திருமணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 16, 2021
பார்வையிட்டோர்: 4,677 
 
 

பவித்ரா மணியைப் பார்கிறாள் காலை பத்து மணி! இந்த நேரத்தில் யார் கதைவை தட்டி தூக்கத்தை கெடுப்பது என்ற எரிச்சலுடன் கதவைத்திறந்தாள். பக்கத்து வீட்டு மாமி திலகம் மஞ்சல் பூசி குளித்து, பெரிய குங்கும பொட்டு வைத்து தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து பட்டு சேலையில் பளிச்சென்றுநின்றாள்.என்னம்மா இன்னும் ஆத்துல தூங்குறியா? என்ற கேள்வி பவித்ராவுக்கு பிடிக்கவில்லை என்றாலும், இல்லை மாமி இரவெல்லாம் ஒரே தலை வலி காலையில் எழும்பி சமைத்து கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலை அனுப்பிவிட்டு கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டேன் என்றாள். இன்னைக்குத் தைபூசம் ஞாபகம் இருக்கோ இல்லையோ கோயிலுக்கு அழைச்சிட்டுப்போகலாம் என்று வந்தேன் என்றாள். அப்போது தான் பவிதிராவுக்கு காலையில் மணக்க மணக்க மீன் குழம்பு வைத்தது ஞாபகம் வந்தது. இல்லை மாமி இப்போதே நாழியாகிவிட்டது இனி நான் தலைக்கு தண்ணி ஊத்தி எத்தனை மணிக்கு வருவது நீங்களே போய்டு வந்திடுங்கள் என்று திலகத்தை சமாளித்து அபனுப்பிவைத்தவள் கதவை மூடி விட்டு மறுப்படியும் போய்டு கட்டிலில் சாய்ந்தாள் பவித்ரா

கடந்த காலம் கண் முன்னே வந்து போனது. அப்பா அம்மா அண்ணா, தம்பி என்று சிரிய குடும்பம் பவித்ராவுடையது. ஒரே பெண் என்பதால் அப்பா கொஞ்சம் செல்லம்,அம்மா கண்டிப்பு பேர்வழி! அதிகாலையில் எழும்பி கோலம் போடு என்று ஆரம்பிக்கும் அம்மா படுக்கும் போது பல் தேச்சியா என்ற கேள்வியுடன் முடிப்பாள். ஒவ்வொரு நாளும் மஞ்சல் தேய்த்துக்குளி தாவணி போடு,பொட்டுவை, பூ வை செவ்வா வெள்ளி கோயில் போ இப்படிப்பல கட்டுப்பாட்டுடன் வளர்ந்தவள் தான் பவித்திரா. அதை விடக்கொடுமை அவர்கள் வீட்டில் அசைவம் சமைப்பதுவே குறைவு அண்ணனும் தம்பியும் வெளியில் சாப்பிட்டும் பழக்கம் உடையவர்கள் அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவின் அனுமதியுடன் பாய் கடையில் வாய்க்கு ருசியாக சாப்பிடுவார்கள். பவித்ராவுக்கு அந்த சந்தர்ப்பமும் இல்லை. சுமாராக சமைக்கும் அமாவின் சாப்பாட்டை எந்த குறையும் சொல்லாமல் மூவரும் சாப்பிடுவார்கள், சாம்பாரில் உப்பு புளி குறைவு என்றாலும் நால்வரும் அமைதியாக இருப்பார்கள்.

அண்ணனுக்கு வயது ஆகிறது்… திருமணம் செய்வோம் என்ற பேச்சை எடுத்தப்போது இல்லை பவி திருமணம் முடித்தப்பின்பே நான் முடிப்பேன் என்று அவன் உறுதியாக கூறிவிட, பவித்ராவின் படிப்பை பாதியில் நிறுத்தி ஐடி கம்பனியில் வேலை செய்த அரவிந்தனை பேசி திருமணத்திற்கு நாளும் குறித்துவிட்டார்கள். அவளுக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் மறுப்பு கூறாமல் அமைதியாக இருந்தாள்

அரவிந்தன் குடும்பம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது அரவிந்தன் அவன் பெற்றோர்கள் அவன் தம்பி என்று சிரிய குடும்பம் அவனுடையதும், அனைவரும் வேலைக்கு போகிறவர்கள் என்பதால் வீட்டில் சமைப்பதுவே குறைவு இதுவே ஆச்சிரியமாக இருந்தது பவித்ராவுக்கு, அவளின் அம்மா வெளியில் சாப்பிடுவதையே வெறுப்பவள் உடலுக்கு கேடு என்பாள் இங்கு அனைவரும் வெளியில் சாப்பிடுவதையே விரும்பினார்கள். பவி சமைக்க முற்பட்டாலும் அரவிந்தன் அதை விரும்பவில்லை உனக்கு ஏன் வேண்டாத வேலை என்றான், அதனால் அவளின் சமையல் ஆர்வம் குறைந்தது திருமணம் முடிந்த சில நாட்களில் அரவிந்தனுக்கு வேலை இடம்மாற்றம் அவனுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்ததால் அவன் அதற்கான ஏற்பாட்டையெல்லாம் முன்னதாகவே செய்திருந்தான், ஒரு நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி புது வீட்டில் குடியேறினார்கள் இருவரும்.

ஆரம்பத்தில் பவித்ராவுக்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை வெள்ளி,செவ்வாய் என்றால் அரவிந்தனை கோயிலுக்கு கூப்பிடுவாள் அவன் வருவதற்கு மறுப்பான், இவள் மட்டும் போய்வருவாள் பிறகு அவனின் குதற்கமான பேச்சி அவளை காயப்படுத்தும் ஏன் உன் சாமி மற்ற நாட்களில் பயணம் போய்விடுமா என்பான். இப்படி ஆரம்பித்து அரவிந்தனால் பல மாற்றங்கள் அவள் வாழ்வில், குங்குமம் வைத்தால் ஏன் ஸ்டிக்கர் பொட்டு வை, இந்தக்காலத்தில் போய் குங்குமம் வைக்கிற சேலை உடுத்தினால் சுரிதார் போடு என்பான், காலேஜ் போன தானே! ஏன் பட்டிக்காடா இருக்க என்பான். அவன் அவனுடைய உழைப்பை மட்டுமே நம்பினான் கலாச்சாரம் பண்பாடு இதுவெல்லாம் பொய் என்பான் வேறு எதிலும் ஈடுபாடு கிடையாது ,வீட்டில் எந்த உதவியும் செய்யமாட்டான் வீடு எப்படி இருந்தாலும் ஏன் இப்படி இருக்கு என்று கேட்க்கமாட்டான் அசைவம் இல்லாமல் சாப்பிட முடியாது கட்டாயமாக எந்த நாளும் ஏதாவது வேண்டும்

இதுவெல்லாம் பவித்ராவுக்கு வசதியாகவே இருந்தது நினைத்தால் வேலை செய்வாள் அடிக்கடி வெளியில் சாப்பிடும் பழக்கத்தை அவளும் ஏற்படுத்திக் கொண்டாள். பகலில் படுத்து தூங்குவாள் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகியப்பின்பும் அவளின் சோம்பேறித்தனம் அவளை விட்டுப்போகவில்லை, வீட்டில் அவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தவள் தற்போது எதிலும் ஒரு ஈடுப்பாடு இல்லை நினைத்தாள் சமைப்பாள் கோயில் போவாள் அவளுக்கே அவளை நினைத்தால் வெறுப்பாக இருக்கும் சிலசமயங்களில்

இரண்டு பிள்ளைகளும் அப்பாவிற்கு தப்பாமல் பிறந்திருந்தார்கள் கோயில் போவோம் என்று இவள் சொன்னாள் உடனே மறுப்பார்கள். வேண்டாம் அங்கு நெரிசலாக இருக்கும் படம் பார்க்கப்போவோம் என்று உடனே அரவிந்தன் ஒத்துக்கொள்வான் பவித்திரா ஏதும் சொன்னாள் இது உன் காலம் இல்லை இன்னும் கோயில் பூஜை என்று அவள் வாயை அடைத்துவிடுவான்

எப்போதும் இவள் ஒன்று சொன்னால் அவன் வேறொன்று சொல்வான் எதிரும் புதிருமான இருதுருவங்கள் என்றால் அரவிந்தன் பவித்திரா ஜோடியை தான் கூறவேண்டும் இத்தனைக்கும் ஜாதக பொறுத்தம் எல்லாம் பார்த்து சேர்ந்த தம்பதிகள் இதில் யாரை குறை சொல்வது பெருமூச்சுடன் கட்டிலை விட்டு எழுந்து கொண்டாள் பவித்திரா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *