கறந்த பால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 5,512 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸ்ரீமான் பாஸ்கரன், வழக்கப்படி, விடிவெள்ளி வேளையில் சிந்தாமணி படித்துறையில் ஸ்னானம் செய்து கொண்டிருக்கையில், தண்ணிரில் காலடியில் கெட்டியாகத் தட்டுப்பட்டு, அதை எடுத்துப் பார்த்தால்-விக்ரஹம்: அன்று வெள்ளிக்கிழமை. பாஸ்கர் புல்லரித்துப் போனார்.

வீடு திரும்பியதும், ரேணு வழக்கம்போல் அப்போது தான் காப்பியடுப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய குளியல் எல்லாம், காப்பிக்கடை ஆனபின் தான்.

பாஸ்கரிடம் ஒரு விசேஷம். தன்னை எடைக்கல்லாக வைத்துக் கொண்டு, மற்றவர்களும் தன் எடையையே, அவர்களுடைய செயலில் காட்டவேண்டும் என்று எதிர் பார்ப்பதில்லை. கட்டாயப்படுத்துவதுமில்லை. என் அம்மா சின்ன வயதிலிருந்தே என்னை, ப்ராத ஸ்னானம், சந்தியா வந்தனம், ஸ்தோத்திரம், ஜபம் என்று வளர்த்துவிட்டால் எல்லாரும் அப்படி இருக்க முடியுமா? பல் குத்திக் கொண்டே அடுப்பு பற்ற வைக்காமலிருந்தால் சரி, அஞ்சுக்கு இரண்டு பழுதில்லையானால் வண்டியை ஒட்டு! என்று வாய்விட்டே சொல்லமாட்டார்.

அம்மா, சரியாகப் பிள்ளை தலையெடுக்கற சமயத் தில், வந்த வழி போய்ச்சேர்ந்துவிட்டாள். பாஸ்கர் அவளுக்கு ஒரு மகவு. ஆகையால் அவள் மறைந்ததும் அவர் ஒண்டிக் கட்டையாகி விட்டார்.

ரேணு புத்தியில் அல்லது தேவையான சமயங்களில், உடல் சுறுசுறுப்பில், எள்ளளவும்குறைந்தவளல்லள். சக்திகள் வரவழைத்தாற்போல், உள்ளிருந்து சமயத்துக்கு ஆஜர். ஆனால் அவசரம் என்ன தட்டுக்கெட்டுப் போறது: மணமாகி மூன்று வருடங்களாகின்றன. இன்னும் எதிரும் புதிருமாக இரண்டு பேர்தான்.

ரேணு மறுதாரம், அம்மா காலமான கையுடன், சுற்றி யிருந்தவர்கள், இடம் பார்த்து, ஜாதகம் பார்த்து, பாஸ்க ருக்கு மணம் செய்துவைத்தனர். மறு வருடமே, முதல் பிரசவத்திலேயே, அவர் மனைவி, தான் ஈன்ற மகவுடன், பூமிக்குத் தன் பாரத்தைக் குறைத்துக் கொண்டு விட்டாள்.

வீட்டில் ஃப்ரிட்ஜ், க்ரைண்டர், மிக்ஸி, gas இத்யாதி நவீன உபகரணங்களுடன் பாஸ்கர் தானே சமைத்து சாப்பிட்டு, உத்யோகத்துக்கும் போய்க்கொண்டு ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் இப்படியே எத்தனை நாள் நடத்த முடியும்? என்றேனும் ஒரு நாள் அலுப்புத் தட்டாதா? நேற்றைய குழம்பை, ஃப்ட்ரிஜ்ஜிலிருந்து எடுத்துச் சுடவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்றேனும் அது வாடை காட்டாதா? அதன்மூலம் தன் வாழ்க்கையிலேயே வாடை அடித்துக் கொண்டிருப்பது தெரியாமலா போய்விடும்? எல்லாமே காமே அடுக்கி மூடி வைத்துக் கொள்கிற சமாச்சாரம்தானே!

அத்துடன் வயதும் ஆகிவிடவில்லையே!

இச்சமயம் அண்டையார் உதவியை அவர் காடவில்லை. தினசரிப் பத்திரிகையில் மணமகள் தேவை விளம்பரம் கொடுத்தார். கொடுத்ததுதான் கொடுத்தார்.இத்தனை பதில்களா வரும்: பாஸ்கருக்குச் சிரிப்பு வந்தது. அன்று மாலை, ஸ்னானம் செய்து, சந்தியாவந்தனம், காயத்திரி ஜபம் எல்லாம் முடித்துக் கொண்டு, குத்து விளக்கை ஏற்றி, வந்த அத்தனை கவர்களையும் அடுக்கி அம்பாள் படத்துக்கெதிரே வைத்துத் தான் கண்ணை மூடிக் கொண்டு, அந்த அடுக்கிலிருந்து ஒரு கவரை எடுத்தார்.

விளைவு.

ரேனு கொடுத்து வைத்தாள்.

அப்போது ரேணு ஹாஸ்டலில் இருந்து கொண்டு ஒரு சிறிய பள்ளியில் ஆசிரியையாக இருந்தாள். கொடுத்து வைத்தாள் என்பதில் சந்தேகமா? கணவன் தோற்றத்தில் குறைவா? உக்தியோகப் பதவியில் குறைவா? அவருடைய மேல் அதிகாரிக்ள் இரண்டு முறை அவரை வெளிநாடு போகக் கோரி, மறுத்து விட்டார். காரணம்? அவருடைய கேம, கிஷ்டை, அனுஷ்டானங்களுக்குத் தடை வரும் என்று தான்.

போன இடம் எல்லாம் ஸ்னானத்திற்கு காவிரி கிடைக்காது. ஆனால் தினம், கோவில் தரிசனம் பண்ணா மல் அவரால் இருக்க முடியாது. ஹா, ஹகு என்று சாளிக்ராமம், கல்லுப் பிள்ளையார், ஆராதனை இதெல் லாம் வைத்துக் கொள்ளவில்லை.

அம்பாள் படத்துக்கு லலிதா சஹஸ்ரநாமம் சொல்வி, வெள்ளிக் கிழமைதோறும், பாயஸ் நைவேத்யம் பண்ணி, அதைக் குழந்தைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சி, அனுபவித்தவருக்குத்தான் தெரியும். இதெல்லாம், அதனதன் ஐதீக வாசனையுடன் லண்ட னிலோ, நியூயார்க்கிலோ கிடைக்குமா?

No, இந்த தங்கச் சங்கிலியை, அயல்நாட்டு வாசத்தில், சேதப்படுத்திக் கொள்ளவோ, கத்திரித்துக் கொள்ளவோ அவர் விரும்பவில்லை. இல்லை என்று அடித்தே சொல்ல லாம். அவரால் முடியாது. சிலம் ரத்தத்தில் அப்படி ஊறிப் போயிருந்தது,

ஒவ்வொருத்தர் மாதிரி தினப்படியே பரபரப்பும், ஏதேனும் அசாதாரணம் நேர்ந்துகொண்டிராமல், பதற்ற மற்ற அவருடைய வாழ்க்கையில் இந்த விக்ரஹம் கிடைத்தது அவருக்கு ஒரு அபூர்வமான சம்பவம் தானே?

நன்கு விடிந்த காலை வெளிச்சத்தில் விக்ரஹத்தைச் சோதித்துப் பார்த்தார். சுமார் ஏழங்குல உயரத்தில், நல்ல கனம். பஞ்ச உலோகங்களும் சேர்ந்திருக்குமோ? அம்பாள் தவத்திலிருப்பது போல் ஒரு அசாதாரண பிரதிஷ்டை. வலது காலை ஊசி மேல் ஊன்றிய படி, முழு காஷாயத்தில், தியானத்தில் ஆழ்ந்து கிற்கிறாள். அப்பா! என்ன அழகு! என்ன பொலிவு.

இந்த வடிவம் வீட்டில் வைத்துக்கொள்ள உரியதா அல்லது கோவிலில் சேர்த்துவிடலாமா? என்று சந்தேகம் தோன்றிற்று. காளைக்குத் தீர்மானம் பண்ணலாம் என்று காளை, காளையாகத் தள்ளிப்போய், கண்டெடுக்கப் பட்டவள் ராஜராஜேஸ்வரி படத்தடியில் தங்கி விட்டாள்.

தினப்படிக்கு மஹாநைவேத்யம் நைவேதயாயி. சுக்ரவாரம் பாயஸம்.

காஷாயணி
காத்யாயினி
தபஸ்வினி
கன்யாகுமரி
தேவி வந்தே வந்தே

அவளுடைய ஆகர்ஷம் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. ஆபீசில் சிக்கலான ஃபைல் ஒன்றில் ஊன்றி இருக்கும்போது, பக்கங்களிடையே கரென்ஸி கோட்டில் water mark போல் அவள் வடிவம் தோன்றும். விஷயத்தின் கவனம் குலைந்து, சிந்தனை பூரா அவளிடம் ைேலத்து விடும். ஒரு தினுசான ஆனந்த ைேல. வியப்பு நிலை. வெகு காலம் பூஜையில் இருந்து, சிறைய உச்சாடனங்கள் ஏறிய நிலையிலிருந்துதான் விக்ரஹம் வந்திருக்கிறது. அதில் சந்தேகமேயில்லை. இல்லையேல் எங்கிருந்து இத்தனை சக்தி? இதற்கு எதிரில் என்னுடைய ஆராதனை எம்மட்டு: ஃபைலில் மறுபடி கவனத்தைத் திருப்புவார். என்ன ஆச்சரியம். அதன் சிக்கல் கலைந்து, தெளிவான முடிவு தோன்றும். அதைக் காட்டவேதான் வந்தாளோ? அப்படித் தோன்றுகையிலேயே, ஒரு பரவசம், அடுத்து சன்னதி பயம்.

நள்ளிரவில் அழைப்பு விடுத்தாற்போன்ற உணர்வில் விழிப்பு வரும்.

பக்கத்தில் ரேணு முனகிப் புரள்வாள். சில சமயங் களில் தூக்கத்தில் வீறிடுவாள்.

அடுத்த நாள் ரேணு. என்ன துர் சொப்டனம் உனக்கு?’ என்று விசாரித்தால், எனக்கு ஒன்றும் நினைப்பு இல்லையே’ என்று விழிப்பாள், வீறிட்டுக் கத்தினேனா என்ன என்று சிரித்து மழுப்புவாள்.

ரேணு சோம்பேறி. ஆனால் அழகி. அந்த ஜாலத்தில் தான் இவள்போன்ற பெண்கள் காலம் தள்ளவேண்டும். அதற்கு ரேணுவுக்கு இங்கு கஷ்டமில்லை. ஒரு மாமியார், இரண்டு நாத்தனார்மார்கள், நாலு ஒர்ப்படிகள் சேர்ந்த கூட்டுக்குடும்பத்தில் இவள் கிலை எப்படியிருக்குமோ? ஆனால் இதெல்லாம் உதவாத, ஒவ்வாத யோசனை. விட்டுத்தள்ளு.

குத்துவிளக்கை ஏற்றி பாஸ்கர் அமர்ந்து விடுவார். எந்தக் கோயில் அல்லது மடத்தினின்று கழன்று வந்திருப்பாள்? காவிரியில் அகப்பட்டமையால் இவள் பூர்வோத் திரம், இந்த வட்டாரம் தான் என்று கொள்ள முடியுமா? இவள் பிரயாணம் இமயத்தில் ஆர்ம்பித்து, விந்தியம் தாண்டி ஏன் வந்திருக்க முடியாது? அதுவும் எத்தனை காள் பயணமோ? ஒரு நாளா, ஒரு வருடமா, எத்தனை ஆயுசுக்களோ? இவளை வடித்த சிற்பி எந்தக் காலம்? உண்மையில் இவள் வடித்தவளா? கித்யத்துவத்தின் அலைகள் ஒன்றில் சவாரி செய்துவந்து…

பாஸ்கர் மூர்ச்சையானார். பாஸ்கர் அப்படி ஒன்றும் கற்பனா சக்தி படைத்தவர் அல்லர். ஆகையால் இது போன்ற சிந்தனை, சிந்தனையினின்று தோற்றங்கள், தன்னிடமிருந்து எழுந்தன, எழக்கூடியவை என்பதை அவரால் தாங்கக்கூடியதாக இல்லை. முதலில் அவை அவருடையதா? இல்லை; அவள் வைக்கும் பொறி.

திடீரென்று பாஸ்கருக்கு உடல் பரபரத்தது. அடுத்த தருணம் ஏதோ அமானுஷ்யம், ஆச்சர்யம் கிகழப்போவது போன்ற உணர்வு. தியானத்தில் மூடியிருக்கும் அவள் கண்கள் திறக்கப்போகின்றனவா? உடல் கடுங்க குத்து விளக்கைத் தூக்கி விக்ரஹத்தின் முகத்துக்கெதிரே பிடித் தார். புன்னகையின் அரும்புதான் விரிந்திருந்தது.

பாஸ்கர் மாரைப் பிடித்துக் கொண்டார். அவள் கண் திறந்தால் நிச்சயம் என்னால் தாங்க முடியாது. விக்ர ஹத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, பாஸ்கர் கங்கோத்ரி யிலேயே ஸ்னானம் செய்தார். இங்கு இரு மலைச் சாரல் களிடையே குழந்தைபோல் தவழ்கிறாள். பின்னால்தான். அல்லது முன்னாலா? சங்கரரின் சடைமுடியே இலக்கான உக்ரஹம். அடுத்து மானசரோவர் ஏரி. ஹரித்வாரில் கங்கை யின் குளிரே முதல் தொடலில் நெருப்பாய்ச் சுட்டது. அடுத்து, யமுனையின் சுழித்த கொந்தளிப்பில் திணறினார்.

கங்கை எவ்வளவோ தேவலை. பிரம்மபுத்திராவின் அலை கள், அவரைச் சின்னாபின்னமாக்க முயன்றன. ஆனால் அவளிருக்கப் பயமேது? காவிரி, தாமிரவருணி, முதலை கள் பக்கம் போகாவிட்டால், குழந்தைகூட குளிக்கலாம். குற்றால நீர்வீழ்ச்சி, மேலே பாலருவி, தேனருவி, கடைசி யாக கன்யாகுமரியில் முக்கூடல் கடல்.

உட்கார்ந்த இடத்திலேயே இத்தனை அனுபவமும். நினைப்பு மீண்டபோது கீழ்த்திசையில் விடிவு பொல பொல, கண்டது. அத்தனையும் கனவா? தோன்றவில்லை. கனவா? சாத்யமில்லை. இடையில் என்ன அது? உடம்பில் துளி அசதியில்லை. உற்சாகமே தெரிந்தது.

பாஸ்கர் பூசை புனிஸ்காரக்தில் மும்முரமாகி விட்டார்.

அவரால் அவளை ஆபீஸ் நேரத்துக்குக்கூட பிரிங் திருக்க முடியவில்லை. இதுமாதிரியும் உண்டா? எனக்கு ஏன் இப்படி? என்று தன்னைத் தானே கேட்டுக்கொள்ளக் கூடத் தோன்றவில்லை. பூஜையில் கண்ணை மூடி அமர்ந்ததும் அவருடைய இதயக்கமலத்தில் வீற்றிருந்தபடி, பின்னணியில் எழும் உதயஜோதியில் அவள் ஜ்வலித்தாள். பாஸ்கர் தன் மனோபக்குவ நிலையில் ஒரு தடம் தாண்டி விட்டாரா?

உடனே அவர் உச்சிக்குடுமி வைத்துக்கொண்டு, பஞ்சக்கச்சம் கட்டிக்கொள்ளத் தேடவில்லை. ஒரு வேளை அப்படிச் செய்திருந்தால், அவருடைய உடல்வாகுக்கு மேனி சிவப்புக்கு நன்றாகவே இருந்திருக்கும்.

இங்கே பக்கத்தில் எங்கே நந்தவனம்? தேடி விசாரித்து, தானே மலர்களை குடலை பொங்க பறித்து, தொடுத்து, சார்த்தி, அழகு பார்த்து மகிழ்வார். அபிஷேகத் திரவியங்களைச் சேகரித்து, அன்பு பொங்கக் குளிப்பாட்டு வார். உயர்ந்த பட்டுத் துணியில், பக்தியுடன் ஒற்றி, துடைத்து, உடுத்தி, மலர் அணிவித்து தாபதீபம் காட்டி, நேரம் போவதே தெரியவில்லை.

மகராஜி, அத்தனை ஆரர்தனைகளையும் ஏற்றுக் கொள்பவளாக இருந்தாள்!

அவர் உப்பு இல்லாமல் உபவாஸம் இருக்க முயல வில்லை. கிடக்கைக்கு மான்தோல் தேடவில்லை. அல்லது கட்டாந்தரையில் படுக்க ஆரம்பிக்கவில்லை. ஏன் என்றால் யாரேனும் கேட்டிருந்தால் எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லையே! என்று உண்மையைத் தான் சொல்லி யிருப்பார். அவருக்கு இதுபோல் ஆராதிப்பது பிடித்தது; ஆராதித்தார்.

தினம் முடியாவிட்டாலும், மாதம் ஒரு முறையேனும் அம்பாளுக்கு ஒரு சொம்பு நிறைய பாலாபிஷேகம் செய்து பார்க்க வேண்டும். இந்த ஆசையில் உள்ள நெஞ்சீரல் யாதெனில் சுத்தமான கறந்த பசும்பாலுக்கு எங்கே போவேன்? (குடம், பைப்பால் கிடைக்கலாம்.) இது கலப்பட யுகம். ஒரு செம்பு கிறைய துரை வழிய ஒரே மாட்டுப் பசும் பால்…டவுனில் எங்கே போவேன்?

நாளடைவில் இந்த நெஞ்சிரல் விசிறிக்கொண்டு, வீசிக்கொண்டு, விபரீத ஆசைக்கனல் தகிக்கத் தலைப் பட்டது. காமே ஒரு பசுமாடு வாங்கிவிட்டால் என்ன? பின் யோசனையில் டவுனில் வாடகை வீட்டில் மாடு வைத்துக் கொள்வது என்பது கடைமுறையில் சாத்யப்படுமெனத் தோன்ற வில்லை.

ஆனால் அம்பாளுக்கு சுத்தமான பசும்பாலில் அபிஷேகம் செய்து விக்ரஹத்தின்மேல் பாலின் வெண்மையின் வழிதலினின்று அவளுடைய சிரித்த முகம் வெளிப்படுவ தைப் பார்க்க வேணுமே!

அந்த அழகைப் பார்ப்பதற்கு எந்தப் பாலையேனும் ஊற்றிப் பார்க்கலாமே என்று ஒரு சமாதானம் மனதில் எழுந்தபோதிலும் அதே மனம் ஏற்க மறுத்தது. இப்படியும் ஒரு சபலம், உறுத்தலாகக் கிளம்பி, அதுவே படிப்படியாக ஒரு வெறியாக மாறுவது தெரியாமலே மாறும் அந்த அவஸ்தையில் பாஸ்கர் மாட்டிக்கொண்டு விட்டார். அவஸ்தை நிலை, அவகிலையாக மாறி விடுமோ போன்ற நிலை.

அவரைப் பார்த்து, தெரிந்தவர்கள் ஒருவருக்கொருவர் கண் சிமிட்டும் நிலை, பேர் எரிச்சலே படும் சிலை. குடிக்கக்கூடத் தண்ணி இல்லாமல் குடத்தைத் தாக்கிக்கொண்டு ஒவ்வொருத்தன் அலையறான். இந்த மனுஷன் சாமிமேல் கொட்டறானாம். பொம்மைமேல் கொட்டறத்துக்கு அவனும் குடத்தைத் தூக்கிக்கிட்டுப் பாலுக்கு அலையறா னாம். எப்படியிருக்குது கதை!

‘கூழுக்கு உப்பு இல்லை என்பாரும், பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பாரும்…’

பாட்டு எப்பவோ எழுதிப் போட்டாச்சு. இதுக்குத் தான்.

ரேணு? அவள் புருஷனை இப்படிப் புரளி செய்வது அவளுக்கு எப்படி இருந்தது முதலில் இது என்ன அசட் டுக் கேள்வி. ஆனால் ரேணு விஷயத்தில் அந்தக் கேள்வி அசட்டுத்தனம்தானா? தோன்றக்கூடிய சந்தேகம்தான். கணவனுக்கேற்ற மனைவி. ஒருவர் வழியில் ஒருவர் குறுக் கிடுவதில்லை. இன்னிக்கு மஹா நைவேத்யத்துடன் வடை பாயஸம் என்று ஒருமுறை சொல்லிவிட்டால் போதும், பூஜை மணி சத்தம் கேட்டவுடனேயே தாமாக வந்துவிடும். மனம் தெய்வ ஆராதனையில் முனைந்தவுடன் கடைகண்ணி, வீட்டு வேலை, நிர்வாகம் படிப்படியாக அவள் பங்குக்குச் சேர்ந்து விட்டது.

அதனால் என்ன? இந்த நாளில் தான் பாதிக்கு மேல் ஆண்பிள்ளை வேலைகளை பெண்கள் தானே கவனித்துக் கொள்கிறார்களே, தாங்களும் உத்யோகமும் பண்ணிக் கொண்டு அவள்பாட்டுக்குப் போவாள், வருவாள். எங்கு போனாய், ஏன் போனாய், எப்போ திரும்புவாய்-கேட்க ம்ாட்டார். பாஸ்கர் சுபாவம் அப்படி, அவளும் தானாக, போன வங்த விவரங்களைச் சொல்லமாட்டாள். தேவை யில்லை. அனேகமாக இன்றைய எல்லாக் குடும்பங்களும் இப்படித்தானே கடக்கின்றன? அதில்கூடப் புதுமை எது?

ரேணு ரோசத்தைப்பற்றி அல்லவா கேள்வி அநேக மாகக் கேள்விக்குப் பதில் ப்ளாங்கி தான். அண்டைவீட்டு எதிர்வீட்டு சகவாசம் என்று ரேணு கொண்டாடுவதில்லை. அவளைத் தேடி வரும்படியாகவும் வைத்துக்கொள்வ தில்லை. தனி ஜீவி? கிட்டத்தட்ட அப்படித்தான். மழுங் குணி மாங்கட்டை அழுத்தக்காரி? ஆபத்தான கேள்வி. என்னைக் கேட்டால் மைக்கேன் பாடு என்று இருந் தாளா? இருக்கலாம். நமக்கேன் பாடு என்பதே நடை முறைத் தத்துவமாக இந்நாளில் விளங்குகிறது.

ஒரு நாள் வாடிக்கை பால்காரக் கிழவன் (எருமைப் பால்) வந்தான். சாமி, இன்னிக்கு சாயந்திரம் பசுமாடு வீட்டுக்கு கொண்டு வந்து கறக்கறேன். ஒருவேளை தான். வாடிக்கைக்கார சேட் பம்பாய் போயிருக்கார். நாளை ப்ளேனில் திரும்பிவிடுவார். இஷ்டமா? ஒரு வேளைதான்.’

கிடைத்தவரை லாபம்.

பரவாயில்லை. ஒண்ணரை லிட்டர் கறக்கும் ஜாதி மாடு. பால் தடிப்புத்தான்.’

வீட்டு வாசலில் ஒரு மூலையில் எருமை மாட்டைக் கிழவன் கறக்கிறான். அது தினப்படி வீட்டுச் செலவுக்கு. ரேணு பாத்திரத்துடன் அவன் எதிரே நிற்கிறாள்.

மறுகோடியில் பாஸ்கர் ஒரு எவர்சில்வர் தூக்குடன். (கொஞ்சம் பெரிய தாக்குதான்) கறவல் அத்தனையும் அப்படியே வாங்கிக் கொள்வதாகப் பேச்சு.

பால் நுரையோடு, குவளையில் உயர்ந்து கொண்டே வருவதைப் பார்க்கிறார். நுரை துளும்புகிறது. கொஞ்சம் குவளையினின்று தப்பி, காற்றில் அலைந்து பறக்கிறது. நன்றாய்த்தானிருக்கும் போலிருக்கு.

சேட் காளைக்கும் பம்பாயிலேயே தங்கி விட்டால் எவ்வளவு நன்னாயிருக்கும்’

‘சேட் பம்பாயிலேயே தங்கிவிடக்கூடாதா?’

பாஸ்கர் தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார். எத்தனை வயதானால் என்ன? மனிதனைச் சுரண்டினால் அடியில் சிறுபிள்ளைத்தனம் தான்!

‘ஆ கறந்த பால் தேடற ஐயாவா? அது நீங்கதானா? வேறு யாரோன்னா பார்த்தேன்!”

பாஸ்கர் பதில் பேசவில்லை. அவருக்கு வழக்கம் கிடை யாது. கிழவன் பிள்ளைilஆ போட்டிருக்கிறான். பாஸ்கர் எப்பவுமே அனாவசியமாக வாயைக் கொடுக்கமாட்டார். அவருடன் சம்பாஷணை அநேகமாக ஒருதலையாகத்தான் அமையும். அதற்குக்கூட ஒரு knack வேனுமில்லே?

“ஐயாகிட்டே ஒண்னு சொல்லனும்னு ரொம்பு நாளா எனக்கு எண்ணம். என் அப்பன் எதிரே இருக்கான். இருந்தாலும் சொல்றேன். நான் நல்லா போட்டிருக்கேன். எனக்குத் தெரியும். ஆனால் நான் போட்டிருக்கப்பத்தான் நான் சொல்ல நினைச்சதைச் சொல்ல முடியும். ஐயா, உலகத்திலே கறந்த பாலே கிடையாது. அடிச்சு சொல் றேன். கடவுளுக்கே அந்த எண்ணம் கிடையாது. அம்மா, நீ என்ன சொல்றே?”

ரேணு முகம் வெளுத்து, சிவந்து, லேமாகி, மறுபடியும் வெளுத்து-இதென்ன டெக்னி கலர்-பாஸ்கருக்கு வியப்பு.

‘ஐயா கறந்த பால்னா என்ன தெரியுமா? ஏமாந்தாங் கொள்ளி.’

அவளுடைய நெற்றி நரம்புகளில் பச்சைக்கொடி ஒடிற்று. விழிகளில் ஏன் அப்படி ஒரு திகில்?

‘அம்மா, நாளைக்கு வெள்ளிக்கிழமை இல்லே?”

அவள் விழிகள் வெளியில் பிதுங்கிவிடும் போல் ஆகி விட்டன.

‘அம்மா நாகம்மா என் உடன் பிறந்தா…’

புதிர் மேல் புதிர். ரேணுவுக்கு திடீர் களைப்பில் விழிகள் செருகின. சட்டென உள்ளே போய்விட்டாள். கிழவன் பாதி கறவலினின்று வெடுக்கென எழுந்து வந்து அணை கயிற்றினாலேயே பையனை வீறுவீறு என்று வீறி னான். அடி செருப்பாலே, ள வர். உன்னை எவன் விளக்கம் கேட்டான்?”

பையன் வைதுகொண்டே எழுந்து ஓடினான். குவளை அப்படியே தரையில் உருண்டது.

“டேய் ராத்திரி நீ வீட்டுக்கு வரமாட்டே? அரிவா ளோடு காத்திட்டிருக்கேன், வா.”

கிழவன் ஒல்லி. மூச்சு இரைத்தது. வயிறு முதுகோடு ஒட்டித் துருத்தி வாங்கிற்று.

பூமியில் பால் தேசப்படம் வரைந்து இன்னும் விரிந்து கொண்டே போயிற்று.

“முழுத் துாய்மையான பண்டம் யாருக்குமே கிடை யாது என்று ஆண்டவன் விதியோ?”.

‘உன் முயற்சிகளை என்னிடம் கொண்டுவா. உன் முயற்சிகளில் நீ தோல்வியுற்றால் உன் தோல்வியை என் னிடம் கொண்டுவா.”

இது கீதையினின்று ஒரு வாக்யம். ஆங்கில மொழி பெயர்ப்பினின்று பாஸ்கருடைய மனதில் சொந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு, கீதையுடன் அவருக்கு இன்னும் அதிக பழக்கமில்லை. ஆனால் இந்த அடி இப்போது தோன்று வானேன்.

கணவன் மனைவி இடையே பலப்பரீட்சை முறை யில்லைதான். அவளும் அவருடைய அந்தக் கேள்விக்கு, ஒரே கேள்விக்குக் காத்திருந்தாள். இல்லை காத்திருந்தாளா? .

அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால், உடனே ஒரு நுனியைப் பிடித்து இழுத்தால் அத்தனை முடிச்சுகளும் அவிழ்வதுபோல் புதிர் பிரிந்திருக்கும். இல்லை, பிரிந்திருக் குமா? அவருடைய நடமாட்டத்தை, செயல்களை, அவள் விழிகள் தொடர்வதை, அவர் முதுகைத் துறுவுவதை பாஸ்கர் உணர்ந்தார். என்னவோ நேர்ந்துகொண்டிருக் கிறது. ஆனால் பாஸ்கர் அந்தக் கேள்வியைக் கேட்கு மாட்டார். தானாகக் கணியாததை தடியால் அடிக்கமாட்டேன்.

பாஸ்கர் மழுங்குணி மாங்கட்டையா? அல்ல அழுத்தக் காரரா? அல்ல நமக்கேன் பாடு நடைமுறைத் தத்துவத்தின் கடைப்பிடிப்பா? இப்படி இருப்பது சரியில்லை என்று எனக்கே தெரிகிறது. ஆனால் ஏன் இப்படி இருக்கிறேன்? புரியவில்லையே!

சமையல்கட்டு வேலை முடிந்த பின்னர் ரேனு ஒரு தலையணையையும். ஜமக்காளத்தையும் எடுத்துக்கொண்டு பக்கத்தறைக்குச் சென்று விட்டாள். இது அவர்களிடையே புதுசு. இது ஒரு சவால்தான் அந்தக் கேள்வியைக் கேட்க. No, I won’t . குறுக்கிடுவது வறட்டு கெளரவமா? எ லி யுடன் பூனை விளையாட்டா? ஈசுவரி தோன் சஞ்சலத்தைத் தீர்க்கணும்.

நள்ளிரவில் எழுந்து பூஜையறைக்குச் சென்றார். குத்துவிளக்கில் சுடர் முத்தாட்டம் எரிந்து கொண்டு, அசைவற்று கின்று, அது எரிந்த ஒளியின் கிழலாட்டத்தில் அவள், அவளுடைய அற்புதமான மந்தஹாஸத்தைப் புரிந்து கொண்டு கண்களை மூடி தவத்தில் இருக்கிறாள். உள்ளே திரும்பிவிட்ட பார்வைக்கு அவளுக்கு என்ன தெரி கிறது? இல்லாவிட்டால் ஏன் இந்த அற்புதமான புன்னகை மந்தஹாசினி.

அவள் கட்டை விரல் ஊசி முனையை அழுத்திக் கொண்டிருக்கிறது. பாஸ்கர் குனிந்து உற்று நோக்கினார். இன்றுதான் புதிதாகப் பார்ப்பதுபோல் தோன்றியது. இந்த விக்ரஹத்தைச் செதுக்கிய சிற்பியே ஒரு அவதார புருஷனாகத் தான் இருந்திருக்கவேண்டும். எவ்வளவு சன்னமான ஊசி! ஆனால் என்ன திடம்? தேவியை அவள் தவத்தில் அவளைத் தூங்கவிடாமல் ஸ்தாதவத்தில், தவமெனும் நெருப்பில் அவளைக் காப்பாற்றிக்கொண்டிருக் கிறது. அப்போது ஊசி முனை அவள் தவ உலகத்தையே தாங்குமெனில், நம் கவலைகள் எவ்வளவு அற்பம்? அவளிடம் கொண்டு போய் வைப்பதற்கே லாயக்கில்லை.

மறுநாள் ஆபீசிலிருந்து பாஸ்கர் திரும்புகையில் ரேணு வாசலில் காத்திருந்தாள். வாசற்கதவு பூட்டியிருந்த சாவியை அவரிடம் கொடுத்தாள். இதுவும் அவர் களிடையே புதுசு.

“வாங்கோ போகலாம்.”

எங்கே? ஏன்? கேட்க மாட்டார்.

இருவரும் கடந்தனர்.

யாரேனும் கவனித்திருக்கிறீர்களா? சில சமயங்களில் பார்வைக்கு ஒரு திடீர் பளிங்கு ஏற்படுகிறது. அல்லது அப் படித் தோன்றுகிறது. அதில் அதுவரை பலகால விஷயாதி கள் ஒரு புது பரிமாண அர்த்தத்தை, தோற்றத்தைக்கூட அடைகின்றன. ஆச்சர்யமாயில்லை? இதுவரை எப்படி இதற்கு நான் குருடாக இருக்தேன்?

இவள் முகத்தில் எப்படி இயற்கையே துடைத்து விட்டாற்போல் இந்த அதிசுத்தம்? அவள் கூந்தலைக் கொண்டையிட்டுக் கொண்டிருந்தாள். பொய்க்கொண்டை போட்டிருந்தமாதிரி கூந்தலின் நிஜம். இப்படியே கடந்து கொண்டேயிருக்கலாமா?

அவர்கள் மேல் இறங்கிய ஏதோ ஒரு அமைதியின் சிற கணைப்பில் இருவரும் பேசவில்லை. ரேனு மெதுவாகத் தான் நடந்தாள், இரு சாரிகளையும் பார்த்துக் கொண்டு. சட்டை உரித்தாற்போன்று உடல்வாகில் அடக்கிய துடிப்பு. புலியின் சோம்பல் கடை. புதிதாகப் பார்ப்பது போலும்? அல்லது கடைசியாகப் பார்ப்பது போலுமா?

எவ்வளவு தூரம் நடந்திருப்போம்: அக்கறையில்லை. ரேணு திடீரென ஒரு வீட்டெதிரே கின்று கதவை மெது வாக விரல்கனுவால் தட்டினாள். கதவு திறந்தது.

ஒரு கப்பல் பாஸ்கரைப் பார்த்ததும், அந்த ஸ்திரீயின் முகம் மாறிற்று.

‘நாகம்மா, இவர்தான் என் வீட்டுக்காரர்.’

“வாங்கய்யா, வாங்க. உள்ளே வாங்க-இந்தாங்க, இந்த விசுப் பலகையில் குங்துங்க.’

‘நாகம்மா, டீ செய்து கொண்டு வா’ ஒரு கீச்சுக் குரல்.

இது யார்?

பாஸ்கர் உத்தரவு வரும் திசையில் திரும்பினார்.

விட்டத்திலிருந்து ஒரு கிளிக்கூண்டு ஊஞ்சலாடிற்று. அதன் மேல் துணி மூடியிருந்தது. பாஸ்கருக்கு சிரிப்பு வந்துவிட்டது. நாகம்மா சமையலறைக்குள் சென்றாள். இரண்டு வினாடிகளுக்கெல்லாம் சமையலறையிலிருந்து ஒரு மின்னல் சுடர் பாய்ந்து வந்து ரேணுவைக் கட்டிக் கொண்டது.

‘இது லல்லி. இவருக்கு நமஸ்தே சொல்லு. எனக்கு நாகம்மாதான் பிரசவம் பார்த்தாள்.’

தோற்றுப்போயிருந்த மின்சாரம் அப்பொழுதுதான் மீண்டது. விசிறி சுழலத் தலைப்பட்டு, பாஸ்கர் நெற்றி வேர்வையை ஒற்றிற்று. உள்ளேயே கொஞ்சம் புழுக்கம் தான்.

‘லல்லி என் தவறு-இல்லை, இல்லை.” தவடையில் ஒரு கையால் மாற்றி மாற்றி தட்டிக்கொண்டாள். தவறு செய்தவள் நான். ஏமாந்து போனவள் கான். சின்ன வயசில் பெத்தவா ரெண்டு பேரையும் இழந்துட்டு தனியாக வாழ நேரிடும் என் போன்றவர்கள் கதி, இப்படித்தான். என்னை எமாத்தினவரைக் குத்தம் சொல்லி என்ன பயன்? எமாந்தவள் நான். அன்னிக்குகூடப் பார்த்தேன் அவனை. அவன் என்னைப் பார்க்கவில்லை. யாரோடேயோ போய்க் கொண்டிருந்தான். பெண்டாட்டியா? இன்னொரு எமாளியா? யார் கண்டது? ஒழுங்காய் வாழ்ந்தால் சரி. யாருக்குத்தான் ஆசை இல்லை? உங்கள் விளம்பரம் கண்டதும் வாழ்க்கையில் என் அந்தஸ்தை மீண்டும் பெற ஒரு சபலம். லல்லி பிரச்சனையை எந்த மாதிரி தீர்த்துக் கொள்வது என்று அப்போது தெரியாது. என்றேனும் ஒரு காள்…அதுவரை காகம்மா. அவ்வளவுதான். அந்த சமயத்துக்கு முக்யமாய், தெரிந்தது என் மீட்சி. அவ்வளவுதான்.’

ரேணு புன்னகை புரிந்தாள்.

நாகம்மா வெளியே வந்தாள். அவள் இரு கைகளிலும் ஏந்திய தட்டில் இரு கோப்பைகளில் இருந்து மணமான ஆவி பறந்தது.

பாஸ்கர் உயை மெதுவாக அனுபவித்துப் பருகினார். ஜன்னலுக்கு வெளியே சர்வ சிசப்தம். சந்துதான், ஆனாலும் சர்வ சுத்தம்,

ரேணு டீ சாப்பிட வில்லை. அவள் கைகள் அவள் மடியில் அமைதியான சிறகுகளாய் ஒன்றன் மேல் ஒன்றாய் உறங்கிக் கொண்டிருந்தன.

அவள் காலடியில் லல்லி தானே தன்னுடன் ஏதோ பேசிக்கொண்டு ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள்.

பாஸ்கர் எழுந்து நின்று-என்ன உயரம்!-குனிந்து லல்லியைத் தூக்கிக் கொண்டார். சாவியை ரேணுவிடம் மறுபடி ஒப்படைத்தார்.

“போவோமா?”

“Thanks நாகம்மா” – கூண்டுக்கிளி.

கூடத்தின் அந்தி இருளில், திடீரென பாஸ்கர் கன்னத் தில் உதடுகள் உராய்ந்தன. பாஸ்கர் மார்புள் பாறை ஏதோ உருகி உடைந்தாற் போன்ற பயங்கர இன்பம், கல்லா? பணியா? நெய்யா? நீங்களா கறந்த பாலைத் தேடறேள்?’. அவள் விழிகள் ஸ்படிகத்தில் பளபளத்தன. கல் கண்ணிர் கசிந்தால் இவ்வளவு அழகா?

மறுநாள் மாலை பாஸ்கர், ஆபீசிலிருந்து திரும்பி உடுப்புகளைக் கழற்றி, உடம்பைச் சுத்தி செய்து கொண்டு பூஜையறையில் நுழைந்தால் –

விக்ரஹத்தைக் காணோம். ரேணு குத்துவிளக்கை ஏற்றிக் கொண்டிருந்தாள்.

‘எனக்கு ரொம்ப காளாகவே எண்ணம். இந்த மாதிரி யான பிரதிஷ்டை, நமக்கு வழிபாடு வழி தெரியாமல் சம்சாரி வீட்டில் நீடித் திருப்பது சரியல்ல. அதனால் இன்று அவள் வந்த இடத்திலேயே கொண்டுபோய் விட்டு விட்டேன்”

ஒரு கணம் ஒரு யுகம் கண்ணுக்குக் கண், கருவிழிக்குக் கருவிழி நேருக்குநேர் சலசல. பாஸ்கர் முதுகு திரும்பினார். அவருக்குத் தெரிகிறதோ இல்லையோ, முதுகுக்கு உசிதம் தெரியும்.

ஆமாம். அவள் சொல்லுவதும் வாஸ்தவம்தான். அடுத்து, கொடுத்து வைத்தவனுக்கு கண் திறந்துவிட அவள் போக வேண்டாமா?

அவர் கைவிரலுடன் இரண்டு பிஞ்சு விரல்கள் கோத்துக்கொண்டன.

‘அப்பா.’

– புற்று (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1989, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *