குடியிருந்த கோயில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 10,761 
 

குறவன்பாலயம் என்ற சிறிய கிராமம் கோபிசெட்டிபாலயம் அருகே ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. குறைந்த ஜனதொகை உடைய இந்த கிராமத்தில் வேளாண்மை நம்பி மக்கள் வாழந்து வந்தனர்.அரிசி, தேங்காய், மஞ்சள் பயிரிட்டு விவசாயம் செய்தனர்.சில மக்கள் கைத்தறியில் ஈடுபட்டு துணிமணிகளையும் நெய்து வந்தனர்.

இப்படிப்பட்ட விவசாயி-நெசவுத் தொழிலில் சேர்ந்த எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் நம் கதாநாயகி அஞ்சனா.அவளுக்கு பள்ளி பருவத்திலிருந்தே அறிவியல் பாடம் என்றால் ரொம்ப அவா.

அவளுடைய தோழிகள் ராதாவும், மாலாவும், ” ஏ அஞ்சனா!விளையாட வருகிறாயா ” என்று ஒவ்வொரு நாள் மாலையிலும் கெஞ்சுவார்கள்.

ஆனாள் அஞ்சனாவோ ” நேரமே இல்லை,என்னை கொஞ்சம் விடுங்கள், நான் பொது நூலகத்துக்கு செல்கிறேன்” என்பாள்.

தோழிகள் விளையாட கூப்பிட்டாள், அவர்களுடன் செல்லாமல், எடிசன், ஐசாக் நியூட்டன், சி.வி.இராமன் போன்ற உலகம் போற்றும் அறிஞர்களைப் பற்றி பொது நூலகத்தில் உள்ள புத்தங்களைப் படித்து பொழுதை கழிப்பாள்.ஒரு நாள் தானும் ஒரு பெரிய விஞ்ஞானியாக வர வேண்டும் என்று கனவு கண்டாள். இருட்டில் இருக்கும் தன் கிராமத்தை நல்ல வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தழிழ் நாட்டிலே முதன்மை மாவட்டமாக விளங்க வேண்டும் என்று எண்ணினாள்.

அவள் திருமணப் பருவம் வந்த பிறகு அவளுடைய பெற்றொர்கள் எல்லோரையும் போல அவளையும் ஒரு நல்ல ஆண்மகன் ராஜுவுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

அஞ்சனா-ராஜுவுக்கு அழகான இரட்டை குழந்தைகள் (ஓர் ஆண், ஓர் பெண்) பிறந்தனர். ரவி, ராணி என்று பெயரிட்டனர். இந்த எளிமையான குடும்பத்தில் பிறந்த இரட்டையர்களை எவ்வாறு வளர்க்க முடியும் என்று எல்லோரும் அவர்கள் மேல் பரிதாப பட்டார்கள்.

ஆனால் அஞ்சனா மட்டும் மனம் தளராமல் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தாள். தன் குடும்பத்தில் இரண்டு விஞ்ஞானிகளை உருவாக்கலாம் என்று மனக்கோட்டை கட்டினாள்.

அவர்களுக்கு தினமும் பல அறிஞர்களின் கதைகளை மறக்காமல் படித்து காட்டுவாள். குழந்தைகளும் ஆடம்பர வாழ்க்கை எண்ணாமல் அம்மாவுடன் சேர்ந்து சிறு சிறு விஞ்ஞான ஆராய்ச்சிகளை வீட்டிலே செய்வார்கள்.

பள்ளியில் எப்பொழுதும் அறிவியல் பாடத்தில் முதன்மையாக விளங்குவார்கள்.கல்லூரி படிப்பு முடித்த பிறகு கோவையில் உள்ள பாரதியார் பல்கலைகழகத்தில் ரவி இயற்பியல் ஆராய்ச்சியாளராகவும் (Physics Research Scholar), ராணி இரசாயனப் பௌதிகவியல் ஆராய்ச்சியாளராகவும் ( Chemical Physics Research Scholar) சேர்ந்தனர்.

ரவியும், ராணியும் தங்கள் ஆசிரியர்களுடன் விடாமுயற்சியால், பல நிறுவனங்களிலிருந்து நிதி உதவி பெற்று சூரிய குமிழ் விளக்கு ( Solar bulb), சூரிய மின்கலம் ( Solar cell), வெப்பம் ஓட்டமிருந்து மின் சக்தி உருவாக்கி மின்சாரமாக்கினர்.உடனே தங்கள் கண்டுபிடிப்பை குறவன்பாலயத்தில் செலுத்தி, இருட்டிலிருந்து ஒளி மயமாக்கினர்.

தான் பெற்ற செல்வங்களின் கண்டுபிடிப்புடன், தன் கிராமம் ஒளி மயமாகப் பட்டதை எண்ணி அஞ்சனாவுக்கு எவ்வளவு சந்தோஷம். இருட்டிலிருந்து விடுமோஷம் கிடைத்த மக்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி.

அவ்வூர் கவுன்சிலர் உடனே தழிழ் நாடு அரசுக்கு தெரிவித்தனர். ரவிக்கும், ராணிக்கும் ‘சிறந்த தழிழ் நாட்டு விஞ்ஞானிகள்’ விருதை, மாண்புமிகு தழிழ் நாட்டு முதலமைச்சர் கொடுத்து கௌரப்படுத்தினர். மேலும் குறவன்பாலயத்தை முதன்மை மாவட்டம் என்றும், எல்லா மாவட்டங்களும் முன்மாதிரியாக திகழும் குறவன்பாலயத்தை பின் பற்ற வேண்டும் என்று ஆணையிட்டார்.

குறவன்பாலய மக்கள் அளவளா மகிழ்ச்சியுடன் ரவிக்கும் ராணிக்கும் அவள் அம்மா அஞ்சனா தாய் பாலுடன் அறிவியல் பாலும் கொடுத்து வளர்த்தார் என்று பெருமிதம் அடைந்தனர்.

இருவரும் நோபல் பரிசு வாங்கும் நாள் மிக தூரமில்லை என்று எண்ணினர்.ரவியும், ராணியும் ‘குடியிருந்த கோயில்’ தங்கள் தாயை நினைத்து பெருமைப்பட்டனர்.

ஆனால் அஞ்சனாவோ தன் குடியிருந்த கோயில் தெய்வத்தின் அருளை நினைத்து ஆனந்த கண்ணீர் விட்டாள்.
நம் திருவள்ளுவர் பொருட்பாவில் கூறியது போல்

‘ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல்’

என்று கதையின் நாயகி ‘ குடியிருந்த கோயில்’ அஞ்சனாவுக்கு நன்றாகவே பொருந்தும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *