தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 6,810 
 
 

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

’அடேயப்பா,பணக்காரா எல்லாம் இப்படி தான் தினமும் வித விதமா சாப்பிடுவாளா. நம்மை போல எப்போதும் குழம்பு,ரசம்,மோர்ன்னு சாப்பிட மாட்டாளா’ என்று யோசித்து கொண்டு இருந்தா ள்.”நான் கேக்கறேன்,நீ பதில் ஒன்னும் சொல்லாம நிக்கறயே”என்று அந்த மேடம் கேட்டதும் காயத் திரி இந்த உலகத்துக்கு வந்தாள்.”நான் நீங்க சொன்ன எல்லா சமையலும் நன்னா செய்வேன் மேடம். நான் தினமும் இங்கே காத்தாலே ஆறரை மணிக்கு எல்லாம் வந்துடறேன்.நான் என் உதவிக்கு என் பொண்னு காயத்திரியை அழைச்சுண்டு வந்து இங்கே என்னோடு வச்சுக்கலமா மேடம்”என்று கேட்டா ள் காயத்திரி.“எனக்கு ஒன்னும் ‘அப்ஜெக்ஷன்’ இல்லை.நீ அவளை உன் ‘ஹெல்ப்புக்கு’ வச்சுக்கோ” என்றாள் மேடம்.காயத்திரிக்கு ‘அப்பாடா, நம்மை சமையல் வேலைக்கு வச்சுண்டாளே.கூட லதாவை யும் அழைச்சு வந்து வச்சுக்க அனுமதி கொடுத்தாளே’ என்று சந்தோஷ பட்டாள் காயத்திரி.

அம்பாளுக்கும்,,தன் கணவருக்கும்,தன் நன்றியை மானசீகமாகத் தெரிவித்தாள் காயத்திரி. ‘லதா,நம் கண் எதிரிலே இருந்து வருவா.எப்படியாவது இவளை ஒரு நல்ல பையனா பாத்து,அவன் கையிலே பிடிச்சுக் குடுத்துட்டா,நாம நிமத்தியா இருந்து வரலாம்’ என்று சொல்லிக் கொண்டாள். அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.”நான் இன்னிலே இருந்தே சமையல் வேலையை ஆரம் பிக்கட்டுமா மேடம் ”என்று கேட்டாள் காயத்திரி.”நீ இன்னிலே இருந்தே ஆரம்பி.நான் இதுக்கு முன் னே இருந்த சமையல்கார மாமிக்கு போட்டுக் குடுத்து இருந்த ‘மெணு காப்பி’ உன் கிட்டே தறேன். அதே மாதிரி நிறைய ‘மெனு காப்பி கள்’கிச்சன் டிராயர்லே இருக்கும்.நான் ரெண்டு சமையல் புஸ்தகம் ‘கிச்சன்லே ‘வச்சு இருக்கேன். அதைப் படிச்சுட்டுக்கோ.நான் சொல்லி இருக்கும் ‘ஐட்டங்க¨ளை’ பண்ண உனக்கு உதவியா இருக் கும்.நீ முதல்லே ‘ப்றேஷ்ஷா’ காபி ‘டிக்காக்ஷன்’ போட்டு,எங்க எல்லாருக்கும் காபி குடு”என்று சொல்லி விட்டு ‘மெணு காப்பியை’ காயத்திரி இடம் கொடுத்து விட்டு தன் ரூமுக்கு போனான் மேடம்.காயத்திரி லதாவை கூட அழைத்துக் கொண்டு சமையல் ரூமுக்குப் போனாள்.அங்கு மாட்டி இருந்த வெங்கடேஸ்வரர் படத்தின் முன்னால் நின்னுக் கொண்டு பகவானை வேண்டிக் கொண்டு சமையல் ரூமைப் பார்த்தாள்.அங்கு நாலு காஸ் அடுப்புகள்,ரெண்டு க்ரைண்டர்,ரெண்டு மிக்ஸி, ’மைக்ரோ வேவ்’ எல்லாம் இருந்தது .பெரிய சமையல் ரூமும்,அதை ஒட்டி னார் போல ஒரு ‘ஸ்டோர் ரூமும்’ இருந்தது.அதில் மளிகை சாமான்கள் நிரம்பி வழிந்தது.அங்கே இரு ந்த ரெண்டு ‘ப்ரிட்ஜில்’ எல்லா தினுசு காய்கறிகளும்,வெண்ணை கட்டிகளும்,பால் பாக்கெட்டுகளு ம் அடுக்கி வைத்து இருந்தது.மலைத்துப் போய் நின்று விட்டார்கள் காயத்திரியும் லதாவும்.

மேடம் கொடுத்த மெணுவைப் பார்த்தாள் காயத்திரி.’தினம் ஒரு வகை ‘சூப்’.’திங்கட்கிழமை: பூரி கிழங்கு ரெண்டு வித சட்னிகள்,செவ்வாய்க் கிழமை: பொங்கல்,வடை,கொத்ஸ¤,ரெண்டு வகை சட்னிகள்,புதன் கிழமை: மசால் தோசை,சாம்பார்,ரெண்டு வகை சட்னி,வியாழக்கிழ¨:இட்லி வடை, சாம்பார்,மிளாய் பொடி, ரெண்டு வகை சட்னி,வெள்ளிகிழமை:அரிசி உப்புமா, கொத்ஸ¤, ரெண்டு வகை சட்னி,சனிகிழமை,அடை,அவியல் ரெண்டு வகை சட்னி’ என்று அந்த மெணு கார்ட்டில் ‘பிரி ண்ட்’ பண்ணி இருந்தது.காயத்திரி அசந்து விட்டாள்.லதாவிடம் மெணுவை காட்டினாள் காயத்திரி. லதா அந்த மெணுவை வாங்கிப் படித்தாள்.கொஞ்ச நேரம் கழித்து ”அம்மா இந்த ‘மெணுவில்’ இருக்கும் எல்லா டிபனும் நீ பண்ணுவாயா அம்மா”என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் “எனக்கு எல்லா டிபன் வகையும் பண்ணத் தெரியும் லதா.அப்படி ஏதாவது சந்தேகம் வந்தா,கிச்சன்லே இருக்கும் சமையல் புஸ்தகத்தை மத்தியானம் ‘ப்ரீயா’ இருக்கும் போது படிச்சுட்டு பண்றேன்”என்று தைரியமாக சொன் னாள் காயத்திரி.தன் அம்மா தைரியத்தைப் பார்த்து லதா அசந்து விட்டாள்.

அடுப்பில் தண்ணீர் வைத்து காய வைத்து,இன்னொரு காஸ் அடுப்பில் ஒரு பால் பாக்கெட் டை உடைத்து காய்ச்சினாள் காயத்திரி.பில்டரில் காபி பொடிப் போட்டாள்.தண்ணீர் கொதித்ததும், அதை எடுத்து பில்டரில் கொட்டினாள் காயத்திரி பிறகு பாலை நல்ல சுண்ட காய்ச்சினாள்.’டிக்காக்ஷ ன்’ இறங்கியதும்,அதை ஒரு டம்லா¢ல் விட்டு அளவாக சக்கரைப் போட்டு ‘டிக்காக்ஷனை’ விட்டு காபி போட்டு, ஒரு டவராவில் வைத்து கொண்டு,லதாவையும் கூட அழைத்துக் கொண்டு போய் மேடம் உட்கார்ந்துக் கொண்டு இருந்த சோபாவின் பக்கத்தில் இருந்த ‘ஸைட் டேபிளில்’ பவ்யமாக வைத்தாள் காயத்திரி.அன்றைய காலைப் பேப்பரைப் படித்துக் கொண்டு இருந்த லலிதா,காயத்திரி கொண்டு வந்து வைத்த காப்பியை ருசித்தாள்.காயத்திரி போட்ட காப்பி அவளுக்கு பிடிச்சு இருந்தது. ‘காபி ரொம்ப நன்னாப் போட்டு இருக்காளே இந்த மாமி’என்று தன் மனதில் சொல்லிக் கொண்டாள் லலிதா.நிதானமாக பேப்பரைப் படித்துக் கொண்டே அவள் காபியை ரசித்துக் குடித்துக் கொண்டு இருந்தாள்.அப்போது தான் சோம்பல் முறித்தவாறு அந்த பணக்கார் பல் தேய்த்துக் கொண்டு அவர் ‘பெட் ரூமில்’ இருந்து வெளியே வந்தார். “காயத்திரி,இவருக்கும் நல்ல ‘ஸ்ட்ராங்கா’ காபி போட்டு கொண்டு வா.சக்கரை கம்மியா போடு” என்று சொன்னாள் லலிதா.

காயத்திரி சமையல் ரூமுக்கு போய் ஒரு கப் ‘ஸ்ட்ராங்கா’ காபி கலந்து, அதிலே சக்கரையை கொஞ்சமா போட்டு,லதாவுடன் ஹாலுக்கு வந்து,அந்த பணக்காரர் உட் கார்ந்து கொண்டு இருந்த சோபாவின் பக்கத்தில் இருந்த’ ‘ஸைட் டேபிலில்’ மெல்ல வைத்தாள்.காபி யை ரசித்து குடித்தார் பெரியவர்.உடனே அவர் “காபி பேஷா இருக்கு.நன்னா போட்டு இருக்கேள்.யார் இந்த பொண்ணு. உன் பொண்ணா.பாக்க ரொம்ப அழகா இருக்காளே”என்று சொல்லி முடிக்கவில்லை லலிதா அவரை ஒரு முறை முறைத்ததும் அவர் சும்மா இருந்து விட்டார்.’தன் கணவர் சாதாரணமாய் எந்த காபியை யும் புகழ மாட்டாரே,காயத்திரி போட்ட காபியை புகழ்ந்து இருக்காரே’ என்று எண்ணினாள் லலிதா. பெரியவர் புகழ்ந்ததை கேட்ட காயத்திரிக்கும் லதாவுக்கும் சந்தோஷமாய் இருந்தது.

ஹாலில் அப்பா யாரையோ ‘ரொம்ப அழகா இருக்காளே’ன்னு சொல்லிண்டு இருந்ததை கேட் டுக் கொண்டே பூஜை ரூமைக் திறந்துக் கொண்டு,சுரேஷ் ஈரத் துண்டுடன் வெளியே வந்தவன் ஹா லில் நின்றுக் கொண்டு இருக்கும் காயத்திரியையும்,லதாவையும் பார்த்தான்.’இந்த பொண்ணு உண் மையிலே ரொம்ப அழகா இருக்காளே’என்று யோஜனைப் பண்ணிக் கொண்டே,தன் ‘பெட்ரூமு’ க்கு ள் போய் ஒரு வேஷ்டி,டீ ஷர்ட்டுடன் வெளியே வந்தான்.லலிதா உடனே காயத்திரியை கூப்பிட்டு ”காயத்திரி,இவன் என் பெரிய பையன்.பேர் சுரேஷ்.இவனுக்கு ஒரு கப் காபி கலந்துண்டு வா” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது தன் பெட் ரூமைத் திறந்து கொண்டு இன்னொரு பையன் சொ ம்பல் முறித்தவாறே,ஒரு ‘ஜீன்ஸ் பேண்டு’,’ டீ ஷர்ட்டு’டன்,’டிரிம்’ பண்ண தாடி,மீசை, நிறைய தலை மயிருடன் வெளியே வந்தான்.உடனே லலிதா “காயத்திரி,இவன் என் சின்னப் பையன்.பேர் ரமேஷ். இவனுக்கு ஒரு கப் ‘ஸ்டாராங்கா’ காபி கலந்து..” என்று சொல்லி கொண்டு இருக்கும் போது “நான் ரொம்ப ஒன்னும் சின்னவன் இல்லே.அரை மணி நேரம் தான் சின்னவன்”என்றான் ரமேஷ்.லலிதா சுரேஷை ஒரு முறை முறைத்தாள்.அவன் அப்புறமா சும்மா இருந்து விட்டான்.

லதாவை அழைத்துக் கொண்டு,காயத்திரி ரெண்டு கப்பில் ‘ஸ்டாங்காக’ காபி கலந்துக் கொ ண்டு வந்து அந்த ரெண்டு பையன்களிடமும் கொடுத்தாள்.காப்பியை ருசி பார்த்த சுரேஷ் “காப்பி ரொம்ப நன்னா இருக்கு”என்று சொன்னான்.“இதைத் தாண்டா உன் அப்பாவும் சொன்னார்.முன்னே இருந்த சமையல் கார மாமிக்கு காப்பி நன்னாவே போடத் தெரியலே.எல்லாருக்கும் எல்லாம் சரியா பண்ண வராதுடா”என்று சொன்னாள் லலிதா.சுரேஷ் தான் போட்ட காபியை புகழ்ந்தது காயத்திரி மனதுக்கு இதமாக இருந்தது.கொஞ்ச நேரம் கழித்து லலிதா “இவா தான் நம்மாத்துக்கு புதுசா வந்து இருக்கும் சமையல் ¡ர மாமி.பேரு காயத்திரி.லதா அம்மாவுக்கு ஒத்தாசை பண்ண வந்து இருக்கா” என்று சமையல் கார மாமியை மூனு பேருக்கும் அறிமுகம் பண்ணிணாள்.சுரேஷூம், ரமேஷூம், லதாவை கிட்டத்திலே பார்த்தார்கள்.“காயத்திரி,மெணு படி ‘டிபன்’ பண்ணிட்டு,மத்தியானத்துக்கு ரெண்டு கறி,சாம்பார்,தயிர் பச்சடி,தக்காளி ரசமும் பண்ணிடு.சாயங்கால டிபனை நான்அப்புறம் சொல்றேன்” என்று அதிகார தோரணயில் சொன்னாள் லலிதா.உடனே காயத்திரி “சரி மேடம் நான் அப்படியே செய்றேன்” என்று சொல்லி விட்டு சமையல் ரூமுக்கு வந்தாள்.லதா அவர்கள் குடித்த காபி டம்லர்களையும்,‘கப்’ களையும் கொண்டு வந்து தேய்க்கப் போட்டாள்.

லலிதா சொன்னபடி ‘டிபனை’ செய்து முடித்தாள் காயத்திரி.லதாவும் தன் அம்மாவுக்கு காய்கறி நறுக்கித் தருவது,சமைச்ச சமையலைக் கொண்டுப் போய் ‘டைனிங்க் டேபிளில்’ வைப்பது, அவர்கள் சாப்பிட்ட தட்டுகளை கொண்டு வந்து தேய்யக்க போடுவது போன்ற சில்லறை வேலைகளை அம்மாவுக்கு செய்து அம்மாவுக்கு உதவி பண்ணி வந்தாள்.‘டிபனை’ச் சாப்பிட்டு விட்டு சுரேஷ் தன் காரை எடுத்துக் கொண்டு கிண்டியில் இருந்த ‘பாகடரிக்கு’க் கிளம்பிப் போனான்.’பாகடரிக்குப் போகும் வழியில் சுரேஷ் லாதவின் அழகை ரசித்துக் கொண்டே போனான்.கொஞ்ச நேரம் கழித்து ரமேஷ் தன் காரை எடுத்துக் கொண்டு ‘அம்பத்தூர் பாக்டரிக்கு’க் கிளம்பிப் போனான்.’பாகடரிக்கு’ போகும் வழியில் ரமேஷூம் லதாவின் அழகை ரசித்துக் கொண்டே போனான்.பெரியவர் வாரத்தில் மூனு நாள் ரமேஷ் ‘பாக்டரிக்கும்,மத்த மூனு நாள் சுரேஷ் ‘பாக்டரிக்கும் போய் வந்து,தன் பிள்ளை களுக்கு தன்னுடைய முதிர்ந்த அனுபவத்தை எல்லாம் சொல்லி வந்தார்.காயத்திரி மத்தியான செய்த சாப்பாட்டை லலிதவும்,பெரியவரும் ரசித்து சாப்பிடார்கள்.மீந்த சாப்பாடைகாயத்திரியும்,லதாவும் சாப்பிட்டு வந்தார்கள்.

மத்தியான வேளைகளில் லலிதாவுடன் அரட்டை அடிக்க நிறைய ‘ப்ரண்ட்ஸ் கள் வந்தார்கள். லலிதா உடனே காயத்திரியைக் கூப்பிட்டு “இவாளுக்கு எல்லாம் போண்டா,ரவா கேசரி, காபியும் போட்டு கொண்டு வா” என்று உத்தரவு போட்டாள்.காயத்திரி லலிதா சொன்னது போல ‘டிபன்’ தயார் பண்ணப் போனாள்.ஹாலில் அவர்கள் எல்லாம் சிரித்து கொண்டு அரட்டை அடித்துக் கொண் டு இருந்தார்க்ள்.லலிதா சொன்ன ‘டிபன்களை’ எல்லாம் காயத்திரி ரெடி பண்ணி விட்டு லதாவைக் கூப்பிட்டு,அந்த’ டிபனை’ ‘ப்ளேட்டுகளில்’ வைத்து ஹாலில் இருப்பவர்களுக்குக் கொண்டு போய் கொடுக்கச் சொன்னாள்.லதாவும் அம்மா கொடுத்த’ டிபன்’ ப்ளேட்டுகளை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் இருந்தவர்களுக்குக் கொடுத்தாள்.அவர்கள் அந்த ‘டிபனை’ சாப்பிட ஆரம்பித்தார்கள். கொ ஞ்ச நேரம் ஆனதும் லதா அவர்களுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.ஏதோ வேலையாய் இரு ந்த காயத்திரி அந்த வேலையை முடித்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.‘டிபனை’ ருசித்துக் கொண்டே லலிதா பெருமையுடன் “இந்த மாமி தான் நான் ‘அப்பாயிண்ட்’ பண்ணி இருக்கும் புது சமையல்கார அம்மா.இந்த அம்மா பேரு காயத்திரி.இவ காயத்திரியின் பொண்ணு.பேர் லதா” என்று சொன்னாள்.எல்லோரும் காயத்திரியையும் லதாவையும் ஏற இறங்கப் பார்த்தார்கள்.’டிபனை’ப் பாதிக்கு மேல் சாப்பிட்டு முடித்த ஒரு அம்மா “முன்னே இருந்த சமையல் கார மாமியை விட இந்த மாமி பண்ற ‘டிபன்’ ரொம்ப ருசியா இருக்கு லலிதா.நீ ரொம்ப லக்கி.இந்த காலத்லே நல்ல சமையல் கார மாமிகளே கிடைக்கறதே இல்லே”என்று சொன்னவுடன் லலிதாவுக்கு இன்னும் பெருமையாக இருந்தது.உன் ‘கமெண்ட்ஸ்’க்கு ரொம்ப தாங்க்ஸ், ரமா”என்று சொல்லி தன் தோழி ரமாவை ‘தாங்க்’ பண்ணினாள் லலிதா.

அம்மாவுடன் கிச்சனுக்கு வந்து லதா அம்மாவிடம் “அம்மா, நீ ஒரு ‘க்ரேட் குக்’ மா”என்று சொல்லி தன் அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.ஹாலில் அவர்கள் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கும் போது காயத்திரியின் மனம் யோஜனையில் ஆழ்ந்தது.’இந்த ஆம் நமக்கு நிரந்தரம் ஆயி டும் போல இருக்கு.நாம தப்பு தண்டா ஒன்னும் பண்ணாம இந்த ஆத்தை நிரந்தரமா பிடிச்சுக்கணும். நமக்கு கிடைகிற சம்பள பணத்லே வெறுமனே வீட்டு வாடகை மட்டும் குடுத்துட்டு,சிக்கனமாக இருந்து வந்து,பாக்கி சம்பளத்தை பாங்கில் போட்டு வந்து,கையில் கனிசமாக பணம் சேத்தக்கணும். அப்புறமா ஒரு கம்பனியிலோ, ‘பாக்டரியிலே’ வேலை செஞ்சு வரும் ஒரு ஏழை பையனுக்கு லதா வைக் கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டு அவளை ‘கன்னி கழிய’ வச்சிட்டா,நாம நிம்மதியா நம்ம கால த்தை இந்த ஆத்லே கழிச்சு வரலாம்.லதாவை பத்தின பயம் நமக்கு இல்லாம இருந்து வரலாம்.வயசுப் பொண்ணு லதாவை இந்த பாழாய் போன லோகத்லே ஒரு ஆண் துணை இல்லாம நான் தனியா எத் தனை நாள் பாதுகாத்து வர முடியும்’என்று அவள் எண்ணிப் பார்க்கும் போது அவளுக்கு கவலையாக இருந்தது.லதா நல்ல கலராகவும்,வாளிப்பாகவும் இருந்து வந்தது அவளுக்கு பயத்தைக் கொடுத்தது. ‘எல்லாம் நல்லபடி நிறைவேறி வரணுமே’ என்று சதா பகவானை வேண்டி வந்தாள் காயத்திரி.லதாவும் தன் வயசு கோளாறால் ‘காதல்,கத்தா¢க்கா’ன்னு கண்ட ஜாதி பையணை காதலிக்காம ஒழுங்கா இரு ந்து வரணுமே’என்றும் காயத்திரி வேதனைப் பட்டாள்.

காயத்திரி அந்த வீட்டுக்கு வேலைக்கு வந்து நாலு மாசம் ஆகி விட்டது.வீட்டில் இருந்த நாலு பேரும் காயத்திரியிடமும்,லதாவிடமும் நன்றாகப் பழகி வந்தார்கள்.காயத்திரியும் வேளா வேளைக்கு அவர்கள் சொன்னா எல்லா சமையல்களையும் பண்ணிக் கொடுத்து வந்தாள்.யாரிடமும் எந்த புகாரும் இல்லாமல் பார்த்துக் கொண்டு வந்தார்கள் இருவரும்.லலிதா லதா தினமும் இங்கும் அங்கும் ஓடி, வேலை செஞ்சி வருவதைப் பார்த்து,அவள் போ¢ல் அனுதாபப் பட்டு “லதா நீ இந்த ஆத்லே நிறைய வேலை செஞ்சி வறதை நான் தினமும் பாக்கறேன்.உன்னைப் பாத்தா எனக்குப் பாவமா இருக்கு. இந்த மாசத்திலே இருந்து உனக்குன்னு,நான் தனியே ஒரு ஐனூறு ரூபாய் சம்பளம் தரேன்.நீ அதை வச்சுக்கோ.உனக்கு வேண்டியதை நீ அம்மா கிட்ட கேக்காம வாங்கிக்க உதவும்” என்றாள்.லதாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.“ரொம்ப ‘தாங்க்ஸ்’ மேடம்”என்று சொல்லி விட்டு மேடம் சொன்னதை தன் அம்மாவிடம் வந்து சொன்னாள் லதா.உடனே காயத்திரி ”நான் கேட்டுண்டு இருந்தேன் லதா.அந்த அம்மாவுக்கு உன் பேர்லே ஒரு அனுதாபம்.அதான் உனக்குன்னு தனியா சம்பளம் குடுத்து இருக்கா” என்று சொல்லி சந்தோஷப் பட்டாள்.

அன்று இரவு வீட்டுக்கு வந்ததும் காயத்திரி லதாவிடம் “லதா, அந்த மேடம் குடுக்கிற ஐனூறு ரூபாயை நான் வீட்டு வாடகைக்குத் தந்துட்டு எனக்கு தரும் பத்தாயிரம் ரூபாயை பாங்க்லே போட்டு சேமிச்சு வச்சு,ஓரளவுக்கு பாங்க்லே பணம் சேந்தவுடன்,மெல்ல நல்ல பையனாப் பாத்து உனக்கு கல் யாணம் பண்ணிடலாம்ன்னு நினைக்கிறேன்.நீ என்ன சொல்றே லதா”என்று மெல்லக் கேட்டாள். அதற்கு லதா “சரிம்மா அப்படியே செஞ்சு வாம்மா.எனக்கும் இந்த ஐடியா பிடிச்சி இருக்கு” என்று சொன்னாள்.”என் ராஜாத்தி நீ,நான் சொறதே நீ மறுத்து சொல்ல மாட்டேன்னு எனக்கு நன்னாத் தெரியும்.என் கணக்குப் படி எல்லாம் நன்னா போனா,நான் உனக்கு சீக்கிரமே ஒரு நல்ல பையனாப் பாத்து நான் கல்யாணத்தை முடிச்சி விட பாக்கிறேன்.பாக்கலாம் எல்லாம் அந்த பகவான் செயல்.அவர் அனுக்கிரஹம் இல்லாம எதுவும் நடக்காது”என்று சொல்லி லதாவைக் கட்டிக் கொண்டாள் காயத்திரி. அந்த மாசம் பிறந்ததும் லலிதா காயத்திரிக்கு பத்தாயிரம் ரூபாயும்,லதாவுக்கு தனியாக ஐனூரு ரூபா யும் கொடுத்தாள்.லதா மேடம் கொடுத்த ஐனூறு ரூபாயை தன் அம்மாவிடம் கொடுத்தாள்.காயத்திரி லதா கொடுத்த ஐனூறு ரூபாயை தன் வீட்டு வாடகைக்கு கொடுத்து விட்டு,தன் சம்பளத்தை சிக்கன மாக செலவு பண்ணி வந்து,மீந்த பணத்தை பாங்கில் போட்டு வைக்க ஆரம்பித்தாள்.மாசா மாசம் கணிசமாக பணம் சேர்ந்து வந்ததை எண்ணி காயத்திரி மிகவும் சந்தோஷப் பட்டாள்.’இப்படியே இன்னும் ஒரு வருஷம் போனா,லதாவை நாம நல்ல பையன் ஒருவன் கைலே பிடிச்சு குடுத்துடலாம்’ என்று நினைத்து சந்தோஷப் பட்டாள் காயத்திரி.

அப்பா,அம்மா,ரமேஷ் மூவரும் வாழ்ந்து வரும் ‘மார்டர்ன் ’வாழ்க்கைக்கு முற்றிலும் மாறுபட்ட குணங்கள் உள்ளவனாக இருந்தான் சுரேஷ்.எப்போதும் ‘சிம்பிலா’ இருந்து வந்தான்.அமொ¢க்காவில் படித்து இருந்தாலும் எப்போதும் சிரிச்ச முகத்தோடும்,சாந்தமாகவும்,நல்ல பகவத் சிந்தனையுடன், வாழ்ந்து வந்த சுரேஷைப் பார்த்த காயத்திரி மிகவும் ஆச்சரியப்பட்டாள்.அவன் பாக்க நல்ல கலராவும், அழகாகவும் இருந்தான்.அவள் மனம் ’சுரேஷ் மாதிரி நல்ல ஒழுக்கமும்,கடவுள் பக்தியும் உள்ள ஒரு நல்ல பையன் தன் லதாவுக்கு கிடைக்கணும்’ என்று மிகவும் ஆசை பட்டாள்.பகவானை தினமும் வேண்டி வந்தாள்.நடுத்தர வயதை எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் காயத்திரிக்கே சுரேஷின் போ¢ல் இவ்வளவு நல்ல எண்ணத்தை உண்டு பண்ணியது என்றால்,இளம் பெண்ணான லதாவுக்கு சுரேஷின் மேல் ஆசை வராமலா இருக்கும்.லதா சுரேஷை மிகவும் விரும்பினாள்.அவளுக்கு ‘இப்படி ஒரு அழகான பையன் தனக்கு கணவரா வர மாட்டாரா’ என்று ஏக்கம் வர ஆரம்பித்தது.‘நாம ஒரு ஏழை சமையல்கார மாமியின் பொண்ணு.இவ்வளவு பெரிய பணக்காரா¢ன் பையன் தனக்கு கணவராக வருவது என்பது இந்த ஜென்மத்லே நடக்காத காரியம்’என்று நன்றாக தெரிந்து இருந்தும், அவள் சுரேஷின் மீது ஆசையை வளர்த்து வந்தாள் லதா.

சுரேஷூக்கு எது எடுத்துக் கொண்டுப் போய் கொடுக்கப் போகும் போதும்,அவள் மனம் குதூக லிக்கும்.இன்னும் கொஞ்ச நேரம் நாம சுரேஷ் கூட இருக்கமாட்டோமா என்று அவள் மனம் ஏங்கியது. நாளாக நாளாக,லதாவுக்கு சுரேஷின் மீது இருந்த ஆசை காதலாக மாறி வந்தது.இரவு தன் வீட்டுக்கு போனதில் இருந்து அடுத்த நாள் மறுபடியும் சமையல் வேலைக்கு வரும் வரை லதாவுக்கு ஒரு நிமி ஷம் போவது ஒரு மணி போல் இருந்தது.ஏதோ கவலையில் இருந்த காயத்திரி,அன்று இரவு மூனு மணிக்கு மேல் தூக்கம் வராம புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தாள்.அவள் சதா ’நாம எப் படியாவது கஷ்டப்பட்டு லதாவை சீக்கிரமா ஒரு நல்ல பையனுக்கு கல்யாணம் பண்ணிடணும். அதை எப்படி பண்ணி முடிக்கப் போறோம்’ என்பதை பத்தி யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள். லதா நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்தாள்.அவள் தூக்கத்தில் ஏதோ மெல்ல பேசுவது காயத்திரி காதில் விழுந்தது.‘லதா ஏதோ தூக்கத்லே ஏதோ பேசறாளே’ என்று காயத்திரி திரும்பி அவள் என்ன பேசுகிறாள் என்று கேட்க ஆரம்பித்தாள்.”சுரேஷ்,நம்ம காதல் இந்த ஜென்மத்லே கைக் கூடாதுன்னு எனக்குத் தெரிஞ்சு இருந்தும்,நான் ஏனோ உங்க மேல் இவ்வளவு காதலா இருக்கேன்னு எனக்கே தெரியலே.நம்ம காதல் கை கூடுமா சுரேஷ்.நாம கணவன் மணைவி ஆக முடியுமா” என்று சொல்லி விட்டு அவள் லேசாக சிரிப்பது தெரிந்தது.காயத்திரிக்கு தூக்கி வாரிப் போட்டது.

’என்னடா விபா£தம் இது.இந்த பொண்ணு அந்த பணக்காரப் பையன் சுரேஷின் மேலே ஆசைப் படறாளே.இது நடக்கக் கூடிய காரியமா.நாம் தானே நம்மோடு இருக்கட்டும் என்று லதாவை அந்த ஆத்துக்கு அழைச்சுண்டு போனோம்.இந்த மாதிரி ‘பஞ்சையும்’ ‘நெருப்பையும்’ நாம் தானே பக்கத்து, பக்கத்லே வைக்க காரணமா ஆயிட்டோமே.இந்த சமாச்சாரம் நமக்குத் தெரியாம போயிடுத்தே. சரி, இந்த விஷயம் நமக்கு இப்போது தெரிஞ்சுடுத்து.இதை நாம் முளைலே கிள்ளி விடுவது தான் நல்லது’ என்று எண்ணி எப்போது பொழுது விடியும் என்று காத்து இருந்து இருந்தாள் காயத்திரி.’லதா எழுந்த வுடனே இந்த விஷயத்தை அவ கிட்ட பேசணும்’ என்று துடித்துக் கொண்டு இருந்தாள் காயத்திரி. பொழுது விடிந்ததும் லதா மெல்ல சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்தாள்.நிதானமாகப் போய் லதா பல் தேய்த்துக் கொண்டு வந்தாள்.லதா வந்தவுடன் காயத்திரி லதாவை மெல்ல தன்னிடம் அழைத்து “லதா,நீ நேத்து ராத்திரி தூக்கத்தில் உளறியதை நான் கேட்டேண்.ஏண்டி,உனக்கு என்ன பயித்திமா பிடிச்சி இருக்கு.சமைல்கார மாமியின் பொண்ணு நீ.அந்த பணக்காரர் பையன் எங்கே.நாம எங்கே. பத்து ஏணி வச்சாக் கூட அவாளைப் போல் கால் வாசி பங்கு கூட ஏற முடியாதே.நீ எப்படி அந்தப் பணக்கார பையனைக் காதலிக்கிறே.கல்யாணம் பண்ணிக்க முடியுமான்னு அவனைக் கேக்கறே. உனக்கு……” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது ஏற்கெனவே இளம் சிவப்பாய் இருந்த லதா வின் முகம் குப்பென்று சிவந்தது.”அம்மா,நான் தூக்கத்லே இதை உளறிட்டேனா.நீ இதைக் கேட்டு ட்டாயா” என்று சொல்லி தன் முகத்தை தன் கைகளால் மூடிக் கொண்டாள் லதா.

“நான் கேட்டுண்டே இருக்கேன்,நீ என்னடான்னா உன் மூஞ்சியை மூடிண்டு இருக்கே.நான் தீர்மானமா சொல்றேன் லதா.நீ அந்த பையனை மறந்துட்டு நீ உண்டு,உன் வேலை உண்டு,இருந்து வா.நான் பாங்க்லே இன்னும் கொஞ்சம் பணம் சேந்ததும் ஒரு நல்ல பையனாப் பாத்து உனக்கு சீக்கிர மா கல்யாணம் பண்ணி வக்றேன்.நீ அந்த பையன் காதலை மறந்துடு.ஏழுந்து குளிச்சிட்டு வா.நாம வேலைக்கு போகணும்”என்று லதாவை எச்சரித்தாள் காயத்திரி.லதாவுக்கு அவள் அம்மா சொன்னது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.ஆனால் லதா விடாம “அம்மா நான் அவரை மனசார காதலிக்கிறேன். எங்க காதலை நீ வாழ வையேன் ’ப்ளீஸ்’ “என்று கெஞ்சினாள் லதா.“உனக்கு பயித்தியம் பிடிச்சி இரு க்கா லதா.நானும் நீயும் அவா ஆத்லே சமையல் வேலை செஞ்சு வரோம்.நாம ரெண்டு பேரும் கை நீட்டி சம்பளம் வாங்கற வா.ஞாபகம் இருக்கட்டும்.இந்த மாதிரி ஏதாவது பையித்தியக்காரி போல பேத்தி வச்சு,இப்போ வர சம்பளத்துக்கே உலை வச்சிடாதே.அவா நம்மை வேணான்னு சொல்லி, ஆத்துக்கு அனுப்பிட வழி பண்ணிடாதே.அப்புறம் நாம சோத்துக்கே தாளம் போடணும்.ஞாபகம் இருக்கட்டும்.நான் சொல்வதைக் கேளு.அவனை மறந்துடு” என்று கண்டிப்பாகச் சொல்லினாள் காய த்திரி.லதா குளிக்கப் போனதும் ”பகவானே இவளுக்கு நல்ல புத்தி குடுப்பா.அந்த பையன் மேலே இவளுக்கு இருக்கும் ஆசையை எப்படியாவது மறக்கடி பகவானே” என்று வேண்டிக் கொண்டாள் அவள்.தினமும் பயந்துக் கொண்டே,காயத்திரி சமையல் வேலைக்கு லதாவை அழைத்து கொண்டு போய் வந்தாள்.அவள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தாள்.

தன் அம்மா கண்டி த்தும் சுரேஷின் காதலை தன் மனதில் வளர்த்துக் கொண்டு,அதில் தன் னை அர்பணித்துக் கொண்டு மகிழ்ந்து வந்துக் கொண்டு இருந்தாள் லதா.சுரேஷ்க்கு ஏதாவது தருவது என்றாலோ,இல்லை அவன் ஏதாவது கேட்டால்,அதை உடனே போய் செய்வதிலோ மிகவும் சந்தோஷ படுவதை காயத்திரி கவனிக்க தவறவில்லை.சுரேஷூம் லதா தன்னுடன் அதிக நேரம் இரு க்க என்னவெல்லாம் செய்யலாமோ அதை எல்லாம் செய்து வந்தான்.’சுரேஷின் பேச்சும், சிரிப்பும், அழ கும் லதாவை மயக்கி இருக்குமோ’ என்று புரியாமல் தவித்தாள் காயத்திரி.நாளாக நாளாக சுரேஷூக்கு லதாவின் போ¢ல் இருந்த ஆசை அதிகமாகிக் கொண்டு இருந்தது.அவர்கள் சந்திப்பு இப்போது சிரிப்பி லும்,கண் ஜாடையிலும்,வளர்ந்து வந்துக் கொண்டு இருந்தது.இதை கவனித்த காயத்திரிக்கு வயற்றீல் புளியைக் கறைத்தது.‘என் காதலை எப்படி அப்பா அம்மா கிட்டே சொல்றது,அவா லதாவை நான் கல் யாணம் பண்ணிக் கொள்ள அனுமதி தருவாளா”என்கிற கவலை சுரேஷின் மனதை வெகுவாக வாட்டி வந்தது.அவன் மனம் லதாவைத் தவிர வேறு எந்த பெண்ணையும் கண் எடுத்துப் பார்க்க மறுத் தது. ‘லதாவை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்’ என்பதில் தீவிரமாக இருந்தான் சுரேஷ்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.சுரேஷ் அப்பா அம்மா நல்ல ‘மூடில்’ இருந்தார்கள்.இருவரும் ‘கேரம் போர்ட்’ ஆடி கொண்டு இருந்தார்கள்.லதா கொண்டு வந்து வைத்த ‘டிபன்’ பலகாரத்தை சுவைத்துக் கொண்டு இருந்தார்கள் இருவரும்.சுரேஷ் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு அங்கே போய் “அப்பா,அம்மா,நான் லதாவை மனதார காதலிக்கிறேன்.மணந்தா நான் அவளைத் தான் மணப்பேன் எனக்கு வேறு பெண்ணே வேண்டாம்”என்று தீர்மானமாகச் சொன்னான்.உடனே ‘கேரம் போர்ட்’ ஆடுவதை நிறுத்தி விட்டு லலிதா “அதெல்லாம் முடியவே முடியாதுடா சுரேஷ்.நம்ம அந்தஸ்து என்ன,அந்த சமையல் கார மாமியின் அந்தஸ்து என்னடா.பத்து ஏணி வச்சக் கூட எட்டாதேடா.அந்த சமையல் கார பொண்ணை நாங்க இந்த ஆத்து மருமகளா ஏத்துக் கொள்ள முடியவே முடியாது. உனக்கு பெண் குடுக்க எத்தனை பெரிய பணக்காரா இருக்காத் தெரியுமா.நாங்களே உன்னிடம் இதை பத்தி சொல்லலாம்ன்னு தான் இருந்தோம்.இன்னும் ரெண்டு மாசம் பொறுத்துக்கோ உன் அழகுக்கும், உன் படிப்புக்கும்,நம் அந்தஸ்தஸ்த்துக்கும் ஏத்தா போல் நாங்க ஒரு நல்ல பொண்ணா,உனக்குக் கல்யாணம் பண்ணி வக்கிறோம்.அவசரப் படாதே.நீ காதலிக்கிற பொண்ணு நல்ல ஒரு பணக்கார பொண்ணா இருந்தா,நாங்க என்ன வேணாம்ன்னா சொல்லப் போறோம் சொல்லு.நம் அந்தஸ்தை கொஞ்சம் எண்ணி பாருடா.நான் ஒரு சமையல்கார பொண்ணை,என் மாட்டுப் பொண்ணு சொல்லி ண்டா,எல்லாரும் சிரிக்க மாட்டாளா”என்று கோபமாகச் சொன்னாள்.உடனே பெரியவரும் “நம் அந்த ஸ்துக்கு ஏத்த ஒரு நல்ல பணக்கார பொண்ணைத் தான் நாங்க உனக்கு கல்யாணம் பண்ணி வைக் கணும்.ஏழைப் பொண்ணெல்லாம் பண்ணிண்டா சரிப்பட்டு வராதேடா” என்று சற்று கனிவாகச் சொன்னார். இவர்கள் சொன்னதைக் கேட்டு இடிந்துப் போனான் சுரேஷ்.

சற்று நேரம் சும்மா இருந்த சுரேஷ் “எனக்கு எந்த பணக்கார பொண்ணும் நீங்க பாக்க வேனாம். நான் கல்யாணம் பண்ணின்டா லதாவைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்.நீங்க லதாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாதுன்னு சொன்னா,எனக்கு கல்யாணமே வேணாம்.நான் காலம் பூராவும் பிரம்மசாரியாவே இருந்து வறேன்”என்று கோபமாகச் சொல்லி விட்டு எழுந்து தன் ‘பெட் ரூமுக்கு’ப் போய் கதவை சாத்திக் கொண்டான் சுரேஷ்.

இவ்வளவையும் கேட்டுக் கொண்டு இருந்த ரமேஷ் “அம்மா,சுரேஷ் ரொம்ப நல்லவன்,பயந்த வனும் கூட.அவனுக்கு எந்த பணக்கார பொண்ணையும், நீங்க கல்யாணம் பண்ணி வச்சா,அவன் கஷ்டப் படுவான்.அந்த பொண்ணுங்க ‘ஸ்டைலுக்கும்’,திமிருக்கும்,முரட்டுத் தனத்துக்கும்,அவனால் ஈடு குடுக்க முடியாது.நீங்க பேசாம அவனுக்கு லதாவையே கல்யாணம் பண்ணி வையுங்க.அவா ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்து வருவா.நீங்க ரெண்டு பெரும் வீணா பிடிவாதம் பிடிச்சு அவா கல்யாணம் பண்ணி கொள்றதே தடுக்காதீங்கோ” என்று சொல்லி சுரேஷூக்கு சிபாரிசு பண்ணினான். ரமேஷ் சொன்னது அப்பா அம்மா இருவருக்கும் இன்னும் கோபத்தை அதிகமாக்கியது. ”நீ பேசாம போடா.நீ யாருடா அவனுக்கு சிபாரிசு பண்ண.சுரேஷூக்கு ஏத்த பொண்ணா நாங்க பாத்து பண்ண னும்ன்னு எங்களுக்குத் தெரியும்.நீ உன் வேலையைப் பார்த்துண்டு போ.பெத்தவா எங்களுக்கு என்ன பண்ணணும்ன்னு நன்னா தெரியும்டா”என்று கத்தினார்கள் இருவரும்.காரம் ஆடுவதை நிறுத்தி விட் டு,ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டு இருந்தாள் லலிதா.அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டு இருந்தது.

’வேலைக்காரி,சினிமாக்காரி,சமையல்காரி இவாள்ளாம் கூட அழகாத்தான் இருப்பா.அதனாலே அவாளை காதல் பண்ணனுமா என்ன.நம்ம ‘ஸ்டேடஸை’ கொஞ்சம் யோஜனைப் பண்ண வேணாமா’ என்று மனதில் சொல்லிக் கொண்டிருந்தாள் லலிதா.

‘என்னடா இது விபா£தம்.இந்த பையன் சுரேஷ் நம்ம பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்ன்னு படிவாதம் பிடிக்கிறானே.அவன் அம்மா அவனுக்கு பணக்காரப் பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சவால் விடறா.என்ன நடக்குமோ இனிமே இந்த ஆத்லே. நம்மையும்,லதாவையும் இனிமே இந்த ஆத்து வேலைக்கு வரவேணாம்ன்னு சொல்லிடுவாளோ மேடம் இப்போ முதலுக்கே மோசமாயிடுத்தே.நல்ல சாப்பாடு,நல்ல சம்பளமும் கிடைச்சு வந்தது இந்த ஆத் லே.இது இப்போ நிலைக்குமோ,இல்லே நம்மை விட்டு போயிடுமோ’ என்று எண்ணி வேதனைப் பட்டாள் காயத்திரி.தன் பெண்னைத் திரும்பிப் பார்த்தாள் காயத்திரி.லதா அம்மாவை கட்டிண்டு விக்கி விக்கி அழதாள்.‘டிபனை’ சாப்பிட்டு விட்டு காப்பியையும் குடித்து விட்டு நன்றாக ‘டிரஸ்’ பண் ணிக் கொண்டு லலிதாவும் பெரியவரும் ஏதோ ஒரு விழாவுக்குக் காரில் கிளம்பிப் போனார்கள்.காயத் திரி சொல்லவே ஹாலில் இருந்த மீதி டிபனையும்,அவர்கள் சாப்பிட்ட தட்டுகளையும் எடுக்க ஹாலு க்கு வந்தாள் லதா.தட்டுகளை எடுத்துக் கொண்டு இருக்கும் போது தன் ‘பெட் ரூமில்’ இருந்து திடீ ரென்று வெளியே வந்த சுரேஷ்.லதா கண்கள் கோவைப் பழம் போல் சிவந்து இருப்பதைப் பார்த்தான். சட்டென்று சுரேஷ் “லதா,நீ கவலைப் படாதே,நான் உன்னை கைவிடமாட்டேன்.எப்படியாவது என் அப்பா,அம்மா,மனசை நான் மாத்தி,உன்னை நிச்சியம் ஒரு நாள் நான் கல்யாணம் பண்ணிக்கப் போ றேன்.இதில் நான் உறுதியா இருக்கேன்.நீ உன் மனசை தளர விடாதே”என்று சொன்னதும் லதா அவன் கிட்டே ரகசியமா “ரொம்ப தாங்க்ஸ்”என்று சொன்னாள்.

சந்தோஷப் பட்டுக் கொண்டே சுரேஷ் தன் ’பெட் ரூமுக்கு’ப் போனான் சுரேஷ்.லதாவுக்கு சுரேஷ் சொன்ன வார்த்தைகள் காதில் தேனாய் பாய்ந்தது.அவள் காதுகளை அவளால் நம்பவே முடியவில்லை.இதைக் கேட்ட காயத்திரிக்கு தூக்கி வாரிப் போட்டது.’என்னடா இந்தப் பையன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறானே.நாம லதாவை இந்த காதலை மறக்க வழி சொல்லும் போது இந்த பையன் என்னடான்னா நான் உன்னை நிச்சியம் கல்யானம் பண்ணிக்கிறேன்ன்னு சொல்றானே. இந்தப் பேச்சு என்ன விபா£தத்தைத் தரப் போறதோ பகவானே’ என்று பயந்தாள் காயத்திரி.

லதா சமையல் ரூமுக்கு வந்தவுடன் காயத்திரி லதாவைப் பாத்து “லதா,நீ அந்த பையன் சொன்னதை வச்சுண்டு,வீணா உன் ஆசையை வளத்துக்காதே.அவனை மறந்துடு.எனக்கு என்னவோ சுரேஷ் அவன் அம்மாவை மீறி இந்த கல்யாணத்தை பண்ணிக்க முடியும்ன்னு தோணலே” என்று மறுபடியும் எச்சரித்தாள்.லதாவுக்கு அவள் அம்மா சொன்னது கொஞ்சம் கூடப் பிடிக்கவில் லை.அம்மாவை வெறுப்புடன் பார்த்தாள். கொஞ்ச நேரம் கழித்து சுரேஷ் ஹாலுக்கு வந்தான்.”மாமி, மாமி” என்று குரல் கொடுத்தான்.பயந்து கொண்டே ஹாலுக்கு வந்தாள் காயத்திரி. சுரேஷ் “மாமி,ராத்திரி எனக்கு சாப்பாடு பண்ண வேணாம்” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான். காரில் சென்றுக் கொண்டு இருந்த சுரேஷ் பீச்சுக்குப் போய் தனியாய் உககாதுண்டு ‘எப்படி நாம லதா வை கல்யாணம் பண்ணிக் கொள்றது’என்று யோ ஜனைப் பண்ணினான்.அவனுக்கு ஒரு வழியும் தெரியவில்லை.நெடு நேரம் யோஜனைப் பண்ணி விட்டு, அதற்கான முயற்சியைப் பண்ண வேண்டும் என்று தீர்மானித்தான் சுரேஷ்.

வெளியே போய் இருந்த மேடமும்,பெரியவரும் இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தார்கள். ரூமுக்குப் போய் டிரஸ் எல்லாம் மாற்றிக் கொண்டு வந்து ‘டைனிங்க் டேபிளில்’ உட்கார்ந்துக் கொண் டார்கள்.காயத்திரியும் லதாவும் இரவு செய்த சாப்பாட்டை எல்லாம் ‘டேபிளில்’ கொண்டு வந்து வைத் து விட்டு ஓரமாக நின்றுக் கொண்டு இருந்தார்கள்.சாப்பிட்டுக் கொண்டே “மாமி சுரேஷ்,எங்கே. அவ ன் வெளியே போகும் போது ஏதாவது சொல்லிட்டுப் போனானா” என்று கேட்டாள் மேடம். உடனே காயத்திரி பயந்துக் கொண்டே” ராத்திரி எனக்கு சாப்பாடு பண்ணவேனாம்”ன்னு சொல்லிட்டு காரில் போனார் மேடம்”என்று மெதுவாகச் சொன்னாள்.“ஓ,அப்படியா.பட்டினி இருந்துண்டு தன் காரியத்தை சாதிக்கப் பார்க்கறானா சுரேஷ்”என்று கறுவினாள் லலிதா.அடுத்த நாளில் இருந்து அவள் சுரேஷூக்கு நல்ல ஒரு பணக்கார பொண்ணாய் தேடி வந்தாள்.அவளுடைய ‘ப்ரெண்ட்ஸ்’களிடம் இதைப் பத்தி பேசினாள்.அவர்களில் ஒருத்தி “‘நெட்டில்’ பாரேன்.’நெட்டில்’ பல பணக்கார பெண்களின் ‘மேரேஜ்’ ‘ப்ரபோசல்’கள் நிறைய வறதே.அவைகளைப் பாத்துட்டு நீ ‘செலக்ட்’ பண்ணலாமே லலிதா” என்றாள் தினமும் ‘நெட்’டைப் பார்க்கும் ஒரு கம்ப்யூட்டர் பைத்தியம்.”நீ சொல்றது ரொம்ப சரி.நான் இன்னை க்கே ‘நெட்டை’ப் பாத்து,சென்னையிலேயே இருக்கிற ஒரு பணக்கார பொண்ணாப் பாத்து,முதல்லே நான் ‘சாட்’ பண்ணிட்டு,அப்புறமா சுரேஷூக்கு சொல்லி,அந்தப் பொண்ணை ‘மீட்’ பண்ணிப் பேசச் சொல்றேன்.’ரொம்ப ‘தாங்க்ஸ்’ ரமா”என்றாள் லலிதா.

தன் ‘ப்ரெண்ட்’ சொன்னது போல் லலிதா.‘நெட்டை’ பார்த்து சுரேஷூக்கும்,தன் குடும்ப அந்தஸ்துக்கு ஏத்த நல்ல படிச்ச பொண்ணாப் பாத்து தன் கணவரிடம் சொன்னாள்.அதற்கு அவர் ”இந்த பொண் ணு நன்னா படிச்சு இருக்கா,நம் குடும்ப அந்தஸ்துக்கு ஏத்தவளா இருப்பா லலி.இந்தப் பொண்ணு அமெரிக்காப் போய் நம்ம சுரேஷை’ போல MS படிச்சுட்டு வந்து இருக்கா.சுரேஷூக்கு, இந்த பொண்ணை நிச்சியமா பிடிச்சு இருக்கும்.போட்டோலே பாக்கவும் ரொம்ப நன்னா இருக்கா. இந்தப் பொண்ணு நம்ம சுரேஷூக்கு நல்ல ‘மாட்ச்’ ஆக இருப்பா லலி” என்று சந்தோஷப் பட்டுக் கொண்டு சொன்னார்.அங்கே இருந்த ரமேஷ் ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு இருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *