தொலைந்த கவிதை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2019
பார்வையிட்டோர்: 7,259 
 

பரபரப்புடன்  புறப்பட்டாள்  கவிதா ,இன்று லிஸிக்கு கண்ணில் சத்திரசிகிச்சை  வெற்றியாக  முடிந்து  விட் டதாயும்  கட்டு  அவிழ்த்து  பார்க்க முடியும்  என்றும்  வைத்தியசாலையில்  அறிவித்திருந்தார்கள்,.அதற்காகவே கவிதா புறப்படுகிறாள். அவள் மனதின் உணர்வை  வடிக் மொழிகளே இல்லையென்றே கூறவேண்டும் ,

தவிப்பா, மகிழ்வா,துன்பமா .அவதியா .இல்லை  எல்லாமே கலந்த ஓர்  உணர்வா ? இது ,லிசி கண்திறந்து  பார்க்கும்  தருணத்தை  கவிதாவின் மனம்  என்ன மனோபாவத்துடன்  எதிர் கொள்ளப்போகிறது  அவளுக்கே  புரியவில்லை ,ஆனால்  மனம் ஓடு ஓடு என்கிறது ,இதோ புறப்பட்டு ஓடுகிறாள்.

லிசி கவிதாவிற்கு சொந்தமோ  பந்தமோ  அல்ல ,ஆனால் இப்போதிலிருந்து அவளைப் பார்க்காமலிருக்க  முடியுமா மனம் உலைக்களமாய் உழன்றது ,கவிதாவின் கணவன்  மனோ கூட  கூறினார் ,கவிதா நீர் இப்போ அவசரப்பட்டு போக வேண்ண்டாம் ,நான் மாலை வேலை முடிந்து அப்படியே  வைத்தியசாலை போய் நிலமையை  பார்த்த பின் நீர் போகலாம் என்றார்  ,ஆனால் கவிதாவால் முடியவில்லை  உடனேஓடுகிறாள் ,அவளோடு மனமும் பின்  நோக்கி  ஓடியது.

சந்தியா, மனோ, கவிதா முவர்கொண்ட அன்பாலயம் அவர்கள்  குடும்பம் ,பாட்டு நகைச்சுவை ,கிண்டல் கேலி ,இதுதான் அவர்கள்  வாழ்வு ,கவிதா படிப்பில் விளையாட்டில் .பாடுவதில்  என எல்லாத்திறமைகளையும் கொண்டு குடும்பத்தின்  மகிழ்வை இரட்டிப்பாக்கினாள், அன்று  காலை வழமைபோல வீட்டிலிருந்து  சிரித்துப்பேசியபடி ஒன்றாக  புறப்பட்டு  ,  தங்கள்  தங்கள்  கடமைகளுக்குச்  சென்றார்கள் ,போகும்போது கைத்தொலைபேசியில்  தனக்குப் பிடித்த  சினிமாப் பாட்டுக்களைக்   கேட்டபடியும் தானும்  சேர்ந்து பாடியபடியும் வந்தாள் சந்தியா, மகிழ்வோடு  மூவரும் விடைபெற்றுச்  சென்றனர்.

அனால் அந்த மகிழ்வு மாலை வரை நீடிக்கவில்லை -மதியம் வந்த தொலைபேசி அவர்கள் வாழ்வையே உலுப்பிவிட்டது  , அவர்கள் மகள்  சந்தியா கல்லூரி முடிந்து வீடுசெல்லும்போது விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள் உடனே வாருங்கள் என்றார்கள்.

ஆனால்  அவர்கள் போகுமுன்  அவள் அவர்களை விட்டுப் போய் விட்டாள் ,கதறினார்கள் துடித்தார்கள் .பயனென்ன? ,அந்த பெரும் வேதனையிலும் மருத்துவர்களின் பாரிய  ஆறுதலிலும்  அறிவுரையிலும் தேறி  மகள் மீண்டும் உயிர் பெற்று வாழுவாள் என்ற மன ஆறுதலில் அவளின் உறுப்புகளை  தானமாக கொடுக்க  ஒப்புக்கொண்டோம் ,சந்தியாவின் விருப்பமும் இதுவாகவே இருந்தது ,அப்படியே இன்று அவள் கண்கள்  ஒரு சிறுமிக்கு பார்வை கொடுக்கப்போகிறது ,வைத்தியர்கள்  விரும்பினால் வந்து பாருங்கள்  அந்தப் பெற்ரவரிடமும்  கூறிவிட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள் அதற்காகவே ஓடுகிறாள் கவிதா ,சந்தியா  என்னும் தொலைந்த கவிதையை  காணும் ஆவலில் .

– 25.03.2017 (வெளியான பத்திரிகை: சிட்னி உதயசூரியன்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *