தீராத விளையாட்டுப் பிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 4,933 
 
 

அப்பாவுக்கு இறுதி சடங்குகள் யாவும் நல்ல படியாக நடந்து முடிந்தது. நான் எனது உடைகளை பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தேன். மாலை ஆறு மணிக்கு சென்னைக்கு டிரெயின். எல்லா உடைகளையும் எடுத்து வைத்து பெட்டியை மூடிய போது சித்தி அறைக்குள் நுழைந்தாள். அப்பாவின் இரண்டாவது மனைவி. பெயர் கற்பகம்.

உள்ளே நுழைந்தவளை நான் நிமிர்ந்து பார்த்தேன். அவளது முகம் மிகவும் வாடிப்போய் இருந்தது. கெளம்பிட்டியா கார்த்திக்.? என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

ம்ம்ம். . ஆறு மணிக்கு டிரெயின் சித்தி.

சித்தி அதற்குமேல் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். எதையோ கேட்க நினைப்பவள், அதை சொல்ல முடியாமல் தவிப்பதாய் தெரிந்தது. நான் முள் மேல் நிற்பவன் போல பொறுமை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அவளை பார்க்க பார்க்க எனக்கு வெறுப்பு கூடிக்கொண்டே போனது. அவள் மேல் கொலைவெறியாய் இருந்தேன். அவள் சீக்கிரம் அந்த இடத்தை விட்டு போனால் பரவாயில்லை என்று தோன்றியது.

என்ன விஷயம் சித்தி.? எதையோ சொல்ல நினைச்சு ஒன்னும் சொல்லாம நிக்கிறீங்க.?

அது . . . அது. . . சித்தி தயங்கினாள்.

சொல்லுங்க . . .

அது. . . உங்கிட்ட எப்படி கேட்கிறதுன்னு தெரியலையடா தம்பி. . . அது.. அது.. வந்து.,

என்ன விஷயமுன்னு சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று எரிச்சலாக கத்தினேன். சித்தி மேலும் சிறிது தயங்கி விட்டு பின் மெதுவாக. நானும் உங்கூட மெட்ராஸ் வந்து விடவா என்று கேட்டாள்.

சித்தி அப்படிக் கேட்டதும் என் மனதில் ஒரு மயான அமைதி. அவள் இப்படி கேட்பாள் என நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இந்த உலகத்திலேயே எனக்கு பிடிக்காத நபர் எனது சித்தி தான். அவளை அழைத்துப் போய் என் வீட்டில் வைத்துக் கொள்வதா.? எனக்கு சிரிப்பு தான் வந்தது. பழைய நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாய் என் மனதில் மின்னல் போல வெட்டின. அப்போதெல்லாம் எங்கள் ஊரிலேயே என்னுடைய அப்பா தான் மிகப்பெரிய பணக்காரர். தோப்பு தொறவு என ஏகப்பட்ட சொத்து இருந்தது. அந்த சொத்துக்களெல்லாம் இப்போது போன இடம் தெரியவில்லை.

தொலைத்தவள் இதோ எதிரில் நிற்கிறாள், பழிக்காரி. நான் என் அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை, ரொம்ப செல்லம், எனக்கு கேட்டதெல்லாம் கிடைக்கும். மூன்று பேரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தோம். மிகவும் சந்தோஷமாக இருந்த எங்கள் வாழ்க்கையில் புயலாய் நுழைந்தாள் இந்த கற்பகம். எங்கள் வீட்டு மாட்டு தொழுவத்தில் சாணி அள்ளிக்கொண்டு இருந்தவள், சந்தர்ப்பத்தை உருவாக்கி விரைவில் வீட்டுக்கே எஜமானியானாள். அப்பாவை தன் மாய வலையில் வீழ்த்தி அவர் கையால் இரண்டாம் தாரமாக தாலி வாங்கிக் கொண்டாள்.

அதன் பிறகு எங்கள் வீட்டில் அவள் வைத்தது தான் சட்டமாக இருந்தது. நானும் அம்மாவும் தினம் தினம் இவளுடைய கொடுமைகளை அனுபவித்து வந்தோம். அப்பா எதையும் கண்டு கொள்வது கிடையாது. கற்பகத்தின் மீது இருந்த மோகம் அவருடைய கண்களை கரிய மேகமாய் மறைத்தது. கண்ணிருந்தும் குருடராய், காது இருந்தும் செவிடராய் அவர் மரக்கட்டையாக, அதனால் அதிகம் பாதிக்கப்பட்டது அம்மாவும் நானும் தான். அப்பாவின் அலட்சியம் அம்மாவின் பாதி உயிரை எடுத்தது. கற்பகத்தின் அராஜகம் அம்மாவின் மீதி உயிரையும் குடித்தது. எனக்கு பதினொரு வயது இருக்கும் போதே அம்மா உயிரை விட்டாள்.

அம்மா இறந்த பிறகு எனது நிலைமை மோசமானது. என்னை ஒரு வேலைக்காரனைப் போல சித்தி நடத்த ஆரம்பித்தாள். தனது கொடூர முகத்தை ஒன்றுமறியாத என்னிடம் காட்டினாள். தோப்பில் தேங்காய் காணாமல் போன போது நான் தான் திருடி வித்திருப்பேன் என, ஊரின் எல்லா தெருவிலும் என்னை ஓடவிட்டு விரட்டி விரட்டி அடித்தாள். பசிக்கிறது என்று ஒரு நாள் ஒரு தோசை கேட்டேன், அதற்காக ஒரு நாள் முழுக்க சாப்பாடு போடாமல் பட்டினிப் போட்டாள். மறுபடி ஒரு நாள் பசி தாங்க முடியாமல் பழைய சோற்றை போட்டு சாப்பிட்டதற்கு என் கையில் சூடு வைத்தாள். இன்னும் அந்த தழும்பு மறையாமல் இருக்கிறது. ஒரு நாள் அவள் குளிக்க வெந்நீர் போடச் சொன்னாள், நான் போட்டு கொல்லையில் கொண்டு போய் வைத்தேன். சூடு அதிகமாக இருந்த காரணத்தால் அன்று மூங்கில் பிரம்பால் அடியோ அடியென்று அடித்து தோலை உரித்து விட்டாள். எனக்கு ஜன்னி கண்டு விட்டது. ஒரு வாரமாய் படுத்தப் படுக்கையாய் இருந்தேன்.

அப்போது தான் அப்பாவுக்கு லேசாக உரைக்க ஆரம்பித்தது. எங்கே சித்தி என்னை அடித்தே கொன்று விடுவாளோ என்று பயந்தார். ஒரு நல்ல காரியமாக என்னை வெளியூருக்கு அனுப்பி, ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தார். சித்தியின் கொடுமைகளிலிருந்து எனக்கு விடுதலை கிடைத்தது.

நான் மெல்ல மெல்ல சித்தியை மறந்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஹாஸ்டலுக்கு சென்ற பிறகு நான் ஊருக்கு வருவதில்லை. வருடம் ஒரு முறை கோடை விடுமுறைக்கு வருவதோடு சரி. அப்போதும் வீட்டிலேயே இருக்க மாட்டேன். நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருப்பேன், சித்தி தான் காரணம், எனக்கு அவள் முகத்தை பார்க்கவே பிடிப்பதில்லை. சித்தி என்றால் எனக்கு ஒரு அரக்கியின் முகம் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவள் மீது வெறுப்பு.

அப்பாவுக்கு என்னுடைய மனம் புரிந்திருந்தது. எதுவும் சொல்ல மாட்டார். அவருக்கு என் மேல் பாசம் இருந்தது ஆயினும் காட்டிக் கொண்டதில்லை. எனக்கு அவர் மேல் மதிப்பு இருந்தது ஆனால் பாசம் இருந்ததில்லை. இதோ… அவருடைய மரணம் கூட என்னை பெரிய அளவில் பாதித்ததில்லை.

பட்டப்படிப்பு முடிந்து சென்னைக்கு வேலை தேடிப் போனேன், ஒரு மாதத்திலேயே நல்ல வேலை கிடைத்தது. கை நிறைய சம்பளம். ஊருக்கு வருவதை அடியோடு நிறுத்திக் கொண்டேன். எல்லாம் இவளின் முகத்தில் விழிக்கக் கூடாது என்பதற்காக.

இவளுடைய பெண் யமுனாவின் கல்யாணத்துக்குக் கூட நான் வரவில்லை. எப்போதாவது அப்பாவுடன் போனில் பேசுவதோடு சரி. சொத்து எல்லாம் யமுனாவின் வீட்டுக்காரர் பெயருக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை அப்பா அழுது கொண்டே சொல்வார். நான் உணர்ச்சி இல்லாமல் கேட்டுக் கொள்வேன். கவலை மனதை அரிக்க, இப்போது அப்பாவும் மண்டையை போட்டு விட்டார். எல்லாவற்றுக்கும் காரணம் இதோ எதிரில் நிற்கும் இந்த ராட்சசி தான். குதூகலமாய் இருந்த குருவிக்கூட்டை குண்டு வைத்து தகர்த்த பாதகத்தி. இவளை எப்படி என்னுடன் வைத்துக் கொள்வது.?

அதெல்லாம் சரி வராது சித்தி. . நீங்க. இங்கேயே இருங்க.

வீடு, யமுனா வீட்டுக்காரர் பேர்ல இருக்குது தம்பி. . அவர் அடுத்த வாரம் இங்க குடி வர்றார்.

அப்போ யமுனா கூட இருந்துக்குங்க.

அ… அவ வீட்டுக்காரர் அதுக்கு ஒத்துக்கலை.

நான் சித்தியை ஏறிட்டுப் பார்த்தேன். அவள் கண்களில் லேசாக கண்ணீர் ததும்பி நின்றது. அழுகிறாயா…? நன்றாக அழுடி கல் நெஞ்சுக்காரி.. என்னை எவ்வளவு அழ வைத்திருப்பாய்.? எப்படி எல்லாம் துடிக்க வைத்திருப்பாய்.? இப்போது நீ அழுகிறாயா? அழுடி.. நன்றாக அழு பாசாங்குக் காரி எனக்கு அவள் மேல் துளி இரக்கமும் வரவில்லை, மாறாக ஒருவித குரூர எண்ணங்களே உருவானது. என்னை கொடுமை படுத்திய ராட்சசி, கண்ணீர் விட்டு அழும் காட்சி என் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவளிடம் அலட்சியமாக சொன்னேன்…

அதுக்கு என்னை என்ன பண்ண சொல்றீங்க.? சொத்தெல்லாம் அவர் பேருக்கு எழுதி வச்சுங்கில்ல..? அவர்கிட்ட போய் கேளுங்க.

அவர் கிட்ட கெஞ்சிப் பார்த்துட்டேன்டா தம்பி.. கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் நடந்துக்கிறாரு, எக்கேடு கெட்டு ஒழின்னு சொல்றாரு.

எனக்கு சிரிப்பாக வந்தது, ஈவு இரக்கத்தைப் பற்றி யார் பேசுவது.? அதற்கு என்ன அர்த்தம் என்றாவது உனக்கு தெரியுமாடி முண்டம்.? அதில் கடுகளவாது எனக்கு காட்டிருப்பியாடி வேசி முண்டை.? நான் என் மனதை இரும்பாக்கிக் கொண்டு..,

அப்போ அவர் சொல்ற மாதிரியே பண்ணுங்க… எக்கேடோ கெட்டு..? என் கூட எல்லாம் உங்களை வச்சுக்க முடியாது என்றேன்.

கா….கார்த்திக்…

என் முடிவை சொல்லிட்டேன், நீங்க கிளம்பலாம்.

கார்த்திக்… அப்படியெல்லாம் சொல்லாதேடா தம்பி, நீயும் இப்படி சொன்னால் சித்தி எங்கேடா போவேன்.?

எங்கவேணா போங்க, எனக்கு என்ன ஆச்சு.? நான் சொன்னா சொன்னது தான், இடத்தை காலி பண்ணுங்க – நான் இரக்கமே இல்லாமல் சொன்னேன்.

கார்த்திக்.. நீ ஏன் இப்படி சொல்றேன்னு எனக்கு புரியுது. உன் சின்ன வயசுல நான் உன்கிட்ட நடந்துக்கிட்டதை எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு தானே இப்படி பேசுறே, சித்தி ஏதாவது தப்பு பண்ணியிருந்தா என்னை மன்னிச்சுடுடா தம்பி. என்னை இங்க மட்டும் விட்டிட்டு போயிடாதேடா..

எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது, எல்லா கொடுமைகளையும் செய்து விட்டு இப்போது மன்னிப்பு கேட்கிறாள் மானங்கெட்டவள்..

மன்னிக்கிறதா.? மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தையில சொல்லிட்டா, எல்லாம் மாறிப்போயிடுமா.? நீங்க எனக்கு பண்ணுன கொடுமை எல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு மறக்காது, உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க, வேற என்ன பண்ணலாம்ன்னு யோசிங்க, போங்க…

கார்த்திக்… கார்த்திக்…அப்படி மட்டும் சொல்லாதேடா, நீ என்னை கூட்டிட்டு போகலைன்னா, பிச்சை எடுக்கிறதை தவிர எனக்கு வேற வழியில்லை, சித்தி மேல கொஞ்சம் கருணை காட்டுடா.. உன் காலை புடிச்சு கேக்குறேன், சித்தி சொல்லிக்கொண்டே எனது காலில் பட்டென்று விழுந்தாள். நான் பதறிப்போய் பின்னால் நகர்ந்து கொண்டேன்.

ஐயோ… என்ன இது…? கால்ல எல்லாம் விழுந்துகிட்டு… எந்திரிங்க.. எந்திரிங்கன்னு சொல்றேன்ல..

நான் சொன்னதும் சித்தி எழுந்து கொண்டாள். கண்களை துடைத்துக் கொண்டு என் எதிரில் நின்றவளை நான் வெறுப்போடு பார்த்தேன். அந்த சாகஸக்காரியை பார்க்கப், பார்க்க என் மனதில் கொடூரத் திட்டம் ஒன்று அரும்பு விட ஆரம்பித்தது. எனக்குள் தூங்கிக் கிடந்த மிருகம் சிலிர்த்துக் கொண்டு மெல்ல எழுந்தது. இவளை கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்து அழ வைத்து வேடிக்கைப் பார்க்க, பழி உண்ர்ச்சி கொரோனோ போல என் குருதியெங்கும் பரவியது.

சித்திக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். மாநிறம், இந்த வீட்டுக்கு வந்த போது ஒல்லியாக இருந்தவள், இப்போது உட்கார்ந்து உட்கார்ந்து தின்று கொழுத்துப் போய் அரேபிய குதிரை போல கொழு கொழுன்னு இருக்கிறாள். பெரிய அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும், அவள் முகத்தில் ஒரு வித வசீகர சக்தி இருப்பதை என்னால் உணர முடிந்தது. ஆளை மயக்கும் அந்த கவர்ச்சி தான் அப்பாவை மயக்கியது போலும், அப்பாவை வசப்படுத்திய அந்த கவர்ச்சி இப்போது எனக்குள் இருந்த கொடூர அரக்கனை உசுப்பி விட்டது. அந்த முகத்தில் திராவகத்தை ஊற்றி நாசப் படுத்த வேண்டும். இவளை சென்னைக்கு அழைத்துச்சென்று அடிமையாக்கி அடித்து உதைத்து துன்புறுத்த வேண்டும். துடிக்க துடிக்க கொடுமைப் படுத்தி என்னுள் ஒளிந்து கிடக்கும் பழி உணர்ச்சியை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

நான் சித்தியின் கண்களை கூர்மையாக பார்த்துக் கொண்டு சொன்னேன்… சரி… நான் கூட்டிட்டு போறேன், ஆனா ஒரு கன்டிஷன்..

என்னன்னு சொல்லுடா தம்பி..நான் உன் காலுக்கு செருப்பா இருப்பேன்.

எனக்கும் அது தான் வேணும், நீ எப்பவும் என் காலுக்கு கீழ் தான் இருக்கணும், என் இஷ்டப்படி தான் நடந்துக்கனும். நடந்துக்குவியா..? அவள் என் காலில் விழுந்ததும் எனது வார்த்தையில் மரியாதை தேய்ந்தது.

ந…நடந்துக்குறேன்டா..என்றாள் சித்தி, கொஞ்சம் பயம் கலந்த குரலில்

நான் உன்னை எப்ப வேணாலும், என்ன வேணாலும் பண்ணுவேன். சரியா.?

ச…சரிடா… கார்த்திக்.

இப்போது சித்தியின் குரலில் ஒருவித கிலி தெரிந்தது. நான் மீண்டும் அவளை வெறித்துப் பார்த்தேன். அந்த பார்வையின் அர்த்தத்தை உணராதவளாய் கொஞ்ச நேரம் எதுவும் பேசத்தோன்றாதவளாய் தலை குனிந்தவாறு இருந்தாள். பின்பு மெல்ல..

என்னை உங்கூட கூட்டிட்டு போ. நான் எதையும் சகிச்சுக்கிறேன், இங்கே மட்டும் விட்டிட்டு போயிடாதே..

என் முகத்தில் வெற்றிப்புன்னகை தவழ்ந்தது. வாடி… வா.. உன் மேல் இருக்கும் ஆத்திரம் அத்தனையும் உன்னை அணு அணுவாய் சித்திரவதை செய்து ஆற்றிக்கொள்கிறேன், நீ நினைத்து பார்த்திராத. பல கொடுமைகளுக்கு ஆளாகப் போகிறாய், தயாராகிக்கொள்..

ஓகே..!.,? போ..போய் கெளம்பு, அஞ்சரைக்கு வீட்டை விட்டு கெளம்பனும்.

சரி என்று சொல்லி சித்தி துரிதமாக கிளம்பினாள். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலேயே நானும் சித்தியும் டிரெய்ன் ஏறினோம். டிரெயினில் நான் எதிர்ப்பார்த்ததற்கு மாறாக சித்தி எந்த கவலையும் இல்லாமல் சீக்கிரமே தூங்கிப் போனாள். நான் என்னன்ன சித்திரவதை செய்யலாம் என திட்டம் தீட்டலானேன்.

சென்னையில் நான் வசிப்பது பழவந்தாங்கலில். ரயில் பாதையை ஒட்டியிருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கிறது எனது வாடகை வீடு. ட்புள் பெட்ரூம் வீடு, ஓரளவு வசதியான வீடு. வீட்டுக்குத் தேவையான எல்லா பொருட்களும் வாங்கிப் போட்டிருக்கிறேன். கல்யாணம் பண்ணி குடித்தனம் நடத்த தயாராய் இருக்கிறது வீடு.

மூன்று நாள் கழித்து அலுவலகம் சென்றேன். சக ஊழியர்கள் அப்பாவை விசாரித்து எனது துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். எனக்கு ஆறுதலாக இருந்தது. வேலையில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது. ஆறுதலுக்காக இருந்த அப்பா, இப்போது இல்லாதது வாழ்க்கை வெறுமையாக தோன்றியது. அன்று சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டேன்.

எனக்கு உடலெல்லாம் கசகசவென இருக்க பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டேன். குளித்து முடித்து சிகரெட் பாகெட்டும் ஆஷ்ட்ரேயும் எடுத்துக்கொண்டு டிவி முன்னால் அமர்ந்தேன். சிகரெட் ஒன்றை உருவி பற்ற வைத்து ஆனந்தமாக இழுத்தேன். சித்தி டபராசெட்டில் காபி எடுத்து வந்து டீபாய் மீது வைத்த படியே காபி குடிடா தம்பி என்றாள். காபியையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தேன். சித்தி சந்தன நிற சேலையில் புது மலராய் ஜொலித்தாள். ஐந்து வயது குறைந்தவள் போல தெரிந்தாள். இழுத்த சிகரெட் புகையை வெளியே ஊதினேன். நின்று கொண்டிருந்த சித்தி எனக்கு எதிரே கிடந்த சோபாவில் உட்கார்ந்தாள். அவளிடமிருந்து கும்மென்று வந்த வாசனை என் மூக்கை தாக்கியது. என் உடம்பு முழுவதும் சூடேற கடுமையான குரலில் எழுந்திரு என்றேன்.

சித்தி எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டே என்னடா.. தம்பி..? என்று எழுந்து நின்றாள்.

சேலை புதுசா ..?

ஆமாண்டா தம்பி..

இங்கே பார் நீ புதுசு புதுசா சேலை கட்றது, சென்ட் போட்டு மணம் வீசறது, புதுசா வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி ஹால்ல உலாத்துறது இந்த. வேலையெல்லாம் இங்கே இருக்கக் கூடாது. நைட்டி போடுவில்ல..?

என்னடா கார்த்திக்.. நேற்று வரை மரியாதையா இருந்தே.. இப்போ திடீரென்று நீ..வா.. போன்னு பேசுறே. நான் உன் சின்னம்மாடா..?

நான் சினம் கொண்ட வேங்கையானேன். சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் வைத்து தேய்த்துவிட்டு, அவள் கொண்டு வந்து வைத்த காபியை தட்டி விசிறினேன்.

இந்த சித்தி, சின்னம்மா என்ற மரியாதை எல்லாம் உனக்கு கிடையாது. நீ இருந்த செல்வாக்குக்கும், வைத்துக் கொண்ட ஆடம்பரத்துக்கும், பண்ணின ஆர்ப்பாட்டத்துக்கும் உன்னை அவமரியாதை பண்றது தான் முதற்கட்ட ப்னிஷ்மென்ட், நான் நில்லுன்னா நிக்கனும், உட்காருன்னா உட்காரனும், ஏன் எதுக்கு என்ற கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. நீ இப்போ எனது அடிமை. புரியுதா..?

என் ஆக்ரோஷத்தைக் கண்டு கொஞ்சம் அரண்டு போனாள் சித்தி. புரியுது என்று வாய் பேசாமல் தலையை ஆட்டினாள்.

ம்ம்… இப்போ சொல்லு நீ நைட்டி போடுவில்ல..?

ம்ம்… போடுவேன், ஆனா இருக்கிறதெல்லாம் பழசு.

இனி நீ அதைத்தான் போடனும். நைட்டியை போட்டுக்கொண்டு, கையில அலுமினிய தட்டேந்தி பரட்டை தலையாய் வீதியில பிச்சை எடுக்குற பிச்சைக்காரியை நீ எப்போதாவது பார்த்துருக்கியா..

பார்த்திருக்கேன் ரொம்ப கேவலாமா இருக்கும்..

அப்படி தான் நீ இங்க இருக்கனும்.

வேணாம்டா.. தம்பி நான் உன் சித்திடா.;

சித்தியா…? ஹா…ஹா…நான் என்னைக்குமே உன்னை சித்தியா பார்த்தது கிடையாது. என்னைப் பொறுத்தவரை நீ ஒரு தேவடியா. காசு பணத்துக்காக என்ன வேணா பண்ற ஒரு பச்ச தேவடியாள். தேவடியாளுக்கு பொன்னாடை போர்த்தியா கௌரவிப்பாங்க.?

வேணாமடா…கார்த்திக்.. கோவத்துல கன்னா பின்னாவென்று வார்த்தையை விடாதேடா, நான் புத்திக்கெட்டுப் போய் உன்னை கொடுமை படுத்திட்டேன், அதயெல்லாம் மன்னிச்சு மறந்துடுடா.

எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு தான் என் கூட ரயில் ஏறின, இப்போ என்ன பசப்புறே..? என் பேச்சுக்கு கட்டுப்படலைன்னா அடுத்த ரயிலுக்கு ஊருக்கு கிளெம்ப வேண்டியது தான். கட்டின நைட்டியோடு திருட்டு ரயில்ல போகணும்..நான் இரக்கமே இல்லாமல் சொல்ல சித்தி தடுமாறினாள்.

போ.. போய் நைட்டியை மாட்டிக்கு போ..

சித்தி தயங்கி தயங்கி என்னைப் பார்த்துக் கொண்டே அறைக்குள் சென்றவள் நைட்டியுடன் திரும்பி வந்தாள்.

நல்லா ஞாபகம் வச்சுக்கோ…நான் சொல்றதை நீ கேக்கலை..? இதைவிட மோசமான வேதனை எல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கும் புரியுதா…?

இனிமே இந்த வீட்டுக்குள்ளே இது தான் காஸ்ட்யூம் நீ எந்த நேரமும் ஒட்டுப்போட்ட. அழுக்கான நைட்டியோட தான் இருக்கனும். புரியுதா.?

நான் வெளியே போயிட்டு வர்றேன் சாப்பிட ஏதாவது ரெடி பண்ணு.

சித்தி நகர்ந்து உள்ளே கிச்சனை நோக்கி சென்றாள், இரண்டடி நடந்தவள் திரும்பி என்னைப் பார்த்துக் கேட்டாள்.

என்ன பண்ணட்டும்..?

ஏதாவது பண்ணு. ம்ம்ம்.. பூரி பண்ணேன். பூரியும் குருமாவும் பண்ணு பூரி நல்லா புஸ்ஸுன்னு இருக்கனும். அப்பளமா இருந்தது உன் கன்னம் சப்பையாயிடும். புரிஞ்சுதா..?

சித்தி தலையை ஆட்டிவிட்டு கிச்சனுக்குள் புகுந்தாள். அவளை உள்ளே வைத்து கதவை பூட்டிக் கொண்டு, நான் வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் பண்ணி மெயின் ரோட்டுக்கு வந்தேன். அருகில் இருக்கும் கடைகளில் சில பொருட்கள் வாங்கினேன். நீளமான மூங்கில் பிரம்பு, நாய் கட்டும் சங்கிலி, நைலான் கயிறு, உருட்டுக் கம்பியுடன் கூடிய சல்லிக் கரண்டி, ஆசிட்டுகள் எல்லாம் வாங்கிக் கொண்டேன். எல்லாம் சித்திக்காகத்தான்.

மூங்கில் பிரம்பு முதுகு தோலை உரிப்பதற்கு, சங்கிலி அவளது கழுத்தில் கட்டி அவளை நாய் போல வீட்டில் உலாவ விட, சல்லிக்கரண்டி தொண்டைக் குழிக்குள் வைத்து குத்துவதற்கு, கயிறு முதுகுக்குப் பின்னால் கை கால்களை கட்டி வாயில் துணியை திணித்து அடித்து துன்புறுத்துவதற்கு ஆசிட் முகத்தை சின்னா பின்னமாக்க, மிருகத் தனத்தை கையாள வேண்டுமானால் குடிக்க வேண்டும். ஒயின் ஷாப்புக்குள் நுழைந்து விஸ்கி பீர் என்று வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.

வாங்கி வந்த சாமான்களை சித்தியிடம் கொடுத்து உள்ளே வைக்கச் சொன்னேன். வாங்கியவள் அதையும் என்னையும் கூர்ந்துப் பார்த்தாள். பார்வையில் கொஞ்சம் கலவரம் தெரிந்தது.

என்ன என்று பார்வையாலே கேட்டேன். ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

நான் விஸ்கியை எடுத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தேன் டிவியை ஆன் செய்து விட்டு சித்தியை கத்தி கூப்பிட்டேன்.

அவசரமாக ஓடி வந்தாள்.

உனக்கு குடிக்கிற பழக்கம் இருக்கா.?

ச்சே.. ச்சே இல்லைடா தம்பி எனக்கு அந்த பழக்கம் எல்லாம் கிடையாது.

பொய் சொல்லாதடி முண்டச்சி, நல்லா குடிச்சு குடிச்சு தான் உனக்கு தொப்பை போட்டிருக்கு.

ஐய்யயோ.. இல்லேடா தம்பி, நெஜமாவே எனக்கு இந்த பழக்கம் இல்லை.

ம்ம்ம்ம்… சரி நம்புறேன், நான் குடிக்கப் போறேன், நீ ஒரு வேலை பண்ணு கிச்சன்ல .. மேல. டப்பாவுல முந்திரி பருப்பு இருக்கும் கொஞ்சம் எடுத்து வறுத்துக் கொண்டு வா.. இரு .. இரு.. எங்க ஓடுற.? இன்னும் முடிக்கலை.. ஒரு க்ளாசும் ப்ரிட்ஜுல ஐஸ் இருக்கும் அதையும் எடுத்துட்டு வா.,

சரிடா தம்பி. .

சீக்கிரம்… சீக்கிரம்… நான் அவசரப்படுத்த சித்தி தலைதெறிக்க உள்ளே ஓடினாள். முந்திரி பருப்பு வரும் வரை டிவி போட்டுக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தேன். ஒரு பத்து நிமிடத்தில் சித்தி முந்திரிப்பருப்பு, ஐஸ், க்ளாசு சகிதமாய் வந்தாள். நான் க்ளாசில் விஸ்கியும் பீரும் அளவாக ஊற்றிக் கொண்டேன். நான்கைந்து ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொண்டேன். ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன். ரெண்டு முந்திரி பருப்பை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, விஸ்கியை ஒரு மிடரு உறிஞ்சி சித்தியை நிமிர்ந்து பார்த்தேன்.

கார்த்திக் பூரி பொறிச்சாச்சு இப்போ போய் குடிக்கப் போறே..?

நான் அதற்கு பதில் சொல்லாமல், வா.. இப்படி வந்து உட்காரு என்றேன்.

அருகில் வந்தவள் கொஞ்சம் தயங்கி பக்கத்தில் உட்கார்ந்தாள்.

உட்கார்ந்தவளை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளினேன்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத சித்தி, ஐயோ. . அம்மா. .? என்று கத்தி புரண்டு இரண்டடி தள்ளி கீழே விழுந்தாள்.

நான் இன்னொரு மிடரு உறிஞ்சி குடித்து விட்டு, உட்காருன்னா பக்கத்தில வந்து உட்காருவியா.? ஆம்பளை சொகம் கேட்குதா உனக்கு.? எங்கப்பாவை கொன்னது போதாதுன்னு என்னையும் கொல்லப்பாக்குறியா..டீஈ.. கொலைக்காரி…? ஈ.. ..! நான் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டேன்.

என்னடா கார்த்திக் இப்படியெல்லாம் பேசுற.. நான் ஏன்டா உங்கப்பாவை கொல்லனும்.?

கிட்ட என் காலடியில் வந்து உட்காரு என்று சொல்லவும், விழுந்த வாட்டத்தில் நகர்ந்து வந்து உட்கார்ந்தாள். கை காலெல்லாம் நோவு கண்ட மாதிரி வலிக்குது கொஞ்சம் காலை பிடித்து அமுக்கி விடு என்றேன்.

அவள் தயங்கினாள்,

என்னடி யோசிக்கிறே அப்படியே விட்டேன்னா பாரு என்று சொல்லி காலைத் தூக்கவும், பயந்து முதலில் கைகளால் முகத்தை மறைத்து உதை விழாமல் தடுத்து, பின் என் கால்களைப் பிடித்து அமுக்கினாள். எனக்கு பூரிப்பாகவும், இதமாகவும் இருந்தது. ரசித்துக் கொண்டே நான் சிகரெட் புகையை சித்தியின் முகத்தில் ஊதினேன். முகத்தை சுளித்து அந்த புகைக்கு லேசாக இருமினாள்.

சிகரெட்டை பிடித்துக் கொண்டே மூணு கிளாஸ் விஸ்க்கியை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சு முடித்தேன். நான் முடிக்கும் வரை என் கால்களை பிடித்து அமுக்கிக் கொண்டிருந்தாள். இரவு இரண்டு பேரும் பூரி சாப்பிடோம். படுக்க உண்டான நேரம் வந்தது.

சித்தி, கார்த்திக் நான் இந்த ரூமுல படுத்துக்குவா..? என் அறை இல்லாமல் மற்றொரு அறையைக் காட்டிக் கேட்டாள்.

உனக்கெல்லாம் தனி ரூம் எதுவும் கிடையாது. நீ கிச்சன்ல ஒரு பாயைப் போட்டு படுத்துக்கு, வேலைக்காரி, அடிமையெல்லாம் அப்படித் தான் படுத்துக்கனும்.

நான் சொன்னதும் மறுபேச்சு எதுவும் பேசாமல் போய் படுத்துக் கொண்டாள். எனக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.

மறுநாள் காலை நான் வேலைக்கு கிளம்பும் முன் சித்தியை கூப்பிட்டேன்.

என்னடா தம்பி கார்த்திக்..?

நான் வேலைக்கு போறேன் சாயங்காலம் தான் வருவேன்.

சரிப்பா.. ஆனா என்னய வூட்டுக்குள்ள வைத்து பூட்டாதேடா.

வூட்டுக்குள்ளே வைத்து பூட்றதோடு இல்ல, இன்னிக்கு கட்டிப்போட்டுட்டு போறேன் என்று சொல்லி சித்தியின் முடியைப் பிடித்து தர தரன்னு இழுத்துப் போய் கிச்சனில் தள்ளிவிட்டு நைலான் கயிறால் கைகால்களை சேர்த்து முதுகுக்குப் பின்னால் கட்டினேன்.

வேணான்டா தம்பி நீ தப்பு பண்றே..

தப்பு எது.? ரைட் எதுன்னு எனக்குத் தெரியும், நீ எனக்கு சொல்லாதே, என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் சங்கிலியை கோர்த்து அதன் மறு முனையை ஜன்னலில் கொக்கியை மாட்டினேன். இன்னொருவர் வந்து கழட்டினால் தவிர சித்தியால் கழட்ட முடியாது. வெறித்தனமாக அவள் அருகில் முழங்காலிட்டு உட்கார்ந்து வாயை திறக்கச் சொன்னேன். அவள் முடியாது என மறுத்து தலையை ஆட்டவே சித்தியின் கன்னத்தில் பளார்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு ஓங்கி ஒரு அறை அறைந்தேன். சித்தி பொறி கலங்கிப் போனாள். இது விஷம் இல்லடி வெறும் விளக்கெண்ணை தான் வாயைத் திற என்று கத்தினேன்.

வேண்டாம் வேண்டாம் என்று கத்தி தலையை ஆட்டி மறுத்தாள்.

எனது ஆத்திரம் அதிகமாகிக் கொண்டிருக்க, நான் பிரம்பை எடுக்கவும் அடிக்கு பயந்து சித்தி வாயை திறந்தாள். விளக்கெண்ணையை வாயில் ஊற்றி விழுங்கச் சொல்லி மீண்டும் மீண்டும் ஊற்றினேன். மடக் மடகென்று குடித்தாள். ஒரு குண்டான் நிறைய தண்ணி வைத்து தாகம் எடுத்தால் நாக்கால் நக்கிக்குடி என்று சொல்லி வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டு கிளம்பினேன்.

மாலையில் வீடு திரும்பு முன் ஆம்லேட், கொத்துப் பரோட்டா, சிக்கன் கிரேவி என்று சித்திக்கும் எனக்கும் பார்சல் வாங்கிக் கொண்டேன். மசாலாவுடன் உண்டான கிரேவியின் வாசனை மூக்கை துளைத்தது. வீட்டுக்கு வந்து கதவை திறந்தேன். கிச்சனிலிருந்து டைனிங் ஹால், முன் ஹாலை கடந்து வந்த மூத்திர நாத்தமும், பீ.. நாத்தமும் சேர்ந்து மூக்கை அறுத்தது. கிரேவி வாசனை தொலைந்து போய் இருக்க உள்ளேயிருந்து வீசிய நாத்தம் குடலை புரட்டியது உவாஹ்… எனக்கு வாந்தி வரும் போலிருந்தது. கதவை பட்டென்று சாத்திவிட்டு வெளியிலேயே நின்று விட்டேன்.

சிறிது நேர ஆசுவாசத்துக்குப் பின் மீண்டும் கதவை திறந்தேன். உள்ளே நுழைந்து உடனே சாத்திவிட்டேன் நாற்றம் வெளியேப் போனால் வம்பு வந்து சேருமே… அடுக்களைக்குள் சென்றேன் சித்தி பேச்சு மூச்சின்றி பரிதாபமாக கிடந்தாள். மூக்கைப் பிடித்துக் கொண்டு சங்கிலியை கழற்றி கயிற்றுக் கட்டுக்களை அவிழ்த்தேன். குடிக்கும் தூரத்தில் இல்லாததால் குண்டானில் வைத்த தண்ணீர் குறைய வில்லை.

சித்தி தடுமாறி மெல்ல எழுந்தாள் தரை வழுக்கியது. கீழே விழாமல் சமாளித்து பிடித்துக் கொண்டாள். உடலின் ஈரப்பசை வறண்டு, தாகம் எடுத்த நாக்கு தடுப்பேரி, உதடெல்லாம் உலர்ந்து, முகம் கறுத்து கன்றாவியாக காட்சி தந்தாள். விளக்கெண்ணைய் குடித்து பேதி ஆனதால் அவள் நைட்டியிலிருந்து சேரும் சகதியும் போல மனித கழிவுகள் பொத் பொத்தென்று கீழே விழுந்தது. குண்டான் தண்ணியை எடுத்து மேலும் கீழுமாக சிந்தவிட்டு மட மடவென குடித்தாள். பின். .

ஆஹ்..ஹக் ..என்று சத்தமிட்டு சளியை வரவழைத்து என் மீது துப்பாத குறையாக கீழே துப்பி, மனுஷனாடா… நீ…? என்று ஈனஸ்வரத்தில் கேட்டு பாத்ரூமுக்குள் சென்றாள். பெரிய தப்பு பண்ணிவிட்டேனோ..?..! மனம் வருந்தி ஹாலுக்கு வந்தேன். இந்த நாத்ததை ஒரு பத்து நிமிஷம் என்னால பொறுக்க முடியலையே… பகல் முழுக்க எப்படி சகித்துக் கொண்டு அதன் மேலேயே படுத்துக் கிடக்க முடியும்..?

அடுத்த சிறிது நேரத்தில் தலைக் குளித்து அடுப்பங்கரையை கழுவி சுத்தப்படுத்தினாள். நான் குடிக்க ஆரம்பித்தேன். ஒரு கிளாஸ் முழுவதையும் குடித்து விட்டு சிகரெட்டை பற்ற வைத்தேன். ஹாலுக்கு வந்த சித்தி என்னை எரித்து விடுபவள் போல பார்த்து விட்டு, டிபன் பார்சலை பார்த்தாள். பசி அவளை வாட்டியிருக்க வேண்டும்.. தனக்கானதை எடுத்து வைத்துக் கொண்டு லபக் லபகென்று மென்றதும் மெல்லாததுமாய் விழுங்கினாள்.

நான் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டே ரெண்டாவது கிளாசுக்கு சென்றேன். இதனிடையே சாப்பிட்டு முடித்த சித்தி, குடிடா நல்லா மூச்சுமுட்ட குடி.. குடிச்சுப்புட்டு அடுத்தாற் போல என்ன செய்யலாம்.? இவளை எப்படி கொடுமைப் படுத்தலாம்ன்னு யோசி..என்று கத்தி சத்தம் போட்டு விட்டு போய் படுத்துக் கொண்டாள்.

எனக்கு சிரிப்பு வந்தது. ஏறிய போதை கோவத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்த, நான் சாப்பிட்டு படுத்துட்டேன்.

மறு நாள் சனிக்கிழமை, விடுமுறை நாள்.

இரவு வெகுநேரம் கண் விழித்து தீவிரமாக யோசித்து சித்திரவதைகளை திட்டமிட ஒரு முடிவும் தோன்றாமல் எப்போ தூங்கினேனோ தெரியலை எட்டு மணிக்கு மேல் தான் எழுந்தேன். பாத்ரூம் சென்று உச்சா, சுச்சாவெல்லாம் போய் பிரெஷ் பண்ணிவிட்டு முகத்தை துடைத்த படியே ஹாலுக்கு வந்தேன்.

சித்தி சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். நான் என்ன வேதனை தரப் போகிறேனோ என்ற பயத்துடன் என் முகத்தையே பார்த்தபடி எழுந்தாள்.

அவள் எழுந்ததும் நான் உட்கார்ந்தேன்.

காபி குடிச்சுட்டியா சித்தி.?

என் கேள்வி அவளை சமாதானப் படுத்தியிருக்க வேண்டும்.

ஆச்சுடா தம்பி, உனக்கு போட்டு எடுத்தாறேன் என்று கிச்சனுக்குள் சென்று ஐந்தாவது நிமிஷத்தில் காபியுடன் வந்து டீபாயில் வைத்து விட்டு எதிரே இருந்த சோபா சேரில் உட்கார்ந்தாள்.

உட்கார்ந்து தொலைக்கட்டும் என்றிருந்து அவளை வெறித்துப் பார்த்தப்படி காபியை எடுத்தேன். எங்கே எடுத்த காபியை மூஞ்சில் ஊற்றிவிடுவானோ என்று பயந்து சேரிலிருந்து இறங்கி கீழே உட்கார்ந்தாள். எனக்கு சிரிப்பு வந்தது, வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த பயம் இருக்கட்டும் என்ற நினைப்போடு காபியை ஒரு மிடறு விழுங்கினேன்.

சித்தி.. வாஞ்சையுடன் கூப்பிட்டேன்.

நிமிர்ந்து பார்த்தவளை இப்படி பக்கத்தில் வந்து உட்காரு சித்தி என்று அழைத்தேன்.

சித்தி தயங்கினாள்.

காபி பிரமாதமா இருக்கு, தாங்க்ஸ் என்றேன்.

நேற்று சித்தியை நரக வேதனைக்கு ஆளாக்கியதில் என் மனதுக்கு உற்சாகமாக இருந்தது. ஒரு வேளை இந்த உற்சாகத்தால் தான் ராத்திரி தூக்கம் வரலையோ என்ற புதிய கோணத்தில் சிந்தித்து, அந்த உற்சாகத்தில் சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன். சித்தி என் அருகில் வராததால் நான் அவள் பக்கம் சென்று தரையில் பக்கத்தில் உட்கார்ந்தேன். சித்தி என்னை வினோதமாகப் பார்த்தாள். சிகரெட் புகையை ஆழமாய் உள்ளிழுத்தேன் வெளி வந்த புகையை அப்படியே சித்தியின் முகத்தில் ஊதினேன். சித்தி இப்போது சிகரெட் புகைக்குபழகியிருந்தாள். இருமவில்லை.

சித்தியின் பார்வை என் கையில் இருந்த சூட்டு தழும்புக்கு சென்றது.

என்ன தழும்புன்னு தெரியுதா.? ம்ம்ம்..?

என்னடா தம்பி..? எங்கேயேனும் கீழ விழுந்துட்டியா.? பைக்குல போற போது ஆக்ஸிடெண்ட் ஏதும் ஏற்பட்டுச்சா..?

கேப்படி.. நீ ஏன் கேட்கமாட்டே.. திணவெடுத்த சிறுக்கி, என்னோட சின்ன வயசுல நீ வச்ச சூடுடி இது.. இன்னும் ஆறாம எப்படி இருக்குதுன்னு பாரு. ஆனா நான் மட்டும் நீ செஞ்சதை எல்லாம் மறந்துறனும் இல்லே …?

தப்பு பண்ணிட்டேன்டா கார்த்திக் சித்தியை மன்னிச்சுடுடா.

கத்தி இல்லாம, ரத்தம் இல்லாம நான் பண்ற டார்ச்சரை உனக்கு தாங்க முடியலையே, நான் அப்போ எவ்வளவு சின்ன பையன்.? எத்தனை நாள் என்னை டார்ச்சர் பண்ணியிருப்பே.? அந்த டார்ச்சரை தாங்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்.?

தப்பு தான்டா கார்த்திக், சித்திக்கு இப்போ புத்திக்கு உரைக்குது.. என்னை மன்னிச்சுடுடா.

என்னால உடனே எல்லாம் உன்னை மன்னிக்க முடியாதுடி, உன் மேல இருக்கிற ஆத்திரம் தீர்ற வரை உன்னை அனு அனுவா சித்திரவதை பண்ணப் போறேன். உன் மனசு நொந்து நீ ரத்தக்கண்ணீர் வடித்தால் ஒரு வேளை உம் மேல இரக்கம் வந்தால் அப்புறமா உன்னை மன்னிக்கிறேன். அது வரையில் நீ இந்த வேதனையை அனுபவிச்சு தான் ஆகனும். எங்கிட்டயிருந்து தப்பிக்க முடியாது.

இன்னும் என்னை என்னப் பண்ணப்போறே.?

அ..ஆ… மஹாராணியை மஞ்சத்தில் உட்கார வைத்து சாமரம் வீசப்போறேன்.. ஏவிடியமாக சொல்லி எழுந்த நான்.. சித்தியின் கூந்தலை ஒரு கையால் கெட்டியாகப் பிடித்து இழுத்து வந்து மர நாற்காலியில் உட்கார வைத்தேன்.

திமிறிக் கொண்டு எழுந்தாள். கார்த்திக்.. இப்ப என்ன பண்ணப்போறே… என்னை விடு டிபன் பண்ணனும். என்ன செய்யட்டும் சொல்லு நான் செய்யறேன்.

நீ ஒரு மயிரையும் புடுங்க வேண்டாம், நேத்து சமைச்ச சாதம் இருக்குள்ள.?

இருக்குடா தம்பி ஆனா நேத்து காலையிலே செஞ்சது, தண்ணீர் விடாததால கொச கொசன்னு பஞ்சாட்டம் போயிருச்சு, சாப்பிட லாயக்குப் படாது.

காலையில நீ பட்டினி கிட, மத்தியாணத்துக்கு வயிறு பசிக்க பசிக்க அந்த பழைய சோத்த நீ திண்ணு.. என்று சொல்லி முரன்டுப் பிடித்தவளை முரட்டுத்தனமாக அழுத்தி உட்கார வைத்தேன். கைகளை நாற்காலியின் இரண்டு கையிலும், காலிரண்டை நாற்காலியின் முன் காலிலும் இறுக்க்க்கி கட்டினேன்.

பசிக்குதுன்னு பழைய சோத்தை நான் திண்ணதாலத்தானே, நீ எனக்கு சூடு வைச்ச இப்பப் பாரு அதற்கான பனிஷ்மெண்டை என்று பல்லைக் கடித்துக் கொண்டு சித்தியின் முகவாய் கட்டையை பிடித்து அண்ணாத்தி மேற்கூரையை பார்க்க வைத்து, வாயை திறக்கச் சொல்லி இரண்டு கன்னத்தையும் அழுத்தினேன். வாய் ஆஆ…வென திறந்ததும் சல்லிக் கரண்டியின் கம்பியை தொண்டைக் குழிக்குள் குத்தி குத்தி மெல்ல இறக்கினேன். சித்தி கத்தினாள், துடித்தாள், தன்னை விடுவித்துக் கொள்ளப் போரடினாள். ஜம்பம் பலிக்கவில்லை. கரண்டியின் தட்டைப் பாகத்தை வாய் தாங்கி நிற்க கரண்டிக் காம்பு முழுவதும் தொண்டைக் குழியில் இருந்தது. இனி அவள் அப்படி இப்படி திரும்ப முடியாது, குனிய முடியாது, ஒரு வாய் சோறுகூட இப்போ நீ விழுங்க முடியாது அனுபவிடி நாயே…

திரு திருவென விழித்து வாய் பேசமுடியாமல் தவித்தாள். சித்தியை இப்படி பழி வாங்குவது எனக்கு பிடித்து இருந்தது. இப்படியே கொஞ்ச நாள் அவளை அழ வைத்து விளையாட வேண்டும் என்று ஆர்வம் தோன்ற, நான் போய் டிபன் சாப்பிட்டு, ஹேர்கட் பண்ணிட்டு வர்ற வரையில் நீ இப்படியே வாயை பொளந்துகிட்டு கிட. . .சொல்லிவிட்டு கதவை பூட்டிக்கொண்டு கிளம்பினேன். நான் எனது வேலையை முடித்துக் கொண்டு திரும்பி வர நான்கு மணி நேரம் ஆயிற்று.

கழுத்து வலிக்க, வாய் வலிக்க, கழுத்து நரம்பெல்லாம் புடைத்து எச்சில் கூட விழுங்க முடியாத நிலையில் கண்கள் மூடி சோர்வுடன் உட்கார்ந்திருந்தாள் சித்தி. நான் வந்திருப்பதை உணர்ந்த சித்தி, கண்களை திறந்து விழிகளை உருட்டி கை ஜாடையால் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்க, சிறிதும் கருணை காட்டாமல் குளிக்கச் சென்று விட்டேன்.

மதியத்துக்கு பார்சல் சாப்பாடு வாங்கி வர மறந்து விட்டமையால் இருக்கும் பழைய சோற்றை திறந்துப் பார்த்தேன். சித்தி சொன்னது போல சாதம் நொதித்து போய் புளிப்பு வாடை அடித்தது. திரும்பவும் மூடி வைத்துவிட்டு பசிக்கு தோசை சுட்டு சாப்பிட்டேன். மணி இரண்டுக்கும் மேலாகியது.

சித்தியிடம் வந்து, அவளின் தொண்டை குழியிலிருந்து கரண்டியை மெதுவாக வெளியில் எடுத்தேன். விடுதலை பெற்ற கழுத்து குனிந்து வலது பக்கமும் இடது பக்கமும் மாறி மாறித் திரும்பி வலிக்கு நிவாரணம் தேடியது. குடிக்க தண்ணீர் கொடுக்க, குனிந்த நிலையில் உறிஞ்சி குடித்தாள்.

எனக்கு பயமா இருக்குடா இனிமே இப்படி பண்ணாதேடா கார்த்திக் சித்தி அழும் குரலில் கெஞ்சினாள்.

என்னை என்னடி பண்ண சொல்றே? உன் மேல எனக்கு அவ்வளவு ஆத்திரம். இப்படி எல்லாம் பண்ணுனாதான் அந்த ஆத்திரம் கொறையுது.

இன்னும் எத்தனை நாள் என்னை இப்படி கொடுமைப் படுத்தப் போற.?

தெரியலைடி என் ஆத்திரம் தீர்ற வரைக்கும். இல்லேன்னா நீ இந்த வீட்டை விட்டு ஓடற வரைக்கும். உன்னை கொடுமை படுத்துறப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.? இந்த மாதிரி சந்தோஷத்தை நான் அனுபவிச்சதில்லை.

நீ பண்றதெல்லாம் பர்த்தா எனக்கு பயமா இருக்குடா

பயப்படாதே.. ரொம்ப அளவுக்கு மீறி நான் உன்னை டார்ச்சர் பண்ண மாட்டேன், எல்லாம் உன் மேல இருக்குற கோபம் தணியறத்துக்குத் தான் வேற எதுவும் இல்லை.

நான் தான் என்னோட தப்பெல்லாம் உணர்ந்துட்டேனே. . .

இது தண்டனை கிடையாது. பழி தீர்க்கிறது. என்று பதில் சொல்லி கை கால்கட்டுக்களை அவிழ்த்து விட்டு, போ.. இருக்கிற பழைய சோற்றை போட்டு சாப்பிடு என்றேன். வயிற்றுப் பசி கொடுமை, குமட்டலை சகித்துக் கொண்டு வேறு வழி இல்லாமல் சாப்பிட்டாள்.

இரவு ஏழு மணி. நான் கேட்காமலேயே நொறுவலுக்காக பகோடா செய்திருந்தாள் சித்தி. அதை எடுத்து வைத்து சாப்பிட சொல்லவும், இது இருக்கட்டும் நான் குடிக்கனும், எல்லாவற்றையும் எடுத்து வந்து வை என்றேன்.

நீ தினமும் குடிப்பியா..?

இல்ல உனக்காகத் தான் குடிக்கிறேன். குடித்தால் தான் உன்னை கொடுமைப் படுத்த. எனக்கு மனசு துணியுது.

அப்படின்னா குடிக்காதேடா, என்னை, என்ன வேணுமானால் கொடுமைப் படுத்திக்கு, நீ மட்டும் குடித்து உடம்பை கெடுத்துக் கொள்ளாதே. குடி உயிரை குடிக்கும், குடி குடியை கெடுக்கும்.

உனக்கு பெத்தப் பாசமும் கிடையாது, வளர்த்தப் பாசமும் கிடையாது எப்படிடி உன்னால டயலாக்கு பேசி பாசாங்கு காட்ட முடியுது.?

நெசமாத்தான்.. உன் பேர்ல அக்கறை இருக்கிறதால தான் சொல்றேன்..

அப்படியே பொளேர்ன்னு போட்ருவேன். இந்த போக்கு மாக்கு வேலை எல்லாம் இங்க வேகாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சித்திரவதை உனக்கு உண்டு. இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு ஒருத்துப் போக நீ பழகிக்கனும் இனிமேல் டெய்லி உனக்கு இந்த சித்திரவதை தொடரும். சொன்னதை செய் போ என்றேன்.

சித்தி குடிக்க உண்டானதை எடுத்து வந்தாள்.

விஸ்கியை எடுத்து தொண்டைக்குள் சரித்துக் கொண்டு, பகோடாவை வாயில் போட்டேன். சிகரெட்டை பிடித்து புகையை வெளியேற்றி இன்னொரு க்ளாஸ் குடித்தேன். எனக்குள் போதை ஏறியது. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை கேக்குறேன் அதுக்கு பதில் சொல்லு.

என்ன..?..!

என் அப்பன் உனக்கு பிராகெட் போட்டானா.? இல்லே நீ அவனுக்கு பிராகெட் போட்டியா.?

என்னடா இப்படி எல்லாம் பேசுறே

சொல்லுடி மானங்கெட்டவளே..என் அப்பவை மயக்க நீ என்னன்ன மாய் மாலம் பண்ணினேன்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகனும். சொல்லுடி.

சித்தி எனது கோபத்தில் அதிர்ந்தாள். கொஞ்ச நேரம் தயங்கி விட்டு பின்பு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

எனக்கு சின்ன வயசிலிருந்து வசதியா வாழனுமின்னு ஆசை, நான் வயசுக்கு வந்ததும் என் அம்மா உங்க வீட்டில வேலைக்கு சேர்த்து விட்டா, நான் உங்க வீட்ல. வேலை செய்துகிட்டு இருந்தப்போ…

சாணி அள்ளிகிட்டு இருந்தப்போன்னு சொல்லு.,

சரி சாணி அள்ளிகிட்டு இருந்தப்போ.. உன் அப்பாவை பாப்பேன். அவரும் நைசா என்னை திருட்டு பார்வை பாப்பாரு, அப்போது தான் எனக்கு அவருடைய சபலப்புத்தி தெரிய வந்துச்சு. அவரை வளச்சு போட்டா வசதியா வாழலாம்மின்னு நெனச்சேன். ஒரு நாள் தோப்புல வேலை இருக்கு, முதலாளி வரச் சொல்லியிருக்காருன்னு அம்மா கெளம்புனா .. உன் அப்பா மட்டும் தான் அங்க இருப்பாருன்னு எனக்கு தெரியும். அதனால என் அம்மாவ போக வேணாம்ன்னு சொல்லிட்டு நான் போனேன். தோப்பு வேலை பாத்துட்டு உங்கப்பா அந்தப்பக்கம் வருவாருன்னு தெரிஞ்சுக்கிட்டு வேணுமின்னே கெணத்துல அம்மணமா குளிச்சிட்டு இருந்தேன்

அடி மானங்கெட்டவளே.. அப்புறம்..

உன் அப்பா என்னை அம்மணமா பார்த்துட்டாரு. அவரால ஆசையை அடக்கிக்க முடியலை. என்னை மோட்டார் ரூமுக்கு தூக்கிட்டு போயிட்டாரு.

ம்ம்ம்…

என் உடம்பு முழுக்க இச்.. கொடுத்தாரு.. அப்புறம்..

வேண்டாம், மேல எதுவும் சொல்ல வேண்டாம். அதை தெரிஞ்சுக்குற அளவுக்கு நான் வெவஸ்த்தை கெட்டவன் இல்லை. என்ன நடந்திருக்குமென்று தெரியாத அளவுக்கு நான் வெவரம் கெட்டவன் இல்லை.

அதை விட்டு மேல சொல்லு..

ஒரு தடவை என்னை அனுபவித்த அவரு சொகம் வேண்டி அடிக்கடி மோட்டார் கொட்டாவுக்கு வரச்சொல்லுவாரு, நானும் ஒரு ஐந்தாறு தடவை சம்மதிச்சு அவரோட ஒட்டி உறவாடினேன். அப்புறம் தாலி கட்டுனாத்தான் கூட வந்து படுப்பேன்னு சொன்னேன். உன் அப்பா கெஞ்சுனாரு முடியவே முடியாதுன்னுட்டேன். உன் அப்பாவுக்கு என் மேல ரொம்ப ஆசை. வேற வழி இல்லாமல் என் கழுத்துல தாலியை கட்டிட்டாரு.

நீயும் சொத்தை ஆட்டையைப் போட எங்க குடும்பத்தை நாசமாக்க வந்துட்டே, வசதியா வாழனுமின்னு என்னென்ன அயோக்கியத்தன மெல்லாம் பண்ணியிருக்கே.. வெட்கம் கெட்டு ஒரு வேத்தாளு முன்னால உடம்புல ஒட்டுத் துணி இல்லாம குளிச்சிருக்க, அவரை உசுப்பேத்தி விட்டு ஒரு குடும்பத்த நாசமாக்கிருக்கே, உன்னை தேவடியான்னு சொல்லாம தெய்வப்பிறவின்னா சொல்றது.?

அப்போ ஏதோ ஒரு வேகத்துல அப்படியெல்லாம் தப்பு பண்ணிட்டேன்டா என்னை மன்னிச்சுடுடா

சரி இதுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் பதில் சொல்லு.. ஒரு வாரமா உடம்பு சரியில்லாமல் இருந்தாரு தெரியும். ஆனா அது உயிரைக் குடிக்கும் அளவுக்கு மோசமான நிலைமை கிடையாது. உண்மையில் என்ன நடந்தது.?

அவருக்கு தூக்கத்துல மாரடைப்பு வந்துரிச்சு…

நீ… பொய் சொல்றே.. அவர் மாரடைப்பால சாகலை, உன்னோடு படுத்திருக்கிற போது மூச்சு திணறி செத்துருக்காரு.. ஊர்ல அப்படித்தான் ரகசியமா பேசிக்கிட்டாங்க.

நான் வேணா வேணான்னு தான் சொன்னேன் அவருதான் கேட்கலை. முடியாம இருந்ததால, நெஞ்சுவலி வந்து திடீர்ன்னு மூச்சை விட்டிட்டாரு.

மறுபடியும் நீ பொய் சொல்றே, உன்னை பத்தி தெரியும்டி., உன்னை நம்ப முடியாது நீ வேணான்னு சொல்லியிருக்க மாட்டே, கீழும் மேலுமா இருப்பவரை மேலும் கீழுமா மாத்தி, வேணும் வேணும்ன்னு சொல்லி அவரை பலவந்தம் பண்ணியிருக்கே., உன் காமப்பசிக்கு தீனி போட முடியாமல் அவரு மூச்சு முட்டி செத்துட்டாரு, அதான் உண்மை.

இல்ல..அது..பொய்…

பொளேர்ன்னு ஒரு அறை விட்டேன். நீ திருட்டு முழி முழிக்கிறப்பவே தெரியுது நீ தான் கொலைக்காரி..ன்னு. அவர் செத்துப் போவதற்கு நீ தான்டி காரணமாய் இருந்திருக்கே. உன்னை போலிஸ்ல ஒப்படைச்சிருக்கனும், நான் தான் யோசிக்காம தப்பு பண்ணிடேன். இருந்தாலும் நீ அதற்கான தண்டனையை அனுபவித்து தான் தீரணும். அதுக்கு தான் என்கிட்ட வந்து வசமா சிக்கிக்கிட்டே .. உன்னை தினம் தினம் சித்ரவதை செஞ்சு சாகடிக்கிறேனா இல்லையா பார்.. சொல்லிவிட்டு அவளது கழுத்தைப் பிடித்து நெறுக்கினேன்.

. .. . இங்க நடக்குற விஷயம் ஏதாவது வெளியே தெரிஞ்சுது அப்புறம் உன் வாயை ரெண்டா கிழிச்சுருவேன் ஜாக்கிரதை.

சித்தி பாவமாக. முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல மாட்டேன் என்றாள்.

இரவு சாப்பிட ஏதாவது ரெடி பண்ணு

என்ன பண்ணட்டும் கார்த்திக்.?

இன்னிக்கு சோறு சாப்பிடாததால, சாப்பிட்ட மாதிரியே இல்லை. ராத்திரிக்கு சாதம், சாம்பார், ரசம்மின்னு வைய்.. ப்ரிட்ஜுல காய்கறி இருக்கும் எடுத்துக்கோ, சாம்பார் நல்லா வாசமா இருக்கணும்.

மறுநாள் காலை பத்து மணி இருக்கும். மேனேஜர் போன் பண்ணினார். மீட்டிங்க் என்று சொல்லவே தொடர்ந்து ஒருமணி நேரம் லேப்டேப்பில் மூழ்கியிருந்தேன். .மீட்டிங்க் முடிந்ததும்..

சித்தியை கூப்பிட்டேன். அருகில் வந்தாள்…

நான் பண்ற டார்ச்சர் எல்லாம் தங்கிக்க கஷ்டமா இருக்காடி.?

என்னிடமிருந்து அந்த மாதிரி ஆறுதல் வார்த்தைகள் வருமென்று சித்தி எதிர்ப்பார்க்கவில்லை. தலையை நிமிர்த்தி என்னை வித்தியாசமாகப் பார்த்தாள். அவள் முகத்தில் இப்போது லேசான மலர்ச்சி. ஆமாம்டா கார்த்திக்.. உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது, சித்தியால தாங்கிக்க முடியலை.,

கொஞ்ச நாள் பொறுத்துக்கடி என்னோட வெறியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தணியட்டும், அப்புறமா நீயும் நானும் ஒரு சாதாரண அம்மா புள்ள மாதிரி இந்த வீட்டில வாழலாம். அது வரையில் இந்த டார்ச்சரை எல்லாம் தாங்கிக்கு சரியா.?

என்னைய வச்சு எதையும் செய்திடாதேடா தம்பி, சித்தி இப்போ திருந்திட்டேன்டா..

ஆமாம் .. அப்படியே திருந்தி அன்னை தெரசாவா ஆயிட்டே., தேவடியா சிறுக்கி என்று திட்டி அவளது தலைமுடியை பிடித்து சுருட்டி வளைத்து கீழே தள்ளினேன். வலி பொறுக்க மாட்டாமல் என் கையை பிடித்துக் கொண்டு வேணாமட என்னை விட்டிடு.. என்று கெஞ்சினாள்.

எப்படி விட்டுவிட முடியும், இன்னும் …

உன் கால் எலும்பை முறிக்கனும்…

முறைக்கிற முகத்தை முதுகுப்பக்கம் திருப்பனும்…

பிரம்படி கொடுக்கனும்…

பிரம்படி புண்ணுக்கு ஆசிட் ஊத்தி மருந்து போடனும்..

உம் மூஞ்சில ஆசிட்டை ஊத்தி ரணகளம் பண்ணனும்..

இன்னும் நிறைய இருக்கடி.. அத்தனையும் உனக்காக பிளான் பண்ணனது, என்று வெறித்தனமாக கத்தி தரத் தரவென தரையோடு தரையாக இழுத்து வந்து நாற்காலியில் உட்கார வைத்து கை கால்களை கட்டிப் போட்டேன்.

ஒரு லார்ஜை க்ளாசில் ஊற்றி ஐஸ் அள்ளிப் போட்டுக் கொண்டேன். நான் இந்த லார்ஜை முடிக்கிற வரை நீ இப்படியே உட்கார்ந்து கிட…

சொல்லிவிட்டு தம் அடித்துக் கொண்டே இரண்டு கிளாஸ் விஸ்கியை காலி பண்ணினேன். அடுக்களைக்கு சென்று கேஸ் ஸ்டவில் கரண்டியை வைத்து பழுக்கக் காய்ச்சினேன். செவ்வாணம் போல கரண்டி காம்பு நிறம் ஏறியதும் எடுத்துக் கொண்டு சித்தியின் அருகில் வந்தேன்.

சித்தியின் முகத்தில் பயமும் பீதியும் தெரிந்தது.

சூடு வைக்கறதை பற்றி சொல்ல மறந்து விட்டேன், இதை முதலில் செய்றேன் என்று கிட்டே சென்று கையில் சூடு வைக்கப் போகும் தருணத்தில்…

புருவத்தை தூக்கி மிரள மிரள விழிகளை உருட்டிய சித்தி அறண்டு கத்தினாள்…

சும்மா நிறுத்துடா..!..? நானும் போனாப் போவுது, போனாப் போவுதுன்னு பொறுத்துப்போனா நீ ரொம்பத்தான் ஓவராப் போறே., வார்த்தைக்கு வார்த்தை வெட்கம் கெட்டவளே, மானங்கெட்டவளே, வேசிமுண்டைன்னு பேசுரியே..தப்பு என் பேர்ல மட்டும் தான் இருக்கா..? ஏன் உன் அப்பா பேர்ல இல்லையா.?

நான் உன் அப்பாவுக்கு மட்டும் தான் முந்தாணை விரிச்சேன். மறந்தும் அடுத்தவன் வெறித்து பார்க்கிறாப்போல மாராப்பை நழுவ விட்டதில்லை. தாலி கட்டிகிட்டு பொண்டாட்டியாத்தான் வாழ்ந்திருக்கிறேனே ஒழிய ஊருக்குத் தெரியாமல் வப்பாட்டியா வாழ்ந்ததில்லை.

மாஞ்சு மாஞ்சு நாள் முழுக்க கூலி வேலை செய்தால் சோத்தை தான் பாக்கலாம் சொகுசை ஒரு நாளும் பாக்க முடியாது. ஏதோ வனப்பு மிகுதியால, வயசு கோளாரில ஆடம்பரத்துக்கு ஆசைப் பட்டு கொஞ்சம் அப்படி இப்படி நடந்து கொண்டேன். கண்டிக்க ஆள் இல்லாம கட்டுத்தறி காளையா காமத்துக்கு அடிமையானேன். அது என்னோட தப்பு இல்லை. பருவ வயசு பண்ணின தப்பு. சுற்றி இருந்தவர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட விபரீதம் ஒரு காரணம்.

சமுதாயத்துல பெரிய அந்தஸ்துல இருக்கிற உன் அப்பா, நான் அம்மணமா குளிக்கிறதை பார்த்ததும் என்னை பொளேர்ன்னு கன்னத்துல ஒரு அறை விட்டு, கழுதை வூட்டுக்கு ஓடுடின்னு தொரத்தி விடாமல் மோட்டார் கொட்டாய்க்கு ஏன் தூக்கிட்டுப் போகனும்..? தப்பில்லையா..?

கட்டுன பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணுகிறோமே என்கிற கூச்ச நாச்சம் துளியும் இல்லாம வெறி கொண்ட காட்டுமிருகமா நடந்துகிட்டாரே அது தப்பில்லையா..?

அஞ்சு வயசுல ஆம்பளை புள்ள இருக்கே, அதுக்கு தெரிஞ்சு போச்சுதுன்னா பிஞ்சு மனசு வெம்பி வீணாப்போகுமே என்கிற அறிவு கொஞ்சம் கூட இல்லாம கொஞ்சி கொஞ்சி குலாவுனாரே உங்கப்பா.? அப்போ அவரு சோத்தத்தை தான் தின்னாரா..? இல்லை வேற எதனாச்சம் தின்னாரா.?

காசு பணத் திமிறு, சொன்னா அடங்கமாட்டாருன்னு கண்டுக்காம வுட்டது உன்னை பெத்தவ பண்ணின தப்பு. அங்காளி பங்காளி பெரிய மனுஷங்கன்னு நாலு பேரை கூப்பிட்டு பஞ்சாய்த்துப் பண்னாமல் எனக்கு தாலி கட்டவச்சது உன் ஆத்தா பண்ணின தப்பு.

என்னமோ எம் பேர்ல தப்பு கண்டு பிடிச்ச மாதிரி நாட்டாண்மை பண்றே.? நீ படித்தவனாடா..? மருமவன் கையில சோறு வாங்கி சாப்பிடுவதை விட மவன் கையால விஷத்தை குடிக்கிறது உத்தமம் என்று உன் கிட்ட வந்தால் நீ அளவுக்கு மீறி கொடுமைப் படுத்துறே..!

நீ எந்த திட்டத்தோடு என்னை இங்கே அழைத்து வந்துருக்கேன்னு எனக்கு இப்போ தெளிவா புரிஞ்சு போச்சு, எதிரியை ஒரு போதும் முட்டாளாக நினைத்து விடாதே. நான் உன்னை பிரம்பால் அடித்திருக்கிறேன். மறுக்க வில்லை. பதிலுக்கு நீயும் என்னை அடித்து காயப்படுத்து. உன்னை பட்டினிப் போட்டிருக்கிறேன் காரணம் புரியவில்லை, இருந்தாலும் நீ என்னை பட்டினிப் போட்டு சாகடித்தால் அதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். உன் கையில் சூடு போட்டிருக்கிறேன் ஆத்திரத்தில் அறிவிழந்து நடந்து கொண்டேன். இப்போ பதிலுக்கு என் இரண்டு கைகளிலும் சூடு போட்டுக்கு. அதில் தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும் என்றால் நான் அதை ஒரு போதும் தடுக்க மாட்டேன்.

விதி கொடுமையால ஏதோ நடந்தது நடந்துப் போச்சு, பண்ணின தப்புக்கு பிராயச் சித்தமா மகனோட இருந்து அவன் ஆசைப் பட்டதெல்லாம் செய்ஞ்சு கொடுத்து, கல்யாணம் காட்சின்னு பண்ணிவச்சு அவன் மனசு கோணாமல் நடந்து, பொண்டாட்டிக்கு தொணையா, புள்ளைங்களுக்கு தொணையா இருந்து என் கடைசி காலத்த கழிச்சிடலாம் என்று நினைத்து உன் கூட வந்தால் நீ என்னை கொடுமைப் படுத்த துடியாய் துடிக்கிறே..இல்லே.,?

செய்… நல்லா செய்.. உன் ஆத்திரம் தீருகிற வரையில் செய்..!

நான் திகைத்து நின்று விட்டேன். என் கொடூர எண்ணங்களுக்குப் பின்னால் இவ்வளவு விஷயங்கள் தொக்கி இருக்கின்றனவா..?..!

ஆத்திரம் என் கண்களை மறைத்திருக்கிறது.

நான் அறிவிழந்து விட்டேன்.

கை கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டு அவள் காலில் விழுந்தேன் சித்தீ.. என்னை மன்னித்து விடுங்கள்.

சித்தி என்னை தூக்கி நிறுத்தி, நான் பண்ணின தப்புக்கு நீ எனக்கு தண்டனை கொடுத்து விட்டாய். உன் அப்பா அம்மா பண்ணின தப்புக்கு தார்மீக பொறுப்பு எடுத்துக் கொண்டு என்னைக் கௌரமாக வாழ வை, என்ன புரிஞ்சுதா….?…..!

முற்றும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *