காதலுக்காக

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 4,107 
 

“கல்யாணம்” என்ற வார்த்தையை கேட்டவுடன் விசித்ராவுக்கு, தனது அக்கா காதலித்து ஓடி போக இருந்ததை கண்டறிந்து, வலுகட்டாயமாக அவளை தங்கள் தாய்மாமனுக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்து, மேலும் திருமணத்தன்று அவள் காதலுருடன் ஓடிப்போக மணமேடையில் தேவையில்லாமல் நிற்கதியாக நின்ற தன் தாய்மாமனின் குடும்பத்திற்கும் தன் குடும்பத்திற்கும் வந்த பிரச்சனையில் சொந்தமே பிளவு பட்டதுதான் ஞாபகம் வந்தது.

விசித்ராவுக்கு கல்லூரி படிப்பு முடியபோகும்தருவாயில் அவளது குடும்பம் பொறுப்பாக கல்யாணத்திற்கு தயாராக வேலையில் இறங்கியது.குறிப்பாக அவள் தந்தை சம்பந்தமூர்த்தி பொறுப்பாக இயங்குவார். விசித்ராவுக்கும் புரிந்தது நமது அக்கா மாதிரி எதும் ஆகிடும்னு அப்பா அம்மா பயபடுராங்கன்னு. அவளும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அக்காவை மனதில் வைத்து பண்பட்டவளுக்கு, தன் தாய்மாமன் தங்கராசுவின் இன்றைய நிலை என்றுமே வருத்தத்தையே அளித்தது.

தங்கராசு பெயருக்கு ஏற்றாற்போல் தங்கம்தான், ஆனால் அதுக்கு பங்கம் வைத்தவள்தான் விசித்ராவின் அக்கா. அந்த சம்பவத்திற்கு பிறகு அவனது வாழ்வில் அப்படியொரு தலைகீழ் மாற்றம்.தற்போது அவனைபோல் ஒரு கேடு கெட்டவன் அந்த ஊரிலேயே இல்லை. இன்னும் சொல்ல போனால், தான் பெரிதும் வெறுத்த தன் மூத்தமகள், எடுத்த முடிவே பரவாயில்லை என சம்பந்தமூர்த்தி மனதிற்குள் நினைக்கும் அளவுக்கு நாளடைவில் வீணாய் போயிருந்தான் தங்கராசு. ஆனால் யாரிடமும் வெளிகாட்டிகொள்ளவில்லை சம்பந்தமூர்த்தி .

இந்நிலையில் விசித்ராவுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது, கொஞ்சம் இழுபறியாக தான் எல்லாம் நடந்தது. ஒருநாள் தன் அம்மாவிடம் விசித்ரா, தங்கராசுவை பற்றி பேசி வருத்தம் அடைந்தாள். சொந்த தம்பியின் வாழ்வை அழித்த குற்றவுணர்ச்சி அந்த அம்மாவுக்கும் இருந்தது, விசித்ராவுக்கும் புரிந்தது. அந்த கணமே விசித்திரா, “நான் மாமாவையே கட்டிக்கிறேன் மா” என பட்டென போட்டுடைத்தாள் தன் உள்ள கிடைக்கையை.

ஆனால் விசியின் அம்மாவும், தங்கராசுவின் சொந்த அக்காவும், ஆன அவங்க அதற்கு மனதை கல்லாக்கிகொண்டு ஒத்துக்கொள்ளவில்லை. சூழ்நிலையையும் உறவையும் நினைத்து தனித்தனியாக வருத்தம் அடைந்தனர் தாயும் சேயும். மேலும் சம்பந்தமூர்த்தி முழுதும் வெறுக்கும் உறவாய் வாழ்ந்திருந்தான் தங்கராசு.

இந்நிலையில் விசித்ரா, தங்கராசுவை தனியாக சந்தித்து பேசினாள். தன்னை வந்து பொண்ணு கேட்குமாறு அழைத்தாள். செம கடுப்பாகி தங்கராசு “ஏண்டி என்ன பாத்த உங்களுக்கெல்லாம் எப்டி தெரியுது”னு ஆரம்பித்து சில பீப் வார்த்தைகளை சேர்த்து கண்டபடி திட்டினான். விசித்ரா சற்றும் சலிக்காமல் “கட்டுனா உன்னதான் இல்லாட்டி இப்டியே இருந்துறேன்” னு சத்தம்போட்டு நாளு பேருக்கு கேட்கும்விதமாக சொல்லிட்டு, அமைதியாக இன்னும் சில பேசிட்டு போய்ட்டாள்.

தங்கராசுவுக்கு ஒரே குழப்பம், தன் அம்மாவிடம் இது பற்றி பேசும்போதுதான் தெரிந்தது. விசித்ரா முதலில் தன் அம்மாவிடம் எல்லாம் பேசி முடித்துவிட்டுதான் நம்மிடம் வந்திருக்கிறாள் என்று. தாயும் வற்புறுத்தினாள். “அம்மா உனக்கு அவள பத்தி முழுசா தெரியாதும்மா” என கூறும் தங்கராசுக்கு மனதில் ஆசை துளிர்த்துதான். விசித்ரா அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிகழ்வுகளை ஏற்படுத்தி தங்கராசுவின் மனதை பாதி மாற்றி விட்டாள். விசியும் முடிந்தவரை திருமணத்தை தள்ளி தள்ளிபோட்டு கெடுத்துகொண்டாள்.

நாளடைவில் சம்பந்தமூர்த்திக்கு விசியம் தெரியவந்து கவலைக்குள்ளானார். விசி தன் அக்காவால் பாதி, தன்னால் பாதி என தன் வாழ்க்கையை கேள்வி குறியாக வலைத்தாள். அந்த வலையில் தங்கராசுவும் விழுந்தான் மீண்டும். தனது தோற்றத்தையும் மனதையும் சூழ்நிலைகேற்ப மாற்றிக்கொண்டு பொண்ணு கேட்டான் முறையாக. மீண்டு முரண்பட்டனர் விசியின் குடும்பத்தார் குறிப்பாக தந்தை சம்பந்தமூர்த்தி . பிரச்சனை வெடித்தது. இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. விசி தன்னுள் காதல் கொண்டாள்.

இந்தமுறை தங்கராசு விடுவதாக இல்லை, அதற்கேற்ப விசியும் எதிர்புறம் வேலை செய்து, விசித்ராவுக்கு மாப்பிள்ளை கிடைக்காததால் , விசிக்கு ஏற்பாட்டு திருமணமுறை பயனளிக்காது என முடிவி செய்து, தான் முற்றிலும் எதிர்க்கும் காதல் வழிமுறையை கையில் எடுத்தார் சம்பந்தமூர்த்தி . அதாவது விசிதான், கல்லூரியில் யாரையும் காதலித்து இருக்க மாட்டாள் தன் குடும்ப சூழ்நிலையை நினைத்து, ஆனால் அவளை நிச்சயமாக கல்லூரியில் யாரேனும் ஒரு தலையாகவாது காதலித்து இருப்பார்கள் என அந்த கோணத்தில் விசி நண்பர்களை தேடி விசாரித்து கொண்டிருந்தார்.

சற்று முரண்தான் என்ன செய்வது, தன் மூத்த மகள் காதல் திருமணத்தை கெடுக்க நினைத்து தன் மச்சானின் வாழ்க்கையை கெடுத்தவர், தற்போது தான் இளைய மகளுக்கு இல்லாத காதலனை தேடுகிறார். கண்டிப்பாக தன் மகளுக்கு விசித்ரா என பெயர் இவரால்தான் வைக்க முடியும். மேலும் சம்பந்தமில்லாம சம்பந்தம் செய்றதால்தான் சம்பந்தமூர்த்தியோ என்னோவோ. ஆக மொத்தம் எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவான இவர் கிட்டதட்ட ஒரு பெரிய இடத்து வாலிபனை விசிக்கு ஒரு தலைகாதலனாக அறிந்து திருமண ஏற்பாட்டை தொடங்கினார். பல எதிர்ப்புகளை மீறி திருமண வேலைகள் நடந்தன.

அன்று மணநாள்.பெரும் கலவரம் தன்னை நிகழ்த்திக்கொள்ள அமைதி காத்தது. சம்பந்தமூர்த்தி, போலிஸ் உதவியோடு திருமண ஏற்பாடு நடந்திகொண்ருந்தார். இருப்பினும் ஒரு பக்கம் விசியும் திடீரென்று இன்முகத்தோடு திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்தாள். அதே போல் தாய் மாமன் தங்கராசு வீட்டிலும் திருமணத்திற்கு தயாராகினர்.எதோ தப்பா நடக்க போகிறதென சம்பந்தமூர்த்தி பலவாறு யோசித்து மூளை குழம்பும்போது, ஒன்று விளங்கியது. தான் ஏற்பாடு செய்திருக்கும் மாப்பிள்ளையின் தந்தை ஒரு பிரபல வக்கீல். அவருக்கும் முதலில் தன் மகனின் காதல் திருமணத்தில் முழு சம்மதமில்லை. சம்பந்தமூர்த்தி தான் சமாதானபடுத்தி சம்மதிக்க வைத்தார். வக்கீல் புத்தி பாயிண்டை தேடும். விசித்ரா மெச்சூர் மேஜர். பற்றாக்குறைக்கு போலிஸ் ஏற்பாடு வேற.

கிளைமாக்ஸ் சம்பந்தமூர்த்திக்கு புரிந்துவிட்டது, ஒரு ஓரமாக உக்காந்து விசியை பார்த்தார். ஏற்கனவே தன்னிடம் “இந்த ஊரறிய, உங்க கண்ணு முன்னாலேயே.. என் விருப்பபடி இந்த கல்யாணம் நடக்கும்னு” சவால் விட்டது ஞாபகம் வந்தது, மேலும் இப்போது எண்ணை ஊற்றுவதுபோல் ஒரு நக்கல் புன்னகை பூத்தாள் விசித்ரா. சம்பந்தமூர்த்தி கற்பனையில் தங்கராசு வாய்விட்டு சிரிக்கிறான். ஊரே சிரிக்கின்றது. செய்வதறியாது தினறிகொன்டிருக்கிறார் சம்பந்தமூர்த்தி , இதய துடிப்பு வேகமெடுக்கிறது. சொந்த செலவில் சூன்யமாக தோன்றுகிறது. தவறினால் தற்கொலைதான் என்ற உணர்வு மேலிடுகிறது. இருப்பினும் திருமண வேலைகள் பரபரப்பாக நடக்கின்றது. கண் இமைத்து பார்த்தால் மணமேடையில் தங்கராசு, நன்கு கண் விழித்து பார்க்கிறார், இல்லைஇல்லை தான் பார்த்த மாப்பிள்ளைதான். ஆஷ்வாசபடுத்திகொள்கிறார் சம்பந்தமூர்த்தி.

மண்டபத்தின் முதல் வரிசையில் தங்கராசு தன் குடும்பத்தோடும் சொந்த பந்தங்களோடு மாப்பிள்ளை கோளத்தில் காத்திருந்தான். சம்பந்தமூர்த்தி க்கு டென்சன் உச்சத்தில்.கடிகாரம் பின்னோக்கி நகர்ந்தது இவருக்கு பிளாஷ்பேக்கில் “தங்கராசுவை தன் மூத்த மகளை கட்டிக்க சொல்லி கெஞ்சியது ஞாபகம் வந்தது” இப்போது தன் இளைய மகளை விட்டுவிட சொல்லி கெஞ்ச தோன்றியது. இருப்பினும் கெளரவம் தடுத்தது. சம்பந்தமூர்த்தி யின் மனநிலை தற்போது பைத்தியகாரனின் கடைசி ஞாபக நிமிடங்களாக பயணித்தது.

மணமக்கள் சற்றும் குழப்பமில்லாமல் மணமேடையில், நேர் எதிரே தன் தந்தையையும், தாய் மாமனையும் ஒரே புன்னகையில் தினரடித்தாள் விசி. மணநேரம் நெருங்குகிறது. கத்துகிட்ட மொத்த மந்திரத்தையும் இப்போதான் இறக்குறார் அந்த ஐயர். மண்டபமே பரபரக்கிறது.விசியின் அக்கா குடும்பமும் இறுதி நிமிடத்தில் வருகை புரிகிறது, மேலும் கோபத்தின் உச்சம் தொடுகிறார் சம்பந்தமூர்த்தி, இருப்பினும் தற்போது விசியின் திருமணம்தான் முக்கியம்னு பொருத்துகொள்கிறார்.

தங்கராசுவும் விசியின் அக்காவும் சகஜமாக பேசிகொள்கின்றனர், அதை பார்த்து பைத்தியமே பிடித்திடும்போல சம்பந்தமூர்த்திக்கு. ஒன்னும் புரியவுமில்ல, யோசிக்க நேரமுமில்ல.மங்கள வாத்தியம் முழங்க அனைவரும் அருகருகே நெருங்கி வருகின்றனர், தங்கராசுவும் சம்பந்தமூர்த்தி யும்கூட. திருமணம் இனிதே நடைபெறுகிறது எவ்வித திருப்பமும் இல்லாமல், வக்கீல் மகனோடு விசித்ராவுக்கு. அனைவரும் அட்சதை தூவுகின்றனர்.சுபமாகிறது திருமண மண்டபம்.

சம்பந்தமூர்த்திக்கு கோமாவில் இருந்த மீண்ட பீலிங். விசித்ராவுக்கு தன் கல்லூரி காதலனை உற்றார் உறவினர் சம்மதத்தோடு குறிப்பாக தந்தை விருப்பத்திற்கு ஏற்ப, கணவனாக அமைத்துகொண்ட பெருமிதம்.

வழக்கம்போல் தங்கராசுவிற்கு, விசியின் அக்கா திருமணத்திற்கும், தன் யோசனைப்படி தான் ஏற்ற கதாபாத்திரத்தை விட மிகமுக்கியமாகவும் புத்திசாலித்தனமாகவும் நேர்த்தியாகவும் நடந்து விசியின் விருப்படி அவள் காதல் திருமணத்தை நடத்திகொடுத்த தற்போதைய பாத்திரமென டபுள் தியாகதன்மை என மறைக்கபடும் கோமாளித்தனம், முட்டாள்தனம், பைத்தியகார பரதேசித்தனம். இன்னும் சில கேட்ட வார்த்தைதனம். மீண்டும் தன் சுயதிற்கு அதாவது கேடுகெட்டவனாய் வாழும் தன் பழைய நிலைக்கு திரும்பினான்.

ஒருபுறம் எது அப்படியோ ஏக சந்தோஷத்தோடு சம்பந்தமூர்த்தி குடும்பம் குதுகலிக்க, மறுபுறம் தங்கராசுவின் தாயாரும் அவனும் புரியாத புதிராகின்றனர். தாயார் “டேய் தங்கம் ஒனக்கு நெசமாவே வருத்தம் இல்லையாடா?” பெருமூச்சுடன் தங்கராசு “அட ஏம்மா, நான்தான் அப்பவே சொன்னேன்ல இவளுங்கள பத்தி உனக்கு தெரியாதுன்னு, அதிலும் பெரியவளைவிட சின்னவள் எப்பா என்ன தந்திரம்”னு மெய்சிலிர்க்கிறான். தங்க தாய் “அடச்சீ, என்ன மனுஷண்டா நீ? உன்னைய திட்டம் போட்டு ஏமாத்துராளுவோ, நீ என்னன்னா புகழ்ந்துட்டு இருக்கே”

தங்கராசு “யம்மோவ் நீ ரொம்ப நடிக்காதே, உன் பொண்ணும் பேத்திகளும் சந்தோஷமா இருக்கனும்னுதான் என்னைய தண்ணி தெளிச்சு விட்ட, பெருசா பேசுற” தாய் “அப்டி இல்லடா மருமகன்பய சரியில்ல அப்ப நாமதான் அவங்களுக்கு எத்த மாறி நடந்துக்கணும். சரி அத விடு, ஆனா உண்மையிலேயே உன்னால எப்ட்ரா” னு கண் கலங்குறாங்க.

தங்கராசு “இல்லமா எனக்கும் கோவம் கோவமா தான் வருது, அதனாலதான் என்னை நானே பழிவாங்கி என் வாழ்க்கை இப்டி ஆயிட்டு, ஆனா அவளுங்க முன்னாடி எல்லாமே தலைகீழ மாறிடுது அது ஏன்னு எனக்கு தெரியலமா, எனக்கு சின்ன வயசுலேந்தே அவளுங்கள ரொம்ப பிடிக்கும்மா, ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவளுக்களுக்கு எப்போ என்ன பிரச்சனைநாளும் நான் இருப்பேன்மா, என்ன வேணாலும் செய்வேன், இதெல்லாம் தியாகம்னு நெனச்சிடதேம்மா, எல்லாம் என் சுயநலம்மா, என் அக்கா பொண்ணுங்க சந்தோஷமா இருக்கணும்கிற சுயநலம். அவளுங்க மேல வச்ச காதலாகூட இருக்கலாம், உண்மையிலேயே அவளுங்ககிட்ட ஏமார்றதுகூட சுகம்தான்மா. அது ஒரு திருப்தி. அதெல்லாம் உனக்கு புரியாதும்மா நான் சொன்னா இன்னும் சொல்லிட்டே இருப்பேன்னு” திரும்பி பாக்குறான். அம்மா தூரத்துல மாட்டுக்கு தண்ணி வச்சிட்டு இருக்காங்க.

“தெரிந்தே ஏமாறுவதுதான் சிறந்த சுயநலம்”

“நல்லவனா வாழ்றதுக்கு நெறைய கெடுதல் செய்ய வேண்டிருக்கும், நமக்கு நாமே ”

“தியாகங்கள் போற்றப்படாததும் கூடுதல் சிறப்புதான்”

-தேவா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *