கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 7,733 
 

கமலாவிற்கு காலை ஐந்து மணியிலிருந்து வேலை ஆரம்பமாகி விடும். வாசல் தெளித்து கோலம் போடுவதிலிருந்து. காபி. சமையல் என ஒரு சுற்று முடித்து கடைக்குட்டி வித்யாவிற்கு பல் தேய்த்து விட்டு. குளிப்பாட்டி. சாதம் ஊட்டி பள்ளிக்கு செல்லும் ஆட்டோவில் திணிக்கும் வரை பெண்டு நிமிர்ந்து விடும். இதற்கு நடுவில் அவள் வாங்கிய திட்டுக்கள். ஏற்பட்ட டென்ஷன்கள்.

1 . கணவன் சரவணன் – அடியே காபில ஏண்டி இவ்ளோ சர்க்கரைய அள்ளி போடுற. ஒரு அளவு தெரியாதா உனக்கு முண்டம்.
2. மகன் ரமேஷ் – அம்மா எனக்கு காபி வேணாம்மா டீ தான் வேணும்.
3. மகள் வித்யா – அம்மா எனக்கு பல்லு தேய்ச்சு விடு.
4. கணவன் சரவணன் – கமலா சுடுதண்ணி வைடி குளிச்சுட்டு சீக்கிரம் ஆபிஸ் போகணும்
5. மகன் ரமேஷ்- அம்மா என் ஜாமிண்ட்ரி பாக்ச பாத்திங்களா. எங்கம்மா காணோம் நேத்து நைட்டு இங்கதான வச்சேன்.
6.மகள் வித்யா – அம்மா எனக்கு கால் கழுவி விடும்மா. அம்ம்ம்மாhhhh……….
7. கணவன் சரவணன் – அடியே கமலா நேத்தே சொன்னேன்ல. சட்டைய தொவச்சா தேச்சு வைக்கணும்னு. ம்?. நான் இப்போ கசங்கி சுருங்கி போன சட்டைய தான் ஆபிஸ் போட்டு போகணுமா. இதுல பட்டன் வேற இல்ல. நல்லா உக்காந்து சீரியல் மட்டும் பாரு. இந்த வேலைய எல்லாம் செஞ்சுறாத முண்டம்.
8.மகன் ரமேஷ் – அம்மா என்னோட பனியனை காணோம் எடுத்து தாங்க…….மம்மிமிமி
9. வித்யா – அம்மா எனக்கு தலை சீவி விடுங்க.
10. கணவன் சரவணன் – அடியே அந்த பேப்பர்காரன் வந்தான்னா காசு கொடுக்காத எதா இருந்தாலும் என்கிட்ட பேசிக்க சொல்லு. ராஸ்கல் 7 மணிக்கு பேப்பர் போட சொன்னா. 9 மணிக்கு போடுறான்.
11. மகன் ரமேஷ் – அம்மா சைக்கிள்ள காத்து கம்மியா இருக்கு.
12. மகள் வித்யா – அம்மா ஆட்டோ வந்திடுச்சு
13. கணவன் சரவணன் – அடியே டிபன் பாக்ஸ் கட்னயாடி.

மணி 9.15 அடை மழை விட்டது போல் இருந்தது. மூச்சு வாங்க ஆரம்பித்தால். இதயம் லேசாக பலவீனம் அடைந்தது போல் உணர்ந்தால். 3 பேரின் தேவைகளை நிறைவேற்ற 300 வேலைகள் செய்;ய வேண்டியது இருக்கிறது. தனக்குள் சந்தோஷமாக சளித்துக் கொண்டாள். நிதானமானவளாய் பல் துளக்க ஆரம்பித்தாள். குளித்தாள். சாப்பிடும் போது மணி 11:00 டீ.வி யை போட்டாள். ஏதோ ஒரு சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. சீரியலை பார்க்கவும் கணவனின் சட்டை நியாபகம் வந்தது. தேய்க்கலாம் என்று எடுத்து வைத்தாள்.

காலை 5 மணியிலிருந்து 9 மணி வரை கமலாவிற்கு நடந்த அனைத்து விஷயங்களும் சீரியலில் வரும் அந்த பெண்ணுக்கு நடந்து கொண்டிருந்தது. தன்னைப் போன்ற ஒரு பெண்ணை டீ.வி யில் பார்க்கும் போது கமலாவால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அயன் பண்ணும் வேலையை மறந்து போனாள். தனக்கு ஒரு பார்ட்னர் கிடைத்து விட்டதாக உணர்ந்தாள். சீரியலுடன் ஏற்பட்ட அந்த மானசீகமான உறவு அவளுக்கு மயிலிறகால். மெதுவாக தடவிகொடுத்தது போல் இருந்தது. பலவீனம் அடைந்த இதயம் சிறிது வலிமை பெற்றது.

ஆபிசில் திரு. சரவணன்

பைல்களுக்கு மத்தியில் தலையை புதைத்துக்கொண்டு. கால்குலேட்டர் உடன் கடந்த இரண்டு மணி நேரமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். வழக்கமாக வரும் அந்த தலைவலியும் வந்து தொலைத்தது. தலைவலி வரும் நேரம் அவருக்கு சரியாக தெரியும் என்பதால் அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே டீ சொல்லி விட்டார். இந்த ஆபிஸை பொருத்தவரை டீ வேண்டுமென்றால் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே சொல்லிவிட வேண்டும். சில சமயம் ஒரு மணி நேரம் ஆகலாம். சில நேரங்களில் மறந்து போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. டீ சொன்னவுடன் கிடைப்பதற்கு இங்கே என்ன கமலாவா இருக்கிறாள்.”சேய். இந்த ஆபிஸில் யாருக்கும் பஞ்ச்வாலிட்டியே கிடையாது. நாடு எப்படி உருப்படும்” நொந்து கொண்டார் திரு. சுரவணன்.

மேனேஜர் அறையிலிருந்து கலவரமான முகத்துடன் ப்யூன் முருகன் வெளிப்பட்டான். நேராக சரவணணை நோக்கி வந்தான்.

“சரவணன் சார். மானேஜர் சார் உங்கள கூப்பிடுறார். ரொம்ப கோபமா இருக்கார்’

திரு. சரவணன் பைல்களில் இருந்து நான்கை உருவிக்கொண்டு மானேஜர் அறைக்கு ஓடினார்.

“மே ஐ கம் இன் சார்”

“கம் இன்” உள்ளே நுழைந்தார். பவ்யமாக நின்றார்.

“யோவ் என்னையா அக்கவ்ண்ட்ஸ் பாக்குற பக்கத்துக்கு 2 மிஸ்டேக். இப்டி பாத்தா எப்டியா உருப்படும் இந்த கம்பெனி.”

“சார் ஐ வில் செக் இட் சார்”

“ஆமாய்யா வாழ்க்கை புல்லா செக் பண்ணிகிட்டே இரு. நீ பாக்குற பைல்ல எல்லாம் எப்படியா நம்பி கையெழுத்து போடுறது. நீ பாக்குற பைல்ல எல்லாம் திரும்ப செக் பண்றதுக்கு எனக்கு என்ன தனியா சம்பளம் தர்றாங்களா என்ன?”

“சாரி சார்”

“போய்யா போய் ஒழுங்கா கணக்க பாருய்யா”

முகத்தில் படிந்த வியர்வையை துடைத்துவிட்டு சீட்டில் வந்தமர்ந்தார் சரவணன்.

“ஒரு மனுஷன இவ்வளவு டென்ஷன் ஆக்குனா எப்படி சரியா கணக்கு போட முடியும். அவனவனுக்குத்தான் தெரியும்” இதயபகுதி கலவரத்திலிருந்து விடுபட்டிருந்ததால் லேசாக வலியை உணர்ந்தது.

“சார் இந்தாங்க சார் டீ”

அந்த கண்ணாடி கிளாஸில் பாதி அளவு நிரம்பியபடி பிரவுன் கலரில் ஒரு திரவம் இருந்தது. “கடந்த ஒரு மணி நேரமாக இதற்காகாவா காத்திருந்தோம் சேய்” அதை எடுத்து உதட்டோரமாக கொண்டு சென்று ஒரு உறிஞ்சு உறிஞிசினார். அதன் சுவை அவருக்கு அழுகையையே வரவளைத்துவிட்டது.

திரு. சரவணன் மனதிற்குள்ளாக இவ்வாறு கூறிக்கொண்டார். “கமலா யூ ஆர் வெரி கிரேட். இனிமே உன்ன திட்டவே மாட்டேன்.”

அவரது அடி மனதில் இருந்து அந்த வார்த்தை வந்தது.

பள்ளிக் கூடத்தில் ரமேஷ்

மாணவர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். ஆசிரியர் அழுகு மலையிடம் அடி வாங்கி கொண்டிருந்தார்கள். ரமேஷ் 7 வது ஆளாக நின்று கொண்டிருந்தான். கசாப்பு கடைகளில் எல்லாம் ஒரு ஆடு வெட்டப்படுவதை மற்ற ஆடுகள் பார்த்துக் கொண்டிருக்கும். நல்ல வேளை அவற்றிற்க்கு ஆறாவது அறிவு இல்லை என்பதால் அதிகமாக கலவரத்தை உணருவதில்லை. ஆனால் மனிதனுக்கு அப்படியில்லை. அந்த கசாப்பு கடைக்காரர் சாரி அந்த ஆசிரியர் தனது சிலம்பாட்ட திறமையை பிரம்பின் மூலமாக அந்த பையன் மேல் பிரயோக படுத்திக் கொண்டிருந்தார். 7 வதாக நின்று கொண்டிருந்த ரமேஷ் தூக்குத் தண்டனை கைதியை போல வெறித்து பார்த்து கொண்டிருந்தான். 2 வது பையன். 3 வது பையன். 4வது. 5. 6. திடீரென்று பிரம்பு பிய்ந்து விட்டது. ஆசிரியர் ஒரு பையனை எழுப்பினார். பக்கத்து கிளாசில் இருந்து ஒரு பிரம்பை வாங்கி வருமாறு கூறினார். ரமேஷ் கலவரமானான். ஏனென்றால் பக்கத்து வகுப்பறையில் பிரம்பில் விளக்கெண்ணெய் எல்லாம் தடவி மாட்டை அடிக்கும் பிரம்பை போல் வைத்திருப்பார்கள். ரமேஷ்க்கு யூரின் முட்டிக்கொண்டு வந்தது.

ஆசிரியரின் வெறித்தனமான தாக்குதல் ஆரம்பமானது. அடிபட்ட ஒவ்வொரு இடமும் நெருப்பாய் வலித்தது. அடி வாங்கிமுடித்து வந்தமர்ந்தான். இவ்வளவு வலியிலும். இவ்வளவு வேதனையிலும் அவனது உள் மனம் சந்தோஷத்தில் குதூகலமாக இருந்தது.

காலை 9:00 மணிக்கு நடந்த விஷயத்தை யோசித்து பார்த்தான். அனைவரும் பிரேயரில் இருந்தார்கள். ரமேஷ் மட்டும் வகுப்பறையில் டெஸ்க்குக்கு அடியில். தனது ஜாமின்ட்ரி பாக்ஸை திறந்தான். ஏற்கனவே இரண்டு காம்பஸ் வாங்கி வைத்திருந்தான். அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு. ஆசிரியர் உட்காரும் சேரின் அடியில் சொருகினான். சற்று கடினமாக இருந்தது. பிரேயர் முடிந்ததும் மாணவர்களோடு மாணவனாக வந்தமர்ந்து கொண்டான்.

மணி 9:15. ஆசிரியர் அழகு மலை. ரஜினி காந்தை போல வேகமாக நடந்து வந்து நச்சென்று உட்கார்ந்தார். கிட்டதட்ட ஒரு இன்ச் உள்ளே இறங்கிவிட்டது. துள்ளிக்குதித்து தரையில் விழுந்த அழகுமலையின் முகம் கோபத்தில் இன்னும் அசிங்கமாக மாறியது. இந்த அற்புத காட்சி இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று ரமேஷ் நினைக்கவில்லை. பிரம்பை எடுத்துக்கொண்டு சண்டைக்கு தயாரானார் அழுகுமலை. அதன் பின் நடந்தது தான் இவ்வளவும்.

ரமேஷின் இந்த பழிவாங்கும் படலம் இதற்கு முன்னர் அழகு மலை தாக்கிய தாக்குதலுக்கு பதில தாக்குதல் தான். ரமேஷிற்கு திருப்தியாக இருந்தது. அந்த ஒரு இன்ச் இரும்பு ஊசி எவ்வளவு ஆழமாக உள்ளே இறங்கியிருக்கும். சே நினைத்து பார்க்கும் பொழுதே இன்பமாக இருக்கிறதே. அம்மா மட்டும் இந்த ஜாமின்ட்ரி பாக்ஸை எடுத்து தராமல் இருந்திருந்தால் இந்த இனிமையான விஷயம் நடந்திருக்குமா. தேங்யூ மம்மி.

திவ்யா தனது வகுப்பில்

எல். கே. ஜி வகுப்பறையில் வாயில் விரலை வைத்துக் கொண்டு திரு திருவென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் திவ்யா குட்டி. ஏ. பி. சி. டி. நேற்று பார்க்காமல் எழுதி முடித்து சாதனை படைத்து விட்டாள். இன்று இ. எப். ஜி. ஹெச். எழுத வேண்டும். அந்த கடிணமான வேலை இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகி விடும். திவ்யா மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டாள். அனைவரும் நோட்டை எடுத்து விரித்து வைத்துக் கொண்டார்கள். பென்சிலை எடுத்துக் கொண்டார்கள். திவ்யா எப்படியும் இ எழுதி முடிப்பதற்குள் பென்சில் முனையை உடைத்து விடுவாள் என்று கமலத்துக்கு தெரியும். எனவே 3 பென்சில்களை ஏற்கனவே முனை கூர்மையாக்கி வைத்திருந்தாள். திவ்யா குட்டி எப்பொழுதும் தனது படைப்பை அழுத்தி அழுத்தம் திருத்தமாகத்தான் எழுதுவார்கள். ஆகவே பென்சில் முனை உடைவது என்பது சகஜமான விஷயம். அவர்கள் நோட்டின் ஒரு பக்கத்தில் எழுதினால் அடுத்த 10 பக்கங்களில் அந்த பதிவு இருக்கும். ஒன்றும் செய்ய முடியாது. நமது முன்னோர்கள் எழுத்தாணி உபயோகித்தவர்கள் தானே. அதன் பதிவு குழந்தைகளிடம் இருக்கத்தானே செய்யும்.

விசில் ஊதியதும் எழுத ஆரம்பிக்க வேண்டும். மிஸ் இன்ஸ்ட்ரக்சன் கொடுத்துக் கொண்டிருந்தார். “யாரும் மற்றவர்கள் நோட்டை திரும்பி பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தா அடி தான் கிடைக்கும்.” ஸ்கேலை உயர்த்தி காட்டுகிறார்.”உங்களுக்கு தெரிஞசத எழுதுங்க. யாரும் காப்பி அடிக்க கூடாது ழ.மஇ”“ழம அளைளளளளள”

விசில் ஊதப்பட்டது. ஊதிவிட்டு பக்கத்து வகுப்பறை அளைள உடன் கதை பேச கிளம்பி விட்டார்கள்.

நேரம் சென்று கொண்டே இருந்தது. திவ்யா குட்டி. தலைநிமிரவே இல்லை சீரியசாக தனது பதிவை செதுக்கி கொண்டிருந்தாள். அரை மணி நேரம் கடந்து விட்டது. கதை பேசி முழத்து விட்டு வந்தமர்ந்தார்கள் அளைள. அனைவரிடமும் நோட் வாங்கப்பட்டது. திருத்தப்பட்டது. திவ்யா அழகாக பொறித்திருந்தாள். ஆனால் ஒரு சின்ன குழப்பம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு டைரக்ஷனில் எழுதியிருந்தாள். ஆகையால் நோட்டை நான்கு கோணத்தில் இருந்து பார்க்க வேண்டிய சூழ்நிலை அவளுக்கு ஏற்பட்டது. திவ்யா இருபது நிமிடத்திலேயே எழுதி முடித்துவிட்டாள். மீதி பத்து நிமிடம் என்ன செய்வது. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பி கூட பார்க்கக் கூடாது. ஆகையால் எழுதியது மேலேயே திரும்ப திரும்ப எழுதி வைத்தாள். அவள் கொடுத்த அழுத்தத்தில் பாதி நோட் வீணாகி விட்டது.

திவ்யாவுக்கு எப்பொழுதுமே ஒரு வருத்தம். தான் எவ்வளவு தான் சரியாக டெஸ்ட் எழுதினாலும் இந்த முட்டை கண் மிஸ் தன்னை திட்டிக் கொண்டே இருக்கும். அதற்கு நான் சரியாக எழுதுகிறேன் என்கிற பொறாமை. அவள் நினைத்தது போலவே மிஸ் கூப்பிட்டு திட்ட ஆரம்பித்தாள். திட்டுக்களை வாங்கிவிட்டு கோபத்துடன் வந்தமர்ந்தார்கள்.

“நான் எழுதுறது எங்க மம்மிக்கு மட்டும் தான் புரியுது. இந்த மிஸ்க்கு புரியவே மாட்டேங்குது. எங்க மம்மி மாதிரி நல்ல மம்மி இங்க யாருமே கிடையாது.” உர்ரென உட்கார்ந்து கொண்டு மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.

மாலை மணி 6:30 கமலாவின் கலவரமான நேரங்கள் ஆரம்பமானது.

1 . கணவன் சரவணன் – அடியே கமலா இது என்ன காபி தண்ணியா இல்ல கழனித் தண்ணியா?
2 . மகன் ரமேஷ் – அம்மா டி.வி ரிமோட்ட பாப்பா புடுங்கிட்டு தர மாட்டேங்கறா.
3. மகள் வித்யா – அம்மா எனக்கு ஜட்டி போட்டு விடுங்க.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *