அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12
சரளாவின் அப்பா வரதன் வேளியே போய் இருந்தார்.அம்மா வசந்தா மட்டும் டீ.வீயிலே சினிமா பார்த்துக் கொண்டு இருந்தாள்.தம்பி துரை கிரிக்கெட் விளையாடப் போய் இருந்தான். சரளா மெல்ல தன் அம்மாவிடம் ”அம்மா நான் கொஞ்ச நேரம் என்னோடு படிச்ச பொண்ணு ஒத்தி வூட்டுக்குப் போய் பேசிகிட்டு இருந்து விட்டு சீக்கிரமா வந்து விடறேம்மா” என்று கொஞ்சலாகக் கேட்டாள். டீ.வீ.யிலே ஓடிக் கொண்டு இருந்த சினிமாவில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு இருந்த வசந்தா ”சீக்கிரமா வூட்டுக்கு வந்து விடு.ரொம்ப லேட்டாக்காதே.நாங்க கவலைப் படும்படி வச்சுடாதே என்ன” என்று சொன்னதும் தான் சரளாவுக்கு மூச்சே வந்தது.உடனே சரளா” நான் ரொம்ப லெட்டாக்க மாட் டேம்மா.சீக்கிரமா வுட்டுக்கு திரும்பி வந்திடறேம்மா” என்று சொல்லி விட்டு முத்து கடைக்கு சந்தோ ஷத்துடன் போனாள்.கடை வாசலிலே முத்து தன் பைக்கை வந்துக் கொண்டு தயாராக நின்றுக் கொண்டு இருந்தான்.தூரத்திலே சரளா வருவத்தைப் பார்த்த முத்து மனம் குதூகலித்தது.சரளா கடைக்கு வந்தவுடன் ”வா சரளா,நான் சொன்னா மாதிரி உங்க வூட்லே சொல்லிட்டு வந்து இருக்கியா ரொம்ப சந்தோஷம் நீ வந்ததுக்கு.நாம இப்போ போவலாமா.என் பைக்கிலெ பின்னாலே ஏறிக்க”என்று சொல்லி விட்டு சரளா தன் ‘பைக்குக்கு’ பின்னாலே ஏறினவுடன்,தன் ‘பைக்கை’ ‘ஸ்டார்ட்’ பண்ணி னான் முத்து.பயந்துக் கொண்டே சரளா நாலா பக்கமும் நன்றாகப் பார்த்து விட்டு ”எனக்கு ரொம்ப பயமா இருக்கு.யாராச்சும் பர்த்துட்டாங்கன்னா எங்க அம்மாவும் அப்பாவும் என் தோலை உரிச்சிடு வா ங்க”என்று பயந்து சொல்லிக் கொண்டே முத்து பைக்கில் பின்னாலே ஏறப் போனாள். “பயப்படாதே சரளா.நீ நிதானமா உன்னை யாராச்சும் கவனிக்கலையான்னு நல்லா பார்த்துட்டு அப்புறமா என் பைக் கிலே ஏறு” என்று சொல்லி சரளாவுக்கு ¨தரியம் கொடுத்தான் முத்து.சரளாவும் மறுபடியும் நாலா பக் கமும் நன்றாகப் பார்த்து விட்டு முத்து பைக்கின் பின் சீட்டில் ஏறிக் கொண்டாள்.உடவே முத்து “போலாமா,சரளா” என்று கேட்டதும் சரளா “போவலாம்ங்க” என்று பயந்துக் கொண்டே சொன்னாள். சரளா சொன்னது தான் தாமதம்,முத்து சரளாவை தன் ‘பைக்கில்’ ஏறினவுடன் சிட்டாய் பறந்தான் .சரளாவுக்கு இவ்வளவு நெருக்கமாக ஒரு ஆம்பளைப் பையனோடு பைக்கில் போய்க் கொண்டு இரு ப்பது அளாவிலாத சந்தோஷத்தை கொடுத்தது.முத்து சரளாவை அழைத்துக் கொண்டு எழும்பூரை விட்டு கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு சின்ன ‘பார்க்கு’க்கு வந்தான்.பார்க்’ வாசலில் தன் பைக்கை ‘ஸ்டாண்ட்’ போட்டு நிறுத்தி விட்டு சரளாவை அழைத்து கொண்டு ‘பார்க்கு’ உள்ளே வந்து,ஒரு ஒதுக்கு புறமான இடத்தில்,யாரும் இல்லாத ஒரு ‘கான்கிரீட்’ ‘பென்ச்சில்’ உட்கார்ந்துக் கொண்டான். சரளாவும் அவன் பக்கத்தில் பயத்தோடு உட்கார்ந்தாள்.கொஞ்ச தள்ளி உட்கார்ந்து கொண்ட சரளாவை பார்த்து ”இன்னும் கொஞ்ச கிட்ட வந்து குந்து சரளா.இங்கே உனக்கு தொ¢ஞ்சவங்க யாரும் இருக்க மாட்டாங்க”என்று சொன்னதும் சரளா முத்துவுக்கு ஒட்டினா மாதிரி வந்து உட்கார்ந்துக் கொ ண்டாள்.முத்து தான் முதலில் பேசினான்.
“இதோ பார் சரளா.நாம இப்ப கிட்டத் தட்ட மூனு மாசமா பழகி வரோம்.ஆனா உன்னைப் பத்தி யோ,உன் குடும்பத்தை பத்தின எந்த விவரமோ எனக்குத் தொ¢யாது.அதே போல உனக்கு என்னைப் பத்தின விவரமோ,என் குடும்பத்தை பத்தின விவரமோ தொ¢யாது.நான் முதல்லெ என்னைப் பத்தியும் என் குடும்பத்தைப் பத்தியும் விவரமா சொல்லி விடறேன்.அப்புறமா நீ உன்னைப் பத்தின விவரத் தையும், உன் குடும்பத்தை பத்தின விவரத்தையும் சொல்லு என்ன” என்று சொல்லி விட்டு சரளாவின் முகத்தைப் பார்த்தான் முத்து.உடனே “சரளா தன் தலையைத் தொ¢ங்க போட்டுக் கொண்டே “சரிங்க” என்று சொன்னான்.“ரொம்ப தாங்க்ஸ் சரளா.நான் ஒரு ஏழைக் குடும்த்தைச் சேர்ந்தவன் தான். என் அக்காவுக்கு பன்னண்டு வருஷத்துக்கு முன்னாடி கல்லாணம் ஆகி அவங்களுக்கு இப்போ ஒரு பொட்டை பிள்ளை இருக்கு.எங்க மாமா ஒரு ‘கன்ட்ராக்டர்’ கிட்டே ‘கார்பென்டரா’ வேலை செஞ்சி வறாரு.இப்ப எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரு பையன் தான்.இப்போ இருக்கிற மளிகைக் கடை ஒன்னு தான் எங்க ஆஸ்தி.நானும் எங்க அம்மா,அப்பாவும்,எழும்பூரிலே ஒரு சின்ன வூட்டிலே இருந்து வறோம்.எங்க அப்பா ‘ஹோல் ஸேல்’ மார்கெட்டுக்குப் போய் எங்க மளிகை கடைக்கு வேண் டிய சரக்குகளை எல்லாம் வாங்கி வந்து கடையிலே போட்டு விட்டு,அப்புறமா வூட்டிலே சாப் பிட்டு விட்டு ‘ரெஸ்ட்’ எடுத்துகுவார்.மளிகை கடையை நான் தான் நாள் பூராவும் கவனிச்சுக்கிட்டு வறேன். .நீ சம்மதம்ன்னு சொன்னா போதும்,நான் உன்னை கல்லாணம் கட்டிக் கிட்டு சந்தோஷமா வச்சு வரு வேன்.நீ பயப் பட தேவையே இல்லே.நான் உன் மேலே சத்தியா இதை சொல்றேன்” என்று உரிமை யோடு சரளா தலையிலே தன் கையை வைத்து சத்தியம் பன்ணினான் முத்து.உடனே சரளா ஆசை யுடன் அவன் கையை தன் தலையிலே இருந்து எடுத்து விட்டு “நீங்க உங்க பக்கம் இருக்கிற எல்லா விவரமும் சொல்லி விட்டீங்க.நான் இப்ப எங்க பக்க விவரத்தை சொல்றேங்க.நான் ஒரு சோ¢ப் பொண் ணுங்க.எங்க அப்பா அம்மாவுக்கு நான் முதல்லெ பொறந்தேங்க.எட்டு வருஷம் கழிச்சு எங்க அம்மாவுக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்திச்சுங்க.அவன் பேரு துரை.எங்க அப்பா ஓரு வெங்காய மண்டியிலே மூட்டைத் தூக்கி வறாரு.எங்க அம்மா ஒரு ‘பில்டிங்க கன்ட்ராக்டர்’ கிட்டே சித்தாளா வேலை செஞ்சிக்கிட்டு வறாங்க.நான் எட்டாவது தாங்க படிச்சு இருக்கேங்க” என்று சொல்லி விட்டு ‘நாம் ஒரு சோ¢ப் பொண்ணுன்னு உண்மையைச் சொல்லி இருக்கோமே,அது முத்துவுக்கு பிடிச்சு இருக்குமோ இருக்காதோ’ என்று சந்தேகப் பட்டுக் கொண்டே முத்துவின் முகத்தையே கவலையோடு பார்த்துக் கொண்டு இருந்தாள்.
முத்து சரளா கையைப் பிடித்துக் கொண்டு “இதோ பாரு,சரளா,நீ ஒரு சோ¢ப் பொண்ணா இருந்தாலும் எனக்கு பரவாயில்லை.நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தரு க்கு நல்லா பிடிச்சி இருக்கணும்.நம்ம ரெண்டு பேருடைய மனசும் நல்லா ஒத்துப் போய் இருக்கணும். அது தான் ரொம்ப முக்கியம்.எனக்கு உன்னைப் ரொம்பப் பிடிச்சி இருக்கு.உனக்கு என்னைப் பிடிச்சி இருக்கா” என்று சொல்லி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். “உங்களுக்கு என்னை ரொம்ப பிடிச்சி இருக்காப்பல,எனக்கும் உங்களெ ரொம்ப பிடிச்சி இருக்குங்க.ஆனா நாம ரெண்டு பேரும் கல்லாணம் கட்டிக்க உங்க வூட்லேயும்,எங்க வூட்லேயும் சம்மதம் தரணுமேங்க.இதை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க” என்று தன் பயத்தை சொன்னாள் சரளா.கொஞ்ச நேரம் யோஜனை பண்ணிவிட்டு முத்து சரளாவைப் பார்த்து ”இதோ பார் சரளா, உனக்கு என்னை ரொம்ப பிடிச்சி இருக்குன்னு நீ சொன்னத்தை கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீ சொல்ற சந்தேகம் எனக்கும் இருக்கு. நாம முதல்லே ஒரு ரெண்டு மாசத்துக்கு,ரெண்டு பேரும் நல்லா பழகி வந்து நமக்குள்ளே ஒரு முடிவு பண்ணிக்கிடலாம்.நாம நிச்சியமா கல்லாணம் கட்டிக் கிட முடிவு செஞ்சா, அப்புறமா நீ உங்க அப்பா அம்மா கிட்டேயும்,நான் எங்க அம்மா அப்பா கிட்டேயும் கேட்டுப் பாக்கலாம்.பயப் படாதே சரளா.நாம நிச்சியமா கல்யாணம் பண்ணிக்கலாம்.நீ கவலைப் படாம இருந்து வா” என்று சொன்னதும் சரளா வுக்கு கொஞ்ச பயம் போய் லேசாக சிரித்தாள்.சரளாவுக்கு முத்து சொன்னது ரொம்ப பிடித்து இருந்தது. சரளா உடனே “ஆமாங்க, நீ சொல்றது ரொம்ப சரி.முதல்லே நாம் ரெண்டு பேரும் நல்லா பழகி வரலாம்” என்று சொல்லி இன்னும் முத்து பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்துக் கொண்டாள்.
இருவரும் நெருக்கமாக உட்கார்ந்துக் கொண்டு மனம் விட்டு பழகினார்கள்.நேரம் ஆகி விட வே,சரளாவுக்கு அவ அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வரவே,அவ உடனே ”ரொம்ப நேரம் ஆயிடுச்சி முத்து.எங்க அம்மா எனக்கு சொல்லியே அணுப்பினாங்க.நான் வூட்டுக்குப் போவணுங்க” என்று சொல்லி அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு எழுந்துகொள்ள முயன்றாள் சரளா. முத்து வேண்டா வெறுப்பாக அவன் பிடியில் இருந்து சரளாவை விட்டான்.ரெண்டு பேரும் மெல்ல எழுந்து ‘பார்க்குக்கு’ வெளியே வந்தார்கள்.வழியில் முத்து ஒரு ஹோட்டல் முன்னால் தன் பைக்கை நிறுத்தி விட்டு சரளாவை கீழே இறங்கச் சொன்னான்.சரளா பயந்துக் கொண்டே ”என்ன முத்து, பைக்கை இங்கே நிறுத்தி இருக்கே.எனக்கு நேரம் ஆவுதுன்னு நான் சொன்னேனே.உனக்கு மறந்து போச்சா” என்று கலவரப் பட்டுக் கொண்டே கேட்டாள்.முத்து “வா,சரளா நாம முதல் முதல்லெ ஒருத்த ரோடு ஒருத்தர் சந்தோஷமா பழகி வந்து இருக்கோம்.இந்த ஹோட்டலிலே நாம் ரெண்டு பேரும் ஒரு ‘ஸ்வீட்’ சாப்பிட்டு விட்டு,அப்புறமா வூட்டுக்குப் போவலாம் வா” என்று சொல்லி சரளாவை அழை த்துக் கொண்டு ஹோட்டலுக்குள்ளே போனான் முத்து. சர்வர் வந்தவுடன் முத்து சர்வரை பார்த்து “ஆளுக்கு ரெண்டு ‘குலாப் ஜாமூனும்’,ஒரு மசால் தோசையும்,ஒரு காபியும் சீக்கிரமா கொண்டு வாங்க” என்று ‘ஆர்டர்’ பண்ணினான்.அந்த சர்வர் மின்னல் வேகத்தில் ரெண்டு கிண்ண த்தில் ‘குலாப் ஜாமுனை’க் கொண்டு வந்து அவர்கள் முன்னால் வைத்தான்.உடனே முத்து ஒரு கிண் ணத்தை சரளாவிடம் தள்ளி வைத்து விட்டு “சாப்பிடு சரளா.அப்புறமா மசால் தோசையை சாப்பிட்டு விட்டு,காபியை நாம குடிக்கலாம்” என்று சொல்லி விட்டு குலாப் ஜாமூனை வெட்டி ஒரு துண்டை தன் வாயில் போட்டுக் கொண்டான்.சரளாவும் முத்துவும் ‘குலாப் ஜாமூனை’ காலி பண்ணுவதற்குள், அந்த சர்வர் ரெண்டு மசால் தோசையை சட்னி சாம்பாருடன் கொண்டு வந்து வைத்தான். ”எனக்கு இந்த மசால் தோசையை ரொம்ப பிடிச்சி இருக்கு”என்று சொல்லி மசால் தோசையை திறந்து கொ ஞ்சம் மசாலை எடுத்து தோசையுன் சாப்பிட ஆரம்பித்தாள் சரளா.முத்துவுக்கு சரளா சொன்னது மிகவும் பிடித்து இருந்தது.சந்தோஷத்தில் முத்து “நீ கவலையே படாதே சரளா.இனிமே நாம அடிக்கடி இந்த மாதிரி மசால் தோசையை சாப்பிட்டு வரலாம்” என்று அவள் கையைப் பிடித்து சொன்னான். சரளாவுக்கு தேவலோகம் தொ¢ந்தது.
இருவரும் சாப்பீட்ட பிறகு முத்து சர்வர் கொடுத்த பில்லை வாங் கிக் கொண்டு போய் பணத்தைக் கொடுத்து விட்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்கள். முத்து தன் ‘பைக்கை’ ‘ஸ்டார்ட்’ பண்ணி அதில் சரளா ஏறிக் கொண்டதும் வேகமாக ‘பைக்கை’ ஓட்டிக் கொண்டு வந்து தன் மளிகை கடை வாசலில் வந்து பைக்கை நிறுத்தினான்.‘பைக்கை’ விட்டு கீழே இறங்கினதும்,சரளா நாலா பக்கமும் பயத்தோடு நாம முத்துவின் பைக்கில இருந்து கீழே இறங்கு வதை யாராச்சும் பார்க்கிறாங்களா என்று சுத்தி எல்லா பக்கமும் பார்த்தாள்.நல்ல வேளை.சரளா பைக்கில் இருந்து கீழே இறங்கினதை யாரும் பார்க்கவில்லை.சரளாவுக்கு நின்று போன மூச்சு மறுபடி யும் ஓட ஆரம்பித்தது.சரளா சட்டென்று ”ரொம்ப ‘தாங்க்ஸ்’ முத்து.நீயும் நானும் இப்படி பைக்கில் இருந்து ஒன்னா வந்ததை யா¡ராச்சும் பாக்கறதுக்கு முன்னாடி நான் வூட்டுக்குப் போயிடறேன். அப்புறமா நாம கடையிலே சந்திக்கலாம்” என்று சொல்லி விட்டு வேகமாக தன் குடிசையை நோக்கிப் போனாள்.தினமும் முத்துவும் சரளாவும் மளிகை கடையில் நிறைய நேரம் ஒருவருக்கு ஒருவர் பேசி மகிழ்ந்து வந்தார்கள்.பேச்சு நடுவிலே சரளா “முத்து,உன்னை நம்பி நான் இவ்வளவு சகஜமாக தினமும் பழகி,பேசி,சிரிச்சு கிட்டு வாறேன்.நீ என்னை கைவிடமாட்டயே முத்து.நிச்சியமா கல்லா ணம் கட்டிப்பாயா” என்று கேட்கும் போது சரளாவின் கண்களின் ஓரத்தில் நீர் துளித்தது. இதை கவனித்த முத்து “இதோ பார் சரளா.நான் அப்படிப் பட்ட ஆள் இல்லே. உன்னை நிச்சியமா கல்லா ணம் கட்டிப்பேன்.இது சத்தியம் சரளா”என்று அவள் தலையில் கையை வைத்து சத்தியம் பண்ணினான்.முத்து சொன்னதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டாள் சரளா.“சரி முத்து,நீ இப்படி சொன்ன பிற்பாடு நான் இனிமே எதை நினைச்சும் கண்கலங்க மாட்டேன்.நான் சந்தோஷமா இருந்து வாறேன்.நான் போய் வரட்டா.கடைக்கு வந்து ரொம்ப நேரம் ஆவுது” என்று சொல்லி விட்டு வாங்கின மளிகை சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு தன் குடிசைக்குப் போனாள் சரளா.
ரொம்ப நாளாக முத்து சரளாவை ‘தன்னுடன் ஒரு தடவை பீச்சுக்கு வர முடியுமா’ என்று கேட்டுக் கொண்டு இருந்தான்.ஆனால் சரளா அவனுடன் பீச்சுக்கு வர சம்மதிக்கவே இல்லை. இருந் தாலும் முத்து விடமல் சரளாவிடம் “சரளா, நீ இந்த ஞாயித்துக் கிழமை சாயங்காம ஒரு நாலு மணிக் கெல்லாம் ரெடி ஆகி,என் கடை வாசலிலே வந்து நின்னு கிட்டு இரு.நான் கடைக்கு வந்து என் பைக்கில் உன்னை பீச்சுக்கு அழைச்சு போறேன்.நாம அங்கே குந்தி கிட்டு நிறைய நேரம் பேசி விட்டு, அப்புறமா ஒரு நல்ல ‘ஹோட்டலில்’ ‘டிபன்’ சாப்பிட்டு விட்ட பிறகு,மறுபடியும் நான் உன் னை எங்க மளிகைக் கடை வாசலிலே கொண்டு வந்து விட்டு விடறேன்” என்று சொல்லி முடிக்கவில் லை, உடனே சரளா “என்ன முத்து நீ சொல்றே.இந்த ‘பீச்சு’,’ஹோட்டல்’, ரெண்டுக்கும் போய் விட்டு வந்தா நான் வூட்டுக்கு வர ரொம்ப லெட்டாகி விடுமே.என்னால் அவ்வளவு நேரம் வெளியே எல்லாம் இருக்கவே முடியாது.நான் ‘பீச்சு’,’ஹோட்டல்’ இதுக்கு எல்லாம் வர முடியாது முத்து.எங்க வூட்டுக்கு விஷயம் இந்த தொ¢ஞ்சா என் அம்மாவும் அப்பாவும் என் தோலை உரிச்சிடுவாங்க.நான் அதுக்கெ ல்லாம் வரலே.இதைத் தவிர எங்க குடிசைக்கு மூனாவது குடிசையிலே என் முறை மாமன் காளின்னு ஒருத்தன் இருக்கான்.எங்க அம்மா என்னை அவனுக்குத் தான் என்னை கல்லாணம் கட்டிக் கொடுக் கனுன்னு சொல்லி கிட்டு இருக்காங்க.எனக்கு அவனை சுத்தமாப் பிடிக்கலே.அவனும் எங்க அப்பா வை போல ஒரு வெங்காய மண்டியிலே வேலை செஞ்சு வறான்.அவன் குடிகாரன் வேறே கையிலே கொஞ்சம் பணம் வந்தா போதும்.உடனே குடிக்கப் போயிடுவான்.நான் இதை எங்க அம்மா கிட்டே சொன்னா,உடனே அவங்க ‘இல்லே சரளா, உன்னை அவன் கல்லாணம் கட்டிக் கிட்டான்னா அவன் குடிக்கவே மாட்டான்.இப்ப அவன் ஒண்டிக் கட்டை.அதான் அவன் குடிக்கப் போயிடறான்.அவன் ரொம்ப நல்லவன் சரளா’ ன்னு எனக்கு சொல்லி வறாங்க.அவனை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குது முத்து” என்று பயந்துக் கொண்டே சொன்னாள்.அவள் கண்களீன் ஓரத்தில் நீர் சுரந்தது. உடனே முத்து “அந்த காளி உன்னை கல்லாணம் கட்டறதுகுள்ளாற நான் உன்னைக் கல்லாணம் கட்டிப்பேன். நீ கவலைப் படாம சந்தோஷமா இருந்து வா” என்று சொல்லி அவளுக்கு உறுதி அளித் தான்.“ரொம்ப தாங்ஸ் முத்து” என்று சொல்லி அவன் கையை பிடித்து மெல்ல அழுத்தி விட்டு “நான் போயாறேன்.நான் நாளைக்கு வறேன்” என்று சொல்லி தன் கண்ணை சிமிட்டி விட்டு ஒரு காதல் சிரிப்பை உதிர்த்து விட்டு கடையை விட்டு தன் குடிசைக்குக் கிளம்பினாள் சரளா.
அன்று ஞாயிற்றுக் கிழமை.கடை வாசலில் காத்துக் கொண்டு இருந்தான் முத்து. சொன்ன படி கடைக்கு வந்தாள் சரளா.சந்தோஷப் பட்ட முத்து சரளாவை தன் ‘பைக்கில்’ ஏற்றிக் கொண்டு வழக்கமாக அவன் போகும் ‘பார்க்’குக்கு போய் மறைவான ஒரு இடத்தில் இருவரும் உட்கார்ந்துக் கொண்டார்கள்.முத்து சரளாவிடம் நிறைய பேசிக் கொண்டு இருந்து விட்டு நிறைய ‘விஷமங்களும்’ பண்ணீ வந்தான்.அவனும் சரளாவும் ஒருவரை ஒருவரை கட்டிக் கொண்டு இருப்பது போல நிறைய படங் களை இருவர் ‘செல்’ போனிலும் எடுத்து அவைகளை இருவரும் ஆசை தீர பார்த்து சந்தோஷப் பட்டார்கள்.நேரம் ஆகி விடவே முத்து சரளாவை அழைத்துக் கொண்டு வழக்கமாக அவன் சாப்பிடும் ஹோட்டலுக்கு வந்து ‘ஸ்வீட்’ ‘டிபன்’ ‘காபி’ எல்லாம் ஆர்டர் பண்ணினான்.இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டு சாப்பிட்டு டிபனை சாப்பிட்டு முடித்தார்கள்.பில்லுக்கு பணத்தைக் கொடுத்து முத்து சரளாவை அழைத்துக் கொண்டு விட்டு வெளியே வந்தார்கள்.அந்த நேரம் பார்த்து சரளா முறை மாமன் காளி எதிரே வந்தான்.அவன் தன் முறைப் பொண்ணு சரளா வேறே ஒரு ஆம்பளை யோடு நின்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்து விட்டான்.சரளாவும் அவன் முறை மாமன் காளியைப் பார்த்து விட்டாள்.கருடனைக் கண்ட நாகப் பாம்பு மாதிரி அவள் உடம்பு நடுங்க ஆரம்பித்தது.முத்து அவன் பைக்கை ‘ஸ்டார்ட்’ பண்ணி விடவே சரளா வேறு வழி ஒன்னும் தோணாமல் சட்டென்று அவன் பின் சீட்டில் ஏறிக் கொண்டு முத்து காதருகே தன் வாயை வைத்து “சீக்கிரமா போ முத்து,என் முறை மாமன் என்னைப் பார்த்துட்டான்.சீக்கிரமா வண்டிய ஓட்டு” என்று பயத்துடன் சொன்னாள். உடனே முத்துவும் சரளா சொன்னபடி ‘பைக்கை’ வேகமாக ஓட்டி வந்து தன் கடை வாசலில் நிறுத்தி னான்.பைக்கில் இருந்து வேகமாக கீழே இறங்கின சரளா “நான் போயாறேன் முத்து. நாம அப்புறமா பாக்கலாம்” என்று சொல்லி விட்டு வேகமாக தன் குடிசைக்கு ஓடினாள்.இதைப் பார்த்த முத்து மிகவும் சங்கடப்பட்டான்.கொஞ்ச நேரம் ஆனதும் மனதை தேற்றிக் கொண்டு மறுபடியும் தன் பைக்கை ‘ஸ்டார்ட்’ பண்ணி தன் வீட்டுக்கு வந்தான் முத்து.
சரளா குடிசைக்கு வேகமாகப் போய் கொண்டு இருந்தாள்.ஹோட்டலில் வயிறு புடைக்க சாப்பிட்டதா, இல்லை ஹோட்டலில் மசால்தோ சைக்கு அந்த சர்வர் கொடுத்த சாம்பார் நல்லா இருந்ததுன்னு,அந்த சாம்பாரை கொஞ்சம் அதிகமா சாப்பிட்டதாலா,இல்லை தன் முறை மாமன் தன்னையும் முத்துவையும் ஒன்னா பார்த்து விட்டதாலா, தொ¢யவில்லை சரளாவுக்கு வயித்தைக் பிசைந்தது,ரொம்ப கலக்கிக் கொண்டு இருந்தது.குடிசைக்குப் போனதும் சரளா ”அம்மா நான் ‘பாத் ரூமுக்கு’ப் போய் விட்டு வாறேன்”என்று சொல்லி விட்டு தன் ‘செல் போனை’ மேஜை மேலே வைத்து விட்டு ‘பாத் ரூமு’க்குள் போனாள்.அந்த நேரம் பார்த்து காளி சரளாவின் குடிசைக்கு வந்தான்.மேஜை மேலே ஒரு செல் போன் இருந்ததைப் பார்த்த காளி தன் அக்காவைப் பார்த்து ”எப்போ அக்கா, நீ சரளாவுக்கு ‘செல் போன்’ வாங்கிக் குடுத்தே.எனக்குத் தொ¢யவே தொ¢யாதே” என்று சொல்லி விட்டு அந்த செல் போனை ‘ஆன்’ பண்ணினான்.“நான் எங்கேடா செல் போன வாங்கினே.சரளா தான் உஷாங்கிற ஒரு பொண்ணு அவளுக்கு இந்த செல் போனைக் கொடுத்து இருக்கான்னு சொன்னாடா” என்று சொன்னாள்.செல் போனை ஆன பண்ணின காளிக்கு சரளாவும் முத்துவும் நெருக்கமாக உட்கார்ந்துக் கொண்டு இருந்த பல போட்டோக்களை பார்த்தவுடன் அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது.கோவத்துடன் காளி தன் அக்காவைப் பார்த்து “அக்கா,நாம மோசம் போயிட்டோம் அக்கா. ‘செல் போன்’லே இருக்கிற இந்த போட்டோவை எல்லாம் பாரு அக்கா. நம்ப சரளாவும் அந்த சிறுக்க ணும் எப்படி கட்டி பிடிச்சு போட்டோ எடுத்துக் கிட்டு இருக்காங்க பாரு.நான் நினைச்சது சரியாப் போச்சு.நம்ம சரளா ஒரு பெரிய ஹோட்டல் வாசலிலே ஒரு இள வயசு பையனோடு ‘காபி டிபன்’ சாப்பிட்டு விட்டு சிரிச்சிக் கிட்டே வெளியே வறதை இந்த ரெண்டு கண்ணாலேயும் பாத்தேங்க்கா. நான் அவங்க கிட்டே போய் அவங்களை கேக்கலாம்ன்னு போவறதுகுள்ளாற,அந்தப் பையன் நம்ப சரளாவை அவன் பைக்கிலே ஏத்திக்கிட்டு அங்கே இருந்து பறந்து போயிட்டான்.சரளா எங்கேக்கா. அவளே கூப்பிடுக்கா.எத்தனை நாளா சரளா அவன் கூட இப்படி சுத்திக் கிட்டு வறான்னு அவளேயே நாம கேப்போம்” என்று கத்தினான்.உடனே வசந்தா காளி செல் போன்லே காட்டின போட்டோக்களை எல்லாம் பார்த்தாள்.அவளுக்கு ரத்தம் கொதித்தது.காளி கத்தினது சரளாவுக்கு ‘பாத் ரூமிலேயே’ நன்றாகக் கேட்டது.
‘அடப் பாவி,இவன் நம்ப அம்மா கிட்டே போட்டுக் கொடுத்துட்டானே.நம்ப அம்மா கிட்டே நாம ‘செல் போன்’லே எடுத்துக் கிட்ட போட்டோக்களை எல்லாம் காட்டி இருக்கானே.நம்ப அம்மா நம்மை என்னப் பண்ண போறாங்களோ’ ன்னு என்று பயந்துக் கொண்டே சரளா ‘பாத் ரூமை’ விட்டு வெளீயே வந்தாள்.’செல் போனை’ ‘ஆப்’ பண்ணி விட்டு வசந்தா “என்ன சொன்னே காளி,நம்ப சரளா ஒரு இள வயசு பையனோடு ஹோட்டலுக்கு எல்லாம் போய் வறாளா.அது தான் சரளா ஒவ்வொ று ஞாயித்துக் கிழமை சாயங்காலமும் அவ என் கிட்டே’ நான் என் தோழி ஒருத்தி வூட்டுக்குப் போய், கொஞ்ச நேரம் பேசி விட்டு வாறேன்னு’ சொல்லிட்டுப் போய் கிட்டு இருந்தாளே.நானும் இத்தனை நாளா அவ சொன்னதை உண்மைன்னு நம்பிக் கிட்டு இருந்தேனேடா.இப்போ நாம ஏமாந்து போயிட் டோமே,காளி” என்று சொல்லி விட்டு அவளும் கத்தினாள்.பாத் ரூமில் இருந்து மெதுவா வெளியே வந்த சரளாவைப் பார்த்து “ஏண்டி சரளா,உங்க மாமா சொல்றது நிஜமாடீ.யாருடீ அந்த சிறுக்கன். அந்த மாதிரி முன் பின் தொ¢யாத சிறுக்கனோடு எத்தனை நாளாடீ உனக்கு பழக்கம்.வயசுக்கு வந்து போண்ணூடீ நீ.உன் முறை மாமன் வூட்டிலே இருக்கும் போது எப்படிடீ அந்த சோமாறிப் பயலோடு இப்படி நெருக்கமா குந்தி கிட்டு,போட்டோ எல்லாம் எடுத்து வந்து இருக்கே.உனக்கு வெக்கமா இல் லையாடீ.உன்னை நானும்,உன் அப்பாவும்,உன முறை மாமன் காளிக்கு நான் கல்லாணம் கட்டி வைக்க யோசனை பண்ணி கிட்டு இருக்கோமேடீ.உனக்கு எப்படிடீ அந்த சிறுக்கனோடு பழகி வர ¨தரியம் வந்திச்சு”என்று சொல்லி கையை ஓங்கினாள் வசந்தா.அவள் உடம்பு பூராவும் கொதித்துக் கொண்டு இருந்தது.“அடிக்காதே அக்கா.இரு அக்கா நாம முதல்லே அவளே கேப்போம்” என்று சொல்லி விட்டு சரளாவைப் பார்த்து “யாரு சரளா அந்தப் பையன்,எத்தனை நாளா உனக்கு அவ னோடு பழக்கம் சொல்லு” என்று சொல்லி கத்தினான் காளி.இந்த நேரம் பார்த்து சரளாவின் அப்பா வரதன் குடிசைக்கு வந்தான்.‘தன் பெஞ்சாதியும் மச்சானும் சரளாவைப் பார்த்து ஏதோ கேட்டு வறாங்க ளே’ என்று அவர்கள் பேசுவதை கேட்ட வரதன் ”என்ன மச்சான்,என்ன நீயும் உன் அக்காவும் சரளா வை ஏதோ கேட்டு வறீங்களே,என்ன சமாசாரம்” என்று கேட்டுக் கொண்டே தன் செருப்பை கழட்டி வைத்தான்.உடனே காளி “பாருங்க மாமா,நாம மோசம் போயிட்டோம்.இந்த ‘செல் போன்லே’ இருக்கற இந்த போட்டோவை எல்லாம் நல்லா பாருங்க.நம்ப சரளாவும் அந்த சிறுக்கணும் எப்படி கட்டிப் பிடிச்சி போட்டோ எடுத்துக் கிட்டு இருக்காங்கன்னு.நான் நினைச்சது சரியாப் போச்சு.நம்ம சரளா ஒரு பெரிய ‘ஹோட்டல்’ வாசலிலே ஒரு இள வயசு பையனோடு ‘காபி டிபன்’ சாப்பிட்டு விட்டு சிரிச்சி கிட்டே வெளியே வறதை இந்த ரெண்டு கண்ணாலேயும் பாத்தேன் மாமா.நான் அவங்க கிட்டே போய் அவங்களை கேக்கலாம்ன்னு,அவங்க கிட்டே போறதுகுள்ளாற,அந்த பையன் நம்ப சரளாவை அவன் பைக்கிலே ஏத்திக்கிட்டு அங்கே இருந்து பறந்து போயிட்டான்” என்று கோவத்தோடு சொன்னான் காளி.வரதன் உடனே சரளாவை கூப்பிட்டு“ ஏண்டீ சரளா,மாமா சொல்றது நிஜம் தானா. எத்தினி நாளா நீ அவன் கூட சுத்திக் கிட்டு வறே.எப்படிடீ நீ அந்த சோமாறிப் பய கூட கூட இப்படி அசிங்க அசிங்கமா,எல்லம் போட்டோ எல்லாம் எடுத்து கிட்டு வந்து இருக்கே.உனக்கு வெக்கமா இல்லேடீ. அந்தப் பையன் யாருடீ.அவன் பேரை என் கிட்டே சொல்லு.நான் அவனை அங்கேயே கண்டம் துண்டமா வெட்டி போட்டு விட்டு வந்து,அப்புறமா என் வேலையே கவனிக்கிறேன்”என்று அவன் பங்குக்கு கத்தினான்.சரளா ‘ஐயையோ நம்ப அப்பாவும் நாம முத்து கூட நெருக்கமா எடுத்து கிட்ட போட்டாகளை எல்லாம் பாத்துட்டாரே.யாரு அவன்,அவன் பேரை சொல்லு,நான்அவனை அங்கேயே கண்டம்,துண்டமா,வெட்டிப் போட்டு விட்டு வந்து அப்புறமா என் வேலையே கவனிக்கிறேன்’ ன்னு கத்தறாரே என்று மிகவும் பயந்துப் போனாள்.
நாம ஒன்னும் சொல்லாம இருந்தா இவங்க மூனு பேரும் நம்மை கொன்னு விடுவார்களே என்று பயந்து சரளா மெல்ல “அப்பா,அவர் சரவணன் மளிகைக் கடைப் பையன்.அவரு பேரு முத்துப்பா. ரொம்ப நல்லவர்ப்பா.என் கிட்டே வெறுமே பேசி கிட்டு தான் வந்து இருக்கார்” என்று ‘மென்னே முழுங்கினெ’ என்று சொன்னாள்.உடனே காளி “மாமா,சரளா சொல்றது பொய்.அவங்க ரெண்டு பேரும் அந்த ஹோட்டலிலே ‘காபி டிபன்’ சாப்பிட்டு விட்டு சிரிச்சிக் கிட்டு வெளியே வருவதை நான் ரெண்டு கண்ணாலே பாத்தேன்” என்று விடாமல் சரளாவின் அப்பாவுக்குப் போட்டுக் கொடு த்துக் கொண்டு இருந்தான்.“உங்க மாமா சொல்றது நிஜமா சரளா” என்று கேட்டு கத்தினான் வரதன். கோவத்தில் வரதன் காளி காட்டின செல் போனை அவன் கிட்டே இருந்து பிடுங்கி “இனிமே நீ இந்த ‘செல் போனை’ப் பார்க்கவே முடியாது.இந்த ‘செல் போனை’ இனிமே நானே வச்சு கிட்டு இருக்கப் போறேன்”என்று சொல்லி விட்டு முத்து வாங்கிக் கொடுத்த செல் போனை வரதன் தன் பாண்ட் பாக் கெட்டில் போட்டுக் கொண்டான்.பயந்துப் போனாள் சரளா.சரளா உடனே “இன்னைக்கு ஒரு நாள் தாம்ப்பா நான் அவர் கூட அந்த ஹோட்டலுக்குப் போனேன்” என்று சொன்னதும் வரதனுக்கு இன்னும் கோவம் அதிகம் ஆகியது.“இதோ பார் சரளா.நான் உனக்கு கடைசி தடவையா சொல்றேன். அவனை இன்னியோடு மறந்து விடு.இனிமே நீ எவன் கூடவும் வெளியே போவக் கூடாது.நீ வயசு க்கு வந்த பொண்ணு.நீ வெறுமே குடிசையிலேயே இருந்து வா.இன்னும் ரெண்டு மாசம் போவ ட்டும்.நான் எப்படியாவது கடனோ, உடனோ,வாங்கி உன்னை காளிக்கு கல்லாணம் கட்டி வக்கிறேன். என்னை மீறி நீ எங்காச்சும் போனேன்னு தொ¢ஞ்சா,இந்த அரிவாளால் உன்னையும் கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டு விட்டு தான் நான் மறுவேலை பாப்பேன்”என்று கத்தினான் வரதன்.
“சரளாவை வூட்டிலேயே மடக்கிப் போட எனக்கு வழி தொ¢யும்.அந்தப் பையன் வார நாள்ளே கடையிலே குந்தி கிட்டு இருப்பான்.ஞாயித்துக் கிழமை தான் அவன் நமப சரளாவை வரச் சொல்லி அவளை இட்டுக் கிட்டு ‘ஹோட்டல்’ ‘பார்க்’ ன்னு சுத்திக் கிட்டு வரான்.நான் ஞாயித்துக் கிழமை சாயங்காலம் வூட்டிலேயே இருந்து கிட்டு அவளை வெளியே போவ விடாம பார்த்து கிட்டாப் போதும். நீங்க ரெண்டு பேரும் கவலைப் படாம இருந்து வாங்க.இதோ பாரய்யா.அதுக்குள்ளார நீ பணத்துக்கு சீக்கிரமா ஏற்பாடு பண்ணுயா.சரளா கல்லாணத்தை ‘சட்’’ புட்’டுன்னு நாம முடிச்சி ஆகணும்யா.நீ ரொம்ப ‘டிலெ’ பண்ணாதேய்யா” என்று கத்தினாள் வசந்தா.
திங்கக் கிழமை காலையில் ஏழுந்ததும் தன் பல்லைத் தேய்த்து விட்டு அம்மா கொடுத்த ‘காபி யை’ க் குடித்து விட்டு,முத்து எப்போ நம்ப அம்மா நமக்கு நாஷ்டா கொடுப்பாங்க,அதை சாப்பிட்டு விட்டு சீக்கிரமா கடைக்குப் போய் சரளா கிட்டே போன் பண்ணி ‘சரளா உங்க முறை மாமன் உன் னைப் பாத்தானே,உனக்கு ஒரு ‘ப்ராப்லெம்மும்’ இல்லையே.நீ சௌக்கியமா இருந்து வறயா’ என்று கேட்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தான்.இன்னைக்கு பார்த்து சரஸ்வதி நாஷ்டாவை மெதுவாக செய்துக் கொண்டு இருந்தது போல இருந்தது முத்துவுக்கு.அவன் உடனே ”சீக்கிரமா நஷ்டாவை குடும்மா,லேட்டாவுது” என்று சத்தம் போட்டான் முத்து.“மணி இப்ப தான் ஏழரை ஆவுது. நீ சாதாரணமா கடைக்கு எட்டு மணிக்கு தானே கிளம்பிப் போவே.ஏன் முத்து நீ இப்படி அவசரப்பட றே.நீ வேறே யாராச்சையும் பாக்கணுமா” என்று கேட்டாள் சரஸ்வதி.உடனே முத்து ”அப்படி யாரும் இல்லேம்மா.நான் அந்த மணியை சரியா கவனிக்கலேம்மா” என்று சொல்லி சமாளித்தான்.அம்மா கொண்டு வந்து கொடுத்த நாஷ்டாவை ‘கப’ ‘கப’ என்று வேகமாக சாப்பிட்டு விட்டு முத்து எழுந்துப் போய் தன் கைகளைக் கழுவிக் கொண்டு கடை சாவியை எடுத்துக் கொண்டு “அம்மா,அப்பா,நான் கடைக்குப் போயாறேன்” என்று சொல்லி விட்டு வெளியே போய் தன் ‘பைக்கை’ ‘ஸ்டார்ட்’ பண்ணிக் கொண்டு மளிகைக் கடைக்கு பறந்தான் முத்து.கடைக்கு வந்த முத்து கடையைத் திறக்காமலே சரளாவுக்குப் போன் பண்ணினான்.ஆனால் சரளா செல் போனில் இருந்து ‘இந்த செல் போன் ‘ஸ்விச்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது’ என்று பதில் வந்துக் கொண்டு இருந்தது.வெறுப்படைந்த முத்து கடையைத் திறந்து வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தான்.நடு நடுவே சரளாவுக்கு ‘செல்’ போனில் கூப்பிட்டுக் கொண்டு இருந்தான் முத்து.ஆனால் சரளா செல் போனில் இருந்து அதே பதில் தான் வந்துக் கொண்டு இருந்தது.வழக்கமாக கடைக்கு வரும் சரளா அன்று கடைக்குக் கூட வரவில் லை.‘கடைக்காவது சரளா வருவா,அவ கிட்டே நாம அவ முறை மாமன் நம்முடன் சரளாவைப் பார்த் தானே,அப்புறம் என்ன ஆச்சு.அவ சௌகியமா இருந்து வறாளா’ன்னு கேக்கலாம்’ன்னு ஆசை பட்ட முத்துவுக்கு மிகவும் ஏமாற்றமாய் போய் விட்டது.அவனால் வேறே என்ன பண்ண முடியும் வருத்தப் படுவதைத் தவிர.அந்த வாரம் பூராவும் சரளா கடைக்கே போகக் கூடான்னு சொல்லி வசந்தா சரளாவை குடிசையிலே வச்சு பூட்டி விட்டு வேலைக்கு போய் கொண்டு இருந்தாள்.சரளா கூண்டுக் கிளி போல அந்தக் குடிசைக்குள் அடைப் பட்டு இருந்தாள்.
அன்று ஞாயித்துக் கிழமை.சாயங்காலம் மணி நாலடித்தது.வசந்தா டீ.வீ.யைப் பார்க்க ஆரம்பி த்தாள்.ஒரு அரை மணி தான் ஆகி இருக்கும் அக்காவைப் பார்க்க காளி வந்தான்.குடிசைக்கு வந்த காளியைப் பார்த்து “வா காளி.வா உக்கார்.இன்னைக்கு டீ.வீ.யிலே இந்த வருஷ சினிமாப் பா¢சளிப்பு விழா காட்ட போறாங்களாம்.வா பாக்கலாம்” என்று சொல்லி காளியை உட்காரச் சொன்னாள் வசந்தா. சொன்னதும் காளி டீ.வீ. பார்க்க உட்காந்தான்.அரை மணி நேரம் தான் ஆகி இருக்கும்.வசந்தாவின் தங்கை சுமதி குடிசைக்கு ஓடி வந்து மூச்சு இறைக்க இறைக்க “அக்கா சீக்கிரமா வாயேன்.நம்ப அம்மா மயக்கமா கீழே விழுத்துட்டாங்க.மச்சான் அவங்களை பக்கத்திலே இருக்கிற ஆஸ்பத்திரிக்குக் கூட்டி கிட்டு போய் இருக்காரு.வா நாம ரெண்டு பேரும் ஆஸ்பத்திரிக்குப் போய் பாக்கலாம்” என்று மூச்சு விடாம சொன்னதும் வசந்தா உடனே எழுந்துக் கொண்டு “காளி,நான் ஆஸ்பத்திரிக்கு முன் னாலே போறேன்.மச்சான் வந்ததும் நீ நம்ப அம்மா விஷயத்தை சொல்லிட்டு, சரளாவை அவரு கிட்டே விட்டுட்டு,நீ ஆஸ்பத்திரிக்கு வா.எந்த காரணம் கொண்டும் சரளாவை குடிசைலே தனியா விட்டுட்டு வறாதே.என்ன புரிதா” என்று சொன்னதும் காளி “சரிக்கா.நீ கவலைப்படதே. நான் மச்சான் வந்ததும் நம்ப அம்மா விஷயத்தை சொல்லிட்டு அப்புறமா ஆஸ்பத்திக்கு ஓடியாறேன்” என்று சொன் னதும் வசந்தா நிம்மதியாக சுமதி கூட ஆஸ்பத்திரிக்கு ஓடினாள்.தன் அக்கா ஆஸ்பத்திரிக்குப் போனவுடன் காளி தன் பாக்கெட்டில் இருந்து ஒரு ‘குடி’ பாட்டிலை திறந்து அதை முழுக்க குடித் தான்.குடித்து விட்டு அந்த பாட்டிலைத் தூர ஏறிந்தான்.அடுத்த பத்தாவது நிமிஷத்திலே வரதன் நன்றாகக் குடித்து விட்டு குடிசைக்கு வந்தான்.ஓவராக குடிச்சு இருந்ததால் அவன் குடிசைக்கு வந்ததும் பேச்சு,மூச்சு,இல்லாம மயக்கமாக படுத்து விட்டான்.காளி யோஜனைப் பண்ணினான் அவன் மிருக குணம் தலைத் தூக்கியது.‘எப்படி இருந்தாலும் ஒரு நாளைக்கு இல்லை,ஒரு நாள் இந்த சரளா அந்த பணக்கார பையனோடு ஓடிப் போயிடுவா.நமக்கு சரளா கிடைக்க மாட்டா.இது தான் நல்ல சமயம்.அக்காவும் வூட்லே இல்லே,மச்சானும் நல்ல குடிச்சி விட்டு மயக்கமா படுத்துக் கிடக்க றாரு.அவர் எழுந்தரிக்க இன்னும் ஒரு அரை மணி நேரமாவது ஆவும்.அதுக்குள்ளார நாம சரளாவை ‘ஆசை தீர’ அனுபவிச்சிவிடலாம்’ என்று அவன் உள் மனம் விரும்பியது.உடனே காளி குடிசை கதவை தாள் போட்டு விட்டு சரளா போட்டு இருந்த தாவணியை உருவி அவ கையை பின்னாலே கட்டி விட்டு, மீதம் இருந்த தாவணி துணியை கிழிச்சு சரளா வாயை நன்றாக அடைத்து விட்டு அவளை ‘ஆசை தீர’ அனுபவிச்சான்.அவன் மிருக குணம் இப்போது அமைதி ஆகியது.பிறகு தன் துணீகளை எல்லாம் சரி செய்துக் கொண்டு பீரோவில் இருந்து ஒரு தாவணியை எடுத்து சரளாவின் மேல் போட்டு விட்டு அவ காது கிட்டே மெதுவா “இந்தா இந்த தாவணியை உன் உடம்பிலே சுத்திக் கிட்டு இங்கெ நடந்தது ஒன்னையும் மச்சான் கிட்டேயும்,அக்கா கிட்டேயும் மூச்சு வுடக் கூடாது. புரிதா.மீறி நீ சொல்லி அவங்க என்னைக் கேட்டாங்கன்னா நான் அதுக்கு ‘சரளா வேறே யாரும் இல்லையே, அவ என் முறைப் பொண்ணு தானே,நான் எதுக்கு அவளை கெடுக்கணும்.சரளா தான் உங்க கிட்டெ பொய் சொல்றா’ ன்னு சொல்லி அவங்களை நம்ப வச்சு விடுவேன்.அவங்களும் நான் சொன்னதை நிச்சியமா நம்பி விடுவாங்க.நீ நான் சொன்னதையும் மீறி அப்படி போட்டு குடுத்தேன்னு தொ¢ஞ்சுதுனு வச்சுக்க,நான் மச்சானும் அக்காவும் வூட்லே இல்லாத போதுபோது மறுபடியும் இங்கே வந்து உன்னை ஆசை தீர மறுபடியும் ‘கெடுத்துட்டு’,உன் கழுத்தை நெறிச்சு கொண்ணு விட்டு, மேலெ தொங்குது பார் அந்த ‘பான்’ கொம்பிலே உன் தாவணியை கட்டி விட்டு உன்னை தொங்க விட்டுட்டு,நீ காதலிச்ச பையன் உனக்கு கிடைக்கலேன்னு,தான் நீ தற்கொலை பண்ணிகிட்டேன்னு சொல்லி எல்லாரையும் நம்ப வச்சு விடுவேன்.அந்த பயம் இருக்கட்டும்” என்று சொல்லி விட்டு அவ கைகளை அவிழ்த்து விட்டான்.
அப்புறமா காளி,அவன் மச்சான் முகத்திலே கொஞ்சம் தண்ணியைத் தெளிச்சு அவரை எழுப்பி “மச்சான்,மச்சான் எழுந்தரி மச்சான்.,எங்க அம்மா மயக்கமா கிழே விழுந்துட்டாங்கன்னு சேதி வரவே அக்கா ஆஸ்பத்திரிக்கு ஓடி இருக்காங்க.நீங்க வூட்டுக்கு வர வரைக்கும் நான் இங்கே சரளாவுக்கு காவலா இருந்து வந்து இருக்கேன்.இனிமே நீங்க சரளாவை கவனிச்சுக்குங்க.நான் ஆஸ்பத்திரிக்கு போவணும்” என்று சொல்லி வேலுவை உலுக்கவே,வரதன் மெல்ல தன் கண்களை திறந்தான்.ரெண்டு நிமிஷத்துக்கு எல்லாம் வரதன் தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்தான்.காளி சொன்னதை கேட் டான்.உடனே அவன் காளியை பாத்து “காளி,நீ ஆஸ்பத்திக்கு போய் வா.நான் சரளாவை எங்கேயும் போவாம ஜாக்கிறதையா பாத்துக்கறேன்” என்று சொன்னதும் “சரி மச்சான், நான் கிளம்பிப் போறேன். நீங்க சரளாவை ஜாக்கிறதையா கவனிச்சி வாங்க” என்று சொல்லி விட்டு குடிசையை விட்டு ஆஸ்பத் திரிக்கு ஓடினான் காளி.சரளா தன் துணிகளை சரி செய்துக் கொண்டு முட்டிப் போட்டுக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள்.அவள் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.இதை கவனித்த வரதன் ”இதோ பார் சரளா,நீ என்ன அழுதாலும் பரவாயில்லே. எனக்குக் கவலை இல்லே.நான் உன்னை வெளியே போவ விடமாட்டேன்” என்று தட்டுத் தடுமாறி சொன்னான்.சரளாவை பார்க்கவே முடியாம இருந்தததால் முத்து பைத்தியம் பிடிச்சவன் போல இரு ந்து வந்து,ஒரு நடை பிணம் போல கடைக்கு போவதும் வீட்டுக்கு வருவதுமாக இருந்தான்
– தொடரும்