சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 8,619 
 
 

அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 | அத்தியாயம்-22

செந்தாமரை சொன்னதைக் கேட்ட ஷர்மாவின் கண்களில் கண்ணீர் முட்டியது.அவர் தன் மூக்குக் கண்ணாடியை எடுத்து விட்டு தன் கைக் குட்டையால் தன் கண்களைத் துடைத்துக் கொண் டார்.சிறிது நேரம் கழித்து ஷர்மா ”செந்தாமரை. நீ ரொம்ப ‘க்ரேட்’.நீ படிப்பிலே தான் ஒரு ‘மேதை’ என்று நான் நினைச்சேன்.நீ வாழக்கையிலும் ரொம்ப தீர்க்கமா,சரியா யோஜனைப் பண்ணீ முடிவு எடுப்பதிலும் ஒரு ‘மேதை’ என்று என்பதை நீ வாழ்ந்து வரும் விதத்தில்’ ப்ரூவ்’ பண்ணி இருக்கே. எனக்கு உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கும்மா.’ஹாட்ஸ் ஆப் பார் யுவர் கரேஜியஸ் லைப்’ “என்று சொல்லி விட்டு எழுத்து நின்றுக் கொண்டு செந்தாமரை கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.அவர் சொன்னதுக்கு செந்தாமரை மனசார தன் நன்றியைச் சொல்லி விட்டு அவர் ரூமை விட்டு சந்தோஷத்துடன் வெளியே வந்தாள்.‘பிரின்ஸிபால’ ரூமை விட்டு வெளியே வந்த செந்தாமரை யின் மனம் ஆகாயத்தில் பறந்துக் கொண்டு இருந்தது.அவள் உடனே ராஜேஷிடம் போய் “சார்,பிரின்ஸிபால் எனக்கு பிரமோஷன் குடுத்து,என் சம்பளத்தையும் நாலு ஆயிரம் ரூபாய் கூட்டி இந்த ‘ஆர்டரை ‘குடுத்து இருக்கார்.நீங்க மட்டும் அந்த ‘மீட்டிங்கில்’ ‘பிரின்ஸிபால் ‘கிட்டே என்னைப் பத்தி அவ்வளவு உயர்வா சொல்லாம இருந்து இருந்தா,எனக்கு இந்த ‘பிரமோஷன்’ கிடைச்சே இருக் காது சார்.இந்த ‘பிரமோஷனும்’,சம்பள உயர்வும் உங்களால் தான் எனக்குக் கிடைச்சு இருக்கு.இந்த ‘பிரமோஷனுக்கும்’,சம்பள உயர்வுக்கும்,நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லப் போறேன்னே எனக்குத் தெரியலே”என்று கண்களில் கண்ணீர் மல்க சொன்னாள்.உடனே ராஜேஷ்” ‘நோ,’நோ’ செந்தாமரை. உனக்கு இந்த ‘பிரமோஷனும்’,சம்பள உயர்வும் ரொம்ப வருஷத்துக்கு முன்னமே கிடை ச்சு இருக்கணும்.அந்த ‘பிரமோஷனும்’ சம்பள உயர்வும் இப்பவாவது கிடைச்சதேன்னு நான் ரொம்ப சந்தோஷப் படறேன்.’கங்கிராட்ஸ்’ செந்தாமரை” என்று சொல்லி செந்தாமரை யின் கைகளைப் பிடித்து குலுக்கிச் சொன்னான்.

செந்தாமரை தனக்குக் கிடைத்து இருக்கும் ‘பிரமோஷனை’ எல்லா வாத்தியார்களுக்கும் சொல்லி,பியூனை விட்டு ‘ஸ்விட்’ வாங்கி வரச் சொல்லி எல்லோருக்கும் ‘ஸ்வீட்’ கொடுத்தாள்.அன்று சாயந்திரமே செந்தாமரை கடையில் கொஞ்சம் ‘ஸ்வீட்’ வாங்கி கொண்டு போய் தன்னுடைய பழைய ‘பிரின்ஸிபால்’ மூத்தி சாரை அவர் வீட்டிலே சந்திச்சு,அவருக்கு ‘ஸ்வீட்டை’ கொடுத்து தனக்கு கிடைத்து இருக்கும் ‘பிரமோஷன்’ சம்பள உயர்வு ஆர்டரையும் காட்டினாள்.ஆர்டரை வாங்கிப் பார்த்த மூர்த்தி மிகவும் சந்தோஷப் பட்டு “செந்தாமரை,உனக்கு இந்த ‘பிரமோஷன்’ கிடைச்சு இருப்பதைப் பத்தி நான் ரொம்ப சந்தோஷப்படறேன். ’கங்கிராட்ஸ்’ “என்று சொல்லி செந்தாமரையின் கைகளை குலுக்கி சொன்னார்.செந்தாமரை அவர் காலைத்தொட்டு அவருக்கு நன்றி சொல்லி விட்டு,சந்தோஷ த்துடன் தன் வீட்டுக்கு வந்தாள்.வரும் வழியில் செந்தாமரை ‘நான் படித்த இந்தப் பள்ளிக் கூடத்லே எனக்கு பன்னாடாவது வகுப்புக்கு கணக்கு எடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்ன்னு நான் என கனவிலே கூட நினைக்கலே.இந்த வாய்ப்பை நான் தினமும் வேண்டி வரும் பிள்ளையார் தான் எனக்குக் குடுத்து இருக்கார்’ என்று தன் மனதில் சொல்லிக் கொண்டு அந்த பிள்ளையாருக்கு நன்றி சொன்னாள்.

வீட்டுக்கு வந்து செந்தாமரை தன் அம்மாவிடமும் அக்காவிடமும் இந்த சந்தோஷ சமாசார த்தைச் சொல்லி எல்லோரையும் ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய் ஒரு ‘ஸ்பெஷல்’ சாப்பா ட்டை வாங்கி கொடுத்தாள்.தேவி செந்தாமரையைப் பார்த்து அடிக்கடி”செந்தாமு,என் உடம்பிலேயும் அப்பா உடம்பிலேயும், கமலா உடம்பிலேயும் ஜீவனே இல்லேம்மா.சின்ன வயசிலே இப்போ சாப்பிடற மாதிரி நல்ல சாப்பாட்டை நாங்க சாப்பிட்தே இல்லேம்மா.எப்பவும் பழைய சோறும், ஊறுகா யும், கரு வாட்டு குழம்பும் தானேம்மா சாப்பிட்டு வந்தோம்.அந்த சாப்பாட்டிலே என்ன சத்து இருக்கப் போவுது சொல்லு. போறாததுக்கு உங்க அப்பா எப்பவும் குடிச்சுட்டு வருவாரு.நான் என் தலையிலே பன்ன ண்டு செங்கல்லை தூக்கி கிட்டு,மூனு மாடியும்,நாலு மாடியும்,ஏறக் கொள எனக்குஅலுப்புத் தெரியாம இருக்க புகையிலையே வாயிலே அடக்கி கிட்டுப் போவேன்.அந்த புகையிலை உடம்புக்கு நல்லது இல்லேன்னு தெரிஞ்சு இருந்தும்,நான் அதை போட்டுக் கிட்டு தான் வேலை செஞ்சு வந்தேன்.பாவம் கமலாவும், அவ புருஷன் கிட்டே சதா அடி,உதை,ன்னு வாங்கி கிட்டு சாப்பட்டுக்கே கஷ்டப் பட்டு வந்தா.ரொம்ப ராத்திரி அவளும்,அவ பொண்ணுங்களும்,வெறும் பச்சைத் தண்ணியே குடிச்சுட்டு தூங்கப் போவாங்க.இந்த அழகிலே ஒரு நாள் அவ புருஷன் அவளையும்,அவ ரெண்டு பொண்ணுங்களையும் விட்டுட்டு,வேறே ஒரு சிறுக்கியோடு எங்கோ ஓடிப் போயிட்டான்.இது எல்லாம் பாவம் உனக்கு தெரி ஞ்சு இருக்காது.இப்ப எனக்கு ஞாபகம் வரவே சொல்லணும்னு தோணிச்சு. சொன்னேன்” என்று சொல்லி வருத்தப் பட்டாள்.உடனே செந்தாமரை “இப்ப ஏம்மா அந்த பழசே எல்லாம் ஞாபகம் பண்ணீ வருத்தப்படறே.இப்ப தான் அந்த கஷ்டகாலம் எல்லாம் போய் நாம சந் தோஷமா இருந்து வரோமே ம்மா” என்று சொல்லி அம்மாவுக்கு தேத்தறவு சொன்னாள்.

அன்று ஞாயித்துக் கிழமை.கமலா தேவிக்கு காப்பி கொண்டு வந்துக் கொடுத்தாள்.தேவி அந்த காப்பியைக் குடித்து கொண்டு இருக்கும் போது அவள் என்றைக்கும் இருப்பது போல் சாதாரணமாய் இல்லாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டாள்.உடனே செந்தாமரை அம்மாவைப் பார்த்து “அம்மா, நீங்க இன்னைக்கு ரொம்ப சோர்வா இருக்காப் போல இருக்குதேம்மா.உங்களுக்கு உடம்பபு சரி இல் லையாம்மா” என்று கவலையுன் கேட்டாள்.உடனே தேவி ”ஆமாம் செந்தாமு,எனக்கு இன்னைக்கு காத்தாலே எழுந்தா¢ச்சதிலே இருந்து என்னவோ ரொம்ப மயக்கமாவே இருக்குது. எனக்கு ஏன்னே தெரியலே.கொஞ்சம் பயமாவும் இருக்கு” என்று சொன்னான்.”ஏம்மா,நீங்க ராத்திரி படுக்கப் போகும் போது ரத்த கொதிப்பு மாத்திரை போட்டுக் கிட்டீங்களா” என்று கேட்டாள் செந்தாமரை.”இல்லே செந்தாமு,நான் ராத்திரி ரத்த கொதிப்பு மாத்திரையே போட்டுக்கவே மறந்துட்டேன்.இதோ நான் ரூமுக்குப் போய் இப்ப அந்த மாத்திரையை கொண்டு வந்து இந்த காப்பியை குடிச்சிட்டு உடனே போட்டுக்கறேன்” என்று சொன்னாள் தேவி.சொல்லி விட்டு தன் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள் தேவி.கமலாவும் செந்தாமரையும் அம்மாவையே கவலையோடு பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் தேவி மெல்ல எழுந்து,தன் ரூமுக்குப் போய் ரத்த கொதிப்பு மாத்திரையை எடுக்க எழுந்தாள்.ஆனால் முடியாமல் மறுடியும் வந்து சோபாவில் ‘தொப்’பென்று உட்கார்ந்து விட்டாள் தேவி.அவள் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தாள்.பதறிப் போன செந்தாமரை உடனே எழுந்து வந்து ”ஏம்மா,உங்களுக்கு ரொம்ப சோர்வா இருக்குன்னு சொன்னீங்க.ஆனா இப்போ கண்ணை மூடிக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருக்கீங்களே ம்மா” என்று சொல்லிக் கொண்டு அம்மா பக்கத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டு கவலையோடு விசாரித்து அவள் உடம்பைத் தொட்டுப் பார்த்தாள்.

அவள் உடம்பு சில்லென்று இருந்தது.செந்தாமரை மிகவும் கவலைப் பட்டாள்.தேவி வெறுமனே தன் கண்களை மூடிக் கொண்டு தான் இருந்தாள்.ஒரு நிமிஷம் கூட ஆகி இருக்காது தேவி திடீரெ ன்று சோபாவில் சாய்ந்து விட்டாள்.பதறிப் போன செந்தாமரை அம்மாவைப் பார்த்து ”ஏம்மா இப்படி திடீரென்று படுத்துட்டீங்க.உங்க உடம்பு வேறே இப்படி ஜில்லென்று ஆயிடுச்சேம்மா. அக்கா உடனே ஓடி வாங்க.அம்மா உடம்பு சோர்வா இருக்குதுன்னு சொல்லி சோபாவில் படுத்துட்டாங்க.இப்போ அவங்க உடம்பு வேறே ‘ஜில்’ன்னு ஆயிடிச்சீ”என்று கத்தினாள்.சமையல் அறையில் இருந்த கமலா ஓடி வந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து அம்மாவின் முகத்தில் தெளித்தாள்.வெறுமனே கொஞ்சம் முகத்தைச் சுளித்தாளே ஒழிய தேவி,தன் கண்களைத் திறக்கவில்லை. பதறிப்போன செந்தாமரைக்கும் கமலாவுக்கும் கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை.சிறிது நேரம் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தார்கள்.செந்தாமரை கமலாவை பார்த்து ”அக்கா,நாம அம்மாவை உடனே ‘ஹாஸ்பிடல்லே’ சேர்க்கணும்.அவங்க உடம்பு நல்லாவே இல்லே.அம்மாவை நாம இனிமேலே வீட்டில் வச்சி கிட்டு இருக்கக்கூடாது.அம்மாவை ‘ஹாஸ்பிடலுக்கு’அழைச்சுகிட்டு போனா,அவங்க உடனே அம்மாவுக்கு ஒரு ‘இன்ஜெக்ஷன்’ போட்டு அவங்களுக்கு இருக்கிற மயக்கத்தை போக்கி விடுவாங்க”என்று பதட்ட தோடு சொன்னாள்.”சரி,செந்தாமு,நான் வாசலுக்கு போய் ஒரு ஆட்டோவவை இட்டு கிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு கமலா உடனே வாசலுக்கு ஓடி வந்து காலியாய் போய்க் கொண்டு இருந்த ஒரு ஆட்டோவை கையைத் தட்டிக் கூப்பிட்டாள்.வந்த ஆட்டோ டிரைவரைப் பார்த்து “எங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லீங்க.உடனே அவங்களை ஒரு ‘ஹாஸ்பிடலுக்கு’ கொண்டு போவணும்.கொஞ்சம் உள்ளே வாங்க.அவங்களை நாம் மூனு பேரும் பிடிச்சு தூக்கி ஆடோலே ஏத்தலாம்.கொஞ்சம் உதவி பண்ணுங்க ‘ப்ளீஸ்’”என்று கெஞ்சினாள் கமலா.கமலா கெஞ்சுவதை பார்த்த ஆட்டோ டிரைவர் ”இதோ நான் வரேனுங்க”என்று சொல்லி விட்டு ஆட்டோவை ‘ஆப்’ பண்ணி விட்டு, ஆட்டோவை வீட்டு க்கு அருகில் தள்ளிக் கொண்டு வந்து விட்டு விட்டு,கமலாவின் பின்னால் ஓடி வந்தார்.“செந்தாமு, நான் ஆட்டோவை அழைச்சிக் கிட்டு வந்து இருக்கேன்.அம்மாவை நாம ‘ஹாஸ்பிடலுக்கு’ கொண்டு போவலாம்”என்று சொல்லி ஆட்டோ டிரைவரை பார்த்து “உள்ளே வாங்க.நீங்களும் பிடியுங்க.நாம முனு பேரும் ஆட்டோவில் அவங்களே ஏத்தலாம்” என்று சொல்லி அம்மாவின் உடம்பை பிடித்தாள் கமலா.

செந்தாமரையும்.அந்த ஆட்டோ டிரைவரும் மெல்ல தேவியின் உடம்பைப் பிடித்துக் கொண்டு மூனு பேருமாய் தேவியை ஆட்டோவில் ஏத்தினார்கள்.வழி நெடுக கமலா செந்தாமரையைப் பார்த்து “செந்தாமு,அம்மாவுக்கு ஒன்னும் ஆவாதே.எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று செந்தாமரையின் கைகளை பிடித்துக் கொண்டு கேட்டாள். ”கவலைப்படாதே.ஒன்னும் இருக்காது.அம்மா ‘ஹாஸ்பிடலுக்கு’ப் போய் ஒரு ‘இஞ்செக்ஷன்’ போட்டு கிட்டு,கொஞ்சம் ‘ரெஸ்ட்’எடுத்து வந்தாங்கன்னா, எல்லாம் சரியாப் போயிடும்”என்று சொல்லி கமலாவுக்கு ஆறுதல் சொன்னாள் செந்தாமரை.

ஆட்டோ டிரைவர் ஆட்டோவை அடுத்த தெருவு முனையில் இருந்த ஒரு சின்ன ஆஸ்பத்திரியில் நிறுத்தினார். செந்தாமரையும், கமலாவும்,ஆட்டோ டிரைவரும் மெல்ல தேவியை பிடித்து கொண்டு ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி,’ஹாஸ்பிடல்’ வாசல் நுழைவாயில் இருந்த ‘ஸ்ட்டெச்சரில்’ மெல்ல படுக்க வைத்தார்கள்.செந்தாமரை ‘ஹாஸ்பிடல்’ உள்ளே ஓடிப் போய் அங்கு இருந்த டாகடரிடம் தன் அம்மாவின் நிலைமையைச் சொல்லி உடனே வந்து கவனிக்குமாறு வேண்டிக் கொண்டான்.உடனே டாக்டரும் ஓடி வந்து தேவியைப் பா¢சோதனைப் பண்ணிப் பார்த்தார்.அவர் கூட வந்த ‘நர்ஸிடம்’ ஏதோ ஒரு மருந்து பேரைச் சொல்லி ‘இஞ்செக்ஷனையும்’ சீக்கிரமா கொண்டு வரச் சொன்னார். ‘நர்ஸ¤ம்’ உடனே ஓடிப் போய் டாக்டர் சொன்ன மருந்தையும் ‘இஞ்செக்ஷனையும்’ கொண்டு வந்தாள். டாக்டர் அந்த ‘இஞ்செக்ஷன்’ பாட்டிலை உடைத்து தேவிக்கு ‘இன்ஜெக்ஷனை’ப் போட்டார்.பிறகு அவர் நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டு “நீங்க உடனே இவங்களை ஒரு I.C.U. இருக்கிற ஒரு ஹாஸ்பிடலக்கு அழைச்சுப் போய் வைத்தியம் பாருங்க.இப்போ இவங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு”என்று சொன்னார்.செந்தாமரை அந்த ஆஸ்பத்திரிக்கு கொடுக்க வேண்டிய ‘பீஸை’க் கட்டி விட்டு வெளி யே வந்து ஆட்டோவில் ஏறி ”கொஞ்ச சீக்கிரமா பெரிய ஆஸ்பத்திரிக்குப் போங்க” என்று டிரைவரை அவசரப் படுத்தினாள்.ஆட்டோ டிரைவரும் “சரிங்க,இதோ நான் சீக்கிரமாப் போறேங்க” என்று சொல்லி விட்டு ஆட்டோவை பக்கத்தில் இருந்த ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனான்.செந்தாமரை உடனே ஆட்டோவை விட்டு இறங்கி ‘எமர்ஜென்ஸி’க்கு போய் அங்கு இருந்த டாக்டரிடம் தன் அம்மாவின் நி¨லையை சொல்லி,அந்த சின்ன ஆஸ்பத்திரிலே செய்த சிகித்சையை யும்சொன்னாள்.’எமர்ஜென்ஸியில்’ இருந்த டாக்டர் அங்கு இருந்த இரண்டு ஆஸ்பத்திரி சிப்பந்தி களை கூப்பிட்டு ஆட்டோவில் இருக்கும் ‘பேஷண்டை எமர்ஜென்ஸிக்கு’ கொண்டு வர சொன்னார். டாக்டர் தேவியை நன்றாகப் பா¢சோதனைப் பண்ணிப் பார்த்து விட்டு,அவளை ICUக்குள் அனுப்பி விட்டார்.

செந்தாமரை மணியைப் பார்த்தாள்.அது ஒன்பதரை காட்டியது.காலையில் இருந்து பல் கூடத் தேய்க்காமல் இருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது.உடனே செந்தாமரை கமலாவைப் பார்த்து “அக்கா,நாம காலைலே இருந்து பல் கூடத் தேய்க்கலே.மணி பத்தடிக்கப் போவுது.நாம பல்லை கையாலே தேய்ச்சுட்டு வரலாம்.அப்புறமா நாம எதிரே இருக்கிற ‘கான்டீனுக்கு’ப் போய் ஒரு ‘காபி’க் குடிச்சுட்டு வரலாம் வாக்கா” என்று சொல்லி அக்காவை கூப்பிட்டாள்.உடனே கமலா ”டாகடர் வெளி யே வந்து அம்மாவை பத்தி ஏதாவது சொல்லுவாரு செந்தாமு.இப்போ பாத்து நாம் காப்பி குடிக்கப் போனா சரியா இருக்காது.நாம் கொஞ்சம் கழிச்சு போவலாமே”என்று சொன்னாள்.”இல்லேக்கா. எனக்கு ரொம்ப தாகமா இருக்கு.நாம் போனோம் வந்தோம்ன்னு ‘கான்டீனுக்கு’ போய் விட்டு சீக்கிரமா வந்துடலாம்”என்று சொல்லி அவரசப் படுத்தினாள் செந்தாமரை.செந்தாமரை கமலாவை அழைத்துக் கொண்டு வேகமாக ‘காண்டீனை’ நோக்கி போனாள்.ரெண்டு பேரும் ‘காண்டீனில்’ தங்கள் பல்லை கையால் துலக்கிக் கொண்டு வந்தார்கள்.‘கான்டீன்லே’ செந்தாமரையும் கமலாவும் காப்பி வாங்கிக் குடித்தார்கள்.காபியை குடித்து முடிந்ததும்,பில்லுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு செந்தாமரை கமலாவை அழைத்துக் கொண்டு வேகமாக I.C.U.வை நோக்கி வேகமாக வந்தாள்.

முக்கால் மணி நேரம் ஆனதும் ஒரு டாக்டர் வெளியே வந்து செந்தாமரையைக் கூப்பிட்டு “அவங்க நிலைமை இன்னும் மோசமாத் தான் இருக்கு மேடம்.நாங்க அவருக்கு ‘ஆக்சிஜன்’ வச்சு இருக்கோம்.அவர் B.P, ECG ரெண்டையும் நாங்க ‘மானிட்டர்’ பண்ணி வரோம்.இப்ப நாங்க ஒன்னும் சொல்ல முடியாது.இன்னும் மூனு மணி நேரம் கழிச்சு அவர் நாடித் துடிப்பு கொஞ்சம் அதிகம் ஆனா, தான் நாங்க உங்களுக்கு சொல்ல முடியும்.அவர் இப்போ ரொம்ப ‘க்ரிடிகல்லா’த் தான் இருக்கங்க” என்று சொல்லி விட்டு I.C.U.க்குள் போய் விட்டார்.”அக்கா,டாகடர் இன்னும் மூனு மணி நேரம் கழிச்சித் தான் சொல்ல முடியும்ன்னு சொல்லி விட்டாரு.மணி இப்ப பன்னாடாவுது.நாம ‘காண்டீனு க்கு’ப் போய் கொஞ்ச ஏதாவது சாப்பிட்டு விட்டு வரலாம்.நாம காத்தாலே குடிச்ச காப்பியோடு இருக் கோமேக்கா” என்று சொன்னாள் செந்தாமரை.உடனே “செந்தாமு,எனக்கு மனசு சரி இல்லே.நீ மட்டும் போய் ஏதாச்சும் சாப்பிட்டு விட்டு வா.நான் இங்கேயே இருந்து வறேன்”என்றாள் கமலா கவலையுடன். செந்தாமரை உடனே “இல்லேக்கா.டாக்டர் வந்து சொன்ன பிறகு நாம ஏதாவது சாப்பிடப்போன ‘காண் டீன்லே’ ஒன்னும் இருக்காது.நீங்களும் காத்தாலே இருந்து பட்டினியாத்தானே இருக்கீங்க. வாங்க நாம போய் சாப்பிட்டு விட்டு சீக்கிறமா வந்து விடலாம்”என்று ரொம்ப வற்புருத்திச் சொல்லவே. கமலா வேறே வழி இல்லாம அவளுடன் போனாள்.

மூனு மணி நெரம் ஆனதும் I.C.U. வில் இருந்து வெளியே வந்த டாக்டர் “வெரி சாரி.உங்க அம்மாவை நாங்க இத்தனை நேரம் முயற்சி பண்ணியும்,எங்களாலே காப்பாத்த முடியலே.அவங்க நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு,இப்ப முழுக்க நின்னுடுச்சி.அவங்களை நீங்க இங்கே ‘லேட்டா’அழைச்சிகிட்டு வந்து இருக்கீங்க.அவங்களுக்கு ‘ஹார்ட் அட்டாக்’ ரொம்ப ‘சிவியரா’ வந்து இருக்கு.இன்னும் ஒரு மணி நேரம் முன்னாலே,நீங்க அவங்களை இங்கே அழைச்சுக்கிட்டு வந்து இரு ந்தா,நாங்க அவங்களை காப்பாத்தி இருப்போம்” என்று ஆங்கிலத்தில் சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார்.டாக்டர் ஆங்கிலத்தில் சொன்ன இந்த சமாசாரத்தை கேட்ட கமலாவுக்கு ஒன்னும் புரிய வில்லை.அவள் உடனே செந்தாமரையைப் பார்த்து “செந்தாமு அந்த டாக்டர் என்ன சொன்னாரு” என்று கவலையுடன் கேட்டாள்.செந்தாமரை டாக்டர் ஆங்கிலத்தில் சொன்னதை தமிழில் அக்காவுக்கு சொன்னாள்.செந்தாமரை சொன்னதைக் கேட்ட கமலாவுக்கு பூமியே பிளந்து அதள பாதாளத்தில் போய் விழுந்தது போல் இருந்தது.கமலா அப்படியே அங்கே இருந்த ஒரு சோ¢ல் ‘பொத்’ தென்று சாய்ந்து விட்டாள்.கமலாவுக்கு மயக்கம் வந்து விட்டது.‘இனிமே நாம என்ன செய்யப் போறோம்’ என்று ஒன்னும் புரியாமல் செந்தாமரை தன் கண்களை மூடிக் கொண்டு ஒரு சேரில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள்.கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை தன்னை சுதாரித்துக் கொண்டு அக்காவை மெல்ல எழுப்ப நினைத்தாள்.ஆனால் கமலா தன் கண்களையே திறக்கமல் இருந்தாள். பயந்துப் போன செந்தாமரை உடனே எதிரே இருந்த ஒரு தண்ணீர் குழாயில் இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து வந்து அக்கா முகத்தில் தெளித்தாள்.தன் முகத்தில் ஜில்லென்று தண்ணீர் படவே கமலா தன் கண்களைத் திறந்தாள்.”அக்கா,நான் பக்கத்திலே இருக்கேன்.கவலைப்படாதீங்க” என்று சொல்லி அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு எதிரே இருந்த ஒரு ‘காபி’ பூத்துக்குப் போய் கொஞ்சம் காபி வாங்கிக் கொண்டு வந்து குடிக்க கொடுத்தாள்.காபியை குடித்த கமலாவுக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.

டாக்டர் சொன்னது ஞாபகம் வரவே அவள் உடனே செந்தாமரையைப் பார்த்து “செந்தாமு நம்ப அம்மா இப்படி நம்மை தனியா தவிக்க விட்டு விட்டு போயிட்டாங்களே.நாம இனிமே என்ன பண்ணு வோம் செந்தாமு”என்று சொல்லி மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.சற்று நேரத்திற்கெல்லாம் I.C.U. வில் இருந்து முழுக்க வெள்ளை துணியால் மூடிய தேவியின் ‘பாடியை‘ மார்ச்சுவா¢க்கு’ கொண்டு போ னார்கள்.செந்தாமரைக்குத் துக்கம் தொண்டையை அடைக்கவே என்ன பேசுவது என்று தெரியாமல் கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்தாள்.கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை ‘நாம இனிமே மேலே ஆக வேண்டியதை கவனிக்கணும்’என்று நினைத்து மேலே ஆக வேண்டியதை கவனிக்க யோசித்தாள் செந்தாமரை அக்காவிடம் “அக்கா,நாம இப்போ மேலே ஆவ வேண்டியதை கவனிக்கணும்.நீங்க இங்கேயே இருங்க”என்று சொல்லி விட்டு எழுந்துப் போய் ஹாஸ்பிடல் ‘ரிஸப்ஷனுக்கு போனாள். ‘ரிசப்ஷனில்’ அம்மாவுக்கு வைத்திய செலவு என்ன ஆச்சுன்னு என்று கேட்டு அந்தப் பணத்தைக் கட்டி விட்டு ‘மார்ச்சுவரி’க்குப் போய் அந்த ரசீதைக் காட்டி அம்மாவின் ‘பாடியை’ வெளியே கொண்டு வந்தாள்.ஒரு பெரிய ‘வேனை’ ஏற்பாடு பண்ணி அம்மாவின் ‘பாடியை’ அதில் ஏற்றிக் கொண்டு, கமலாவையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் செந்தாமரை.விஷயம் கேள்விப் பட்டு தாமஸ¤ம்,ஜென்னியும்,டேவிடும்,ராணியும்,அவ குழந்தையை அழைத்துக் கொண்டு செந்தாமரை வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்தார்கள்.எல்லோரும் தேவிக்கு இறுதி மா¢யாதை செலுத்தினார்கள். எல்லோரும் கிளம்பிப் போனதும் செந்தாமரையும் கமலாவும் அம்மாவுக்கு ‘எல்லா காரியங்களையும்’ செய்து முடித்தார்கள்.

அன்று பள்ளி கூடத்தில் செந்தாமரை தன் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.ராஜேஷ் செந்தாமரையைப் பார்த்து “செந்தாமரை.உங்க அம்மா திடீர் ன்னு செத்து போயிட்டாங்கன்னு கேள்வி பட்டேன்.ரொம்ப சாரி”என்று சொல்லி செந்தாமரையை துக்கம் விசாரித்தான்.“ஆமாங்க.அவங்க ‘மாஸிவ் ஹார்ட் அட்டாக்’ வந்து ‘அட்மிட்’ பண்ண ஆறாவது மணி நேரத்துக்குள்ளே I.C.U.விலேயே செத்து போயிட்டாங்க” என்று சொல்லி விட்டு தன் கண்களில் வழிந்துக் கொண்டு இருந்த கண்ணீரை துடைத்து கொண்டாள் செந்தாமரை.பிறகு தன் கையில் இருந்த கல்யாணப் பத்திரிக்கையை செந்தாமரை இடம் கொடுத்து “செந்தாமரை, இத்தனை வருஷம் கழிச்சு எங்க அம்மாவும்,அப்பாவும்,ரொம்ப பிடிவாதம் பிடிச்சு இந்த பெண்ணை என் தலையிலே கட்ட முடிவு பண்ணி இருக்கா.கல்யாணம் வர மாசம் பத்தாம் தேதி.பத்தாம் தேதி ஞாயித்துக் கிழமையா வரது.நீ அவசியம் அந்தக் கல்யாணத்துக்கு வந்து எனக்கு வரப் போகும் அந்தப் பெண்ணையும், என்னையும், கௌரவிக்கணும்” என்று ராஜேஷ் சொல்லி முடிக்கவில்லை செந்தாமரை உடனே “நீங்க கல்யாணம் பண்ணீக்க போறேன்னு சொன்னதுக்கு என் ‘அடவான்ஸ் கங்கிராஜுலேஷன்ஸ்’.நான் நிச்சியமா உங்க கல்யாணத்துக்கு வந்து உங்க வருங்கால மணைவியை ஆசீர்வாதம் பண்ணி விட்டு, உங்களை கௌரவிச்சு விட்டு வறேன்”என்று சொல்லி ராஜேஷ் கொடுத்த கல்யாணப் பத்திரிக்கையை வாங்கிப் பிரித்து படித்தாள்.ராஜேஷ் கொஞ்ச நேரம் இருந்து விட்டு ”செந்தாமரை,நான் என் கல்யா ணப் பத்திரிக்கையை எல்லோருக்கும் கொடுக்கணும்.கொடுத்து முடிச்ச அப்புறமா வந்து உன் கிட்டே நான் நிதானமா பேசறேன்”என்று சொல்லி விட்டு,எழுந்து வேகமாகப் போய் விட்டான்.ராஜேஷ் கிளம்பிப் போனதும் செந்தாமரை ‘நல்ல வேளை ராஜேஷ் அம்மாவும் அப்பாவும் பிடிவாதம் பிடிச்சு, அவருக்கு ஒரு பொண்ணைப் பாத்து கல்யாணம் நிச்சியம் பண்ணி விட்டு இருக்காங்க.எங்கே என் ஞாபகமா ராஜேஷ் இருந்து வந்து அவர் வாழ்கையையும் பாழ் பண்ணிக் கிட்டு வந்து,அவங்க அம்மா அப்பா ஆசையை பூர்த்தி பண்ணாம இருந்து வந்து விடப் போறாரோ’ன்னு நான் ரொம்ப பயந்தேன். இப்போ ராஜேஷ் ‘நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போறேன்’ என்கிற சந்தோஷ சமாசாரத்தை சொ¡ன்னதை கேட்டு எனக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கு’ என்று தன் மனதில் சொல்லிக் கொண்டு சந்தோஷப் பட்டாள்.

ராஜேஷ் கல்யாணத்திற்கு செந்தாமரை போனாள்.செந்தாமரையைப் பார்த்ததும் ராஜேஷ் “வா செந்தாமரை”என்று சொல்லி அவளை வரவேற்றான்.செந்தாமரை ராஜேஷின் வருங்காக மனைவியைப் பார்த்து “‘கங்கிராஜுலேஷன்ஸ்’ விஜயா.நான் சாரோடு வேலை செஞ்சு வரும் ஒரு கணக்கு வாத்தியார்.என் பேர் செந்தாமரை” என்று சொல்லி முடிக்கவில்லை ராஜேஷ் அது கல்யாண மண்டபம் என்று கூட பார்க்காமல் தன் வருங்கால மனைவி இடம் செந்தாமரையின் பூரா கதையும் சொல்லி “விஜயா,உனக்குத் தெரியுமா.இந்த செந்தாமரை ‘டென்த்’ ’,’ட்வெல்த்’, B.Sc.Maths, M.Sc.Maths எல்லா பரிஷையிலும் ‘ஸ்டேட் பஸ்ட்டா’ ‘பாஸ்’ பண்ணி இருக்கா.நான் செந்தாமரையை ரொம்ப காத லிச்சேன்.கல்யாணமும் பண்ணி கொள்ள ரொம்ப ஆசைப் பட்டேன்.அதுக்காக நான் அவா ஆத்து க்கும் போய் அவ அப்பா அம்மாவை பார்த்து ‘நான் உங்க பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொள்ள ரொம்ப ஆசைப் படறேன்’ன்னு சொல்லிக் கேட்டேன்.ஆனா செந்தாமரையின் அம்மா தான் என்னை பார்த்து ’இந்தக் கல்யாணம் ஒத்து வராதுங்க.எங்க ஜாதி வேறே.உங்க ஜாதி வேறே’ன்னு சொல்லி ட்டா.செந்தாமரையும் ‘தான் கல்யாணமே பண்ணிக் கொள்ளப் போவதில்லை’ன்னு என் கிட்டே சொல் லிட்டா.என் அம்மாவும் அப்பாவும் நான் செந்தாமரையே கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதம் தரலே”என்று மூச்சு விடாம சொன்னான்.உடனே விஜயா செந்தாமரையை பார்த்து மேடம் “நீங்க ‘டென்த்’,‘ட்வெல்த்’, B.Sc.Maths,M.Sc.Maths எல்லா பா¢ஷையிலும் சென்னை மாநிலத்திலே முதல் மாணவியாயாவா பாஸ் பண்ணீ இருக்கீங்களா.’கங்கிராஜுலேஷன்ஸ்’ மேடம்.நீங்க பாக்க நல்ல கலரா,அழகா,இருக்கீங்க.உங்களை சந்திக்கிறதிலே நான் ரொம்ப பெருமைப்படறேன்.என் அதிர்ஷ்டம் நீங்க இவரை கல்யாணம் பண்ணிக் கொள்ளாதது.ஒரு வேளை நீங்க இவரை கல்யாணம் பண்ணிக் கொண்டு இருந்தா,இவர் எனக்கு கிடைச்சு இருக்க மாட்டார்” என்று சொல்லி தன் சந்தோஷதைத் வெளிப்படுத்தினாள்.

உடனே செந்தாமரை விஜயாவைப் பர்த்து “விஜயா மேடம்,அந்த கடவுள் யாருக்கு யாரை முடி ச்சுப் போட்டு இருக்காரோ, அவங்க ரெண்டு பேர் தான் கணவன் மணைவியாக ஆக முடியும்.நாம் தலை கீழா நின்னாக் கூட அதை மாத்த முடியாது.இந்த ஜென்மத்தில் ராஜேஷ் தான் உங்க கணவரா வரணும்ன்னு இருக்கும் போது நான் எப்படி அவரைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு இருக்க முடி யும் சொல்லுங்க”என்று கேட்டு சிரித்தாள்.

சிறிது நேரத்திற்கு எல்லாம் மூர்த்தி கல்யாணத்திற்கு வந்தார்.ராஜேஷ அவரைப் பார்த்ததும் “வாங்க சார், வாங்க.நீங்க உங்க ‘மிஸஸை’ அழைச்சுண்டு வரலையா சார்” என்று கேட்டான்.அவர் அதற்கு”இல்லே ராஜேஷ்,அவளுக்கு உடம்பு கொஞ்சம் சரி இல்லை.ரெண்டு நாளா ‘பீவரா’ இருக்கு” என்று சொல்லி விட்டு கல்யாண மணமக்களைப் பார்த்து “‘கங்கிராஜுலேஷன்ஸ்’” என்று சொல்லி ராஜேஷின் கையைப் பிடித்துக் குலுக்கினார்.ராஜேஷ் உடனே விஜயாவிடம் ”விஜயா,இவர் நான் வேலை செஞ்சு வரும் பள்ளீக் கூடத்தின் முன்னாள் ‘பிரின்ஸிபால்’.இவர் பேர் மிஸ்டர் மூர்த்தி” என்று சொல்லி மூர்த்தி சாரை தன் மணைவிக்கு அறிமுகப்படுத்தினான்.”என் மணைவிக்கு உடம்பு கொஞ் சம் சரி இல்லே.அதான் அவங்களே அழைச்சு கிட்டு வர முடியலே. நான் மூனு நாளைக்கு முன்னாடி தான் உங்க ‘ட்வெல்த்’ கணக்கு கஷ்டமான கைப்பிரதியை முழுக்கப் பாத்து அதில் சில திருத்தங் களையும்,மாற்றங்களையும் பண்ணி என் முன்னுரையையும் எழுதி என் நண்பரைக் கூப்பிட்டு ஒரு புஸ்தகமாக ‘பப்ளீஷ்’ பண்ணச் சொல்லி இருக்கேன்.செந்தாமரை சொன்னாதை அவர் கிட்டே சொ ல்லி அந்த கணக்குப் புஸ்தகத்துக்கு அவர் லாபம் போக எவ்வளவு கம்மி விலைப் போட முடியுமோ அந்த விலையை அந்தப் புஸ்தகத்துக்கு போட சொல்லி இருக்கேன்” என்று சொன்னார். செந்தாமரையும் ராஜேஷூம் அவருக்கு தங்கள் நன்றியைச் சொன்னார்கள்.

மூனு வருஷம் ஓடி விட்டது.செல்வி மருத்துவப் படிப்பில் கடைசி வருஷ பா¢¨க்ஷயை நன்றாக எழுதி அவள் சொன்னது போல ‘பஸ்ட் க்ளாசிலே பாஸ்’ பண்ணினாள்.செந்தாமரைக்கு மிகவும் சந் தோஷம்.அவள் செல்வியைக் கட்டி கொண்டு ”செல்வி,நீ அன்னைக்கு சொன்னது போல ‘பைனல் எக்ஸாமிலே’ ‘பஸ்ட் க்ளாஸிலே’ ‘பாஸ்’ பண்ணீ இருக்கே.’ஐ ஆம் வொ¢ ப்ரௌட் ஆப் யூ செல்வி” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து குலுக்கினாள்.கமலா ‘ஒன்னும் படிக்காத நம் வயித்திலே பொறந்த இந்த செல்வி இவ்வளவு பெரிய படிப்பு படிச்சு,அதுவும் ‘பஸ்ட் க்ளாஸிலே’ பாஸ்’ பண்ணி இருக்காளே’ என்று நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டாள்.அவ உடனே தன் கண்களில் கண்ணீர் முட்ட”செல்வி,ஒன்னும் படிக்காத என் வயித்திலே பொறந்த நீ இவ்வளவு படிப்பு படிச்சு அதுவும் ‘பஸ்ட் க்ளாஸிலே’ பாஸ்’ பண்ணி இருக்கியே.உன்னை நினைச்சா எனக்கு பெருமையாவும், சந்தோ ஷமாவும் இருக்கு”என்று சொல்லி செல்வியைக் கட்டிக் கொண்டாள்.உடனே செல்வி “அம்மா நாம ரெண்டு பேரும் சித்திக்கு தாம்மா ‘தாங்ஸ்’ சொல்லணும்.சித்தி மட்டும் அன்னைக்கு ‘டொனேஷ ன்’ குடுத்து என்னை ஒரு ‘மெடிக்கல்’ காலேஜிலே’ சேர்க்காம இருந்தா,நான் இன்னைக்கு ஒரு MBBS .படிச்ச ஒரு டாக்டரா ஆகி இருக்கவே முடியாதும்மா.சித்தி,நீங்க மட்டும் எங்க கூட இல்லாம இரு ந்தா,நான் இந்த நிலைக்கு வந்து இருக்கவே முடியாது” என்று சொல்லி செந்தாமரையின் காலைத் தொட்டு தன் கண்களில் ஒத்தி கொண்டாள்.செந்தாமரை அவள் தோளை தொட்டு அவளை எழுப்பி “செல்வி,பணம் கட்டி படிக்க வச்சா மட்டும் ஒருத்தர் MBBS படிச்ச ஒரு டாக்டரா ஆகி விட முடியாது. அந்த படிப்பை ராப் பகலா கஷ்டப் பட்டு படிச்சு, ‘பஸ்ட் க்ளாஸிலே’ ‘பாஸ்’ பண்ண வேண்டும் என்ற ‘இலக்கு’ வச்சு நீ படிச்சதாலே தான் ஆக முடிஞ்சது.என் பணத்தை விட உன் கடின உழைப்புதாம்மா முக்கிய காரணம்” என்று சொல்லி வாழ்த்தினாள்.

கொஞ்ச நேரம் கழித்து செல்வி தன் சித்தியைப் பார்த்து “சித்தி,என் ‘ப்ரபஸருக்கு’த் தம்பி ரமேஷ் என்பவர் ஒரு பெரிய ‘நர்ஸிங்க் ஹோம்’ வச்சு இருக்காராம.அவர் என்னை காலேஜ்லே சந்திச்சு, என ‘மார்க்கை’ப் பார்த்து ரொம்ப புகழ்ந்து என்னை அவர் ‘நர்ஸிங்க் ஹோமில்’ ஒரு டாக்டரா சேர சொன்னார்.நான் உடனே அவர் கிட்டே ’ரொம்ப’ ‘தாங்ஸ் சார்,நான் வீட்டுக்குப் போய் என் அம்மா கிட்டேயும்,சித்தி கிட்டேயும்,கேட்டுக் கிட்டு வந்து சொல்றேன்’னு சொல்லி விட்டு வந்து இருக்கேன். நான் அந்த ‘நர்ஸிங்க் ஹோமில்’ ஒரு டாக்டரா வேலலைக்கு சேரட்டுமா”என்று கேட்டு விட்டு அம் மாவின் முகத்தையும் சித்தியின் முகத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.உடனே செந்தாமரை “அக்கா,செல்வி அந்த டாக்டர் வேலைக்கு உடனே சேரட்டும்.அந்த மாதிரி பெரிய ‘நர்ஸிங்க் ஹோ மிலே’ டாக்டரா சேர்ந்தா,அங்கே வைத்தியம் பண்ணிக்க நிறைய நோயாளிங்க வருவாங்க.அவங்க ளுக்கு செல்வி வைத்தியம் செஞ்சு வந்தாள்ன்னா,நல்ல ‘எக்ஸ்பீரியன்ஸ்’ கிடைக்கும்” என்று சொன்ன வுடன் கமலா “செந்தாமரை,நீ எது சொன்னாலும் அது ரொம்ப சரியா இருக்கும்.நான் அதிகம் படிக்கா தவ.என் மர மண்டைக்கு ‘எது நல்லது’,’எது கெட்டது’ன்னு தெரியாது”என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரை தன் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.உடனே செந்தாமரை அக்காவைப் பார்த்து “அக்கா,நீ வீணா இப்ப கண்லே தண்ணி விடாதே.நீ படிக்காட்டா என்னக்கா. உன் வயித்திலெ பொறந்த ரெண்டு பொண்ணுங்களும் நல்லா படிச்சு இருக்காங்க இல்லையா.அதை பாத்து நீ சந்தோஷப் படு.நடந்துப் போனதை நினசுச்சு வருத்தப்படறதிலே ஒரு அர்த்தமும் இல்லே கண்ணை துடைச்சு கொள்ளுங்க.செல்வியை வாழ்த்தி அவளை டாக்டர் வேலைக்கு அனுப்புங்க” என்று சொன்னதும் செல்வி உடனே அம்மாவின் கால்களையும்,சித்தியின் கால்களையும் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டு “நான் நாளைக்கே அவரை சந்திச்சு நான் டாக்டர் வேலைக்கு போக என் அம்மாவும்,சித்தியும் ஒத்துக்கிடாங்கன்னு சொல்லி அந்த ‘நர்ஸிங்க் ஹோமில்’ டாக்டர் வேலை க்கு சேரப் போறேன்”என்று சந்தோஷதுடன் சொன்னாள் செல்வி.

அடுத்த நாள்ளே செல்வி அந்த ‘நர்ஸிங்க் ஹோமில்’ டாக்டர் வேலைக்கு சேர்ந்து விட்டாள். செல்வி டாக்டர் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகியது.செந்தாமரை செல்வியைப் பார்த்து “என்ன செல்வி உனக்கு அந்த ‘நர்ஸிங்க் ஹோம்’ டாக்டர் வேலை பிடிச்சு இருக்கா.உங்க ‘சீனியர் டாக்டர்’ உன் கிட்டே எப்படி பழகிக் கிட்டு வறாரு”என்று கேட்டாள்.உடனே செல்வி “ரொம்ப பிடிச்சு இருக்கு சித்தி.என் சீனியர் டாக்டர் என் கிட்டே ரொம்ப நல்லா பழகி வறாரு.எங்க ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ நிறைய நோளிங்க வறாங்க சித்தி.ரமேஷ் அந்த நோயாளிகளைப் ‘எக்ஸாமின்’ பண்ண பிறகு,அவர் எனக்கு அந்த நோயாளியின் ‘கண்டிஷனை’ப் பத்தி இன்னும் விளக்கிச் சொல்றாரு.’நர்ஸிங்க் ஹோமி லெ’ நேரம் போவதே தெரியலே சித்தி” என்று சந்தோஷத்துடன் சொன்னாள்

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *