தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 6,676 
 
 

அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13

’இந்த ‘நர்ஸிங்க் ஹோம்’லே ஒரு பிரசவத்துக்கு, இவ்வளவு பணம் செலவு ஆறதே.நம்மால் இவ்வளவு பணம் குடுத்து பிரசவம் பாத்தே இருக்க முடியாதே’என்று நினைக்கும் போது‘அடுத்த ஜென்மத்திலாவது நான் ஒரு பணக்கார குடும்பத்திலே பொறக்கணும்’என்று கடவுளை வேண்டிக் கொண்டாள் லதா.

‘பணக்காரா ஆத்லே இப்படித் தான் தினமும் எல்லாம் மாத்திக் கொண்டு படுத்துப்பாளோ என் னவோ நம்ம வீட்டில் நம் தலையணை உறையை நமக்கு புத்தி தொ¢ஞ்ச நாள்ளே இருந்து நாம மாத் தினதே இல்லையே.அவள் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருக்கும் போது அந்த நர்ஸ் தும்பப்பூ போல வெள்ளைத் துணிகளை போட்டு,தலையணை உறைக்கும் வெள்ளையா இருக்கும் உறையையு ம் மாற்றி விட்டு,ரூம் பூரா மணத்தை மயக்கும் வாசனை வர எதோ ஒரு டப்பாவில் இருந்து ‘சென்ட் டை அமுக்கி விட்டாள்.ரூம் பூரவும் அந்த மயக்கும் வாசனை பரவிக் கொண்டு இருந்தது.கொஞ்ச நேரம் கழித்து ஒரு நர்ஸ் லதாவுக்கு குடிக்க நல்ல ‘ஸ்ட்ராங்கா’ காப்பியும் பிஸ்க்கெட்டும் கொடுத்தாள். “அம்மா நீங்க மறுபடியும் ‘பெட்டிலே’ ஏறி படுத்துக்குங்க.பிள்ளை பெத்த உடம்பு.நீங்க ரொம்ப நேரம் உக்காந்துக் கிட்டு வரக் கூடாதுங்க” என்று சொன்னாள்.”சரிங்க,நான் ஏறிப் படுத்துக் கொள்றேங்க” என்று சொல்லி விட்டு லதா மெல்ல அங்கு போட்டிருந்த மர படிக்கட்டிலில் காலை வைத்து பெட்டில் ஏறிப் படுத்தாள்.பூக்கள் மேலே படுப்பது போல இருந்தது அவளுக்கு.

கொஞ்ச நேரம் லதாவுடன் இருந்து விட்டு “லதா,நான் ஆத்துக்குப் போய் வறேன்.நீ ஜாக்கிற தையா இருந்துண்டு,குழந்தையையும் ஜாக்கிறதையா பாத்துண்டு வா” என்று சொல்லி விட்டு கிளம்ப தயாரானாள்.லதா “அம்மா,இத்தனை வருஷத்துக்கு அப்புறமா,நீ தனியா இருக்கப் போறே.ஜாக்கற தையா இருந்துண்டு வாம்மா”என்று சொல்லி தன் கண்களை துடைத்து கொண்டாள்.தன் ‘போர்ஷனு’ க்கு வந்ததும் “லதா,குழந்தையோடசௌக்கியமா இருந்துண்டு வறா.ஒரு பெரிய காரியம் ஆயிடுத்து இனிமே அவளும் குழந்தையும் சௌக்கியமா இருந்து வர நீ அனுக்கிரஹம் பண்ணுங்கோ”என்று மன தில் வேண்டிக் கொண்டு ரெண்டு படத்துக்கும்,நமஸ்காரம் பண்ணினாள் காயத்திரி.
மூனு நாள் ஆனதும் காயத்திரியும்,லதாவும்,டாக்டர் சேகருக்கும்,நிர்மலாவுக்கும் தங்கள் நன்றி யை தொ¢வித்து கொண்டு,சாயங்காலம் ஏழு மணிக்கு,’நர்ஸிங்க் ஹோம் ஆம்புலன்ஸிலே’அவர்கள் ‘போர்ஷனு’க்கு வந்தார்கள்.வந்ததும் லதா தன அம்மாவை பார்த்து “அம்மா,அந்த ‘நர்ஸிங்க் ஹோம்’ சார்ஜுகளை கேட்டியா.அவ்வளவு பணம் குடுத்து நம்மால் இந்த பிரசவம் பண்ணிக் கொண்டு வந்து இருக்க முடியுமாம்மா”என்று கேட்டதும் காயத்திரி “ஆமாம் லதா,அந்த மாமி தன் தம்பிக்கு போன் பண்ணி நமக்கு இந்த உதவியை பண்ணீ இருக்கா.நான் நாளைக்கு முதல் வேலையா அவா ஆத்து க்குப் போனதும் அந்த மாமிக்கு ‘தாங்க்ஸை’ சொல்ல போறேன்”என்று சொன்னதும் லதா உடனே “ஆமாம்மா,நீ அவசியம் சொல்லும்மா.நானும் என் உடம்பு கொஞ்சம் தேறினதும்,அந்த மாமிக்கு என் ‘தாங்கஸை’ சொல்றேன்”என்று சொன்னாள்.அடுத்த நாள் காயத்திரி சமையல் வேலைக்கு வந்ததும் மாமியைப் பார்த்து “மாமி,உங்க புண்யத்தாலே உங்க தம்பி ‘நர்ஸிங்க் ஹோமிலே’ என் பொண்ணுக்கு பிரசவம் பாத்துண்டேன்.’ரொம்ப தங்க்ஸ்’ உங்களுக்கு.என் பொண்ணு உடம்பு கொஞ்சம் தேறினதும் அவளும் வந்து உங்களுக்கு ‘தாங்க்ஸ்’ சொல்றேன்னு சொன்னா” என்று தன் உடம்பை குறுக்கி கொ ண்டு சொன்னாள்.அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.காயத்திரி அதை துடைத்து கொண்டாள்.

உடனே அந்த மாமி “காயத்திரி மாமி, பதினோராவது நாள் அன்னைக்கு எங்க ஆத்து வாதியா ரை,உங்க ‘போர்ஷனு’க்கு வந்து ‘புன்யாவசனம்’ பண்ண சொல்லி இருக்கேன்.அவர் வந்து ‘புண்யா வசனம்’ பண்ணி விட்டு என் கிட்டே தக்ஷணை வாங்கிப்பார்.நீங்க ஒன்னும் அவருக்கு தர வேணாம். முதல் நாள் அன்னைக்கு சாயங்காலம் நீங்க லதா குழந்தைக்கு எங்க ஆத்லே தொட்டில் போடுங்கோ. .நாங்க நாலு பேரும் ரொம்ப ஆசைபடறோம்.உங்க பேரனுக்கு தொட்டில் போடற வேளை எங்காத்லே ஒரு குழந்தை பொறக்கணும்.என் பையனுக்கு கல்யாணம் ஆயி ஆறு வருஷம் ஆறது” என்று சொல்லி தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.உடனே காயத்திரி “நீங்க சொன்னபடியே நான் பண்றேன் உங்க நல்ல மனசுக்கு இந்த ஆத்லே இன்னும் ஒரு வருஷத்துக்குள்ளேயே ஒரு குழந்தை நிச்சியமா பொறக்கும்.உங்க நாலு பேருடைய நல்ல மனசுக்கும் அது நிச்சியமா நடக்கும்.நான் தினமும் சுவாமி யே வேண்டிண்டு வறேன்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்து கொண்டாள்.அன்று ராத்த்ரி யே ஆத்துக்கு வந்து மாமி சொன்ன நல்ல நியூஸை லதாவுக்கு சொன்னாள்.லதா மிகவும் சந்தோஷ பட்டு அம்மா,உன் பேரனுக்கு அதிர்ஷ் டம் இப்ப பிடிச்சே ஆரம்பிச்சு இருக்கு.அந்த ஆத்து மனுஷா நாலு பேரும் இவ்வளவு நல்லவளா இருக்காளே”என்று சொல்லி சந்தோஷப் பட்டாள்.

லதா குழந்தைக்கு பத்து நாளாவது அன்றிக்கு சாயந்திரம் மாமி ரெண்டு வேலைக்காரர்களை வைத்து கொண்டு அந்த ஹால் பூராவையும் காகித வலையங்களால் அலங்கா¢த்து இருந்தாள். தொட்டில் சுத்தி நிறைய பூக்களால அலங்காரம் பண்ணீ இருந்தாள்.நிறைய கலர் பலூன்களை கட்டி இருந்தாள்.ஹால் பூராவும் நல்ல வாசனையை ‘ஸ்ப்ரே’ பண்ணி இருந்தாள்.மொத்தத்தில் அந்த ஹால் கல்யாணகளை கட்டி இருந்தது.அந்த ஆத்துக்கு காயத்திரி,லதாவையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு வந்தார்கள்.இருவரும் அந்த ஹால் ஒரு கல்யாணகளை கட்டி இருந்ததைப் பார்த்து ஆச்சரி யப் பட்டார்கள்.அவர்கள் கண்களை அவர்களால் நம்பவே முடியவில்லை.’ஹாலையும்,தொட்டிலையும்’ இந்த மாமி இப்படி அலங்காரம் பண்ணி இருக்காளே.இவாத்து குழந்தைக்கு பண்ற மாதிரி பண்ணீ இருக்காளே’ என்று மலைத்து போய் நின்று கொண்டு இருந்தார்கள்.காயத்திரியையும்,லதாவையும் குழந்தையையும் பார்த்த மாமி “என்ன இப்படி மலைச்சுப் போய் நிக்கறேள்.உள்ளே வாங்கோ” என்று கூப்பிட்டதும் காயத்திரியும் லதாவும், தங்கள் சுய நினைவுக்கு வந்து ஆத்த்க்கு உள்ளே போனார்கள். லதா அந்த மாமியை பார்த்து ”மாமி, நீங்க உங்க தம்பிக்கு போன் பண்ணி எனக்கு அவர் ‘நர்ஸிங்க் ஹோமிலே ’ப்ரீயா பிரசவம் பண்ண ஏற்பாடு பண்ணேள்.உங்களுக்கு “ரொம்ப தாங்க்ஸ்’.எங்க அம்மா சம்பாதியத்லே எனக்கு இவ்வளவு பெரிய ‘நர்ஸிங்க் ஹோமிலே’ ப்ரீயா பிரசவம் பாத்தே இருக்க முடியாது” என்று தன் கண்களில் கண்ணீர் தளும்ப கைகளை கூப்பி சொன்னாள்.’எனக்கு ‘தாங்க்ஸ்’ எல் லாம் சொல்லாதே.ஏதோ என்னால் முடிஞ்சது.என் தம்பி கிட்டே சொன்னேன்.அவணும் பண்ணான். நீ இதை பத்தி எல்லாம் யோஜனை பண்ணாம,குழந்தையோட சந்தோஷமா இருந்துண்டு வா” என்று சிரித்து கொண்டே சொன்னாள் மாமி.

ஆத்துக்கு உள்ளே வந்த குமாரையும்,மாலாவையும் பார்த்து “என்ன இந்த கார்ட்டூன் பாக்ஸிலே” என்று கேட்டார்கள் மாமியும் மாமாவும்.“அது ஒன்னும் இல்லேம்மா.நாங்க வர வழிலே ‘நாயுடு ஹால்’ போய் லதா குழந்தை போட்டுக் கொள்ள ஒரு பத்து ‘டிரஸ்’ஸும்,பத்து ‘டைபரும்’ வாங்கி வந்து இரு க்கோம்.இந்த ‘டிரஸ்ஸெல்லாம்’ எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்கோ”என்று சொல்லி கார்ட்டூன் பாக்ஸ்ஸை திறந்து தான் வாங்கி வந்த குழந்தை ‘டிரஸ்களை’எடுத்து மாமியார் இடம் காட்டினாள் மா லா.“எல்லாம் ரொம்ப நன்னா மாலா”என்று மாமியாரும் மாமனாரும் மாலாவைப் புகழ்ந்தார்கள்.காயத்தி ரியும்,லதாவும்,மாலா வாங்கி வந்த ‘டிரஸ்களை’எல்லாம் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார்கள். மாலா “மாமி,லதாவை குழந்தைக்கு தினம் ஒரு ‘டிரஸ்ஸா’ போடச் சொல்லுங்கோ”என்று சொல்லி மொத்த ‘டிரஸ்களையும்’ காயத்திரியிடம் கொடுத்தான் மாலா.காயத்திரியும் லதாவும் “‘ரொம்ப ‘தாங்ஸ்’ எங்களு க்கு இத்தனை டிரஸ்களை வாங்கி குடுத்து இருக்கேளே.நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தொ¢யாம முழிக்கிறோம்” என்று தங்கள் கைகளை கூப்பி சொன்னார்கள் .நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா எங்காத்லே இருந்து வாங்கோ.அது போதும் எங்களுக்கு” என்று சொல்லி அவர்கள் கைகளை கீழே போட வைத்தாள் மாலா.லதாவும் காயத்திரியும் ”இவா நாலு பேரும் இவ்வள வு நல்லவாளா இருக்காளே”என்று நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் குமார் “மாமனார்,மாமியார் ரெண்டு பேரும் மாட்டுப் பொண்ணைப் புகழ்ந்தது போறும்.நான் மட்டும் என்ன் லேசா.நான் என்ன பண்ணி இருப்பேன் என்று ‘கெஸ்’ பண் ணுங்கோ பாக்கலாம்”என்று சொல்லி விட்டு அம்மா முகத்தையும் அப்பா முகத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தான்.இருவரும் ஒன்னும் புரியாம”நீ என்ன ‘சர்ப்ரைஸ்’ தரப்போறேடா” என்று ஒரே சமய த்லே கேட்டார்கள்.”ஒரு பத்து நிமிஷம் போகட்டும்.உங்களுக்கு புரியும்” என்று சொல்லி விட்டு ஆகாய த்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.பத்து நிமிஷம் ஆகி இருக்கும்.மூனு ஆட்கள் ரெண்டு பெரிய அலிமினிய டேபிளை ஹாலில் கொண்டு வந்து வைத்து விட்டு அதிலே அவர்கள் மூனு ‘கார்டூன் பாக்சை’த் திறந்து,அந்த டேபிள்கள் மேலே அவர்கள் கொண்டு வந்து இருந்த ‘எவர் சில்வர் ப்லேட்டு’ க¨ளை எல்லாம் வைத்து,அதிலே அவர்கள் கொண்டு வந்து இருந்த மூனு ஸ்வீட்,நிறைய சாப்பிட ‘ஐட்டங்களை’ எல்லாம் பரப்பி வைத்து விட்டு,காலி ‘கார்டூன் பாக்ஸ்களை’ எடுத்துக் கொண்டு வெளி யே போய் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.உடனே அந்த மாமாவும் மாமியும் “இது உன் ‘சர்ப்ரை ஸடா’.நாங்க ரெண்டு பேரும் இந்த ‘சர்ப்ரஸை’ எதிர் பார்க்கவே இல்லை குமார்.’போத் ஆப் யூ’ஹாவ் ப்லாண்டு வெரி வெல்’”என்று ஒரே நேரத்லே சந்தோஷமாக சொன்னார்கள்.

எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டு இருந்தார்கள் காயத்திரியும் லதாவும். ரெண்டு நிமிஷம் கூட ஆகி இருக்காது அந்த மாமா “நான் ஒன்னும் சளைச்சவன் இல்லே..”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அந்த மாமி “நீங்க என்ன பண்ண ‘சர்ப்ரைஸ்’தரப் போறேள்” என்று கேட்டதும்,அவர் உடனே “லதாவை தவிர மத்த எல்லாரும் அவா கண்களை கேட்டியா மூடி ண்டு இருங்க.நான் சொன்னது தான் தொறக்கணும்” என்று சொன்னதும் லதாவைத் தவிர மத்த எல் லாரும் தங்கள் கண்களை கெட்டியாக மூடிக் கொண்டு இருந்தார்கள்.அவர் மெதுவாக லதா பக்கத் திலே வந்து “லதா,இதை உன் குழந்தை கழுத்திலே மாட்டு”என்று ரகசியமாக சொல்லி ஒரு GRT ‘பாக்ஸை’ திறந்து,ஒரு சவரன்லே ஒரு செயினை எடுத்து கொடுத்தார்.லதா அந்த செயினை குழந்தை கழுத்திலே மாட்டி முடிஞ்ச பிறகு,அவர் “இப்போ எல்லாரும் கண்களை தொறக்கலாம்.குழந்தை கழுத் தைப் பாருங்கோ”என்று சொன்னதும் எல்லாரும் தங்கள் கண்க¨ளை திறந்து குழந்தை கழுத்தை பார்த்தார்கள்.உடனே மாமி “நான் உங்களே,என்னவோன்னு நினைச்சேன்,நீங்களும் எல்லாரையும் அசத்தி இருக்கேளே”என்று சொல்லி அவர் கையைக் குலுக்கினாள்.சந்தோஷத்தில் குமாரும் மாலா வும் அவர் கையை குலுக்கினார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் காயத்திரி அந்த மாமியைப் பார்த்து “மாமி,நீங்க தான் இங்கே இருக்கி றவாள்ளே பெரியவா.நீங்க லதா கையிலெ இருந்து குழந்தையை வாங்கி தொட்டிலிலே விடுங்கோ” என்று சொன்னாள்.“எல்லோரும் அது தான் சரி” என்று சொன்னதும் மாமி லதா கையிலே இருந்து குழந்தையை வாங்கி மெல்ல தொட்டிலிலே விட்டாள்.எல்லோரும் அவர்கள் கைகளை தட்டி,பலத்த கர கொஷம் செய்தார்கள்.”காயத்திரி மாமி,நீங்க மெல்ல தொட்டிலை ஆட்டி,ஒரு தாலாட்டுப் பாட்டு பாடு ங்க”என்று சொன்னாள் அந்த மாமி.காயத்திரி “மாமி,எனக்கு இந்த பாட்டெல்லாம் அவ்வளவா வராது. நான் சின்ன வயசிலே பாட்டு எல்லாம் கிரமமா கத்துக்கலே.ஆனா,நீங்க சொன்னேள்ன்னு நான் பாட றேன்.ரொம்ப சுமாரா தான் இருக்கும் நான் பாடறது” என்று சொல்லி விட்டு தான் சின்ன வயசிலே கே ட்ட ஒரு தாலாட்டு பாட்டை மெதுவாக பாடினாள்.காயத்திரி பாடி முடிச்சதும் எல்லோரும் கையை பலமாக தட்டினார்கள்.“மாமி,நீங்க ரொம்பநன்னா பாடினேள்” என்று சொல்லி மாமியும்,மாலாவும் காய த்திரியின் கையை குலுக்கி சொன்னார்கள்.மணி எட்டடித்ததும் எல்லோரும் சந்தோஷமாக ‘ஸ்வீட்டு களையும்’ மற்ற சாப்பாடு ஐட்டங்களை மிகவும் ரசித்து சாப்பிட்டார்கள்.எல்லோரும் சாப்பிட்டு முடிந்த தும்,காயத்திரியும்,லதாவும் ”மாமி,இந்த ஏழை சமையல்கார மாமியின் பேரனுக்கு தொட்டில் போடும் விழா இவ்வளவு விமா¢சையா நடக்கும்ன்னு, நாங்க ரெண்டு பேரும் எதிர் பார்க்கவே இல்லே.எங்க உட ம்பை செருப்பா தெச்சுப் போட்டாலும் அதுக்கு இணை ஆகாது” என்று கண்களீல் கண்ணீர் மல்க சொ ன்னார்கள்.உடனே மாமி “நீங்க எங்களுக்கு வாய்க்கு சுவையா சமைச்சு போட்டாலே போதும்.வேறே ஒன்னும் பண்ண வேணாம்”என்று சொன்னதும் மாமாவும் “அவ சொல்றது ரொம்ப சரி.நீங்க மூனு பே ரும் சந்தேஷமா இருந்து வாங்கோ”என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.காயத்திரியும் லதாவும் அவ ர்கள் நாலு பேருக்கும் ‘தாங்க்ஸ்’ சொல்லி விட்டு, குழந்தையை எடுத்து கொண்டு அவர்கள் ‘போர்ஷ’ னுக்கு வந்தார்கள்.

‘போபார்ஷ’னுக்கு வந்த லதா “அம்மா,நீ உண்மையா ரொம்ப நன்னா பாடினே” என்று சொல்லி அம்மாவின் கையை பிடிச்சி குலுக்கினாள்.காயத்திரிக்கு கண்களீல் கண்ணீர் முட்டியது.”லதா, நான் இந்த பாட்டை நீ பொறந்து உனக்கு தொட்டில் போடற போது பாடினது.அப்போ உன் அப்பா, என் அப்பா எல்லாம் இருந்து சந்தோஷப்பட்டா”என்று சொல்லி தன் கண்களை துடைத்து கொண்டாள். “அம்மா,அன்னைக்கு ஒரு நாள்,நீ குசேலர் குடும்பத்துக்கு அந்த கிருஷ்ண பகவான் எல்லா செல்வத் தையும் குடுத்தார்ன்னு சொன்னே,உனக்கு ஞாபகம் இருக்குன்னு நான் நினைக்கிறேன்.அது போல நீ தினமும் வேண்டிண்டு வர காமாக்ஷ¢ தான் அந்த மாமி ரூபத்லே,எனக்கு ‘ப்ரீயா’ பிரசவம்,குழந் தைக்கு விமா¢சையா தொட்டில் போடற விழா,நான் ரொம்ப ஆசைப் பட்ட பேரை,குழந்தைக்கு வக்கற து,’க்ராண்டான’ சாப்பாடு,அவா நாலு பேரும்,நம்ம ரெண்டு பேர் மேலேயும் வச்சு வர அபிமானமும், நிறைய சந்தோஷத்தையும் தந்து இருக்கான்னு எனக்கு படறது” என்று சொல்லி சுவற்றீல் தொங்கிக் கொண்டு இருந்த காமாக்ஷ¢ படத்துக்கு நமஸ்காரத்தை பண்ணினாள்.உடனே காயத்திரியும்”ஆமாம், லதா,நீ சொல்றது நூத்துக்கு நுறு உணமை,அவ ஆசீர்வாதம் தான் இது எல்லாம்” என்று சொன்னாள்.

அடுத்த நாள் சொன்னது போல வாத்தியார் காயத்திரி போர்ஷனுக்கு வந்து ‘புண்யாவசனம்’ பண்ணி விட்டு, அந்த ‘போர்ஷ’ன் பூராவும் ‘புண்யாவசன ஜலத்தை’ தெளித்தார்.பிறகு குழந்தைக்கு என் பேர் வைக்கப் போறேள்”என்று கேட்டதும்,லதா “நான் என் குழந்தைக்கு ‘ஆனந்த்’ ன்னு வைக்க ணும்ன்னு ரொம்ப ஆசைப் படறேன்”என்று சொன்னதும் “எல்லோரும் பேர் ரொம்ப நன்னா இருக்கு” என்று சொன்னதும் வாத்தியார் லதா சொன்ன பேரை குழந்தை காதிலே ‘மூனு தடவை’ சொன்னார். எல்லோரும் அவர்கள் கையைத் தட்டி கர கோஷம் பண்ணினார்கள்.பிறகு வாத்தியார் மாமி இடம் தக்ஷணையை வாங்கிக் கொண்டு போனார்.எல்லோரும் போன பிறகு காயத்திரி,”லதா,காலணா செல வு இல்லாம அந்த மாமி புண்யத்தாலே,இந்த ‘போர்ஷ’ன் ‘புண்யாவசனமும்’ குழந்தைக்கு ‘நாமகரண மும்’ இவ்வளவு நல்ல விதமாக நடந்ததை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண் மையிலே ஆனந்த் அதிர்ஷ்ட்டகார பையன் தான்” என்று சொல்லி லதாவைக் கட்டிக் கொண்டாள். ரெண்டு பேரும் சந்தோஷப் பட்டு,அந்த மாமிக்கு தங்கள் மனதில் நன்றியை சொன்னார்கள்.

மூனு வருஷம் ஓடி விட்டது.லலிதா அடிக்கடி தன் கணவனிடம் நம்ப பையன்களுக்கு சீக் கிரமா கல்யாணம் பண்ணனும் என்று சொல்லி வந்தாள்.ஆனால் மேகநாதன் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் ‘பிசினஸ்ஸை’ பெருக்குவதிலேயே கவனம் செலுத்தி வந்தார்.மத்தியானம் சாப்பாடு சாப்பிட்டு விட்டு மேகநாதன் நிம்மதியா சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.இது தான் நல்ல சமயம் என்று நினைத்து இரவும் பகலும் சதா ‘பிஸினஸ்’ ஞாபகமாகவே இருந்து வந்த மேக நாதனைப் பாத்து லலிதா கோவமாக “நான் நம்ப பையங்களுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணனும் ன்னு சொல்லிண்டு இருக்கேன்,ஆனா நீங்க என்னவோ சதா இந்த ரெண்டு ‘பாக்டா¢’களையே கட்டி ண்டு அழறேள்.இனிமே நான் அவா கல்யாணத்தை பத்தி பேசவே போறதே இல்லே.அவா ரெண்டு பேரும் எக்கேடு கெட்டு போனா எனக்கு என்ன.இந்த வயசிலே அம்மா அப்பா அவா பையன்களுக் கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கணும்.நாம இப்படி சும்மா இருந்தா இந்த வயசிலே யாராவது அவாளுக்கு பிடிச்ச ஒரு பொண்ணா பாத்து அவா “காதல்’‘கத்திரிக்கா’ன்னு சொல் லிண்டு வந்தா நான் பொறுப்பு இல்லே.நீங்களாச்சு உங்க பையன்களாச்சுன்னு.நான் எதையும் காதி லே போட்டுக்க மாட்டேன்.எவளை அவா காதலிச்சு இந்த ஆத்துக்கு மாட்டுப் பொண்ணுன்னு சொ ல்லி அழைச்சிண்டு வராளோ,அது முதலியார் பொண்ணோ,நாயுடு பொண்ணொ,இல்லை துலுக்கப் பொண்ணோ நான் பேசாம அவளை ஏத்துண்டு சும்மா இருக்க போறேன்”என்று சொல்லி கத்தினாள்.

மேகநாதனுக்கு லலிதா பேசினது பயத்தைக் குடுத்தது.கொஞ்ச நேரம் ஆனதும் லலிதா அவா¢ டம் “அவா ரெண்டு பேரும் ராத்திரி ஆத்துக்கு வந்தபுறம் அவாளை உக்கார வச்சு ‘இதோ பாருங்கோ உங்க ரெண்டு பேருக்கும் வயசாயிண்டு வரது.நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக் கணும்ன்னு’ தீர்மானமா அடிச்சு சொல்லுங்க.அப்பதான் அவா ரெண்டு பேரும் ஒத்துப்பா.நாம் அவா ளுக்கு நல்ல பொண்ணணாப் பாத்து கையோட கல்யாணம் பண்ணி வச்சிடலாம்” என்றாள் லலிதா. ”’ஓ’.’கே’.லலிதா அவ்வளவு தானே.நான் நிச்சியமா பண்றேன்.நீ கவலைப் படாதே” என்று சொன்னார் மேகநாதன்.ராத்திரி ரெண்டு பையன்களும் வீட்டுக்கு வந்தவுடன் அவர்கள் ரெண்டு பேரையும் தன் பக் கத்தில் உட்காரச் சொன்னார் மேகநாதன்.”இதோ பார் ரமேஷ்,சுரேஷ்,உங்க ரெண்டு பெருக்கும் வயசு ஏறிக் கொண்டே போகிறது.நீங்க சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கணும்.அம்மாவும் நானும் இதைப் பத்தி ரொம்ப கவலைப் படறோம்” என்று மேகநாதன் சொன்னதும் இருவரும் உடனே எழுந்து க் கொண்டு ”இப்ப என்னப்பா கல்யாணத்துக்கு அவசரம்.இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும். அப்புறமா பார்க்கலாமே”என்று சொன்னார்கள்.”கல்யாணம் பண்றதுன்னா அது உடனே ஆகி விடற வேலை இல்லையே.நாம ஜாதகம் பாத்து,அது ஒத்து இருந்து,அப்புறமா பொண்ணு பாத்து ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தருக்கு பிடிச்சி இருந்தா தானே கல்யாணம் நடக்கும்.இதுக்கெல்லாம் ‘டயம்’ பிடிக்குமே” என்றார் மேகநாதன்.”சரிப்பா,நான் இல்லைன்னு சொல்லலே.அந்த ‘ப்ராசெஸ்ஸை’ நீங்க ஆரம்பியுங்க” என்று சொன்னான் ரமேஷ்.சுரேஷ் ஒன்னும் சொல்ல வில்லை.

அவர்கள் ரூமுக்குப் போன பிறகு மேகநாதன் மெல்லிய குரலில் ”நாம இன்னைக்கு சாயங்கா லமா நம்ப குடும்ப ஜோஸ்யரை ஆத்துக்குக் கூப்பிட்டு இவா ரெண்டு பேருடைய ஜாதகத்தையும் காட்டி இவாளுக்கு எப்போ கல்யாணம் நடக்கும்ன்னு கேட்டுவிட்டு,நல்ல பொண்ணு ஜாதகதகமா நமக்குப் பாத்துச் சொல்லும்படி கேப்போம்” என்று சொன்னதும் லலிதா “நீங்க சொல்றது நல்ல ஐடியா. இன்னைக்கு சாயங்காலமா நம்ப ஜோஸ்யரை நம்ப ஆத்துக்கு வரச் சொல்லி நான் போன் பண்றேன்”. என்று சொல்லி விட்டு போனில் ஜோஸ்யரை போனில் கூப்பிட்டாள்.மணி ஐஞ்சு அடித்ததும் ஜோஸ் யர் விஸ்வநாதன் வாசலில் வந்து காலிங்க பெல்லை அமுத்தினார்.லலிதா கதவைத் திறந்ததும் “நமஸ் காரம்மாமி’ என்று சொல்லி தன் கைகளைக் கூப்பி வணக்கம் தொ¢வித்தார் ஜோஸ்யர்.”உள்ளே வாங் கோ”என்று ஜோஸ்யரை உள்ளே வரச் சொன்னாள் லலிதா.உள்ளே மேகநாதனைப் பார்த்த ஜோஸ்யர் “நமஸ்காரம் மாமா”என்று அவருக்கும் வணக்கம் சொன்னார்.“வாங்கோ,இந்த சோபாவிலே உக்காரு ங்கோ” என்று சொல்லி சோபாவை காட்டினார் மேகநாதன்.ஜோஸ்யர் வந்து சோபாவில் உட்கார்ந்ததும் லலிதா “எங்க ரெண்டு பையன்களுக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கோம்.அவா ரெண்டு ஜா தகமும் நான் கொண்டு வந்து இருக்கேன்.நீங்க அவா ரெண்டு பேருக்கும் எப்போ கல்யாணம் நடக் கும்ன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கோ.கூடவே எங்க ‘ஸ்டேடஸ்ஸ¤க்கு’ ஏத்த இடமா அவா ரெ ண்டு பேருக்கும் சொல்லுங்கோ” என்று சொல்லி ரெண்டு பையங்களுடைய ஜாதகங்களையும் ஜோஸ் யரிடம் கொடுத்தாள்.அவர் அவைகள வாங்கி கொண்டார்.

தன் மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு ரெண்டு பேருடைய ஜாதகத்தை வைத்துக் கொண்டு எல்லா கட்டங்களையும் நிதானமாகப் பார்த்தார்.பிறகு ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து கணக்கு போட ஆரம்பித்தார்.கொஞ்ச நேரம் ஆனதும் “மாமி,நான் சொல்ரேன்னு என்னை தப்பா எடு த்துக்காதீங்கோ.உங்க ரெண்டு பையன்களுக்கும் இன்னும் குரு பலனே வரலே.இன்னிலே இருந்து இன்னும் ரெண்டு வருஷம் போனா ரமேஷூக்கு குரு பலன் வரது.சுரேஷூக்கு அதுக்குப் அப்புறம் நாலு மாசம் போனா தான் அவனுக்கு குருபலன் வரது.நீங்க இவா ரெண்டு பேருடைய ஜாதகத்தை இன்னும் ரெண்டு வருஷம் நாலு மாசம் வரைக்கும் எடுக்கவே எடுக்காதீங்கோ.அப்புறமா ரொம்ப சீக் கீரமா இவா ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடும்” என்று சொல்லி தன் கண்ணாடியை கழட்டினார் ஜோஸ்யர்.உடனே லலிதா “அப்படியா மாமா,சரி நீங்க சொன்னப் பிரகாரம் நாங்க இவா ஜாதகத்தை இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அப்புறமாவே உங்க கிட்ட குடுத்து பார்க்கச் சொல்றேன்” என்று சொ ன்னாள்.”அப்ப நான் உத்தரவு வாங்கிக்கட்டுமா” என்று சொல்லி ஜோஸ்யர் எழுந்தார்.மேகநாதன் தன் பர்ஸைத் திறந்து ஒரு ஐனூரு ரூபாய நோட்டைஎடுத்து ஜோஸ்யரிடம் கொடுத்தார்.”ரொம்ப தாங்க்ஸ் மாமா” என்று சொல்லி விட்டு கிளம்பினார் ஜோஸ்யர்.

மேகநாதனுக்கு சென்னையில் இருந்து வந்த ரெண்டு ‘ப்லாஸ்டிக்’ தொழிற்சாகைகளிலும் ‘பிஸி னஸ்’ நன்றாக நடந்து, நல்ல லாபம் வந்துக் கொண்டு இருந்தது.அவர் யோஜனைப் பண்ணினார். ‘செ ன்னையிலே நம்முடைய ரெண்டு ‘ப்லாஸ்டிக்’ தொழிற்சாலைகளும் நல்ல லாபத்தில் ஓடிண்டு இரு க்கு.இங்கே நாம கொடி கட்டிப் பறக்கறோம்.இதே மாதிரி பெங்களூரிலும் நாம் ஒரு ‘ப்லாஸ்டிக்’ தொழி ற்சாலை ஆரம்பிச்சா என்ன’ என்று அவருக்கு தோன்றியது.முதலில் ஒரு சின்ன இடத்தில் ஒரு ‘ப்லா ஸ்டிக் ‘பாக்டா¢யை’ ஆரம்பிச்சு நடத்திப் பாக்கலாம்.சென்னையிலே நாம செஞ்சா மாதிரி அங்கேயும் நல்ல கவனம் செலுத்தி அந்த ‘பாக்டா¢யை’ நடத்தி வரலாம்.கடவுள் புண்ணியத்லே,அந்த ‘பாக்டா¢’ நல்ல லாபத்லே நடந்தா கூடவே இன்னொரு ‘பாக்டா¢யும்’ ஆரம்பித்து,சென்னையிலே செஞ்சு வற மாதிரி அந்த ரெண்டு ‘பாக்டா¢களையும்’ நல்ல லாபத்லே நடத்தி வருவோம்.அப்புறமா நாம் அங்கே ஒரு பெரிய பங்களா வாங்கி கொண்டா,சென்னையிலே குளிர் காலத்திலே ஆறு மாசம் இருக்கலாம். சென்னையிலே வெய்யில் காலம் வந்து விட்டதுன்னா,நாம பெங்களூர் போய் ஆறு மாசம இருந்து வர லாம்’ என்று ஆகாயக் கோட்டை கட்டினார் மேகநாதன்.

அன்று ஞாயித்துக் கிழமை.எல்லோரும் சாயங்காலம் டீ குடித்துக் கொண்டு இருக்கும் போது மேகநாதன் மெல்ல தன் மணைவியிடம் “லலி,நான் ஒரு ‘ப்லான்’ யோசனை பண்ணி இருக்கேன் அதை இப்போ நாம் உங்களுக்கு சொல்றேன்.சுரேஷ்,ரமேஷ். நீங்க ரெண்டு பேரும் கேளுங்கோ.நாம இங்கே ரெண்டு ‘ப்லாஸ்டிக்’ ‘பாக்டா¢யை’ நல்ல லாபத்லே நடத்தி வரோம்ன்னு உங்க எல்லாருக்கும் தொ¢யும்.நாம் ஏன் இந்த மாதிரி ஒரு ‘பாக்டா¢’ பெங்களூரிலும் ஆரம்பிக்க கூடாது.முதல்லே ஒரு ‘பாக்டா¢யை’ நாம அரம்பிச்சு அதை நல்ல லாபத்லே நடத்தி வந்தா,நாம இன்னொரு ‘பாக்டா¢யை’ பக்கத்திலேயே ஆரம்பிச்சு,அதையும் நல்ல லாபத்லே நடத்தி வந்தோம்னா,நாம பெங்களூர்லே ஒரு பெரிய பங்களா வாங்கிண்டு, எல்லோரும் சென்னை ‘சம்மர்லே’ பெங்களூர்லே, ஒரு ஆறு மாசம் இருந் து வரலாம்.பெங்களூர் குளீர் சீசன் வந்தா,அப்போ சென்னையிலே ஆறு மாசம் இருந்து வரலாம். என்ன சொல்றீங்க”என்று கேட்டார்.“அப்பா,நீங்க சொல்றது ‘பன்டாஸ்டிக்’ ஐடியா.எனக்கும் இந்த மாதிரி நம்ம ‘பாக்டா¢யை’ பெங்களூரில் திறந்து அங்கேயும் நாம கொடி கட்டிப் பறக்கணும் என்று ரொம்ப நாளா ஆசை” என்று சொன்னான் ரமேஷ்.சுரேஷ் “அப்பா ஐடியா தப்புன்னுநான் சொல்ல மாட் டேன்.என்ன நாம கர்னாடகா ‘ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ்’ என்னன்னு மொதல்லே நன்னா ‘ஸ்ட டி’ பண்ணனும். அப்புறமா அங்கே ‘லான்ட்’ எங்கே சீப்பா கிடைக்கும் ன்னு பாக்கணும்.அப்புறமா நாம ஒரு ‘லாண்ட்’வாங்கி ‘பாக்டா¢யை’ ஆரம்பிக்கணும்.நாம அவசரப் படக் கூடாது”என்று சொன்னான்.

ஒரு வருஷம் ஓடி விட்டது.ஒரு நாள் வியாழக்கிழமை சாயங்காலம் ரமேஷூம்,சுரேஷூம்,அவவ ரவர்கள் ஜெனரல் மேனேஜா¢டமும்,மானேஜிங்க் டைரக்டா¢டமும்,அவர்கள் ‘ப்ரைடே’ ‘சாடர்டே’ ரெ ண்டு நாளைக்கும் ஊரில் இருக்க மாட்ட்டோம்,நாங்க ‘பாமிலி’யுடன் பெங்களுர் போவதாயும்,’பாக் டா¢யில்’ ‘ப்ராப்லெம்’ ஒன்னும் இல்லாம பாத்து வரும்படி சொல்லி விட்டு வந்தார்கள்.‘ப்ரைடே’காலை யிலே ஐஞ்சு மணிக்கு எல்லாம் எல்லோரும் குளித்து விட்டு சுவாமியை வேண்டிக் கொண்டு தங்கள் ‘இன்னோவா’ காரில் ஏறிப் பெங்களூர் கிளம்பி போனார்கள்.வழியில் ‘ஹைவே ஹோட்டலில்’ நல்ல ‘டிபன்’ சாப்பிட்டார்கள்.கார் டிரைவரை ஜாக்கிறதையாக ஓட்டிப் போகச் சொன்னார் மேகநாதன் கார் காஞ்சீபுரம் நெருங்கும் போது லலிதா “நாம ஒரு நல்ல காரியத்துக்குப் போய்க் கொண்டு இருக்கோம். காஞ்சீபுர காமாக்ஷ¢ அம்மனை தா¢சனம் பண்ணி விட்டுப் போகலாமா” என்று கேட்டாள் லலிதா.”நிச்சி யமா லலிதா,நாம காமாக்ஷ¢ அம்மனைத் தா¢சனம் பண்ணி விட்டேப் போகலாம்.சுவாமி தா¢சனம் பண் ணிட்டு போனா நம்ம போற காரியம் நல்லபடி முடியும் லலிதா” என்றார் மேகநாதன்.லலிதா உடனே டிரைவரை பாத்து முதலில் காஞ்சீபுரம் காமாக்ஷ¢ கோவிலுக்கு ஓட்டிண்டு போப்பா” என்றாள் லலிதா.

டிரைவரும் “சரிங்கம்மா.நான் முதல்லே கோவிலுக்குப் போறேன்ம்மா” என்று சொல்லி விட்டு ‘ஹைவே’யில் காஞ்சீபுரம் வரும் போது ‘லெப்ட்டில்’ திரும்பி காஞ்சீபுர கோவிலுக்கு ஓட்டி போனான். எல்லோரும் காஞ்சீபுரம் வந்ததும் கோவிலுக்குள் போய் சிறப்புத் தா¢சன டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போய் காமாக்ஷ¢ அம்மனை தா¢சனம் பண்ணி ஒரு அர்ச்சனையும் பண்ணி விட்டு வெளியே வந்தார்கள்.வெளியே வந்த அவர்கள் வெய்யிலுக்கு சரவண பவனில் ‘கூல் டிரிங்க்ஸ்’ குடித்து விட்டு பெங்களூருக்கு கிளம்பினார்கள்.காஞ்சீபுரம் ரோடு முடிந்து கார் ‘ஹைவே’ ‘மெயின்’ ரோடு வந்ததும் டிரைவர் காரை காரை திருப்பி ஓட்ட ஆரம்பித்தான்.கார் கார் ஐம்பது அடி கூப் போய் இருக்காது. திடீ ரென்று ஒரு மாடு குறுக்கே வந்து விடவே டிரைவர் ‘சடன்னா’ ‘ப்ரேக் போட்டு நிறுத்த வேண்டியதாய் ஆயிற்று.ஆனால் இவர்கள் காரை மிகவும் ‘க்ளோஸாக’ பாலோ பண்ணி வந்த ஒரு ‘ஹெவி டியூட்டி’ லாரியின் டிரைவர் முன்னாலே போய்க் கொண்டு இருந்த கார் ‘சடன் ப்ரேக்’ போட்டதை ரொம்ப லே ட்டாக கவனித்ததால், அவனால் உடனே ‘ப்ரேக்’ போட முடியவில்லை.’இன்னோவா’ கார் மேலே நன்றாக மோதிய பின்னரே அவன் ‘பிரேக்கை’ப் போட்டான்.லாரி ‘இன்னோவா’ கார் மீது வேகமாக மோதயதால் பின் சீட்டில் உட்கார்ந்து இருந்த லலிதா,மேகநாதன்,சுரேஷ் மூவரும் பலமா அடிப்பட்டு, காரை விட்டு வெளியே தூக்கி எறியப்பட்டார்கள்.’இன்னோவா’ டிரைவர் ‘ஹார்ட்டின்’ மீது ‘ஸ்டியரி ங்க்’‘வீல்’பலமாக மோதியதால் டிரைவர் காரிலேயே இறந்துவிட்டான்.லலிதாவும்,மேகநாதனும், சுரே ஷூம் தலையில் பலமாக அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துக் கொண்டு இருந்தார்கள்.’ஹெவி டியூட்டி’ டிரைவர் தன் லாரியை அப்படியே விட்டு விட்டு அடிப்பட்ட காலோடு பக்கத்திலே தொ¢ந்த வயலில் மெல்ல இறங்கி ஓடி விட்டான்.

ஒரு ஐந்து நிமிஷம் கழித்து லலிதா லேசாக தன் கண்ணைத் திறக்க முயற்சி பண்ணினாள். ஆனால் அவள் தலையில் பலமாக அடிப்பட்டு இருந்ததால்,அவளுக்கு வலி உயிர் போனது.மெல்ல தன் கண்ணைத் லேசாக திறந்துப் பார்த்தாள்.கொஞ்ச தூரத்தில் மேகநாதன் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்தார்.அவர் வலியால் முனகிக் கொண்டு இருந்தார்.அவர் காலடியில் அடிப் பட்டு படுத்துக் கொண்டு இருந்தான் சுரேஷ்.”நமக்கு கார் ‘ஆகிஸிடெண்ட்’ ஆயிடுத்தே.நாம எல்லாம் இப்படி ரத்த வெள்ளத்தில் விழுந்துக் கிடக்கிறோமே” என்று முனகியவாறே பேசினாள் லலிதா. “லலி தா.. என்.. தலை.. வெடிச்சு.. டும்.. போல…. இருக்கே”என்று மேகநாதன் முனகி சொல்லிக் கொண் டு இருக்கும் போதே,அவர் தலை சாய்ந்து விட்டது.“ஐயையோ,நீங்க போயிட்டேளா.உங்க தலை சாய் ஞ்சுட்டதே.என்னைப் பாருங்கோ.. என்னைப்.. பாருங்கோ.பகவானே,நாங்க என்ன பாவம் பண் ணோம்.எங்க குடும்பத்தை இப்படி அநியாயமா அழிச்சுட்ட்யே” என்று கத்தினாள்.அவளால் அதற்கு மேலே பேச முடியவில்லை.தாகம் அவள் தொண்டையை அடைத்தது.“எனக்கு குடிக்கத் தண்ணி வேணும்,எனக்குத் தண்ணி வேணும்..” என்று கத்த வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.

ஆனால் வாயில் இருந்து பேச்சு வெளியே வரவில்லை.இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம் இறந்து விடுவோம் என்று அவளுக்குத் தொ¢ந்தது.தலையில் அடிப்பட்ட வலியை அவளால் தாங்கிக் கொள்ள வே முடியவில்லை.’அந்த சமையல்கார மாமி கபாலீஸ்வரர் கோவில்லே குடுத்த ‘பிடி சாபம்’ ஞாபகத் துக்கு வந்தது.‘உங்க குடும்பம் நாசமா போயிடும்’ன்னு அந்த காயத்திரி மாமி கத்தினாளே,அந்த மாமி யின் சாபம் பலிச்சுடுத்தே’ என்று நினைத்து பக்கத்லே விழுந்து கிடந்த ரமேஷை பார்த்தாள். அவ னை ஏதோ கேட்க வேண்டும் என்று நினைக்கும் போதே,அவள் உயிர் பிரிந்து விட்டது.அந்த நேரம் பார்த்து எதிரில் காரில் வந்துக் கொண்டு இருந்தார் ஒரு புண்ணியவான்.அவர் கண் எதிரிலே ஒரு கார் ‘ஆக்ஸிடெண்ட்’ ஆகி அதில் இருந்தவர்கள் எல்லாம் ரத்த வெள்ளத்தில் மிதந்துக் கிடப்பதைப் பார்த் தார். அவர் உடனே டிரைவரை கூப்பிட்டு “டிரைவர்,எதிரே ஒரு கார் ‘ஆக்ஸிடென்ட்’ ஆகி எல்லோரும் ரத்த வெள்ளத்தில் இருக்காங்கப்பா.நீ காரை கொஞ்சம் ஓரமாக நிறுத்து.நாம் போய் பார்க்கலாம்”என்று சொன்னதும் கார் டிரைவர் காரை ஓரமாக நிறுத்தினான்.காரில் இருந்து தண்ணீர் பாட்டிலுடன் கீழே இறங்கி வந்து ‘ஆக்ஸிடெண்ட்’ஆன இடத்திற்கு வந்தார் அந்த புண்ணியவான்.அவருக்கு அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை பார்க்க ரொம்ப பா¢தாபமாய் இருந்தது.அவர்கள் குடும்பம் ரொம்ப பணக்கார குடும்பம் போல தொ¢ந்தது.எல்லோர் நெத்தியிலும் நல்ல பெரிய குங்கும பொட்டு இருந்தது. பெரியவர் பத்து விரலிலும் பல வித வைர கற்கள் பதித்த மோதிரங்களை போட்டுக் கொண்டு இருந் தார்.அந்த பெரியவா¢ன் மணைவி நிறைய தங்க நகைகள் போட்டு கொண்டு இருந்தாள்.ரெண்டு இள வயசு பிள்ளைகளும் நல்ல விலை உயர்ந்து டிரஸ்களை போட்டுக் கொண்டு இருந்தார்கள்.’இவர்கள் எல்லோரும் காமாக்ஷ¢ கோவிலுக்குப் போய் விட்டு வந்துக் கொண்டு இருந்தார்கள் போல் இருக்கிறது’ என்று அவர் எண்ணினார்.

’சரி இவர்களில் யாருக்குகாவது இன்னும் உயிர் ஒட்டிக் கொண்டு இருந்தால் நாம் அவர்களை பிழைக்க வைக்கலாமே’என்று எண்ணி உடனே அவர் தன் செல் ‘போனை’ எடுத்து ‘ஹைவே ஆம்பு லன்ஸ்’க்கு போன் பண்ணினார் அந்த புண்ணியவான்.”ஹலோ,’ஹைவே ஆம்புலன்ஸ்ஸாங்க’ என்று கேட்டார் அவர்.“ஆமாங்க,நீங்க யாருங்க பேசறது” என்று மறு பக்கம் இருந்து கேட்டார் ‘ஹைவே ஆம் புலன்ஸ்’ அதிகாரி.“சார் நான் இங்கே காஞ்சீபுரத்து கிட்டே இருந்து போன் பண்றேன்.இங்கே ஒரு ‘ஆக்ஸிடெண்ட்’ ஆகி, அதிலே இருந்த ‘பாஸஞ்சர்’ எல்லாம் பலத்த அடிபட்டு கீழே விழுந்து கிடக்க றாங்க..நீங்க உடனே இங்கே வந்து இவங்களை ‘அடெண்ட்’ பண்ண முடியுமா”என்று கேட்டார் அவர். ”அப்படியா சார்.நாங்க உடனே வரோம்.நீங்க கிலோ மீட்டர் நம்பரை சொல்லுங்க”என்று கேட்டார் அந்த அதிகாரி.“இருங்க,இதோ நான் பாத்து சொல்றேன்”என்று சொல்லி விட்டு அவர் சற்று தூரத்தில் இருக்கும் கிலோ மீட்டர் கல்லை பார்த்து, “சார் கிலோ மீட்டர் நம்பர் 70க்குப் பக்கத்லே தான் இந்த ‘ஆக்ஸிடெண்ட்’ நடந்து இருக்கு” என்று சொன்னதும்.அடுத்த பக்கத்தில் இருந்த ’ஹைவே ஆம்புல ன்ஸ்’ அதிகாரி “நாங்க உடனே அங்கே வறோம்” என்று சொன்னார்.தன் ல்செல் போனை’ ‘ஆப்’ பண்ணினார் அந்த புண்ணியவான்.

‘சரி,அவங்க வரட்டும்,அதுக்குள்ளாற நாம அங்கே அடிப்பட்டு இருந்தவர்களை பார்க்கப் போக லாம்’ என்று நினைத்து ‘ஆக்ஸிடெண்ட்’ நடந்து இருக்கும் இடத்துக்கு வேகமாகப் போனார்.கீழே விழுந்து கிடந்த பெரியவர் கழுத்தில் தொங்கி கொண்டு இருந்த செல் போனை கவனித்தார். அப்போது ஒரு அடிப் பட்ட பையன் “எங்க மானேஜிங்க் டைரக்டர் செல் போன் நம்பர் 9879876543. அவருக்கு போன் பண்ணுங்க…..”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,அவன் மறுபடியும் மயக்கம் ஆகி விட்டான்.உடனேஅந்த புண்ணீயவான் அவங்க ‘மேனேஜிங்க் டைரக்டருக்கு’ போன் பண்ணீ ‘ஆக்ஸிடெண்ட் விஷயத்தை விவரமாக சொன்னார்.பிறகு அந்த பெரியவர் கழுத்தில் இருந்த ‘செல் போனை’,வெளியே எடுத்து அதை ‘ஆன்’ பண்ணி நம்பர்க¨ளை பார்த்தார். ‘செல் போனில்’ முதலில் வந்த பேர் ‘ஏகநாதன்’ என்று இருந்தது.

– தொடரும்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *