சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 6,024 
 
 

அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 | அத்தியாயம்-18

செந்தாமரையும் அவள் எழுதின லெட்டரை ஒரு ‘ஜெராக்ஸ்’ காப்பி எடுத்து தன் ‘பைலில்’ ராஜேஷ் எழுதின லெட்டருடன் வைத்துக் கொண்டாள்.ராஜேஷ் எங்கே இருப்பான் என்று தேடினாள். ராஜேஷ் அப்போது தான் ‘பிரின்ஸிபால்’ ரூமை விட்டு வெளியே வந்துக் கொண்டு இருந்தான். செந் தாமரை ராஜேஷைப் பார்த்து “இந்தாங்க.நீங்க எழுதின லெட்டருக்கு என் பதில்” என்று சொல்லி ராஜேஷிடம் கொடுத்தாள்.“தாங்க்ஸ்” என்று சொல்லி விட்டு தன் ரூமுக்கு வந்து செந்தாமரை கொடு த்த கவரைக் கிழித்து அதற்குள் இருந்த லெட்டரை பிரித்து நிதானமாக படிக்க ஆரம்பித்தான். செந் தாமரை லெட்டரை கொடுத்து விட்டு தன் சீட்டுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டாள்.அவள் மனம் இப்போது ரொம்ப லேசாக இருப்பது போல உணர்ந்தாள்.ராஜேஷ் செந்தாமரை கொடுத்த லெட்டரை முழுக்க படித்து விட்டு அதை தன் ‘பைலில்’ வைத்துக் கொண்டான்.

செந்தாமரையின் புத்தி கூர்மையை பாராட்டி பள்ளி கூட நிர்வாகம் செந்தாமரை க்கு பத்தாவது வகுப்புகளுக்கு கணக்கு சொல்லி கொடுக்க ‘பிரமோஷன்’ கொடுத்து சம்பள உயர்வும் கொடுத்தார்கள். எல்லா சக வாத்தியார்களும்,ராஜேஷும் செந்தாமரைக்கு கையை குலுக்கி ‘கன்கிராஜுலேஷண்ஸ்’ சொன்னார்கள்.அடுத்த நாளில் இருந்து முதல் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ராஜேஷ் செந்தாம ரையுடன் கணக்கு சம்மந்தமான பேச்சை பேசிக் கொண்டு வந்தான்.கூடவே பத்தாவது பத்தாவவது படிக்கும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கஷ்டமாக இருந்து வரும் கணக்குகளை எப்படி சுல பமாகப் போடுவது,என்பதை பத்தி ஆராய்ச்சி செஞ்சு,அந்த கணக்குகளை சுலபமாக போடும் முறை யை கண்டு பிடித்து,அந்த முறையில் பல கனக்குகளை எல்லாம் போட ஆரம்பித்தார்கள்.செந்தாமரை க்கு இந்த மாதிரி கணக்கு ஆராய்ச்சி ரொம்ப பிடித்து இருந்தது.அதனால் அவள் பல முறை ராஜே ஷை த் தேடி போய் அவனுடன் அந்த மாதிரி கணக்குகளை எல்லாம் போட்டு வந்தாள்..இருவரும் பள்ளிக் கூட நேரத்திலே இந்த ஆராய்ச்சியை முழுக்கப் பண்ண முடியாம இருந்ததால்,அவர்கள் இருவரும் பள்ளிக் கூடம் விட்ட பிறகு இருந்த ஒரு ‘ஹோட்டலில்’ ‘காபி’ சாப்பிட்டுக் கொண்டு அந்த ஆரய்ச்சியை தொடர்ந்து செய்து வந்தார்கல்ள்.மனோரமா ‘டீச்சர் பள்ளி கூடத்திலே இவர்கள் ரெண்டு பேரும் அடிக்கடி சந்தித்துப் பேசி வருவதையும்,சாயங்காலம் பள்ளீக் கூடம் முடிந்த பிறகு எதிரே இருந்த ‘ஹோட்டலில்’ சந்தித்து பேசி வருவதையும் பார்த்தாள்.இவர்கள் சந்திப்பை தப்பு கணக்குப் போட்டு செந்தாமரை ராஜேஷைப் பத்தி தவறான வதந்தியை மனோரமா’ டீச்சர்’ மற்ற ‘டீச்சர்களுக்கும்’ பரப்பி வந்தாள்.இவர்களை பத்தின ‘கிசு’ ‘கிசு’ நாளுக்கு நாள் அதிகம் ஆகி வந்தது. இந்த விஷயம் ‘பிரின்ஸிபால்’ காதுக்கு எட்டவே அவர் உடனே செந்தாமரையையும்,ராஜேஷையும் தன் ரூமுக்கு வரச் சொன்னார். ‘பிரின்ஸிபால்’ தங்கள் இருவரையும் ஒன்னா அவர் ரூமுக்கு வரச் சொன்னதைக் கேட்டதும் ரெண்டு பேரும் பயந்து போய் யோஜனைப் பண்ணினார்கள்.‘அவர்கள் இருவரும் ரொம்ப நேரம் பள்ளிகூடத்திலும்,சாயங்கால நேரங்களிலும் ‘ஹோட்டலில்’ சந்தித்து பேசி வருவதை தான் யாரோ ‘பிரின்ஸிபால்’ கிட்டே தவறாக புகார் கொடுத்து இருப்பாங்க. இதை விசாரிக்க வே அவர் நம் ரெண்டு பேரையும் ஒன்றாக அவர் ரூமுக்குக் கூப்பிட்டு இருக்கிறார்’ என்று இருவரும் யூகித்து விட்டார்கள்.பிறகு ராஜேஷும் செந்தாமரையும் பயந்துக் கொண்டே ‘பிரின்ஸிபால்’ ரூமுக்கு ப் போனார்கள்.

ரெண்டு பேரும் அவர் ரூமுக்கு வந்ததும் ‘பிரின்ஸிபால்’ முகத்தை கொஞ்சம் கோவமா வை த்துக் கொண்டு “இப்போ கொஞ்ச நாளா நான் உங்க ரெண்டு பேர் பத்தியும் கேள்விப்படுவது உண்மை யா என்று விசாரிக்கத் தான் உங்களை என் ரூமுக்கு கூப்பிட்டு இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் ‘போஸ்ட் கிராஜுவேட்’ படிச்சவங்க.உங்க ரெண்டு பேர் மேலேயும் எனக்கு அலாதி பிரியம் உண்டு. நீங்க இருவரும் கல்யாணம் ஆகாதவங்க.உங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஆசை தப்பு இல்லை.நீங்கள் ஒருவரை ஒருவர் விரும்பினால் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக் கொள் ளுங்க.இங்கே இளம் உள்ளங்கள் படிச்சு வறாங்க.அவங்களுக்கு நாம ஒரு உதாரணமா இருந்து வர ணும்.பள்ளி கூடத்துக்கு எந்த ‘கெட்ட பேரும்’ வராம பார்த்துக்குங்க.நான் உங்களை இப்போ ‘வாற்ன்’ பண்றேன். எனக்கு மறுபடியும் இந்த மாதிரி சமாசாரம் காதிலே விழுந்தா நான் உங்களை இந்த பள்ளி கூடத்தில் இருந்து ‘ஒழுக்கக் கேட்டிற்காக ’’டிஸ்மிஸ்’ பண்ண வேண்டி இருக்கும்.’போத் ஆப் யூ கான் கோ நவ்’ “ என்று ஒரு ‘பைலை’ப் பார்க்க ஆரம்பித்தார்.

‘பிரின்ஸிபால்’ சொன்னதை கேட்டதும் செந்தாமரையும் ராஜேஷும் ஆடி போய் விட்டார்கள். தைரியத்தை வர வழைத்துக் கொண்டு ராஜேஷ் “சார்,நீங்க எங்க ரெண்டு பேர் பேரிலேயும் மதிப்புக் கும் மா¢யதைக்கும் நான் முதலில் என் நன்றியை தெரிவிச்சுக்கிறேன்” என்று சொல்லி விட்டு தன்னி டம் இருந்த பைலைத் திறந்து அவன் செந்தாமரைக்கு எழுதின லெட்டா¢ன் ‘ஜெராக்ஸ்’ காப்பியைக் காட்டி” சார்,நீங்க இந்த லெட்டரை கொஞ்சம் படிங்க.நான் செந்தாமரை மேலே ஆசைபட்டது என்ன வோ உண்மைதான்.என் பெற்றோர்களும் செந்தாமரையின் பெற்றோர்களும் எங்க ரெண்டு பேருடைய ஜாதி வித்தியாசம் இந்த கல்யணத்துக்கு தடையாய் இருக்கும் என்று சொல்லி எங்க கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லிட்டா.உடனே நான் செந்தாமரைக்கு இந்த லெட்டரை எழுதி விட்டு,அதுக்கு அப்பு றமா இந்த ரெண்டு மாசமா நானும் செந்தாமரையும் பத்தாவது படிக்கும் மாணவர்களுக்கும், மாணவி களுக்கும்,கஷ்டமான கணக்குகளை எல்லம் எப்படி சுலபமா போடுவது என்பதைப் பத்தி ஆராய்ச்சி பண்ணீ,இப்போ ஒரு இருபது கணக்குகளுக்கு வழி கண்டு பிடிச்சி இருக்கோம்.இந்த கணக்கு ஆராய் ச்சி பண்ணத் தான் நான் செந்தமரையுடன் ‘க்லாஸ்’ நேரம் தவிர மத்த நேரங்களிலும், பள்ளி கூடம் விட்ட பிறகு எதிரே இருக்கும் ‘ஹோட்டலில்’ காபி சாப்பிட்டு வரும் நேரத்திலும் பேசி வறேன்.எங்க இந்த சந்திப்பை யாரோ உங்க கிட்டே தவறா புகார் கொடுத்து இருக்காங்க.அந்த லெட்டருடன் நானும் செந்தாமரையும் கணக்கு ஆராய்ச்சி செய்த பேப்பர்களும் இருக்கு.நீங்க கொஞ்சம் தயவு செஞ்சி பாரு ங்க” என்று சொல்லி தன் ‘பைலை’ அவா¢டம் நீட்டினான். ‘பிரின்சிபால்’ ராஜேஷ் நீட்டின ‘பைலை’ வாங்கிப் படித்து முடித்தார்.ராஜேஷ் சொன்னது எல்லாம் உண்மை என்று புரிய வந்தது.

செந்தாமரைக்கு இப்போ தைரியம் வந்து அவள் உடனே தன் பைலை பிரின்ஸிபால் இடம் நீட்டி” சார்,நீங்க எங்க ரெண்டு பேர் பேரிலேயும் மதிப்புக்கும் மா¢யதைக்கும் நான் முதலில் என் நன்றி யைத் தெரிவிச்சுக்கிறேன்.இந்த ‘பைலில்’ நான் ராஜேஷுக்கு எழுதின லெட்டா¢ன் ‘ஜெராக்ஸ்’ காப்பி யும்,இந்த ரெண்டு மாசமா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்த கணக்கு ஆராய்ச்சி பேப்பர்களும் இருக்கு.நீங்க படிச்சுப் பாருங்க” என்று சொல்லி தன் ‘பைலை’ ‘பிரின்ஸிபால்’ கிட்டே காட்டினாள் உடனே ‘பிரின்ஸிபல்’ செந்தாமரை காட்டின ‘பைலையும்’ வாங்கி முழுக்கப் படித்தார். ராஜேஷ் வைத்து இருந்த கணக்கு ஆராய்ச்சி பேப்பர்களும் செந்தாமரை காட்டின பேப்ப்ர்களும் ஒன்னாக இருந் தது.உடனே ‘பிரின்ஸிபால்’ தன் சீட்டை விட்டு எழுந்து நின்று கொண்டு “சாரி,ராஜேஷ்,செந்தாமரை நான் நம்ப ‘ஸ்டாப்’ உங்களைப் பத்தி சொன்ன தவறான செய்தியை நான் நம்பி விட்டேன்.நீங்க ரெண்டு பேரும் ஒன்னா உக்காந்துக் கிட்டு செய்து வந்த கணக்கு ஆராய்ச்சயைத் தான்,அவங்க உங்க ளே தப்பாகப் புரிஞ்சு கிட்டு இருக்காங்க.நீங்க ரெண்டு பேரும் விடாம உங்க கணக்கு ஆராய்ச்சியை தொடர்ந்து பண்ணி வாங்க.நீங்க செய்து வரும் இந்த கணக்கு ஆராய்ச்சி வெற்றி பெற உங்க ரெண்டு பேருக்கும் என் மனமார்ந்த ஆசீர்வாதங்கள்” என்று சொல்லி விட்டு ரெண்டு பேர் கைகளையும் பிடித்து குலுக்கினார்.உடனே ராஜேஷும்,செந்தாமரையும், எழுந்து நின்றுக் கொண்டு “ரொம்ப ‘தாங்க்ஸ்’ சார்.எங்க ஆராய்ச்சி பூரா ஆனவுடன் அந்த பேப்பர்களை

Tenth Maths, Made Easy.

என்று பேர் கொடுத்து உங்க முன்னுரையுடன் ஒரு புஸ்தகமாக ‘பப்லிஷ்’ பண்ணலாம் என்று இருக்கோம் சார்.நிங்க தயவு செஞ்சி மறுக்காம அந்த புஸ்தகத்தை முழுக்க படிச்சி,அதில் இருக்கும் தவறு களை எல்லாம் திருத்தி, என்ன மாற்றங்கள் செய்ய விரும்பிகிறீர்களோ,அதை செஞ்சி விட்டு, அந்த புஸ்தகத்துக்கு முன்னுரையும் எழுதி தர முடியுமா சார்” என்று கோரஸாகக் கேட்டார்கள்.உடனே ‘பிரின்சிபால்’ “நீங்க ரெண்டு பேரும் செஞ்சு வரும் ஆராய்ச்சியை நான் ரொம்ப பாராட்டறேன் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.இந்த் ஆராய்சியை தொடர்ந்து பண்ணி வாங்க.புஸ்தகம் ரெடி ஆனதும் என்னிடம் அதை கொண்டு வாங்க.நான் நிச்சியமாக அந்த புஸ்தகத்தை முழுக்கப் படிச்சி, அதில் இருக்கும் தவறுகளை எல்லாம் திருத்தி விட்டு,என்ன மாற்றங்கள் செய்ய ஆசை படுகிறேனோ, அதை செஞ்சி விட்டு அந்த புஸ்தகத்துக்கு முன்னுரையும் எழுதி தறேன்.நீங்க அந்த புஸ்தகத்துக்கு கொடு த்து இருக்கும் பேர் ரொம்ப நல்லா இருக்கு.எனக்கு தெரிந்த ஒரு பதிப்பகம் இருக்கு.நான் அவருக்கு போன் பண்ணி உங்க புஸ்தகத்தை ‘பப்லிஷ்’ பணண சொல்றேன்” என்று சந்தோஷமாக சொன்னார். செந்தாமரையும் ராஜேஷும் ‘பிரின்ஸிபாலுக்கு’ நன்றி சொல்லி விட்டு அவர் ரூமை விட்டு சந்தோஷ மாக வெளியே வந்தார்கள்.

அன்னைக்கு காத்தாலே எழுந்தவுடன் ராஜ் தேவியை பார்த்து ‘தேவி எனக்கு காத்தாலே எழுந்ததில் இருந்து என் வலது கண் பார்வை குறைய ஆரம்பிச்சு இருக்கு இப்போ அது இன்னும் அதிகமா குறைய ஆரம்பிச்சு இருக்கு புள்ளே” என்று கவலையோடு சொன்னார்.“அப்படியாயா.அப்பா உன் கண்ணை உடனே ஒரு கண் டாக்டர் கிட்டே காட்டி வரனும்” என்று கமலா சொல்லிக் கொண்டு இருந்தது போது’ பாத் ரூமில்’ இருந்து வெளியே வந்த செந்தாமரை காதில் விழவே அவள் பள்ளிக் கூடத்திற்கு ஒரு நாள் லீவு போட்டு விட்டு ”தன் அப்பாவை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஒரு நல்ல கண் டாக்டா¢டம் கொண்டு போய் காட்டினாள்.அந்த கண் டாக்டர் ராஜ்ஜின் கண்களைப் பரி சோதனைப் பண்ணீ விட்டு “மேடம்,இவர் கண்ணில் ‘பொறை’ விழுந்து இருக்கு.அது இப்போ திடீ ரென்று மிகவும் முத்தி விட்டு இருக்கு.அதனால் தான் அவர் கண்லே பார்வை குறைஞ்சு இருக்கு. நீங்க அவருக்கு பார்வைத் தெரிய உடனடியாக அவருக்கு கண் ‘ஆபரேஷன்’ பண்ணணனும். நீங்க இந்த கண் ‘ஆபரேஷனுக்கு’ ரொம்ப ‘டிலே பண்ணாதீங்க.ஏற்கெனவே அவர் கண் ‘பொறை’ ரொம்ப முத்தி இருக்கு. கண் ’பொறை’ ரொம்ப முத்தி போனா அப்புறமா ஆபரேஷன் பண்றது ரொம்ப கஷ்ட ங்க” என்று சொன்னதும் செந்தாமரை மிகவும் பயந்து விட்டாள்.“நான் பணத்தை ரெடி பண்ணி எடு த்துக் கொண்டு இந்த ஞாயித்துக் கிழமை வந்து என் அப்பாவை இங்கே ஆபரேஷனுக்கு ‘அட்மிட் ‘பண்றேன்”என்று சொல்லி விட்டு செந்தாமரை அந்த ‘ஹாஸ்பிடலில்’ இருந்து தன் அப்பாவை வெளியே அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் தேவியும், கமலாவும், கவலையோடு ”செந்தாமு,அப்பா கண்ணைப் பார்த்துட்டு அந்த கண் டாக்டர் என்ன சொன்னார்” என்று ‘கோரஸாக’ க் கேட்டார்கள்.செந்தானரை ”அம்மா,அப்பா கண்ணில் ‘பொறை’ விழுந்து இருக்காம்.அது இப்போ திடீரென்று மிகவும் முத்தி விட்டு இருக்குதாம்.அதனால் தான் அப்பா கண்லே முழு பார்வையும் குறைஞ்சு இருக்குதாம். மறு படியும் அவருக்கு கண் பார்வைத் தெரிய உடனடியாக அவருக்கு கண் ‘ஆபரேஷன்’ பண்ண வேணுமாம்” என்று கவலையுடன் சொன்னாள்.அந்த ஞாயித்துக்கிழமையே செந்தாமரை முப்பதாயிரம் ரூபாயை ரெடி பண்ணிக் கொண்டு தன் அம்மாவையும்,அக்கவையும், அழைத்துக் கொண்டு அந்த கண் ‘ஹாஸ்பிடலுக்கு’ப் போய் டாக்டர் சொன்ன முப்ப்தாயிர ரூபாயை கட்டி விட்டு,அப்பாவை ‘அட்மிட்’ பண்ணினாள்..உடனே ‘ஆபரேஷன்’ தியேட்டருக்கு ராஜ்ஜை அழைத்துப் போனார்கள் மருத்துவ மணை ஊழியர்கள்.செந்தாமரையும்,தேவியும்,கமலாவும் ‘ஆஸ்பத்திரியில்’ வெளியே போட்டு இருந்த சேர்களில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள்.ரெண்டு மணி நேரம் கழித்து கண் டாக்டர் ராஜ்ஜுக்கு ‘ஆபரேஷனை’ முடித்து விட்டு கண்ணில் கட்டுடன் அவரை ஒரு‘வீல் ‘சேரில் வெளியே கொண்டு வந்து விட்டார்.கண் டாக்டர் “ஒரு மணி நேரம் கழித்து அவருக்கு கொஞ்சம் குடிக்கக் குடுங்க.அப்புறமா இன்னும் ஒரு மணி நேரம் போனதும்,அவருக்கு வாந்தி வராமல் இருந்தா சாப்பிட ஆகாரம் குடுங்க. நாளைக்கு மறுபடியும் அவரை இங்கே அழைச்சுக் கிட்டு வாங்க.நான் அவர் கண் கட்டை அவிழ்த்து விட்டு அவருக்கு ஒரு கருப்பு கண்ணாடி போட்டு விடறேன்.நீங்க அவரை வீட் டுக்கு அழைச்சு கிட்டு போனதும் நான் எழுதி கொடுத்து இருக்கும் கண் சொட்டு மருந்தெல் லாம் அவருக்கு தவறாமல் போட்டு வாங்க” என்று சொல்லி விட்டுப் போனார்.ஒரு மணி நேரம் ஆனதும் செந்தாமரை தன் அப்பாவுக்கு குடிக்க ‘காபி’ வாங்கிக் கொண்டு வந்து குடிக்கக் கொடுத் தாள்.டாக்டர் செந்தாமரையைப் பார்த்து “ இவரை நீங்க வீட்டுக்கு அழைச்சு கிட்டு போவலாம்” என்று டாக்டர் சொல்லவே செந்தாமரை காளியை ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.தேவியும் கமலாவும் இன்னொரு ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார்கள்

ஒரு மாசம் ஆனதும் ஒரு ஞாயித்துக் கிழமை செந்தாமரை தன் அப்பாவை கன் டாக்டா¢டம் அழைத்துப் போனாள்அந்த கண் டாக்டர் ராஜ்ஜின் கண் கட்டை அவிழ்த்து விட்டு அவ ரை தன் விரல்களைக் காட்டி “நான் இப்போ உங்களுக்கு எத்தனை விரல் காட்டி இருக்கேன் சொல்லு ங்க பார்க்கலாம்” என்று கேட்டார்.ராஜ்ஜுக்கு ஆபரேஷன் பண்ணீன கண்ணில் பார்வையே சரியா தெரிய லே.உடனே ராஜ் “டாக்டர்,எனக்கு இந்த கண்ணில் ஒரு விரலும் தெரியலே“ என்று கவலையுடன் சொன்னார்.டாக்டர் அவர் கண்ணை மறுபடியும் பரிசோதித்துப் பார்த்தார்.உடனேஅந்த டாகடர் “ஆமாம் சார்,நீங்க சொல்றது உண்மையா இருக்கலாம்.உங்க கண் ‘பொறை’ ரொம்ப முத்தி இருந்தி ச்சு.அதனால் ஆபரேஷன் கொஞ்ச கஷ்டமா தான் இருந்திச்சு. நாங்க எங்களால் முடிஞ்சதை எல்லாம் செஞ்சோம்.எங்களால் இனிமே ஒன்னும் பண்ண முடியாது.இனிமே உங்கள இடது கண்ணில் தான் இந்த உலகத்தை பாத்து வர வேண்டும்.இந்த கண்ணை இனிமே சரி படுத்தவே முடியாது,சாரி” என்று சொல்லி விட்டார் டாக்டர்.செந்தாமரையும்,ராஜ்ஜும் இடிந்துப் போய் விட்டார்கள் செந்தாமரை மெல்ல தன் அப்பாவை சமாதான படுத்தி,அவரை வீட்டுக்கு அழைத்து வந்தாள்.வீட்டுக்கு வந்ததும் வராதத தும் செந்தாமரை தன் அம்மாவிடமும் அக்காவிடமும் “அப்பாவுக்கு ஆபரேஷன் பண்ண வலது கண் ணில் பார்வை தெரியலைமா.அப்பா இனிமே இடது கண்லே தான் இந்த உலகத்தை பார்த்து வரணூம்” என்று சொல்லி அழுதாள்.அன்றில் இருந்து ராஜ் தன் ஒரு கண்ணில் தான் இந்த உலகத்தை பார்த்து வந்தார்.
ராணி எட்டாவதிலே ரொம்ப சுமாராத் தான் மார்க் வாங்கி பாஸ் பண்ணினாள். ஆனா செல்வி மிக நன்றாக படிச்சு வந்தாள்.ராணீ எட்டாவது படிச்சு முடித்ததும் அவளை ஒரு உயர் நிலைப் பள்ளி கூடத்தில் சேர்த்து படிக்க வைத்தாள் செந்தாமரை.செந்தாமரை வீட்டில் இல்லாத போது தேவியும், கமலாவும்,ராஜ்ஜும்,செந்தாமரை இப்படி கல்யாணமே பண்ணிக்காம இருந்து வருவதை நினைத்து மிகவும் வருத்தப் பட்டு வந்தார்கள்.ராஜ் தேவியைப் பார்த்து ”ஏம் புள்ளே தேவி.செந்தாமு கல்யாணம் பண்ணிக்காம நம்மோடு இருந்து வருவது சரியே இல்லையே.இப்போ அவ கல்யாணம் பண்ணிக்காத இருந்தா,அவளுக்கு இன்னும் வயசு ஆவ, ஆவ,அவ அழகு போய் விடத்தானே போவுது. நீ அவளு க்கு நல்ல விதமா சொல்லி அவளை கல்லாணம் பண்ணிக் கொள்ள சொல்லக் கூடாதா” என்று கேட் டார்.உடனே கமலா “அப்பா,நான் கூட இதையே யோசிச்சு வந்து,செந்தாமு கிட்டே பல தடவை அவ தனியா இருக்கும் போது கேட்டு வந்தேன்ப்பா.ஆனா எப்போ கேக்கும் போதும் செந்தாமு ‘எனக்கு கல்லாணமே வேணாம்.நான் உங்க கூட வரைக்கும் இருந்து வரத் தான் ரொம்ப ஆசைப் படறேன்னு சொல்றாப்பா.ஒரு தடவை கூட செந்தாமு கல்லாணம் பண்ணிக் கொள்ளணும்ன்னு சொல்லமாட்டே ங்கிறாப்பா” என்று வருத்ததுடன் சொன்னாள்.தேவி ”ஏன்ய்யா.நான் செந்தாமுவை பெத்தவ.அவ இப்படி ‘கன்னி கழியாம’ இருந்து வருவதைப் பார்த்து கிட்டு சும்மா இருப்பேனாயா.நான் அவ கிட்டே ‘நீ இப்படி தனியா கல்லாணம் கட்டிக்காம இருந்தா நாங்க மூனு பேரும் உன்னை இந்த வூட்டிலேயெ விட்டு விட்டு பழையபடி குடிசைக்கு போய் விடுவோம்ன்னு பயமுறுத்திக் கூட சொல்லி பாத்தேன்யா. .ஆனா அவ அழுது ‘அம்மா அப்படி எல்லாம் பண்ணாதேம்மா.நீங்க என் கூடதான் இருந்து வரணும். அப்படி நீங்க என்னை விட்டுப் போனா நான் உயிரோடவெ இருக்க மாட்டேன்ம்மா’ ன்னு சொல்லி அழறாய்யா” என்று அழாக் குறையாகச் சொன்னாள்.“அப்போ நாம ஒன்னும் பண்ண முடியாது தேவி அதுக்கு அவ இப்படி பதில் சொன்னா,அவ மனசை புரிஞ்சிக்கவே முடியலையே” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டான் ராஜ்.
செந்தாமரை ராஜேஷும் அவர்கள் ஆராய்ச்சி பண்ணினவற்ரை ஒரு புஸ்தகமாக தயார் பண்ணினார்கள்.அந்த ஆராய்ச்சி பிரதியை கொண்டு போய் ‘பிரின்ஸிபால்’ கிட்டே கொடுத்தார் கள்.‘பிரின்சிபால்’ ராஜேஷையும் செந்தாமரையையும் ஒன்றாக பார்த்தவுடன் அவர்களைப் பாத்து “வாங்க,வாங்க,உங்க கணக்கு ஆராய்ச்சி எவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கு” என்று சிரித்துக் கொண் டே கேட்டார்.உடனே ராஜேஷ்” சார்,நாங்க ரெண்டு பேரும் பத்தாதவது பாட வகுப்பு கணக் குகளில் கஷ்டமாக இருந்து வந்த இருபது கணக்குகளை தேர்தெடுத்து,அவைகளை எப்படி சுலபமாக போடு வது என்று ஆராய்ச்சி பண்ணி,அதை விவராமக விளக்கி,ஒரு புஸ்தகமாக தயார் பண்ணி இருக்கோம் நீங்க தயவு செஞ்சி அதை பரிசீலனைப் பண்ணி பார்த்து விட்டு உங்க முன்னுரை தர முடியுமா” என்று கேட்டான்.அவர் உடனே “சரி, நான் என் வீட்டுக்கு இந்த புஸ்தகத்தை எடுத்துக் கிட்டு போய், நிதானமாப் படிச்சுப் பாக்கறேன்.எனக்கு இதை பண்ன ‘ஆபீஸில்’’ டயமே’ இல்லே.நான் படிச்சுப் பாத்து அப்புறம் அதில் ஏதாவது திருத்தம்,இல்லை மாற்றம் பண்ண வேண்டியதா இருந்தா, அதை எல்லாம் பண்ணி விட்டு,என் முன்னுரையை எழுதி உங்க ரெண்டு பேரையும் என் ரூமுக்குக் கூப் பிட்டு சொல்றேன்” என்று சொன்னதும் செந்தாமரை எழுந்து நின்று கொண்டு “இந்தாங்க சார்” என்று சொல்லி அவர்கள் கொண்டு வந்த கணக்கு ஆராய்ச்சி பிரதியை ‘பிரின்ஸிபால்’ கிட்டே கொடுத்தாள். ‘பிரின்ஸிபால்’ செந்தாமரை கொடுத்த கணக்கு ஆராய்ச்சி பிரதியை வாங்கிக் கொண்டார். ‘பிரின்ஸி பால்’ ரூமை விட்டு வெளீயே போகும் போது செந்தாமரை “சார், அப்புறமா நீங்க உங்க நண்பர் கிட்டே சொல்லி இந்த ஆராய்ச்சி பிரதியை ஒரு புஸ்தகமாக ‘பப்லிஷ்’ பண்ண சிபாரிசு பண்ணணும் சார்” என்று சொன்னதும் அவர் உடனே “நிச்சியமா சொல்றேன் செந்தாமரை.அந்தப் பொறுப்பு என்னை சேர்ந்தது.நீங்க ரெண்டு பேரும் கவலைப் படாம இருந்து வாங்க”என்று சிரித்து கொண்டே சொன்னார் ‘பிரின்ஸிபால்’.உடனே ராஜேஷும்,செந்தாமரையும், அவரை பார்த்து “ரொம்ப தாங்ஸ் சார்” என்று தங்கள் கையைக் கூப்பி சொல்லி விட்டு ‘பிரின்சிபால்’ ருமை விட்டு வெளியே வந்தார்கள்.

ராஜேஷ் செந்தாமரை கையைப் பிடிச்சி குலுக்கி “செந்தாமரை நான் உங்களுக்கு ரொம்ப ‘தாங்ஸ்’ சொல்லணும்.எனக்கு சின்ன வயசில் இருந்தே கணக்கில் ஏதாவது ஆராய்ச்சி பண்ணி, அதை ஒரு புஸ்தகமா வெளியிடணும்ன்னு ரொம்ப ஆசை இருந்தது.நீங்களும் கணக்கிலே இவ்வளவு தீவிரமா என்னுடன் சேர்ந்து கணக்கு ஆராய்ச்சி பண்ணி,இந்த ஆரய்ச்சியை இப்போ ஒரு புஸ்தக வடிவமா செய்ய ரொம்ப ‘ஹெல்ப்’ பண்ணீங்க.பல இடங்களில் உங்க கணக்கு அறிவாற்றலைப் பார்த்த போது நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.’பிரின்சிபால்’ நாம செஞ்ச இந்த ஆராய்ச்சியை ஒத்துகிட்டு, அவர் முன்னுரையும் எழுதிக் கொடுத்தா நிச்சியம் இந்த கணக்கு ஆராய்ச்சி ஒரு புஸ்தகமாக வெளி வரும்.பத்தாவது படித்து வரும் பிள்ளைகளுக்கு இந்த கணக்கு ‘கைட்’ ரொம்ப உபயோகமா இருக்கும். இதுக்கு எனக்கு முழு உதவி கொடுத்த உங்களை நான் மிகவும் பாராட்டறேன்” என்று கண்களில் கண்ணீர் மல்க சொன்னான்.உடனே செந்தாமரையும் “நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க.எனக்கும் சின்ன வயசில் இருந்தே இந்த கணக்கு என்றால் வெல்லம்ங்க.எனக்கும் நாம ஒரு கணக்கு புஸ்தகம் போடனும்ன்னு ரொம்ப ஆசைங்க.நீங்க மட்டும் இல்லாது இருந்தா எனக்கு என் இந்த ஆசை வெறும் ‘கானல் நீர்’ போலத் தான் ஆகி இருக்கும்.ஒரு ஏழை பெண்ணால் தனியா இந்த உலகத்திலே இதை பண்ணவே முடியாதுங்க.பத்தாவது படித்து வரும் பிள்ளைகளுக்கு கஷ்டமான கணக்குகளை சுலமாக எப்படி போடுவது என்கிற ஒரு ‘ஐடியாவே’ உங்களுடையது தானேங்க.நான் வெறுமனே உங்க கூட சேர்த்து ஆராய்ச்சி பண்ணேங்க.நீங்க சொன்னா மாதிரி இந்த ஆராய்ச்சி ஒரு புஸ்தக வடிவில் வந்தா எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.இந்த ஆராய்ச்சியில் என்னையும் உங்க கூட சேத்து கொ ண்டதுக்கு நான் தாங்க உங்களுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’ சொல்லணுங்க”என்று சொன்னாள்.

இருபது நாள் கழித்து ‘பிரின்ஸிபால்’ செந்தாமரையையும் ராஜேஷையும் அந்த வார ஞாயித்துக் கிழமை பள்ளி கூடத்திற்கு வரச் சொன்னார்.செந்தாமரையும் ராஜேஷும் தன் ரூமுக்கு வந்ததும் “நான் ஒரு பத்து கணக்கிலே என்னுடைய ‘ஒபினியனை’ உங்க ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லி, அதில் மாற்றங்கள்,திருத்தங்கள் பண்ணி இருக்கேன்” என்று சொல்லி அவர் அந்த பத்து கணக்கு களில் அவர் பண்ணி இருந்த திருத்த்ங்களை சொன்னார்.நாலு மணி நேரம் கழித்து மூவரும் மனம் ஒத்து,அந்த ஆராய்ச்சியை ஒரு புஸ்தக வடிவில் போடுவது என்று முடிவு செய்தார்கள்.செந்தாமரை யும் ராஜேஷும் பிரின்ஸிபாலை மனமார ‘தாங்க்’ பண்ணினார்கள்.உடனே பிரின்ஸிபால் அவர் நண் பருக்கு போன் பண்ணி வரச் சொன்னார்.அவர் நண்பர் வந்ததும் ‘பிரின்ஸிபால்’ ராஜேஷும் செந்தாம ரையும் கொடுத்த கைப்பிரதியை கொடுத்து முதலில் ஒரு நூறு ‘காப்பி’ ‘பிரிண்ட்’ பண்ண சொன்னார். அந்த நண்பரும் “சரி சார்,இந்த புஸ்தகம் ‘மார்கெட்டில்’ எப்படி விக்கறதுன்னு பாக்கலாங்க.அது வேகமாக வித்துப் போனா இன்னும் நூறு காப்பிப் போடலாம் சார்.அது சரி சார் புஸ்தகத்துக்கு என்ன விலை போடலாம் சார்” என்று கேட்டார்” என்று கேட்டார்.உடனே ‘பிரின்ஸிபால்’ “சார்,இது பத்தாம் வகுப்பு படிக்கிற பிள்ளைகளுக்கு ரொம்ப உதவுர கணக்கு புஸ்தகம்.அதிக விலை போட வேணாம்” உங்க ‘பிரிண்டிங்க்’ செலவு போக ரொம்ப குறைவான லாபம் வச்சு விலை போடுங்க” என்று சொன்ன தும் “சரி சார்,நான்அப்படியே செய்றேன்” என்று சொல்லி விட்டு அந்த நண்பர் ‘பிரின்ஸிபால்’ ரூமை விட்டு கிளம்பிப் போனார்.
அடுத்த வாரமே அந்த நண்பர் அந்த கணக்கு புஸ்தகத்தை ‘பிரிண்ட்’ பண்ணி ஒரு பிரதியை மட்டும் கொண்டு வந்து பிரின்சிபால் கொடுத்து விட்டு “சார்,இந்த பிரதி ஒரு ‘காம்ப்லிமெண்டா¢ காப்பி’ உங்களுக்கு.ஒரு பிரதிக்கு நான் இருபது ரூபா விலைப் போட்டு இருக்கேன்.நான் மீதி பிரதி களை சென்னையிலே இருக்கிற பிரபல புஸ்தகக் கடையிலே போட்டு இருக்கேன்.இந்தப் புஸ்தகம் ‘மார்கெட்டிலெ’ எப்படி விலை போவுதுன்னு பர்க்கலாம்.சார்.சீக்கிரமா வித்துப் போனா இன்னும் நூறு புஸ்தகம் போடலாம்ன்னு இருக்கேன்” என்று சொன்னார்.உடனே பிரின்சிபால் “நீங்க புஸ்தகத்துக்கு விலை ரொம்ப ‘ரீஸனபளா’ போட்டு இருக்கீங்க.நீங்க சொன்னா மாதிரி புஸ்தகம் மார்கெட்டில் எப்படி போவுதுன்னு பார்போம் நான் கொடுத்த கைப் பிரதியை புஸ்தகமாக ‘பிரிண்ட்’ பண்ண உங்களுக்கு நான் ரொம்ப ‘தாங்ஸ்’ சார்” என்று சொல்லி நண்பருக்கு நன்றி சொன்னார்.அந்த நண்பர் ரூமை விட்டு வெளீயே போனதும் பிரின்ஸிபால் செந்தாமரை யையும் ராஜேஷையும் தன் ரூமுக்குக் கூப்பி ட்டு நண்பர் கொடுத்த ‘காம்ப்லிமெண்டா¢ காப்பியை’ க் கொடுத்து பார்க்கச் சொன்னார்.ரெண்டு பேரும் அந்த புஸ்தகத்தை வாங்கிப் பார்த்து விட்டு “சார்,ரொம்ப நல்லா ‘பிரிண்ட்’ பண்ணி இருக்கார். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்.இந்த புஸ்தகத்துக்கும் உங்க நண்பர் விலையும் ரொம்ப ‘ரீஸனபலா’ போட்டு இருக்கார்” என்று சந்தோஷத்துடன் சொன்னார்கள்.பிறகு இருவரும் பிரின்ஸிபா லுக்கு தங்கள் நன்றியை சொல்லி விட்டு ரூமை விட்டு வெளியே வந்தார்கள்.

அன்று ஞாயித்துக் கிழமை.செந்தாமரை அம்மாவை அழைத்துக் கொண்டு தாத்தா ஆயாவைப் பார்க்கப் போனாள்.செந்தாமரையையும், தேவியையும், பார்த்த சரவணன ”வாம்மா தேவி,வாம்மா செந்தமரை” என்று சொல்லி அவர்களை வரவேற்று சோபாவில் உட்காரச் சொன்னார். தேவியும் செந் தாமரையும் பாயில் படுத்து இருக்கும் சரஸ்வதியைப் போய் பார்த்தார்கள்.சரஸ்வதி மிகவும் முடியாமல் படுத்துக் கொண்டு முனகிக் கொண்டு இருந்தாள்.கவலைப் பட்டுக் கொண்டு தேவியும் செந்தாமரை சரஸ்வதி பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு,உடம்பு முடியாம முனகிக் கொண்டு இருக்கும் சரஸ்வதி யின் நெத்தியைத் தொட்டுப் பார்த்தார்கள்.சரஸ்வதிக்கு நல்ல ஜுரம் இருந்தது.செந்தாமரை தாத்தா வைப் பார்த்து ‘என்ன தாத்தா ஆயா உடம்பு இப்படி அனலாக் கொதிக்குது. ஆயாவுக்கு மருந்து வாங்கிக் குடுத்து இருக்கீங்களா” என்று கவலையுடான் கேட்டாள்.சரவணன் தன் தலையைத் தொங்க போட்டுக் கொண்டு “டாக்டர் கிட்டே காட்டி நான் மருத்து வாங்கி குடுத்து இருக்கேம்மா.ஆனா எந்த மருந்தும் அவ உடம்பிலே வேலை செய்யலீம்மா.அவளுக்கு சக்கரை வியாதி ரொம்ப முத்திப் போய் இருக்கும்மா.கூடவே அவ ‘கிட்ணி’ ரொம்ப ‘டாமேஜ்’ ஆகி இருக்காம்மா.டாக்டர் அவ இன்னும் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டான்னு சொல்லி என்னை அவளை வீட்டுக்கு அழைச்சிக் கிட்டுப் போக சொல்லிடாங்கம்மா” என்று சொல்லி விட்டு குலுங்கி குலுங்கி அழுதார்.தேவி தன் அப் பாவைப் பார்த்து “அழாதீங்கப்பா.நீங்க அழுறதே என்னால் பாக்க முடியாதுப்பா” என்று சொல்லி அப்பாவை மெல்ல பிடித்து சோபாவில் உட்கார வைத்தாள்.பிறகு தேவி தன் அம்மா பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டு அம்மாவின் கைகளை தடவி கொடுத்தாள்.செந்தாமரையும் ஆயா பக்கத்திலெ உட்காட்ந்துக் கொண்டு ஆயா கால்களை மெல்ல அமுக்கி விட்டுக் கொண்டு இருந்தாள்.சிறிது நேரம் கழித்து இருவா¢டமும் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.
ராணி எட்டாவது பரி¨க்ஷயில் ரொம்ப சுமாரா மார்க் வாங்கி ‘பாஸ்’ பன்ணினாள்.அந்த வருஷ ஆண்டு லீவின் போது ராணி ‘வயசுக்கு’ வந்து விட்டாள்.செந்தாமரை அம்மாவிடமும், அப்பாவிடமும் ராணிக்கு ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்கிற பேரில் வீண் பண செலவு பண்ண வேண்டாம் என்று பல தடவைச் சொல்லிப் பார்த்தாள்.ஆனால் தேவியும், ராஜ்ஜும்,செந்தாமரை சொல்வதைக் கேக்காமல் பிடிவாதமாக “இல்லே செந்தாமு,ராணிக்கு ‘மஞ்சள் நீராட்டு விழா’ பண்ணியே ஆகணும்.அது நம்ப குடும்ப பழக்கம்.அதை நிறுத்தக் கூடாது” என்று சொல்லி பிடிவாதம் பிடிச்சி வரவே வேறே வழி இல் லாமல் செந்தாமரை ஒத்துக் கொண்டு ராணியின் ‘மஞ்சள் நீராட்டு விழாவை’ தேவியும், ராஜ்ஜும், ஆசைப் பட்டது போல,ராணிக்கு புது புடவையும்,’ப்ளஸ்’,அம்மாவுக்கு புது புடவை,’ப்ளவுஸ்’, அப்பா வுக்கு புது ‘ஷர்ட்’,வேஷ்டி,மேல் துண்டு, தனக்கும் புது புடவை,’ப்ளவுஸ்’ எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தாள்.பிறகு தாதாவையும்,ஆயாவையும், மத்த எல்லா உறவுக்காரங்களையும் அழைத்து வந்து மூனு நாளும் விருந்து சாப்பாடு போட்டாள்.

ஒரு வாரம் தான் ஆகி இருக்கும்.ராஜ்ஜுக்கு ஜுரம் வந்தது.அவர் கமலாவை அழைத்துக் கொண் டு போய் டாக்டர் இடம் காட்டி மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு வந்தார். மருந்து மாத்திரை சாப்பிட்ட ஒரு வாரம் தான் ராஜ் சரியாக இருந்தார்.அடுத்த வாரமே மறுபடியும் அவருக்கு ஜுரம் வர ஆரம்பித்தது.ராஜ்ஜை பரிசோதித்த டாக்டர் கமலாவைப் பார்த்து “அம்மா இப்படி இவருக்கு வாரம் தவறாம ஜுரம் வருது.மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தா ஜுரம் குறையுது. ஆனா அடுத்த வாரமே இவருக்கு மறுபடியும் ஜுரம் வருதே.இதை இப்படியே விடக்கூடாதுங்க.இவருக்கு இன்னும் சில ‘டெஸ்டுகள்’ பண்ணி பார்க்கணும்மா.அப்பத் தான் இந்த மாதிரி ஜுரம் ஏன் அடிக்கடி வருதுன்னு கண்டு பிடிக்க முடியுங்க” என்று சொன்னதும் கமலா மிகவும் கவலைப் பட்டாள்.அப்பா வை ஆட்டோ வில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.ஆட்டோவில் தன் அப்பாவை மெல்ல இறக்கிக் கொண்டு வந்து,வீட்டுக்குள் வந்ததும் அப்பாவை கட்டிலில் படுக்க வைத்தாள் கமலா. சாயங்காலம் செந்தாமரை பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வந்ததும் தன் அப்பா கட்டிலில் படுத்து இருப்பதைப் பார்த்து பயந்துப் போய் அப்பாவைத் தொட்டுப் பார்த்தாள்.காளிக்கு நல்ல ஜுரம் இருந் தது.உடனே கமலாவும் தேவியும் செந்தாமரையை பார்த்து டாக்டர் சொன்ன எல்லா விஷயங்களையும் விவரமாக சொன்னார்கள்.உடனே செந்தாமரை ”அப்படியாம்மா. நீங்க ரெண்டு பேரும் கவலைப் படாம இருந்து வாங்க.நான் நாளைக்கு ஒரு நாள் லீவு போட்டு விட்டு அப்பாவை டாக்டர் கிட்டே அழைச்சுப் போய் எல்லா ‘டெஸ்ட்டுகளையும்’ செஞ்சுக் கீட்டு வறேம்மா” என்று சொல்லி விட்டு தன் புஸ்தகங்களை எல்லாம் மேஜை மேலே வைத்து விட்டு தன் கை கால்களை எல்லாம் கழுவி கிட்டு வந்தாள்.தேவி செந்தாமரைக்கு சாப்பிட நாஷ்டாவும்’ டீயும்’ கொடுத்தாள்..

அடுத்த நாள் காலையில் செந்தாமரை எழுந்து குளித்து விட்டு சாமி கும்பிட்டு விட்டு தன் பள்ளி கூடத்திற்கு போன் பண்ணி ஒரு நாள் லீவு போட்டாள்.அம்மா கொடுத்த நாஷ்டாவை சாப்பிட் டு விட்டு,டீயையும் குடிச்சு விட்டு,அப்பாவை மெல்ல ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு போய் டாக்டர் இடம் காட்டினாள்.உடனே டாக்டர் “அம்மா,நான் இவருக்கு வர ஜுரத்தை கண்டு பிடிக்க சில ‘டெஸ்ட்டுகள்’ பண்ண வேண்டும்மா.பண்ணட்டுமாம்மா” என்று கேட்டதும் செந்தாமரை உடனே “செய்யுங்க டாக்டர்“என்று சொன்னதும் அவர் உடனே சில ‘டெஸ்டுகளை’ எல்லாம் எழுதி கொடுத் தார்.செந்தாமரை டாக்டர் சொன்ன ‘டெஸ்டுகளை’ எல்லாம் செய்து வர அப்பாவை ‘லாபுக்கு’ அழை த்துப் போனாள். டாக்டர் சொன்ன எல்லா ‘டெஸ்ட்டுகளுக்கும்’ பணத்தை கட்டினாள் செந்தாமரை. ‘லாபில்’ எல்லா ‘டெஸ்ட்டுகள்’ செய்து முடிந்ததும் ‘ரிசல்டுகளுக்காக’ காத்து இருந்தாள் செந்தாமரை. எல்லா ‘ரிஸட்டுகளும்’ கையில் கிடைத்ததும் செந்தாமரை அவைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் டாக்டா¢டம் கொடுத்தாள்.உடனே அந்த டாக்டர் செந்தாமரை கொடுத்த எல்லா ‘டெஸ்ட்ரிப்போ ர்ட்களையும்’ நிதானமாக பார்த்தார்.‘ரிசல்ட்டுகளை’ எல்லாம் பார்த்து முடித்ததும் டாக்டர் செந்தாமரை யைப் பார்த்து ”அம்மா, இவருக்கு ‘லீவர்’ ரொம்ப மோசமா இருக்கும்மா.இவருக்கு குடிப் பழக்கம் உண் டா” என்று கேட்டதும் செந்தாமரைக்கு பாம்பைத் தீண்டியது போல இருந்தது.தன் மகள் செந்தாமரை டாக்டர் கிட்டே சொல்லத் தயங்குவதை கவனித்த டாக்டர் “நீங்க சின்ன வயசிலே குடிச்சதே உங்க ‘லீவரை’க் கொஞ்சம் கொஞ்சமா கெடுத்து வந்து இருக்குங்களே” என்று சொன்னார் டாக்டர். கொஞ்சம் நேரம் ஆனதும் டாக்டர் செந்தாமரையைப் பார்த்து ”அம்மா நீங்க இனிமே இவருக்கு எந்த எண்ணை தின்பண்டங்களை சாப்பிட குடுக்காதீங்க.சீக்கிரமா சுலபமா ஜீரணம் ஆக கூடிய சாப்பா ட்டை மட்டும் குடுத்து வாங்க.நான் எழுதித் தரும் மாத்திரைகளை எல்லாம் தவறா சாப்பிட்டு வரச் சொல்லுங்க.ஜுரம் வந்தா இங்கே இட்டு கிட்டு வாங்க” என்று சொல்லி விட்டு அவர் ‘லெட்டர் பாடில்’ சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.ஆட்டோவில் அப்பாவை ஏற்றிக் கொண்டு வரும் வழியில் மருந்துக் கடையில் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து, ஆட்டோவுக்கு பணத்தை கொடுத்து விட்டு,அப்பாவை மெல்ல பிடித்து வீட்டு க்குள்ளே வந்து அப்பாவை மெல்ல பிடித்து படுக்கையில் படுக்க வைத்தாள் செந்தாமரை.கவலை யுடன் ”அம்மா, அக்கா,அப்பாவுக்கு ‘லீவர்’ ரொம்ப மோசமா இருக்குன்னு சொல்லி விட்டாரும்மா.அப்பாவுக்கு சாப்பிடற சாப்பாடு ஜீரணம் ஆவுறது ரொம்ப கஷ்டம்மா.தவிர அடிக்கடி ஜுரம் வேறே வரும்மா. அப்பாவுக்கு இனிமே சாப்பிட எந்த விதமான எண்ணைப் பண்டமே குடுக்கக் கூடாதுன்னு டாக்டர் கண்டிப்பா சொல்லி விட்டாரும்மா” என்று வருத்தத்துடன் சொன்னாள்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *