தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 5,045 
 
 

அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 | அத்தியாயம்-26

ரெண்டு மணி நேரம் ஆனதும் ஒரு நர்ஸ் லேபர் வார்ட்டில்’இருந்து வெளியே வந்து “நீங்க, இப்போ உள்ளே போய் அவங்களையும் குழந்தையையும் பார்க்கலாம்.ஆனா பத்து நிமிஷத்துக்கு மேலே நீங்க அங்கே இருக்க கூடாது.சீக்கிரமா வெளியே வந்துடுங்க”என்று சொன்னா .உடனே ரமேஷ் “ரொம்ப ‘தாங்க்ஸ்’ நர்ஸ்”என்று சொல்லி விட்டு காயத்திரியையும்,ஆனந்தையும் அழைத்துக் கொண்டு ‘லேபர் வார்டுக்கு’ப் போய் லதா படுத்து இருந்த ‘பெட்டுக்கு’ப் போனான்.சுரேஷையும், அம்மாவையும்,ஆனந்தையும் பார்த்த லதாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ரமேஷ்,காயத்திரி, ஆனந்த் மூனு பேரும் குழந்தையைப் பார்த்தார்கள்.குழந்தை ‘தங்க விக்கிரகம்’ போல மூக்கும் முழி யுமாக நல்ல நிறமாக லதாவைப் போலவே இருந்தான்.காயத்திரி குழந்தையின் கைகளையும் கால் களையும் தடவிப் பார்த்தாள்.ரமேஷூம் குழந்தையை மெல்ல தொட்டுப் பார்த்தான்.அவன் ரொம்ப சந்தோஷப் பட்டான்.ஆனந்த் அம்மாவைப் பார்த்து “அம்மா தம்பிப் பாப்பா ,உன்னைப் போலவே இருக்கான்ம்மா”என்று சொல்லி அம்மா கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான்.

உடனே லதா “அப்படியா ஆனந்த்,உனக்கு தம்பிப் பாப்பாவை பிடிச்சி இருக்கா.நீ அவனோடு விளையாடி வருவாயா”என்று ஒரு சின்னக் குழந்தையைப் போல் கேட்டாள்.”அம்மா,நான் தம்பிப் பாப்பா கூட நிச்சியமா தினமும் விளையாடி வருவேன்ம்மா” என்று சொல்லி அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு இருந்தான்.பிறகு ரமேஷ் வெளியே வந்து காயத்திரியையும் ஆனந்தையும் அழை த்துக் கொண்டு ஹாஸ்பிடல் போர்ட்டிகோவிற்கு வந்து கார் டிரைவருக்கு போன் பண்ணீ காரை போர் ட்டிகோவிற்கு கொண்டு வரச் சொல்லி எல்லோரும் ப்லாட்டுக்கு வந்தர்கள்.‘ப்லாட்டுக்கு உள்ளே வந்ததும் ரமேஷ் தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு சுவாமி ரூமுக்கு போனான். இதைப் பார்த்த காயத்திரி “நீங்க சுவாமிக்கு தீபம் எல்லாம் ஏத்தக் கூடாது.உங்களுக்கு பத்து நாளைக்கு ‘விரு த்தித் தீட்டு’.பதினோராவது நாளன்னைக்கு ‘புண்யாவசனம்’ பண்ணீன பிறகு தான் சுவாமிக்கு தீபம் ஏத்தணும்.சுவாமி மந்திரங்கள் சொல்லணும்.கோவிலுக்கும் போகக் கூடாது.அது வரை நீங்க வெறும னே நமஸ்காரம் மட்டும் பண்ணலாம்”என்று சொன்னள்.ரமேஷ் “அப்படியா பத்து நாளைக்கு நான் சுவாமிக்கு தீபம் ஏத்தக் கூடாதா”என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.காயத்திரி “ஆமாம்.அது தான் வழக்கம்”என்று சொன்னதும் ரமேஷ் சுவாமிக்கு வெறுமனே ஒரு நமஸ்காரத்தை பண்ணினான்.

முன்று நாட்கள் ஆனதும் ரமேஷ் அப்போலோ ஹாஸ்பிடலுக்குப் போய் ‘ரிசப்ஷனில்’அவர்கள் கொடுத்த ‘பில் அம்மவுண்ட்டை’ கார்ட்டில் ‘பே’ பண்ணி விட்டு லதாவையும் குழந்தையையும் அழை த்துக் கொண்டு ‘ப்லாட்டுக்கு’வந்தான் ரமேஷ்.காரை விட்டு கீழே இறங்கியதும் காயத்திரி ரமேஷப் பார்த்து ”நான் ஆரத்தி கறைச்சு வச்சு வந்து இருக்கேன்.நான் பக்கத்து ‘ப்லாட்’ மாமி ரெண்டு பேர் கிட்டே சொல்லி விட்டு வந்து இருக்கேன்.அவா லதாக்கும்,குழந்தைக்கும்,ஆரத்தி சுத்தியதும் நீங்க லதாவையும் குழந்தையையும் ‘ப்லாட்டுக்கு’ உள்ளே அழைச்சிண்டு வாங்கோ”என்று சொல்லி விட்டு காயத்திரி வேகமாகப் போய் ரெண்டு மாமிகளை ‘ப்லாட்டுக்குள்’அழைத்துக் கொண்டு வந்தாள்.அவ ர்கள் வந்து ஆரத்தி எடுத்து விட்டு,ஆரத்தி ஜலத்தை கொஞ்சம் எடுத்து லதா நெத்தியில் இட்டார்கள். உடனே காயத்திரி அந்த ஆரத்தி தட்டில் ரெண்டு பத்து ரூபாய்களை போட்டாள்.அந்த மாமிகள் அந் த பத்து ரூபாயை எடுத்து கொண்டு விட்டு,ஆரத்தி ஜலத்தை கீழே விட்டு விட்டு,தாம்பாளத்தை கொண்டு வந்து காயத்திரியிடம் கொடுத்தார்கள்.ரமேஷ் லதாவையும்,குழந்தையையும் ப்லாட்டுக்கு ள்ளே அழைத்து வந்தான்.காயத்திரி ‘ப்லாட் லேடீஸ்’களுக்கு ‘தாங்க்ஸ்’ சொல்லி அனுப்பினாள்.

அடுத்த நாள் ரமேஷ் வாத்தியாருக்கு போன் பண்ணி “வாத்தியார் எங்களுக்கு ஞாயித்துக் கிழ மை ஒரு ஆண் குழந்தை பொற்ந்து இருக்கு வர செவ்வாய் பத்து நாள் முடியறது.நாம புதன் கிழமை ‘புண்யாஹவாசனத்தை’யும் ‘நாம கரணத்தையும் வச்சுக்கலாமா”என்று கேட்டதும் அவர் ஒத்துக் கொ ண்டு செய்து கொடுப்பதாய் பதில் சொல்லி போனை ‘கட்’பண்ணினார்.ரமேஷ் “லதா,நீங்க ரெண்டு பேரும் குழந்தைக்கு என்ன பேர் வக்கலாம்ன்னு யோச்சேளா.என்ன பேர் வக்கலாம்ன்னு ஆசைப்பட றேள்”என்று கேட்டு விட்டு அவரகள் என்ன பேர் சொல்ல போகிறார்கள் என்று ஆவலோடு அவர்கள் வாயைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.லதா மெதுவா “அம்மா நாம ஏற்கெனவே எனக்கு பொறந்த குழந்தைக்கு,‘ஆனந்த்’ ன்னு பேர் வச்சுட்டோம்.இந்த குழந்தைக்கு ஒரு நல்ல பேரா,அவருக்கு பிடிச்ச பேரா வைக்க நாம் ரெண்டு பேரும் அவருக்கு ‘சான்ஸ்’ தரலாம்மா”என்று சாதுர்யமா பதில் சொல்லி குழந்தைக்கு பேர் வைக்கும் முழு பொருப்பையும் ரமேஷிடமே விட்டு விட்டாள் லதா.காயத்திரியும் லதா சொன்னதை ஆமோதித்து “நீ சரியா சொன்னே லதா.இந்தக் குழந்தைக்கு நல்ல பேர் ஒன்னை வைக்க நாம் அவருக்கு முழு பொருப்பையும் தந்தே ஆகணும் நீங்களே ஒரு நல்ல பேரா,உங்களுக்குப் பிடிச்ச பேரா குழந்தைக்கு வையுங்க.நீங்க எந்த பேரை வச்சாலும் எங்க ரெண்டு பேருக்கும் சம்மதம்” என்று சொன்னாள்.ரமேஷ் யோஜனைப் பண்ணி விட்டு “லதா,நான் குழந்தைக்கு ‘சந்தோஷ்’ என்று பேர் வைக்க ரொம்ப ஆசைப்படறேன்” என்று சொன்னதும் லதாவும் காயத்திரியும் ஒரே சமயத்தில் “ரொம்ப நல்ல பேர்” என்று சொன்னார்கள்.

புதன் கிழமை ரமேஷ் காலை ரமேஷ் எழுந்து குளித்து விட்டு ஒரு புது வேஷ்டி கட்டிக் கொண் டு,ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்துக் கொண்டான்.லதா குளித்து விட்டு ஒரு புது பட்டுப் புடவைக் கட்டிக் கொண்டாள்.குழந்தையை நன்றாக குளிப்பாட்டி புது ‘டிரஸ்’ போட்டாள்.பிறகு ஆனந்தை எழுப்பி அவனையும் குளிப்பாட்டி,அவனுக்கும் புது ‘டிரஸ்’ போட்டாள் லதா.’காலிங்க் பெல்’ அடித்தது.காயத்திரி எழுந்து போய் வாசல் கதவைத் திறந் தாள்.கதவைத் திறந்ததும் வாசலில் வாத்தியார்கள் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.காயத்திரி அவர் களை “வாங்கோ” என்று சொல்லி வரவேற்றாள்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் வாத்தியாரை பார்த்து “நாங்க ரெடியா இருக் கோம் வாத்தியார்” என்று சொன்னான்.வாத்தியார்களுடன் மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்து முதலில் கண பதி பூஜைப் பண்ணி,அப்புறமாக ‘ஹோமங்கள்’ எல்லாம் பண்ணி விட்டு சுவாமிக்கு கற்பூரம் காட்டி எல்லோருக்கும் காட்டினார்.ஒரு சக வாத்தியார் வெள்ளிக் குடத்தில் இருந் து ஜலத்தை எடுத்து ‘ப்லாட்’ பூராவும் தெளித்து விட்டு ‘புண்யாஹவாசன’ ஜலத்தை எல்லோருக்கும் மந்திரம் சொல்லிக் கொடுத்தார்.எல்லோரும் ‘புண்யாஹவாசன’ ஜலத்தை வாங்கிக் குடித்தார்கள்.பிறகு வாத்தியார் குழந் தைக்கு ‘சந்தோஷ்’என்கிற பேரை ‘நாமகரணம்’ பண்ணி வைத்தார்.வாத்தியார்கள் சாப்பிட்டு விட்டு கிளமபிப் போனார்கள்.எல்லா வாத்தியார்களும் அவர்கள் கொண்டு வந்த் ‘டூ வீலரை ’ ‘ஸ்டார்ட்’ பண்ணி கிளம்பிப் போனார்கள்.ரமேஷ் அவர்களை அனுப்பி விட்டு,வந்தான்.

பிரசவம் ஆகி பதினைஞ்சு நாள் முடிந்ததும் ரமேஷ் லதாவையும் குழந்தையையும் லேடி டாக்ட ரிடம் அழைத்துப் போய் ‘செக் அப்’ பண்ணினான்.லதாவையும் குழந்தையையும் ‘செக் அப்’ பண்ண லேடி டாக்டர் ரமேஷைப் பார்த்து “ரெண்டு பேரும் நார்மலா இருக்காங்க.கவலை பட ஒன்னும் இல்லே. நான் எழுதித் தரும் மாத்திரைகளை இவங்க தவறாம சாப்பிட்டு வரட்டும்.குழந்தைக்கு நான் எழுதித் தரும் ‘சிரப்பை’த் தவறா¡மக் கொடுத்து வாங்க.மூனு மாசம் ஆனதும் ஒரு தடவை ரெண்டு பேரையும் ‘செக் அப்பு’க்கு அழைச்சிகிட்டு வாங்க”என்று சொல்லி அனுப்பினாள்.ரமேஷ் லேடி டாக்டரை ‘தாங்க்’ பண்ணி விட்டு டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு லதா விடம் கொடுத்து விட்டு அவளையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு வந்து ‘ப்லாட்டில்’ விட்டு விட்டு ‘பாக்டா¢க்கு’க் கிளம்பி போனான்.‘ப்லாட்டுக்கு’ உள்ளே வந்ததும் லதா லேடி டாக்டர் சொன்னதை அம்மாவிடம் சொல்லி ரமேஷ் வாங்கிக் கொடுத்த ‘சிரப்பை’ ‘ப்ரிட்ஜில்’ வைத்து விட்டு, மாத்திரைகளை தன் அலமாரியில் வைத்துக் கொண்டாள்.

அன்று சாயந்திரம் ரமேஷ் ‘பாக்டா¢’யில் இருந்து ப்லாட்’க்கு வந்து சமையல்கார மாமா கொடுத்த காபியைக் குடித்துக் கொண்டே “லதா, நான் இந்த ஒன்னரை வருஷமா ‘பாக்டா¢’களை நன்னா கவனிச்சு வர முடியலே.அதனால்லே நான் ‘பாக்டா¢’யிலே ரொம்ப நேரம் இருந்துட்டு, ‘பலா ட்டுக்கு’ லேட்டா த் தான் வருவேன்.நான் என் பெரிய காரை ‘ப்லாட்’டிலே டிரைவருடன் இருக்க சொல்றேன்.நீயும் அம்மாவும் இந்த பெரிய காரை உபயோகப் படுத்திண்டு வாங்கோ.சந்தோஷையும் ஆனந்தையும் அழைச்சுண்டு நீயும் அம்மாவும் திங்கக் கிழமை ஒரு சிவன் கோவிலுக்கும்,வெள்ளீக் கிழமை ஒரு அம்மன் கோவிலுக்கும் போய் சுவா மியை நன்னா வேண்டிண்டு வாங்கோ.நான் என் சின்ன காரை தினமும் ‘பாக்டா¢’க்கு போய் வர உபயோகப் படுத்திண்டு வறேன்”என்று சொன்னதும் “சரி அப்படியே பண்றோம்”என்று சொன்னவுடன் ரமேஷ் தன் ‘பெட் ரூமுக்கு’ போய் ‘டிரஸ்’ஸை மாற் றிக் கொண்டு வந்து சுவாமி ரூமுக்குப் போய் மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்தான்.காயத்திரி லதா விடம் குழந்தையை வாங்கிக் கொண்டு மெதுவா “லதா,இது எல்லாம் பகவான் நடத்தும் நாடகம் தான் லதா”என்று சொன்னதும் லதா “ஆமாம்மா,நமக்கு இந்த ராஜ போக வாழ்க்கை கிடைக்கும்ன்னு நான் கனவிலும் நினைக்கலே” என்று சொன்னதும் “ஆமாம்மா நானும் நினைக்கலே. எல்லாம் அந்த அம்பா ள் கருணை தான்”என்று சொன்னாள்.

ஒரு வருஷம் முடிந்து விட்டது.ரமேஷூம்,லதாவும்,காயத்திரியும் வாத்தியார்களை வரவழை த்து தன் ‘ப்லாட்டில்’ சந்தோஷின் பிறந்த நாளைக் கோலாகலமாக கொண்டாடினார்கள்.மூன்று வயது ஆனதும் ரமேஷ் சந்தோஷை பத்மா சேசாத்ரி ஸ்கூலில் L.K.G. க்ளாஸில் சேர்த்து படிக்க வைத் தான்.ரெண்டு குழந்தைகளும் ஸ்கூல் போக ஆரம்பிக்கவே லதாவுக்கு வீட்டில் ரொம்ப போரடிக்க ஆரம்பித்தது.அவள் ஒரு நாள் ரமேஷை பார்த்து “ரெண்டு குழந்தைகளும் ஸ்கூல் போக ஆரம்பிச்சு ட்டா.எனக்கு எனக்கு இப்போ ரொம்ப போரடிக்கறது. எனக்கு ஒரு வேலையும் இல்லே.நான் என்ன பண்ணட்டும்”என்று சொல்லி கேட்டாள்.கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு ரமேஷ் லதாவை ப் பார்த்து “லதா,உன் கஷ்டம் எனக்கு நன்னா புரியறது.நீ ஒன்னு பண்ணேன்.நான் உன்னை ‘கரெஸ் பாண்டென்ஸ் கோர்ஸ்ஸிலே’ ஒரு டிகிரீ படிப்புக்கு சேத்து விடட்டுமா.உனக்கு எந்த ‘சப்ஜெக்ட்லே’ ‘கிராஜுவேட்’ பண்ண் ஆசை.ஆனந்தும் சந்தோஷூம் படிச்சு ‘கிராஜுவேட்’ ஆறதுக்குள்ளே,நீ ஒரு ‘கிராஜுவேட்’ ஆகி விடு.என்ன சொல்றே”என்று கேட்டான்.உடனே லதா சந்தோஷத்துடன் “எனக்கு நீ சொல்ற ஐடியா ரொம்ப பிடிச்சு இருக்கு.எனக்கு சரித்திர ‘சப்ஜெக்ட்லே’ ஒரு ‘கிராஜுவேட்’ ஆகணு ம் ன்னு ரொம்ப ஆசை”என்று அவன் கைகளைப் பிடித்து கொண்டு சொன்னாள்.

”O.K. நான் உன்னை சரித்திரம் ‘சப்ஜெக்டில்’ ஒரு ‘கரஸ்பாண்டன்ஸ்’ கோர்ஸ்லே’ சேத்து விட றேன்”என்று சொல்லி விட்டு,அந்த வாரமே ரமேஷ் சரித்திரம் ‘கரெஸ்பான்டெ ன்ஸ் கோர்ஸிலெ’ லதா வை சேர்த்து விட்டான்.அந்த ‘யூனிவர்ஸிட்டி’ லதாவுக்கு சரித்திர பாட புஸ்தகங்கள் எல்லாம் அனுப்பி வைத்தார்கள்.சரித்திர பாடப் புஸ்தங்ககள் வந்தவுடன் லதா தீவிரமாக படிக்க ஆரம்பித்தாள்.ஒரு நாள் ரமேஷ் காயத்திரியைப் பார்த்து “ஆனந்துக்கு பதினோரு வயசு ஆயிடுத்து.எல்லா புருஷ பையன்களு க்கும் ஒத்தப் படைவயசிலே தான் உபனயனம் போடுவா.அதனாலே நான் வாத்தியாரைக் கூப்பிட்டு ஆத்தோடு ஆனந்துக்கு உபநயனம் போட்டுடலாம்ன்னு இருக்கேன்.நீங்க என்ன சொல்றேள்”என்று கேட்டான்.உடனே காயத்திரி “ஆமாம் ஒத்தப்படை வயசிலே உபநயனம் போட்டா ரொம்ப ‘ஸ்ரேஷடம்’ மாப்பிள்ளே.நீங்க அப்படியே பண்ணுங்கோ”என்று சொன்னாள்.

ரமேஷ் வாத்தியா ரைக் கூப்பிட்டு ஆனந்த் உபநயனத்தைப் பற்றி சொன்னான்.அவர் “ நான் ஏற்பாடு பண்றேன்”என்று சொன்னார்.வாத்தியார் நாள் பார்த்த ஞாயிற்றுக் கிழமை அன்னைக்கு மெயின் வாத்தியாரும்,மத்த நாலு வாத்தியார்களும் ரமேஷ் ‘ப்லாட்டு’க்கு வந்து ஆனந்துக்கு கிரம மாக உபநயனம் பண்ணி வைத்தா ர்கள்.எல்லா வாத்தியார்களும் சமையல் கார மாமா பண்ண கல்யா ண சமையலை நன்றாக ரசித்து சாப்பிடார்கள்.ஆத்து வாத்தியார் கூட வந்து இருந்த ஒரு சிஷ்யனைப் பார்த்து “கணேசா,நீ சார் ‘ப்லாட் டுக்கு’ காத்தாலேயும் சாயங்காலமும் வந்து ஆனந்துக்கு சந்தியா வந்தனம் பண்ணச் சொல்லித்தா” என்று சொன்னார்.உடனே கணேச வாத்தியார் “சரி வாத்தியார், நான் காத்தாலேயும் சாயங்காலமும் இந்த ‘ப்லாட்டுக்கு’ வந்து ஆனந்துக்கு சந்தியாவந்தம் பண்ணச் சொல்லித் தறேன்” என்று சொன்னார்.பிறகு எல்லா வாத்தியார்களும் கிளம்பிப் போனார்கள்.

ஆனந்த் ‘டெந்த்‘’கிளாஸி’லே முதல் மாணவனாகப் ‘பாஸ்’ பண்ணி,எல்லா பாடங்களி லும் மிக நல்ல மார்க் வாங்கி வந்தான்.ரமேஷ் ஆனந்தைப் பார்த்து “ஆனந்த், நீ ‘ட்வெல்த்’ ‘பாஸ்’ பண்ணிட்டு I.I.T.படிக்கணும் நான் ரொம்ப ஆசைப் படறேன்.அதனால் நான் உன் னை ‘I.I.T.கோச்சிங்க் க்லாஸி லே’ சேக்கறேன்.நீ அங்கே சேந்து படிக்கறயா” என்று கேட்டதற்கு ஆன ந்த் “நானே உங்களை இதைப் பத்தி கேக்கலாம் ன்னு இருந்தேன்ப்பா” என்று சொன்னான்.அடுத்த நாளே ரமேஷ் ஆனந்தை ‘I.I.T.’ ‘கோச்சிங்க் க்லாஸிலே’ சேர்த்து விட்டான்.ஆனந்தும்,அவன் ‘க்லாஸ்’ பாடங்களுக்கு நடுவிலே,‘I.I.T.’ ‘கோச்சிங்க் க்லாஸிலே’ கொடுத்த பாடங்களையும் கவனமாக படித்துக் கொண்டு வந்தான்.

ரெண்டு வருஷம் ஓடி விட்டது.காயத்திரிக்கு ஸ்லோக புஸ்தகங்கள் படித்து வரும் போது கண் திடீரென்று மறைக்க ஆரம்பித்தது.ஒரு நாள் காயத்திரி லதாவிடம் “லதா,இப்போ எல்லாம் ஸ்லோகப் புஸ்தக்ககள் படிக்கும் போது என் ரெண்டு கண்ணும் மறைக்கறது.படிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு லதா.என் கண்களில் ‘சாளேஸ்வரம்’ வந்து இருக்கு போல் இருக்கு” என்று சொன்னாள்.உடனே லதா “நீ கவலைப் படாதே.நான் அவர் கிட்டே சொல்லி உன்னை ஒரு நல்ல கண் டாக்டர் கிட்டே காட்டி உன் கண்களுக்கு வைத்தியம் பண்ண சொல்றேன்ம்மா”என்று சொல்லி அம்மாவை சமாதானம் பண் ணினாள் லதா.அன்று சாயந்திரம் ரமேஷ் ‘பாக்டா¢யில்’ ‘ப்லாட்டுக்கு’ வந்ததும் ரமேஷ் காபி ‘டிபன்’ சாப்பிடும் வரை காத்து இருந்தாள் லதா.அவன் காபி ‘டிபன்’ சாப்பிட்டு முடிந்ததும், லதா “அம்மாவுக்கு இப்போ கொஞ்ச நாளா ஸ்லோகம் சொல்லும் போது ரெண்டு கண்ணும் மறைக்கறதாம். அம்மாவை ஒரு கண் டாக்டர் கிட்டே காட்டி அம்மா கண்ணை சரி பண்ணனும்”என்று சொன் னதும் ரமேஷ் உடனே தனக்கு தொ¢ந்த கண்டாக்டருக்கு போன் பண்ணீ “டாக்டர் என் ‘மதர் இன் லா’ க்கு ரெண்டு கண் பார்வை மறைக்கறதாம்.நாளைக்கு ஒரு ’அழைச்சு வரட்டுமா” என்று கேட்டான். அவர் சரி என்று சொன்னதும்,ரமேஷ் லதாவையும் காயத்திரியையும் அழைத்து கொண்டு அப்போலோ ஹாஸ்பிடலுக்குப் போய் காயத்திரியை ‘அட்மிட்’ பண்ணினான்.ஒன்னரை மாச வித்தியாசத்திலே காயத்திரியின் ரெண்டு கண்ணுக்கும் ஆபரேஷன் பண்ணி,பார்வை கண்ணாடிப் போட்டு ‘ப்லாட்’ டுக்கு அழைத்து வந்தான் ரமேஷ்.

காயத்திரியால் எல்லா ஸ்லோக புஸ்தங்களும் இப்போ ரொம்ப நன்னா படிக்க வந்தது.அவள் சந்தோஷப் பட்டு ரமேஷிடம்” உங்களுக்கு நான் எப்படி என் நன்றியே சொல்றதுன்னே தொ¢யாம தவி க்கறேன்.என் கண் ரெண்டும் இப்போ ரொம்ப நன்னா தொ¢யறது”என்று தன் கைகளைக் கூப்பி சொன் னாள்.உடனே ரமேஷ்”நீங்க எனக்கு ஒன்னும் சொல்ல வேணாம்.எங்க அம்மா கண் தொ¢யலேன்னு சொல்லி இருந்தா,நான் உடனே அவள் கண்களை ஆப்ரேஷன் பண்ணீண்டு வந்து இருக்க மாட்டே னா.எனக்கு நீங்க வேறே இல்லே,என் அம்மா வேறே இல்லே”என்று சொன்னதும் காயத்திரி ரமேஷ் சொன்னதைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போனாள்.

மூனு வருஷம் ஆனதும் லதா சரித்திரத்தில் B.A ‘பஸ்ட் க்லாஸில்’‘பாஸ்’ பண்ணி விட்டாள் ரமேஷ் லதாவை மிகவும் பாராட்டி“லதா,நீ இப்போ ஒரு பட்டதாரி.அதுவும் ‘பஸ்ட் க்லாஸ்’ பட்டதாரி. இந்த சந்தோஷ சமாசாரத்தை நாம கொண்டாடலாம்”என்று சொல்லி எல்லோரையும் ஒரு பெரிய ஹோ ட்டலுக்கு அழைத்துப் போய் லதாவுக்கு ‘பாஸ்’ பண்ணினதுக்கு ஒரு பார்ட்டிக் கொடுத்தான் காயத் திரிக்கு ரொம்ப சந்தோஷம்.லதா ரொம்ப ஆசைப் படவே ஒரு வாரம் ஆனதும் ரமேஷ் லதாவை M.A. சரித்திரம்’கரெஸ்பான்டென்ஸ் கோர்ஸில்’ சேர்த்து விட்டான்.உடனே லதா ரமேஷ் கைகளைப் பிடித்து அழுதுக் கொண்டு தன் நன்றியைத் தொ¢வித்தாள்.உடனே ரமேஷ்”எதுக்கு நீ இப்ப அழறே.நீ ஆசைப் படறதே பண்ண நான் இருக்கேன் உனக்கு” என்று சொல்லி கண்களைத் துடைத்து விட்டான்.ஒரு வாரத்திலே யே லதாவுக்கு M.A.சரித்திர பாட புஸ்தகங்கள் எல்லாம் வந்து விட்டது.லதா அவைகளை மும்முறமாகப் படிக்க ஆரம்பித்தாள்.லதா அவள் பாடங்களை மும்முரமாக படித்து வருவதைப் பார்த்தா ன் ரமேஷ்.உடனே அவன் லதாவைப் பார்த்து “லதா ‘ஐ அம் ரியல்லி வெரி ப்ரௌட் ஆப் யூ.நீ உன் படிப்பை இவ்வளவு ‘சீரியஸ்ஸா’ எடுத்துப் படிக்கறதே பாத்தா,எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. இந்த வயசிலே நீ படிப்பிலே இவ்வளவு அக்கறை காட்டி வருவேன்னு என்று நான் எதிர்பாக்கலே. ‘யூ ஆர் ரியலி ‘கிரேட்’”என்று சொல்லி லதாவை வாயார புகழந்தான்.லதாவும் தன் கணவன் தன்னை இப்படி வாயார புகழந்ததை நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டாள்.

மணி பத்தடித்ததும் பிரின்சிபால் அவர் கனத்த உடம்பைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து “ஆனந்த்,நீ ‘ஸ்டேட் பஸ்ட்டாக’வந்து இருக்கே.இப்போ தான் எனக்கு டெல்லியிலே இருந்து போன் வந்தது” என்று சொல்லி ஆனந்தின் கைகளை பிடித்து குலுக்கினார்.ஆனந்த் ‘க்லாஸ்’ வாத்தி யார்களும் எல்லோரும் ஓடி வந்து ஆனந்தின் கையை பிடித்து குலுக்கி ‘கங்கிராஜுலேஷன்ஸ்’ஆனந்த் என்று சொன்னார்கள்.ஆனந்த் எல்லோருக்கும் ‘தாங்க்ஸ்’’ தாங்க்ஸ்’என்று பவ்யமாக சொன்னான். கொஞ்ச நேரம் ஸ்கூலில் இருந்து விட்டு ரமேஷ் எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஒரு பெரிய ஹோட்டலுக்குப் போய் நல்ல ‘லன்ச்’ சாப்பிட்டு விட்டு எல்லோரையும் ப்லாட்டில் இறக்கி விட்டு விட்டு ‘பாக்டா¢க்கு’ப் போனான்.

ஆனந்த் தன்னை நன்றாக தயார் பண்ணிக் கொண்டு சுவாமியை நன்றாக வேண்டிக் கொண்டு JEE பரீக்ஷ எழுதக் கிளம்பினான்.ரமேஷ் கோவிலில் இருந்து வாங்கி வந்த விபூதி குங்குமத்தை அவனுக்கு இட்டு விட்டு ரமேஷ் “ஆனந்த்,பரீக்ஷகளை நன்னா எழுது.சுவாமியை வேண்டிண்டு கேள்வித் தாளைப் பிரி.‘பெஸ்ட் ஆப் லக்’”என்று சொல்லி விட்டு லதாவை அழைத்துக் கொண்டு ‘ப்லாட்’ கீழே வரை போனான்.ஆனந்த JEE பரீக்ஷகளை மிக நன்றாக எழுதினான்.‘ப்லாட்டு’ க்கு வந்து அம்மா அப்பாவிடம் சொன்னான்.இருவரும் சந்தோஷப் பட்டார்கள்.காயத்திரி தினமும் நன்றாக குளித்து விட்டு நிறைய சுவாமி ஸ்லோகங்களை எல்லாம் படித்து விட்டு சுவாமிக்கு ‘நைவேத் யம்’ பண்ணி நமஸ்காரம் பண்ணி வந்தாள்.அவள் ‘நாம அந்த நெருப்படியிலே தினமும் வெந்து வரா மே சுவாமியை நன்னா வேண்டிண்டு,அந்த அம்பாளுக்கு ‘நைவேத்யம்’ பண்ணி வறோமே’என்று நினைத்து தன் மனதில் சந்தோஷப் பட்டாள்.

ரிசல்ட்டுகள் வந்து ஆனந்த் ‘ஆல் இனிடியாவில்’ ஒன்பதாவது ‘ராங்க்கை’ வாங்கினான்.ரமே ஷூக்கும்,லதாவுக்கும்,காயத்திரிக்கும்,சந்தோஷூக்கும் சந்தோஷம் தாங்கவில்லை.ஆனந்தை அவர் கள் பாராட்டினார்கள்.ரமேஷ் ஆனந்துக்கு சென்னை I.I.T.யில் ‘கெமிக்கல் இன்ஜினியா¢ங்க் கோர்ஸ்’ வேண்டும் என்று கேட்டு அவனுக்கு அதில் ‘சீட்’கிடைத்தவுடன்,‘கெமிக்கல் இஞ்சினியா¢ ங்க்’ சேர் த்து விட்டான்.ஆனந்த்,அந்த ‘கோர்ஸை’ மிகவும் கஷ்டப் பட்டு படித்து கொண்டு வந்தான்.அவன் ரெண்டாவது வருஷ படிப்பை முடித்து விட்டு லீவில் இருந்தான்.

லதா M A சரித்திர பரீக்ஷ எழு ரெடி ஆனாள்.ரமேஷ் அவளை அழைத்துக் கொண்டு பரீக்ஷ ஹாலுக்குக் கொண்டு போய் விட்டு விட்டு “லதா நீ பரீக்ஷகளை நன்னா எழுது.சுவாமியை வேண்டிண்டு கேள்வித் தாளைப் பிரி.உனக்கு எல்லா கேளிவிகளும் ரொம்ப சுலபமா இருக்கும். ’பெஸ்ட் ஆப் லக் லதா”என்று சொல்லி லதாவை பரீக்ஷ ஹாலுக்கு அனுப்பினான்.லதாவை விட்டு விட்டு ரமேஷ் ‘பாக்டா¢க்கு’ப் போனான்.லதா ரமேஷ் சொன்னது போல கேள்வித்தாளை அவளிடம் கொடுத்த போது அவள் சுவாமியை வேண்டிக் கொண்டு கேள்வித் தாளைப் பிரித்து பார்த்தாள். எல்லா க் கேள்விகளும் அவளுக்கு ரொம்ப தொ¢ந்தவைகளாக இருந்ததினால்,அவள் எல்லா கேள்விகளுக்கு ம் ‘மட’’மட’என்று பதில் எழுதினாள்.பரீக்ஷ ஹாலை விட்டு வெளியே வந்து லதா ரமேஷூ க்கு ‘போன்’ பண்ணீனாள்.ரமேஷ் போனில் வந்ததும் லதா “நீங்க சொன்னா மாதிரியே நான் கேள்வித்தாள் எனக்குக் குடுத்ததும் நான் சுவாமியை வேண்டிக் கொண்டு கேள்வித் தாளைப் பிரிச்சுப் பாத்தேன் எல்லா கேள்விகளும் நான் நன்னா ‘ப்ரிபேர்’ பண்ண கேள்விகளாகத் தான் இருந்தது.நான் பரீக்ஷ யே ரொம்ப நன்னா எழுதி இருக்கேன்.‘பஸ்ட் க்ளாஸ்’ நிச்சியமா வரும்”என்று சந்தோஷத்துடன் சொ ன்னாள்.உடனே ரமேஷ் “வெரி குட் லதா.இன்னைக்கு எழுதினா மாதிரி மத்த ரெண்டு நாள் பரீக்ஷ களையும் நீ எழுதி ‘பஸ்ட் க்ளாஸில்’ ‘பாஸ்’ பண்ணனும்.‘ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி ஹாப்பி” என்று சொல் லி ‘போனை’க் கட்பண்ணினான்.

லதா மீதி பரீக்ஷகளை ரொம்ப நன்றாக எழுதினாள். ப்லாட்டுக்கு உள்ளே வந்ததும் லதா எல்லோரையும் பார்த்து “நான் எல்லா பரீக்ஷகளையும் ரொம்ப நன்னா எழுதி இருக்கேன்.எனக்கு நிச்சியமா ‘பஸ்ட் க்லாஸ்’ வரும்”என்று சந்தோஷத்துடன் சொன்னாள்.எல்லோரும் சந்தோஷப் பட்டா ர்கள்.உடனே காயத்திரி “எனக்கு ரொம்ப சந்தோமா இருக்கு லதா.ஒரு காலத்லே இந்த மேல் படிப்புக் கு நீ எவ்வளவு ஆசைப் பட்டேன்னு எனக்கு நன்னாத் தொ¢யும்.நீ இந்தப் பரீக்ஷயில் பாஸ் பண்ணி னா ஒரு M.A பட்டதாரி.நீ உன்னை ‘லதா M.A’ன்னு சொல்லிக் கொள்ளலாம்”என்று சொன்னாள். உடனே லதா “ஆமாம்ம்மா” என்று சொல்லி அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.சந்தோஷத்தில் ஆனந் தும் சந்தோஷூம்”அப்படியாம்மா.நீங்க உங்க ஆசையை நிறை வேத்தி வச்சுண்டு இருக்கேள்” என்று அம்மாவின் கையைப் பிடித்து பாராட்டினார்கள்.

அன்று சாயந்திரம் ரமேஷ் ப்லாட்டுக்கு வந்ததும் வராததுமாய்,ஆனந்தும் சந்தோஷூம் அம்மா கையைப் பிடித்துக் கொண்டு “அப்பா.அம்மா,நீங்க கூடிய சீக்கிரத்லே ஒரு Masters டிகிரீ வாங்கிடு வா.நீங்க ஏற்கென்வே Masters டிகிரீ வாங்கி இருக்கேள்.நாங்க ரெண்டு பேரும் அமொ¢க்கா போய் உங்க ரெண்டு பேரைப் போல ஒரு Masters டிகிரீ வாங்கிட்டா,நம்ம குடும்பத்லே எல்லோரும் Mast ers டிகிரீ படிச்ச வாளா இருப்போம்.இல்லையா”என்று சொன்னார்கள்.உடனே ரமேஷ்” நீங்க ரெண்டு பேரும் சொல்றது ரொம்ப உண்மை.எனக்கும் நீங்க ரெண்டு பேரும் அமொ¢க்கா போய் ஒரு Masters டிகிரீ வரணும் ரொம்ப ஆசை” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொ ண்டான்.உடனே ஆனந்தும் சந்தோஷூம் “நாங்க ரெண்டு பெரும் உங்க ஆசையை நிச்சியமா நிறை வேத்தி காட்டுவோம்”என்று அப்பாவுக்கு உறுதி அளீத்தார்கள்.ரமேஷ் அவர்கள் ரெண்டு பேரையும் ‘தாங்க்’ பண்ணினான்.

ஒரு மாசம் ஆனதும் அவளுக்கு செல் போன் வந்தது.அவள் போனை எடுத்து பேச ஆரம்பி த்தாள்.அடுத்த பக்கத்திலே இருந்து “குட் மார்னிங்க் மேடம்,நான் புரபஸர் ரத்தினவேல் பேசறேன். நேத்து ஈவினிங்க் M.A. சரித்திர ‘ரிஸல்ட்ஸ்’வந்து விட்டது.நீங்க ‘பஸ்ட் க்ளாஸ்லே’ ‘பாஸ்’ பண்ணி இருக்கீங்க நீங்க 92% மார்க் வாங்கி இருக்கீங்க.‘கங்கிராஜுலேஷன்ஸ்” என்று சொன்னார்.லதா உட னே “எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்ததாலே தான் நான் இவ்வளவு மார்க் வாங்கி ‘பஸ்ட் க்லாஸ்லே’ ‘பாஸ்’ பண்ண முடிஞ்சது.ரொம்ப ‘தாங்ச்’ சார் உங்களுக்கு”என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீ னாள்.லதா உடனே ஓடி வந்து ரமேஷ் பக்கத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டு “என் புரபஸர் ரத்தின வேல் இப்போ செல் போன்லே போன் பண்ணீ “நேத்து சாயங்காலம் M.A.சரித்திர ‘ரிஸல்ட்ஸ்’ வந்து விட்டது.நீங்க 92% மார்க் வாங்கி ‘பஸ்ட் க்லாஸ்லே’ பாஸ் பண்ணீ இருக்கீங்கன்னு சொன்னாரு” என் று சந்தோஷத்துடன் சொன்னாள்.ரமேஷ் எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் லதா சரித்திர பாடத்தில் MA பாஸ் பண்ணீன சந்தோஷத்தை ஒரு பெரிய ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு கொண்டாடினான்.

ரெண்டு வருஷம் ஆனதும் ஆனந்த் ‘கெமிக்கல் இஞ்சினியா¢ங்க்’ பா¢ஷையில் ரெண்டாவது ‘ராங்க்’ வாங்கி ‘பாஸ்’ பண்ணினான்.ரமேஷூம் லதாவும் மிகவும் சந்தோஷப் பட்டு.காயத்திரியையும் சந்தோதையும் அழைத்துக் கொண்டு போய் அந்த சந்தோஷ சமாராத்தை ஒரு பெரிய ஹோட்டலில் கொண்டாடினார்கள்.அடுத்த நாளே ரமேஷ் அமொ¢க்காவில் இருக்கும் மிக நல்ல யூனிவர்ஸிட்டிக்கு எழுதி,ஆனந்துக்கு ஆனந்துக்கு ‘அட்மிஷனுக்கு அப்ளை’ பண்ணீனான்.நெட்டில் அமொ¢க்கா விசா வுக்கு புக்’ பண்ணீனான்.குறிப்பிட தினைத்தில் ரமேஷ் கோவிலுக்கு போய் விட்டு,வந்து கோவில் விபூதி குங்குமப் பிரசாதத்தை ஆனந்துக்கு இட்டு விட்டு,அவனையும் லதாவையும் அழைத்துக் கொ ண்டு அமொ¢க்கா ‘கான்சுலேட்டுக்கு’ப் போய் சுவாமியை வேண்டிக் கொண்டு,அவனை ‘எம்பஸீக்குள்’ அனுப்பினான்.ஆனந்த் இரண்டு மணி நேரம் கழித்து ‘விசா’வாங்கி கொண்டு வெளியே வந்தா ன்.ரமேஷூக்கு ஆனந்தம் தாங்கவில்லை.ஆனந்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.அவன் கண்க ளில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.அவன் தன் ‘பான்ட் பாக்கெட்டில் இருந்து கைக்குட்டை யை எடுத்து கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.ரமேஷ் ஆனந்துக்கு அமொ¢க் கா ‘விசா’கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட நினைத்து ‘ப்லாட்டுக்கு’ வந்து, எல்லா ‘ரெகார்ட்டு களையும்’ வைத்து விட்டு,எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஒரு பெரிய ஹோட்டலுக்குப் போய் ‘ஸ்பெஷல் லன்ச்’ சாப்பிட்டு விட்டு ப்லாட்டுக்கு வந்தான்.

அடுத்த நாள் ரமேஷ் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு “ஆனந்த்,நான் சொல்ல போறதே கொஞ்சம் நன்னா கவனிச்சுக்கோ.நான் அமொ¢க்காப் போய் படிச்சு விட்டு வந்து இருப்பதா லே,எனக்கு அமொ¢க்கா வாழக்கையை பத்தி ரொம்ப நன்னாத் தொ¢யும்.அந்த ஊரில் நம்ம மனசை பறி குடுக்க பல கெட்ட வழிகளும் சுலபமா கிடைக்கும்.எல்லோரும் நிறைய குடிப்பா.ஊரே சொர்க்க லோகம் போல இருக்கும்.வயசு பெண்களும்,வயசு பையன்களும் பேதம் இல்லாம ஒன்னா பழகி வரு வா.நாம தான் நம் மனசைக் கட்டு படுத்திண்டு படிப்பில் ‘போகஸ்ட்டா’ இருந்து வரணும்” என்று சொல்லும் போது ரமேஷ் குரல் தழு தழுத்தது.அப்பா குரல் தழு தழுப்பதைக் கவனித்தான் ஆனந்த். அவன் உடனே “அப்பா,நீங்க சொல்றது எனக்கு நன்னா புரியறது.நீங்க கவலைப்படாம இருந்து வா ங்க.நான் எந்த கெட்ட பழக்கத்துக்கும் போகாம வெறுமனே படிப்பில் மட்டும் ‘போகஸ்ட்டா’ இருந்து படிச்சு வருவேன்”என்று சொன்ன பிறகு தான் ரமேஷ்க்கு மூச்சு வந்தது.ரமேஷ் சொன்னதையும், அதற்கு ஆனந்த் அதற்கு பதில் சொன்னதையும் சந்தோஷ் கேட்டுக் கொண்டு இருந்தான்.

வாத்தியாரை கேட்டு ஆனந்த் அமொ¢க்கா போக ஒரு நல்ல நாள் பார்த்து அமொ¢க்கா போக ‘ஏர் டிக்கட்’ வாங்கினான் ரமேஷ். ஆனந்தை அழைத்துக் கொண்டு அவன் அமொ¢க்கா போக அவனுக்கு நல்ல ‘பாரின்’ பெட்டிகளை யும்,நிறைய டிரஸ்களையும்,அவனுக்கு வேண்டிய மற்ற எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்தான்.வாத்தியார் சொன்ன அந்த நல்ல நாளில்,ரமேஷ் எல்லோரையும் அழைத்து கொண்டு ‘ஏர்போர்ட்டுக்கு’ போய் ஆனந்தை ‘ப்லெயின் ஏற்றீ விட்டு வந்தான்.அடுத்த நாள் காலை யில் வழக்கம் போல் ரமேஷ் எழுந்து குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு சமையல் கார மாமா கொடுத்த காப்பியை குடித்து விட்டு கோவிலுக்கு கிளம்பினான்.வழி நெடுக அவ னுக்கு ஆனந்த் ஞாபகமாகவே இருந்தது.ஆனந்த் அமொ¢க்கா போய் சேர்ந்ததும் ‘ஏர் போர்ட்டில்’ ஒரு சீனியர் பையன் ஆனந்தை ‘ரிஸீவ்’ பண்ணீ,அவனுக்கு சாப்பிட வாங்கிக் கொடுத்து,அவனை தன் காரில் அழைத்துக் கொண்டு போய் ஆனந்த தங்கி இருக்க வேண்டிய ரூமைக் காட்டினான்.ஆனந் தோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,அந்த சீனியர் பையன் கிளம்பிப் போ கும் போது “ஆனந்த்,உனக்கு என்ன ‘ஹெல்ப்’ வேணுனாலும் என்னை தயக்கம் இல்லாம கேளு.என் செல் போன் நம்பரை எழுதிக்கோ” என்று சொல்லி விட்டு அவன் செல் போன் நம்பரைக் ஆனந்துக்கு கொ டுத்து விட்டுப் போனான்.ஆனந்த் அவன் கிளம்பிப் போனதும் சென்னையில் தன் அப்பாவை ‘போனில்’ கூப்பிட்டு எல்லாவற்றையும் விவரமாக சொன்னான்.ரமேஷூம்,லதாவும்,காயத்திரியும்,சந்தோஷூம் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.ஆனந்த தன் ‘யூனிவர்சிட்டி’ படிப்பை நன்றாக படித்து வந்தான்.அடிக்கடி அப்பா,அம்மா, பாட்டி,சந்தோஷிடம் தான் நன்றாக படித்து வருவதை சொல்லி வந்தான்.

ரெண்டு வருஷம் ஆனதும் ஆனந்த் அமொ¢க்காவில் MS படிப்பை முடித்துக் கொண்டு சென்னைக்கு வந்தான்.ரமேஷ்,லதா,காயத்திரி,சந்தோஷ்,எல்லோரும் சென்னை ‘ஏர்போர்ட்டுக்கு’ப் போய் ஆனந்துக்கு மாலைப் போட்டு ‘பொக்கேயும்’ கொடுத்து அவனை வரவேற்றார்கள்.‘ஏர்போர்ட்டில் ஆனந்த அப்பாவிடம் “அப்பா நீங்க சொன்னா மாதிரியே அமொ¢க்காலே இருக்கும் போது நான் படிப் பில் மட்டும் தான் கவனம் செலுத்தி மத்த எந்த கெட்ட பழக்கத்துக்கும் போகாம,இங்கே எப்படி இருந் தேனோ,அப்படியே திரும்பி வந்து இருக்கேன்”என்று சொன்னதும் ரமேஷ் கண்களில் நீர் வழிந்தது. பாக்கெட்டில் இருந்து கைக் குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “ரொம்ப தாங்க்ஸ் ஆனந்த்.’ ஐ ஆம் ரியலி வெரி ப்ரௌட் ஆப் யூ.அமொ¢க்கா போய் எந்த கெட்ட பழக்கமும் இல்லாம நீ திரும்பி வந்து இருப்பதைப் பாத்தா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு”என்று சொல்லி ஆனந்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான் ரமேஷ்.எல்லோரையும் அப்படியே நேரே ஹோட் டல் தாஜ் க்கு அழைத்து போய் ஆனந்த அமொ¢க்காப் போய் MS ‘டிகிரீ’ வாங்கி வந்த சந்தோஷ சமாசாரத்தைக் கொண்டாடினான்.பிறகு ரமேஷ் எல்லோரையும் அழைத்து கொண்டு வந்து ‘ப்லாட்டில்’விட்டு விட்டு “ஆனந்த்,உனக்கு அமொ¢க்காலே இருந்து திரும்பி வந்த ‘ஜெட் லாக்’ இருக்கும்.நீ ஒரு வாரம் நன்னா ‘ரெஸ்ட்’ எடுத்துக்கோ.முடிஞ்ச போது உன் ‘ப்ரெண்ட்ஸை’ எல்லாம் போய் பாத்துட்டு வா.சென்னை I.I.T.க்குப் போய் உன் ‘புரப்சர்களை’ எல்லாம் ‘மீட்’ பண்ணிட்டு வா.நான் ரெண்டு மாசம் போனதும் உன்னை என்னோடு கிண்டி‘பாக்டா¢க்கு’ அழைச்ச்சு போய் உன்னை பாக்டா¢யில் இருக்கிற எல்லா ‘சீனியர் ஆபீசர்கள் கிட்டேயும் இன்ட்ரட்யூஸ்’ பண்ணீ விடறேன்.நீ ‘பாக்டா¢’ வேலையை கொஞ்சம் கொஞ்சமா கத்துண்டு வா.நீ ஓ.கே.ன்னு எப்ப சொல்றயோ.அப்ப உன் கிட்ட ‘பாக்டா¢ யின்’முழு பொருப்பையும் ஒப்படைக்கிறேன்”என்று சொன்னான்.

உடனே ஆனந்த் “ரொம்ப தாங்க்ஸ் ப்பா.நீங்க சொன்னா மாதிரியே நான என் ‘ப்ரெண்ட்ஸை’ எல்லாம் போய் பாத்துட்டு வரேன்.நான் சென்னை I.I.T.க்கு போய் என் ‘புரப்சர்களை’ எல்லாரையும் ‘மீட்’ பண்ணிட்டு வரேன்” என்று சொன்னான்.ரமேஷ் சந்தோஷப் பட்டுக் கொண்டே ‘பாக்டா¢க்கு’ க் கிளம்பிப் போனான்.ரமேஷ் கிள்ம்பிப் போனதும் லதா அம்மாவிடம் வந்து மெதுவா “அம்மா,நாம இருந்த நிலைமைலே,ஆனந்தை பத்தாவது கூட படிக்க வக்க முடியாம கஷ்டப் பட்டு வந்து இருப்போ ம்.ஆனா அந்த அம்பாள் அனுக்கிஹத்தாலே ஆனந்த இப்போ அமொ¢க்காப் போய் மேல் படிப்பு படிச் சு¢ட்டு,ஒரு MS டிகிரீ வாங்கிண்டு வந்து இருக்கான்.அந்த அம்பாளுக்கு நாம் ரெண்டு பேரும் எவ்வ ளவு நமஸ்காரம் பண்ணாலும் போதாதும்மா”என்று சொல்லி அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு அழுதாள்.உடனே காயத்திரி ”ஆமாம் லதா,நீ சொல்றது நூத்துக்கு நூறு நிஜம்.நாம இருந்த நிலை மை என்ன,இப்போ நாம இருக்கிற நிலைமை என்ன.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இல் லை.சந்தோஷை படிக்க வக்கறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லே.ஆனா ஆனந்தை ‘வேத்து குழந் தை’ன்னு நினைக்காம இவ்வளவு படிப்பு வச்சது தான் பெரிசு.இதிலே இருந்து அவருக்கு எவ்வளவு நல்ல மனசுன்னு உனக்கு புரியலையா லதா.எல்லாம் அந்த அம்பாள் கடாக்ஷத்தால் தான் நமக்கு இந் த வாழ்வு கிடைச்சு இருக்கு”என்று சொல்லி தன் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

சந்தோஷ்க்கு பதினோரு வயது முடிஞ்சதும் ஆனந்துக்கு உபநயனம் பண்ணா மாதிரி ரமேஷ் ஆத்து வாத்தியாரை ‘ப்லாடுக்கு’ வரச் சொல்லி ‘கிரமமாக’ உபநயனம் பண்ணி முடித்தான்.எல்லா வாத்தியார்களும் சமையல் கார மாமா செய்த கல்யாண சாப்பாட்டை மிகவும் ரசித்து சாப்பிட்டார்கள். வாத்தியார் ரமேஷ பார்த்து “சுரேஷ்,சந்தோஷ் காத்தாலேயும் சாயங்காலமும்,சந்தியாவந்தனம் பண்ற துக்கு மந்திரம் சொல்லி குடுக்க,ஒரு வாத்தியாரை உன் ‘ப்லாடுக்கு’ வர சொல்லட்டுமா”என்று கேட்டார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *