காய்க்காத பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 5,591 
 
 

அத்தியாயம் 5 | அத்தியாயம் 6 | அத்தியாயம் 7

கதிரவன்:

“என்ன மேடம் சொல்றீங்க?”

கவிதா:

“சம்பவம் நடந்த அன்னைக்கு ராஜேஷ் எங்க இருந்தாரு தெரியுமா?”

கதிரவன்:

“வெளியூர் போய்ட்டதா சொன்னாரு மேடம்”

கவிதா:

“இல்ல. அன்னைக்கு வீட்டுல இருந்து கிளம்பின ஆள் நேரா நந்தினி வீட்டுக்கு தான் போய் இருக்காரு. செவ்வாய்க்கிழமை காலைல 11 மணிக்கு மேல தான் அங்க இருந்து கிளம்பி இருக்காரு”

கதிரவன்:

“மேடம். அப்ப…”

கவிதா:

“ராஜேஷ் கிட்ட எதோ பிரச்சினை இருக்கு. ராஜேஷ் நினைச்சா இந்த பணத்த ஈஸியா குடுத்து இருக்கலாம்ல. ராஜேஷ் அதுக்கு எதாவது காரணம் சொன்னாரா?”

கதிரவன்:

“ரேவதிக்கு நந்தினி பத்தி தெரியக் கூடாதுன்றத தவிர வேற எதுவும் சொல்லல மேடம்”

கவிதா:

“அந்த ரீசன் ரொம்ப வீக்கா தெரியல. அஃபயர் இல்லாத ஒரு பொண்ண பத்தி மனைவி கிட்ட ஏன் மறைக்கணும்”

மணிகண்டன்:

“எனக்கும் அப்படித்தான் தோணுது மேடம். நந்தினிய எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட்னு சொன்னா தான் பிரச்சினை. காலேஜ் மேட், ஊர்க்கார பொண்ணு இப்படி சொல்லி அறிமுகப்படுத்தினா ரேவதிக்கு தெரிஞ்சே உதவி செய்யலாம். அவங்களுக்கு 20 லட்சம் ரூபாய் ஒரு பெரிய அமௌண்ட் இல்ல”

கவிதா:

“கரைக்ட் மணி. கதிர் சார் ராஜேஷ் உங்கள நல்லா ஏமாத்திட்டு இருக்காரு. அப்புறம் மினிஸ்டர் பிரஷர் குடுத்தாலும் சரி இதுல சம்மந்தப்பட்ட அத்தனை பேரையும் விசாரிச்சு தான் ஆகணும். குற்றவாளி யார்னு தெரிஞ்ச அப்புறம் வேணா அதுக்கு ஏத்த மாதிரி கேஸ் எழுதிக்கலாம். நாளைக்கு ராஜேஷ், நந்தினி, ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, அந்த நந்தா 4 பேரையும் வர சொல்லுங்க. மணி கதிர் சார் விசாரிக்காத ராஜேஷ் நந்தினி ஃப்ளாஷ்பேக் உண்மை தானான்னு அந்த ஊர் போலீஸ் மூலமா விசாரிச்சு வை. என்ன கதிர் சார் இனி மேலாவது டிபார்ட்மெண்ட் ஆளா இருக்கப் போறீங்களா இல்ல ராஜேஷ் மேல இருக்க விஸ்வாசத்துல எல்லாத்தையும் அங்க ஒப்பிச்சிடுவீங்களா?”

கதிரவன்:

“அய்யோ மேடம். இந்த கதிரவன் எப்பவுமே டிபார்ட்மெண்ட் ஆளு தான். நான் மினிஸ்டர் விவாகாரம்’ன்றதால தான் அப்படி நடந்துக்கிட்டேன்.. சாரி மேடம்”

கவிதா:

“எதுவா இருந்தாலும் என் கிட்ட உண்மைய சொல்லுங்க. பிரச்சினை இல்லாம சால்வ் பண்றது என் பொறுப்பு”

கதிரவனும் மணிகண்டனும் சல்யூட் அடித்து விட்டு வெளியே சென்றனர்.

மார்ச் 23 சனிக்கிழமை. போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட நால்வரும் வந்து இருந்தனர். கவிதா தனது Interrogationஐ ஆரம்பித்தார். முதலில் ஆடிட்டர் சுந்தரமூர்த்தியை அழைத்து தனியாக விசாரணை நடத்தினார்

கவிதா:

“மிஸ்டர் சுந்தரமூர்த்தி ராஜேஷ் சம்பாதிக்குற பணத்தை எல்லாம் நீங்களும் ரேவதியும் தான் ஹேண்டில் பண்றீங்க?”

ஆடிட்டர்:

“ஆமா. ராஜேஷ் அவனோட தொழில் சம்பந்தமான பண பரிமாற்றங்கள மட்டும் தான் பார்ப்பான். மத்த எல்லாமே ரேவதி தான் பார்ப்பாங்க. ராஜேஷ் ரேவதி காட்டுற இடத்துல கையெழுத்து மட்டும் தான் போடுவான். ரேவதியும் அந்த பணத்தை சரியான முறையில் கையாண்டாங்க”

கவிதா:

“அப்ப ப்ளாக் மணி கூட ரேவதி தான் ஹேண்டில் பண்ணாங்களா?”

ஆடிட்டர்:

“ப்ளாக் மணினா…”

கவிதா:

“கவலைப்படாதிங்க சார். எக்னாமிக் அஃபன்ஸ்ல மாட்டிக்க மாட்டீங்க. இதெல்லாம் உண்மைய தெரிஞ்சிக்க தான். அஃபீசியல் ரெக்கார்ட்ஸ்ல வராது”

ஆடிட்டர்:

“ரேவதி நான் 2 பேர் தான் ஹேண்டில் பண்ணோம். ராஜேஷ்க்கு தொழில் சம்பந்தமா செகண்ட் அக்கவுண்ட்ல பணம் வேணும்னா கூட ரேவதி கிட்ட தான் கேட்பான். ஒரு 3 மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் இதான் நடைமுறையா இருந்தது”

கவிதா:

“அப்ப கடைசி 3 மாசம்??”

ஆடிட்டர்:

“அவனோட எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட் நந்தினி ஒரு கடன் பிரச்சினைல மாட்டிகிட்டாங்கன்னும் அதுக்கு வட்டி கட்டணும்னும் சொல்லி அப்பப்ப சின்ன சின்ன அமௌண்ட்ஸ் கணக்குல இல்லாம வாங்கி இருக்கான். நந்தினி பத்தி ரேவதிக்கு தெரியாதுன்னும் அதனால இந்த பணம் வாங்குறது ரேவதிக்கு தெரியாம பார்த்துக்கணும்னும் சொன்னான்”

கவிதா:

“பணம் குறைஞ்சா ரேவதியால கண்டுபிடிக்க முடியாதா?”

ஆடிட்டர்:

“சின்ன சின்ன அமௌண்ட்’னால இப்ப வரைக்கும் தெரியாது. ஏன்னா தொழிலுக்காக ஒதுக்கி வைக்குற செகண்ட் அக்கவுண்ட் பணம் எதுவும் அவங்க கஸ்டடியில இருக்காது. என்னோட இடத்துல தான் இருக்கும். அதனால மாட்டல. ஒருவேளை பெரிய ட்ரான்ஸாக்ஷன் எதாவது வந்து இருந்தா கண்டிப்பா ரேவதி கிட்ட மாட்டி இருப்போம்”

கவிதா:

“So சாகுற வரைக்கும் ரேவதிக்கு இந்த விஷயம் தெரியாது”

ஆடிட்டர்:

“ஆமா மேடம். தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா என் கிட்ட விசாரிச்சு இருப்பாங்க”

கவிதா:

“ரேவதி கிட்ட நந்தினி பத்தி சொல்லக் கூடாதுன்னு நினைக்குற அளவுக்கு ரேவதி பொஸஸிவ்வா?”

ஆடிட்டர்:

“ரேவதி பொஸஸிவ்’லாம் இல்ல மேடம். 3 வருசமா குழந்தை இல்லாத தன் மனைவி கிட்ட திடீர்னு இது என்னோட முன்னாள் காதலினு நிறுத்தினா அது எவ்வளவு கஷ்டமா இருக்கும்’னு யோசிச்சு பாருங்களேன். ராஜேஷ்க்கு அவன் வொய்ஃப் மேல் அளவு கடந்த பிரியம். எப்படா இந்த பிரச்சினை முடியும். பழையபடி தன் மனைவியோட சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கைய தொடரலாம்’னு தான் ஏங்கிட்டு இருந்தான். ஆனா அதுக்குள்ள நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு மோசமான விஷயங்கள் எல்லாம் நடந்துடுச்சு”

கவிதா:

“ரேவதி மரணத்த பத்தி உங்க அபிப்பிராயம் என்ன, ஐ மீன் யார் மேலயாவது சந்தேகம் இருக்கா உங்களுக்கு”

ஆடிட்டர்:

“தெரியல மேடம். எனக்கு தெரிஞ்சு ரேவதிய கொலை பண்ற அளவுக்கு யாரும் இல்ல”

கவிதா:

“நந்தினி பத்தி உங்க அபிப்பிராயம் என்ன?”

ஆடிட்டர்:

“அவங்கள பத்தி எனக்கு எதுவும் தெரியாது மேடம். ஸ்கூல் ஃப்ரெண்ட்’னா கூட தெரிஞ்சு இருக்கும். நான் ஒன்பதாவது படிக்குறப்பவே எங்க ஃபேமிலி சேலத்துக்கு வந்து செட்டில் ஆயிட்டோம். அதனால சுத்தமா தெரியாது”

கவிதா:

“திங்கட்கிழமை நீங்க ரேவதிய மீட் பண்ணீங்களா?”

ஆடிட்டர்:

“இல்ல. சனிக்கிழமை என்னோட சீனியர் நிறைய பேப்பர் வொர்க்ஸ் குடுத்து இருந்தாரு. அது திங்கட்கிழமை காலைலயே வேணும்னு கேட்டு இருந்ததால 2 நாளா தூங்காம வேலை பார்த்துட்டு இருந்தேன். அதனால காலைல அவர்ட்ட பேப்பர்ஸ் எல்லாம் குடுத்துட்டு வீட்டுக்கு வந்து தூங்கிட்டேன். அதுக்கு அப்புறம் வெளிய எங்கயும் போகல”

கவிதா:

“ஓகே. நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க. வெயிட் பண்ண முடியுமா இல்ல வேற எதாவது வேலை இருக்கா”

ஆடிட்டர்:

“இருந்தாலும் பிரச்சினை இல்ல மேடம். நான் வெயிட் பண்றேன்”

சுந்தரமூர்த்தி அந்த அறையை விட்டு வெளியேறிய பின்

கவிதா:

“மணி உனக்கு என்ன தோணுது”

மணிகண்டன்:

“Genuine மேடம். ஆனா புதுசா எதுவும் இல்ல”

கவிதா:

“சரி. மீதி 3 பேரையும் கூப்பிடு”

மணிகண்டன் வெளியே சென்று ராஜேஷ், நந்தினி & நந்தா அறைக்குள் வந்தார்கள்.

கவிதா:

“உங்க 3 பேருக்கும் எப்படி பழக்கம்னு தெளிவா சொல்ல முடியுமா?”

நந்தா:

“மேடம். எனக்கு இந்த பொண்ண மட்டும் தான் தெரியும். எங்க ஏரியால தான் இருக்கு. பக்கத்து வீட்டு பொண்ணுக்கு கடன் கேட்டு வீட்டு பத்திரத்த ஜாமீன் கொடுத்தது. நானும் நம்பி பணம் குடுத்தேன். பணத்த வாங்குனவ கம்பி நீட்டிட்டா. விஷயம் தெரிஞ்சதும் நாங்க உஷாராயி வீட்ட எழுதி தந்துட்டு கெளம்ப சொன்னோம். அப்ப தான் அவர் வந்து அந்த பொண்ண கண்டுபிடிச்சு பணத்த வாங்கி தந்துடுறோம். அதுவரை வட்டிக்கு நான் பொறுப்புன்னு சொன்னாரு. சரி நமக்கும் பணம் முழுசா வரணும். அதுவரை டைமுக்கு வட்டி வந்தா போதும்னு விட்டேன். இப்படித்தான் எனக்கு இவங்கள தெரியும். அப்புறம் பணத்ந பத்தி எதுவும் கேஸ் ரெக்கார்ட்ல எழுதிடாதிங்க. பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்ல”

கவிதா:

“ஆளுக்கு முன்னாடி வேகமா ஒப்பிக்குற. இவ்ளோ தான் மனப்பாடம் பண்ணிட்டு வந்தியா இல்ல இன்னும் எதாவது இருக்கா?”

நந்தா:

“மேடம் மனப்பாடம்’லாம் இல்ல. என் நிலைமை”

கவிதா:

“நீங்க 2 பேரும் வாய் திறக்க மாட்டீங்களா?”

ராஜேஷ்:

“நாங்க 2 பேரும் ஒரே ஊர்க்காரங்க. சின்ன வயசுல இருந்தே தெரியும். இரண்டு பேரும் லவ் பண்ணோம். சாதிவெறில எங்க அப்பா பண்ண சதியால எங்க காதல் கை கூடல. இப்ப ஃப்ரெண்ட்ஸ். ஆனா இவர இந்த பிரச்சினைக்கு அப்புறம் தான் எனக்கு தெரியும்”

நந்தினி:

“இவங்க சொன்னது தான் மேடம்”

கவிதா:

“லாவண்யாவ எப்படி பழக்கம்?”

நந்தினி:

“6 மாசமா பக்கத்து வீட்டுல தான் குடி இருந்தாங்க. அப்படி தான் பழக்கம்”

கவிதா:

“அதெப்படி 6 மாசம் பழக்கம். அவ கேட்டதும் கடனுக்கு உன் சொத்த கேரண்டி குடுப்பியா?”

நந்தினி: (அழுதபடி)

“அவ்வளவு விவரம் இருந்தா நான் ஏன் மேடம் வாழ்க்கைய தொலைச்சிட்டு தனியா நிற்க போறேன்”

கவிதா:

“அழுகைய பார்த்தா ரியலா தான் இருக்கு. ஆனா லாஜிக் ரியலா இல்லயே. சரி இந்த கடன் கருமம் எல்லாம் உங்க பிரச்சினை. திங்கட்கிழமை ராத்திரி பூரா எங்கே இருந்த?”

நந்தினி:

“என் வீட்டுல தான் மேடம்’

கவிதா:

“ராஜேஷ் நீங்க?”

ராஜேஷ்:

“நானும் நந்தினி வீட்டுல தான் இருந்தேன்”

கவிதா;

“நைட்ல ஒண்ணா தங்குற அளவுக்கு பழக்கமா? ஆனா உங்க அம்மா கிட்ட பெங்களூர் போனதா சொல்லி இருக்கீங்க. ஏன்?”

ராஜேஷ்:

“அம்மாவுக்கு நந்தினி பத்தி தெரிஞ்சா மறுபடியும் எங்க அப்பாவால பிரச்சினை வரும்னு சொல்லல”

நந்தினி:

“அதுவும் ராஜேஷ் சொல்லலாம்னு தான் சொன்னான். நான் தான் தடுத்துட்டேன்”

கவிதா:

“ஏன்?”

நந்தினி:

“எதிர்காலத்துல நான் ராஜேஷ் கூட காண்டாக்ட்ல இருக்கேன்னு தெரிஞ்சா என்னை கொன்னுடுவேன் சொல்லி இருக்காரு. அவர் தான் நினைச்சத செய்ய எந்த எல்லைக்கும் போவாரு”

ராஜேஷ்:

“அப்புறம் அன்னைக்கு நைட் நந்தினி வீட்டுல நான் தங்குனதுக்கு காரணம் இந்த நந்தா தான்”

நந்தா:

“யோவ் யோவ் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா தங்குனதுக்கும் எனக்கும் என்னயா சம்மந்தம”

ராஜேஷ்:

“அன்னைக்கு சாயங்காலம் ஃபோன் பண்ணி வட்டி தர்லன்னு மெரட்டி இருக்காரு. அதுவும் தூக்கிட்டு போய் பலான ஏரியால வித்துடுவேன்னுலாம் சொல்லி இருக்காரு. அதனால தான் துணைக்கு கூட போய் இருந்தேன்”

கவிதா நந்தாவை முறைக்க

நந்தா:

“முறைக்காதிங்க மேடம். 18 தேதி ஆகியும் வட்டி கட்டல. அதனால தான் சும்மா மிரட்டுனேன். அவ்ளோ தான். மத்தபடி பொம்பள தொழில்லாம் பண்ற ஆள் இல்ல நான்”

நந்தினி:

“ராத்திரி 10 மணிக்கு கூட இதே டார்ச்சர் தான் மேடம்”

நந்தா:

“மேடம் அப்படி எல்லாம் மிரட்டுனா கூட வட்டி வர மாட்டேங்குது. பாருங்க இப்ப வரைக்கும் வட்டி வரல. அதுக்காக இந்த பொண்ண என்ன கடத்திட்டா போய்ட்டேன்”

கவிதா:

“உங்க அப்பாவுக்கு தெரியக் கூடாதுன்னு தான் ரேவதி கிட்டயும் இத மறைச்சீங்களா?”

ராஜேஷ்:

“ஆமா மேடம். ரேவதி குடும்பத்து ஆளுங்க கிட்ட பொய் சொல்ல மாட்டா. ஆளுமைய காட்ட மாட்டா. அதனால் தான் என் பேரண்ட்ஸ் அவள நிறைய டார்ச்சர் பண்ணிட்டாங்க”

கவிதா:

“எது எப்படி இருந்தாலும் உங்களுக்குள்ள அஃபையர் இல்லன்னு மட்டும் நான் நம்ப தயாரா இல்ல”

நந்தினி:

“உங்களுக்கு அதுல தான் சந்தேகம்’னா எனக்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் பண்ணி பாருங்க. இத தவிர நிரூபிக்க எங்க கிட்ட வேற எதுவும் இல்ல”

கவிதா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்போது கவிதாவிற்கு ஒரு ஃபோன் வருகிறது

“ஹலோ”

“….”

“சார் அது ஒரு மர்டர் கேஸ் விஷயமா”

“….”

“விசாரணை இன்னும் முடியல சார்”

“….”

“(சலிப்பாக) சரிங்க சார். நீங்களே சொல்லும் போது மாத்தி செய்யவா முடியும். அப்படியே செஞ்சிடுறேன்”

நந்தா: (உற்சாகமாக)

“அப்புறம் என்ன மேடம். நான் கிளம்பவா”

கவிதா: (கோபமாக)

“ஹ்ம்ம்”

நந்தா சிரித்து கொண்டே வெளியேறுகிறான். கதிரவனும் மணிகண்டனும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்க்கிறார்கள்

தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *