்லே எங்களுக்கு கொஞ்சம் கூட சம்மதம் இல்லே.நீங்கோ வேறே பையனை உங்க பொண்ணுக்குப் பாருங்கோ” என்று சொல்லி விட்டு வாசலில் காலியாக போய்க் கொண்டு இருந்த ஒரு ஆட்டோவில் ஏறி இருவரும் போய் விட்டார்கள்.

வீட்டுக்குள்ளே வந்த கோபால் தலையிலே கையை வைத்துக் கொண்டு ‘பொத்’ என்று சோபாவில் உட்கார்ந்துக் கொண்டார்.

“கல்யாணம் நிச்சியம் பண்ண என் பொண்ணுக்கு நான் எப்படி இன்னொரு பையனைப் பார்த்து கல்யாண ஏற்பாடு பண்றது.ரமா நிச்சியயதார்த்தம் நின்னுப் போன விஷயம் வெளியே தெரிய ஆரம்பி ச்சா,நான் ஜாதகப் பா¢வர்த்தணைக்குப் போனாலே பையனுக்கு அப்பாவும்,அம்மாவும் என்னேப் பாத்து ’ஏன் உங்க பொண்ணுக்கு ஏற்கெனவே பண்ண நிச்சியதார்த்தம் நின்னுப் போச்சு’ன்னு கேப்பாளே.அப்படிக் கேக்கறாவாளுக்கு நான் என்ன பதில் சொல்றது.எப்படி என் ஒரே செல்லப் பொண்ணுக்கு நான் கல்யாணம் பண்ணப் போறேன்” என்று சொல்லி அழுதார் கோபால்.

“ஆமாண்ணா.நிச்சியதார்த்தம் நின்னுப் போன சமாசாரம் காட்டுத் தீ மாதிரி எல்லாருக்கும் பரவுமே.அந்த மாதிரி பரவினா,யாரும் கல்யாணம் பண்ணிக்க முன் வர மாட்டாளே. நாம் இப்போ என்னப் பண்ணப் போறோம்.நேக்கு ஒன்னும் புரியலையே” என்று சொல்லி கணவன் பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள் கமலா.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ரமா பொறுமையாக யோஜனைப் பண்ணினாள்.

கொஞ்சம் நேரம் ஆனதும்” நீங்கோ ரெண்டு பேரும் அழறதேப் பாத்தா நேக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.முதல்லே உங்க அழுகையை நிறுத்துங்கோ.இப்போ என்ன ஆயிடுத்து.அவா ரெண்டு பேருக் கும்,அவா உறவுக்காராளும்,‘ப்ரெண்ட்ஸ்’களும் சொன்னது நியாயமா இருக்கு.அவா இங்கே வந்து சொல்லிட்டுப் போய் இருக்கா” என்று சர்வ சாதாரணமாக சொன்னாள் ரமா.

“உனக்கு பயித்தியமா பிடிச்சி இருக்கு ரமா.ஆம்படையானும்,பொண்டாட்டியும் நம்மாத்துக்கு வந்து நாம நிச்சியதார்த்ததுக்குப் போட்ட செயினையும் வைர மோதிரத்தையும் திருப்பிக் குடுத்துட்டு உன்னை ‘ஒரு ராசி இல்லாத பொண்ணு’ன்னு சொல்லிட்டு கல்யாணத்தை நிறுத்திட்டுப் போய் இருக்கா.நீ என்னவோ அவா பண்ணது நியாயம்ன்னு கூலா சொல்லிட்டு நின்னுண்டு இருக்கே. அவா சொன்னதேக் கேட்டு உனக்கு ரத்தம் கொதிக்கலையா” என்று கத்தினாள் கமலா.

“நான் மகேஷை உயிருக்கு உயிரா ஆசைப் பட்டேன்.அவரும் என்னேஆசைப் பட்டார். கல்யாண முஹ¥ர்த்தம் தேதி இன்னும் சீக்கிரமா வந்து இருந்தா,அவர் என் கழுத்திலே தாலி கட்டி இருப்பார்.என் அதிர்ஷ்டம் கல்யாண முஹ¤ர்த்த நாள் ரொம்ப தள்ளி கிடைச்சு இருக்கு.மகேஷ்,நாம நிச்சயதார்த்ததுக்கு போட்ட செயினையும்,மோதிரத்தையும் கழட்டிக் குடுத்து இருக்காரே.அவருக்கும் இந்த கல்யாணத்லே இஷ்டம் இல்லேன்னு தெரியறது.அவருக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கணும் ன்னு அந்த பகவான் என் தலையிலே எழுதலே.அது நான் வாங்கிண்டு வந்த வரம்.இனிமே எனக்கு வேறே எந்த ஆணையும் கல்யாணம் பண்ணிக்க மனம் சம்மதம் தறலே.என் வாழ்க்கை ஒரு இலவு காத்த கிளி கதையாட்டும் ஆயிடுத்து” என்று சொல்லி விட்டு,யோஜனைப் பண்ணீனாள் ரமா.

கொஞ்ச நேரம் ஆனதும் “அம்மா,அப்பா நான் மறுபடியும் அந்த ‘பாங்க்’ வேலைக்கு போகப் போறது இல்லே.என் ‘பாங்க்’ வேலையை நான் ‘ரிசைன் பண்ணீட்டு,ஒரு பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளீகூடத்லே ஒரு வாத்தி யார் வேலைக்கு ‘அப்ளை’ பண்ணி அதிலே சேந்து,அங்கே படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் குடுத்துண்டு வந்து,என் வாழ்க்கைலே எந்த ஆண் வாடை யும் படாம அமைதியா கழிச்சுண் டு வறப் போறேன்.இது தான் என் தீர்மானமான முடிவு” என்று சொல்லி விட்டு ‘பாத் ரூமு’க்குப் போய் தலைக்குக் குளித்து விட்டு வந்தாள் ரமா.

மகேஷை அறவே மறந்து விட்டு,அடுத்த மாதமே ரமா ஒரு பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளீக் கூடத்தில் ‘காமர்ஸ்’ பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராக வேலைக்கு சேர்ந்தாள்.

அவள் அம்மா,அப்பா காலம் முடிந்த பிறகு,ரமா ஒரு ‘லேடீஸ் ஹாஸ்டலில்’ தங்கிக் கொண்டு, ஒரு ‘தனி மரமாக’ தன் மீதி காலத்தை சந்தோஷமாக கழித்து வந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *