தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 4,941 
 
 

அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 | அத்தியாயம்-25

காயத்திரி தொடர்ந்தாள்.”அப்புறமா எங்க அப்பா ‘அவ போனப்புறம் காயத்திரி பத்தாவது படிப் பை நிறுத்தி விட்டு ஆத்லே சமையல் பண்ணிண்டு வந்தா.சரி ‘நெய் பந்தம்’ பிடிக்க ஒரு பேரனாவது பொறப்பான்னு நான்ஆசையுடன் இருந்து வந்தேன்.ஆனா நீங்க லதாவுக்கு அப்புறமா குழந்தையே பெத்துக்கப் போறதில்லேன்னு எனக்கு தெரிய வந்தது.’கொள்ளீப் போட பிள்ளை இல்லாதவாளும் ’நெய் பந்தம்’ பிடிக்க பேரனோ இல்லாதவாளும்,’காசிக்கு போய் இருந்து வந்த அவா ‘பிராணன்’ காசி லே போனா,அவாளுக்கு ‘நல்ல கதி’ கிடைக்கும்ன்னு நான் நிறைய கால§க்ஷபங்களே கேட்டு இருக் கேன்.அதனாலே நான் காசிக்கு போய் என் கடைசி காலத்தே அங்கே கழிச்சுட்டு கண்ணை மூடலாம் ன்னு இருக்கேன்’ என்று சொல்லட்டு காசிக்கு போயிட்டார்”என்று சொன்னாள் காயத்திரி.அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.அவள் தன் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.

எல்லாவற்றையும் கவனமாக கேட்டு கொண்டு இருந்த ரமேஷ்”உங்க அப்பா காசிக்கு போயிட் டாரா.எனக்கும் அந்த ஆசை ரொம்ப இருக்கு.காசிலே நம் உயிர் போனா ரொம்ப புண்ணீயம்“என்று சொல்லி விட்டு “காசிக்குப் போன பிறகு அவர் கிட்டே இருந்து உங்களுக்கு லெட்டர் போக்கு வரத்து இருந் ததா”என்று கேட்டான்.காயத்திரி உடனே “காசிக்குப் போய் அவர் வாரம் தவறாம லெட்டர் போ ட்டுண்டு தான் இருந்தார்.நானும் அவருக்கு பதில் போட்டுண்டு இருந்தேன்.ஆனா லதா அப்பா திடீ ரென்று தவறிப் போன பிறகு,அவருக்கு இந்த துக்க சமாசாரத்தை நாம சொல்லி வயசான காலத்லே அவருக்கு மனக் கஷ்டத்தை தர வேணாமேன்னு நான் ஒரு புது ஆத்துக்குப் போறேன்.நான் அங்கே போனதும் உங்களுக்கு என் புது ஆத்து விலாசத்தை எழுதறேன்னு பதில் போட்டுட்டு, அதுக்கு அப்பு றமா அவருக்கு நான் பதிலே போடலே.அவர் எனக்குப் போட்ட லெட்டர்கள் எல்லாம் பழைய விலாச த்திலேயே விழுந்து கிடந்து இருக்கும்”என்று சொல்லி தன் கண்க¨ளைத் துடைத்துக் கொண்டாள்.

ரமேஷூக்கு காயத்திரி அழுததைப் பார்க்க முடியவில்லை.அவன் காயத்திரியைப் பார்த்து “அழா தீங்கோ.இப்ப உங்க கஷடம் எல்லாம் எல்லாம் தீந்து,எல்லாம் நன்னா போய்,நீங்க சந்தோஷமா இரு ந்து வரேளே”என்று காயத்திரியை சமாதானப் படுத்தினான்.கொஞ்ச நேரம் போனதும் ரமேஷ் ”அவர் பேர் என்ன”என்று கேட்டான்.காயத்திரி “அவர் பேர் விஸ்வநாதன்.ஆனா அவரை எல்லோரும் ‘விசு மாஸ்டர்’,’விசு மாஸ்டர்’ன்னு சொல்லி கூப்பிடுவா.அவர் காசிக்கு போனதும் சங்கர மடத்துக்கு போனாராம்.அங்கே அவருக்கு ஒரு ‘ஸ்வீட் மாஸ்டரா’ வேலைப் போட்டு குடுத்து,சாப்பாடும் போட்டு தங்க ஒரு சின்ன ரூமும் கொடுத்தாளாம்”என்று சொன்னாள் காயத்திரி.காயத்திரி சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்தான் ரமேஷ்.

’ப்லாட்டுக்கு’ உள்ளே வந்த ஆனந்த்,நேரே வந்து ‘பாத்ரூம்’ போய் தன் கை கால்களை எல் லாம் கழுவிக் கொண்டு வந்து சுவாமி படத்தின் முன்னால் நின்றுக் கொண்டு அவனுக்குத் தெரி ந்த ஸ்லோகத்தைச் சொல்லி விட்டு நமஸ்காரம் பண்ணி விட்டு வந்தான்.மணியிடம் ரமேஷ் “என் ஷர்ட், பேண்டு,கோட்டு. மத்த டிரஸ்கள் எல்லாத்தையும் நீட்டா தொங்க விடு”என்று சொன்னதும் அவன் மறுபடியும் ‘பெட் ரூமுக்கு’ப் போய் ரமேஷ் சொன்னா மாதிரி எல்லா ‘டிரஸ்க¨ளையும்’ வைத்தான். பிறகு ரமேஷ் மணியைப் பார்த்து “மணி,நீ காத்தாலே ‘ப்லாட்டுக்கு’ வந்து,ஆனந்தை ஸ்கூலுக்கு அழைச்சுண்டு போய் விட்டுட்டு வந்து,சாயந்திரம் மறுபடியும் ஸ்கூலுக்குப் போய் அவனை ப்லாட்’டு க்கு ஜாக்கிறதையா அழைச்சுண்டு வந்து விடணும் சரியா”என்று சொன்னான்.”சரிங்க” என்று சொன் னான் மணி.
எல்லோரும் டைனிங்க் டேபிளில் உட்கார்ன்ர்து கொண்டு சாப்பிட்டார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் காயத்திரி தன் ‘பெட் ரூமுக்கு’ ஆனந்தைப் படுத்துக் கொள்ள வரச சொன்னாள்.உடனே ஆனந்த “இல்லே பாட்டி,நான் அப்பா கூடப் படுத்துக்கப் போறேன்.உங்க கூட நான் வரலே பாட்டி” என்று சொல்லி ரமேஷ் பக்கத்தில் போய் உட்கார்ந்துக் கொண்டான்.ரமேஷூம் ஒன்னும் சொல்லாமல் சிரித்துக் கொண்டு இருந்தான்.ஆனந்த் “அப்பா நான் இன்னிக்கு ராத்திரி கூட உங்க கூடப் படுத்து க்கறேன்.இந்த பாட்டி பாருங்கப்பா என்னை தன் கூட படுத்துக்க கூப்பிடறா” என்று சொல்லி ரமேஷ் கைகளை பிடித்து கொண்டான்.லதா உடனே “ஆனந்த,நான் அவர் கிட்டே கொஞ்ச நேரம் பேசி விட் டு உன் கூட வந்து படுத்தக்கறேன்.நீ பாட்டி கிட்டே படுத்துக்கோ”என்று சொன்னதும் “சரிம்மா,நான் பாட்டி கூடப் படுத்துக்கறேன்”என்று சொல்லி விட்டு ஆனந்த் பாட்டி கூடப் படுத்து கொள்ளப் போனான்.ஆனந்த் கிளம்பி பாட்டி ரூமுக்கு போனவுடன் லதா ரமேஷின் அக்குள் கட்டையைக் கொண் டு வந்து கொடுத்தாள்.ரமேஷ் அந்த அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு தன் ‘பெட் ரூமுக்கு’ கிள்ம்பினான்.லதா அவன் பின்னாலே அந்த பெட் ரூமுக்குப் போனாள்.அங்கே போனவுடன் ரமேஷி டம் இருந்து அக்குள் கட்டையை வாங்கி ஒரு ஓரமாக வைத்து விட்டு வந்தாள் லதா.

ரமேஷ் மெல்ல நடந்து ‘பாத் ரூமுக்கு’ப் போய் தான் போட்டுக் கொண்டு இருந்த ‘டிரஸ்ஸை’ கழட்டி வைத்து விட்டு ஒரு ஜிப்பாவும் நைட் பேன்டையும் போட்டுக் கொண்டு வந்தான்.உடனே லதா ரமேஷின் காலைப் பிடித்துக் கொண்டு கேவிக் கேவி அழுதாள்.அழுது அழுது ரமேஷின் கால் பூராவும் நனைந்து விட்டது.ரமேஷூக்கு ஒன்னும் புரிய வில்லை.அவன் லதாவின் தோளைத் தொட்டு “லதா,லதா,ஏன் அழறே” என்று கவலையோடு கேட்டான்.அவள் அழுகை ஓய்ந்த பாடில்லை.சரி அவ ள் அழட்டும் என்று நினைத்து கொஞ்ச நேரம் சும்மா இருந்தான் ரமேஷ்.‘லதா நான் உன்னையும், உன் அம்மாவை யும் நயவஞ்சகமாக ஏமாத்தி உன்னை ‘கெடுத்துட்டு’ உனக்கு ஒரு குழந்தையே குடு த்து இருக்கேன். உண்மைலே நான் தான் உன் கால்களைப் பிடிச்சுண்டு அழணும்.அப்படி இருக்க நீ ஏன் லதா என் கால்களைப் பிடிச்சுண்டு அழறே.நீ ஒரு தப்பும் பண்ணலையே.நான் தானே உன் கிட் டேயும் உன் அம்மா கிட்டேயும் என்னை ‘சுரேஷ்’ன்னு பொய்யே சொல்லி வந்துண்டு இருக்கேன். உங் க ரெண்டு பேர் கிட்டேயும் என் சுய நலத்துக்காக என் உண்மை பேரை சொல்லாம் இருந்து வறேன். என்னைக்கும் என் உண்மை பேரை என்னால் உங்க ரெண்டு பேர் கிட்டேயும் சொல்ல முடியாதே’ என்று தன் மனதில் சொல்லி அழுதுக் கொண்டு இருந்தான்.
அழுது அழுது லதாவின் கண்கள் கோவைப் பழம் போல் சிவந்து இருந்தது.லதா நிதானமா “எத்தனையோ வருஷமா நான் தவம் இருந்தேன் எனக்கு இந்த வாழ்க்கை கிடைக்கணும்ன்னு.அது இன்னைக்கு எனக்குக் கிடைச்சு இருக்கு.என்னை நீங்க கல்யாணம் பண்ணிண்டு எனக்கு இந்த வாழ்க்கையே குடுத்து இருக்கேள்.வெறுமே சாந்து பொட்டு இட்டுண்டு வந்த என் நெத்தியிலே நீங்க குங்குமத்தே இட்டு இருக்கேள் எனக்கு இந்த பாக்கியத்தைக் கொடுத்த உங்களுக்கு நான் ஈரேழு ஜென்மமும் சேவை பண்ணீ வரணும்.உங்களை ஒரு குழந்தையே போல நான் பார்த்துண்டு வருவே ன்.உங்களை சந்தோஷமா வச்சுண்ண்டு வருவேன்.நான் பல வருஷங்க சந்தோஷமா வாழ்ந்து வந்து, உங்க மடியிலே தான் என் உயிர் போகணும்.நீங்க உங்களுக்கு ஒரு கால் இல்லையே என்கிற கவலை யே இல்லாம வாழ்ந்து வாங்கோ.நான் உங்களுக்கு அந்த காலா இருந்து வந்து வருவேன்.என்னை வாழ வச்ச தெய்வம் நீங்க” என்று சொல்லி அவன் காலைக் கட்டி பிடித்துக் கொண்டு அழுதாள். ’இவ் வளவு நல்ல பொண்ணை நாம் தொடுகிறோமே,அது சரியா தப்பா என்று நினைத்து ஒரு நிமிஷம் தடுமாறினான் ரமேஷ்.

‘நான் அவளை தொட்டு தாலி கட்டி இருக்கேன்.அவ ஊரறிய நமக்கு மணைவியா ஆயிட்டா. இந்த நிலைலே நான் எந்த விதமான தடுமாத்தத்தையும் அவ கிட்டே காட்டக்கூடாது.நான் பழசை எல்லாம் மறந்து அவ கூட பழகணும்.சுரேஷ் லதா மீது ஆசையா இருந்து வந்தது போல பேசியும், பழகி யும் நாம் வரணும்’என்று நினைத்து ரமேஷ் “எழுந்திரு லதா,என் காலை விட்டுட்டு,அழுறதே முதல் லே நிறுத்து.நீ சொன்னதே எல்லாம் கேக்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.எனக்கு ஒரு கால் இல்லாம இருந்தும் நீ என்னை ஆசைப் பட்டே.உனக்குத் தான் நான் என்னுடைய ‘தாங்ஸை’ சொல்ல ணும்”என்று சொல்லி தைரியத்தை வர வழைத்துக் கொண்டு லதாவின் தோளைத் தொட்டு எழுப்பினா ன் ரமேஷ்.ரமேஷ் சொன்னதைக் கேட்டு லதா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மெல்ல எழுந்து வந்து கட்டிலில் ரமேஷ் பக்கத்தில் உட்கார்ந்தாள்.கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்து விட்டு லதா தன் அம்மா பக்கத்லே வந்து படுத்துக் கொண்டாள்.அடுத்த நாளில் இருந்து சமையல்கார மாமாவும், அவர் சம்சாரமும் ‘ப்லாட்டிலே’ சமையல் வேலை செய்து வந்தார்கள்.

ரமேஷ் வாத்தியார் சொன்ன ஒரு நல்ல நாள்லே சாந்தி முஹ¥ர்த்தத்தை பண்ணி கொண்டான். அன்று சாயந்திரம் ரமேஷூ எல்லோரையும் காரில் அழைத்துக் கொண்டு கருமாரி அம்மன் கோவிலுக் குப் போனான்.கோவில் வந்ததும் ரமேஷ் ஒரு பூமாலையும்,ஒரு அர்ச்சனைத் தட்டையும் வாங்கி லதாவிடம் கொடுத்தான்.பிறகு அவன் எல்லோருக்கும் ‘சிறப்பு தா¢சன டிக்கட்டை’ வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் அழைத்துப் போனான்.ரமேஷைப் பார்த்த கோவில் குருக்கள் “வாங்கோ,வாங்கோ”என் று சொல்லி விட்டு ரமேஷை வரவேற்றார்.நீங்க இந்த மாலையை அம்மனுக்குப் போட்டு விட்டு, அம்ம னுக்கு அர்ச்சனைப் பண்ணுங்க”என்று சொல்லி லதாவிடம் இருந்து பூ மாலையும்,அர்ச்சனைத் தட் டையும் வாங்கி அந்த குருக்களிடம் கொடுத்தான்.மாலையையும் அர்ச்சனைத் தட்டையும் கையில் வா ங்கிக் கொண்டு “அம்மன் பேருக்கு தானே சார்”என்று கேட்டதும் ரமேஷ் “ஆமாம்” என்று சொன்னதும் அவர் மந்திரம் சொல்லிக் கொண்டே கோவிலுக்கு உள்ளே போய் அர்ச்சனையைப் பண்ணீ விட்டு கற் பூர தீபத்தை அம்மனுக்கு காட்டிவிட்டு வெளியே கொண்டு வந்து ரமேஷூக்கு காட்டினார். ரமேஷ் கற்பூர தீபத்தை ஒத்திக் கொண்டு பிறகு காயத்திரியும் லதாவும் ஒத்திக் கொண்டார்கள்.பிறகு லதா அவர் கொடுத்த குங்குமத்தை தன் நெத்தியில் இட்டு கொண்டாள்.ரமேஷ் குருக்கள் தட்டில் ஒரு நூரு ரூபாய் போட்டான்.ரமேஷ் அன்றில் இருந்து லதாவோட சந்தோஷமாக இருந்து வந்தான்.

ஒரு மாசம் ஆனதும் ரமேஷ் தன் பங்களாவை ஒரு செட்டியாருக்கு ஐம்பத்து ஐஞ்சு கோடி ரூபா ய்க்கு விற்று விட்டு,இந்த சந்தோஷ சமாசாரத்தை லதாவிடமும் காயத்திரி இடமும் சொன்னான். அடுத்த நாளே லதாவையும் காயத்திரியையும் அழைத்துக் கொண்டு போய் சென்னையிலே இருந்த மூனு முதியோர் இல்லங்களுக்கும் ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தான்.அந்த ஞாயிற்று கிழமை சங்கர மடத்துக்கு போய் போய் ‘கோ சம்ரக்ஷணம்’ ‘ஜன கல்யாண்’ ‘சமஷ்டி உபநயனம்’ ஒவ் வொன்றுக்கும் ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து விட்டு வந்தான்.லதாவுக்கும் காயத்திரி க்கும் ரமேஷ் எல்லா இடத்திலேயும் ஒரு கோடி ரூபாய் நன்கொடை நினைத்து நினைத்து ஆச்சரியப் பட்டார்கள்.காயத்திரியும் லதாவும் ‘நாம ஒரு வெறுமனே ஆயிரம் ரூபாயைத் தான் பாத்து இது நாள் வரைக்கும் பாத்துண்டு வந்து இருக்கோம்.லக்ஷ ரூபாயே தெரியாது.இவர் என்னடான்னா கோடி, கோடி ரூபாயா தானம் பண்ணீன்டு வறார்’என்று நினைத்து ஆச்சரியப் பட்டார்கள்.காயத்திரி தினமும் சுவாமிக்கு ரெண்டு பொ¢ய வெள்ளி குத்து விளக்குலேயும் நிறைய தீப எண்ணை விட்டு ஏத்தி விட்டு பூஜை ரூமிலே இருந்த தனக்குப் பிடிச்ச ஸ்லோக புஸ்தகத்தை எடுத்து படித்து விட்டு பூஜை பண்ணி வந்தாள்.அவள் மனம் ரொம்ப சந்தோஷப் பட்டது.’ ரெண்டு நிமிஷம் தான் அம்பாள் படத்துக்கு முன் னாலெ நின்னுண்டு,ரெண்டு ‘ஸ்லோகம்’ சொல்லிட்டு,சமையல் வேலைக்கு ஓடிண்டு இருந்த நாம இத்தனை நேரம் நிதானமா ஸ்லோகங்கள் எல்லாம் சொல்லிட்டு பூஜை பண்ணி வரோமே’ என்று தன் மனதில் சொல்லி சந்தோஷப் பட்டுக் கொண்டு,தனக்கும்.லதாவுக்கும்,ஆனதுக்கும்,இந்த ‘ராஜ வாழ் க்கையை’ கொடுத்த அம்பாளுக்கு தன் நன்றியை மனதார சொல்லி மறுபடியும் ஒரு நமஸ்கார த்தை பண்ணினாள் காயத்திரி.

அந்த மாசமே ரமேஷ் தன்னுடைய ‘ரிடையர்ட் இங்கிலிஷ் டீச்சர் கிரிஜா மிஸ்ஸை லதாவுக்கு இங்கிலிஷ் கத்து கொடுக்க ஏற்பாடு பண்ணினான்.ரமேஷ் லதாவைப் பார்த்து “லதா,கிரிஜா மிஸ், இங் கிலிஷ் ரொம்ப நன்னா சொல்லிப் கொடுப்பா.நீ அந்த மிஸ் சொல்லிக் கொடுப்பதை கவனமாக கத்து ண்டு வா.’பெஸ்ட் ஆப் லக்’ லதா”என்று சொல்லி விட்டு சமையல்கார மாமா கொடுத்த ‘டிபனை சாப்பிட்டு விட்டு ‘பாக்டரிக்குக்’கிளம்பினான்.லதா அவன் கூடகார் வரைக்கும் போய் அவனிடம் “நான் நன்னா இங்கிலிஷ் கத்துண்டு வரேன்.நீங்க நிம்மதியா இருந்து வாங்கோ”என்று சொல்லி விட் டு அவனுக்கு ‘டா’ ‘டா’ சொல்லி விட்டு ‘ப்லாட்டு’க்குள் வந்தாள்.மணி சரியாக பதினோரு மணிக்கு ‘காலிங்க் பெல்’அடித்தது.லதா வாசல் கதவைத் திறந்தாள்.’நான் தான் கிரிஜா.உங்களுக்கு இங்கிலிஷ் சொல்லிக் குடுக்க வந்து இருக்கேன்”என்று சொன்னதும் லதா சந்தோஷப் பட்டு “வாங்கோ” என்று சிரித்துக் கொண்டே உள்ளே வரவேற்றாள்.கிரிஜா மிஸ் உள்ளே வந்ததும் லதா காயத்திரியைக் காட்டி “இது தான் என் அம்மா.பேர் காயத்திரி”என்று சொன்னதும் கிரிஜா மிஸ் “நமஸ்காரம் மாமி.என் பேர் கிரிஜா.நான் பத்மா சேஷாத்ரி ஸ்கூலே இங்கிலிஷ் டீச்சரா வேலைப் பண்ணி வந்தேன்.இந்த வருஷம் தான் ரிடையர் ஆனேன்.உங்க மாப்பிள்ளை தான் என்னை லதாவுக்கு இங்கிலிஷ் ‘டியூஷன்’ சொல்லி க் கொடுக்கச் சொன்னார்”என்று சொன்ல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.உடனே காயத் திரி “ரொம்ப சந்தோஷம்.நீங்க லதாவுக்கு சொல்லிக் குடுங்கோ” என்று சொன்னாள்.

லதா கிரிஜா மிஸ் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் தினமும் சாயங்காலம் ரமேஷ் வந்ததும் அவனிடம் சொல்லி, மிஸ் கொடுத்து இருக்கும் ‘ஹோம் வர்க்கையும்’ சொல்லி விட்டு உட்கார்ந்துக் கொண்டு சிரத்தையாக செய்து வந்தாள்.லதா கிரிஜா மிஸ்ஸீடம் இங்கிலிஷ் நன்றாக கற்றுக் கொண் டவுடன்,அடுதத வருஷமே அவளை ‘கரெஸ்பண்டச் கோர்ஸிலே’ சேர்த்து ‘ப்லஸ் டூ பாஸ்’ படிக்க வைத்தான் ரமேஷ்.லதாவும் எல்லா ‘கோர்ஸ்’ பாடங்களையும் ஒரு சின்ன குழந்தையைப் போல மிக வும் கஷ்டப் பட்டு படித்து வந்து எல்லா பா¢¨க்ஷகளையும் நன்றாக எழுதி ‘பாஸ்’ பண்ணீனாள். ரமே ஷூக்கு ரொம்ப சந்தோஷம்.அவன் லதாவைக் கூப்பிட்டு “லதா, நீ இவ்வளவு ‘ஹார்ட் வர்க்’ பண்ணி ‘ப்லஸ் டூவிலே’ ரொம்ப நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீ இருக்கே. ‘ஐ ஆம் ரியலி வொ¢ ப்ரவுட் ஆப் யூ’என்று சொல்லி லதாவை பாராட்டி தன் சந்தோஷத்தை சொன்னான்.உடனே ஆனந்தும் “அம்மா,நீங்க ரொம்ப நல்ல மார்க் வாங்கி ‘ப்லஸ் டூ’ பாஸ்’ பண்ணி இருக்கேள்.எனக்கு இனிமே எந்த பாடத்திலே ‘டவுட்’ வந்தாலும் உங்களே நான் கேட்டுப்பேன்”என்று சந்தோஷமாக சொல்லி அம்மா வை கட்டிக் கொண்டான்.இதை பார்த்த ரமேஷூக்கு ரொம்ப கண்களில் கண்ணிர் வந்தது.அவன் அதை தன் கை குட்டையால் துடைத்துக் கொண்டான்.லதா ரமேஷிடம் ”எனக்கு பத்தாவதுக்கு மே லே படிக்கணும்ன்னு ரொம்ப ஆசை.நீங்க அதை எனக்கு செஞ்சு இருக்கேள்”என்று சந்தோஷமாக சொன்னாள்.

”நீ சந்தோஷமா இருந்து வந்தா போறும் லதா.அதான் எனக்கு வேணும்” என்று சொல்லி விட்டு தன் மனதுக்குள் ‘லதா,உண்மைலே நான் தான் ரொம்ப சந்தோஷப்படணும். நீ ஆசைப் படுவதை எல் லாம் செஞ்சு வந்து,உன்னை சந்தோஷமா வச்சுண்டு வந்து,நான் பண்ண ‘துரோகத்துக்கு’ ‘பிராயச்சி த்தம்’தேடிண்டு வறேன்”என்று சொல்லிக் கொண்டான்.ரமேஷ் கிளம்பிப் போனதும் காயத்திரி “லதா, அப்பா உன்னை மேலே படிக்க வக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டார்.அவர் கிட்டே பணம் இல்லே. இப்போ மாப்பிள்ளை உன்னை ‘ப்லஸ் டூ’ படிக்க வச்சு இருக்கார்.நீயும் ரொம்ப நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீ இருக்கே”என்று சொல்லி லதாவை கட்டிக் கொண்டு சந்தோஷப் பட்டாள்.

ரெண்டு வருஷம் ஓடிவிட்டது.ஒரு நாள் காத்தாலே ரமேஷ் கோவிலுக்குக் கிளம்பிப் போன பிறகு லதா அம்மாவை ‘பெட் ரூமுக்கு’ அழைத்து போய் வெக்கத்துடன் “அம்மா,எனக்கு ‘நாள்’ தள் ளிண்டே போறதும்மா”என்று சொல்லி தன் முகத்தை தன் கைகளால் மூடிக் கொண்டாள்.உடனே காயத்திரி சந்தோஷத்தில் “அப்படியா லதா, நீ நல்ல சமாசாரம் தான் சொல்லி இருக்கே” என்று சொ ல்லி விட்டு “பகவானே லதாவை ‘இந்த நல்ல சமாசாரம்’ சொல்ல வச்சு இருக்கியேப்பா.எல்லாம் அந்த அம்பாள் அனுக்கிரஹம் தான்”என்று சொல்லி தன் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.லதா அம்மா சொன்னதைக் கேட்டு சந்தோஷமாய் நின்றுக் கொண்டு இருந்தாள்.காயத்திரி லதாவைப் பார்த்து “லதா,நீ அவர் கோவிலில் இருந்து தரும்பி வந்ததும் அவரை தனியா ‘பெட் ரூமுக்கு’ அழைச்சுண்டு போய் ‘இந்த நல்ல சமாசாரத்தை’ சொல்லு.அவர் உன்னை டாக்டர் கிட்டே அழைச்சுப் போய் ‘செக் அப்’ பண்ணிக் கொண்டு உனக்கு கர்ப்பம் தானா என்பதை ‘டெஸ்ட்’ பண்ணிக் கொண்டு வரட்டும்” என்று சொன்னதும் லதா வெக்கத்துடன் “சரிம்மா நான் அவர் கோவில்லே இருந்து திரும்பி வந்ததும் மெல்ல அவர் கீட்டே இந்த விஷயத்தைச் சொல்றேன்ம்மா”என்று சொல்லி விட்டு ஹாலுக்கு வந்தாள் லதா.

ரமேஷ் உள்ளே வந்ததும் லதா அவன் அக்குள் கட்டையை அவனிடத்தில் இருந்து வாங்கி ஒரு ஓரமாக வைத்து விட் டு ரமேஷ் ‘பெட் ரூமுக்குள்’ வந்ததும் லதா ரமேஷ் கையைப் பிடித்து கொண்டு வெக்கம் முகத்தில் கூத்தாட“எனக்கு ‘நாள்’ தள்ளிண்டு போறதுன்னு.நான்அம்மா கிட்டே கூட சொ ன்னேன்…”என்று சொல்லி முடிக்கவில்லை ரமேஷ் “அப்படியா லதா,எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.வா நாம டாக்டர் கிட்டேப் போய்க் காட்டி ‘செக் அப்’ பண்ணிண்டு வந்து உனக்குப் ‘ப்ரெக்ன ன்ஸியை’ ‘கன்பர்ம்’ பண்ணிண்டு வரலாம்”என்று சொல்லி டாக்டர் கிட்டே லதாவை அழைத்துக் கொண்டு ஒரு லேடிடாக்டரிடம் போனான்.அந்த லேடி டாக்டரிடம் லதா ‘கண்டிஷனை’ இங்கிகிஷில் விவரமாக சொன்னான் ரமேஷ்.அந்த லேடி டாக்டர் சிரித்துக் கொண்டே“நீங்க வெளியே காத்து கிட்டு இருங்க சார்.நான் இவங்களை ‘எக்சாமின்’ பண்ணீ விட்டு வந்து சொல்கிறேன்”என்று சொல்லி விட்டு லதாவை ‘எக்சாமின்’ பண்ண ஆரம்பித்தாள்.ரமேஷ் டாக்டர் ரூமின் வெளியே காத்துக் கொண்டு இரு ந்தான்.அரை மணி நேரம் ஆனதும் டாக்டர் வெளியே காத்துக் கொண்டு இருந்த ரமேஷை ரூமுக்கு உள்ளே வரச் சொன்னாள்.ரமேஷ் ரூமுக்குள் வந்ததும் “சார்,‘க்லாட் நியூஸ்’.இவங்க இப்போ ‘பாமிலி வே’லே இருக்காங்க”என்று சொல்லி விட்டு லதாவைப் பார்த்து லதா “நான் எழுதித் தரும் மாத்திரைக ளை எல்லாம் நீங்க தவறாம சாப்பிட்டு கிட்டு வரணும்.மாடி படி எல்லாம் அதிகமா ஏற வேணாம்.பளு அதிகமா தூக்க வேணாம்.காத்தாலேயும் சாயங்காலத்திலேயும் நல்லா நடந்து வாங்க.’செக் அப்’ புக்கு மாசா மாசம் என் கிட்டே நீங்க வந்து போகணும்”என்று சொன்னார் டாக்டர்.டாக்டர் ‘பீஸை’க் கொடு த்து விட்டு லதாவை வெளியே அழைத்து வந்தான்.

லதாவுக்கு ரமேஷைப் பார்க்கவே வெக்கமாக இருந்தது.”நாம இந்த ‘ஸ்வீட் நியூஸை’ சொல்லி அம்மாவையும் சந்தோஷப் படுத்தலாம்”என்று சொல்லி விட்டு செல் ‘போனில்’ கார் டிரைவரை காரை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடல் வாசலுக்கு வரச் சொன்னான்.கார் வந்ததும் ரமேஷூம் லதாவும் காரில் ஏறிக் கொண்டு ‘ப்லாட்டுக்கு’ வந்தார்கள்.காயத்திரி தான் கதவைத் திறந்தாள்.லதா முகமும் ரமேஷ் முகமும் சந்தோஷமாய் இருப்பதைப் பார்த்த போது அவளுக்கு நிம்மதியாய் இருந்தது.ரமேஷ் காயத் திரியை பார்த்து “டாக்டர் லதா கர்ப்ப்மா இருக்கான்னு சொல்லி அவளுக்கு மாத்திரைகள் எல்லாம் எழு திக் கொடுத்து இருக்கா” என்று சொல்லிக் கொண்டேமெல்ல ‘ப்லாட்க்குள்’ வந்தான்.லதா அவன் அக்கூள் கட்டையை வாங்கி ஒரு ஒரமாக வைத்து விட்டு ரமேஷை அழைத்துக் கொண்டு போய் ‘டை னிங்க்’ டேபிளில் உட்கார வைத்து சமையல் கார மாமாவைக் கூப்பிட்டு சுரேஷூ க்கு சூடா கொஞ்சம் காப்பி கலந்துக் கொண்டு வத்து தர சொன்னாள்.அந்த மாமா காப்பியை கலந்துக் கொண்டு வந்து கொடுத்தார்.ரமேஷ் அந்த காபியை குடித்து விட்டு “லதா டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் ஜாகிறதையா இருந்து வா”என்று சொல்லி விட்டு லதா எடுத்துக் கொடுத்த அக்கு கட்டையை வை த்துக் கொண்டு ‘பாக்டரிக்கு’க் கிளம்பினான்.லதா அவன் கூடவே கீழே கார் வரை அவனுக்கு ‘டா’ ‘டா’க் காட்டி விட்டு அவனை வழி அனுப்பி விட்டு ‘லிப்ட்’ ஏறி ‘ப்லாட்டுக்குள்’ வந்தாள்.

லதா வரும் வரை தன் ஆசையை அடக்கிக் கொண்டு இருந்த காயத்திரி லதா உள்ளே வந்தது ம் அவளை தன் பெட் ரூமுக்கு அழைத்து ப் போய் “லதா,லதா,டாக்டர் என்ன சொன்னார் உன் வா யால் சொல்லேன்”என்று லதாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.லதா நிதானமாக டாக்டர் சொன்னதை எல்லாம் அம்மாவிடம் சொல்லி வெட்கப் பட்டுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தா ள்.காயத்திரி கொஞ்ச நேரம் ஆனதும் லதா “நீ டாக்டர் சொன்னா மாதிரி இருந்து வரணும்.எல்லாத்துக் கும் மேலே நீ சந்தோஷமா இருந்து வரணும் லதா.உனக்கு நல்ல படி எல்லாம் ஆயி,நீ ஒரு குழந்தை யே பெத்துண்டு வரணும்.உனக்கு சுகப் பிரசவம் ஆகணும்ன்னு நான் இன்னையிலே இருந்து அந்த அம்பாளை நன்னா வேண்டிண்டு வரேன்”என்று சொனாள்.‘நாம மறுபடியும் ஒரு தாய் ஆகப் போறோ ம்’ என்று நினைத்த லதாவுக்கு லதாவுக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. ‘பாக்ட ரிக்கு’ போய்க் கொண்டு இருந்த ரமேஷ் மனது ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.

வழி நெடுக ரமேஷ் ‘லதாவுக்கு நாம் ‘தவறான வழியில்’ போய் அவளைக் ‘கெடுத்து’ ஒரு குழந்தையைக் கொடுத்துட்டோம்.ஆனா இப்போ எல்லோருடைய ஆசீர்வாதத்தாலே,நாம் லதாவை முறைப்படி லதாவைக் கல்யாணம் பண்ணீண்டு,ஒரு குழந்தையை பெறப் போறோம்.ரெண்டு குழந் தைகளும் நம்முடைய குழந்தைகள்.ரெண்டுமே லதாவின் குழந்தைகள்.ஆனால் லதாவும் காயத்தி ரியும் இப்போ உண்டாகி இருக்கும் குழந்தை சுரேஷைக்கு பொறந்து இருக்கும் குழந்தைன்னு நினை ச்சு சந்தோஷப் படுவா.நாம கவலைப் படாம லதோ வோடும்,ஆனந்தோடும்,புதுக் குழந்தையோடும் சந்தோஷமா இருந்து வரலாம்’ என்று நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டு போய்க் கொண்டு இரு ந்தான்.ஒரு நாள் ரமேஷ் பெட் ரூமில் லதாவோடு தனியாக இருந்து வந்தபோது அவ வயித்தைத் தொட்டு “என்ன சொல்றான் ராஜ குமாரன்”என்று கேட்ட போது “என்ன,நீங்க ராஜ குமாரன்ன்னு முடிவு பண்ணிட்டேளா.ஒரு ராஜ குமாரியா இருக்கக் கூடாதா”என்று கேட்பாள்.ஆனால் ரமேஷ் “லதா நீ பாரேன்.பொறக்கப் போற குழந்தையும் பையன் தான்”என்று சவால் விட்டான்.உடனே லதா “பாக்க லாம்,பையனோ பொண்ணா.எனக்கு எது பொறந்தாலும் ரொம்ப சந்தோஷம் தான்.ஆண் குழந்தையா இருந்தாலும் சரி,பெண் குழந்தையாலும் இருந்தாலும் சரி.எனக்குக் கவலையே இல்லே.நான் பொறக் கும் குழந்தையையும்,ஆனந்தையும் என் ரெண்டு கண்கள் போல கொஞ்சம் கூட பேதம் இல்லாம வளத்து வருவேன். ரெண்டு பேரும் இந்த வயித்லே பொறந்த குழந்தைங்க தானே.எனக்கு பேதமே வராது”என்று சொன்னாள்.

ரமேஷ் சந்தோஷபட்டான்.உடனே ரமேஷ் லதாவை பார்த்து” லதா,நீ பேசினதே கேட்டதும் உனக்கு எப்படி என் நன்றியே சொல்றதுன்னு எனக்குப் புரியலே”என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.ரமேஷ் லதாவை மாசா மாசம் டாக்டரிடம் அழைத்து ப் போய் ‘செக் அப்’ பண்ணிக் கொண்டு வந்தான்.டாக்டரும் லதாவுக்கு ‘எல்லாம் சரியா இருக்கு,அவளு க்கு சுகப் பிரசவம் ஆகும்’ என்றும் நம்பிக்கைக் கொடுத்து வந்தார். காயத்திரியும் லதாவோடு சாயங் காலத்தில் ‘வாக்க்கிக்’ போய் வந்துக் கொண்டு இருந்தாள்.

ஏழு மாசம் முழுக்க முடிந்தது.சமையல் கார மாமாவும்,மாமியும், கிள்ம்பிப் போன பிறகு ரமேஷ் காயத்திரி மாமியைப் பார்த்து “லதாவுக்கு ஏழு மாசம் முடிஞ்சுட்டது.நாம வாத்தியார் கிட்டே போன் பண்ணீ லதாவுக்கு ‘சீமந்தம்’ பண்ண ஒரு நல்ல நாள் பாக்க சொல்லலாமா”என்று கேட்டான்.உடனே காயத்திரியே ”ஆமாம்,நாம இப்போ பாக்கச் சொன்னாத் தான் சரியா இருக்கும்.சீமந்தத்துக்கு நாள் கிடைக்கறது கஷ்டம்.நான் நேத்து தான் இதை பத்தி லதா கீட்டே கேட்டுண்டு இருந்தேன்.அவளும் உங்க கீட்டே இதைப் பத்திச் சொல்றேன்னு எனக்குச் சொன்னா”என்று கேட்டதும் ரமேஷ் லதாவைப் பார்த்து “லதா,நீ எனக்கு இதைப் பத்தி சொல்லவே இல்லையே” என்று கேட்டான்.லதா உடனே” உங்க கிட்ட கேக்க எனக்கு ரொம்ப பயமா இருந்தது.என்னடா இந்த பொண்ணு ஏற்கெனவே ஒரு குழந்தை யே பெத்துண்டுட்டு இப்போ வந்து சீமந்தம் பண்ணிக்கலாமான்னு,கேக்கறாளேன்னு நீங்க தப்பா எடு த்துக் கொள்ளப் போறேளேன்னு நான் சும்மா இருந்தேன்”என்று கொஞ்சம் பயத்துடன் சொன்னாள். ரமேஷ் சிரித்துக் கொண்டே சும்மா இருந்தான்.கொஞ்ச நேரம் போனதும் ரமேஷ்க்கு போன் வரவே அவன் போனை ஆன் பண்ணீ ”ரொம்ப ‘தாங்க்ஸ்’ வாத்தியார் நீங்க சொன்னபடியே வளைக் காப்பு ‘பங்க்க்ஷனை’ நாங்க ஒரு ஏழு மணிக்கு ஆரம்பிச்சு ஒன்பது மணிக்குள்ளே முடிச்சிடறோம்..அப்புற மா நீங்க சீமந்தத்தை ஆரம்பிக்கலாம்“ என்று சொல்லி போனை ‘கட்’ பண்ணினான்.

ரமேஷ் ”வாத்தியார் வர மாசம் பத்தாம் தேதி லதா நக்ஷத்திரத்துக்கு ரொம்ப பொருத்தாமா இரு க்காம்.அன்னைக்கு ‘சீமந்தததே’ வச்சுக்கலாம்ன்னு சொன்னார்” என்று சொன்னதும் காயத்திரி “ரொம்ப சந்தோஷமா இருக்கு”என்று சொல்லி அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.ரமேஷ் சொன்னதைக் கேட்டு லதா மிகவும் சந்தோஷப் பட்டாள்.’நம் பொண்ணுக்கும் இப்படி கிரமமா கல்யாணம் ஆயி,குழந்தை உண்டாகி,இப்போ சீமந்தமும்,வளைக்காப்பும் பண்ணிக்கப் போறா என்பதை நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டாள் காயத்திரி.ரமேஷ் “ஒரு நல்ல நாள் பார்த்து லதாவுக்கு ஒரு ஜோடி வைரம் கருகுமணி வைத்த வளையலும், ஒரு ஜோடி பவழமும் வைரமும் வச்ச வளையலும் நாம வாங்கி வரலாம்” என்று சொன்னதும் உடனே காயத்திரி “உங்க அம்மா குடுத்து இரு க்கிற நகைகளில் நீறைய ஜோடி வளையல்கள் இருக்கே.புதுசா வேறே வளையல் பண்ணணுமா” என்று சொல்லி ஞாபகப் படுத்தினாள் கொஞ்ச நேரம் யோஜனை பண்ணீன ரமேஷ்.“இருக்கட்டும் பரவாயில் லே.லதாவுக்கு ஆசையா இருக்காதா.எனக்கும் ஆசையா இருக்கு.லதா அவளுக்கு பிடிச்சா மாதிரி ஒரு ஜோடி வைரம் கருகுமணி வச்ச வளையலும்.ஒரு ஜோடி பவழமும் வைரமும் வச்ச வளையலும் வாங்கி கொள்ளட்டும்”என்று சொல்லி விட்டு எழுந்தான் ரமேஷ்.லதாவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.அதற்கு மேல் காயத்திரி ஒன்னும் சொல்லவில்லை.சும்மா இருந்து விட்டாள்.

அந்த வார கடைசியிலே ரமேஷ் லதாவையும்,காயத்திரியையும்,ஆனந்தையும் GRTதங்க மாளிகைக்கு அழைத்துப் போய் ஒரு ஜோடி வைரம் கருகுமணி வைத்த வளையலும்,ஒரு ஜோடி பவழமும் வைரமும் வைத்த வளையலும் வாங்கிக் கொண்டு ஒரு பொ¢ய் ஹோட்டலில் மத்தியான சாப்பாட்டை சாப்பிட வந்தான். காயத்திரி சாப்பிட்டுக் கொண்டே “ரெண்டு ஜோடி வளையல்களும் ரொம்ப அதிகமான விலைக்கு வாங்கி இருக்கேள்.இன்னும் கொஞ்ச விலை குறைவா வாங்கி இருக்க லாமே”என்று சொன்னாள்.உடனே ரமேஷ் “ஒரு பொண்ணுக்கு வாழ்க்கைலே ஒரு தடவை தான் வளைக்காப்பும்,சீமந்ததமும் வரும்.அதை நாம சந்தோஷமா கொண்டாடி வரணும்.அதனாலே இந்த ‘பங்க்ஷனுக்கு’ நான் செலவு பண்ண யோஜனை பண்ணலே”என்று சொல்லி விட்டு அவன் பாட் டுக்கு நிம்மதியாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.சாப்பாட்டை முடித்துக் கொண்டு ‘ப்லாட்’டுக்கு எல்லோரும் வந்தார்கள்.சீமந்தத்திற்கு முதல் நாள் ‘காடரிங்க் கன்ட்ராக்டர்’ ‘ப்லாட்டின்’ வெளீயே ஒரு சின்ன பந்தல் போட்டு ‘டெகரேஷன்’ பண்ணி ‘ட்யூப் லைட்’, ‘கலர் லைட்டு’ எல்லாம் போட்டு ரெண்டு வாழை மரங்கள் கட்டி விட்டார்.சீமந்த அன்று ரமேஷ் காலை எழுந்து குளித்து விட்டு சுவாமி ரூமுக்குப் போய் சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு சுவாமி ரூமை விட்டு வெளியே வந்தா ன்.’காலிங்க் பெல்’ அடித்தது.காயத்திரி போய் கதவைத் திறந்தாள். ’ப்லாட்’வாசலில் காடரிங்க் ஆட் கள் காப்பி ‘டிபன்’ எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து நின்றுக் கொண்டு இருந்தார்கள்.அவர்களைப் பார்த்ததும் காயத்திரி அவர்களை உள்ளே வரச் சொன்னாள்.

அவர்கள் உள்ளே வந்ததும் அவர்கள் கொண்டு வந்த பாத்திரங்களை எல்லாம் வைத்து விட்டு ரமேஷூக்கும்,காயத்திரிக்கும்,சூடா காபியைக் கொடுத்தார்கள்.காயத்திரி,ப்லாட் ‘லேடிடீஸ்களுக்கு ரமேஷூம் லதவும் கடையில் வாங்கி வந்த கண்ணாடி வலையல்களை எல்லாம் கொடுத்துப் போட்டுக் கொள்ள சொன்னாள்.எல்லோரும் வலையல்களை போட்டுக் கொண்டு பாட்டு பாடினார்கள்.லதா மணையில் உட்கார்ந்துக் கொண்டதும் அவளுக்கும் வளையல்களை எல்லாம் அடுக்கி விட்டு,ரமேஷ் வாங்கி வந்த முத்து பவழ ஜோடி வளையலையும்,கருகுமணி வைர ஜோடி வளையலையும் போட்டு பாட்டுகள் பாடி லதாவை சந்தோஷப் படுத்தினார்கள். ‘ப்லாட்டு ‘லேடீஸ்’எல்லாம் வந்து நிறைய பாட்டு பாடி வளைகாப்பு நடந்தி வைத்ததை நினைத்து லதாவும்,காயத்திரியும் சந்தோஷப் பட்டார்கள்.
மணி ஒன்பது அடித்து இருக்கும் வாத்தியார் தன் சக வாத்தியார் ரெண்டு பேரை அழைத்துக் கொண்டு வந்து காலிங்க் பெல்லை அழுத்தினார் காயத்திரி.வாசல் கதவைத் திறந்து வந்து இருந்த வாத்தியார்களை எல்லாம் வரவேற்றாள்.காயத்திரி புஷ்பத்தை எடுத்து அதை துண்டு, துண்டாக வெ ட்டி எல்லா ‘லேடீஸ்களுக்கும்’ கொடுத்தாள்.வாத்தியார் கணீரென்று மந்திரங்கள் சொல்லி சீமந்தத் தை ஆரம்பித்தார்.லதா மணையில் உட்கார்ந்துக் கொண்டாள்.வாத்தியார்கள் மந்திரம் எல்லாம் சொ ல்லி லதாவுக்கு சீமந்ததை மங்களகரமாக முடித்து வைத்தார்கள்.எல்லா பொ¢யவர்களும் லதா ரமேஷ் மேலே புஷ்பமும் அட்சதையும் போட்டு ஆசீர்வாதம் பண்ணினார்கள்.பிறகு எல்லோரும் அவர்கள் வாங்கி வந்த ‘கிப்ட்டை’ வாத்தியார் இடம் கொடுத்து ‘ஓதி’விட சொன்னார்கள்.காயத்திரி எல்லா ‘கிப்ட்டுகளையும்’ உள்ளே கொண்டு போய் வைத்தாள்.சீமந்தத்தை முடித்து விட்ட பிறகு எல்லா வாத்தியார்கள் எழுந்துக் கொண்டதும் ‘காடரிங்க்’ ஆட்கள் முதலில் வாத்தியார்களுக்கு இலைப் போ ட்டதும் வாத்தியார்கள் இலை முன்னால் உட்கார்ந்துக் கொண்டார்கள்.‘காடரிங்க்’ ஆட்கள் இலை யில் பறிமார ஆரம்பித்தார்கள்.எல்லா வாத்தியார்களும் சாப்பிட்டு விட்டு எழுந்ததும் கையை கழுவிக் கொண்டு வந்து ஹாலில் போட்டு இருந்த பாயில் உட்கார்ந்தார்கள்.‘காடரிங்க்’ ஆள் ஒருவன் ஒரு பொ¢ய தாம்பாளத்தில் நிறைய வெத்திலை,பாக்கு,சீவல் சுண்ணாம்பு எல்லாம் கொண்டு வந்து வைத் தான்.வத்தியார்கள் வெத்திலைப் பாக்குப் போட்டுக் கொண்டார்கள்.ரமேஷ் மொத்த சம்பாவணையை யும் கொண்டு வந்து ஆத்து வாத்தியார் கிட்டேக் கொடுத்து “வாத்தியார்,நான் மொத்த சம்பாவணை யையும் உங்க கிட்டே குடுத்து இருக்கேன்.நீங்க அதைப் பிரிச்சு, மத்த வாத்தியார்களுக்குக் குடுத்து டுங்க”என்று சொன்னான்.நமஸ்கரம் பண்ணினதும் எல்லா வாத்தியார்களும் ரமேஷையும் லதாவை யும் ஆசீர்வாதம் பண்ணினார்கள்.

ரெண்டு மாசம் ஓடி விட்டது.அன்று ஞாயித்துக் கிழமை,ரமேஷ் காலைலே எழுந்து குளித்து விட்டு சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு கருமாரி அம்மன் கோவிலுக்குப் போய் விட்டு ‘ப்லாட்டுக்கு’ வந்தான்.’காலிங்க் பெல்’லை அடித்ததும் காயத்திரி வந்து கதவைத் திறந்தாள்.ரமேஷ் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தான்.காயத்திரியைப் பார்த்து “எங்கே லதாவை காணோம்”என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போது,ஹாலில் ரமேஷ் குரல் கேக்கவே லதா மெல்ல தன் இடுப்பைப் பிடித்துக் கொண்டு ‘பெட் ரூமை’ விட்டு வெளியே வந்தாள்.“என்ன லதா,நீ உன் இடுப்பைப் பிடிச்சு ண்டு வறே”என்று கவலையோடு கேட்டான் ரமேஷ்.“காத்தாலே எழுந்ததில் இருந்து தான் வலி ஆரம்பிச்சு இருக்கு” என்று சொன்னவுடன் ரமேஷ் “இதை இப்படியே விடக் கூடாது.வா டாக்டர் கீட்டே போய் காட்டிண்டு வரலாம்.அவர் பார்த்து சொல்லட்டும் லதா”என்று சொன்னதும் லதா ‘பெட் ரூமு’க் கு’ப் போய் ‘டிரஸ்’ மாற்றிக் கொள்ளப் போனாள்.
லதா ‘டிரஸ்ஸை’ மாற்றி¢க் கொண்டு வந்ததும் காயத்திரியையும்,ஆனந்தையும் அழைத்துக் கொண்டு ரமேஷ் அப்போலோ ஹாஸ்பிடலுக்கு போனான். ஹாஸ்பிடல் போர்ட்டிகோவிற்கு வந்ததும் ரமேஷ் காரை விட்டு கீழே இறங்கி ‘எமர்ஜென்ஸிக்கு’ போன் பண்ணி ஒரு ‘வீல் சேரை’க் கொண்டு வரச் சொன்னான்.‘வீல் சேர்’ வந்ததும் அதில் லதாவை உட்கார வைத்து ‘எமர்ஜென்ஸிக்கு’ அழைத்து போனான் ரமேஷ்.‘எமர்ஜென்சியில்’ இருந்த டாக்டர் லதாவை நன்றாகப் பா¢சோதனைப் பண்ணி விட்டு,ரமேஷை பார்த்து “இவங்களுக்கு ‘லேபர் பெயின்’ ஆரம்பிச்சு” என்று சொன்னதும் ரமேஷ் லதா வை அழைத்துக் கொண்டு ‘லேபர் வார்ட்டில்’’அட்மிட்’ பண்ணினான்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *