தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 5,918 
 
 

அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அத்தியாயம்-14

’சரி இவருக்குப் போன் பண்ணி நாம விஷயத்தை சொல்லலாம்’என்று நினைத்து அந்த நம்ப ருக்கு ‘போன்’ பண்ணினார்.’செல் போன்’ மணி அடித்தது.’நல்ல வேளை இந்த ஆசாமி நமக்கு கிடை ச்சாரே,இவர் கிட்டே நாம இந்த ‘அக்ஸிடென்ட்’ விஷயத்தை சொல்லலாம்’ என்று நினைத்து ”ஹலோ நீங்க ஏகநாதனா பேசறேது சார்”என்று கேட்டார் அவர்.’செல் போனில்’ தன்னுடைய அண்ணன் நம்பர் தெரிந்தது.’என்னடா இத்தனை வருஷத்துக்கு அப்புறமா நம்முடைய அண்ணன் பேசறானே’என்று நினைத்து போனை ‘ஆன்’ பண்ணினார் ஏகநாதன்.

ஆனால் மறு பக்கத்தில் இருந்து அவர் அண்ணன் பேசவில்லை.வேறே யாரோ குரல் கேட்டது. ‘யாரா இருக்கும் இந்த ஆசாமி’ என்று நினைத்து ஏகநாதன் கேட்க ஆரம்பித்தார்.“ஆமாம் சார்,நான் ஏகநாதன் தான் பேசறேன்.நீங்க யாருங்க பேசறது”என்று கேட்டார் ஏகநான்.“சார்,என்னை உங்களு க்குத் தெரியாது.நான் காஞ்சீபுரத்து கிட்டே இருந்து பேசறேன்.நான் பெங்களுரிலே இருந்து சென் னை திரும்பி வந்துக் கிட்டு இருந்தேன்.அப்போ திடீரென்று எதிரில் வந்துக் கொண்டு இருந்த ‘இன் னோவா’ கார் ‘ஆக்ஸிடெண்ட்’ ஆகி இருந்ததைக் கவனிச்சேன்.மனித நேயம் காரணமா நான் உடனே என் காரை ஒரு ஓரமாக நிறுத்திட்டு இறங்கி வந்து ‘ஆக்ஸிடெண்ட்’ ஆன காரை பார்த்தேன்.நான் ‘ஹைவே ஆம்புலன்ஸ்’க்கு போன் பண்ணி இருக்கேன்.அவங்களும் உடனே வரேன்ன்னு சொல்லி இருக்காங்க.அந்த ‘இன்னோவா’ கார் பயங்கரமா நொறுங்கி போய் இருக்கு.அதில் இருந்த பெரியவர் கழுத்தில் தொங்கி கிட்டு,இருந்த செல் போனை எடுத்து பாத்தேன்.முதல்லே உங்க நம்பரும்,பேரும் இருதிச்சு.நீங்க அடிப் பட்ட பெரியவரின் உறவினரா இருக்கலாம்ன்னு நினைச்சு தான் நான் உங்களு க்குப் ‘போன்’ பண்ணி இருக்கேன்.நீங்க அந்த பெரியவர் உறவினரா” என்று பதட்டுத்துடன் கேட்டார் அவர்.ஏகநாதனுக்கு ‘ஷாக்காக’ இருந்தது .

தன்னை சமாளித்து கொண்டு “ஆமாம் சார்,நான் அடிப்பட்ட பெரியவரின் சொந்த தம்பி தான். அவங்க கூட இருந்தவங்க அவர் குடும்பத்தை சேர்ந்தவங்க.காரில் அடிப்பட்டவங்க ‘கண்டிஷன்’ எப் படி இருக்கு.அவங்க உயிருக்கு ஆபத்து ஒன்னும் இல்லையே. ’ஆக்ஸிடெண்ட்’ எங்கே நடந்து இருக் கு.கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்க”என்று மிகவும் கவலையோடு கேட்டார் ஏகநாதன்“ “என் பேர் சரவணன்.’ஆக்ஸிடெண்ட்’ காஞ்சீபுரம் தாண்டி கிலோ மீட்டர் 70 க்கு கிட்டே நடந்து இருக்கு.அந்த காரிலே ரெண்டு இள வயசு பசங்களும்,ஒரு வயதான் அம்மாவும்,ஒரு பெரியவரும் இருந்தாங்க. எல் லோருக்கும் பலத்த அடிபட்டு இருக்கு.அவங்க உயிரோட இருக்காங்களான்னு எனக்குத் தெரியாது. ஆனா அவங்களுக்கு பட்டு இருக்கும் அடிகளை பாத்தா மிகவும் பயமா இருக்குது.அவங்க ரத்த வெள்ளத்திலே கிடக்கறாங்க.இவங்க சவாரி பண்ணி வந்த ‘இன்னோவா’ கார் மிகவும் பலமாக நொ றுங்கி இருக்கு.‘இன்னோவா’ ஓட்டி வந்த டிரைவர் ‘ஸ்டியா¢ங்க் வீல்’ மேலே விழுந்து கிடக்கறாரு.நீங்க எவ்வளவு சீக்கிரமா வர முடியுமோ வாங்க” என்று பதட்டுத்துடன் சொன்னார் சரவணன். “அப்படியா சார்,நான் உடனே வர ‘ட்ரை’ பண்றேன் சார்.நீங்க தயவு செஞ்சி நான் வர வரைக்கும் அங்கே இருப்பீ ங்களா.நான் இன்னும் ஒரு மணி நேரத்லே அங்கு வந்து சேர்றேன்” என்று கேட்டார் ஏகநாதன் “என் னால் அவ்வளவு நேரம் எல்லாம் இங்கே இருக்க முடியாது.நான் சென்னைக்கு சீக்கிரமா போகணும். இப்பவே ரொம்ப லேட்டாயிடுச்சி.நான் ‘ஹைவே ஆம்புலன்ஸ்’ வந்தவுடன் அவங்க கிட்டே சொல் லிட்டு கிளம்பி போய் விடுவேனுங்க”என்று சொன்னார் சரவணன்.

“’ரொம்ப தாங்க்ஸ்’.நீங்க ‘ஹைவே ஆபுலன்ஸ்ஸ¤க்கு’ போன் பண்ணி அவங்களை வர சொ ல்லி இருக்கீங்க.உங்களுக்கு நான் என் மன மார்ந்த நன்றியை சொல்லிக் கொள்றேன்.நீங்க ‘ஹைவே ஆம்புலன்ஸ்’ வந்தவுடன் அவங்க கிட்டே சொல்லிட்டு கிளம்பி போங்க.நான் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அந்த ‘ஆக்ஸிடெண்ட்’ ‘சைட்டுக்கு’ வந்து சேறேன்”என்றார் ஏகநாதன்.சரவணன் ‘செல் போனை’ ‘ஆப்’ பண்ணி விட்டு கிளம்பத் திரும்பினார்.‘ஹைவே ஆம்புலன்ஸ்’ விபத்து நடந்த இடத் திற்கு வந்து விட்டது.‘தப’,‘தப’,என்று நான்கு ‘பாரா மெடிக்கல்’ பேர்கள் அதில் இருந்து கீழே குதித் தார்கள்.இரண்டு பேர் ‘ஸ்ட்டெரச்சரை’ இறக்கினார்கள்.

‘இன்னோவா’காரை நோக்கி ஓடி அதில் இருந் தவர்களுக்கு முதல் உதவி செய்தார்கள்.அவர்கள் உடலில் கசிந்துக் கொண்டு இருந்த ரத்தததை எல் லாம் நன்றாக துடைத்து விட்டு அடிப்பட்ட இடத்திற்கு மருந்து போட்டார்கள்.பிறகு ஐஞ்சு பேரையும், ஐஞ்சு ‘ஸ்ட்டெரச்சரில்’ ஏற்றிக் கொண்டு ‘ஆம்புலன்ஸ்ஸில்’ ஏற்றினார்கள்.“சார்,இவங்க ஐஞ்சு பேர் உடல் நிலையும் மிகவும் கவலைக்கிடமாக இருக்கு.இவங்களை நாங்க உடனே ‘எமர்ஜென்ஸியில்’ சே க்கணும்.’டயம் வேஸ்ட்’ பண்ணா இவங்க உயிர் பிழைப்பது ரொம்ப கஷ்டம்.அதனால் நாங்க இவங்க ளை உடனே ‘ஹாஸ்பிடலில்’ சேக்க ஏற்பாடு பண்றாம்.எங்களுக்கு விஷயம் சொன்னதுக்கு உங்களு க்கு ரொம்ப நன்றி”என்று சொல்லி விட்டு அந்த ஆட்கள் ‘ஆம்புலன்ஸ்ஸை’ ஸ்டார்ட் பண்ணிக் கொ ண்டு கிளம்ப ரெடி ஆனார்கள்.“இவங்களே நீங்க எந்த ஹாஸ்பிடலில் சேக்கப் போறீங்கன்னு,நீங்க சொன்னா நான் இவங்க சொந்தக்காரங்க கிட்டே போன் பண்ணிச் சொல்ல சௌகா¢யமா இருக்கும். என்று கேட்டார் சரவணன் “இவங்களை நாங்க ‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’ கொண்டு போய் ‘அட் மிட்’ பண்ணப் போறோம்” என்று சொல்லி விட்டு அவர்கள் ‘ஆம்புலன்ஸ் சைரனை’ ‘ஆன்’ பண்ணிக் ‘ஆம்புலன்ஸை’ ஓட்டிக் கொண்டு போனார்கள்.

காரில் இருந்தபடியே சரவணன் ஏகநாதனுக்குப் போன் பண்ணினார்.”ஏகநாதன் சார்,நான் சரவணன் தான் பேசறேன்.நான் கார்லே சென்னைக்கு போய் கிட்டு இருக்கேன்.’ஹைவே ஆம்புலன் ஸ்’ஆளுங்க,வந்து காரில் அடிப் பட்ட ஐஞ்சு பேருக்கும் முதலுதவி செஞ்சாங்க.அப்புறமா ஐஞ்சு ‘ஸ்ட் ரெச்சர்களை’ கொண்டு வந்து அவங்களை ஏத்திக் கிட்டு ‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’ கொண்டுப் போய் இருக்காங்க.நீங்க அவங்களை அங்கே போய் பாருங்க சார்” என்று சொன்னார் சரவணன்.”ரொம்ப ‘தாங்க்ஸ்’ சார்.நான் அங்கே போய் அவங்களை பாக்கறேன் சார்”என்று சொன்னார் ஏகநாதன். கூடவே அந்த ‘மனேஜிங்க் டைரக்டருக்கு’ போன் பண்ணி “சார்,ஹைவே ஆம்புலன்ன்ஸ்காரங்க அவ ங்க ஐஞ்சு பேரையும் ‘அப்போலோ ஹாஸ்பிடல்லே சேர்க்க அவங்க வண்டியிலே எடுத்துக் கிட்டு போ றாங்க.நீங்க அங்கேயே போய் பாருங்க”என்று சொல்லி போனை கட் பண்ணினார். ‘முதலாளி போன வண்டிக்கு ஆக்ஸிரெண்ட் ஆகி இருக்கு’ என்று கேள்விப் பட்டதும்,’மனேஜிங்க் டைரக்டர்’ மத்த எல் லா ‘சீனியர் ஸ்டாபுக்கும்’,யூனியன் தலைவர்களுக்கும்,கார் ஓட்டிக் கொண்டு போன கார் டிரைவர் ரவியின் மணைவிக்கும் போன் பண்ணி விஷயத்தை சொன்னார்.

ஏகநாதன் தன் மணைவியிடம் தனக்கு போன் வந்த விஷயத்தை விவரமா சொன்னார்.உடனே கமலா ”இதோ பாருங்கோ.உங்க அண்ணா நம்ம குடும்பத்துக்கு பண்ண கெடுதல்களை எல்லாம்,நீங்க இப்ப உங்க மனசிலே வச்சுக்க கூடாது.அதை எல்லாம் இப்ப மறந்துட்டு,அவா குடும்பமே இப்ப உயிரு க்கு போராடிண்டு வர இந்த சமயத்லே, நாம அவசியம் அவாளை ‘அப்போலோ ஹாஸ்பிடல்லே’ போய் பாக்கணும்.நான் ரெண்டு நிமிஷத்திலே ‘டிரஸ்’ மாத்திண்டு வறேன்” என்று சொல்லி விட்டு டிரஸ் மாற்றிக் கொள்ள தன் ரூமுக்கு போனாள் கமலா.ரெடி ஆனதும் ஏகநாதன் கமலாவையும் கூட்டி கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறி அப்போலோ ஹாஸ்பிடலுக்கு ஓடினார்.வழி நெடுக அந்த நால்வருக்கும் ஒன்னும் ஆகி இருக்கக் கூடாதேன்னு கடவுளை வேண்டி கொண்டே போனாள் கமலா.‘ஹைவே ஆம் புலன்ஸ்’ ஆட்கள் கொண்டு வந்த ஐஞ்சு பேரையும் ‘எமர்ஜென்ஸியில்’ சேர்த்து அங்கு இருந்த டாக் டா¢டம் விபத்து நடந்த இடத்தையும்,தாங்கள் செய்த முதல் உதவியையும் சொல்லி ‘அட்மிட்’ பண் ணினார்கள்.உடனே ‘எமர்ஜென்ஸியில்’ இருந்த டாக்டர்கள் ஐஞ்சு பேரையும் பரிசோதனை பண்ணி, பெரியவர்,அவர் மணைவி,,ஒரு பையன்,கார் ஓட்டி வந்த டிரைவர் நான்கு பேரும் இறந்து விட்டதாக முடிவு பண்ணினார்கள்.‘தீவிர சிகிச்சை குடுத்தால் ஒரு பையனை மட்டும் பிழைக்க வைக்கலாம்’ என் று அபிப்பிராயப்பட்டார்கள்.அந்த ஒரு பையனை உடனே I.C.U.க்கு ‘ஷிப்ட்’ பண்ணினார்கள்.

I.C.U.க்குள் கொண்டு போன பையனை அங்கு இருக்கும் டாகடர்கள் முழு பரிசோதனை பண்ணி விட்டு, உடனே அந்த பையனுக்கு அதிக படியான ஆக்ஸிஜன் கொடுத்தார்கள்.அவன் உடலில் மூச்சு இன்னும் ஓடிக் கொண்டு இருந்தது.ஆனால் அவன் முகம்,கால்கள்,கைகள் இவைகளி ல் இருந்து ரத்தம் இன்னும் கசிந்து கொண்டு இருந்தது.அந்த ரத்தத்தை எல்லாம் துடைத்து விட்டு, அவன் முகத்தை முழுக்க ‘ஷேவிங்க்’ பண்ணி விட்டு பலமாக ‘பாண்டேஜ்’ போட்டார்கள்.தலையில் இருந்து கழுத்து தோள் பட்டை வரை அவன் முகத்தில் ‘பாண்டேஜ்’ போட்டு,மீண்டும் பொருத்தினார்கள்.அவனுடைய ‘ஹார்ட் பீட்,’ப்லட் ப்ரெஷர்’ இவைகளை எல்லாம் மானிட்டர் பண்ண ஒரு ECG மெஷினை வைத்து இருபத்து நாலு மணி நேரமும் கண்காணித்து வந்தார்கள்.அடுத்த நாள் எல்லா ‘லீடிங்க் நியூஸ் பேப்பர்களிலும் இந்த விபத்தை பத்தி முதல் பக்கத்திலேயே பிரசுரா¢த்து இருந்தார்கள்.

ஏப்ரல் 2.பிரபல தொழில் அதிபர் சாலை விபத்தில் பலி.அவரும்,அவரது மணைவி யும்,ஒரு மகனும்,கார் ஓட்டி கொண்டு போன டிரைவரும் விபத்து நடந்த இடத்திலேயே மரணம்.ஒரு மகன் உடல் நிலை கவலைகிடம்.
.
தொழில் அதிபர் மேகநாதன் அவரது குடும்பத்தாருடன் ‘பிஸினஸ்’ விஷயமாக பெங்களுர் சென்று கொண்டு இருந்தார்.காஞ்சிபுரத்தில் சுவாமி தா¢சனம் பண்ணி விட்டு,பெங்களுர் போக ‘ஹை வே’ எடுக்கும் போது அவர் ‘இன்னொவா’ காருடன் பின்னால் வந்த தண்ணீர் லாரி பயங்கரமாக மோ தி,விபத்து நடந்த இடத்திலேயே மேகநாதனும்,அவரது மணைவி லலிதாவும்,சுரேஷ¤ம்,கார் ஓட்டிப் போன டிரைவர் ரவியும் இறந்து விட்டார்கள்.ஒரு மகன் ரமேஷ் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்………….

இதற்கிடையில் மேகநாதன் குடும்பத்துக்கு ஏற்பட்ட விபத்தை கேள்வி பட்ட யூனியன் தலைவர்கள்,‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’ ஒடி வந்தார்கள்.‘எமர்ஜென்ஸி’க்கு வந்து அங்கு இருந்த டாக்ட ரை பார்த்து ‘அடிப்பட்ட தங்கள் கம்பனி முதலாளியும்,அவர் குடும்ப நபர்களும் எப்படி இருக்கிறா ர்கள்’ என்று கேட்டார்கள்.டாக்டர் ICUவில் இருந்து வெளியே வந்து யூனியன் தலைவர்களிடம், ”பெரி யவரும்,அவங்க சம்சாசாரமும்,ஒரு பையனும்,கார் டிரைவரையும் ‘ஸ்பாட்டிலே’ இறந்து இருக்காங்க. ஒரு பையன் உடம்பிலே இன்னும் உயிர் ஓடிகிட்டு இருக்கு.நாங்க அவனை காப்பாத்த எல்லா முயற் சிகளையும் செஞ்சு வறோம்.இப்போ அந்தப் பையன் ‘கண்டிஷன்’ ரொம்ப மோசமா இருக்கு.அந்தப் பையனுக்கு தலையிலும் முகத்திலேயும் பலமாக அடிப் பட்டு இருப்பாதால்,நாங்க அவன் முகத்தை முழுக்க ‘ஷேவிங்க்’ பண்ணி¢ட்டு தலையில் இருந்து கழுத்து தோள் பட்டை வரை அவன் முகத்தில் ‘பாண்டேஜ்’ போட்டு, அவனை ‘பெட்டில்’ படுக்க வைத்து,ஆக்சிஜனை மீண்டும் பொருத்தி இருக் கோம்.அவன் இப்போ ‘கோமாவில்’ இருக்கான்..நீங்க யாரும் அவரை அவர் மயக்கம் தெளியும் வரை பாக்க முடியாது”என்று சொல்லி விட்டு ICU க்குள் போய் விட்டார்.கண்ணில் கண்ணீருடன் நின்றுக் கொண்டு இருந்தார்கள் அந்த மூன்று யூனியன் தலைவர்களும்.அந்த நேரம் பார்த்து டிரைவர் ரவியின் மனைவி வந்தாள்.விஷயம் கேள்விப்பட்டு அவளும் அழ ஆரம்பித்தாள்.

ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி ஏகநாதன், தன் மனைவி கமலாவை அழைத்துக் கொண்டு வந்து ‘ரிஸப்ஷனில்’ வந்து அங்கு இருந்த ஒரு பெண்ணிடம் “ஏங்க,காஞ்சீபுரம் அருகே ஒரு கார் விப த் தில் அடிப்பட்டவங்களை ’ஹைவே ஆம்புலன்ஸ்’ ஆட்கள் இங்கே கொண்டு வந்து ‘அட்மிட்’ பண் ணி இருப்பதாக எனக்கு ஒருவர் ‘செல் போனில்’ தகவல் குடுத்தார்.அவங்க இப்ப எப்படி இருக்காங்க ன்னு உங்களுக்கு தெரியுமாங்க”என்று கேட்டார்.’ ரிஸப்ஷனில்’ இருந்த அந்த பெண்மணி “நீங்க,இப் படியே போய் ‘ரைட்லே’ திரும்புங்க.அங்கு தான் ‘ICU’ ரூம் இருக்கு.அங்கே போய் விசாரியுங்க” என்று சொல்லி விட்டு அந்த பெண்மணி ‘செல் போனில்’ யாரோ கூப்பிட்டதால் பேச ஆரம்பித்தாள். ஏகநாதன் அந்த ‘ரிஸப்ஷனில்’ சொன்ன மாதிரி வந்து ‘ICU’ ரூம் இருக்கும் இடத்தை மெல்ல விசாரி த்துக் கொண்டு கமலாவோடு ‘ICU’ ரூமுக்கு வந்தார்.‘ICU’ ரூமில் இருந்த டாகடர் ஏகநாதனை பார்த்து யூனியன் தலைவர்களிடம் சொன்ன அதே விவரத்தை ‘ICU’ ரூமுக்குள் போய் விட்டார்.

ஏகநானும் கமலாவும் அழ ஆரம்பித்தார்கள்.மேகநாதன் கார் விபத்தை கேள்வி பட்ட மேகநா தன் கம்பனியின் ‘மேனேஜிங்க் டைரக்டர்’ தன் ‘அக்கவுண்ட்ஸ் ஆபீசரையும்’ கூட அழைத்துக் கொ ண்டு, அப்போலோ ஹாஸ்பிடலுக்கு வந்து ‘ரிஸப்ஷனில்’ தன்னை அறிமுக படுத்தி கொண்டார். அங் கே அழுதுக் கொண்டு இருந்த யூனியன் தலைவர்கள் ‘ICU’ டாகடர் சொன்ன பூரா விவரத்தை ‘மா னேஜிங்க் டைரக்டர்.‘அக்கவுண்ட்ஸ் ஆபீசர்’ ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லி அழுதார்கள். யூனியன் தலைவர்கள் சொன்ன சமாசாரத்தை கேட்ட ‘மானேஜிங்க் டைரக்டருக்கும், ‘அக்கவுண்ட்ஸ் ஆபீசருக்கும்’ ‘ஷாக்காக’ இருந்தது.மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு ’மானேஜிங்க் டைரக்டர்’ உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் பையன் வைத்திய செலவை தான் கொடுப்பதாக சொன்னார். உடனே ‘அக்கவுண்ட்ஸ் ஆபீசர்’ ‘ரிசப்ஷனில்’ இருந்த மேடம் கேட்ட தொகைக்கு ஒரு ‘செக்’ எழுதி க் கொடுத்தார்.

’தன் முதலாளியின் குடும்பத்தில் இப்படி மூன்று பேர் அநியாயமாக இறந்து விட்டார்களே.ஒரு பையன் மட்டும் உயிருக்கு போராடி வருறானே,இந்த கம்பனியை நாம இனிமே எப்படி நடததி வரப் போறோம்,யாரிடம் நாம் மாதாந்திர வரவு கணக்கை எல்லாம் சொல்லி வரப் போறோம்’ என்று நினை க்கும் போது ‘மேனேஜிங்க டைரக்டருக்கு’ மயக்கமே வந்து விட்டது.தன் பெரிய சா£ரத்தைப் போட்டுக் கொண்டு ‘தொப்’ பென்று உட்கார்ந்து விட்டார் அந்த ‘மேனேஜிங்க டைரக்டர்’.அவர் அப்படி உட்கார் ந்ததை பார்த்த ‘அக்கவுண்ட்ஸ் ஆபீஸருக்கு’ கையும் ஓட வில்லை,காலும் ஓடவில்லை. தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவர் முகத்தில் தெளித்தார். கொஞ்ச நேரத்தில் அவர் கண்களை விழித்து பார்த்தார்.‘அக்கவுண்ட்ஸ் ஆபீசருக்கு’ கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.ஏகநாதன் ‘ரிசப்ஷனுக்கு போய் “நான் இறந்து போனவருக்கு தம்பி. அவங்க’ பாடிகளை’ எல்லாம் என் கிட்டே குடுத்தா,நான் அவங்களுக்கு ‘ஈமக்கிரியைகளை’ முடிக்க சௌகா¢ய மா இருக்கும்” என்று கேட்டார்.இதைக் கேட்ட ‘மேனேஜிங்க் டைரக்டர்’ உத்தரவு கொடுக்கவே ‘அக்க வுண்ட்ஸ் ஆபீசர்’ ‘ரிஸப்ஷனில்’ சொன்ன ‘பேமண்டை’ கட்டி,’மார்சுவரி’யிலே இருந்து இறந்து போ ன நாலு ‘பாடிகளையும்’ வாங்கி ஏகநானிடம் ஒப்படைத்தார்.ஏகநாதன் டிரைவர் ரவியின் ‘பாடியை, அழுதுக் கொண்டு பெண்மனியிடம் ஒப்படைத்தார்.அந்த பெண்மணி அந்த ‘பாடி¨யை’ வாங்கி கொ ண்டு போய் விட்டாள்.ஏகநாதன் தன் அண்ணன்,அண்ணீ,ஒரு பிள்ளை உடம்பில் போட்டு இருந்த எல்லா நகைகளையும் கழட்டி கமலாவிடம் கொடுத்து ஜாக்கிறதையாக வைத்துக் கொள்ள சொன்னார். அவளை வீட்டுக்குப் போக சொல்லி விட்டு ஏகநாதன் மூவருக்கும் எல்லாம் ‘ஈமக்கிரியைகளை’ முடி த்து விட்டு வீட்டுக்கு போனார்.

‘மேனேஜிங்க டைரக்டர்’ தினமும் ‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’ போன் பண்ணி I.C.U.வில் இருக்கும் டாகடருக்கு போன் பண்ணி ‘பையனின் ‘கோமா’ கலைந்து விட்டதா,இப்போ எப்படி இரு க்கார்’ என்று கேட்டு வந்தார்.அங்கு இருந்த டாக்டர்கள் ‘அவர் இன்னும் கோமாவிலே தான் இருக்கார்’ என்று சொல்லி விடவே அவர் “சார்,அவர் கோமாவில் இருந்து வெளியே வந்தவுடன் எனக்குத் தயவு செஞ்சி போன் பண்ணுங்க,நான் வந்துப் பார்க்கிறேன்.நான் தினமும் உங்களை ‘டிஸ்டர்ப்’ பண்ண விரும்பலே.என் செல் நம்பர் 9787678992.’தாங்க் யூ வொ¢ மச்’ “என்று சொன்னதும், அந்த டாக்டர் “ஓ கே சார்.அவர் கோமாவில் இருந்து வெளியே வந்து பேச ஆரம்பிச்சதும் நான் உங்களுக்கு போன் பண்றேன்” என்று சொல்லி விட்டு போனை ‘கட்’ பண்ணினார்.ஏகநாதனும் டாக்டருக்கு அடிக்கடி ’போன்’ பண்ணீ ‘பையன் மயக்கம் தெளிஞ்சு விட்டதா’ என்று கேட்டு கொண்டே இருந்தார்.

‘I.C.U.வில் ஆறு நாட்களாகக் கண்ணை முழிக்காமல் படுத்து இருந்த ரமேஷ் அன்று தான் லேசாக தன் கண்களை மெல்ல திறந்து பார்த்தான்.அவன் உடம்பு பூராவும் கட்டுப் போட்டு இருந் தார்கள்.அவன் கண் விழித்து லேசாக முனகுவதைக் கேட்ட அங்கு இருந்த நர்ஸ் வேகமாக வந்து டியூட்டி டாக்டா¢டம் விஷயத்தைச் சொன்னாள்.டாக்டர் அந்த நர்ஸிடம் ரமேஷ¤க்கு வாயில் கொஞ்சம் ஆகாரம் தரும்படி சொன்னார்.அந்த நர்ஸ¤ம் ரமேஷ¤க்கு வாயில் கொஞ்சம் ஆகாரம் கொடுத்தாள். ரமேஷ் அந்த ஆகாரத்தை மெல்ல சாப்பிட்டான்.அவன் மறுபடியும் கண்ணை மூடிக் கொண்டு விட் டான்.ஒரு மணி நேரம் கழித்து ரமேஷ் மெல்ல கண்ணை திறந்துப் பார்த்தான்.‘டியூட்டி நர்ஸ்’ உடனே ஓடி வந்து டாக்டா¢டம் சொன்னாள்.டியூட்டி டாக்டர் ரமேஷிடம் வந்து “தம்பி,இப்போ எப்படி ’பீல்’ பண்றீங்க” என்று கேட்டார்.ரமேஷ் வெறுமனே லேசாக சிரித்தான். டாக்டர் அவனைத் தட்டி குடுத்து “கவலைப்படாதீங்க.நீங்க சீக்கிரம் குணமாகி விடுவீங்க” என்று சொல்லி ரமேஷை குஷி படுத்த எண் ணினார். ரமேஷ் அதற்கும் மெல்ல சிரித்தான்.

சற்று நேரம் கழித்து அந்த டாகடர் ”தம்பி, நீங்க கண் விழிச்சு கொஞ்சம் நார்மலா ஆனப் பிறகு நான் சொல்லலாம்ன்னு இருந்தேன்.அந்த கோர கார் விபத்து நடந்த இடத்தில் நீங்க ஐஞ்சு பேரும் மிகவும் அதிகமாக அடிப்பட்டு இருந்தீங்க.அந்த வழியா கார்லே வந்துக் கொண்டு இருந்த யாரோ ஒரு நல்லவர் தன் காரை நிறுத்தி ‘ஹைவே ஆம்புலன்ஸ்’க்கு ‘போன்’ பண்ணி அவர்களை வர சொ ல்லி இருக்கார்.அந்த ‘ஹை வே ஆம்புலன்ஸ்’காரங்க உங்க ஐஞ்சு பேரையும் எங்க ஹாஸ்பிடல்லே கொண்டு வந்து சேத்தாங்க.’எமர்ஜென்ஸியில்’ இருந்த டாக்டருங்க ‘செக் அப்’ பண்ணி பாத்தலே, உங்க அப்பா,உங்க அம்மா,ஒரு வயசு பையன்,கார் டிரைவர் நாலு பேரும் இறந்து விட்டதா சொல்லி, உங்களே I.C.U.க்கு அனுப்பி இருக்காங்க.’ஐ ஆம் வொ¢ ஸாரி டு ஸே திஸ் பாட் நியூஸ் டு யூ’.இங்கே நாங்க ‘பர்தர் எக்ஸாமினேஷன்’ பண்ண பிறகு,உங்க வலது கால் முழங்கால் எலும்புகள் ரொம்ப நொ றுங்கி இருந்ததால்,வேறு வழி இல்லாம உங்க வலது காலை முட்டிக்கு கீழே ‘ஆம்புடேட்’ பண்ணி, உங்க காலை எடுத்துட்டோம்.‘பை டூயிங்க் ஸோ வீ குட் ஸேவ் யுவர் லைப்’.’வீ ஹோப் யூ வில் பி பைன் சூன்’”என்று வருத்தத்தோடு சொல்லி விட்டு நின்றுக் கொண்டு இருந்தார்.டாக்டர் சொன் னதை கேட்டு ரமேஷ் அழுதுக் கொண்டு இருந்தான்.

கொஞ்ச நேரம் ஆனதும் அந்த டாக்டர் “உங்க ‘ஆக்ஸிடென்ட்’ விஷயம் கேள்விப் பட்டு யாரோ ஒரு பெரியவரும்,அவர் மனைவியும் இங்கே வந்து இருந்தாங்க.அந்தப் பெரியவர் உங்க அப்பா கூடப் பொறந்தவர்ன்னு சொல்லி தன்னை அறிமுகம் பண்ணி கிட்டு ‘மார்ச்சுவரிலே’ இருந்து உங்க அப்பா, அம்மா,உங்க பிரதர்,இவங்க மூனு பேருடைய ‘பாடியையும்’வாங்கி கிட்டு போய் ஈமக் காரியங்களே செ ஞ்சாரு.நீங்க ‘கோமாலே’ இருந்தாலே,அப்புறமா வந்து பாக்கறோம்ன்னு சொல்லிட்டுப் போனாங்க” என்று சொன்னார் டாக்டர்.அவர் சொன்னத்தைக் கேட்டு ரமேஷ் குலுங்கி குலுங்கி அழுதான்.

அவன் அப்படி அழுவதைப் பார்த்த அங்கு இருந்த டியூட்டி நர்ஸ் “நீங்க இப்போ ரொம்ப அழக்கூடாது.உங்க உடம்பு ரொம்ப ’வீக்கா’ இருக்கு. உங்களுக்கு நாங்க நிறைய ‘ஆண்டிபயாடிக்ஸ்’ குடுத் து இருக்கோம்.நீங்க நல்ல ‘ரெஸ்ட்’ எடுத்து வரணும்” என்று சொன்னாள்.ரமேஷ் தன் விதியை நினை த்து ‘நாம இப்படி அனாதையா ஆயிட்டோமே’ என்று எண்ணி வருத்த பட்டுக் கொண்டு பெட்டில் படு த்து கொண்டு இருந்தான்.சற்று நேரத்திற்கு பிறகு ரமேஷ் ‘இத்தனை வருஷம் கழிச்சி நம் சித்தப்பா வும் சித்தியும் இங்கே வந்து இருந்தாளா பரவாயில்லையே.அது வரை நம் அப்பா, அம்மா,அண்ணன் இவா மூணு பேரும் அனாதையா ஆகி, ‘யாரோ’ ஈம காரியங்களை’ பண்ணாம,நம் அப்பா கூட பிறந்த வரே செஞ்சாரே’ என்று நினைத்து சந்தோஷப் பட்டான்.அவன் மனம் எண்ணமிடத் தொடங்கியது.

‘அந்த கார் விபத்லெ அப்பா,அம்மா,சுரேஷ்,மூனு பேரும் செத்து போயிட்டா.கடவுள் என்னை யும் அவாளோடவே சாகடிக்காம ஏன் விட்டு வச்சார்.அவா மூனு பேரும் போன பிறகு நான் மட்டும் இந்த உலகத்லே இருந்துண்டு வந்து என்ன பண்ண போகிறேன்.நான் ஏன் உயிரோடு இருக்கணும். உயிரோடு இருந்து நான் என்ன பண்ணப் போறேன்.’அப்பா,அம்மா,சுரேஷ் மூனு பேரும் உயிரோடு இருக்கும் போது நல்ல,தூய வாழ்க்கையை வாழ்ந்து வந்தா.ஆனால் நானோ எல்லா கெட்ட பழக்கதோ டும்,வாழ்ந்துண்டு வந்து இருக்கேன்.என்னிடம் ஒரு நல்ல வழக்கமும் இல்லையே.நான் அந்த அப் பாவி பொண்ணு லதாவுக்கும்,அவ அம்மாவுக்கும் மயக்க மருந்து மூக்கிலே காட்டி,ரெண்டு பெருக்கும் மயக்கம் வர வழைச்சு,லதாவை ‘கெடுத்தேனே’.இப்போ அந்த கன்னி பொண்ணு கர்ப்பமாகி விட்டு இருக்கா.அவ வாழ்க்கையை ‘நரமாக்கி’ விட்டேனே.நான் ஒரு பாவி. மன்னிக்க கூடாத ஒரு கொடிய பாவி.நான் செஞ்ச அந்த பாவத்துக்கு எல்லாம் நான் இந்த உலகத்தில் இருந்து வந்து என்னவெல்லாம் கஷ்டபட போறேனோ.இப்போ ஒரு கால் போய் நொண்டியாகி இருக்கேன்.நான் இன்னும் என்ன என் ன கஷ்டங்கள் எல்லாம் அனுபவிச்சு வரப் போறேனோ.எவ்வளவு பணம் நம்ம கிட்டே இருந்து என்ன் பிரயோஜனம்.என் கிட்டே இப்போ நிம்மதி இல்லையே’ என்று எண்ணியவாரே அவன் கண்களில் கண்ணீர் வழிய அழுது கொண்டு இருந்தான்.

கொஞ்ச நேரம் ஆனதும் ‘இந்த நிமிஷத்லே இருந்து ஏன் நாமும் சுரேஷை போல நல்ல குணங் களோட,ஒரு நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்து வர கூடாது’ என்று எண்ணினான்.’இனி தன் பேரை யார் கேட்டாலும் ‘சுரேஷ்’ ன்னு சொல்லணும்.நான் இன்னிலே இருந்து சுரேஷ் வாழ்ந்து வந்தது போல,ஒரு தூய வாழக்கை வாழ்ந்துண்டு வரப் போறேன்.நிறைய சுவாமி கோவில்களுக்கு எல்லாம் போய் வந்து,தினமும் ரெண்டு வேளையும் ஆத்தில் நிறைய சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி வர போறேன்.ஒரு நல்ல மனிதனாக மாறி,மீதி வாழ் நாட்களை கழிக்க முடிவு பண்ணி இருக்கேன்.சுரேஷ் தினமும் படித்து வந்த பல மத சான்றோர்,ஆன்மீக பெருமக்கள் எழுதிய புஸ்தகங்கள்,விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர்,சேஷாத்திரி சுவாமிகள் எழுதிய புஸ்தகங்கள்,கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்,பகவத் கீதை,தெய்வத்தின் குரல்,கந்த ஷஷ்டி கவசம் வினாயகர் அந்தாதி,ஸ்லோகங் கள் எல்லாம் படித்து வர போறேன்’ என்று முடிவு பண்ணிணான்.

’ரமேஷ் மயக்கம் இப்போ முழுக்க போய் அவன் நார்மலா இருந்து வருகிறான்’ என்று கேள்வி பட்டதும் ‘மேனேஜிங்க டைரக்டர்’ ‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’ வந்து, I.C.U க்குள் வந்து ரமேஷ் இருக்கும் ‘பெட்’ முன்னால் நின்றார்.’மேனேஜிங்க் டைரக்டர்’ ரமேஷைப் பார்த்ததும் கைகூப்பி வணக் கம் சொன்னார்.ரமேஷ¤ம் அவருக்கு பதில் வணக்கம் பண்ணினான்.பிறகு அவர் ரமேஷைப் பார்த்து “உங்க அப்பா,அம்மா,சுரேஷ் மூனு பேரும் ‘ஆக்ஸிடெண்ட்டில்’ இறந்ததுக்கு,உங்களுக்கு நான் என் ன ஆறுதல் சொன்னாலும்,அந்த துக்கம் போகாது.அந்த ‘லாஸ்’ ஒரு ஈடு கட்ட முடியாத ‘லாஸ்’. பக வான் தான் உங்களுக்கு இந்த துக்கத்தை தாங்கிண்டு வர நல்ல ¨தா¢யம் தரணும்.இப்ப எப்படி ‘பீல்’ பன்றீங்க”என்று கேட்டார்.ரமேஷ் மிகவும் மெதுவாக “நவ் ஐ ஆம் இம்ப்ரூவிங்க்” என்று தட்டுத் தடு மாறிச் சொன்னான்.கொஞ்ச நேரம் அவர் இருந்து விட்டு I.C.Uவிட்டு வெளியே வந்தார்.ஏகநாதன், கமலாவையும் அழைத்துக் கொண்டு ‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’ வந்தார். I.C.U டாக்டா¢டம் “சார், நாங்க சிகிச்சை பெற்று வரும் பையனின் சித்தப்பா சித்தி.அவன் உயிருக்கு ஆபத்து இல்லையே”என் று கேட்டார்.டாக்டர் “அவர்,உயிருக்கு இப்போ ஒரு ஆபத்தும் இல்லே.ஆனா நாங்க அவர் வலது கா லை ‘ஆம்புடேட்’ பண்ணி அவர் ‘லைபை’ ‘சேவ்’ பண்ணி இருக்கோம்”என்று சொன்னார்.

தன் சித்தப்பாவையும் சித்தியையும் பார்த்ததும் ரமேஷ¤க்கு சந்தோஷமாய் இருந்தது. “இப்போ எப்படி இருக்கேப்பா.நான் ரெண்டு தடவையா உன்னை பார்க்க வந்தேன்.அந்த ரெண்டு தடவையும் நீ மயக்கமா இருந்தே” என்று சொன்னார் ஏகநாதன்.”சித்தப்பா,உங்க ரெண்டு பேருக்கும் நான் எப்படி என் நன்றியைத் தெரிவிக்கப் போகிறேன்னே எனக்குத் தெரியலேநீங்க ரெண்டு பேரும் ரொம்ப பெரிய மனசு உள்ளவா.உங்க நல்ல மனசு யாருக்கும் வராது.என் அப்பா,என் அம்மா,என் கூடப் பிறந்தவன், மூனு பேருக்கும் நீங்க எல்லா ‘காரியமும்’ பண்ணீங்கன்னு இங்கே இருக்கும் டாக்டர் என் கீட்டே சொன்னார்.இதற்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன்” என்று சொல்லி சித்தப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு வருத்தப் பட்டான் ரமேஷ்.அவன் கண்களில் கண்ணீர் துளித்தது. கண்களை துடைத்துக் கொண்டான் ரமேஷ்.ஏகநாதன் கமலா கையில் இருந்து நகை பெட்டியை வாங்கி ”இந்தாப்பா,இந்த நகைகளை எல்லாம்,உங்க அம்மா,அப்பா, உன் கூட பொறந்தவன் இறந்து போன போது போட்டு கொண்டு இருதந்து.நான் அவைகளை கழட்டி எடுத்து வச்சிண்டேன்.இந்தா அந்த நகை பெட்டி”என்று சொல்லி நகைப் பெட்டியை ரமேஷ் கையில் கொடுத்தார் ஏகநாதன்.கண்க ளில் கண்ணீர் மல்க ரமேஷ்,அந்த நகைப் பெட்டியை வாங்கிக் கொண்டான்.கொஞ்ச நேரம் இருந்து விட்டு ஏகநானும் கமலாவும் ICU வை விட்டு வெளியெ வந்தார்கள்.’ நம்ம அண்ணா குடும்பத்திலே இந்த ஒரு பையனாவது இன்னைக்கு உயிரோடு இருக்கான்.அண்ணா,மன்னி, சுரேஷ்,மூனு பேரும் போட்டுண்டு இருந்த நகைகளை அவன் கிட்டே குடுக்க முடிஞ்சதே’ என்று சொல்லி பகவானுக்கு தன் நன்றிகளை சொன்னார் ஏகநாதன்.கமலாவும்.

மேகநாதன் குடும்பத்துக்கு ஆன விபத்தைக் கேள்விப் பட்ட ரமேஷ் நண்பர்களும்,வரதனும் அவனை ஹாஸ்பிடலில் பார்த்து ‘அவன் சீக்கிரமா குணம் அடைத்து வீட்டுக்கு வர’ ஆண்டவனை வேண்டிக் கொண்டு வருவதாக சொல்லி விட்டுப் போனார்கள்.

அவர்கள் போனதும் ரமேஷ் சித்தப்பா கொடுத்து விட்ட நகைப் பெட்டியை திறந்துப் பார்த்தான். அப்பா,அம்மா,சுரேஷ் போட்டு இருந்த நகைகளை பார்த்ததும் அவனுக்கு இன்னும் அழுகை வந்தது அவன் அந்த அழுகையை மெல்ல அடக்கிக் கொண்டான்.சித்தப்பாவும்,சித்தியும் தன்னை பார்த்து விட்டு போனதை எண்ணி சந்தோஷப் பட்டான் ரமேஷ்.தூங்கப் போகும் முன் ரமேஷ் ”நர்ஸ் நான் ‘டிஸ்சார்ஜ்’ ஆக இன்னும் எவ்வளவு நாளாகும்”என்று ஒரு குழந்தையைப் போல் கேட்டான்.அந்த நர்ஸ் மெல்ல சிரித்துக் கொண்டே”குறைஞ்சது இன்னும் ரெண்டு மாசமாவது ஆகுங்க” என்று சொல்லி விட்டு போய் விட்டாள்.’அட கடவுளே,நான் இன்னும் இந்த ஹாஸ்பிடல்லே இன்னும் ரெண்டு மாசம் இருந்து ஆகணுமே’ என்று எண்ணினான் அவனுக்கு அழுகையே வந்து விட்டது.கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து கண் முழுத்ததான் ரமேஷ்.கொஞ்ச நேரம் ‘எதிரில் இருந்த டீ.வீ. யைப் பார்க்கலாம்’ என்று நினைத்து எதிரே இருந்த டீ.வீயை ‘ஆன்’ பண்ணினான் ரமேஷ்.தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் ஒரு பாட்டு ஒலித்துக் கொண்டு இருந்தது.அவன் அதிலே வந்துக் கொண்டு இருந்த பாட்டுகளை கேட்டான். டீ.வீ.யில் அது அவனுக்கு ரொம்ப பிடித்த ‘ப்ரோக்ராம்’.

ஒரு மாதம் ஆகியது.ரமேஷ் முகத்தில் போட்டு இருந்த மாவு ‘பான்டேஜை’ எல்லாம் எடுத்து வி ட்டு டாக்டர் ரமேஷ் முகத்தை ‘எக்ஸ்ரே’ எடுத்துப் பார்த்தார்.அவன் தாடை எலும்பு எல்லாம் நன் றாக சேர்ந்து இருந்தது.டாக்டர் சந்தோஷத்துடன் “கங்கிராட்ஸ் மிஸ்டர் சுரேஷ், உங்க தாடை எலும்பு எல்லாம் நல்லா சேர்ந்திடுச்சி.இப்போ நீங்க வாயை நல்லா திறந்து உணவை மென்னு சாப்பிட்டு வர லாம்”என்று சொல்லி விட்டு டாக்டர் சொல்லி விட்டு போனார்.ரமேஷ் சந்தோஷப் பட்டான்.ரமேஷ¤க் கு மூன்று மாத சிகிச்சை முடிந்தது.அவன் இப்போது நார்மலாக இருந்து வந்தான். டாக்டர் அவனை ‘வீல் சேரில்’ இங்கும் அங்கும் போக வைத்து அவன் கண்டிஷனை ‘அப்சர்வ்’ பண்ணி வந்தார்.அவனு க்கு மத்த எல்லா அவயங்களும் நன்றாக வேலை செய்து வந்தது.ஒரு வாரம் கழித்து டாக்டர் “மிஸ்டர் சுரேஷ், நீங்க இப்ப ‘பர்பக்ட்’ நார்மலுக்கு வந்து விட்டீங்க.நீங்க வேறுமனே நான் எழுதிக் கொடுக்கும் ‘வைட்டமின்’ மாத்திரைகள சாப்பிட்டு வந்து நல்ல ‘ஹெல்தியான’ சாப்பாடு சாப்பிட்டு வந்தா போதும்.’யூ வி பி ஆல் ரைட் வொ¢ சூன்’” என்று சொன்னார்.உடனே “என்னை எப்போ நீங்க ‘டிஸ்சார்ஜ்’ பண்ணப் போறீங்க டாக்டர்” என்று கேட்டான் ரமேஷ்.“நான் உங்களை இன்னும் ஒரு நாளைக்கு வச்சு கிட்டு நாளன்னிக்கு காத்தாலே ‘டிஸ்சார்ஜ்’ பண்ணலாம் என்று இருக்கேன்” என்று சொன்னார் அந்த டாக்டர்.உடனே ரமேஷ் தன் ‘அக்கவுண்ட்ஸ் ஆபீஸைரையும்,‘மானேஜிங்க் டைரக் டரையும்’ ரெண்டு நாள் கழித்து காலையில் ‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’ வர சொல்லி,தன் வைத்தி யத்திற்கு என்ன செலவு ஆயிற்று என்று கேட்டு அந்த ‘பேமண்டை’ பண்ண சொன்னான்.ரெண்டு நாள் கழித்து ரமேஷ ‘டிஸ்சார்ஜ்’ பண்ணினார் டாக்டர். ‘அக்கவுண்ட்ஸ் ஆபீஸரும்’ ‘மானேஜிங்க் டைரக்டரும்’ ‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’ வந்து டாக்டரை மிகவும் ‘தாங்க்’ பண்ணி விட்டு, ரமேஷ் வைத்தியத்திற்கு செலவு என்ன ஆச்சு என்று விசாரித்து,அதற்கு ‘அக்கவுண்ட் ஆபீஸர்’ ஒரு ‘செக் கை’ கொடுத்தார்.பிறகு அவர்கள் ரமேஷிடம்,டாகடரிடமும் சொல்லிக் கொண்டு ’பாக்டரிக்குக் போனார்கள்.

ரமேஷ் ‘டிஸ்சார்ஜ்’ பண்ணின டாக்டர் ரமேஷை பார்த்து “நான் உங்களை இன்னைக்கு ‘டிஸ் சார்ஜ்’ பண்ணி விடறேன்.நீங்க வீட்டுக்குப் போய் ரெண்டு வாரம் கழித்து மறுபடியும் இங்கே ‘செக் அப்’ க்கு வாங்க.அப்போ நான் உங்களை ‘செக் அப்’ பண்ணி விட்டு உங்களுக்கு ‘ஆர்டிபிஷியல் லெ க்கு’க்கு நாங்க அளவு எடுத்து ஆர்டர் பண்ணி,உங்களுக்கு வரவழைத்து தறேன்.கூடவே அக்குளில் வைத்துக் கொள்ளும் கட்டையைத் தறேன்.இவை ரெண்டையும் தான் நீங்க ‘லைப் லாங்க்’ ‘யூஸ்’ பண்ணி நடக்க வேணும்”என்று சொன்னார் அவர்.ரமேஷ¤க்கு ரொம்ப வருத்தமாய் இருந்த்து. அவன் மனதுக்குள் அழுதான்.இருந்தாலும் அந்த வருத்தத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் மெல்ல சிரி த்தான் ரமேஷ்.டாக்டர் வெளியே போனதும் ’இனி நம் வாழ்க்கைலே என்ன இருக்கு.கல்யாணம் பண் ணிக் கொள்ளும் ஆசையே நமக்கு இல்லையே.தவிர என்னை இந்த ‘கோலத்தில்’ எந்த இளம் பெண் ணும் விரும்ப மாட்டாளே.லதாவை அந்த மாதிரி ‘வஞ்சகமாக’க் கெடுத்த பிறகு வேறு எந்த பெண் ணையும் பார்க்கவோ,நம் வாழ்க்கைலே நம்ம கூட வச்சுண்டு வாழ்ந்து வரும் எண்ணமோ நமக்கு துளி கூட இல்லையே.கடவுள் நமக்கு எத்தனை வருஷம் இந்த உலகத்லே வாழ்ந்து வர வேணும்ன்னு தலை லே எழுதி இருக்கானோ,அத்தனை வருஷம் நாம இப்படி தனியாவே வாழ்ந்து வந்து, நிறைய ஏழைக ளுக்கு நல்லது செஞ்சுண்டு வந்து,நம்ம காலம் முடிஞ்சதும் நாம நிம்மதியாக கண்ணை மூட வேணும்’ என்று நினைத்தான்.

‘ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸ்ஸில்’ ஒரு ‘வீல் சேரில்’ ஏறிக் கொண்டு தன் பங்களாவுக்கு வந்தான். ‘வீல் சேருடன்’ பங்களாவுக்குள்ளே வந்தான்.உடனே எல்லா தோட்டகாரர்களும், வேலைக்காரர்களும், ,கூர்க்கா ராம் சிம்கும்,ஓடி வந்து ரமேஷ்க்கு கும்பிடு போட்டார்கள்.அவர்கள் எல்லோரும் வாயைப் பொத்தி கொண்டு அழுது கொண்டு இருந்தார்கள்.எல்லோரையும் ரமேஷ் மேலே கீழே ஏற இறங்க பார்த்தான்.எல்லோரும் ரெண்டு கால்களில் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.எல்லா வேலைகாரர்களும், தோட்டக்காரர்களும்,கூக்காவும் வாயை பொத்தி கொண்டு அழுதார்கள்.ரமேஷ் அவர்களை பார்த்து “அழாதீங்க.உங்க முதலாளி குடும்பத்லே மூனு பேரை கடவுள் அழைச்சுகிட்டாரு.நான் ஒருத்தன் தான் உயிரோடு இருக்கேன்.உங்க முதலாளிக்கு இனிமே ஒரு கால் தான்.மூனு பேரை எடுத்துகிட்ட கடவுள் போதாதுன்னு என் ஒரு காலையும் எடுத்துக்கிட் டாரு.இனிமே உங்க முதலாளி ஒரு கால்லே தான் நடந்து வருவாரு”என்று சொல்லி விட்டு மெல்ல சோபாவில் உட்கார்ந்துக் கொண்டான்.

அம்மா அப்பா சுரேஷோடு அவன் பெங்களுர் கிளம்பிப் போனதில் இருந்து இப்போ நடந்த வரை தன் கண் முன்னால் கொண்டு வந்தான்.எத்தனையோ வருஷங்கள் ஆனது போல் இருந்தது அவனுக்கு.’அப்பா,அம்மா,சுரேஷ் மூனு பேரும் வாழ்ந்து வந்த இந்த பங்களாலே இந்த மாதிரி ஒரு தனி மரமா,ஒரு கால் இழந்து,காலம் பூராவும் உயிர் வாழ்ந்து வர போறோம்’ என்று கனவிலும் நான் நினைக்கலையே.இதை எண்ணும் போது அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.தன் பாக்கெட்டில் இருந்து கை குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் ரமேஷ்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *