காய்க்காத பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 7,127 
 

அத்தியாயம் 10 | அத்தியாயம் 11

ரேவதி:

“ராஜேஷ் என்னை கொல்ல வந்தவங்க உங்கள பணயமா காட்டி என்னை சாக சொன்னாங்க. ஆனா நான் அவங்க மிரட்டுறதுக்கு முன்னாடியே சாக தயாராகி மாத்திரைகளையும் சாப்பிட்டுட்டேன். எனக்கு இருந்த ஒரே பயம் எதிர்காலத்துல அவங்களால உங்க உயிருக்கு ஆபத்து வருமோனு தான். அவங்க போனதுக்கு பிறகு உங்கள எப்படி காப்பாத்துறதுனு யோசிச்சேன். எதாவது ஏடாகூடமா பண்ணி அதுவே உங்க உயிருக்கு ஆபத்தா ஆயிடக் கூடாதுன்னு தோணுச்சு. அதனால சின்ன சின்னதாக சில விஷயங்கள சந்தேகம் வர்ற மாதிரி செய்தா போலீஸ் இந்த தற்கொலைய கொலைனு யோசிப்பாங்கனு முடிவு பண்ணேன். அவன் வீட்டுக்குள்ள எப்படி வந்தான்னு எனக்கு தெரியாது. உங்க கிட்ட இருந்து சாவி எடுத்துட்டு வந்து வாசல் கதவு வழியா வீட்டுக்கு வர அதிக வாய்ப்பு இருக்குன்னு தாழ்ப்பாள் எல்லாத்தையும் திறந்து வெச்சேன். மாடிக் கதவ எப்பவும் போல நான் பூட்ட மறந்துட்டேன். அப்புறம் அந்த லெட்டர் நான் தான் எழுதினேன். சந்தேகம் வர்ற மாதிரி கைப்படாம எழுதினேன். வேணும்னே ழகரம் எழுதும் போது மட்டும் என்னோட பாணியில் எழுதாம மாத்தி எழுதினேன். இதெல்லாம் வெச்சு யாருக்காவது சந்தேகம் வந்து விசாரிச்சு உங்கள காப்பாத்துவாங்கனு நம்பினேன். கடவுள் கருணையால இப்ப நீங்க பாதுகாப்பா இருக்கீங்க. என்ன தான் சந்தேகத்துக்குரிய விதத்துல அந்த லெட்டர எழுதினாலும் நான் பொய் சொன்னதா எழுதி இருந்தது தவிர அதுல இருக்குற எல்லா விஷயங்களும் உண்மை தான். ராஜேஷ் நான் காய்க்காத ஹைப்ரிட் பூ தான். உங்க சந்ததி வளர விதைகளை தர முடியாத மலட்டு பூ தான். ஆனா வாழ்ந்த வரைக்கும் நல்ல நறுமணத்த குடுத்து இருப்பேன்னு நம்புறேன். அந்த உரிமையில ஒரு வேண்டுகோள் வைக்கப் போறேன். எனக்காக நீங்க அத செய்யணும். நான் ஒருத்தருக்கு ஒரு வார்த்தை குடுத்து இருக்கேன். அத நீங்க நிறைவேற்றணும். கடைசியா நான் உங்க கிட்ட ஃபோன்ல பேசும் போது நம்ம ஒரு குழந்தைய தத்து எடுத்துக்கலாம்’னு தான் சொல்ல வந்தேன். நீங்க தான் தப்பா புரிஞ்சிட்டு என்னை பேச விடல. நேசக்கரங்கள் ஆர்ஃப்னேஜ்ல ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கிறதா சொல்லி இருந்தேன். கல்யாண நாள்ல உங்கள சர்ப்ரைஸ் பண்ணி அந்த ஆர்ஃப்னேஜ் கூட்டிட்டு போற ஐடியால தான் இருந்தேன். ஆனா அது நடக்கல. அவங்க நான் ஒரு குழந்தைய தத்து எடுத்துக்க வருவேன்னு நம்பிட்டு இருப்பாங்க. அந்த வார்த்தையை காப்பாத்துங்க. அப்புறம் ஆர்ஃப்னேஜ் ரூல்படி சிங்கிள் டேட் நம்பி குழந்தைய தத்து குடுக்க மாட்டாங்க. அதனால உடனே நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும். நீங்க யார கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் சரி. எத்தனை குழந்தைகள பெத்துக்கிட்டாலும் சரி. எனக்காக அந்த ஆர்ஃப்னேஜ்ல இருந்து ஒரே ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்துங்க. எனக்கு அது போதும்”

திடுக்கிட்டு தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்தான் ராஜேஷ். அவனது ஃபோனில் ரிங் டோன் அலறியது. எடுத்து பேசினான்

“ஹலோ”

“ஹலோ நேசக்கரங்கள் ஆர்ஃப்னேஜ்ல இருந்து பேசுறேன். Mrs. ரேவதி இருக்காங்களா?”

***முற்றும்***

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *