கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2019
பார்வையிட்டோர்: 7,401 
 
 

அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 | அத்தியாயம்-19

“என்னங்க இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறீங்க. என்னால் இதை தாங்கிக்கவே முடியலீங்க.எனக்கு இனிமே குழந்தையே பிறக்காதா.எனக்கு இன்னும் ஒரு குழந்தை வேணுங்க.இன்னும் ஒரு குழந்தை வேணுங்க” என்று சொல்லி அவள் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு ‘ஓ’வென்று அழ ஆரம்பித்தாள் கமலா.நடராஜன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.பிறகு நிதானமா இந்த ஜென்மத்லெ நமக்கு இந்த ஒரு குழந்தை ஒன்னு தான்னு அந்த ஆண்டவன் அருளி இருக்காரு.நாம இதை ஏத்துக்கிட்டு சந்தோஷமாய் இருந்து வரணும் தெரியுதா.வீணா அழுது எல்லாம் உன் உடம்பை கெடுத்துக்காதே.இப்படி அழுவதால் ஒன்னும் மாறப் போவது இல்லை” என்று பொறுமையாகச் சொன்னான் நடராஜன்.இந்த நேரம் பார்த்து சிவலங்கமும் சரோஜாவும் கோவிலில் இருந்து திரும்பி வந்தார்கள்.உடனே இருவரும் உடனே உள்ளே வந்து “ஆமாம் கமலா, மாப்பிள்ளை சொல்றது உண்மை தாம்மா. நீ இப்ப அழாதேம்மா.அழறதால்லே ஒன்னும் பிரயோஜனம் இல்லேம்மா.நாம எல்லோரும் சேர்ந்து இந்த குழந்தையை நாம நல்லா வளப்போம்.அழாதே.கண்னைத் துடைச்சுக் கோம்மா” என்று வருத்தப் பட்டுக் கிட்டே சிவலிங்கம் சொன்னார்.

நெடு நேரம் வரை கமலா அழுதுக் கொண்டே இருந்தாள்.கடைசியில் நடராஜன் அவளை சமாதானப் படுத்திய பிறகு நேரம் கழித்து கொஞ்சம் சமாதானம் அடைந்தவளாக கமலா அழுகையை நிறுத்தி விட்டு சாதாரணமாக இருந்து வந்தாள்.

முத்தம்மாவுக்கு அடிக்கடி நெஞ்சு வலி வந்துக் கொண்டு இருந்தது.என்ன சொல்லியும் அவள் அந்த நெஞ்சு வலியை டாகடா¢டம் காட்டிக் கொள்ள மாட்டேன்’ என்று சொல்லி பிடிவாதம் பிடித்து வந்தாள்.இதை எண்ணி ராணீ மிகவும் வருத்தப் பட்டாள்.

‘நாம காதலிச்சு,ஆசைப் பட்டு சேகரை கல்யாணம் பண்ணிக் கிட்டோம்.ஆனால் சேகரோ இப்ப ஜெயிலில் இருக்கார்.அவர் வெளியில் எப்போ வருவாரோ,இல்லை வெளியில் வரவே மாட்டாரோ என்று நமக்குத் தெரியலே.நாம் கல்யாணம் பண்ணிக் கிட்டு ஐஞ்சு வருஷத்துக்கு மேலே ஆவப் போவுது. நம்முடைய இளமை வீணாகிக் கிட்டு போவுது.நாம் குழந்தை பெத்துக் கொள்ளும் வயசை தாண்டுவதற்குள் ஒரு குழந்தையை பெத்துக் கொள்ள வேணாவா. நாம் என்ன பண்ணலாம்.நம் வாழ்க்கையை எப்படி அமைச்சுக் கொள்ளலாம்’ என்று தன் தலையை பிச்சிக் கொண்டு யோஜனைப் பண்ணினாள் ஜோதி. அவள் வேலை செய்யும் பிளாட்டில் கார் டிரைவராக வேலை செய்து வரும் டேவிட் ஜோதியைப் பாத்து அடிக்கடி பேச்சு குடுத்து பேசி வந்தான்.ஜோதிக்கு ஆரம்பத்தில் அவன் தன்னுடன் பேச்சு குடுத்து பேசி வருவதை விரும்ப வில்லை.ஒரு தடவை அவனை நேரே பாத்து “எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்க நீங்க இப்படி நான் போகும் போதும்,வரும் போதும் என் கிட்டே பேச்சு குடுத்து பேசுவது எனக்குப் பிடிக்கலீங்க” என்று சொல்லி விட்டாள் ஜோதி.அவள் சொல்லியும் டேவிட் ஜோதியைப் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது பேசிக் கொண்டு தான் இருந்தான்.ஒரு நாள் டேவிட் ஜோதி இருக்கும் கே. கே. நகர்க்கு ஏதோ வேலையாய் வந்த போது எதேச்சையாக ஜோதியை ஒரு கடையில் பார்த்தான்.அவள் கடையில் இருந்து வெளியில் வந்த போது “ நான் உங்க கிட்ட இப்படி அடிக்கடி பேசி விறேன்னு நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்குங்க. நான் சத்தியமா சொல்றேன் நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக் கிட்டா உங்களை கண் கலங்காம காலம் பூராவும் வச்சு காப்பாத்துவேங்க. நீங்க என்னை தப்பா புரிஞ்சிக் காமா இருந்தா நாம் ரெண்டு பேரும் இதோ எதிரில் இருக்கும் பார்க்கில் ஒரு பத்து நிமிஷம் பேசலாமா.அப்படி நான் மனம் விட்டுப் பேசின பிறகு என்னை உங்களுக்கு என்னைப் பிடிக்கலேன்னா நான் உங்களுடன் பேசுவதை நான் நிறுத்திக்கிறேன் ஜோதி.’ப்ளீஸ்’ கொஞ்சம் வாங்க”என்று கெஞ்சினான்.யோஜனைப் பண்ணினாள் ஜோதி.’அவர் என்ன தான் சொல்றார்ன்னு கேப்போமே.அப்புறமா எனக்குப் உங்களே பிடிக்கலீங்கன்னு சொல்லி விடலாமே’ என்று யோஜனை பண்ணி “சரிங்க நான் பத்து நிமிஷம் தான் இருப்பேன்.எனக்கு வூட்டிலே நிறைய வேலை இருக்கு.நான் சீக்கிரமா போவணும்” என்று சொல்லி அவன் பின்னால் பார்க்குக்கு போய் அவனுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு பென்சில் உட்காந்தாள்.

“ஜோதி நான் சொல்றது புராவும் சத்தியம்.நான் இந்த சிலுவையை கையில் பிடிச்சுக் கிட்டு உனக்கு சொல்றேன்” என்று சொல்லி தன் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த சிலுவையை கையில் பிடித்துக் கொண்டு சொன்னான்.“நீ வேலை செய்யற ஐயாவுக்குத் தான் நான் கார் ஓட்டறேன் ஜோதி.ஒரு நாள் எங்க ஐயா செல் போனை மறந்து விட்டு வந்து காரில் ஏறிக் கிட்டு ‘டேவிட் சீக்கிரமா கார் ஓட்டு.கோர்ட்டுக்கு நேரமாச்சு’ ன்னு சொன்னாரு. நானும் காரை ‘ஸ்டார்ட்’ பண்ணி கேட்டு வரை வந்து விட்டேன்.என் கார் கண்ணாடியில் நீ கையை செல் போனை உசத்திக் காட்டிகிட்டு ஓடி வரதே நான் பாத்தேன்.உடனே நான் ஐயா கிட்டே “சார் நம்ம வீட்டுலே வேலை செய்யற பொண்ணு ஓடி வருது” ன்னு சொன்னவுடன்,அவரும் திரும்பிப் பாத்து “ஆமா காரை நிறுத்து.என்னன்னு பாக்கலாம் ன்னு சொன்னார் அவர்.நானும் காரை உடனே ‘ப்ரேக்’ போட்டு காரை நிறுத்தினேன்.அப்போ நீங்க ஓடி வந்து “ஐயா நீங்க செல் போனை மேஜை மேலே வச்சுட்டு கிளம்பிட்டீங்க.அம்மா தான் இதைப் பாத்து எடுத்துக் குடுத்து என்னை ‘ஜோதி,ஓடிப் போய் இந்த செல் போனை ஐயா கிட்டே குடுத்துட்டு வா. அவர் மறந்து விட்டு போயிட்டார்’ன்னு என் கிட்டே சொல்லி என்னை அனுப்பினாங்க ’ன்னு சொல்லிட்டு செல் போனை ஐயா கிட்டே குடுத்தீங்க.போற வழியிலே ஐயா எங்கிட்டே ”டேவிட், ரொம்ப நல்ல பொண்ணு இந்த ஜோதி.அவ புருஷன் ஒரு ஆட்டோ டிரைவரா வேலை செஞ்சி கிட்டு இருந்தான்.பாவம் பணத்தாசையாலே அவன் ‘கஞ்சா’க் கடத்தி போலீஸ் கிட்டே மாட்டிக் கிட்டு இப்போ ஜெயிலில் இருக்கான்.என்னைக் கூட அவ ‘கஞ்சா கேஸ்லே’ மாட்டிக் கிட்டா வெளியில் வர முடியாதுங்களா’ ன்னு கேட்டா.நான் ‘கஞ்சா கேஸ்லே மாட்டினா ஜாமீன் கூட தரமாட்டாங்கம்மா.’ கேஸ்’ முடிஞ்சு தான் வெளியில் வர முடியும்’ன்னு சொன்னேன் பாவம் அந்த பொண்ணு. கட்டின புருஷன் இல்லாம இந்த பொண்ணு ஐஞ்சு வருஷமா தனியா வாழ்ந்து கிட்டு இருக்குது”ன்னு சொன்னார் ஜோதி.அப்போ தான் உங்க பேர் எனக்கு தெரிஞ்சிச்சு” என்று சொல்லி நிறுத்தினான் டேவிட்.சற்று கழித்து “ஜோதி,நான் என் கதையை சொல்றேன்.தயவு செஞ்சி கொஞ்சம் கேளுங்க. எனக்கும் என் அத்தை மகளுக்கும் கல்யாணம் பண்ணுவதுன்னு சின்ன வயசிலிருந்தே ரெண்டு பக்க பெரியவங்களும் முடிவு பண்ணி இருந்தாங்க.என் அத்தை மக பாக்க ரொம்ப அழகா இருப்பா.நல்ல நிறமாயும் இருப்பா. நான் வெறும் S.S.L.C. தாங்க பாஸ் பண்ணி இருக்கேன்.எனக்கு அதுக்கு மேலே படிப்பு ஏறலீங்க.ஆனா அவ ‘கம்ப்யூட்டர்’ படிப்பு படிச்சு இப்போ நல்ல வேலையிலே இருக்கா. திடீரென்று ஒரு நாள் அவ ‘நான் டேவிட்டை கல்யா ணம் கட்டிக்க மாட்டேன். என் கூட வேலை செய்யற ஒருத்தரை நான் மனசார காதலிக்கிறேன்.அவரைத் தான் நான் கல்யாணம் கட்டிக்கப் போறேன்’ன்னு சொல்லிட்டாங்க.நான் மனசு உடைஞ்சு போயிட்டேன்ங்க.என் அத்தையும் அவங்க புருஷனும் ‘அவங்க மக சொன்னதை தான் பண்ணுவோம்’ன்னு பிடிவாதமா சொல்லி ட்டாங்க.என் அப்பா அம்மாவாலே ஒன்னும் செய்ய முடியலே.ரெண்டு பேரும் ரொம்ப வருத்தப் பட்டாங்க” என்று சொல்லும் போது அவன் கண்கள் குளமாயின. டேவிட் தன் பாக்கெட்டில் கையை விட்டு கைக்குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.கொஞ்ச நேரம் ஆன பிறகு“அதுக்கு அப்புறம் நான் என் அப்பா அம்மா கிட்டே ‘நீங்க ரெண்டு பேரும் இனிமே எனக்கு எந்த பொண்ணையும் பாக்க வேணாம்.நானே ஒரு ஏழை பொண்ணா பாத்து,பேசிப், பழகி,எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடிச்சு இருந்தா நாங்க கல்யாணம் கட்டிக்கிறோம்’ என்று நான் தீர்மானமா சொல்லி விட்டேங்க” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.பிறகு “கால் வயிறு கஞ்சி குடிச்சா லும்,நாம சந்தோஷமா வாழணுங்க.நான் உங்களை கல்யாணம் கட்டிக் கிட்டா உங்களை நான் கண் கலங்காம வச்சு காப்பாத்துவேங்க.நான் இதை எங்க கர்த்தர் இயேசு சத்தியமா சொல்றேங்க .இவ்வளவு தாங்க நான் உங்க கிட்ட சொல்லணும்ன்னு ஆசைப் பட்டேங்க. இனிமே நீங்க என்ன முடிவு பண்ணாலும் சரிங்க.அப்படி நீங்க என்னை கல்யாணம் கட்டிக்க மாட்டேன்ன்னு சொல்லி விட்டா, வேறு ஒரு ஏழை பொண்ணை நான் தேடிக்கிறேங்க” என்று சொல்லி விட்டு எழுந்து நின்றான்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்த ஜோதி “எனக்கு ஒரு வாரம் டயம் குடுங்க.நான் நிதானமா யோசனை பண்ணி பதில் சொல்றேன்” என்று சொன்னதும் “நீங்க எத்தனை நாள் வேணுமோ அத்தனை நாள் எடுத்துக்குங்க.ஆனா நல்ல பதிலா சொல்லுங்க.அது தாங்க எனக்கு வேணுங்க” என்று சொன்னான் டேவிட். ‘இந்த ஆள் வாழ்க்கையிலும் இந்த மாதிரி சோகமா’ என்று எண்ணிக் கொண்டே ஜோதி வீடு வந்து சேர்ந்தாள். வீட்டுக்கு வந்த ஜோதி யோஜனைப் பண்ணினாள்.ப் இப்ப நாம இவரை வேணாம்ன்னு சொல்லி¢ட்டா, நமக்கு என்று எந்த ஆண் துணை இனிமே கிடைக்கப் போவுது நாம ஒன்னா சேர்ந்து வாழ்க்கை வாழ்ந்து வருவதுக்கு அவர் சொன்ன துக்கு ’சரி’ என்று சொல்வோம்ன்னு வச்சு கிட்டா இவர் கிருஸ்த மதத்தை சேர்ந்தவர்ஆச்சே.நாமோ இந்து ஜாதி. ரெண்டு பேர் நடுவிலும் இந்த ஜாதி வித்தியாசம் வேறு இருக்குதே. என்ன பண்ணுவது. என்று அவள் யோசித்தாள்.

அடுத்த நாள் லக்ஷ்மணன் அண்ணன் வீட்டிலே புது ஆட்டோ வாங்கி இருப்பதை ஒட்டி ஒரு சின்ன ‘பார்ட்டி’க்கு ஏற்பாடு பண்ணி இருந்தார்கள்.அவர்கள் ஜோதியையும் அந்த ‘பார்ட்டி’க்கு அழைத்து இருந்தார்கள்ஜோதி முகம் கழுவிக் கிட்டு,நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கிட்டு அந்த பார்ட்டிக்கு கிளம்பிப் போனள்.“வா, ஜோதி வா” என்று ஜோதியை வரவேற்றார் லக்ஷ்மணன்.உள்ளே போனாள் ஜோதி.சற்று நேரத்திற்கெல்லாம் ஐயர் வந்து புது ஆட்டோ வுக்கு பூஜை செய்ய ஆரம்பித்தார்.ஆட்டோவுக்கு நிறைய மாலைகள் போட்டு, மந்திரங்கள் எல்லாம் சொல்லி, பூஜை செய்து முடித்தார் ஐயர்.ஜோதி பார்ட்டியிலே சாப்ப்ட்டு விட்டு மணி அதிகம்ஆகி விடவே “நானும் கிளம்பறே ணுங்க.எனக்கும் நாளைக்கு காலையிலேயே வேலைக்கு போவணுங்க” என்று சொன்னாள்.

லக்ஷ்மனன் ஜோதியிடம் தனியாக “நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதேம்மா.நானும் இந்த அஞ்சு வருஷா ‘என் தம்பி உன்னை கல்யாணம் பண்ணிக் கிட்டு இப்படி தனியா தவிக்க விட்டு விட்டு ஜெயிலில் இருக்கிறானே’ன்னு எண்ணி வேதனை பட்டுக் கிட்டு வரேம்மா.எனக்கு என்ன பண்ணுவதுன்னே தெரியலேம்மா. மனசு ரொம்ப கஷ்டப் படுது.உன் வாழ்க்கை இப்படி வீணா போவக் கூடாதும்மா.உனக்கும் வயசு கூடிக் கிட்டே போவுது.உனக்குப் பிடிச்ச யாராவது ஒரு நல்ல பையணா பாத்து நீ இன்னொறு கல்யாணம் பண்ணிக்கம்மா.அது தான் உஅனக்கு நல்லதும்மா” சொல்லும் போது அவர் கண்களில் நீர் சுரந்தது. பக்கத்தில் இருந்த தேவி “ஆமாம்மா அவர் சொலதில் எனக்கு தப்பு ஒன்னும் இருப்பதா தெரியலேம்மா.ஒரு ஆண் துணை இல்லா நீ காலம் பூராவும் இருந்து வர முடியாதும்மா” என்று தன் கணவன் சொன்னதை ஆமோதித்தாள்.“சரி, அண்ணே நான் யோஜனை செஞ்சி சொல்றேங்க” என்று சொல்லி விட்டு அவர்களிடம் சொல்லிக் கொண்டு அவள் வீடு வந்து சேர்ந்தாள்.

காலையில் எழுந்து அவள் பல் தேய்த்து விட்டுகோடிக் கடை நாயர் கடையில் ஒரு டீ குடித்து விட்டு வீட்டு வேலைக்குக் கிளம்பினாள் ஜோதி.அன்றும் தினமும் நின்றுக் கொண்டு இருப்பதை போல் டேவிட் தன் வெள்ளை யூனி·பாரம் போட்டுக் கொண்டு காரை துடைத்துக் கொண்டு இருந்தான் .தூரத்தில் வரும் ஜோதியைப் பார்த்ததும் அவன் கார் துடைப்பதை நிறுத்தி விட்டு அவள வருவதையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்.ஜோதி அவனை தாண்டிப் போனாளே தவிர அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.டேவிட்டைப் பத்தி நாம யார் கிட்டே விசாரிக்கல்லாம் என்று யோஜனைப் பண்ணினாள் ஜோதி.அன்று சாயங்காலம் அவள் டீ குடிக்க நாயர் கடைக்குப் போனாள்.வழியில் அவள் ‘ப்ளாட்டில்’ ‘செக்யூரிட்டியாக’ வேலை செய்யும் பெரியவரை பார்த்தாள் ஜோதி.சட்டென்று அவரைப் பாத்து “என்னை தெரியுதா.எங்கே இந்த பக்கம் போய்க் கிட்டு இருக்கீங்க” என்று பேச்சு கொடுத்தாள் ஜோதி.“உன்னை தெரியாம என்னம்மா..நான் எனக்கு ‘மார்னிங்க டியூட்டி’ இருக்கும் போதெல்லாம் என்னாலே சர்ச்சுக்கு போவ முடிவதில்லே.அதனால்லே நான் வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு சாயங்காலமா சர்ச்சுக்கு போவேம்மா.இன்னிக்கும் நான் சர்ச்சுக்குத் தான் போய் கிட்டு இருக்கேன்.நீ இங்கே தான் இருக்கியாம்மா” என்று கேட்டார் அவர்.“ஆமாங்க” என்று சொல்லி விட்டு ‘இவரும் ஒரு கிருஸ்தவரா இருக்காரே. இவருக்கு டேவிடை தெரிஞ்சு இருக்குமே.ஏன் நாம் இவரை டேவிட்டைப் பத்தி விசாரிக்கக் கூடாது’ என்று எண்ணி சட்டென்று ”ஏங்க பெரியவரே,நம்ப ப்ளாட்டிலே கார் டிரைவரா வேலை செய்யற டேவிடை உங்களுக்கு நல்லா தெரியுமா” என்று கேட்டாள் ஜோதி.உடனே அந்த பெரியவர் ”எனக்கு டேவிட்டை நல்லா தெரியும்மா.நல்ல பையன்ம்மா அவன்.பாவம் அவன் அத்தை மக அவனை கல்யாணம் கட்டிக்க மாட்டேன்ன்னு சொன்னதில் இருந்து ரொம்ப மனசு உடைஞ்சி இருக்கான்.அவன் தவறாம ஞாயித்துக் கிழமைங்கள்ளே சர்ச்சுக்குப் போவாம்மா.யோக்கியமான பையம்மா அவன்” என்று சொன்னார் அவர்.‘எங்கே இவர் டேவிட் இடம் தான் விசாரித்ததை சொல்லி விடப் போகிறாரோ’ என்று பயந்து உடனே “நான் உங்க் கிட்டே அவரைப் பத்தி விசாரித்ததை தயவு செஞ்சி சொல்லாதீங்க” என்றாள் ஜோதி.“நான் சொல்ல மாட்டேம்மா” என்று சொல்லி விட்டு தன் கை கடிகாரத்தைப் பார்த்தார். “எனக்கு சர்ச்சுக்கு நேரம் ஆவுதம்மா. நான் வரேன்ம்மா” என்று சொல்லி விட்டு வேகமாக நடந்துப் போனார் அந்த பெரியவர்.டேவிட்டைப் பத்தி நல்ல அபிப்பிராயம் சொன்னது ஜோதியின் மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது .

கடவுளை வேண்டிக் கொண்டு அடுத்த நாள் ஒரு காகிதத்தில் ‘நீங்க நாம சந்தித்த பார்க்குக்கு இன்னிக்கு சாயங்காலம் ஒரு ஏழு மணிக்கு வர முடியுமா.நான் அங்கு காத்து இருக்கேன் என் செல் போன் நம்பர் 9955667712. எனக்கு மதியம் ரெண்டு மணிக்கு மேலே போன் பண்ணி சொல்லுங்க. அப்போ தான் நான் வீட்டுக்கு வந்து இருப்பேன்’ என்று எழுதி அதை நாலா மடித்து வைத்துக் கொண்டாள் ஜோதி.தான் வேலை செய்யும் ‘ப்ளாட்டிற்குள்’ நுழைந்ததும் டேவிட் இருக்காரா என்று பார்த்தாள்.டேவிட் கண்ணில் படவில்லை.ஆனால் கார் முன் கதவு லேசாக திறந்து இருந்தது.மெல்ல கார் கிட்டே வந்தாள் அவள்.டேவிட் காரின் உள்ளே ஒரு வார பத்திரிக்கை படித்துக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தான். ஜோதி சட்டென்று அவனிடம் தான் கொண்டு வந்த லெட்டரைக் கொடுத்து விட்டு அங்கே நிக்காம ‘ப்ளாட்டின்’ உள்ளே போய் விட்டாள் ஜோதி.லெட்டரைப் பிரித்துப் படித்தான் டேவிட்.அவனுக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.வக்கீலை கோர்ட்டில் விட்டு விட்டு காரை அங்கேயே பார்க் பண்ணி விட்டு மணி ரெண்டு அடித்ததும் ஜோதிக்கு போன் பண்ணி தான் இன்னிக்கு ஏழு மணிக்கு பார்க்கில் சந்திக்க வருவதாய் சொன்னான் டேவிட்..வக்கீலை சாயங்காலம் வீட்டில் விட்டு விட்டு டேவிட் வழியில் டிபன் சாப்பிட்டு விட்டு பார்க்குக்கு சரியாய் ஏழு மணிக்கு வந்தான்.அங்கு காலியாய் இருந்த ஒரு பெஞ்சில் ஜோதி உட்கார்ந்துக் கொண்டு இருப்பதை தூரத்திலேயே கவனித்தான் டேவிட்.நேரே அங்கு போய் அவனும் அவள் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டான்.இருவரும் கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்தனர்.முதலில் ஜோதி தான் பேச ஆரம்பித்தாள்.“நீங்க சொன்னதை நான் யோசிச்சேங்க.நாம் ரெண்டு பேரும் கொஞ்ச நாள் மனம் விட்டுப் பேசி,பழகி ஒரு முடிவுக்கு வரலாங்க.நீங்க என்ன நினைக்கிறீங்க” என்று பேச்சைத் தொடங்கினாள்.“எனக்கு பூரண சம்மதங்க.உங்களுக்கு இன்னும் என்ன தெரியனும்ன்னு நினைக்கிறீங்களோ அதை எல்லாம் என்னை கேளுங்க.நான் உங்களுக்கு உண்மையா எல்லாத்தையும் சொல்றேன்” என்று சொல்லி விட்டு ஜோதியைப் பார்த்தான் டேவிட்.

“உங்களுக்கு தெரியும்,நான் ஏற்கெனவே கல்யாணம் ஆனவ.அவர் ஜெயிலுக்குப் போனப்புறம் நான் ஒரு ஆம்பிள்ளை கிட்ட கூட பழகினதில்லை.வீட்டு வேலை செஞ்சி நான் வாழ்ந்து வரேன். இந்த நிலையில் நீங்க என்னை கல்யாணம் கட்டிக் கொள்ள நிச்சியமா விரும்புகிறீங்களா.அப்படி பண்ணிகிட்டா என்னை சந்தோஷமா,கண் கலங்காம வச்சுக் கிட்டு குடித்தனம் பண்ணுவீங்களா” என்று நோ¢டையாகவே கேட்டாள் ஜோதி.“நான் நல்லா யோசனைப் பண்ணித் தாங்க உங்க கிட்டே நானே ‘நான் உங்களை விரும்பறேன்னு,நீங்க ஒத்துக் கிட்டா நான் உங்களை கல்யாணம் பண்ணி உங்களை கண் கலங்காமா நான் பாத்துக்குவேன்னு சொன்னேனுங்க.எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதிலே எனக்கு முழு சம்மதங்க” என்றான் டேவிட்.ஜோதிக்கு அவன் சொன்னது கொஞ்சம் மனதுக்கு இதமாய் இருந்தது.சற்று நேரம் கழித்து “ஏங்க நான் இந்து பொண்ணு.நீங்க கிருஸ்தவ ஜாதியை சேர்ந்த வங்க. உங்க வீட்டிலே என்னை ஏத்துப்பாங்களாங்க” என்று கேட்டாள் ஜோதி.“உங்களுக்கு என்னைப் பிடிச்சு இருந்து, நீங்க என்னை நிச்சியம் கல்யாணம் செஞ்சிக்க றீங்கன்னு தெரிஞ்சா நான் என் அப்பா அம்மா கிட்டே சொல்லி அவங்க அனுமதியை நிச்சியமா வாங்குவேங்க” என்றான் டேவிட்.“ரொம்ப சந்தோஷங்க,நீங்க இனிமே என்னை ஜோதின்னே கூப்பிடுங்க.உங்க அப்பா அம்மா கிட்டே அனுமதி சீக்கிரம் வாங்கி விடுங்க” என்றாள் ஜோதி.“சரி ஜோதி,நான் அவங்க கிட்டே எல்லாம் விவரமா சொல்லி,அவங்க கிட்ட சீக்கிரம் அனுமதி வாங்கி விடறேன்” என்றான் டேவிட்.ஜோதி எழுந்துக் கொண்டு “ரொம்ப தாங்க்ஸ்ங்க. அப்போ நான் போய் வரேணுங்க” என்று சொல்லி கிளம்ப தயாரானாள் “நானும் போய் வரேன் ஜோதி” என்று சொல்லி விட்டு டேவிடும் கிளம்பினான்.

அன்றே வீட்டுக்கு வந்த டேவிட் இரவு சாப்பாடு சாப்பிடும் போது மெல்ல தன் பெற்றோர் களிடம் “அப்பா ,அம்மா, நான் ஜோதி என்கிற பெண்ணைக் காதிகிக்கிறேன். அவளை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்” என்று சொல்லி விட்டு ஜோதியைப் பத்தி எல்லா விவரமும் மறைக்காமல் டேவிட் சொன்னான்.அவர்கள் இருவரும் “உனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தா எங்களு க்கும் சம்மதம்” என்று சொல்லி விட்டார்கள்.தினமும் சாயங்காலம் ஜோதியும் டேவிடும் பார்க்கில் சந்தித்து மனம் விட்டு பேசி வந்தார்கள்.அடுத்த நாள் பார்க்கில் ஜோதியை சந்தித்த போது டேவிட் தன் பெற்றோர்கள் சம்மதத்தை வாங்கி விட்டதாக சந்தோஷமாக சொன்னான்.உடனெ ஜோதி” ரொம்ப சந்தோஷங்க” என்று டேவிட் கையைப் பிடித்து தன் நன்றியை சொன்னாள் ஜோதி.

நடராஜன் தவறாமல் மாசா மாசம் ராணீக்கு ஆறு நூறு அனுப்பி வந்தான்.ராணீ அந்த ஆறு நூறு பணம் பெற்றுக் கொள்ளும் போதெல்லாம் அவளுக்கு மிகவும் வேதனையாய் இருந்தது.‘குழந்தை பிறந்த பிறகும் அந்த ஐயா தனக்கு இன்னும் பணம் அனுப்புகிறாரே பாவம்.‘எனக்கு நீங்க இனிமே பணம் அனுப்ப வேணாங்க. நான் வேலை செஞ்சுது சம்பாத்திக்கறேனு ங்க. என்று நான் அவருக்கு கடிதம் எழுத முடியாம இருக்குதே.அப்படி நாம் ஒரு கடிதம் எழுதி,அவருக்கு இந்த விஷயத்தை தெரிவிக்கலாம்ன்னா, அந்த கடிதம் ஒரு வேளை அந்த அம்மா கிட்டே கிடைசிட்டா அப்புறம் அந்த ஐயா வீணா மாட்டிப்பாரே.நாமே இல்லே அந்த ஐயாவை காட்டிக் குடுத்தாபோல் ஆயிடும்.அப்புறம் அவர் வாழ்க்கையே வீணாகிப் போயிடுமே.வேணாவே வேணாம் இந்த விபா£த எண்ணம்.நாம அவர் வீட்டுக்கு கடிதம் எல்லாம் எழுதவே கூடாதுன்னு’ முடிவு செய்தாள் ராணீ.

அவளுக்கு இந்த திண்டிவன வாழ்க்கையே சுத்தமாய் பிடிக்கவில்லை.மனதில் வருத்தத்தோடு கூரை உச்சியைப் பார்த்துக் கொண்டு அவள் படுத்து இருந்தாள்.அவளுக்கு தூக்கம் வரவில்லை. அம்மா எழுந்ததும் ராணீ மெல்ல “அம்மா நாம் மூனு பேரும் சென்னைக்குப் போய் இருந்து வரலாமா ம்மா.நான் இங்கே செய்வது போல அங்கேயும் ரெண்டு மூனு வூடு வேலை செஞ்சி வந்தா நாம மூனு பேரும் கஷ்டம் இல்லாம சந்தோஷமா இருந்து வரலாம்மா.நீ என்ன சொல்றேம்மா” என்று சொல்லிப் பார்த்தாள்.“நான்அங்கே எல்லாம் வரலே ராணீ.எனக்கு இந்த திண்டிவனம் தான் பிடிச்சி இருக்கு.உன் அப்பா வாழ்ந்து வந்த இடம் இது.நான் அவர் ஞாபகமா இங்கேயே என் காலத்தை கழிச்சு விடறேன்.பட்டணம் எல்லாம் வேணாம்மா.நான் சொல்றதே கேளம்மா” என்று சொன்னாள் முத்தம்மா.“சரிம்மா நானும் இங்கேயே உன்னோடு இருந்து வரேம்மா.நீ நிம்மதியா இருந்து வாம்மா. நான் உனக்கு பட்டணம் பிடிக்குமோன்னு தான் சும்மா கேட்டேன்” என்று சொல்லி விட்டு ராணீ தன் வேலையை கவனிக்கப் போய் விட்டாள்.

ஒரு நல்ல நாள் பார்த்து கமலாவையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு சரோஜாவும் சிவலிங்கமும் கமலா வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு,அவர்களும் அங்கேயே தங்கினார்கள். நடராஜனும் கமலாவும் குழந்தைக்கு நிறைய விளையாட்டு சாமான்களும், ’முன்னும் பிண்ணும்’ ஆடக் கூடிய சாய்வு நாற்காலி,போன்ற பல விளையாட்டுப் பொருள்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.குழந்தையும் அவற்றை வைத்துக் கொண்டு நன்றாக விளையாடி வந்தது.ஒரு நல்ல வேலைக்காரி கிடைத்ததும் அவளை வேலைக்கு வைத்துக் கொண்டாள் கமலா.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *