கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2022
பார்வையிட்டோர்: 5,390 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, அண்ணனுந் – தங்கச்சியும் வாந்து வந்தாங்க. கொஞ்ச நாள்ல, தங்கச்சியக் கல்யாணம் முடுச்சுக் குடுத்திட்டு, அண்ணனும் ஒரு பெண்ணக் கல்யாணம் முடிச்சுக்கிட்டர்.

இப்டி வாந்து வரயில, அண்ண னுக்கு ஒரு ஆம்பளப் பிள்ளயும், தங்கச்சிக்கு ஒரு பொம்பளப் பிள்ளயும் பெறக்குது. கொஞ்சநாக் கழிச்சு, ஆம்பளப் பயல விட்டுட்டு, அண்ண எறந்து போயிட்டா. ஆம்பளப் பயல, அவனோட அம்மா வளத்து வந்தா. வளத்து வரயில, ரொம்ப ஏழயாப் போயிட்டாங்க. கூலி வேல செஞ்சு பொழக்கிறாங்க.

இந்தச் சமயத்ல, அத்த, பெரிய பணக்காரியா, நல்லாப் பொழக்கிறா. அத்த மகளும் பெரியவளாகி கல்யாணத்துக்கு தயாராயிட்டா.

அம்மாள அனுப்பி, அத்தகிட்டப் பொண்ணுக் கேக்கச் சொல்றா. சொல்லவும், மகனுக்காக-, அம்மா பொண்ணு கேட்டுப் போறா. நல்ல நாளப் பாத்து, சவனம் பாத்து, வேண்டிய ஆளுகளக் கூட்டிக்கிட்டு போறா. போயி, நாத்தனாகிட்ட, மகனுக்குப் பொண்ணுத் தாங்கண்டு கேட்டா. அதுக்கு நாத்தனா, ஒங்க அண்ணனப் பாத்துக் கேளுண்டு சொல்லிட்டா. சொல்லவும், நாத்தனா புருசங்கிட்டப் போயி, மகனுக்குப் பொண்ணு தாங்கண்ணேண்டு கேட்டா. கேக்கவும், அவ.

பிச்சக்கார நாயே! ஒந்தரம் என்னா? எந்தரம் என்னா? யார்கிட்ட வந்து பொண்ணுக் கேக்ற ஒனக்கு வெக்கமாயில்ல. போ! வெளியண்டு, வஞ்சு போகச் சொல்லிட்டார். தலயத் தொங்கப் போட்டுக்கிட்டு, வீட்டுக்கு வந்தா. மாம என்னா சொன்னாருண்டு அம்மாகிட்டக் கேட்டா. பொண்ணத் தர முடியாதுண்டு சொன்னாங்கண்டு மகங்கிட்டச் சொல்லிட்டா. சரி! நா…. போயிக் கேட்டுட்டு வாரேண்டு சொல்லிட்டுப் போறா.

அத்த வீட்டுக்குப் போனவ், ஒரு வாரமும் -ஆறு நாளும் அங்க தங்கிக்கிட்டா. தங்கி, மாமங்கிட்ட, எனக்குப் பொண்ணு குடுங்கண்டு கேட்டா. கேக்கவும், போடா! ஒனக்குப் பொண்ணு தர முடியாதுண்டு மாம் சொல்லிட்டர். ஊர்ப்பஞ்சாயத்தக் கூட்னர். பஞ்சாயத்துக்கு வந்த பெரியவங்களும், பொண்ணக் குடுத்தவங்களுக்கு, பொண்ணக் குடுக்கணும்ண்டு வாதாடினாங்க.

பஞ்சாயத்துக்காரங்ககிட்ட, அப்ப – ஒரு நிபந்தனயப் போட்டா. என்னாதுண்டா பக்கத்துக் கொளத்ல, கழுத்தளவு தண்ணில, பொழுசாய ஆறு மணில இருந்து, கால ஆறு மணி வரைக்கும் அவ் நிண்டிருந்திட்டு வந்திட்டாண்டா, பொண்ணக் கட்டிக்கிட்டுப் போகட்டும்ண்டு சொல்லிட்டா.

இவனும் நிபந்தனய ஏத்துக்கிட்டா. அதக் கண்காணிக்க ஒரு ஆளயும் நியமிச்சு, கொளத்தங்கரயில ஒக்கார வச்சிட்டா.

நிபந்தனப்படி, ராவ்வெல்லாம் கழுத்தளவு தண்ணிக்குள்ள நிண்டிருந்திட்டு விடியவும், வெளிய வந்து, பொண்ணக் குடுண்டு கேட்டா. அதுக்கு அவ, ஏண்டா நிய்யி வடக்கு மலயில திய்யி எரிஞ்சுச்சு, அந்த அணல்ல குளிரு காஞ்சுகிட்டே தண்ணிக்குள்ள இருந்திருக்க. அதுனால ஒனக்கு, பொண்ணு இல்ல போடாண்டு சொல்லிட்டர்.

சொல்லவும், பஞ்சாயத்துக்காரங்க, இவ் பெரிய வம்பான ஆளா இருப்பா போலண்ட்டு, யப்பா! இது ஓம்பாடு, ஒங்க மாம் பாடுண்டு சொல்லிட்டு போயிட்டாங்க. இத வீட்டுக்குள்ள இருந்து மக கேட்டுக்கிட்டே இருக்கா. இந்த அநியாயத்துக்கு ஒரு முடிவில்லயாண்ட்டு, அப்பனுக்கு – எப்டியாச்சும் நல்ல பாடம் புகட்டணும்ண்டு மனசுல நெனக்கிறா.

அப்ப: பஞ்சாயத்து முடியறதுக்கு மதியமாயிருச்சு. மத்தியானக் கஞ்சி குடிக்க வீட்டுக்குள்ள வந்தர். யாரு? அப்ப. வரவும், இவ என்னா செஞ்சாண்டா – வட்டில கஞ்சிய ஊத்தி வச்சிட்டு, கஞ்சில உப்பப் போடாம, வட்டிக்குக் கீழ, தரயில உப்பப் போட்டு வச்சுட்டா. அவ் – கஞ்சிய பெசஞ்சு குடிச்சுப் பாத்தா. உப்பு இல்ல. உப்பு இல்லயேண்டு சொல்றா. குடிச்சுப் பாத்துட்டு உப்பு இல்லம்மாண்டு அப்ப சொல்றா. சொல்லவும் என்னாப்பா! வட்டியத் தூக்கிட்டுப் பாருண்டு மக சொன்னா. வட்டியத் தூக்கிப் பாத்தா. பாக்கயில, வட்டிக்குக் கீழ உப்பு கெடக்குது.

ஏம்மா! – வட்டிக்குக் கீழ உப்பு இருந்தா. கஞ்சில எப்டிம்மா கக்கிம்ண்டு கேக்குறா! அதுக்கு அவ, ஏம்ப்பா! வடக்கு மலயில் திய்யி எரிஞ்சா, அந்த அணலு, எப்டிப்பா கொளத்துக்குள்ள இருக்றவ மேலப்டும்ண்டு கேட்டா. “பொண்ணு இல்லண்டா! இல்லண்டு சொல்லிறணும், தரேண்டா! தரேண்டு சொல்லணும். அதுக்காக அவங்கள தரக்கொறவா நடத்தக் கூடாதுண்டு சொன்னா. சொல்லவும், இவனுக்கு கோவம் வந்து, நா வச்சதுதா சட்டம். நிய்யி என்னா சொல்றது. நா… என்னா கேக்குறதுண்டு சொல்றா. சொல்லவும், இவளுக்கு அப்ப மேல கோவம் வந்து, நாஞ் சொல்றதக் கேக்க மாட்டயில, அப்ப நிய்யி சொல்லிக்கிட்டே இரு. நா போயிக்கிட்டே இருக்கேண்ட்டு, அத்த மகனோட போயிட்டா.

போயி, கூலிவேல செஞ்சு பொழச்சுக்கிட்டிருந்தாங்க. பொழச்சுக்கிட்டிருக்கயில், அவளுக்கு மூணு பிள்ளைக பொறந்திச்சு. மூணுபிள்ளைக பெறந்தப் பெறகு, மகளயும் மருமகனயும் கூட்டியாந்து, சீர் வரிச செஞ்சு அனுப்பி வச்சாங்களாம். அண்ணக்கிருந்து, விரோதத்த மறந்திட்டு, ஒத்துமுயா வாந்தாங்களாம்.

விரோதந்தான குடும்பத்த வேறாக்குது. விரோதத்த விட்டுட்டா என்னா செய்யுமாம். விட்டாத்தே இந்தக் காலத்ல வாழ முடியும்.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *