கருப்புசாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 10,759 
 

ஏலே …. கருப்பு எந்திரிலே….,
………. ……..

ராசா….எந்திரிப்பா….பொளுது விடிஞ்சிருச்சு..

ம்.., ம்….,

ஐயா ரவைக்கு நீ லேட்டாத்தான் வந்தே.. என்னய்யா செய்யுறது நம்ம பொளப்பே அப்படி இருக்கே……
ஆத்தா..ஒரு அஞ்சு நிமிஉக்ஷம் ஆத்தா….கால் முச்Nடும்நோவுது ஆத்தா..,

கருப்புசாமியின் முனகலிலிருந்து அவன் கால் வலியின் தீவிரத்தை அவளால் உணர முடிந்தது, முத்தம்மா கண்களில் தேங்கிய கண்ணீரை முந்தானையால் துடைத்தபடியே ‘சாமி…., எனக்கு எல்லாம் புரியுது ல….என்ன செய்ய முதலாளி சீக்கிரம் ஒர்க்சாப்புக்கு வரச் சொன்னார்ன்னு நீதானே நேத்து சொல்லுத எளுந்திரி சாமி..

..முதலாளி என்ற பேர் காதில் விழுந்ததுதான் தாமதம், வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தவனின் காலில் கிழிந்த பாயின் முனை சற்றே நீட்டிக் கொண்டிருந்த கட்டை விரல் நகத்தில் மாட்ட தடுக்கி விழப்போனான், ஆனால் சமாளித்து விட்டான், பின்பு அதை விலக்கி குடிசையின் மு்லையில் பரண் போல உள்ள ஒரு இடுக்கில் அதை சொருகினான், பின்பு மடமடவென்று குடிசையின் பின்புறம் சென்றhன், குப்பத்திற்கே உரிய உயரிய நறுமணத்தை சுவாசம் மிகச் சரளமாக உள்வாங்க அதை மனத்தால் அப்புறப்படுத்தி கிணற்றடியில் உள்ள நிறமே தெரியாமல் லேசான பச்சை ஒட்டிக்கொண்டிருந்த உடைந்த பிளாஸ்டிக் வாளியிலிருந்து தண்ணீர் எடுத்து முகம் கழுவி வாய் கொப்பளித்தான், பின்பு உள்ளே சென்று மாடத்தில் வைத்திருந்த பல்பொடி டப்பாவிலிருந்து கொஞ்சம் இடது உள்ளங்கையில் போட்டுக் கொண்டு வலக்கை ஆள்காட்டி விரலால் சரக் சரக் கென்று பற்களை அழுத்தித் தேய்த்தான், அதன் இனிப்புச் சுவை அவனுக்கு ஏதோ ஒரு உற்சாகத்தைத் தந்தது போல் உணர்ந்தான், பல் விளக்கியதும் கையோடு பிடி அறுந்த மக்கால் தண்ணியை எடுத்து உடம்பில் ஊற்றினான், முதல் மக் தண்ணீர் சிறிது நடுக்கம் தந்தது, பின் சுதாரித்துக் கொண்டு இருந்த துண்டு சோப்பால் தேய்த்துக் குளித்தான், அதற்குள் ஆத்தா துண்டு என்ற பெயரில் ஒரு துணியைக் கொண்டு வந்து கொடுக்க அதை வைத்துத் துடைத்துக் கொண்டான், உள்ளே வந்து குடிசையின் பிறைக்கு மேலே மாட்டியிருந்த முருகன் படத்தைப் பார்த்துக் கும்பிட்டு சிறிது திருநீரும் பூசிக் கொண்டான், ரசம் போயிருந்த கண்ணாடியை 30 டிகிரி கோணத்தில் சாய்வாக வைத்து அறை குறையாகத் தெரிந்த தன் முகத்தை அதில் பார்த்து தலை சீவிக்கொண்டான், நல்ல வேளை சீப்பு இன்னும் சீக்காளியாகவில்லை, லேசாகத் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்,

ஆயிற்று அடுத்தது ஆடை, தோய்;த்து வைத்திருந்த பேண்ட் சர்ட்டை அணிந்து கொண்டான் உட்காரும் இடத்தில் இருந்த கிழிசல் நினைவுக்கு வந்தது, ஆனால் அது அவன் அம்மா முத்தம்மாவால் சீராகத் தைக்கப்பட்டிருந்தது, கண்களில் நீர்த்துளிகளுடனும் உதட்டில் முறுவலுடனும் அதைப் போட்டுக் கொண்டான், அம்மா தயாராக வைத்திருந்த பழைய சோற்றையும் சின்ன வெங்காயத்தையும் ரசித்து சாப்பிட்டு விட்டு மீதத்தை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கட்டிக் கொண்டான்,

தூங்கும் ஆறுவயது தங்கை சினேகாவைப் பார்த்தான், நினைவுகள் சுழன்றன, “அண்ணா. நாளைன்னைக்கு எனக்கு nஉறப்பி பர்த்டே தான? எனக்கு புது கவுன். அப்பறம் கிரன்ச் சாக்லேட் ஃபிரண்ஸ்க்கு எக்லயர்ஸ் எல்லாம் வாங்கித் தருவாயாண்ணா? அதன் கண்களில் பீரிட்ட ஆர்வமும் எதிர்பார்ப்பும் ‘என் அண்ணன் நான் எது கேட்டாலும் வாங்கித் தருவான் என்ற நம்பிக்கை……,அவன் அவளை அப்படியே கட்டிக் கொண்டான், எல்லாம் வாங்கியாறேன், கவலைப்படாதே என்று தலை கோதினான்,

நேரமாகி விட்டது,ஏதோநினைவுக்கு வந்தவனைப் போல ஆத்தா இன்னைக்கு ரொம்ப லேட்டாகும், வரலைன்னா கவலைப்படாதே, வெக்ஷட்லயே தூங்கிடுவேன் என்ன? சொல்லிக்கொண்டே கிளம்பினான்,

ஆமாம், இன்றைக்கு ஒரு பெரிய மனிதர் வீட்டுக் கார் வாட்டர் வாஉக்ஷ; பண்ணனும், பண்ணினால் கணிசமாக ஒரு தொகை கிடைக்கும், முதலாளி ஓவர் டைம்ல அதை செய்து அதில வர தொகையை நீயே எடுத்துக்கோன்னு சொல்லிட்டாரு, அதை வைச்சுத்தான் சிநேகா பர்த்டே செலவெல்லாம் செய்ய ஹணும், கனவு கண்டு கொண்டே கிளம்பினான் கருப்பு என்கிற கருப்புசாமி,

கேரேஜpல் நுழைந்ததும் தனது உடுப்பை அங்குள்ள ஆணியில் மாட்டி விட்டு வேலை செய்யப் பயன்படுத்தும் காக்கி உடுப்பை எடுத்து மாட்டிக் கொண்டான், அங்கிருந்த சாமி படத்தில் இருந்த வாடிய செம்பருத்திப் பூவை எடுத்து விட்டு ஊதுபத்தி கொளுத்தி சாமி கும்பிட்டான், ‘கடவுளே இன்று எல்லாம் நல்ல படியாக நடக்கவேண்டும்” என்று வேண்டினான், பின்பு மேசை மேல் வைத்திருந்த திருக்குறள் புத்தகத்தை எடுத்து அன்று வாpசைக்கிரமமாக வந்துள்ள பக்கத்தைப் பிரித்து மனதிற்குள் வாசித்தான்,வாய்மை அதிகாரத்தின் இரண்டாவது குறள்

‘பொய்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்’

குற்றமற்ற நன்மை பிறர்க்கு உண்டாக்குமெனின் அதற்காகப் பொய்யையும் சொல்லலாம், அப்பொய்யும் உண்மை போன்றதே, எப்படி? யோசித்தான், சாpயாகப் புரியாத மாதிரி இருந்தது, எப்படியிருந்தாலும் இப்போது வேலை மலை போல் குவிந்துள்ளது, முதலில் அதை எடுப்போம் என்று தனக்குள்ளே கூறிக்கொண்்டு டு்ல்ஸை எடுக்கப்போனான்,

மளமளவென்று வேலையைத் துவங்கினான் பதிமு்ன்றே வயதான கருப்பு, எட்டாவது வரை தட்டுத் தடுமாறி வறுமையையும் மீறி நன்றhகவே படித்துவிட்டான், அவன் ஒன்பதாவது வகுப்பில் கால் வைத்த போது அவனுடைய அப்பா மயில்சாமியின் குடிப்பழக்கத்தால் குடல் வெந்து இறந்து விட்டார், அவருக்கு எப்போதும் கருப்பு மீது அதீத பாசம், திருமணமாகி ஐந்து வருடங்களாய் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக அகதிகள் முகாமிலிருந்து எடுத்து வளர்த்தவன்தான் கருப்பு, இருந்தாலும் பெற்ற பையனுக்கு மேல் அன்பு காட்டினார், தன் வறுமையிலும் அவனை கான்வென்டுப் பள்ளிக்கூடத்தில்தான் படிக்கவைத்தார், தான் படிக்காமல் போனாலும் பையனுக்கு நல்ல படிப்பை போதிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார், கருப்புவும் படிக்கத் தனக்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டான் பொது நு}லகத்திலிருந்து படிப்பது வரையில், அதனால் பாரதியாரையும். திருவள்ளுவரையும். விவேகானந்தரையும் மனதுக்குள்ளேயே சிம்மாசனம் போட்டு உட்காரவைத்திருந்தான், எதில் சந்தேகம் வந்தாலும் இவர்களோடு பேசி அதைத் தீர்த்துக்கொள்வான், ஆனால் என்றைக்கு அப்பா மரணப்படுக்கையில் சிநேகா கையைப் பிடித்து தன் கைகளுக்குள் திணித்து. “இனிமேல் இவளுக்கு எல்லாமே நீதாண்டன்னு” என்று கூறி உயிரை விட்டாரோ அன்றையிலிருந்து அவன் பள்ளி செல்வதை விட்டு விட்டான்,அவன் வகுப்பு ஆசிரியரே வீடு தேடி வந்து படிப்பைத் தொடரும் படி கூறிய போதும் அவன் சம்மதிக்கவில்லை,வேலைதான் வேண்டும் என்று அடம் பிடித்தான், அவனுடைய ஆசிரியரின் சிபாரிசில் தான் இப்பொழுது அவன் பார்க்கும் வேலை கிடைத்தது,

முதலாளி சிவானந்தத்திற்கு இவனை மிகவும் பிடித்து விட்டது, காரணம் அவர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் மேல் தட்டு வர்க்கத்தினர், அவர்களோடு சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் ஆற்றலும் அவனுக்கு இருந்ததால் அதிகமான அளவில் அவர் கடைக்கு வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தார்கள், வருமானமும் குவிந்தது, ஆறு மாதத்திலேயே அவர் கடையை விரிவுபடுத்தினார், அவனுக்கு வேண்டியதெல்லாம் செய்தார், யாரிடமும் தனியாகப் பணம் வாங்காமல் என் முதலாளி எனக்கு வேண்டியதெல்லாம் செய்யறாரு, அதுவே போதும் சார் தேங்க்ஸ் என்று மறுத்து விடுவான், அவ்வளவு உண்மை. நேர்மை, முதலாளி அவன் உபயோகத்திற்கென்று ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார், ஆனால் அவன் அதன் தொகையை மாதச் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளுமாறு கூறி விட்டான், காரணம் கேட்ட பொழுது “இல்ல சார். அப்பறம் எல்;லாமே ஓசில கிடைக்கஹணும்; என்கிற எண்ணம் வந்திடும், அது என் முன்றோ;றத்திற்குத் தடையாயிடும், அது மட்டுமல்லாம கொஞ்ச நாள்ல இந்த சைக்கிள் எனக்கு சொந்தமாயிடும், என் உழைப்பில் நான் வாங்கியது என்கிற பெருமையும் தன்னம்பிக்கையும் இது எனக்குக் கொடுக்கும்” என்று தீர்க்கமாகவும் அழுத்தமாகவும் ஒரு விளக்கம் கொடுத்தான், கேட்ட சிவானந்தம் புல்லாpத்துப் போனார், “ புள்ளன்ன இப்படித்தான் இருக்கஹணும்* என்று தட்டிக் கொடுத்தார், அதே சமயம் அவருக்குத் தன் பையன் கண்ணனின் போக்கு அதீத கவலையும் வேதனையையும் அளித்தது, கருப்பை விட இரண்டு வயதுதான பெரியவன், ஆனால் சகவாசம் சாpயில்லை, என்ன செய்வது? சொன்னாலும் கேட்பதில்லை, நாளொரு மேனியும் பொழுதொரு காருமாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தான்,

அன்றும் அப்படித்தான், கண்ணன் தன் அப்பாவின் பிரத்யேக உபயோகத்திற்கென்று வைத்திருக்கும் “ஸ்கார்ப்பியோ” காரை எடுத்துச் சென்று முன்பக்கம் லேசாக நசுக்கி எங்கேயோ அடி வாங்கினாற்போல இருந்தது, அவன் மிகவும் பதட்டத்தோடு ‘எலே கருப்பு. இந்த காரை கொஞ்சம் ஏதாவது சாpபண்ண முடியுமான்னு பாரு, ஒரு சின்ன நசுங்கல்தான், அப்பாவுக்குத் தெரிஞ்சா சத்தம் போடுவாரு, பார்தது சீக்கிரம் ஏதாவது பண்ஹணு என்று சொல்லிவிட்டு சரேலென்று உள்ளே ஓடி விட்டான் அவன், கருப்பு அந்தக் காரை ஒரு வலம் வந்து நோட்டம் விட்டான், அடப்பாவமே வண்டி நாம எதிர்பார்த்ததை விட அதிகமாக அடி வாங்கியிருக்கும்போல இருக்கே மெதுவாக “அண்ணா” என்று மெதுவாக உள்ளே தலையை நீட்டி அழைத்தான், *என்னடா என்ன வேனும்டூ *ஒண்ஹணுல்லணா, வண்டி எப்படி அடி வாங்குச்சுடூ உங்களுக்கு ஒண்ஹணுமில்லையே? பாpவோடுதான் கேட்டான் கருப்பு,

எரிச்சலோடு பதில் வந்தது உள்ளிருந்து *ஏண்டா நாயே என்னையே கேள்வி கேக்குற அளவுக்கு வளந்துட்டியா, உன்னைச் சொல்லி பிரயோசனமில்லை, எங்கப்பனை சொல்லஹணும், உனக்கெல்லாம் அந்தஸ்து கொடுத்து புள்ள மாதிரி வச்சிருக்காருல்ல அதான். நீ இப்படி இருக்க*

கேட்ட கருப்புக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது,சிறுவயதில் படிக்க இயலாமல் போவது கூட கொடுமையில்லை, ஆனால் பணிக்கு வந்து கொடுமைகளைத் தாங்கி வீட்டிலும் சொல்ல முடியாத சூழ்நிலையில் வசவுகளும் உதைகளும் வாங்கி வாழ்க்கை நடத்துவதை விடக் கேவலம் ஒன்றுமில்லைதான், ஆனால் மனிதனாகப் பிறந்துவிட்டால் ஒரு இலட்சியத்தோடும் கனவுகளோடும் தானே வாழவேண்டும், இல்லாவிட்டால் வாழ்க்கையில் ஒரு பிடிமானமே இருக்காதே, இப்படி என்னென்னமோ சிந்தனையில் உள்ளே போய் முதலாளி மகன் கேட்டதை எடுத்துக்கொண்டு ஸ்டோர் ரு்மிலிருந்து வெளியே வந்தவனை இடித்துக்கொண்டு*ஏய் சீக்கிரம் கொண்டா இதுக்கு இவ்வளவு நேரமா எல்லாம் தண்டச்சோத்துப் பசங்க என்று திட்டிக்கொண்டே மிகவேகமாகச் சென்று விட்டான்,

பிடாpயைத் தடவிக்கொண்டே வந்து உட்கார்ந்து கீழே விழுந்த திருக்குறள் புத்தகத்தை எடுத்தான், கல்லாவின் திறந்திருந்த டிராயர் அவன் தலையில் நச்சென்று இடித்தது, ஆ அம்மா என்று உச்சி மண்டையைக் கையால் அழுந்தப் பற்றிக்கொண்டு ஸ்டு்லில் உட்காரும்போது சுவர்;க்கடிகாரம் இரண்டடித்தது,

பதறியபடியே அச்ச்சசோ உக்ஷட்டரைத் திறக்கணணுமே என்று பரபரப்போடு ஓடினான், அடுத்த பத்தாவது நிமிடத்தில் முதலாளி சாப்பிட்ட திருப்தியில் *ஏவ் வ் * என்று ஏப்பம் விட்டபடியே அங்கு வந்தார்,

அப்போது *அண்ணாச்சி வணக்கங்க. க்ரு்ட் ஆயில் சப்ளயில ஆயிரம் பாக்கி இன்னைக்கு மதியம் தரேன்னு சொன்னீங்களே……..அதான்*,

*ஓ கொமரப்பாவா….வா….வா..,*

*ஏல கருப்பு கல்லால ஒரு ரண்டு ஐநு}று வச்சேன் பாரு அதை எடுத்தா*,

*இதோ முதலாளி என்று திறந்தான், சில்லரை அடுக்குகளில் உள்ள சில்லறைகளைத் தவிர நோட்டு எதுவும் அங்கு இல்லை, மறுபடியும் தேடினான், ??…..இல்லை,

*ஐயா இல்லீங்கய்யா……*

*எலே சரியாப்பாருலே சாப்பாட்டுக்கு முந்திதானே வச்சிட்டு போனே, எங்கல போயிடும் நல்லாப் பாருலே,
கொமரப்பா பக்கத்துல எதுனா சோலி இருந்தா போயிட்டு வா, நா எடுத்து வக்கறேன்*

“சரி அண்ணாச்சி ஒரு பத்து நிமிசம் களிச்சு வாரேன்*

தேடத் தேட ஒன்றுமில்லை, ஒரு ரு்பாய் இரண்டு ரு்பாய் ஐந்து ரு்பாய் நாணயங்கள் நான்கு அடுக்குகள் அதைத் தவிர மு்ன்று பத்து ரு்பாய் இரண்டு க்ரு்ட் ஆயில் பில் இவ்வளவுதான், கருப்புவின் முகம் பேயறைந்தாற்போல் ஆகியது, எங்கே போயிருக்கும்,?

முதலாளி மிக வேகமாகவும் கோபமாகவும் அவனை நோக்கி வந்தார், *ஏண்டா நாயே உன்னை நம்பித்தானே தினமும் கடைல உன்னை விட்டுட்டு போறேன், அவன் முன்னாடி எனக்கு எவ்வளவு பெரிய அவமானம்டா, இத்தனை நாளா ஒழுங்காத்தானடா இருந்த? யாருக்குமே அடவான்ஸ் குடுக்காத நான் உன் தங்கச்சி பிறந்த நாள் டிரஸ் வாங்கனுணும் பணம் வேஹணும், நா விருமாண்டிக்கு பதிலா அஞ்சு நாளைக்கு பெருக்கி துடைச்சு சுத்தம் செய்யறேன், இந்த உதவியை நீங்க செய்தால் நான் எப்போதும் நன்றியுள்ளவனா இருப்பேன் முதலாளி அப்படி இப்படீன்னு உறீரோ கணக்கா வசனம் பேசுன நானும் நம்பி உனக்கு வேண்டியதெல்லாம் செய்தேன், ஆனா எம் மடியிலேயே கை வச்சுட்டியேடா பாவிப்பயலே என்று கூறி அவனை மொத்து மொத்தென்று மொத்திவிட்டார்,

கருப்பு கூனிக்குறுகிப் போனான், அவமானத்தால் அவன் உடல் , படபடவென்று நடுங்கியது, அழுகை பொத்துக்கொண்டு வந்துத இல்ல முதலாளி சத்தியமா இல்ல நான் ஒங்களுக்கு துரோகம் பண்ஹணுவேனா?என்னை நம்பு[ங்க முதலாளி, கெஞ்சினான், கதறினான், அதற்குள் கடை முன்னால் கூட்டம் கூடி விட்டது, ஆளாளுக்கு நாட்டாமை செய்தார்கள், கடைசியில் போலீஸைக் கூப்பிடுவது என்று முடிவாயிற்று,

அடுத்த பத்தாவது நிமிடத்தில் காவல்துறை அங்கே ஆஜர், இன்ஸ்பெக்டர் தனது வழக்கமான விசாரிப்புகளை முடித்துக் கொண்டு *ஏன் சார் இது வரையிலும் இந்தப் பையன் மேல ஏதாவது கம்ப்ளைன்ட் இருக்கா*?

இல்ல சார், இது நாள் வரையிலும் ஒழுக்கமாத்தான் இருந்தான், எவ்வளவோ தடவ நான் கல்லாவில் பணம் வச்சுட்டு போயிருக்கேன், எப்பவும் இவன்தான் மதியம் சாப்பாட்டு நேரத்தில உள்ள இருப்பான், அனாவிசயமா நான் ஏன் பழி போடப் போறேன், பாவம், அப்பா இல்லாத புள்ள, பொழப்புகாக படிப்ப பாதில வுட்டுட்டு என் கடல வேலைக்கு சேர்ந்து மு்ஹணு வருஉக்ஷமாச்சி, இது வரையிலும் ஒரு ஆணி கூட திருட்டுப் போனதில்லை, இவனைத் தவிர இன்னும் இரண்டு பேர் இருக்காங்க, ஆனா அவுங்க நேத்துதான் ஒரு வாரம் லீவுல ஊருக்குப் போயிருக்காங்க,

ஓ,கே, ஏன் தம்பி மதியம் சார் போனதுக்கு அப்புறம் யாராவது உள்ள வந்தாங்களா ஏதாவது பேசினாங்களா?

இல்ல சார், யாரும் வரமுடியாது ஏன்னா வாசல் உக்ஷட்டரை மதியம் இரண்டு மணிநேரம் பூட்டிதான் வைப்போம்,

அண்ணாச்சி என்கொயரிக்கு நடுவுல பேசாதீங்க நாங்கதான் விசாரிச்சுகிட்டு இருக்கோம்ல,

மன்னிச்சுகுங்க……,ஏன்லே கேக்குறார் ல ஒளுங்கா பதில் சொல்லுலே? என்ன புரியுதா?

மருண்ட விழிகளோடும் நடுங்கும் உடலோடும் முதலாளியையும் இன்ஸ்பெக்டரையும் மாறி மாறிப் பார்த்தான், தலையைக் கீழே குனிந்தான், சிறிது நேரம் முன்பு நடந்த எல்லாவற்றையும் நிழற்படம் போல் மனதில் ஓடவிட்டான், கீழே விழுந்த திருக்குறள் புத்தகத்தின் பிரிந்த பக்கத்தில் அவன் அன்று வாசித்துக் கொண்டிருந்த குறளை மீண்டும் பார்த்தான், ஒரு முடிவுக்கு வந்தவனாக கண்களைத் துடைத்துக் கொண்டான், பணத்தை நான்;தான் எடுத்தேன், ஒரு நண்பன் அவங்க அம்மாவுக்கு உடம்பு சாpயில்லை, மருந்து வாங்கஹணும்னு அவசரமா கேட்டான், அதான், இதுக்கு மேல என்ன எதையும் கேக்காதீங்க எனக்கு என்ன தண்டனையோ அதைக் குடுங்க,

பிறகென்ன அவன் நண்பன் யார்? எந்த ஊர்? இப்ப எங்கு இருப்பான்? இதற்கெல்லாம் அவன் பதில் சொல்லாததால் இன்ஸ்பெக்டாpன் லத்தி அவனைப் பதம் பார்த்தது, முதலாளியும் *சாp தொலையட்டும் சார், ஆகவேண்டியதைப் பாருங்க, நல்ல பையன்னு நான் நம்பி ஏமாந்தது என் முட்டாள்தனம்,*

……………………………………..,

*எலே கருப்புசாமி என்னாச்சுய்யா? ஒன்னய தூக்கி உள்ள வச்சுட்டாங்களா? *ஓவென்று கத்திக்கொண்டே காவல் நிலையத்துக்குள் நுழைந்தாள் முத்தம்மா, அங்கே அவள் கருப்புசாமி கருப்புவைரம் சட்டை கழற்றப்பட்டு முகத்திலும் உடம்பிலும் ஏராளமான சிவப்பு ஓவியக்கோடுகள், சில இடங்களில் கோடுகள் பள்ளங்களாகி குட்டி சிவப்பு ஆறு ஓடிக்கொண்டு இருந்தது, கண்கள் வீங்கியிருந்தன, உதட்டோரம் கிழிந்து போகுமளவுக்கு அடி, இரத்தக்கசிவு,

*ஐயோ எஞ்சாமிக்கு இந்த கதியா?உம்மையைத் தவுத்து வேற ஒன்னும் பேசாதே…..அத்த யாருமே நம்பலியா?,

மெதுவாக கம்பிகளுக்கு முன்னே சென்று “என்னய்யா? என்னாச்சு? அவுங்க சொல்லுறதெல்லாம் நிஸமாயா? சொல்லுய்யா?நீயா சாமி பணத்தை …….., மேலே அவளால் பேச முடியவில்லை, தொண்டை அடைத்து விட்டது,

ஈனஸ்வரத்தில் பக்கத்தில் வா என்று அம்மாவை அழைத்தான் கருப்பு,

ஆத்தா..,நான் சொல்லப் போறத நீ அப்பா சத்தியமா யார்கிட்டயும் முச்சு விடப்படாது, அப்படீன்னா சொல்றேன்,*

“சரி ராசா சொல்லுல, அப்பா சத்தியமா..,*

*ஆத்தா ஒனக்கே தெரியும் முதலாளி எவ்வளவு நல்லவர்ன்னு, வயிரார சாப்பாடு போடறாரு,நல்லா கவனிச்சுக்கறாரு, இன்னிக்கு நாம இவ்வளவு நல்லா இருக்கோம்ன அது முதலாளியாலதான் இல்லையா?*

இதெல்லாம் ஏன் இப்ப இவன் சொல்றான், முத்தம்மா புரியாத விழிகளுடன் அவனைக் கேள்விக்குறியாகப் பார்த்தாள்,

*ஆத்தா எனக்கு நீ ஒரு கண்ணுன்னா முதலாளி ஒரு கண்ணும்மா, ஒம் பையன் என்னைக்கும் திருட மாட்டாம்மா, ஆனா பொய் சொல்ற சூழ்நிலை உருவாயிடுச்சுமா, மதியமா கடைக்கு வந்த முதலாளி பையன் சிப்ஸ் சோடா கேட்டப்பவே எனக்குத் தெரியும், அவரைப் பத்திதான் ஒனக்கும் தெரியுமே,கூடாத பழக்கம், அவர் கல்லாவிலேந்து பணம் எடுத்தத நான் கண்ணால பார்த்தேன், ஆனா அதை அவர் பாக்கல, என்ன செய்யுறது, உடனே வந்து முதலாளி பணம் கேக்கவும் எனக்கு என்ன செய்யுறதுன்னு புரியல, பக்குனு ஆயிடுச்சு, ஆனாலும் தேடுற மாதிரி தேடினேன், நமக்கு சாப்பாடு போடற முதலாளி பையனை எப்படி ஆத்தா காட்டிக் கொடுக்க முடியும்?”

“அது சரி ராசு. உன் முதலாளிக்கு நீ நல்லவன்னு தெரியதே…….. சரி அத்த வுடு இனிமே நானும் உன் தங்கச்சி சினேகாவும்…….எப்படிப்பா?” ……புடவைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

“ஆத்தா கவலப்படாதே… முதலாளி இன்னைக்கு இல்லேன்னாலும் என்னைக்காவது நம்மைப் பத்தி தெரிஞ்சுக்குவாறு, நான் சின்ன வயசுல தப்பு பண்ணதால என்ன சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வச்சுருவாக, அங்க நான் பகுதி நேர வேலை பார்த்து அதில கிடைக்கிற வருமானத்தை உனக்கும் சினேகாவுக்கும் அனுப்புவேன், நீ கவலைப்படாதே. எனக்குத் திருடன்னு பட்டம் கட்டுனதால நான் திருடனில்ல. ஆனா இந்த உண்மையை என் ஆத்தா நீ தெரிஞ்சுகிட்டாப்போதும், என்னை மாதிரி ஏழைப் பசங்க எல்லாம் நல்லா படிக்கறதுக்கான விடிவு காலம் வந்துச்சுன்னா எல்லோருமே பெரிய ஆளா வரமுடியும்,

“சரி ராசா. நான் வரேன், நீ நல்லவன்தாயா…………..அது போதும் எனக்கு”, கூறி விட்டு தளர்ந்த நடையுடன் அங்கிருந்து நகர்ந்தாள் முத்தம்மா,

‘பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்,’

திருக்குறளின் வாய்மை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் தற்போது மிகத் தெளிவாகப் புரிய வர கருப்புசாமியின் இரத்தத்தால் சிவந்த உதடுகளில் சிறு கீற்றாகப் புன்னகை,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *