“தோ பார், தொடாமல் உட்கார்.’
“கொஞ்சநாழி சும்மா இருக்க மாட்டியா.’
“ஒரு தடவை சொன்னா புரியாதா?’
“அப்படி என்ன அவசரம், சித்த நேரம் பொறுக்க மாட்டியா…?’
“எங்கெங்க கை போகுது பாரு!’
“சுத்தி இவ்வளவு பேரு இருக்காங்களே, உனக்கு மட்டும் என்ன அவசரம்? அலையிறியே, காணாததைக் கண்டுவிட்ட மாதிரி.’
“இன்னும் சித்த நேரம் கழித்தே உன்னை கூப்பிட்டிருக்கலாம். அவசரப்பட்டுட்டேன்.’
“நான் ஒன்னும் உன்னை ஏமாத்தமாட்டேன், இருக்கிறது எல்லாம் உனக்குத்தான்; ஒரு கட்டுப்பாடு வாணாம், மனதை அடக்கிக்கோ.’
“ஏய், மரியாதை கெட்டுடும்.’
“பேசாம கையைக் கட்டிக்கிட்டு உட்கார்.’
“வேணும்னா இந்த மணியை அடிச்சிக்கிட்டிரு, எல்லாம் வச்சாச்சி. இதோ படச்சிடுறேன். சாமிக்குப் படைக்கும் முன் எதையும் தொடக்கூடாது, சாப்பிடக்கூடாது’ என்று தன்னுடைய எட்டு வயது மகளை அதட்டிக் கொண்டு சுவாமிக்கு நைவேத்தியம் காட்டினாள் சுமதி.
– ந. திருக்காமு (மே 2014)