தாத்தா லட்டு திண்ண ஆசையா?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 10,881 
 
 

இரவு 8.30 மணி!!! தியாகராஜனின் வீடு!!!

“டேய் பொன்ராஜ் , தங்கராஜ் சாப்பிட வாங்க ,அப்பா நீங்களும் சாப்பிட வாங்க” என ராமராஜனையும் அழைத்து கொரடா வேலை பார்த்து கொண்டிருந்தார் தியாகராஜன்.

இட்லி, வடை, பூரி என அனைத்தையும் பரிமாற தொடங்கினாள் அகிலாண்டம்

மேஜையில் இருந்த ஒரு பாத்திரம் மட்டும் திறக்காமல் இருந்தது. இதை பார்த்த ராமராஜன் “அகிலாண்டம் அதுல என்ன இருக்கு?”

“மாமா அதுல இட்லி தான் இருக்கு, இதுல காலி ஆனதும் எடுத்துக்கலாம்”

“தாத்தா அம்மா பொய் சொல்றா அதுல லட்டு இருக்கு நீங்க தூங்கின பின்னாடி எனக்கு கொடுப்பா” என தங்கராஜ் போட்டுடைத்தான்.

“இல்ல மாமா டாக்டர் உங்களுக்கு இனிப்பு கொடுக்க கூடாதுனு சொல்லிருக்காங்க அதான்”

“ஆமா அவன் அப்படி தான் சொல்லிட்டு இருப்பான் எனக்கு ஒரு லட்டு வை!!!”

“வேணாம் மாமா”

“அப்பா அவ சொல்றது சரி தான்! நீங்க சாப்பிட கூடாது!!!”

“இப்போ வைக்க போறியா இல்லையா!!!”

“இல்ல மாமா வைக்க மாட்டேன்”

“போங்கடா” என கோபத்துடன் எழும்பி தன் அறைக்கு சென்றார் ராமராஜன்.

“அப்பா….” “ மாமா…”. “தாத்தா…”

……

இரவு 9.30 மணி

பொன்ராஜ் மற்றும் தங்கராஜ் இரண்டு லட்டுகளுடன் தாத்தா அறைக்கு சென்றனர்.

“தாத்தா…. தாத்தா…. இந்தாங்க லட்டு”

“எனக்கு வேணாம்டா”

“தாத்தா ஓவரா பண்ணாத ஒழுங்கா சாப்பிடு” என ஊட்டி விட்டனர்.

“உங்க அளவுக்கு உங்க அப்பா அம்மா இல்லடா”

“சரி தாத்தா நீ தூங்கு”

10.00 மணி

அகிலாண்டம் ஒரு லட்டுடன் ராமராஜன் அறைக்குள் நுழைந்தாள்

“மாமா…மாமா இந்தாங்க லட்டு”

“எனக்கு வேணாம்மா”

“மாமா உங்க மகன் இருக்காருனு தான் நான் அப்போ கொடுக்கல! இப்போ அவரு ஃபோன் தான் பேசிட்டு இருக்காரு அவரு வர முன்னாடி இத சாப்பிடுங்க”

அதையும் வாங்கி சாப்பிட்டார் ராமராஜன்.

10.15 மணி

தியாகராஜன் ஒரு லட்டுடன் ராமராஜன் அறைக்குள் நுழைந்தார்

“அப்பா …. அப்பா இந்தாங்கபா லட்டு”

“டேய் என்னடா நினைச்சிட்டு இருக்க? எனக்கு ஒன்னும் வேணாம்டா! எடுத்துட்டு வெளிய போ”

“எனக்கு உங்களுக்கு கொடுக்கனும்னு தான் ஆசை. ஆனா உங்க மருமகள் இருக்காளே! ஏதாவது சொல்லுவா! அதான்.” என லட்டை ஊட்டி விட்டான்!

10.30 மணி

தூக்கம் வராமல் ராமராஜன் “ராஜாமணி உங்கிட்ட சீக்கிரம் வந்திருவன் போல இருக்கு. சாப்பிடும் போது கொடுத்திருந்தா ஒரு லட்டோட முடிஞ்சிருக்கும்! இப்போ ஒரே அடியா முடிஞ்சிரும் போலயே”

11.00 மணி

சொர்கத்தில்!!!

ராஜாமணி “வாங்க என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க?”

“எல்லாம் உன் வாரிசும் அவன் வாரிசும் பண்ணின வேலை தான்! ஆனா ஒன்னு மட்டும் உண்மை! உன்ன விட என் மேல தான் அவங்க எல்லாருக்கும் பாசம் அதிகம்”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல உங்களுக்கு லட்டு எனக்கு ஜாங்கிரி அவ்வோளா தான் வித்தியாசம்”

ராமராஜன் “!!!!!……!!!!!!”

Print Friendly, PDF & Email

1 thought on “தாத்தா லட்டு திண்ண ஆசையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *