சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 8,352 
 

அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 | அத்தியாயம்-23

கமலாவும், செந்தாமரையும் செல்வி சந்தோஷமாக டாக்டர் வேலைக்கு போய் வருவதை நினை த்து சந்தோஷப்பட்டார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை “செல்வி,நீ இந்த மாதிரி பல நோயாளிகளை ‘எக்ஸாமின்’ பண்ணி வந்து ஒரு ‘எக்ஸ்பீரியன்ஸ்ட்’ டாக்டராக ஆகி வரணும்.அப்படி நீ ஒரு கை தேர்ந்த டாக்டரா ஆனா,எனக்கோ,அக்காவுகோ ஏதாச்சும் உடம்பு வந்தா நாங்க வேறே ஒரு டாக்டரைத் தேடி போக வேணாம்.நீயே எங்களுக்கு வைத்தியம் பண்ணீ விடுவே”என்று சொல்லி முடிக்கவில்லை செல்வி உடனே செந்தாமரையின் வாயை தன் கையால் மூடி “அப்படி எல்லாம் சொல்லாதீங்க சித்தி.உங்களுக்கும்,அம்மாவுக்கும் ஒரு உடம்பும் கூட வரக்கூடாது.ரெண்டு பேரும் இப்படியே ‘ஹெல்தியா’ என்னோடவே ரொம்ப வருஷம் இருந்து வரணும்” என்று சொன்னாள்.

ரெண்டு வருஷம் ஓடி விட்டது.செல்வி வீட்டில் இல்லாத போது கமலா ஒரு நாள் ”செந்தாமு, செல்விக்கு வயசு ஏறி கிட்டே போவுதே.அவளுக்கு காலா காலத்திலே ஒரு கல்லாணத்தைக் கட்டி வச் சுட்டா,நம்ப பொறுப்பு தீரும் இல்லையா சொல்லு.அவ வந்து நம்ம கிட்டே ‘நீங்க எனக்கு கல்லாணத் தை பண்ணி வையுங்கன்னு கேக்க மாட்டாளே.நாம தானே அவ கல்யாணத்தை செஞ்சு முடிக்கணும்” என்று மெல்ல தன் மனதில் தோன்றிய ஆசையைச் சொன்னாள்.கமலாவின் ஆசையைக் கேட்டதும் செந்தாமரைக்கு ‘தன் அக்கா செல்வி கல்யாணத்தைப் பண்ணி வைக்க ரொம்ப ஆசைபடறாங்க’ என்பதை புரிந்துக் கொண்டு,உடனே “ஆமாம்கா.நீ சொல்றது ரொம்ப சா¢.நானும் இதைப் பத்தி யோஜ னை பண்ணேன்.செல்வி வேலையில் இருந்து வீட்டுக்கு வரட்டும்.அவ சாப்பிட்டு விட்டு சந்தோஷமா இருக்கும் போது நான் இந்த பேச்சை ஆரம்பிக்கிறேன்.நீயும் அந்த பேச்லே கலந்து கிட்டு,அவ கல்யாணத்தைப் பத்தி அவ கீட்டே கேளக்கா” என்று சொன்னாள்.அன்று இரவே செல்வி வேலையை விட்டு வீட்டுக்கு வந்ததும் அவள் சாப்பிட்டு விட்டு ‘·ப்¡£யாக’ இருக்கும் போது செந்தாமரை செல்வியை பார்த்து “செல்வி,நாங்க பெரியவங்க.உன்னை வளத்து படிக்க வச்சுட்டோம்.இப்போ உனக்கு ஒரு நல்ல டாக்டர் வேலையும் கிடைச்சு இருக்கு.எனக்கும் உன் அம்மாவுக்கும் இன்னும் ஒரு பொறுப்பு பாக்கி இருக்கு.அது தான் உன்னுடைய கல்யாணம்.நாங்க உன் கல்யாணத்துக்கு ஒரு நல்ல பையனா பார்க்கட்டுமா.இல்லே,நீ யாரையாவது காதலிக்கிறாயா சொல்லு.அப்படி நீ காதலிச்சா,எங்கக் கிட்டே அவரைப் பத்தி சொல்லு.நாங்க அந்தப் பையனயே உனக்கு கல்யாணம் பண்ணி வக்கிறோம்” என்று சொல்லி செல்வி கல்யாண விஷயத்தை ஆரம்பித்தாள்.செந்தாமரை சொல்லி முடிச்சதும் கமலா “ஆமாம் செல்வி,நானும் இதை உன் கிட்டே இத்தனை நாளா சொல்லணும் தான் இருந்தேன்” என்று சொல்லி அவள் முகத்தை ஆவலோடு பார்த்து கொண்டு இருந்தாள்.

செல்வி நிதானமாக “அம்மா,சித்தி, நானே இதை உங்க கிட்டே இத்தனை நாளாச் சொல்லணு ம்னு தான் இருந்தேன்.இந்த ரெண்டு வருஷமா நான் நோயாளிங்க படும் வேதனையைப் பாத்து வந்து கிட்டு இருக்கேன்.இந்த நோயாளிகளுக்கு நாம ஒரு நல்ல டாக்டராக இருந்து வந்து பணம் காசு வாங் காம,ஏழை ஜனங்களுக்கு இலவசமாக வைத்தியம் பண்ணீ வரணும்னு ரொம்ப ஆசைப்டறேன்.நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா,எனக்கு வரும் கணவர் என்னுடைய இந்த ஆசைக்கு ஒத்துக் கொள்ளு வாரோ மாட்டாரோ.அவர் ஒத்துக் கொண்டா சா¢.ஒரு வேளை அவர் ஒத்துக் கொள்ளாவிட்டா என் ஆசை ஒரு நிறைவேறாத ஆசையாக ஆகி விடுமோ என்கிற பயம் எனக்கு இருக்கு.சித்தி நீங்க எப்படி நிறையப் படிச்சு விட்டு கல்யாணமே பண்ணிக்காம நிறைய ஏழை குழந்தைகளுக்கு கணக்கு சொல்லி குடுத்து கிட்டு வறீங்களோ,அதே மாதிரி எனக்கும் என் டாக்டர் படிப்பு நிறைய ஏழை ஜனங்களுக்கு உபயோகப்படணும்ன்னு ஆசையா இருக்கு.நான் ‘மதர் தெரஸா’ மாதிரி வாழ்ந்து வரணும்ன்னு ரொம்ப ஆசைப் படறேன்.என் சீனியர் டாக்டர் கூட கல்யாணம் பண்ணிக்காம ஒரு நாள்ளே இருபது மணி நேரம் ‘நர்சிங்க் ஹோமிலே’ இருந்துக் கொண்டு வர நோயாளிகளைக் கவனிச்சு வந்து,வைத்தியம் பண்ணி வறாரு.அதனால்லே நானும் அவரைப் போல கல்யாணமே செஞ்சுக்கப் போவதே இல்லே” என்று சொன்னதும் கமலாவுக்கும் செந்தாமரைக்கும் தூக்கி வாரிப் போட்டது.

கொஞ்ச நேரம் ஆனதும் கமலா “என்ன செல்வி, நீ உனக்கு கல்லாணமே வேணாங்கறே.ஒரு பொண்ணு கல்லாணம் பண்ணிக்காம இருக்க முடியுமாம்மா.எங்க காலத்துக்கு அப்புறமா உன் வாழ்க் கையிலே உனக்கு ஒரு ஆண் துணை வேணாமா சொல்லு செல்வி.உன எண்ணத்தை மாத்தி கிட்டு,நீ சீக்கிரமா ஒரு கல்லாணத்தைப் பண்ணிக்கோம்மா.எனக்கும் சித்திக்கும்,நீ ராணீ மாதிரி ஒரு பேரனை யோ,பேத்தியையோ,பெத்துக்குடுத்து,எங்களுக்கு சந்தோஷத்தே குடுக்கணும்.வீணா பிடிவாதம் பிடிக் காதேம்” என்று சொல்லி செல்வியின் கைகளைப் பிடித்து கெஞ்சினாள்.கமலா சொன்னதுக்கு ‘செல்வி என்ன சொல்லப் போறா’ என்று அவள் வாயையே கவனித்துக் கொண்டு இருந்தாள் செந்தாமரை. செல்வி தீர்மானமா”அம்மா நான் சொன்னது சொன்னதுதாம்மா.நான் கல்யாணம் கட்டி கிட்டு, குழந் தைங்களே பெத்து கிட்டு, எவரோ ஒருத்தரொடு வாழ்ந்து வருவது எனக்கு பிடிக்கலேம்மா.என் வைத் திய படிப்பை,நான் நிறைய ஏழை மக்களுக்கு வைத்தியம் பாத்து வந்து,அவங்க முகத்திலே வரும் சந்தோஷத்தை தாம்மா பாக்க விரும்புகிறேன்.இனிமே நீங்க என்னைக் ‘கல்யாணம் பண்ணீக்கோ’, ’கல்யாணம் பண்ணிகோ’ன்னு சொல்லி என்னை தயவு செஞ்சி கஷ்டபடுத்தாதேம்மா” என்று தீர்மான மாக சொல்லி விட்டு தன் ரூமுக்குள் போய் விட்டாள்.செந்தாமரை அக்கா பின்னாடியே போய் மெதுவா”அக்கா நான் சொல்றேன்னு கோவப்படாதீங்க.ஒரு நாள் அவ தன் மனசை மாத்தி கிட்டு நம்மை பாத்து ‘நீங்க எனக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கேட்டா,நாம அவளுக்கு கல்யா ணம் பண்ணீ வைக்கலாம்.அது வரை நீங்க பொறுமையா இருந்து வாங்க”என்று சொல்லி சமாதானப் படுத்தினாள்.

அடுத்த நாள் குளித்து விட்டு ‘டிரஸ்’ பண்ணி கொண்டு ‘நர்சிங்க் ஹோம்’ போக ரெடி ஆனாள். அம்மா கொடுத்த நாஷ்டாவை சாப்பிட்டு விட்டு அம்மாவிடமும் சித்தி இடமும் சொல்லிக் கொண்டு ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’க் கிளம்பிப் போனாள் செல்வி.செல்வி கிளம்பிப் போனதும் கமலா செந்தாமரை யைப் பார்த்து ”செந்தாமு,நான் படிக்காதவ தான்.ஆனா நீ செல்வி போல ரொம்ப படிப்பு படிச்சு இருக் கே.நீ மெல்ல அவ கிட்டே உங்க இங்கிலிஷ் பாஷையிலே கொஞ்சம் சொல்லி புரிய வச்சு,அவளை சீக்கிரமா ஒரு கல்லாணத்தை கட்டிக்க சொல்லு.அப்போ தான் எனக்கு சந்தோஷமா இருக்கும்” என்று சொல்லி செந்தாமரையின் கைகளை பிடித்து கெஞ்சினாள்.அக்கா நிம்மதிக்காக “சா¢க்கா.நீ நிம்மதியா இருந்து வா.நான் நிச்சியமா அவகிட்டே சொல்லி அவளை கல்யாணம் பண்ணிக்க சொல் றேன்” என்று சொல்லி அக்காவை சமாதான படுத்திவிட்டு நாஷ்டாவை சாப்பிட்டாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.செல்விஅன்றைக்கும் ‘நர்ஸிங்க்’ ஹோமுக்கு போய் இருந்தாள். சாயங்க்காலம் மணி ஐந்தடித்தவுடன்,கமலா செந்தாமரையைப் பார்த்து “செந்தாமு,என் மனசே சா¢ இல் லை.இந்த செல்வி எத்தனை தடவை சொன்னாலும் பிடிவாதமா கல்யாணமே வேணாம்னு சொல்லி வறா.நீயும் அவ கிடே சொல்லி அவ மனசை மாத்த மாட்டேங்கிறே.வா நாம ரெண்டு பேரும் பக்கத்தி லே இருக்கிற பெருமாள் கோவிலுக்கு போய் பெருமாளை பாத்து ‘பெருமாளே,நீ தான் செல்வி மனசிலே பூந்து,அவ மனசை மாத்தி,அவளை கல்லாணம் பண்ணிக்க வைக்கணும்ன்னு’ சொல்லி வேண்டிக்கிட்டு வரலாம்.ஒரு வேளை அந்த பெருமாள் அவ மனசை மாத்தி அவளைக் கல்லாணம் பண்ணி வக்கிறாறான்னு பாக்கலாம்”என்று சொன்னதும் செந்தாமரை அக்காவை அழைத்துக் கொ ண்டு,ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்குக் கிளம்பிப் போ னாள்.கோவிலுக்குப் போனதும் ரெண்டு பேரும் பெருமாளை தா¢சனம் பண்னினார்கள்.கமலா அந்தப் பெருமாளிடம் தன் மனதில் இருக்கும் ஆசையை வேண்டிக் கொண்டாள்.பிறகு இருவரும் அந்த பெருமாள் கோவிலின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வர ஆரம்பித்தார்கள்.அந்த கோவில் மடப் பள்ளீ யில் ஒரு பெரியவர் தாடி மீசை யுடன்,அன்று பெருமாளுக்கு பிரசாதம் பண்ணீன பெரிய பாத்திரங் களை எல்லாம் கழுவிக் கொண்டு இருந்தார்.அந்தப் பெரியவரைப் பார்த்ததும் செந்தாமரைக்கு அவர் முகத்தை எங்கோ பார்த்த மாதிரி இருக்கவே உடனே அக்காவை பார்த்து “அக்கா,உங்களுக்கு இவரை தெரிதாப் பாருங்க” என்று கேட்டாள்.கமலா தன் கண்களை இடுக்கி கொண்டு செந்தாமரை சொன்ன நபரைக் கவனித்தாள்.”செந்தாமு,எனக்கு இப்போ துர பார்வை அத்தனை தெளிவா தெரிறதில்லே. எனக்கு அவர் யாருன்னு தெரியலே.நீயே பாரு”ன்று சொன்னாள்.“அக்கா,நாம அவசர படக்கூடாது நீ இங்கேயே இந்த படிக்கட்டிலெ உக்காந்துகிட்டு இரு.நான் போய் அந்தப் பெரியவரை பாத்து கேட்டு கிட்டு வறேன்” என்று அக்காவை அருகில் இருந்த படிக்கட்டில் உட்கார சொல்லி விட்டு அந்தப் பெரியவரை நோக்கிப் போனாள்.

அந்தப் பெரியவரைப் பார்க்கப் போகும் போது செந்தாமரை ‘நாம அவரை பாத்து நான் தான் செந்தாமரை.உங்களுக்கு என்னைத் தெரிதா’ன்னு கேப்போம்.அந்த பெரியவர் உடனே நம்மைப் பாத்து ‘செந்தாமு, நீயான்னு கேட்டா,நம்மை அவருக்கு தெரிஞ்சு இருக்குது’ன்னு நினைச்சி நாம மேலே பேசலாம்,இல்லை எந்த செந்தாமரைன்னு அவர் கேட்டா,நாம பேசாம திரும்பி வந்திடலாம்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டே போனாள்.அந்தப் பெரியவர் அருகில் போனதும் செந்தா மரை அந்த பெரியவா¢டம் “பெரியவரே,உங்களுக்கு என்னைத் தெரிதா” என்று சொல்லிக் கேட்டாள் அந்தப் பெரியவர் தான் தேய்க்கும் பாத்திரத்தை கீழே வைத்து விட்டு,தன் கண்களை இடுக்கிக் கொண்டு “எனக்கு கண் பார்வை அத்தனை சா¢ இல்லேம்மா.ஆனா உன் குரலை எப்பவோ கேட்டா மாதிரி தான் இருக்கு.யாரும்மா நீ” என்று கேட்டார்.அந்த பெரியவர் கேட்டதும் செந்தாமரைக்கு அவர் குரல் ரொம்ப பழக்கப் பட்ட குரல் போலத் தோன்றவே,இவர் நம்ம மாமாவாத் தான் இருக்கும் என்று நினைத்து உடனே அவள் “என்னைத் தெரியுதா மாமா.நான் தான் செந்தமரை.உங்க சம்சாரம் கமலா கூட பிறந்த தங்கை”என்று சொன்னதும் அவர் உடனே “செந்தாமு,நீயா செந்தாமு.என்னை எப்படி உங்க மாமான்னு கண்டு பிடிச்சே” என்று ஆச்சா¢யத்துடன் கேட்டார்.உடனே செந்தாமரை “மாமா, தூரத்திலே இருந்து உங்களே பாத்தப்பா எனக்கு உங்களை நல்லா அடையாளம் தெரிஞ்ச்சி.எதுக்கும் நாம அவசரப் படக் கூடாதுன்னு நினைச்சு நான் கேக்கலே.உங்க குரலைக் கேட்டவுடன் எனக்கு புரி ஞ்சுப் போச்சு.கொஞ்சம் இருங்க.அக்கா என் கூட கோவிலுக்கு வந்து இருக்கா.நான் அக்காவை அழைச்சுக் கிட்டு வறேன்”என்று சொல்லி விட்டு ஓடி அக்காவிடம் வந்தாள்.

அக்காவிடம் வந்ததும் செந்தாமரை “அக்கா,நான் சந்தேகப்பட்டது ரொம்ப சா¢யா போச்சு. அந்தப் பெரியவர் மாமா தான்.நான் அவர் கிட்டே பேசி அவரைக் கேட்டபோது அவர் ஒத்துக் கிட்டார். வா அக்கா, நாம அவரைப் போய் பாக்கலாம்”என்று சொல்லி கமலாவின் கைகளைப் பிடித்து எழுப்பி னாள்.“என்ன சொல்றே செந்தாமு.அவரு இந்தக் கோவிலிலே என்ன செய்யறார்.என்னையும் ரெண்டு பொட்டைப் பிள்ளைங்களையும் ‘அம்போ’ன்னு தவிக்க விட்டு விட்டு எவளோ ஒரு சிறுக்கி கூட ஓடிப் போனவர் தானே அவரு.இந்தக் கோவிலிலே அவருக்கு என்ன வேலை” என்று கோவத்துடன் சொல் லி எழுந்து வர மறுத்தாள்.ஆனால் செந்தாமரை “வாயேன்கா.நாம அவரை பார்த்து பேசலாம்” என்று சொல்லி அக்கவின் கைகளை பிடித்து இழுத்தாள்.தன் மாஜி புருஷனை திட்டிக் கொண்டே மெல்ல எழுந்து செந்தாமரை கூட வேண்டா வெறுப்புடன் போனாள் கமலா.

ரெண்டு பேரும் அந்த மடப் பள்ளிக்குப் வந்தார்கள்.கமலாவைக் கிட்டத்திலே பார்த்த அந்தப் பெரியவர் அது கோவில் மடப் பள்ளி என்று கூடப் பர்க்காமல் “கமலா,என்னை மன்னிச்சிடும்மா. உன்னே மாதிரி ஒரு நல்ல சம்சாரத்தையும்,ரெண்டு பொட்டை பிள்ளைங்களையும் ‘அம்போ’ ன்னு தவிக்க வுட்டுட்டு,அந்த சிறுக்கியோடு ஓடிப் போன எனக்கு இந்த உலக நாத பெருமாள் நல்ல தண் டணையைக் குடுத்திட்டாரு.ரெண்டு வருஷம் தான் அந்த சிறுக்கி என்னோடு வாழ்ந்து வந்தா. அப்புறமா ஒரு நாள் திடீர்ன்னு அவ என்னை வுட்டுட்டு எங்க மேஸ்திரியோட ஓடிப் போயிட்டா. அதுக்கு அப்புறமா நான் வேலை வெட்டி இல்லாம பல நாள் பட்டினியா இருந்து வந்தேன்.மறுபடியும் உன் கிட்டே வந்து மன்னிப்புக் கேட்டு உன் கூட சேந்து வாழலாம்னு ரொம்ப ஆசைப் பட்டேன்.ஆனா உன்னையும்,ரெண்டு பொட்டைப் பிள்ளைங்களையும் தவிக்க வுட்டுட்டு ஓடிப் போன நான் மறு படியும் திரும்பி வந்து இருக்கேன் என்கீற விஷயம் தெரிஞ்சா காளி மேஸ்திரி என்னை அரிவாளாலே வெட்டி விடுவாருன்னு பயமும்,அத்தே தேவி என்னை துடைப்பக் கட்டையாலே பின்னிடுவாங்களோ என்கிற பயமும் ஒன்னா சேந்து உன் கிட்டே என்னை வர முடியாம தடுத்திச்சி.நான் பல நாள் இந்த கோவில்லே குடுத்த பிரசாதத்தை தின்னுப்புட்டு, அப்புறமா பட்டினியா இந்த கோவில் வாசலிலேயே தூங்கி கிட்டு வந்து இருந்தேன்.என்னை பல நாள் இப்படி கோவில் வாசலிலே தூங்கி வருவதைப் பாத்த இந்த கோவில் பட்டர் என்னைக் கூப்பிட்டு ‘ஏம்பா,இப்படி வெட்டிக்குத் தூங்கிண்டு வறே. கோவில் மடப் பள்ளியிலே பத்து பாத்திரங்களை எல்லாம் தேச்சுக் கொடேன்.மடப் பள்ளியிலெ அவா மீந்த பிரசாதத்தை உனக்குத் தருவா.அதை சாப்பிட்டு வாயேன்’ன்னு சொன்னவுடன் நான் என் சோகக் கதையை அவர் கிட்டே சொல்லி அழுதுட்டு,அன்னையிலே இருந்து,இங்கே மடப் பள்ளிலே பத்து பாத்திரங்களை எல்லாம் தேச்சுக் கிட்டு வறேன்.என்னை மன்னிச்சிடு கமலா”என்று சொல்லி விட்டு கமலாவின் கால்களைத் தொடப் போனான் சேகர்.தன் கால்களை கொஞ்சம் பின்னுக்கு இழுத் துக் கொண்டாள் கமலா.சேகர் அழுதுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான்.

கமலா ஒன்னும் சொல்லாமல் தன் கால்களை பின்னுக்கு இழுத்து கொண்டதைப் பார்த்த செந்தாமரை உடனே “அழாதீங்க மாமா.நீங்க இத்தனை கஷ்டப் பட்டீங்களா” என்று சொல்லி கவலைப் பட்டதை பார்த்த கமலாவுக்கு என்னவோ போல இருந்தது.செந்தாமரை தன்னையும்,ரெண்டு பொண் ணுங்களையும்,வுட்டுட்டு எவளோ ஒரு சிறுக்கி கூட ஓடிப் போன தன் மாஜி புருஷன் மேலே இத்த னை கரிசனமாக பேசினது துளிக் கூட பிடிக்கவில்லை.தன் மனசில் சேகரைத் திட்டிக் கொண்டு இருந்தாள் கமலா.கமலா ஒன்னும் சொல்லாம இருக்கிறதை பார்த்த சேகர் “கமலா,நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.இனிமே உன்னை வுட்டுட்டு நான் யார் கூடவேயும் போவமாட்டேம்மா.என் னை தயவு செஞ்சி மன்னிச்சிடும்மா”என்று சொல்லி மறுபடியும் அவள் காலைத் தொட குனிந்தார்.

கமலா கோவமாக “இந்த வயசுக்கு அப்புறமா நீ ஓடிப் போக உனக்கு எந்த சிறுக்கியும் கிடைக்க மாட்டாய்யா.பெரிசா என்னமோ பேசறயேய்யா.நான் உனக்கு என்ன குறை வச்சேன்யா.குத்து கல்லு மாதிரி நான் இருக்கு போது,எவ கூடவோ ஓடிப் போக உனக்கு எப்படியா மனசு வந்திச்சி.எப்படியா உனக்கு என்னையும்,ரெண்டு பொட்டை பிள்ளைங்களையும்,வுட்டுட்டு எவளோடவோ ஓடிப் போக மனசு வந்திச்சி.உனக்கு வெக்ககமா இல்லே.நீ செஞ்ச மாதிரி,நான் உன்னையும்,நம்ம ரெண்டு பொட் டை பிள்ளைங்களையும் ‘அம்போ’ன்னு தவிக்க வுட்டுட்டு,எவன் கூடவோ ஓடிப் போய் இருந்தேனா உனக்கு எப்படி இருந்து இருக்கும்யா.உனக்கு புத்தி வேணாய்யா.அவங்க சாப்பாட்டுக்கு எத்தினி கஷ்டப்படுவாங்கன்னு ஒரு நிமிஷமாவது யோஜனை பண்ணி பாத்தியாயா.அவ்வளவு கல்லு மனசா ய்யா உனக்கு.என் அப்பாவும்,அம்மாவும் என் கூட இல்லாம இருந்து இருந்தா,நான் என்னைக்கோ ரெண்டு பொட்டை பிள்ளைங்களுக்கும் கொஞ்சம் விஷத்தை வாங்கிக் குடுத்து விட்டு,நானும் அந்த விஷத்தை குடிச்சிட்டு எல்லாரும் பிணமாக் கிடந்து இருப்போம்.என் அம்மாவும் அப்பாவும் என்னை அப்படி செய்ய விடாம தடுத்து அவங்க சாப்பிட்டு வந்த அரை வயித்து சோத்தை எனக்கும்,ரெண்டு பொட்டப் பிள்ளைங்களுக்கும்,போட்டு வந்து காப்பாத்தி வந்தாங்கய்யா”என்று அழுதுக் கொண்டே கத்தினாள்.

உடனே சேகர் உடனே ”தப்பு தாம்மா.தப்பு தான்.நான் செஞ்சது மன்னிக்க முடியாத தப்பு தான் கமலா.என்னை மன்னிச்சிடு கமலா”என்று சொல்லி தன் கன்னங்களில் ‘பளார்’ ‘பளார்’ என்று அறைந் துக் கொண்டான்.செந்தமரைக்கு மாமா சேகர் அப்படி தன் கன்னங்களில் ‘பளார்’ ‘பளார்’ என்று அறை ந்துக் கொண்டதைப் பார்த்ததும் ரொம்ப பா¢தாபமாக இருத்ந்து.கொஞ்ச நேரம் ஆனதும் தான் ‘இந்த நிலைமையை நாம சா¢ செய்யணும்’ என்று நினைத்து செந்தாமரை ”மாமா,இனிமே நீங்க இங்கே பத்து பாத்திரம் தேச்சுக்கிட்டு இருக்க வேணாம்.எங்க கூட வீட்டுக்கு வாங்க.அங்கே நீங்க சந்தோஷமா இருந்து வாங்க.உங்களுக்கு தெரியுமா ராணீ இப்ப கல்யாணம் கட்டி கிட்டு ஒரு குழந்தையைப் பெத் துக்கிட்டு,அவ புருஷனோடு சந்தோஷமா இருந்து வறா.செல்வி டாக்டர் பா¢¨க்ஷயை படிச்சு முடிச்சு, ‘பஸ்ட்’ ‘க்ளாசீலே’ ‘பாஸ்’ பண்ணீ விட்டு ஒரு பெரிய ‘நர்ஸிங்க் ஹோமிலே’ டாக்டரா வேலை செஞ்சி வறா” என்று சொல்லி முடிக்கவில்லை கமலா கோவத்துடன்”அந்த மனுஷன் கிட்டே ஏன் செந்தாமு,நீ இதை எல்லாம் விவரமா சொல்லி கிட்டு இருக்கே.அவரு தான் எங்களை எல்லாம் வுட்டுட்டு ஓடிப் போனவராச்சே.அவருக்கு நாங்க எப்படி இருந்தா என்ன” என்று மறுபடியும் கத்தினாள்.

சேகர் உடனே சந்தோஷத்துடன் “என்ன செந்தாமு,என் ராணீக்கு கல்லாணம் ஆயி,ஒரு குழந் தையும் இருக்கா.என் சின்னப் பொண்ணு இப்போ டாக்டர் படிப்பு படிச்சு ஒரு டாக்டரா இருக்காளா. என்னால் நம்ப முடியலே.நீ உண்மையா சொல்றே,இல்லே என்னை வெறுமனே சந்தோஷபடுத்த நினைச்சு நீ சொல்றயா”என்று ஆச்சா¢யத்துடன் கேட்டார்.“நீங்க எங்க கூட வந்து பாருங்க மாமா.நான் உங்களுக்கு உண்மையை தான் சொல்றேன்” என்று சொன்னதும் சேகர் ”என்னால் நம்பவே முடியலெ செந்தாமு”என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.“மாமா,நீங்க அக்கா கூடப் பேசி கிட்டு இருங்க.நான் பட்டர் ஐயாவைப் பாத்து ‘உங்க உறவுக்காரங்க நாங்க.உங்களை கோவிலை விட்டு எங்க வீட்டுக்கு அழைச்சுக் கிட்டு போவலாமா’ ன்னு கேட்டு பாக்கறேன்.அவர் உங்களை அழைச்சு கிட்டு போகலாம்ன்னு சொல்லி ‘பர்மிஷன்’ குடுத்தா,நாம எல்லாம் ஒன்னா வீட்டுக்குப் போகலாம்”என்று சொல்லி விட்டு செந்தாமரை மாமா பதிலுக்குக் கூட காத்து இல்லாமல் பட்டரைப் பார்க்கப் போனாள்.கமலா சேகருடன் பேசாமல் சும்மா இருந்து வந்தாள். சேகர் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இருந்தான்.

பட்டரைப் பார்த்து செந்தாமரை “சாமி,என் பேர் செந்தாமரை.நான் நுங்கம்பாக்கம் ‘ஹை ஸ்கூ லில்’ கணக்கு வாத்தியாரா வேலை செஞ்சி வறேன்.உங்க மடப் பள்ளியிலே வேலை செஞ்சி வறாரே ஒரு பெரியவர்,அவர் என் அக்கா புருஷன் தாங்க.அவர் பல வருஷத்துக்கு முன்னாடி என் அக்கா வையும் அவங்க ரெண்டு பெண் பிள்ளைகளையும் விட்டு விட்டு ஓடிப் போய் விட்டாரு.உங்களுக்கு ஆஷேபனை இல்லேன்னா,நான் அவரை என் கூட எங்க வீட்டுக்கு அழைச்சுக் கிட்டுப் போகலாமா” என்று கேட்டார்.அந்த பட்டர் செந்தாமரையை ஏற இறங்க பர்த்தார்.சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பட்டர் “நீ சொல்றதை எல்லாம் நம்பி நான் அவரை உங்க கூட அனுப்ப முடியாதும்மா.நான் அவரை தீர விசாரிக்க வேணும்.அவரும் உங்களை அவர் உறவுக்காரங்கன்னு சொல்லி உங்க கூட உங்க வீட் டுக்கு வறேன்னு சம்மதம் சொன்னா தான் அவரை உங்க கூட நான் அனுப்ப முடியும்” என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த ஒரு பட்டரை கூப்பிட்டு “டேய் நாராயணா,நான் சொன்னேன்னு சொல்லி மடப் பள்ளியிலே பத்து பாத்திரம் தேய்க்ககிற தாடி வச்சுண்டு ஒரு பெரியவர் இருப்பார். அவரை என் கிட்டே வரச் சொல்லு”என்று சொல்லி அனுப்பினார்.உடனே நாராயண பட்டர் போய் சேகரைப் பார்த் து “உங்களை பெரிய அண்ணா உடனே கூப்பிடறார்”என்று சொன்னதும் சேகர் தன் தலையில் கட்டி இருந்த முண்டாசு துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு பெரிய பட்டரைப் பார்க்கப் போனான். கமலாவும் அவன் பின்னாலேயே போனாள்.

சேகரைப் பார்த்ததும் பெரிய பட்டர் “என்னப்பா,இந்த அம்மா உன்னை அவா உறவுக்காரரு ன்னு சொல்றா.இவாளை உனக்குத் தெரியுமா” என்று கேட்டார்.சேகர் உடனே தன் கைகளைக் கட்டி கொண்டு “சாமி,நான் பத்து பாத்திரம் தேச்சுக்கிட்டு இருந்தேன்.அப்போ இந்த அம்மா என்னை அடையாளம் தெரிஞ்சுக் கிட்டு,என் கிட்டே வந்து எனக்கு அவங்களை அடையாளம் தெரியுதான்னு கேட்டா.எனக்குக் கண் பார்வை சா¢யாத் தெரியாததாலே எனக்கு இந்த அம்மாவை அடையாளம் தெரி யலே.ஆனா இந்த அம்மா என் குரலை வச்சே என்னை அடையாளம் தெரிஞ்சுக் கிட்டாங்க.இந்த அம்மா என் மச்சினி தாங்க.இதோ இருக்காங்களே இந்த அம்மா தாங்க என் பெண்ஜாதி.நான் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி புத்தி கெட்டுப் போய் இவளையும்,ரெண்டு பொட்டைப் பிள்ளைங்க¨ளை யும்,வுட்டுட்டு எவளோ ஒரு சிறுக்கிக் கூட வூட்டை விட்டே ஓடிப் போனேங்க.அப்புறமா,நான் ஒரு நாயை விட கேவலமா கஷ்டப் பட்டு கிட்டு வந்தேன்.இப்ப எனக்கு புத்தி வந்திச்சி.நான் இவங்க கூட ப் போய் இனிமெ ஒழுங்கா குடுத்தனம் பண்ணி வறேன் சாமி” என்று சொல்லி விட்டு அழுதான்.

உடனே பெரிய பட்டர் “அட அபிஷ்டு.நீ அப்படியா பண்ணே.சா¢,இந்த அம்மா பாக்க கிளிப் போல இருக்காளேடா.இப்போ உன் மச்சினி உன்னை அவா ஆத்துக்கு அழைச்சுண்டு போறேன்னு கேக்கறா.உனக்கு அவா கூடப் போய் அவ ஆத்துலே இருந்து வர இஷ்டமா.இல்லை இந்த மட பள்ளி யிலேயே நீ இருந்து வந்து,பத்து பாத்திரம் தேச்சு வந்து,கோவிலிலே தர பிரசாதத்தை சாப்பிட்டு வர ஆசை படறாயா” என்று கேட்டதும் சேகர் உடனே கையை கூப்பி கொண்டு ”சாமி, நான் இவங்க கூட போக ரொம்ப ஆசைப் படறேன் சாமி.எனக்கு இத்தனை வருஷமா நீங்க இந்த பத்து பாத்திரம் தேய்க் கிற வேலையைக் குடுத்து எனக்கு கோவில் பிரசாததையும் குடுத்து,என்னை மட பள்ளியிலே தங்க வச்சு இருந்தீங்க.இதுக்கு எல்லாம் உங்களுக்கு எப்படி நன்னி சொல்றதுன்னே எனக்கு தெரியலே” என்று சொல்லி விட்டு மறுபடியும் விக்கி விக்கி அழுதான்.உடனே அந்த பட்டர் “அந்த பெருமாள் புண்ணீயத்தாலே தான் இப்ப தான் உனக்கு உன் ஆம்படையாள்,உன மச்சினி எல்லோரும் கிடைச்சு இருக்காளேப்பா.இனிமேலாவது அவா கூட நீ போய் நல்ல புத்தியோடு இருந்துண்டு சந்தோஷமா வாழ்ந்து வாப்பா.இனி மேலாவது நீ வேறே எந்த ஸ்திரியோட ஓடிப் போகாம இவாளோடு சந்தோஷமா குடுத்தனம் பண்ணீ வாப்பா.இப்போ நீ£ங்க இவரை உங்க ஆத்துக்கு அழைச்சுண்டு போங்க”என்று சொல்லி விட்டு தன் வேலையைக் கவனிக்க கிளம்பினார்.

பிறகு சேகர் மடப் பள்ளிக்குப் போய் அவனுடைய ஒரு வேஷ்டி துண்டையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.“அக்கா,மாமா தான் மனசு உடைஞ்சு இத்தனை தடவை உங்க கிட்டே மன்னிப்பு கேட்டாரே அவரை நீங்க மன்னிச்சு விடுங்க.நாம அவரை வீட்டுக்கு இட்டு கிட்டு போவ லாம்க்கா.இன்னும் இருக்கும் கொஞ்ச வருஷமாவது அவர் நம்மோடு சந்தோஷமா இருந்து வரட்டும். சா¢ன்னு சொல்லுங்க” என்று சொல்லி கமலாவின் கைகளை பிடித்து கெஞ்சினாள் செந்தாமரை. செந்தாமரை அப்படி கெஞ்சினதை பார்த்த கமலாவுக்கு மனசு மாறியது.உடனே “சா¢ செந்தாமு.நீ சொல்றபடியே செய்யலாம்”என்று சொன்னவுடன் செந்தாமரை கமலாவைப் பார்த்து “உன் வருத்தம் எனக்கு நல்லா புரியுதுகா” என்று சொல்லி விட்டு கமலாவையும் சேகரையும் கோவிலை விட்டு வெளி யே அழைத்து வந்து அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்குப் போய் மாமாவுக்கு ‘கா·பியும் டி·பனும்’ வாங்கிக் கொடுத்தாள்.நல்ல பசியா இருக்கவே சேகர் செந்தாமரை வாங்கி கொடுத்த ‘டி·பனை’ வேக வேகமாகச் சாப்பிட்டு விட்டு ‘கா·பியையும்’ குடித்தார் ஹோட்டலை விட்டு வெளியே வந்த செந்தாம ரை மார்கெட்டில் காய்கறியும்,கொஞ்சம் மீனும் வாங்கினாள்.பிறகு ஒரு ஆட்டோவைப் பிடித்து மூவ ரும் வீட்டுக்கு வந்தார்கள்.ஆட்டோவில் கமலா சேகர் இடம் ஒன்னும் பேசவில்லை

ஆட்டோவுக்கு பணத்தை கொடுத்து விட்டு செந்தாமரை மாமாவை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு வந்தாள்.வீட்டுக்குள் வந்த சேகர் செந்தாமரையைப் பார்த்து ”செந்தாமு,இது நம்ம வூடா” என்று ஆச்சா¢யமாகக் கேட்டான்.செந்தாமரை ”ஆமாம் மாமா, இது நம்ப வீடு தான்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது செல்வி வீட்டுக்குள் டாக்டர் ‘டிரஸ்ஸ¤டன்’ நுழைந்தாள்.கமலா மார்கெ ட்டில் வாங்கி வந்த காய்கறிகளையும் மீனையும் எடுத்து கொண்டு சமையல் அறைக்குப் போனாள். சோபாவில் யாரோ ஒரு பெரியவர் தாடி மீசையுடன் உட்கார்ந்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த செல்வி “சித்தி யார் இந்த பெரியவர்” என்று கேட்டுக் கொண்டே தன் வெள்ளை டாக்டர் கோட்டை அவிழ்த்தாள்.உடனே செந்தாமரை “செல்வி, நான் சொன்னா நீ ரொம்ப ஆச்சா¢யப்படுவே.இவர் தான் உங்களை விட்டு ஓடி போன அப்பா” என்று சொன்னாள்.உடனே செல்வி “அப்படியா சித்தி என்னால் நம்பவே முடியலே”என்று சோபாவில் சேகர் பக்கத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டு ”ஏம்பா,நீங்க எங்களை எல்லாம் விட்டுட்டு எவ கூடவோ ஓடிப் போயிட்டீங்க.எங்க கூட இருக்க உங்களுக்குப் பிடி க்கலையா”என்று கேட்டவுடன் கமலா சமையல் அறையில் இருந்தே ”நல்லா கேளு செல்வி.அப்பவா வது அவருக்கு புத்தி வரட்டும்”என்று கோவத்தில் கத்தினாள்.உடனே சேகர் செல்வி கையைப் பிடித் துக் கொண்டு “தப்பு தாம்மா.மன்னிக்க முடியாத தப்பு பண்ணிட்டேம்மா.என்னை மன்னிச்சிடு” என்று சொல்லி விட்டு செல்வியின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதார்.

உடனே செல்வி ”அழாதீங்கப்பா” என்று சொல்லி சேகரின் கண்களை துடைத்து விட்டாள். பிறகு செந்தாமரை செல்வியிடம் “செல்வி,நானும்,அம்மாவும்,பக்கத்திலே இருக்கிற பெருமாள் கோவி லுக்கு போய் இருந்தோம்.அங்கே தான் நாங்க உங்க அப்பாவை சந்திச்சோம்.பிறகு கோவில் பட்டர் கிட்டே கேட்டு, அவரை வீட்டுக்கு இட்டுக் கிட்டு வந்தோம்” என்று சொல்லி விட்டு,பெருமாள் கோவி லில் நடந்த பூரா கதையையும் சொன்னாள் செல்விக்கு ஆச்சா¢யம் தாங்கவில்லை.

அவள் உடனே “சித்தி,நீங்க ரொம்ப ‘க்ரேட்’ சித்தி.இத்தனை வருஷத்துக்கு அப்புறமா நீங்க எங்க அப்பாவை பார்த்ததும் ‘கரெக்ட்டா’ அடையாளம் கண்டு பிடிச்சி இருக்கீங்களே சித்தி” என்று சொல்லி சித்தியை புகழ்ந்தாள்.”ரொம்ப தாங்ஸ் செல்வி”என்று சொல்லி விட்டு செந்தாமரை ராணீயை செல் போனில் கூப்பிட்டு “ராணீ,நீ உடனே வீட்டுக்கு வா.உனக்கு ஒரு ‘சர்ப்ரைஸ் நீயூஸ்’ சொல்லப் போறேன்.நீ உன் புருஷனோடும்,குழந்தையோடும்,உடனே வீட்டுக்கு வா”என்று சொல்லி ‘செல்’ போனை ‘கட்’ பண்ணீனாள்.

அடுத்த அரை மணி நேரத்திற்கெல்லாம் ராணியும் டேவிடும் குழந்தையோடு செந்தாமரை வீட்டுக்கு வந்தார்கள்.வீட்டிற்குள் நுழைந்ததும் செல்வி சேகர் கூட உட்காந்துக் கொண்டு இருப்ப தைப் பார்த்து “யார் செல்வி,இந்தப் பெரியவர்,புதுசா இருக்காரே” என்று கேட்டவுடன் செல்வி சந்தோ ஷத்துடன் “அக்கா,இவர் நம்ப அப்பா.சித்தி இவரை பெருமாள் கோவில்லே பாத்து அடையாளம் கண்டு பிடிச்சி,அப்புறமா கோவில் பட்டர் கிட்டே பேசி நம்ப அப்பாவை வீட்டுக்கு இட்டு கிட்டு வந்து இருக்காங்க” என்று சொல்லி சித்தியை மறுபடியும் புகழ்ந்தாள்.ராணீ உடனே “அப்படியா சித்தி.உங்க ஞாபக சக்தியை நான் ரொம்ப பாராட்டறேன்” என்று அவள் பங்குக்கு அவளும் செந்தாமரையை புகழந்தாள்.ராணீ சேகரைப் பார்த்து அவ பங்குக்கு நிறைய கேள்விகள் கேட்டாள்.சேகர் உடனே “அம்மா ராணீ,நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.உங்களை எல்லாம் நான் விட்டுட்டு ஓடிப் போனது ரொம்ப பெரிய தப்பு.தயவு செஞ்சி நீயும் என்னை மன்னிச்சிடு”என்று சொல்லி ராணீயின் கைகளைப் பிடித்து கொண்டு கெஞ்சினார்.தன் அப்பா கெஞ்சி சொன்னதைக் கேட்ட பிறகு சேகரோ டு சகஜமாக பேச ஆரம்பித்தாள் ராணீ.பிறகு சேகர் ராணியின் குழந்தையைக் கொஞ்சினார்.கமலா சாப்பாடு செஞ்சு முடிச்சதும் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சந்தோஷமாக சாப்பிட்டார்கள்.

எல்லோருடனும் நிறைய சந்தோஷமாக பேசி கொண்டு இருந்து விட்டு ராணீயும், டேவிடும் குழந்தையை எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு கிளம்பிப் போனார்கள்.நேரம் ஆகி விடவே செந்தாமரை அவள் ரூமுக்குப் படுக்கப் போய் விட்டாள்.கமலாவும் சேகரும் செல்வியும் அவர்கள் ரூமுக்குப் படுக்கப் போய் விட்டார்கள்.நாள் பூராவும் வேலை செஞ்சி வந்ததால் படுத்தவுடன் செல்வி தூங்கி விட்டாள்.அன்று இரவு கமலா சேகர் தன்னை விட்டு விட்டுப் போனதில் இருந்து ‘செந்தாமரை அம்மா வீட்டுக்கு வந்தது, பிறகு எல்லோரையும் அழைத்துக் கொண்டு இந்த வீட்டுக்கு வந்தது, ராணீயை நல்லாப் படிக்க வச்சி,அவளுக்கு ஒரு வேலை கிடைச்சதும் அவ ஆசைப்பட்ட டேவிடை அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சது,அந்தக் கல்யாணத்தை பார்த்த பிறகு அப்பா காளி இறந்து போனது,செல்விக்கு டாகடர் படிப்புக்கு ‘டொனோஷன்’ கொடுத்து ‘மெடிக்கல் காலேஜிலே’ சேத்தது, சமீபத்திலே அம்மா இறந்து போனது,போன்ற குடும்பத்தில் நிகழ்ந்த எல்லா விஷயங்க¨ளையும் விவரமாக சேகர் கிட்டே சொன்னாள்.கண்ணீல் கண்ணீருடன் சேகர் கமலா சொன்ன விவரங்களை எல்லாம் கேட்டான்.கொஞ்ச நேரம் ஆனதும் கமலா “செந்தாமரை மட்டும்,நமப வூட்டுக்கு வந்து, எங்களே இங்கே இட்டுகிட்டு வராம இருந்தா,நாங்க மூனு பேரும் இந்த வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்து இருக்கவே முடியாது”என்று சொல்லும் போது அவளுக்கு கண்களீல் கண்ணீர் வந்தது.

அடுத்த நாள் காலையில் சேகர் எழுந்ததும் செந்தாமு,”கமலா, நீ இந்த குடும்பத்துக்கு செஞ்ச எல்லா நல்ல காரியங்களையும் கமலா ராத்திரி விவரமா சொன்னா.நீ மட்டும் அம்மா குடிசைக்கு வந்து, இவங்களை எல்லாம் இங்கே இட்டுக் கிட்டு வராம இருந்தா இவங்க மூனு பேரும் இந்த வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்து இருக்கவே முடியாது.உனக்கு நான் எப்படி என் நன்றியை சொல்றதுன்னே தெரியலே” என்று சொல்லி தன் கைக¨ளைக் கூப்பிக் கொண்டு சொன்னான்.சேகர் கண்களில் கண் ணீர் ஆறாய் பெருக்கெடுத்தது.அவன் தன் தோள் மேலே போட்டு இருந்த துண்டினால் துடைத்துக் கொண்டான்.உடனே செந்தாமரை “மாமா,அவங்க மட்டும் சந்தோஷப்படலே.அவங்க கூட இருந்து வருவது எனக்கும் சந்தோஷமா இருக்கு” என்று சொன்னாள்.கா·பி குடித்த பிறகு செந்தாமரை மாமாவிடம் எரணூறு ரூபாய் கொடுத்து “மாமா,நீங்க இந்த தெருக் கோடியிலே இருக்கிற சலூனு க்குப் போய் உங்க தலை முடியை வெட்டிக் கிட்டு ‘ஷேவிங்கும்’ பண்ணீ கிட்டு வாங்க”என்று சொல்லி அனுப்பினாள்.சேகரும் செந்தாமரை கொடுத்த எரணூறு ருபாயை வாங்கிக் கொண்டு பக்கத்திலே இருந்த சலூனுக்குக் கிளம்பினான்.

அன்று சாயந்திரமே செந்தாமரை கமலாவையும் சேகரையும் ஒரு பெரிய துணிக் கடைக்கு அழைத்துப் போய் சேகருக்கு நாலு ஷர்ட்,நாலு பேண்ட்,பனியன்,’அன்டர் வேர்’, நாலு வேஷ்டி, ரெண்டு டவல், அக்காவுக்கு புடவைகளும்,ப்ளவுஸ¤களும்,உள்ளாடைகளும் எல்லாம் வாங்கிக் கொ ண்டு வீட்டுக்கு வந்தாள்.

அடுத்த நாளே செந்தாமரை மாமாவையும்,அக்காவையும் ஒரு பெரிய ‘கண் நர்ஸிங்க் ஹோமு க்கு’அழைத்துப் போய் அவர்கள் கண்களை ‘செக் அப்’ பண்ணச் சொன்னாள்.அங்கு இருந்த கண் டாக்டர் சேகரின் ரெண்டு பேருடைய கண்களையும் நன்றாக ‘செக் அப்’ பண்ணி விட்டு, செந்தாமரை யைப் பார்த்து “இவங்க ரெண்டு பேர் கண்லேயும் ‘காட்ரக்ட்’ வளந்து இருக்கு. இவங்களுக்கு உடனே கண் ‘ஆபரேஷன்’ செய்யணும்”என்று சொன்னார்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *