தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2019
பார்வையிட்டோர்: 6,959 
 
 

அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12

லதா தன் காதலன் சுரேஷை மறுபடியும் பார்த்து அளவிலா சந்தோஷபட்டாள்.ஆனால் ஒரு நிமிஷத்துக்கு எல்லாம் அவளுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.’என்னைப் பாருங்கோ.நான் இப்போ ‘வாயும் வயிறுமா’ நிக்கறேன்.உங்க அருமைத் தம்பி எனக்கும் அம்மாவுக்கும் மயக்க மருந்த மூக்கிலே வச்சு.எங்களுக்கு மயக்கம் என்னை ‘கெடுத்து’ இந்த குழந்தையே என் வயித்திலே குடுத்து இருக்கான்.நீங்க என்ன மனசார காதலிச்சேள்.நானும் உங்களே மனசார காதலிச்சேன்.உங்க அம்மா அப்பா மட்டும் நம்ம கல்யாணத்தே தடுக்காம இருந்து இருந்தா,நான் உங்களெ கல்யாணம் பண்ணீ ண்டு சந்தோஷமா இருந்து வந்து இருப்பேனே.எனக்கு அந்த பாக்கியம் இல்லையே.இப்ப உங்களே நான் நினைக்கிறதே பாவம்.இந்த ஜென்மத்த்லே நீங்க எனக்கு கிடைக்கலே’ என்று சுரேஷிடம் சொல் லி அழ வேண்டும் போல இருந்தது லதாவுக்கு.

‘லதா உனக்கு கல்யாணம் ஆயிடுத்தா.நீ இப்போ ‘பாமிலி வேலே’ இருக்கயே.யார் உன்னைக் கல்யாணம் பண்ணீண்டு இருக்கா.உன்னைக் கல்யாணம் பண்ணிக்க எனக்கு குடுப்பனை இல்லை யே.உன்னை நான் நிரந்தரமா இழந்துட்டேனே.உன்னை தேடி பிடிச்சு உன்னைக் கல்யாணம் பண்ணி கொள்ளணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.அது முடியாமலே போயிடுத்து.நான் ஏமாந்துப் போயிட் டேனே லதா’ என்று நினைக்கும் போது அவனுக்கு அழுகையே வந்து விட்டது.தன் அழுகையை அட க்கிக் கொண்டு லதாவின் முகத்தை வருத்ததோடு பார்த்து வந்தான் சுரேஷ்.

பழைய சமையல்கார மாமியையும்,அவள் பெண்ணையும் பார்த்த லலிதாவுக்கு ’நம்ம கிட்டே சொல்லிக்கம,கொள்ளாம,நம்ம ஆத்து வேலையை விட்டு திடீரென்று நின்னுப் போன அந்த சமையல் கார மாமியிடம் நன்னா நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கிகிறா போல கேக்கணும்’ என்று நினைத்து அவள் வேகமாக வந்து காயத்திரியிடம் வந்தாள்.”காயத்திரி,ரெண்டு வருஷமா,எங்க ஆத்லே நீயும், உன் பொண்ணும் வயிறு புடைக்க மூனு வேளையும் சாப்பிட்டுண்டு இருந்துட்டு, திடீர்ன்னு எங்க ஆ த்து மனுஷா யார் கிட்டேயும் சொல்லாம,ஏன் நின்னுப் போனே.நான் குடுக்கிற சம்பளம் உனக்கு போறலேன்னு உனக்கு தோணித்துன்னா,‘எனக்கு இன்னும் கொஞ்சம் சம்பளம் கூடப் போட்டு குடுங் கோ’ன்னு கேக்கறது.அதை விட்டுட்டு,இப்படி திடீர்ன்னு நீ வேலையை விட்டு நின்னு போனா என்ன அர்த்தம்.யாராவது உனக்கு இன்னும் கொஞ்ச அதிகமா சம்பளம் குடுத்தா,நீ அங்கே வேலைக்கு போ யிடறதா.எனக்கு என்ன திடீர்ன்னு வேறே சமையல்காரி கிடைப்பாளா என்ன.நான் இன்னும் ஒரு சமையல் கார மாமியை வேலைக்கு வச்சுக் கொள்ற வரைக்கும்,எங்க குடும்பம் கஷ்டப்படுமேன்னு, நீ£ கொஞ்சமாவது யோசிச்சயா.எங்க கஷ்டம் உனக்கு தெரிஞ்சதா.உனக்கு உன் சம்பளம் தான் முக்கியா போச்சு இல்லையா” என்று கோபமாக கேட்டாள்.

லலிதா சொன்னதைக் கேட்ட காயத்திரிக்கு கோவம் பொத்து கொண்டு வந்தது.’என்னே பாத்து இப்படிக் கேக்கறாளே இந்த கர்வி.இவளை கோவில்ன்னு கூடபாகாம இவ குடும்பத்தை நார் நாறா கிழி ச்சுடணும்’என்று தோன்றியது காயத்திரிக்கு.¨தா¢யத்தை வரவழைத்து கொண்டு ”உங்க காத்தே எங்க பேர்லே படகூடாதுன்னு தானே நான் உங்க ஆத்து வேலையே விட்டுட்டு,பழைய மாம்பலத்லே இரு ந்து வீட்டை காலி பண்ணிண்டு இங்கே வந்து இருக்கேன்.இங்கேயும் உங்க தொந்தரவா.என் பொண் ணை பாருங்கோ.இவ ‘இந்த மாதிரி’ ஆனதுக்கு உங்க பிள்ளை ரமேஷ் தான் காரணம்னு உங்களுக்கு தெரியுமா.உங்க குடும்பம் ஒரு ‘நய வஞ்சக’க் குடும்பம்ன்னு எனக்கு முன்னமே தெரியாம போச்சு.தெ ரிஞ்சு இருந்தா நானும் என் பொண்ணும் உங்காத்துக்கு சமையல் வேலைக்கே வந்து இருக்க மாட் டோம்.உங்க பையன் ரமேஷ் ஒரு ‘வெறி நாய்.வெறி நாய்க்கும் கீழே.அவன் வேலைகாரன் ஆறுமுகத் துக்கு லீவு குடுத்துட்டு,எனக்கும்,என் பொண்ணுக்கும்,மயக்க மருந்து குடுத்து,எங்களை மயக்கம் அடைய செஞ்சுட்டு,என் பெண்ணை ‘ஆசை தீர’ அனுபவிச்சு இருக்கான்.ஒரு வெறி நாய்க்கும் கேடு கெட்ட ஒரு பையனை நீங்கப் பெத்து வச்சுண்டு இருப்பீங்க எனக்கு முதல்லேயே தெரியாம போச்சு. இப்ப என் பொண்னு வயத்தே பாருங்கோ.ஒரு வெறி நாய் கூட ஒரு பெண் நாய்க்கு மயக்க மருந்து தந்து அதை அனுபவிக்காது.இப்படி இருக்கு உங்க குடும்ப லக்ஷணம்.இந்த அழகிலே,நீங்க என்னை திட்ட வந்துட்டேள்.இது கோவில்ன்னு கூட பாக்காம நான் சாபம் தறேன்.என் பொண்ணை இப்படி அநியாயமா ‘கெடுத்த’ உங்க பையன் நன்னாவே இருக்க மாட்டான்.உங்க குடும்பம் நன்னாவே இரு க்காது.நாசமா தான் போயிடும்.எங்க வயித்தெறிச்சல் உங்களை சும்மாவிடாது.என்னமோ நான் உங்க கஷ்டம் பத்தி யோஜனை பண்ணலேன்னு என்னை திட்டினேளே.எங்க ‘விடியா கஷ்டம்’ பெரிசா, உங் க சமையல்காரி கஷ்டம் பெரிசான்னு யோசிச்சு பாருங்கோ.என்னமோ பெரிசா பேச வந்துட்டேளே. போங்க இந்த இடத்தை விட்டு”என்று சொல்லி விட்டு ‘ஓ’ என்று கதறி அழுதாள் காயத்திரி.உடனே லலிதா ”வாங்கோ,நாம இந்த இடத்தை விட்டு உடனே வெளியே போயாகணும்” என்று சொல்லி தன் கணவரின் கையையும்,சுரேஷின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக கோவிலை விட்டு வெளியே போனாள்.

காயத்திரி ‘ஓ’ என்று சத்தம் போட்டு கத்துவதைக் கேட்ட கோவிலுக்கு வந்த ஜனங்கள் எல் லோரும் அங்கே கூடி விட்டார்கள்.எல்லோரும் காயத்திரியை சூழ்ந்துக் கொண்டார்கள்.ஒருத்தர்” மாமி எனக்கு DIGயை தெரியும்.நீங்க என் கிட்டே ஒரு ‘கம்ப்லெயிண்ட்’எழுதிக் குடுங்க.நான் இவா மேலே ‘ஆக்ஷன்’ எடுக்க சொல்றேன்”என்று கத்தினார்.இன்னொருவர் “மாமி,மந்திரி எனக்கு உறவு.நீங்க ஒரு ‘கம்ப்லெயிண்ட்’ எழுதி குடுங்க.நான் இவாளை ‘உள்ளே’ தள்ளீ முட்டிக்கு முட்டி தட்டி விசாரிக்க சொல்றேன்” என்று சொன்னார்.உடனே காயத்திரி ”இதோ பாருங்கோ,நாங்க ஏழை.நான் சமையல் வே லை செஞ்சுண்டு வறேன்.அவா ரொம்ப பணக்காரா.என் கிட்டே சாட்சி எதுவும் இல்லே.நீங்க சொன் னதுக்கு ‘ரொம்ப தாங்க்ஸ்’.எங்க தலை எழுத்தே நாங்க அனுபவிச்சுண்டு வறோம்”என்று சொன்னனாள். அதற்கு மேலே யாரும் ஒன்னும் சொல்லவில்லை.லலிதா வேகமாக கோவிலை விட்டு வெளியே வந்து டிரைவரை ‘செல் போனில்’ கூப்பிட்டு உடனே கோவில் வாசலுக்கு வரச் சொன்னாள்.

அவர்கள் மூனு பேரும் கோவிலை விட்டு வெளியே போனதும்,காயத்திரியும்,லதாவும் கோவி லை விட்டு வெளியே வந்தார்கள்.அங்கு இருந்தவர்கள் எல்லாம் “பாவம் அந்த மாமியும்,அந்த பொண் ணும்.பணக்காரா என்ன வேணுமானாலும் ஏழைகளுக்கு பண்றாங்களே”என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார்கள்.“அந்த மாமி மட்டும் ஒரு ‘கம்ப்லெயிண்ட்’ எழுதி கொடுத்தா போதும்.அந்த பண க்கார கழுதைங்களே,நான் ‘லாக் அப்பில்’ தள்ளி,முட்டிக்கு முட்டி தட்டி,அவங்க வாயிலே இருந்து உண்மையயே வர வழைச்சு இருப்பேன்”என்று கத்தி விட்டு கோவீலுக்கு உள்ளே போனார்.

கோவிலை விட்டு வெளியே வந்த லதா “அவாளை பாத்தவுடன் இப்படி வெறி வந்தா மாதிரி ஏம்மா எல்லாத்தையும் சொல்லி அழுதே.வெறுமனே எல்லோர் எதிரிலும் நாம் புலம்பி அழறதாலே என் னம்மா பிரயோஜனம் சொல்லு” என்று அம்மாவை கேட்டாள்.“என்ன சொல்றே லதா நீ.அந்த பணக் கார மேடம் என்னைப் பாத்து ‘நீ அதிக சம்பளம் தர வீடா கிடைச்சா உடனே எங்காத்தை விட்டுட்டு சொல்லாம கொள்ளாம அங்கே வேலையை ஒத்துண்டு போகலாமா,எங்க கிட்ட சொல்ல வேண்¡மா’ ன்னு கன்னா,பின்னான்னு கேக்கவே எனக்கு கோபம் வந்து அந்தப் பையன் நமக்குப் பண்ண ‘நய வஞ்சக’ச் செயலை சொல்லிக் கத்தினேன் லதா.என்னால் அந்தப் பையன் பண்ண அந்த ‘பாதகச் செயலை’ அந்தப் பையனின் அப்பா அம்மாவிடம் சொல்லணும்ன்னு தோணித்து.அதான் நான் சொன்னேன்” என்று கோபத்தோடு சொன்னாள் காயத்திரி.அவளுக்கு இன்னும் ஆத்திரம் தீரவில்லை.அவ ளுக்கு மேல் மூச்சு,கீழ் மூச்சு இன்னும் வாங்கிக் கொண்டு இருந்தது.”எனக்குப் புரியறதும்மா.நீ படற வேதனை.இல்லைன்னு நான் சொல்லலே.இப்போ நாம அவா கிட்டே அவாத்துலே நடந்ததை எல்லா ம் சொல்லிட்டே.அவா உடனே போலீஸை அழைச்சுண்டு வந்து நம்மை மிரட்டப் போறாளே. எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா.அந்தப் பணக்காரா எது வேணுமானா பண்ணுவாளேம்மா”என்று பயத்து டன் சொன்னாள் லதா.லதா சொன்னதை கேட்டவுடன் காயத்திரிக்கு பயம் வந்தது.உடனே அவள் ”கவலை படாதே லதா.அந்தப் பணக்காரரிக்கு நாம இருக்கிற இடம் தெரியாது.அவா கிட்டே நாம இரு க்கிற இடத்தை சொல்லவில்லையே.நீ பயப்படாம இருந்து வா”என்று சொல்லி விட்டு,ரெண்டு பக்கமு ம் பார்த்துக் கொண்டு வேகமாக லதாவை அழைத்துக் கொண்டு தன் ‘போர்ஷனுக்கு வந்தாள்.

காரில் போய்க் கொண்டு இருந்த மேகநாதன் ”லலிதா அந்த மாமி…..”ன்னு பேச ஆரம்பித்த வுடன் ”உஷ்,எல்லோரும் கம்மென்று ஆத்துக்கு வாங்க.யாரும் இங்கே ஒன்னும் பேச கூடாது ”என்று கத்தி சொன்னாள் லலிதா.மேகநாதனும் சுரேஷ¤ம் அம்மா இப்படி கத்தி பார்த்ததே இல்லை.பயந்துக் கொண்டு சும்மா உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.”டிரைவர் வேகமாக வீட்டுக்கு போ.சீக்கிரம்” என்றாள் லலிதா கோபமாக.“இதோ மேடம்,நான் வேகமாக போறேன்”என்று சொல்லி விட்டு ‘ஆக்ஸில் ரேட்டரை’ அழுத்தினான் டிரைவர்.தன் கணவரையும் சுரேஷையும் பேச வேண்டாம்ன்னு லலிதா அட க்கினாளே ஒழிய,அவ யோஜனைப் பண்ணிக் கொண்டே வந்தாள்.சமையல் கார மாமி காயத்திரி இந்த மாதிரி கத்தினதைக் கேட்டதே இல்லை லலிதா.’எவ்வளவு மெதுவா நம்ம கிட்டே பேசுவா இந்த மாமி. இப்படி கத்தினாளே எல்லார் எதிரிலும்’என்று நினைத்தாள்.லலிதாவுக்கு காயத்திரி அழுது கத்தினது க்கு காரணம் புரிந்து விட்டது.’நாம் இல்லாத நேரம் பாத்து தன் பிள்ளை ரமேஷ் தான் இந்த பெண் லதாவைக் ‘கெடுத்து இருக்க’ வேணும்.நம்ம கிட்டே மா¢யாதையாக பேசி வந்த அந்த மாமி அதனால் தான் இப்படி நம்மைப் பாத்தவுடன் பங்களாவிலே நடந்த எல்லா சமாசாரத்தையும் கொட்டித் தீர்த்து. நம்ப குடும்பத்துக்கு ‘பிடி சாபம்’ குடுத்து இருக்கா’ என்று யூகித்துக் கொண்டு விட்டாள்.

ஒரு ஏழை சமையல்கார மாமிக்கும்,அவ பெண்ணுக்கும் மயக்கம் குடுத்துட்டு,ஆத்லே யாரும் இல்லாத போது அந்த லதாவை ‘கெடுத்து’இருக்கானேர ரமேஷ்.பாவம் அந்த பொண்ணு இப்ப வாயும் வயிறுமா நிக்கறாளே.இந்த பாவம் நம்ம குடும்பத்தை தாக்குமே.அந்த சமையல்கார மாமி குடுத்த சாபம் வீண் போகாதே.நம் குடும்பத்துக்கு என்ன கஷ்டம் வருமோ’ என்று கவலைப் பட்டாள் லலிதா. அவள் மனம் வேதனைப் பட்டது.மேகநாதன் முகத்தில் ஈயாடவில்லை.அவர் ரத்தம் கொதித்துக் கொண்டு இருந்தது.லலிதா ‘எப்போ ரமேஷ் ஆத்துக்கு வருவான்.அவன் வந்தவுடன் அவனை நாற் நாறா கிழிக்கணும்’ என்று காத்துக் கொண்டு இருந்தாள்.சுரேஷ¤ம் ரமேஷை நன்றாய் திட்ட வேண்டு ம் என்று காத்துக் கொண்டு இருந்தான்.மணி பதினொன்று அடித்தது.ரமேஷ் தன் காரை ‘காரேஜில்’ நிறுத்தி விட்டு கார் சாவியை ஆட்டிக் கொண்டு அப்போது ‘ரிலீஸ்’ஆன ஒரு சினிமா பாட்டை பாடிக் கொண்டு ஆத்துக்குள் நுழைந்தான்.உள்ளே வந்த ரமேஷைப்பாத்து “நில்லுடா ரமேஷ்.ஏண்டா ரமே ஷ்,நாங்க திருப்பதி போய் இருந்த போது நீ ஆறுமுகத்துக்கு லீவு குடுத்துட்டு,அந்த சமைகார மா மிக்கும்அவ பொண்ணுக்கும் மயக்க மருந்து குடுத்துட்டு,அந்த பொண்ணு லதாவை ‘கெடுத்து’ இருக் காயாமே.பாவம் அந்தப் பொண்ணு இப்ப கர்ப்பமா இருக்கா தெரியுமாடா.அந்த மாமியையும் அந்த பொண்ணையும் நாங்க கபாலீஸ்வரர் கோவிலில் இப்போ தான் பாத்தோம்.அந்த மாமி அழுதுண்டு என்னிடம் எல்லா விவரத்தையும் சொல்லி,’என் பொண்ணே இப்படிப் பண்ண உங்க பையன் நன்னா வே இருக்க மாட்டான்.அவனுக்கு நல்ல சாவே கிடைக்காது,உங்க குடும்பம் நன்னாவே இருக்காது. நாசமாத் தான் போயிடும்,எங்க வயித்தெறிச்சல் உங்களை சும்மா விடாது’ன்னு சொல்லி பிடி சாபம்’ குடுத்தாடா.நீ அந்த மாமி சொன்னா மாதிரி பண்ணீஅந்த பொண்ணை ‘கெடுத்தியாடா’”என்று உரக் க கத்திக் கேட்டாள் லலிதா.

“அப்படி எல்லாம் நான் ஒன்னும் பண்ணலையேம்மா.நான் ஆறுமுகத்துக்கு லீவு குடுத்தேன். உண்மை தான்.நான் இல்லைன்னு சொல்லலேயே.ஆறுமுகம் போனவுடன் நானும் உடனே வெளியே போயிட்டேனே.அந்த மாமி உன் கிட்டே ஏதோ கதை விடறா.அந்த பொண்ணுக்கு ஏதாவது ‘கள்ளக் காதல்’ இருந்திருக்கும்.அந்த கள்ள காதலனாலே அந்த பொண்ணு கர்ப்பமா ஆக்கி இருப்பா. அதை மறைக்க அந்த மாமியும்,அந்தப் பொண்ணும்,அந்த பழியை என் மேலே போட்டு நமப் கிட்டே ரெண்டு லஷமோ,மூனு லக்ஷமோ கறக்க பாக்காறா.அந்த மாமி சொன்னது எல்லாம் சுத்தப் பொய். நான் அந்த மாதிரி எல்லாம் ஒன்னும் பண்ணலேம்மா”என்று பதிலுக்கு சொல்லி விட்டு ரமேஷ் தன் ‘பெட்ரூமு’ க்கு போக ‘பெட் ரூம்’ கதவை திறந்தான்.’ஐயையோ,அந்த மாமி அன்னைக்கு நடந்ததை அம்மா, அப்பா,சுரேஷ் கிட்டே சொல்லி இருக்காளே.நாம் ஏதாவது பொய் சொல்லித் தான் சமாளிச்சுண்டு வரணும்.நாம கொஞ்சம் பயந்தா போல பேசினா கூட அம்மா கண்டு பிடிச்சிடுவா.அதனால்லெ நாம ஜாக்கிறதையா பேசி மாட்டிக்காம வெளியே வரணும்.எந்த காரணம் கொண்டும் நாம பிடி குடுக்காம பேசி வரணும்.அப்ப தான் நாம அம்மா கிட்டே மாட்டிக்காம இருக்க முடியும்’ என்று முடிவு பண்ணி னான் ரமேஷ்.

”ரமேஷ்,சும்மா இந்த மாதிரி சொல்லிட்டு போற சமாசாரம் இல்லேடா இந்த சமாச்சாரம். நீ இங்கே நின்னு நான் கேக்கற கேள்விக்கு எல்லாம் சா¢யா பதில் சொல்லணும்.எங்களுக்கு நீ சொல்றது பொய்யா,இல்லை அந்த மாமி சொல்றது பொய்யான்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்.அன்னைக்கு நீ வெளியே போக இருந்தே இல்லையா” என்று கேட்டு நிறுத்தினாள் லலிதா. ஆமாம்” என்றான் ரமேஷ். “சமையல்கார மாமி கிட்டே உனக்கு சமையல் ஒன்னும் பண்ண வேணாம்.நான் என் ‘ப்ரெண்ட் ஸோடு’ வெளியில் சாப்பிட போவதா சொன்னே இல்லையா” என்று கேட்டாள் லலிதா.“ஆமாம்”என்று சொல்லி விட்டு நின்றுக் கொண்டு இருந்தான் ரமேஷ்.”ஆத்லே வேலை எதுவும் இல்லைன்னு சொல்லி ஆறுமுகம் உன்னிடம் லீவு வேணும்னு கேட்டானா”என்று லலிதா கேட்டதற்கு “இல்லை” என்று ரமேஷ் சொன்னதும் “அப்படி அவன் உன்னை லீவு கேக்காத போது,நீ ஏன் ஆறுமுகத்துக்கு லீவு குடுத்து அனுப்பினே” என்று விடாம கேட்டாள் லலிதா.அம்மா இப்படி கேப்பான்னு அவன் எதிர் பார்க்கவில்லை.ரமேஷ் கொஞ்சம் ஆடி போய் விட்டான்.

“இல்லை அவன் லீவு கேக்கலே.நானா தான் அவனுக்கு லீவு குடுத்தேன்”என்று பதில் சொல்லி விட்டு தன் ரூமுக்குப் போக கிளபினான்.”போகாதே ரமேஷ் கொஞ்சம் இரு.அவனை இந்த ஆத்தில் இருந்து நீ அனுப்பி விட்டு,யாரும் இந்த ஆத்லே இல்லாத இருக்கும் போது நீ அந்த மாமிக்கும் அவ பொண்ணுக்கும் மூக்கிலே மயக்க மருந்தைக் காட்டி அவாளுக்கு மயக்கம் வர வைத்து விட்டு நீ அந்த பொண்ணை ‘கெடுத்து’ இருக்கே இல்லையா” என்று லலிதா கேட்டதும் “இல்லேம்மா.என்னை நம்பும் மா.நான்அப்படி பண்ணலேம்மா” என்று சொன்னான் ரமேஷ்.“சா¢,நான் உன்னை நம்பறேண்டா.அந்த மாமிக்கு நம்ம ஆத்லே அன்னைக்கு சமையல் வேலை இல்லே.அந்த மாமிக்கு அன்னைக்கு பூராவும் ரெஸ்ட்.அப்படி இருக்கும் போது அந்த மாமியும்,அவ பொண்ணும்,நம்ம ஆத்தே விட்டு போகும் போது அழுதுண்டு போனான்னு அந்த கூர்க்கா சொன்னானேடா.அவா ரெண்டு பேரும் அன்னைக்கு ஏண் டா அழுதுண்டு போனா” என்று லலிதா கேட்டதும்“அந்தப் பொண்ணு தன் காதலை பத்தி அவ அம் மா கிட்டே சொல்லி இருப்பா.அது அந்த மாமிக்கு பிடிச்சி இருக்காது.அந்த மாமி அந்தப் பொண் ணைத் திட்டி இருப்பா.அதனாலே அந்தப் பொண்ணு ’நம்ம அம்மா நம்ம காதலை ஏத்துக்கமாட்டேன் னு சொல்றாளேன்னு’ வருத்தப்பட்டு அழுது இருப்பா.பொண்ணு அழறதைப் பாத்த அந்த மாமிக்கும் அழுகை வந்து இருக்கும்.அதான் அவா ரெண்டு பேரும் அழுதுண்டு போனான்னு அந்த கூர்க்கா சொல்லி இருப்பான்னு நான் நினைக்கிறேன்” என்று சொன்னான் ரமேஷ்.“அப்படி அழுதா கூட,அவா வாசலுக்குப் போய் கூர்க்காவை தாண்டி போகும் போது கூடவா அழுதுண்டு போயிருப்பா.எனக்கு நம் பிக்கை இல்லேடா.இந்த ஆத்லே அவா ரெண்டு பேருக்கும் ஏதாவது ‘நடக்கக் கூடாதது’ நடந்து இரு க்கு.அதானாலே தான் அவா ரெண்டு பேரும் அந்த துக்கத்தை தாங்கிக்க முடியாம அழுதுண்டு போ யிருப்பான்னு எனக்குத் தோன்றது.நீ உண்மையைச் சொல்லு.அந்த மாமி சொன்னது போல பண்ணி நீ அந்த பொண்ணை ‘கெடுத்தியாடா’ “என்று மறுபடியும் கேட்டதற்கு “இல்லேம்மா,நான் அப்படி எதுவும் செய்யலேம்மா”என்று ரமேஷ் பதில் சொன்னான்.

இதுவரை சும்மா இருந்த மேகநாதன் “எனக்கும் உன் பேர்லே நம்பிக்கை இல்லேடா.ஆறு மாசம் ஆனப்புறம் எங்களை அந்த மாமி திடீரென்று கோவிலிலே பாத்தவுடன் இப்படி ‘சீறிப் பாயும்’ புலி மாதி ரி எல்லா விஷயத்தையும் சொல்லி ‘உங்க குடும்பம் நன்ன இருக்காது,நாசமா போயிடும்,எங்க வயத் தெரிச்சல் உங்களை சும்மா விடாதுன்னு’ கத்தி சொன்னாளே.அந்த மாதிரி நடக்காம இருந்தா அந்த மாமி திடீரென்று அப்படி ‘பிடி சாபம்’ குடுத்து இருக்க முடியாது.அந்த மாமி கத்தி குடுத்த ‘பிடி சாபம்’ இன்னும் என் காதிலே ¡£ங்காரம் பண்ணிண்டு இருக்குடா.அந்த மாமி நம்மைப் பாத்து நாம குடுத்த சம்பள பணத்துக்கு மேலே ஒரு நயா பைசாக் கூடக் கேட்டது இல்லையேடா”என்று அவர் உணர்ச்சிப் பட்டுக் கேட்டார் மேகநாதன்.‘அப்பா சொன்னதுக்கு என்ன பதில் சொல்வது’ என்று தெரியாமல் தவித் தான் ரமேஷ்.இப்படி அம்மாவும் அப்பாவும் நம்மை மாத்தி மாத்திக் கேக்கறாளே’ நாம் என்ன பண்ணு வது என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான் ரமேஷ்.
கொஞ்ச நேரம் ஆனதும் கொஞ்சம் சிரித்து கொண்டே ”அப்பா,நீ அந்த மாமி நடிப்பை பாத்து ஏமாந்துப் போயிட்டே. நீ வேணும்ன்னா பாரேன்.இன்னும் கொஞ்ச நாள்ளே நான் சொன்னாப் போலே அந்த மாமி நம்மை ‘ப்லாக் மெயில்’ பண்ணி பணம் கேக்க வருவா.அப்போ உனக்கு எல்லாம் புரியும்” என்று தன் கதையைத் தொடர்ந்து சொன்னான் ரமேஷ்.மேகநாதனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.ரமேஷ் சொல்வது நிச்சியமாக உண்மையாக இருக்காது என்று தான் அவர் உள் மனம் அவரை உணர்த்தியது.’தான் சொன்னதை தன் அப்பா நம்பி விட்டார்’ என்று எண்ணி ரமேஷ் தன் ரூமுக்குக் கிளம்பிப் போய் விட்டான்.ரமேஷ் போனவுடன் சுரேஷ் “அந்த சமையல்கார மாமியும்,அவ பொண்ணும் வாரத்லே ஏழு நாளும் நம்ம ஆத்துக்கு சமையல் பண்ண வந்துண்டு இருந்தா.நாம திரு ப்பதிக்குப் போய் திரும்பி வந்து,நாளையோட ஏழு மாசம் ஆறது.அந்த பொண்ணேப் பாத்தா அவ ஆறு மாச கர்பிணி போல இருக்கு.ரமேஷ் அந்த மாமி சொன்னது போல ‘பண்ணி’ இருக்கணும்.எனக் கு என்னமோ ரமேஷ் சொல்றது சுத்த பொய்ன்னு தோன்றது” என்று தன் கணிப்பை சொன்னான்.

தன் பெட் ரூமுக்குப் போன ரமேஷ் ஹாலில் சுரேஷ் சொன்ன காரணத்தைத் கேட்டு திடுக் கிட்டான்.சுரேஷ் சொல்ற்து உண்மையா இருக்கும்.’நம்மால் தான் அந்த லதா கர்ப்பமா ஆயி இருக்கா. இனிமே நாம என்ன பண்ணப் போறோம்.அந்த சமையல்கார மாமி குடுத்த சாபம் பலிச்சிடுமா’ என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டான்.லலிதா “மணி பன்னண்டு அடிச்சுட்டது.வாங்கோ எல்லாரும் படுக்க போகலாம்.ரமேஷ் சொன்னதை என்னால் நம்ப முடியலே.ஆனா அந்த மாமி கோவில்லே திடீ ரென்று இப்படி பேசினதில் மட்டும் ஏதோ ஒரு உண்மை இருக்குன்னு மட்டும் எனக்குப் படறது. நான் நாளைலே இருந்து தீர விசாரிக்க போகிறேன்.நான் அவசரப் படபோவதில்லை.இதுக்கு நடு விலே அந்த மாமி குடுத்த சாபம் நம்ம குடும்பத்தை தாக்காம இருக்கணுமேன்னு நான் அந்த பகவனை வேண்டிண்டு வரப் போறேன் பார்க்கலாம்”என்று சொல்லி எழுந்தாள் லலிதா.தூக்கம் வராததால் கா லையிலேயே எழுந்து விட்டாள் லலிதா.அவள் பல் தேய்த்துக் கொண்டு வந்தவுடன் சமையல்கார மாமி சூடா முதல் டிக்காக்ஷனில் போட்ட காபியை மணம் பறக்க கையில் எடுத்துக் கொண்டு வந்து லலிதா முன்னால் வைத்தாள்.சமையல் கார மாமி லலிதா முகத்தைப் பார்த்தாள். லலிதா ராத்திரி பூரா தூங்காததால் அவள் கண்கள் கோவைப் பழம் போல் சிவந்து இருந்தது.இதை பார்த்த சமையல்கார மாமி “என்ன மேடம் உங்க கண்ணு ரெண்டும் இப்படி சிவந்து இருக்கு.ராத்திரி பூரா நீங்க தூங்கலை யா” என்று விசாரித்தாள்.

லலிதா ‘இவளுக்கு என்ன நம் குடும்ப சமாசாரத்தை சொல்லிண்டு இருப்பது,இவ வந்து அந்த ‘ப்ராப்லெத்தை’ தீத்து வைக்க போறாளா என்ன’ என்று நினைத்து லலிதா “நீங்க போய் உங்க வேலை யை கவனியுங்கோ” என்று சொல்லி சமையல்கார மாமியை அனுப்பினாள் லலிதா.சமையல் ரூமுக்குப் போன சமையல்கார மாமி வருத்தப் பட்டாள்.’இந்த மேடத்தை போய் நான் ராத்திரி பூரா தூங்கலையா ன்னு விசாரிச்சேன் பாரு,என் புத்தியை கிழிஞ்ச செருப்பால் தான் அடிச்சுக்கணும்.இந்த மேடம் ஒரு ‘பணக்கார கர்வி’ ன்னு நன்னா தெரியுமே.நான் அவளைக் கேட்டே இருக்கக் கூடாது.இந்த மேடம் தூங்கினா என்ன,தூங்காட்டா என்னன்னு நான் காபியை குடுத்து விட்டு என் வேலையை கவனிக்க வந்து இருக்கணும்.நான் இந்த மேடத்துக்கு கிட்டே கை நீட்டி சம்பளம் வாங்கிகிற ஒரு சமையல் காரி தானே.அந்த மேடத்துக்கு உறவா, ஒட்டா.சுத்த திமிர் பிடிச்ச மேடம்” என்று தன் மனதில் தன்னையே திட்டிக் கொண்டாள் சமையல்கார மாமி.

பல்லை தேய்த்து விட்டு வந்த மேகநாதன் தன் மணைவியின் கண்களை கவனித்தார்,”என்ன லலி,உன் கணணு ரெண்டும் இப்படி சிவந்து இருக்கு.நீ ராத்திரி கொஞ்சம் கூட தூங்கலையா”என்று விசாரித்தர் “நம்ம ஆம் இருக்கும் அழகுக்கு எப்படி எனக்கு தூக்கம் வரும் சொல்லுங்கோ.ஒன்னும் தெரியாத மாதிரி என்னை கேக்கறேளே.நீங்கக் கூடத்தான் தூங்கலே.நான் பாத்துண்டு தான் இருந்தேன்” என்று சொன்ன லலிதா சட்டென்று சமையல் கட்டை பார்த்தாள்.பிறகு “இப்ப ஒன்னும் பேச வே ணாம்,அந்த மாமி காதிலே விழ போறது”என்று சைகை காட்டினாள்.மேகநாதனும் புரிந்து கொண்டு ஒன்றும் பேசாமல் இருந்தார். சமை¨ல் ரூமில் இருந்த சமையல்கார மாமி ‘நாம ஒன்னும் இந்த மேடத் தை தப்பா கேக்கலேயே.மேடமும் தூங்கலே,அவரும் தூங்கலே.இவா ஆத்திலெ ஏதோ ஒரு ‘பெரிய ப்ராப்லெம்’இருக்கு.அதை சொல்ல அந்த மேடத்துக்குப் பிடிக்கலே.பாக்கலாம்,விஷயம் வெளியே வரா மலா இருக்க போறது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.லலிதாவும் ஒரு பெண் தானே. ஒரு பெண்ணின் கஷ்டம் இன்னொரு பெண்ணுக்கு தெரியாதா.அதுவும் அந்த பெண்ணுக்கு ஏற்பட்டு இருக்கும் ‘கஷ்டம்’ சதாரணமான கஷ்டமா.எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரி ‘கஷ்டம்’ வாழ்க்கைலே ஏற்படலாமா.மறுபடியும், மறுபடியும் காயத்திரி குடுத்த ‘பிடி சாபம்’ தன் குடும்பத்தை தாக்காம இருக்க வேணுமே’என்று கவலைப் பட்டு வந்தாள் லலிதா.

‘பாகடா¢’க்குப் போன ரமேஷ் முதல் வேலையாக வரதனுக்கு போண் பண்ணி “வரதா, நீ வே ண்டி வந்தது வீண் போகலே.அந்தப் ‘பொண்ணு’ கர்ப்பத்தை கலைக்காம இப்போ ‘பாமிலி வேயில்’ இருக்கான்னு,எனக்கு தெரிய வந்து இருக்கு.உனக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’ வரதா.நான் எப்படியாவது அந்த பொண்ணை சந்திச்சு, அவளுக்கும், குழந்தைக்கும்,பணம் குடுத்து ‘ஹெல்ப்’ பண்ண பாக்கறே ன்” என்று சொன்னதும் வரதன்” ரொம்ப சந்தோஷமா இருக்குர மேஷ்.நீ எப்படியாவது அதை முதல் லே பண்ணு” என்று சொன்னான்.

அடுத்த நாள் காலையிலே குளித்து விட்டு வேலைக்கு கிளம்ப தயாரானாள் காயத்திரி.கிளம்பும் போது “லதா,யாராவது கதவைத் தட்டினா,நீ யார்ன்று கேட்டுண்டு கதவை தொற.அவசரப் பட்டு விசா ரிக்காம கதவை தொறந்து விடாதே.ஜாக்கிறதையா இருந்து வா”ன்று எச்சா¢த்தாள்.”சா¢ம்மா நான் ஜா க்கிரதையா இருந்து வரேன்ம்மா.நீ கவலைப் படாம வேலைக்குப் போய் வாம்மா”என்று சொல்லி தன் அம்மாவை அனுப்பி விட்டு கதவை தாள் போட்டுக் கொண்டாள் லதா.மாசம் அதிகம் ஆகி விட்டதால் லதாவுக்கு அதிக நேரம் நடக்க முடியவில்லை.’மெஸ்’ வேலையை முடித்துக் கொண்டு தன் ‘போர்ஷனு’க்கு வந்தாள் காயத்திரி.லதாவுக்கு மாசம் ஆகி வருவதை நினைத்து கவலைப் பட்டாள் காயத்திரி. ”லதா,உனக்கு அடி வயித்தே வலிக்க ஆரம்பிச்சா உடனே எனக்கு சொல்லு.பராக்கா இருந்து டாதே” என்று எச்சா¢த்தாள்.உடனே லதா ”நான் நிச்சியமா சொல்றேன்” என்று சொன்னாள்.

லதாவுக்கு ஒன்பது மாதம் முழுக்க ஆகி விட்டது.ஒரு வாரம் ஆனதும் லதாவுக்கு காலையிலே இருந்து அடி வயிறு வலிக்க ஆரம்பித்தது.’அம்மா,அவா ஆத்துக்குப் போய் காபி டிபன் எல்லாம் பண்ணிட்டு வரட்டும்.அப்புறமா அம்மா கிட்டே சொல்லலாம்”என்று காத்துக் கொண்டு இருந்தாள். அம்மா ஒன்பரை மணிக்கு ஆத்துக்கு வந்தவுடன் லதா அம்மாவிடம் தன்னைப் பத்தி சொன்னாள். உடனே காயத்திரி “லதா,எனக்கு என்னவோ இந்த வலி பிரசவ வலியாத் தான் இருக்கும்.நான் மாமி கிட்டே சொல்லிட்டு உன்னை ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’அழைச்சுண்டு போறேன்” என்று சொல்லிவிட்டு, முன் பக்கம் வந்து மாமி கிட்டே சொல்லி விட்டு லதாவை ஒரு ஆட்டோவிலே ஏத்திக் கொண்டு ‘நர்ஸி ங்க் ஹோமுக்கு’ போய் டாகடர் நிர்மலாவிடம் லதா சொன்ன விவரத்தை சொன்னாள்.டாக்டர் “நீங்க லதாவை உடனே ‘அட்மிட்’ பண்ணிடுங்கோ.மத்ததே நான் பாத்துக்கறேன்.நீங்க ஆத்துக்கு நிம்மதி யா போய் வாங்கோ” என்று சொன்னதும் காயத்திரி லதாவை ‘அட்மிட்’ பண்ணி விட்டு லதா கிட்டே சொல்லி விட்டு தன் ‘போர்ஷனு’க்கு வந்தாள்.சுவாமி படத்துக்கும்,கணவர் படத்துக்கும் நமஸ்காரம் பண்ணி விட்டு “நான் லதாவை அந்த ‘நர்ஸிங்க் ஹோமிலே ‘அட்மிட்’ பண்ணிட்டு வந்து இருக்கேன். உங்க ரெண்டு பேருடைய ஆசீர்வாத்தாதாலே,அவளுக்கு சுகப் பிரசவம் ஆயி,அவளும் குழந்தையும் சௌக்கியமா ‘போர்ஷனு’க்கு வரணும்” என்று வேண்டி கொண்டாள்.

மணி காலை நாலு இருக்கும்.காயத்த்ரி காபி போட்டுக் கொண்டு இருந்தாள்.டாக்டர் சேகர் தன் அக்காவுக்கு போன் பண்ணீ “அக்கா,லதாவுக்கு சா¢யா மூனு பத்துக்கு சுகப் பிரசவம் ஆயி,ஒரு அழகான ஆண் குழந்தை பொறந்து இருக்கு.லதாவும் குழந்தையும் ‘பைன் ஆ’ இருக்கா. நீங்க அந்த மாமி கிட்டே சொல்லிடுங்கோ” என்று சொல்லி போனை ‘கட்’ பண்ணினான்.உடனே மாமி காயத்திரி யை கூப்பிட்டு சந்தோஷ சமாசாரத்தை சொன்னாள்.காயத்திரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவள் உடனே ரெண்டு கைகளையும் கூப்பி “நீங்க பண்ணி இருக்கும் இந்த பெரிய உதவிக்கு,உங்களுக்கு நான் என்ன கைமாறு பண்ணப் போறேன்.நான் ஒரு ஏழை சமையல்கார மாமி”என்று சொல்லி கண்க ளில் தாரை தாரையாக கண்ணீர் விட்டுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.உடனே அந்த மாமி ”நீங்க இப்போ காபி போட்டு முடிச்சாச்சு.நிம்மதியா நீங்க போய் உங்க பொண்ணையும்,பேர னையும்,‘நர்ஸிங்க் ஹோமிலே’ போய் பாருங்கோ.என் பையணும்,மாட்டுப் பொண்ணும் வந்ததும், அவாளையும் அழைச்சுண்டு, நாங்க நாலு பேரும் ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ வந்து லதாவையும் குழந்தை யையும் பாத்துட்டு,அப்படியே வெளியிலே சாப்பிட்டுட்டு வறோம்.நீங்க ராத்திரிக்கு இங்கே ஒன்னும் பண்ண வேணாம்” என்று சொன்னதும் காயத்திரி “’ரொம்ப தாங்க்ஸ்’ மாமி”என்று சொல்லி விட்டு ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ வந்தாள்.

டாகடர் நிர்மலா காயத்திரியைப் பார்த்து “உங்க பொண்ணுக்கு சுகப் பிரசவம் ஆயி,அவளும் உங்க பேரனும் சௌக்கியமா இருக்கா.அவா ரெண்டு பேரும் இப்ப ICUவிலே இருக்கா.நீங்க அவா ரெண்டு பேரையும் பாருங்கோ”என்று சொல்லி காயத்திரியை அழைத்து கொண்டு,ICU வாசலிலே, அவ செருப்பை கழட்டி வைக்க சொல்லி,அங்கே இருந்த காலணிகளை போட்டுக்க சொல்லி ICU க்குள் அழைத்துப் போய் லதாவையும் குழந்தையையும் காட்டினாள்.காயத்திரி சந்தோஷம் பொங்க “உங்களுக்கு எப்படி என் நன்றியை சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறேன்.நான் ஒரு ஏழை சமை யல்காரி.நீங்க தான் எங்களுக்கு தெய்வம்”என்று கண்களில் கண்ணிர் தளும்ப சொன்னாள். ”மாமி, நீங்க என்னை தெய்வம்ன்னு எல்லாம் சொல்லாதீங்க.இந்த ‘நர்ஸிங்க் ஹோம்’ ஓனர் டாகடர் சேகர் தான் உங்க பொண்ணுக்கு ‘ப்¡£யா’ பிரசவம் பண்ணச் சொல்லி இருக்கார்”என்று சொல்லி கொண்டு இருக்கும் போது டாக்டர் சேகர் ICUக்குள் வந்தார்.உடனே அவர் “மாமி,நீங்க டாக்டர் நிர்மலா கிட்டே சொல்லிண்டு இருந்ததை நான் கேட்டேன்.நீங்க யாரையும் தெய்வம்ன்னு சொல்ல வேணாம்.எங்க அக்கா தான் எல்லாம் வைத்தியமும் ‘ப்¡£யா’ பண்ணச் சொன்னா.நீங்க எங்க அக்காவுக்கு உங்க நன் றியை சொல்லுங்க”என்று சொல்லி சிரித்தார்.காயத்திரி லதாவையும் குழந்தையையும் மா¡றி மாறி பார் த்துக் கொண்டு இருந்தாள்.உடனே லதா ”லேடி டாக்டர்,எனக்கு சுகப் பிரசவம் பண்ணி,ஒரு ஆண் குழந்தையை பொறக்க வச்சு இருக்கார்.உங்க ரெண்டு பேருக்கும் என்னுடைய நன்றிகளை நான் சொ ல்றேன்”என்று தன் கைகளை கூப்பி சந்தோஷத்தில் சொன்னாள் லதா.

காயத்திரி கொஞ்ச நேரம் லதாவையும் குழந்தையையும் பார்த்து விட்டு ICUவை விட்டு டாக்டர் களுடன் வெளியே வந்தாள்.டாக்டர் நிர்மலா காயத்திரியைப் பார்த்து “அவா ரெண்டு பேரும் ‘நர்சிங்க் ஹோமிலெ’ இன்னும் மூனு நாள் இருக்கட்டும்.நான் அப்புறமா அவாளை ‘டிஸ்சார்ஜ்’ பண்றேன்” என் று சொன்னதும் காயத்திரி “சா¢ டாக்டர்” என்று சொல்லி விட்டு ICUக்கு வெளியே இருந்து லதாவுக்கு தன் கையை காட்டி ஆட்டி விட்டு தன் ‘போர்ஷனு’க்கு வந்தாள்.தன் கணவர் படத்துக்கும், சுவாமி பட த்துக்கும், முன்னாடி நின்றுக் கொண்டு “உங்க ஆசீர்வாதத்தாலே,லதாவுக்கு சுக பிரசவம் ஆயி,அவ ஒரு ஆண் குழந்தையோடு சௌக்கியமா இருக்கா.குழந்தை நல்ல கலரா ராஜா மாதிரி இருக்கான்” என்று சந்தோஷத்தில் சொல்லி விட்டு,ரெண்டு படத்துக்கும் நமஸ்காரம் பண்ணீனாள்.பிறகு காய த்திரி ஒரு ஆட்டோவை வைத்துக் கொண்டு ‘நர்ஸிங்க் ஹோமு’க்கு போனாள்.மணி ஏழறை இருக் கும்.மாமி,மாமா குமார்,மாலா நாலு பேரும் லாதாவின் குழந்தையைப் பார்க்க வந்தார்கள். காயத்திரியும் அவர்களுடன் ICUக்குள் போனாள்.லதாவையும் குழந்தையையும் பார்த்த அந்த மாமி “’கன்க்ராஜு லேஷன்ஸ்’ காயத்திரி.நீ ஒரு பாட்டி ஆயிட்டே. குழந்தே நல்ல கலரா ராஜா மாதிரி இருக்கான்”என்று சொல்லி காயத்திரி கையைக் குலுக்கினாள்.மாமி சொன்னதும் மாமாவும்,குமாரும்,மாலாவும் ஒரே சமயத்லே “ரொம்ப கரெக்ட்”என்று ஆமோதித்தார்கள்.பிறகு ICU வை விட்டு வெளீயே வந்த மாமி கா யத்திரியைப் பார்த்து “நாங்க வெளியிலே சாப்பிட்டுட்டு ஆத்துக்கு வறோம்” என்று சொல்லி விட்டு கா ரில் ஏறிப் போனார்கள்.

அடுத்த நாள் காயத்திரி காபி டிபனைப் பண்ணி விட்டு மாமி இடம் சொல்லி விட்டு ‘நர்ஸி ங்க் ஹோம்’ வந்தாள்.டாக்டர் லதாவையும் குழந்தையையும் ‘ஸ்பெஷல் வார்ட்டில்’ விட்டு இருந்தாள். காயத்திரி விசா¢த்துக் கொண்டு லதா இருந்த் ‘பெட்’டுக்கு வந்தாள்.லதாவையும் குழந்தையையும் பார்த்து விட்டு ”லதா இப்போ எப்படி இருக்கே”என்று கண்களில் கண்ணிர் தளூம்ப கேட்டாள்.”அம் மா,நான் ‘பைனா’ இருக்கேன்.நீ ICUக்குள் வந்தப்ப குழந்தை பாத்தியா.குழந்தை எப்படி நல்ல கலரா ராஜா மாதிரி இருக்கான் பாரு”என்று சந்தோஷத்தில் சொன்னாள்.உடனே காயத்திரி “நான் குழந்தையை நன்னா பாத்தேன்.நீ சொல்றது உண்மை தான்.என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்று சந்தோஷத்தில் சொல்லி அவ கண்களைத் துடைத்துக் கொண்டு,திருஷ்டி கழித்தாள்.கொஞ்ச நேரம் ஆனதும் ஒரு நர்ஸ் உள்ளே வந்தாள்.அந்த நர்ஸ் லதாவின் குழந்தையைப் பார்த்தாள்.“அம்மா குழந்தை ராஜா மாதிரி நல்ல அழகா இருக்கான்.நல்ல கலர் கூடமா குழந்தைக்கு.அவங்க கலரை அப் படியே கொண்டு வந்து இருக்கான்.குழந்தை பொறந்தா நல்ல கலரா பொறக்கணும்ங்க” என்று சொல்லி லதாவின் குழந்தையைப் பாராட்டினாள் அந்த நர்ஸ்.பாவம் அந்த நர்ஸ் நல்ல கருப்பு.

கொஞ்ச நேரம் ஆனதும் அந்த நர்ஸ் “அம்மா,நான் உங்களை பிடிச்சிக்கிறேன்.நீங்க மெல்ல எழுந்து இந்த சோபாவில் ஒரு பத்து நிமிஷம் உக்காருங்க.நான் உங்க ‘பெட்டின்’ துணிக¨ளையும், தலையணை உறையையும் மாத்திடறேன்” என்று சொல்லி லதாவை கைத் தாங்கலாப் பிடித்து மெல்ல சோபாவில் உட்கார வைத்தாள் அந்த நர்ஸ்.‘என்ன அழுக்கு இருக்கு இந்த ‘பெட்டி’ல்,இந்த தலைய ணை உறையில்.இந்த நர்ஸ் ஏன் இவைகளை மாத்தறா’ என்று ஆச்சா¢யப் பட்டாள் லதா.அந்த நர்ஸ் துணிகளை மாத்தி கொண்டு இருக்கும் போது லதா “ICUவுக்கு ஒரு நாள் சார்ஜ் எவ்லளவுங்க” என்று கேட்டாள்.அந்த நர்ஸ் “முப்பதாயிரம் ரூபாய்ங்க” என்று சொன்னாள்.லதா விடாம “இந்த ரூமுக்கு என் னங்க ஒரு நாளைக்கு வாடகை” என்று கேட்டாள்.”ஒரு நாளைக்கு ஆறாயிரம் ரூபாய்ங்க” என்றாள் அந்த நர்ஸ்.“பிரசவத்துக்கு என்ன ‘சார்ஜ்’ பண்றாங்க”என்று கேட்டாள் லதா.’ ”நார்மல்” டெலிவரிக்கு பத்தாயிரம் ரூபாய் சார்ஜ் பண்ணுவாங்க.’ஆபரேஷன்’ பண்ணா அதுக்கு ‘சார்ஜ் எல்லாம் எனக்குத் தெ ரியாதுங்க.உங்களுக்கு சாதாரண ‘டெலிவரியா’,‘ஆபரேஷனாங்க”என்று கேட்டாள் அந்த நர்ஸ். ”எனக் கு ‘நார்மல் டெலிவரி’ தாங்க”என்று சொன்னாள் லதா.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *