‘கல்யாணத்தை பக்கத்திலே உள்ள முருகன் கோயிலிலே நடத்தலாம். அப்புறம் கல்யாண மண்டபத்திலே ரிசப்ஷனை வச்சிடலாம்’ என்றார் பெண்ணின் தந்தை சபேசன்
”கல்யாணம், ரிசப்ஷன் ரெண்டையும் மண்டபத்திலேயே வச்சுக்கலாமே? என்று முதலில் சொன்ன மாப்பிள்ளையின் தந்தை, சபேசன் விடாமல் வற்புறுத்தவே ஒப்புக் கொண்டார்.
அவர் போனதும் சபேசனிடம் அவர் மனைவி மீனாட்சி கேட்டாள். ‘எதுக்குங்க கோயில்லதான் கல்யாணத்தை நடத்தணும்னு பிடிவாதம் பிடிக்கிறீங்க?
எல்லாம் காரணமாகத்தான். மாப்பிள்ளை பம்பாய், டில்லின்னு பல ஊர்லே உத்யோகம் பார்த்தவர். சந்தர்ப்ப சூழ்நிலையால தப்புத் தண்டா பண்ணியிருக்க வாய்ப்பு இருக்கே? இப்ப
கோயில்ல கல்யாணத்துக்கு அனுமதி வாங்க மாப்பிள்ளையோட எச்.ஐ.வி டெஸ்ட் ரிப்போர்ட்டை கொடுத்தாகணும். நம்ம டவுட்டும் கிளியர் ஆயிடும்’ என்று நமுட்டுச் சிரிப்பு
சிரித்தார் சபேசன்
– ஜனவரி 2012