சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 8,209 
 

அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21

குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமை செந்தாமரை தன் வீட்டில் எல்லோரையும்,தாத்தாவையும், அழைத்துக் கொண்டு வடபழனி கோவிலுக்குப் போய் எல்லோர் முன்னிலையிலும் குருக்கள் மந்திரம் சொல்ல டேவிட் ராணிக்கு தாலி கட்டினான்.பிறகு செந்தாமரை எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் சரவண பவனில் கல்யாண சாப்பாடு போட்டாள்.சாப்பிட்டு முடிந்ததும் ஜென்னியும், தாமஸூம், செந்தாமரையைப் பார்த்து ”நீங்க கல்யாணத்தே ரொம்ப சிறப்பா செஞ்சீங்க. எங்களுக்கு ரொம்ப சந் தோஷமா இருக்குங்க.நாங்க ராணியை எங்க கூட இட்டுக் கிட்டு எங்க வீட்டுக்கு போறோம்ங்க” என்று சொல்லி விட்டு ராணியை தங்களுடன் அழைத்துக் கொண்டு கிளம்ப ரெடி ஆனார்கள்.உடனே ராணி அம்மா,ஆயா, தாத்தா, சித்தி காலை தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டாள்.கமலா “ராணீ,நீ உங்க வீட்டுக்குப் போனதும் உங்க மாமனார்,மாமியார்.புருஷன் மனம் கோணாம நடந்து வர ணும்.அவங்க என்ன சொல்றாங்களோ அதன் படி தான் நீ நடந்து வரணும்.நம்ம குடும்பத்துக்கு நல்ல பேரை வாங்கித் தரணும்”என்று புத்திமதி சொல்லி அனுப்பினாள். ராணீ£யை அழைத்துக் கொண்டு அவர்கள் போன பிறகு செந்தாமரை தன் அம்மாவையும்,அப்பாவையும், அக்காவையும், செல்வியை யும் அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள்.அந்த வார ஞாயித்து கிழமையே, தாமஸூம், ஜென்னியும் ராணியையும்,டேவிடையும் அழைத்துக் கொண்டு ‘சர்ச்சுக்கு’ போய் ,‘பாதர் சுபீரியடம்’ சொல்லி ராணீ பேரை ‘ரோஸி’ என்று மாற்றி விட்டு டேவிடுடன் அவர்கள் வழக்கப் படி மோதிரம் மாத்தி ‘பாதர் சுபீரியர் ‘ஆசீர்வாதத்துடன் கல்யாணம் பண்ணி வைத்தார்கள்.

ஆறு மாச ஆராய்ச்சிக்குப் பிறகு, ராஜேஸூம் செந்தாமரையும் பன்னா டவதில் இருக்கும் கஷ்டமான இருபது கணக்குகளை தேர்வு செஞ்சி அவைகளுக்கு அவர்கள் ரெண்டு சேர்ந்து செய்த வழி முறைகளை எழுதினார்கள்.‘பிரின்சிபால்’ ப்¡£யா இருக்கும் போது ராஜேஸூம், செந்தாமரை யும்,அவர்கள் எழுதின கைப் பிரதியை எடுத்துக் கொண்டு ‘பிரின்சிபால்’ ரூமுக்குப் போனார்கள். ராஜேஷையும் செந்தாமரையையும் ஒன்றாகப் பார்த்த ‘பிரின்ஸிபால்’ “வாங்க வாங்க,நானே உங்க ரெண்டு பேரையும் என் ரூமுக்கு கூப்பிடணும்ன்னு இருந்தேன்.ஆனா ஏதோ ‘ஆபிஸ்’ வேலைலே பிஸியாக இருந்து விட்டேன்.என் நண்பர் மத்தியானம் தான் போன் பண்ணி என் கிட்டே”சார்,நான் ‘பிரின்ட்’ பண்ண பத்தாவது கணக்கு புஸ்தகம் ஐனுரு காப்பியும் விற்றுப் போய் விட்டதாம்.நான் இன்னும் ஓரு ஆயிரம் காப்பி ‘பிரிண்ட்’ பண்ணீ எல்லா ‘புக் ஷாப்புக்கும்’ தரப் போறேங்க.விற்றுப் போன ஐனூறு காப்பிக்கும் கிடைச்ச லாபத்தில் உங்க ‘ஷேரை’ உங்க கிட்டேகொண்டு வந்து தந்து விடறேன் சார்”என்று சந்தோஷத்துடன் சொன்னார்.ராஜேஸூம் செந்தாமரையும் அவருக்கு நன்றி சொல்லி விட்டு அவர்கள் ஆராய்ச்சி செய்த பன்னாடாவது கணக்குகள் பிரதியைக் கொடுத்தார்கள். ‘பிரின்ஸிபால்’அந்தப் கைப் பிரதியை வாங்கிக் கொண்ட பிறகு செந்தாமரை ‘பிரின்ஸிபாலை’ பார்த்து “சார்,இப்போ நாங்க ரெண்டு பேரும் ஒன்னா ஆராய்ச்சி செஞ்சி பன்னாடாவதிலே இருக்கிற ஒரு இருபது கணக்குகளை எல்லாம் எப்படி சுலபமாகப் போடுவது என்று எழுதி இருக்கோம்.இந்த ஆராய்ச்சிக்கு பத்தாவது கணக்கு புஸ்தகத்துக்கு வைத்த பேர் போல இதற்கும்;

Twelth Maths, Made Easy

ன்னு வச்சு இருக்கோம்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது நீங்க இந்த கைப் பிரதியைப் பார்த்து, பத்தாவதுக்கு செஞ்சா மாதிரி நீங்க செய்ய விரும்புகிற மாற்றங்களையும்,திருத்தங்களையும் செஞ்சு விட்டு,இந்த கைப் பிரதிக்கு உங்க முன்னுரையையும் எழுதி உங்க நண்பரை ஒரு புஸ்தகமாப் போட சொல்ல முடியுமா”என்று கேட்டாள்.உடனே அவர் ஆச்சரியப் பட்டு ”அப்பாடியா பரவாயில்லையே. நீங்க ரெண்டு பேரும் உங்க ‘ஸ்பேர்’ டயத்தை வீணடிக்காம மிகவும் ‘யூஸ்புல்லாக’ செலவு பண்ணி இருக்கீங்க.’ ஐ ஆம் ரியலி வொ¢ ப்ரௌட் ஆப் யூ போத்’ ”என்று சந்தோஷத்துடன் சொல்லி விட்டு “நான் நிச்சியமா செய்யறேன்.நீங்க கவலையே படாதீங்க” என்று சொன்னதும் ரெண்டு பேரும் “ரொம்ப தாங்ஸ் சார்”என்று எழுந்து நின்றுக் கொண்டு சொல்லி விட்டு ‘பிரின்ஸிபால்’ ரூமை விட்டு வெளியே வந்தார்கள்.ரூமை விட்டு வெளியே வந்ததும் செந்தாமரையும், ராஜேஸூம்,ஒருவருக்கு ஒருவர் தங்கள் நன்றியை சொல்லிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.

ஒரு வருஷம் ஓடி விட்டது.அந்த தடவை செந்தாமரை,கமலா,தேவி ராணியைப் பார்க்க போன போது ராணீயின் மாமியார் ராணீ மூனு மாசமா ‘முழுகாம இருக்ககா’ என்கிற சந்தோஷ சமாசாரத்தை சொன்னாள்.இதைக் கேட்டதும் மூவரும் சந்தோஷப் பட்டு ராணியின் மாமியார் சம்மததுடன் ராணி யை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்து ராணீ வாய்க்கு பிடித்த பலகாரங்களை எல்லாம் அவளுக்கு செய்து கொடுத்து ராணீயை சந்தோஷமாக வைத்துக் கொண்டார்கள்.ராணீயை சந்தோஷமாக வைத் துக் கொண்டு ஒரு வாரம் கழித்து ராணீயை செந்தாமரையும்,கமலாவும்,அவர்கள் வீட்டில் கொண்டு போய் விட்டார்கள்.செந்தாமரை அடிக்கடி கமலாவை பார்த்து “அக்கா,நீ சீக்கிரமே ஆயா ஆவ போறே. ஒரு பேரனோ,இல்லை ஒரு பேத்தியோ உன் மடிலே விளையாடப் போறான்” என்று கிண்டல் செய்து வந்தாள்.உடனே அதற்கு கமலா ”நான் ஆயான்னா,நீ ஒரு சின்ன ஆயா செந்தாமு.அதை நீ மறந்து ட்டயா”என்று பதில் சொல்லி செந்தாமரையை எதிர் கிண்டல் பண்ணி வந்தாள்.ராஜ்ஜும், தேவியும் தங்கள் ரெண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் கிண்டல் பண்ணிக் கொண்டு சந்தோஷமாக இருந்து வருவதைப் பார்த்து மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

ராணீக்கு ஏழு மாசம் ஆனதும் செந்தாமரை ராணீயை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து, ஜென்னி,தாமஸ்,டேவிட்,மற்றும் எல்லா உறவுக்காரர்களையும் அவள் வீட்டுக்கு வர வழைத்து, ராணீ யின் ‘வளைகாப்பு விழாவை’ கோலாகலமாகக் கொண்டாடிய பிறகு, ராணியை அவள் மாமனார் மாமி யார் கணவருடன் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.‘மாசம்’ ஆனதும் செந்தாமரை ராணீயை அவர் கள் வீட்டுக்கு அழைத்து வந்து அவளுக்கு பிரசவ வலி வந்ததும் அவளை பக்கத்தில் இருந்த ‘நர்ஸிங்க் ஹோமில்’ பிரசவம் பார்க்க சேர்த்தாள். நர்ஸிங்க் ஹோமில்’ சேர்த்த எட்டாவது மணிக்கெல் லாம் ராணீக்கு ஒரு அழகான ஆண் குழந்தைப் பிறந்தது. உடனே கமலாவும் தேவியும் காளியும், ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ப் போய் குழந்தையைப் பார்த்தார்கள் விஷயம் கேள்விப் பட்டு தாமஸூம், ஜென் னியும், டேவிடும் அந்த ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ வந்து குழந்தையைப் பார்த்தார்கள்.எல்லோரும் ஒரு வாய் வைத்தாற் போல் ‘குழந்தை ரொம்ப அழகாக இருக்கிறது’ என்று பாராட்டி,ராணீ டேவிட் தமபதி களைப் பார்த்து ‘கங்கிராட்ஸ்’ சொல்லி விட்டு குழந்தையை வாழ்த்தி விட்டுப் போனாகள். ‘நர்ஸிங்க் ஹோமில்’ இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனதும் ஜென்னியும் தாமஸூம் ராணீயையும் குழந்தையையும் ‘சர்ச் சுக்கு’ அழைத்துக் கொண்டு போய் ‘பாதர் சுபீரியர்’ இடம் காட்டி அந்த குழந்தைக்கு ஜார்ஜ் என்று பெயர் வைத்து அவா¢டம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு வந்தார்கள். கமலா ராணீயையும்,அவ குழ ந்தையையும் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து மூனு மாசம் ஜாக்கிறதையாகப் பார்த்துக் கொண்டு வந்தாள்.தேவியும்,காளியும்,செந்தாமரையும் ராணீயின் குழந்தையுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டு வந்தார்கள்.மூனு மாசம் ஆனதும் ராணீ தன் வீட்டு க்குப் போக வேண்டும் என்று சொல்ல வே செந்தாமரை ராணீக்கு புடவை, ‘ப்ளவு ஸூம்’ குழந்தைக்கு நிறைய ‘டிரஸ்களும்’ வாங்கிக் கொ ண்டு வந்து,கமலாவையும்,தேவியையும், அழைத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வந்தாள்.

ராஜ்ஜுக்கு அடிக்கடி சாப்பிட்டதெல்லாம் வாந்தி வாந்தியாய் வர ஆரம்பித்தது.கூடவே வயிற்றுப் போக்கும் வர ஆரம்பித்தது.செந்தாமரைக்கும் தேவிக்கும் மிகவும் கவலையாக இருந்தது. ஆகாரமும் வயிற்றில் தங்காமல்,வாந்தியும்,வயிற்றுப் போக்கும் அதிகம் ஆகி வரவே, செந்தாமரை ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு காளியை பக்கத்தில் இருந்த ‘நர்ஸிங்க் ஹோமில் சேர்த்தாள்.ரெண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு எந்த மருத்துக்கும் காளி உடம்பு சரியே ஆகாமல் அவர் இறந்து விட்டார். தேவியும் கமலாவும் அது ஒரு ‘நர்ஸிங்க் ஹோம்’ என்று கூட பார்க்காமல் ‘ஓ’ என்று தலையில் அடி த்துக் கொண்டு அழுதார்கள்.அங்கு இருந்த நர்ஸ் ஓடி வந்து “அம்மா,நீங்க இங்கே எல்லாம் இப்படி சத்தம் போட்டு அழக் கூடாது.இங்கே நிறைய நோயாளிகள் உயிருக்குப் போறாகி கிட்டு இருக்காங்க. நீங்க வெளியே போய் அழுங்க”என்று சற்று கடுமையாக சொன்னதால் தேவியும், கமலாவும்,வெளியே வந்து அழுதுக் கொண்டு இருந்தார்கள்.செந்தாமரை அப்பா வைத்தியத்திற்கு என்ன செலவு ஆச்சோ அதை ‘நர்ஸிங்க் ஹோமில்’ கட்டி விட்டு,அப்பாவின் ‘பாடியை’ வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள். ராஜ்ஜின் பாடியை ஒரு ‘ஆம்புலன்ஸில்’ வைத்து அம்மாவையும் அக்காவையும் அழைத்துக் கொண்டு செந்தாமரை வீட்டுக்கு வந்தாள்.விஷயம் தெரிந்ததும் ராஜ்ஜின் நண்பர்களும்,உறவுக் காரர்களும் செந்தாமரை வீட்டுக்கு வந்து காளிக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.ராணீ,அவள் கணவன் டேவிடையும்,குழந்தையையும், மாமனாரையும்,மாமியாரையும், செந்தாமரை வீட்டுக்கு அழைத்து வந்து ராஜ்ஜுக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு அவர்கள் வீட்டுக்குக் கிளம்பிப் போனார்கள். செந்தாமரையும்,கமலாவும்,தேவியும் அவர்கள் எல்லோரும் கிளம்பிப் போன பிறகு ராஜ்ஜைஅடக்கம் பண்ணி விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.செந்தாமரை ராஜ்ஜின் நண்பர்களுக்கும் உறவுக்காரர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள்.தேவி மட்டும் ஒன்னும் சாப்பிடாமல் சதா அழுதுக் கொண் டு இருந்தாள்.செந்தாமரையும் கமலாவும் மெல்ல அம்மாவு க்கு ஆறுதல் சொல்லி அவளை சாப்பிட வைத்தார்கள்.

ரெண்டு வருஷங்கள் ஓடி விட்டது.செல்வி பன்னடா¡வதிலே நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீனாள்.செல்வி மிகவும் ஆசைப் பட்டதால் செந்தாமரை கொஞ்சம் ‘டொனேஷன்’ கொடுத்து செல்வியை ஒரு ‘மெடிக்கல்’ கல்லூரியில் சேர்த்தாள்.செல்விக்கு ரொம்ப சந்தோஷம்.அவள் உடனே களைத் தொட்டு “சித்தி,நீங்க மட்டும்.எங்க கூட இல்லாத இருந்தா,நான் வெறுமனே எட்டாவது மட்டும் தான் படிச்சு இருப்பேன்.நீங்க எங்க வாழக்கையிலே வந்து,என்னையும், அம்மாவையும், ஆயாவையும்,அக்காவையும் இவ்வளவு சந்தோஷமாக வச்சு கிட்டு வந்து இருக்கீங்க.அந்த கடவுள் தான் உங்களுக்கு நீண்ட ஆயுசையும் நல்ல சந்தோஷத்தையும் கொடுக்கணும்” என்று கண்களில் கண்ணீர் மல்கச் சொன்னாள்.உடனே செந்தாமரை “எனக்கு ஆசீர்வாதம் பண்றது அப்புறமா இருக் கட்டும்.‘மெடிக்கல் படிப்பு’ படிக்கிறது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லே செல்வி. நீ ரொம்ப கஷ்டப் பட்டு நல்லா படிச்சு வரணும் தெரிதா” என்று எச்சரித்தாள்.செல்வி உடனே “சித்தி, நீங்க வேணா பாருங்க.நான் ரொம்ப கஷ்டப் பட்டு படிச்சு வந்து ‘பைனல் எக்ஸாம்மிலே’ ‘பஸ்ட் க்ளாஸிலே’ பாஸ் பண்ணுவேன்” என்று ‘கான்பிடன்டாக’ச் சொன்னாள்.செந்தாமரை ”வொ¢ குட் செல்வி.நீ சொல்வதைக் கேட்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. நீ கஷ்டப் பட்டு படிச்சு வந்து ‘பஸ்ட் க்ளாசிலே’ ‘பாஸ்’ பண்ணீனா,அதை பார்த்து சந்தோஷப் படற முதல் ஆசாமி நானா தான் இருக்கும்” என்று சொல்லி செல்வியின் முதுகிலே செல்லமாகத் தட்டினாள்.

ஒரு வருஷம் ஓடி விட்டது.அன்று ஞாயித்துக் கிழமை.செந்தாமரை நிதானமாக எழுந்து குளித்து விட்டு சாமியைக் கும்பிட்டு விட்டு நாஷ்டா சாப்பிட உட்கார்ந்தாள்.அவள் ‘செல் போன்’ அடித்தது.‘செல் போனை’ ஆன் பண்ணீனான் செந்தாமரை.அடுத்த பக்கத்தில் இருந்து சரவணன். தான் பேசினார்.“அம்மா செந்தாமரை,எனக்கு மயக்கம் அதிகமா இருக்கவே நான் பக்கத்திலே இருக்கி றவங்க கீட்டே சொல்லி.என்னை எங்க தெருக் கோடியிலே இருக்கிற பத்மா ‘நர்ஸிங்க் ஹோமிலே’ சேக்கச் சொன்னேன்.அவங்க இன்னைக்கு காத்தாலே என்னை சேத்து இருக்காங்கம்மா.நீ முடிஞ்சா தேவியை இட்டு கிட்டு என்னை வந்து பாக்க முடியுமாம்மா” என்றுதட்டு தடுமாறிக் கொண்டே சொன்னார்.அவர் குரல் மிகவும் பலவீனமா இருந்தது.செந்தாமரை உடனே அம்மாவிடம் தாத்தா செல் போனில் சொன்ன சமாசாரத்தை சொன்னாள்.செந்தாமரை அம்மாவை உடனே நாஷ்டா கொடுக்கச் சொல்லி அதை ‘கட’ ‘கட’ என்று சாப்பிட்டு விட்டு,அம்மாவை அழைத்துக் கொண்டு தாத்தா சொன் ன ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ ஒரு ஆட்டோவை வைத்து கொண்டு ஓடினாள்.‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ப் போய் சரவணன் படுத்து இருந்த ‘பெட்’ எங்கே இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டுக்கு போய் அவரை பார்த்தார்கள் தேவியும் செந்தாமரையும்.அப்போது அங்கே இருந்த டாக்டரைப் பார்த்து செந்தாமரை உடல் நிலையைப் பற்றீ விசாரித்தாள்

அந்த டாக்டர் செந்தாமரைப் பார்த்து “அம்மா,இவர் உடம்பு ரொம்ப மோசமா இருக்கு.இவருக்கு ‘ஹார்ட் பீட்’ ரொம்ப சரி இல்லை.இவர் ECG ரொம்ப மோசமா இருக்கு.இவருக்கு வயசும் ரொம்ப ஆகி இருப்பதால் இவருக்கு ‘ஹார்ட் ஆபரேஷன்’ பண்ணுவதும் ரொம்ப கஷ்டம்.அப்படியே நீங்க பண்ண நினைச்சா,‘ஆபரேஷனை’ தாங்கிக்க இவர் உடம்பில் பலமே இல்லே.நீங்க இவர் ‘ஹார்ட் ஆபரேஷனு க்கு’ செலவு பண்ணப் போற ரெண்டு லஷ ரூபாயும் வீண் செலவு ஆகி விடும்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது சரவணனுக்கு மறுபடியும் நெஞ்சு வலி அதிகம் அவர் மயக்கமானார். உடனே அந்த டாக்டர் சரவணணுக்கு ‘ஆக்ஸிஜன்’ வைத்து அவருக்கு ஒரு ‘இஞ்செக்ஷன்’ போட்டார். பத்து நிமிஷம் கழித்து டாக்டர் அவர் நாடியை பிடித்துப் பார்த்தார்.கொஞ்ச நேரம் ஆனதும் அந்த டாக்டர் செந்தாமரையை பார்த்து ”அம்மா,அவருக்கு’ மாஸிவ் ஹார்ட் அட்டாக்’ வந்து அவர் இறந்துட் டார்.ரொம்ப சாரிம்மா”என்று சொல்லி அவர் கழுத்தில் மாட்டி இருந்த ‘ஸ்டெதஸ்கோப்பை’க் கழட்டி னார்.டாக்டர் சொன்னதைக் கேட்டு தேவி தேம்பி,தேம்பி அழ ஆரம்பித்தாள். உடனே செந்தாமரை அம்மாவை தூர அழைத்து கொண்டு போய் ஒரு சோ¢ல் உட்கார வைத்து அம்மாவுக்கு தேத்தறவு சொல்லி எதிரே இருந்த ‘காபி ஸ்டாலில்’ ஒரு காபியையும் வாங்கிக் கொடுத்தாள்.பிறகு ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ கட்ட வேண்டிய பணத்தை கட்டி விட்டு கமலாவுக்கு போன் பண்ணினாள்.கமலா போனில் வந்ததும் செந்தாமரை “அக்கா,தாத்தாவுக்கு வைத்தியம் பண்ணியும்,அவர் உயிர் பிழைக்காம செத்து போயிட்டாரு.நீ உடனே ‘பத்மா ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ புறப்பட்டு வா”என்று சொன்னாள் உடனே கமலா “அப்படியா செந்தாமு,தாத்தா செத்துபோயிட்டாரா. நீ அம்மாவை ஜாக்கிறதையா கவனிச்சுக்கோ.தாத்தா செத்துப் போனதே அவங்களாலே தாங்கிக்க முடியாது.என்று கவலையுடன் சொன்னாள்.செந்தாமரை ‘நான் அம்மாவை ஜாக்கிறதையா பாத்துக்கறேன்.நீ கவலைப் படாதே.நீ சீக்கிரமா கிளம்பி வா”என்று சொல்லி ‘போனை’ ‘கட்’ பண்ணினாள்.உடனே கமலா வீட்டை பூட்டிக் கொண்டு ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு ‘பத்மா நர்ஸிங்க் ஹோமுக்கு’ ஓடி வந்தாள். கமாலா,தேவியுடன் சேர்ந்து அழுதாள்.
கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை தாத்தாவின் ‘பாடியை’ வாங்கிக் கொண்டு தன் வீட்டு க்கு வந்தாள்.ராணீயும், டேவிடும், செந்தாமரை வீட்டுக்கு வந்து, இறந்துப் போன சரவணனுக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டுப் போனார்கள்.தேவி உடம்பு ரொம்ப வீக்காக இருந்ததால் செந்தாம ரை அவளை வீட்டிலேயே இருந்து வரச் சொல்லி விட்டு கமலாவை அழைத்துக் கொண்டு போய், தாத்தா ‘பாடிக்கு’ எல்லா ஈமக் கிரியைகளையும் செய்து முடித்து விட்டு வீட்டுக்கு வந்து இருவரும் குளித்து விட்டு,சாப்பிட உடாகார்ந்தாள்.தேவி மட்டும் அழுதுக் கொண்டே”எங்க அப்பா இப்படி ஒரு அனாதை போல செத்துப் போய் இருக்காரே.பேத்தி அவருக்கு எல்லா காரியமும் பண்ணீ இருக்காளே அவர் தன் கண்ணுக்கு மேலாக பிள்ளை முத்துவை வளத்து வந்தாரே.அந்த பாவி பய முத்து ஏதோ ஒரு பொண்ணைக் காதலிச்சு,அவ தற்கொலை பண்ணிக் கிட்டான்னு தெரிஞ்சதும்,அவனும் தற் கொலை பண்ணீக்கிட்டானே.அவன் இன்னைக்கு உயிரோடு இருந்து இருந்தானா,அவன் அவருக்கு எல்லா காரியமும் பண்ணீ இருப்பானே.இனிமே நான் என் அப்பாவை பாக்க முடியாதே.நான் இன்மே அப்பான்னு யாரை கூப்பிடுவேன் செந்தாமு.உங்க அப்பாவும்,எனனை விட்டுட்டு போயிட்டாரு.இனி நான் எதுக்கு இந்த உலகத்திலே வாழ்ந்து வரணும்ன்னு எனக்கு இருக்கு.எனக்கு இந்த உலகத்துலே வாழ்ந்து வரவே பிடிக்கலே” என்று சொல்லி செந்தாமரையைக் கட்டிக்கொண்டு அழுதாள்.”அம்மா, தாத்தா ரொம்ப வயசு ஆனதாலே இறந்து போயிட்டாட்ம்மா.இனிமே நீங்க சந்தோஷமா இருந்து வரணும்மா. நீங்க எனக்காகவும், கமலாவுக்காகவும்,பேத்தி செல்விக்காகவும்,ராணிக்காகவும்,அவ குழந்தைக்காகவும் வாழ்ந்து வரணும்.நாங்க எல்லாரும் உங்களே ஒரு கஷ்டமும் இல்லாம பாத்து வருவோம்மா” என்று சொல்லி அம்மாவை சாப்பிடவரச் சொன்னாள்.தேவி தன் அழுகையை நிறுத்தி விட்டு கமலா போட்ட சாப்பாட்டை சாப்பிட்டாள்.

‘பிரின்ஸிபால்’ மூர்த்தி அன்று ரிடையர் ஆனார்.அன்று சாயந்திரமே எல்லா பள்ளீக்கூட ‘ஸ்டாபும்’ ‘பிரின்ஸிபாலுக்கு’ ஒரு ‘பிரிவு உபசார விழா’ ஏற்பாடு பண்ண,£ அவருக்கு ஒரு சால்வை யைப் போர்த்தி அவருக்கு ‘பா¢சும்’ அளித்தார்கள்.பிறகு எல்லோரும்’ காட்ரிங்கில்’ ஏற்பாடு பண்ணீ இருந்த விருந்தில் கலந்துக் கொண்டு சாப்பீடார்கள்.‘பிரிவு உபசார விழா’ முடிந்ததும் செந்தாமரையும், ராஜேஸூம்,அவரை அவர் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விட்டு வரப் போனார்கள்.மூர்த்தி வீட்டுக்கு வந்ததும் அவர் செந்தாமரையையும், ராஜேஷையும் பார்த்து “செந்தாமரை, ராஜேஷ்,நான் இப்போ ‘ரிடையர்’ ஆயி¢ட்டேன்.எனக்கு இபோ நிறைய ‘டைம்’ கிடைக்கும்.நீங்க என் கிட்டே கொடு த்த பன்னாடாவது கஷ்டமான கணக்குகளை நான் நல்லா பா¢சீலனைப் பண்ணி, என் முன்னுரையை யும் எழுதி என் நண்பர் கிட்டே குடுத்து,ஒரு புஸ்தகமாக வெளியிட சொல்றேன்.அந்த புஸ்தகத்துக்கு என்ன விலை போட சொல்லமாம்”என்று கேட்டவுடன் உடனே செந்தாமரை” சார்,நான் சொல்றேன்னு நீங்க ரெண்டு பேரும் தயவு செஞ்சி என்னைத் தப்பாக எடுத்துக்காதீங்க.பணக்கார பிள்ளைங்க பன்னாடாவதிலே கணக்குக்கு ‘டியுஷன்’ வச்சு எல்லா கணக்களையும் கத்துக் கிடறாங்க.ஆனா இந்த ஏழைப் பிள்ளைங்கத் தான் ‘க்லாஸிலே கணக்கு வாத்தியார் வேகமாக கணக்குகளை எல்லாம் சொல் லிக் குடுத்துட்டு போறதாலே,அவங்க அந்த கணக்குகளை எப்படி போடுவதுன்னு தெரியாம முழிக்கி றாங்க.நாம போடற இந்த கணக்கு புஸ்தகம் அவங்களுக்கு தான் முக்கியமா உபயோகமா இருக்க ணும்.அதானாலே,நீங்க உங்க நண்பர் கிட்டே கொஞ்சம் தயவு செஞ்சி சொல்லி,இந்த கணக்கு புஸ் தகத்தை எவ்வளவு கம்மி விலைக்குப் போட சொல்ல முடியுமோ,அவ்வளவு கம்மி விலைக்குப் போடச் சொல்லுங்க” என்று சொன்னதும் மூர்த்தி மிகவும் சந்தோஷ பட்டு “செந்தாமரை,உன் நல்ல எண்ணம் எனக்கு நல்லாவே புரியுதும்மா.நான் நிச்சியமா அவர் கிட்டே சொல்லி இந்த புஸ்தகத்துக்கு அவர் ‘பிரிண்டிங்க்’ செலவு போக,கொஞ்சமா லாபம் வர மாதிரி விலையைப் போடுங்க’ ன்னு சொல்றேன். இப்ப உனக்கு சந்தோஷமா செந்தாமரை” என்று கேட்டார்.

ராஜேஸூம் உடனே செந்தாமரையைப் பார்த்து “செந்தாமரை உன்னுடையை நல்ல நோக்கத் தை நான் ரொம்ப பாராட்டறேன்.கடவுள் அனுக்கிஹத்தால் நமக்கு நல்ல படிப்பும்,பண வசதியும், அவர் கொடுத்து இருக்கார்.பாவம் ஏழைப் பிள்ளைகளுக்கு நாம போட்டு இருக்கிற இந்த புஸ்தகம் ரொம்ப உபயோகமா இருக்கும்.இந்தப் புஸ்தகம் வித்து நமக்கு அதிகப் பணமே வேண்டாம்.உன் நல்ல எண்ணத்தை நினைத்து எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு”என்று சந்தோஷத்துடன் சொன்னான். செந்தாமரை ‘பிரின்ஸிபால்’ காலைத் தொட்டு “சார்,அன்று நீங்களும்,சொர்க்க வாசியான சுந்தரம் பிள்ளையும் என் கணக்கு ஆற்றலைப் பாராட்டி என்னை உங்க செலவிலே பத்தாவது வரை படிக்க வைக்காம இருந்தீங்கன்னா,நான் இன்னைக்கு ஒரு சோ¢யிலே,யாரோ ஒரு தினக் கூலி வாங்கி வர வரைக் கல்யாணம் பண்ணிக் கிட்டு, நிறைய குழந்தைங்களை பெத்துக் கிட்டு வந்து,சாப்பாட் டுக்கே வழி இல்லாம கஷ்டபட்டுக் கிட்டு வந்து இருப்பேன்.என்னுடைய இந்த வாழ்க்கை நீங்க போட்ட பிச்சை தான் சார்”என்று கண்ணீர் மல்க சொன்னாள்.‘பிரின்ஸிபால்’ செந்தாமரையைப் பார்த்து” செ ந்தாமரை,நீ எனக்கு நன்றியே சொல்ல வேணாம்மா.உன் கணக்கு புத்தி கூர்மையை கண்டு பிடிச்சு, உன்னை என் கிட்டே கொண்டு வந்த என் ஆறுயிர் நண்பர் சுந்தரம் பிள்ளை,உன் கணக்கு அறிவா ற்றலை பத்தி சொல்லாம இருந்து இருந்தா,உன்னை பத்தி எனக்கு தெரிஞ்சே இருக்காது.நாம ரெண்டு பேரும் மேல் லோகத்தில் இருக்கும் அவருக்குத் தான் நம் நன்றியை சொல்லணும்.அவர் அன்னைக்குச் சொன்னதைப் போல நீயும் கணக்கிலே புலிம்மா.நிச்சியமா ஒரு கணக்கு மேதைம்மா நீ” என்று சொல்லி பாராட்டினார்.

பிறகு இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு ‘பிரின்சிபால்’ இடம் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.வரும் வழியில் ராஜேஷ் “செந்தாமரை,நீ ’பிரின்ஸிபால்’ கிட்ட சொன்னது போலவா உன் வாழ்க்கை இருந்தது” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.உடனே செந்தாமரை ராஜேஷைப் பார்த்து “ஆமாங்க.நான் இது வரைகும் அந்த உண்மையை உங்க கிட்டே சொல்லலேங்க.நான் ஒரு ‘கார்பரேஷன் எலிமென்டரி ‘பள்ளீக் கூடத்திலே எட்டாவது ‘பாஸ்’ பண்ணீ னேங்க.சின்ன வயசில் இருந்தே எனக்கு கணக்குன்னா உயிருங்க.நான் எட்டாவது ‘பாஸ்’ பண்ண போது,கணக்கிலே நூத்துக்கு நுறு மார்க் வாங்கினேங்க.எனக்கு கணக்கு சொல்லி கொடுத்த சுந்தரம் பிள்ளை என்னை கூப்பிட்டு ‘செந்தாமரை,நீ கணக்கிலே இவ்வளவு நல்ல மார்க் வாங்கி இருக்கியே.நீ ஒரு ஏழை பொண்ணுன்னு எனக்கு நல்லா தெரியும் நான் என் நண்பர் ஒருவர் கிட்டே சொல்லி உன்னை பத்தாவது வகுப்பிலே ஒரு ‘சீட்’ வாங்கி என் செலவலே மேலே படிக்க வைக்கிறேன்.நீ படிக் கிறாயா’ ன்னு கேட்டாருங்க.நான் உடனே அவர் கிட்டே சரின்னு சொன்னதும்,அவர் என்னை மூர்த்தி சார் கிட்டே அழைச்சுக் கிட்டு வந்து என்னைப் பத்தின எல்லா விவரமும் சொல்லி,என்னை இந்தப் பள்ளிக் கூடத்திலே ஒன்பதாவதிலே சேர்த்தாரு.அதுக்கு அப்புறமா என் வாழக்கையிலே நடந்ததை எல்லாம் உங்க கிட்டே நான் சொல்லி இருக்கேங்க.அந்த தெய்வம் சுந்தரம் பிள்ளை மட்டும் என் கணக்கு அறிவாற்றலை அப்போது கண்டு பிடிச்சு, என்னை மூர்த்தி சார் கிட்டே அழைச்சு வந்து சொல்லாம இருந்தா…..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது செந்தாமரைக்கு துக்கம் பொத்துக் கொண்டு வந்து,அவள் கண்கள் குளமாயிற்று. செந்தாமரை தன் ஹாண்ட் பாக்கில் இருந்து கை குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.உடனே ராஜேஷ் “அப்படியா செந்தாமரை,கேக்கவே ரொம்ப ஆச்சரியமா இருக்கு.அந்த சுந்தரம் பிள்ளை தான்,உன்னை நம்ப சார் கிட்டே கொண்டு வந்து சேர்த்தாரா” என்று ஆசாரியத்துடன் கேட்டான்.பிறகு இருவரும் அவர்கள் வீட்டிற்கு கிளம்பிப் போனார்கள்.

பள்ளிக் கூட மானேஜ்மெண்ட் பள்ளிக் கூட ‘காம்பவுண்டுக்கு’ உள்ளேயே ஒரு ரெண்டு ரூம், ‘ஹால்’,’கிச்சன்’ கொண்ட ஒரு வீட்டை கட்டி முடித்தர்கள்.தேர்வு செய்து மிஸ்டர் ஷர்மாவை ‘பிரின் ஸிபால்’ வேலக்கு அமர்த்தினார்கள்.அவர் தன் சீட்டில் வந்து உட்கார்ந்தவுடன்,எல்லா வாத்தியார் களையும்’ மீட்டிங்க் ரூமு’க்குக் கூப்பிட்டு,முதலில் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு,ஒவ்வொரு வாத்தியாரைப் பார்த்து ‘அவர்கள் பெயர்,அவர்கள் படிப்பு,அவர்கள் எடுத்து வரும் வகுப்பு,என்ன பாடம் எடுக்கறாங்க’ என்கிற விவரம் கேட்டவுடன் ஒவ்வொரு வாத்தியாராக எழுந்து நின்றுக் கொ ண்டு தங்கள் பெயர்,படித்த படிப்பு, பாடம் எடுத்து வரும் வகுப்பு,என்ன பாடம் என்கிற விவரத்தை சொல்லி வந்தார்கள்.செந்தாமரை முறை வந்ததும் அவள் தன் படிப்பை சொல்லி விட்டு,தான் பத்தா வது வகுப்புக்கு கணக்கு பாடம் எடுத்து வருவதாகச் சொல்லி விட்டு உட்கார்ந்துக் கொண்டாள். ராஜேஷ் தன் பெயரைச் சொல்லி விட்டு,தன் படிப்பையும் சொலி விட்டு,தான் பன்னாடவது வகுப் புக்கு கணக்கு எடுப்பதாக சொல்லி விட்டு உட்காராமல் “சார்,இந்த செந்தாமரை ஒரு கணக்கு மேதை. .இவங்க எட்டாவதிலே இருந்து பன்னாடாவது ‘க்லாஸ்’ வரைக்கும் கணக்கிலே நூத்துக்கு நூறு மார்க் தான் வாங்கி இருக்காங்க.பத்தாவதிலும்,பன்னாவதிலும் இவங்க சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணீ இருக்காங்க.அப்புறமா இவங்க மதுரை பல்கலைக் கழத்திலே சுந்தரம் நிறுவனம் கொடுத்த ‘ஸ்காலர்ஷிப்பிலே’ படிச்சு வந்து B.Sc. Maths, M.Sc. Maths ரெண்டிலேயும் சென்னை மாநிலத்தி லேயே முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணீ இருக்காங்க.இவங்க ‘பாஸ்’ பண்ணீன வுடன் சுந்தரம் நிறுவனம் இவங்களுக்கு அவங்க கம்பனியிலே ஒரு ‘ஆபீஸர்’ வேலையைக் கொடுத் தாங்களாம்.ஆனா செந்தாமரை அந்த ‘ஆபீஸர்’ வேலையை எடுத்துக்காம, தான் ஒரு கணக்கு வாத் தியாராத் தான் ஆகணும்ன்னு ஆசைபட்டு,இந்த பள்ளி கூடத்லே ஒரு கணக்கு வாத்தியாரா சேர்ந்து, நிறைய ஏழை குழந்தைகளுக்கும் இலவசமாக கணக்கு சொல்லிக் குடுத்து வராங்க.இந்த கணக்கு வாத்தியார் வேலை தான் அவங்க தன்னுடைய வாழக்கை லட்சியமாக் கருதி சந்தோஷப்பட்டு வாழ்ந்து வராங்க”என்று சொன்னவுடன் புதிய ‘பிரின்ஸிபால்’ ஷர்மா தன் சீட்டை விட்டு எழுந்து செந்தாமரை உட்கார்ந்து கொண்டு இருக்கும் இடத்திற்கு வந்து “அப்படியா செந்தாமரை, ராஜேஷ் சொன்னா மாதிரி நீங்க பத்தாவதிலும்,பன்னாடாவதலேயும், B.Sc. Maths, M.Sc. Maths லேயும் சென்னை மாநிலத்திலே முதல் மாணவியாயாவா பாஸ் பண்ணீ இருக் கீங்களா.’ஐ ஆம் ரியலி ப்ரௌட் ஆப் யூ செந்தாமரை” என்று சொல்லி விட்டு செந்தாமரையின் கைகளைப் பிடித்து குலுக்கிச் சொன்னார்.செந்தாமரை எழுந்து நின்றுக் கொண்டு ”ரொம்ப ‘தாங்க்ஸ்’ சார்” என்று ‘பிரின்ஸிபாலுக்கு சொன்னாள்

மீட்டிங்க் முடிந்து ஷர்மா தன் சீட்டுக்குப் போனதும் ‘மானேஜ்மெண்ட்டை’ சந்தித்து பள்ளீக் கூடத்தை எப்படி விரிவு ஆக்குது,எப்படி இன்னும் பல மாணவர்களை சேர்த்து பள்ளி கூட வருவாயை பெருக்குவந்து என்பத்தைப் பற்றி எல்லாம் பேசி வந்தார்.பள்ளீக் கூட நிர்வாகம் இந்த விரிவு பணியில் ஷர்மாவுக்கு முழு அதிகாரம் கொடுத்து, பள்ளீக்கூடத்தை விரிவு படுத்தி,இன்னும் பல மாணவர்களை சேர்க்க சொன்னார்கள்உடனே பள்ளீக் கூட நிர்வாகம் ஷர்மா கொடுத்த ‘ப்ளாணை’ ஏற்றுக் கொண்டு காலி இடங்களில் இன்னும் வகுப்புகள் கட்ட திட்டம் இட்டு அதற்கு ‘கான்ராக்டும்’ கொடுத்தார்கள். அந்த வருஷ இறுதியிலே அந்த வகுப்புகள் ரெடி ஆகி விட்டதால்,அடுத்த வருஷ ஆரம்பம் முதல் ஷர்மா இன்னும் நிறைய மாணவர்களியும் மாணவிகளையும் பள்ளீக் கூடத்திலே சேர்த்தார்.

பள்ளி கூடம் விரிவடைந்து நிறைய ‘ஸ்டூடண்ஸ்’ சேர்ந்த்தால் ஷர்மா அந்த வகுப்புகளுக்கு கணக்குப் பாடம் சொல்லி வர செந்தமரைக்கு ‘பிரமோஷன்’ கொடுத்து அவள் சம்பளத்தை இன்னும் நாலு ஆயிரம் உயர்த்தி,அவளுக்கு ரெண்டு பன்னாடாவது வகுப்புக்கு கணக்கு எடுக்க ‘ஆர்டர்’ போ ட்டார்.ஷர்மா செந்தாமரையை தன் ரூமுக்குக் கூப்பிட்டு ‘பிரமோஷன் ஆர்டரை’க் கொடுத்து தன் கையை குலுக்கி சந்தோஷத்தை தெரிவித்தார்.‘பிரின்ஸிபால்’ ஷர்மா கொடுத்த பிரமோஷன் ஆர்டரை கையில் வாங்கிக் கொண்டு செந்தமரை அவர் காலைத் தொட்டு தன் கண்ணில் ஒத்திக் கொண்டாள். உடனே செந்தாமரை கண்களில் கண்ணீர் மல்க ”சார்,நீங்க பண்ண இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்.உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்றே தெரியாமல் நான் தவிக்கிறேன் சார்” என்று சொன்னாள்.உடனே ஷர்மா “நோ,நோ,செந்தாமரை உன்னுடைய கணக்குத் திறமைக்கு இந்த ‘பிரமோஷன்’ உனக்கு இன்னும் பல வருஷங்களுக்கு முன்னமே கிடைச்சு இருக்கணும்.உன்னைப் பற்றி ராஜேஷ் சொன்னவுடன் என் மனசிலே எப்படியாவது ‘மானேஜ்மென்ட்’ கிட்டே சொல்லி உன்னை பன்னாடாவது வகுப்புக்கு கணக்கு எடுக்கச் சொல்லி உனக்கு ‘பிரமோஷன்’ தரணும்ன்னு நான் முடிவு பண்ணினேன்.நான் சொன்ன ‘ப்லாணை’ ‘மானேஜ்மென்ட்’ உடனே ஒத்துக் கொண்டு நிறைய வகுப்புகள் கட்டி முடிக்கவே, உனக்கு இந்த வருஷமே ‘பிரமோஷன்’ கொடுக்க முடிந்தது. இந்த ‘பிரமோஷன்’ உன்னுடைய கணக்குத் திறமைக்கு கிடைச்ச பா¢சு செந்தாமரை” என்று சொல்லி மறுபடியும் செந்தாமரை கையைப் பிடித்து குலுக்கினார்.கொஞ்ச நேரம் கழித்து ஷர்மா செந்தாமரை யைப் பார்த்து “செந்தாமரை,நான் கேக்கறேன்னு நீங்க தப்பா எடுத்துகாதே. உனக்கு இவ்வளவு வயசாகி இருக்கே.நீ இன்னும் கல்யாணம் பண்ணீக்கவில்லை போல தோணுதே.என்ன காரணம்ன்னு உனக்கு சொல்ல இஷ்டம்னா சொல்லு.இல்லே,இது உன்னுடைய ‘பர்ஸசனல் சமாசாரம்னா’ எனக்கு சொல்ல நீ சொல்ல வேணாம்.நான் உன்னை கட்டாயப் படுத்தவில்லே” என்று கேட்டு விட்டு செந்தாமரையையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

செந்தாமரை கொஞ்சம் நேரம் தயங்கி விட்டு பிறகு நிதானமாக “சார்,நான் ஒரு குடிசையிலே எங்க அப்பா அம்மாவுக்கு ரெண்டாவ்து பெண்ணாப் பிறந்தேன். என் அப்பாவும் என் அம்மாவும் ஒரு ‘பில்டிங்க் கன்ட்ராக்டரிடம்’ தினக் கூலிக்கு வேலை செஞ்சி வந்தாங்க.என் அக்காவுக்கு கல்யாணம் ஆகி அவங்களுக்கு ரெண்டு பெண் குழந்தைங்க பிறந்து இருக்காங்க.என் அக்கா புருஷன் என் அக்காவையும் ரெண்டு பெண் குழந்தைங்களையும் ‘அம்போ’ ன்னு விட்டு விட்டு வேறே ஒரு பெண் ணோடு ஓடிப் போயிடாரு.நான் மதுரையிலெ என் படிப்பை முடிச்சு கிட்டு சென்னைக்கு வந்து இந்த பள்ளி கூடத்திலே,மூர்த்தி ‘பிரின்ஸிபால்’ தயவாலே ஒரு கணக்கு வாத்தியார் வேலைக்கு சேந்தேன். அப்போ எங்க குடும்பம் ரொம்ப ஏழ்மை நிலையில் இருந்ததுங்க.நான் எப்படியாவது ‘நம் குடும்ப ஏழ் மை நிலையை போக்கி அவங்களை சந்தோஷமாக வச்சு கிட்டு வரணும்’ன்னு தீர்மானம் பண்ணீ னேன்.நான் கல்யாணம் பண்ணிக் கொண்டால் எனக்கு வரும் புருஷன் என் அப்பா, அம்மா, என் அக்கா,அவங்க ரெண்டு பெண் குழந்தைகளை என் கூட வச்சு கிட்டு வர நிச்சியமா ஒத்துக்க மாட்டார் ன்னு எனக்கு நல்லாத் தெரியும்.அதனால் நான் இந்த ஜென்மத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது என்று முடிவு எடுத்து என் அம்மா,என் அப்பா, என் அக்கா,அவங்க ரெண்டு பெண் குழந்தை களையும் என்னோடு வச்சுக் கிட்டு அவங்களை சந்தேஷமா இருந்து வர செய்றேங்க. என் அக்கா முதல் பெண்ணுக்கு அவ இஷ்டப் பட்ட ஒரு கிருஸ்தவப் பையணைக் கல்யாணம் பண்ணீ வச்சேன். அந்த கல்யாணத்தைக் கண் குளிரப் பார்த்து விட்டு என் அப்பா சமீபத்தில் காலமானார்.என் அக்கா ரெண்டாவது பெண் ரொம்ப ஆசை பட்டான்னு,அவளுக்கு ‘டொனேஷன்’ கொடுத்து ஒரு மெடிக்கல் காலேஜிலே சேர்த்து படிக்க வச்சுக் கிட்டு வந்து கிட்டு இருக்கேன்.நான் கல்யாணம் பண்ணீக் கிட்டு வேறு ஒருத்தனோடு போய் விட்டு இருந்தா என்னால் இத்தனை நல்ல காரியங்களை செஞ்சே இருக்க முடியாது.இந்த ஜென்மத்தில் எனக்கு இந்த சந்தோஷம் போதும் சார்.எனக்கு கல்யாண சந்தோஷம் வேண்டாம்ன்னு நினைச்சு நான் கல்யாணமே செஞ்சுக்கலே சார்” என்று தன் கதை பூராவையும் ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னாள்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *