கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2023
பார்வையிட்டோர்: 6,762 
 
 

(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம்-1

அன்னை தெரசா மகளிர்காப்பகம்! நகரத்தை விட்டு சற்று ஒதுக்குப்புறமாய் இருந்தது அந்த காப்பகம். பறவைகள் சலசலக்கும் மரங்கள் சுற்றிலும்அரண்போல் அமைந்திருக்க நடுவில் அமைதியாய் இருந்தது கட்டிடம்.

ஆதரவற்ற முதியோர்கள், அபலைப் பெண்கள், அனாதை குழந்தைகள் என்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் அங்கு இளைப்பாறிக் கொண்டிருந்தன.

நகரத்திலுள்ள பெரும் செல்வந்தர்கள், அயல் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் போன்றோரிடமிருந்து பெறப்படும் பணத்தின் மூலம்தான் இந்த காப்பகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

வருடா வருடம்.. இக்காப்பகத்தில் அடைக்கலமாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போவதால்… முதியோர்களைத் தவிர, அபலைப் பெண்களுக்கும், அனாதை குழந்தைகளுக்கும் பல தொழிற்பயிற்சி கல்வி அளிக்கப்பட்டு…தொழிலதிபர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் மூலம் வேலைவாய்ப்பு வாங்கிக் கொடுத்து காப்பகத்தை விட்டு அனுப்பி விடுகின்றனர். காப்பகத்தை சிறு குறையுமின்றி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர் பாதர் சாலமன்.

காப்பகத்திலுள் ஒரு மெட்டடர் வேன் வந்து நின்றது. அதிலிருந்து உணவுகள் அடங்கிய பெரிய அலுமினிய பாத்திரங்கள் கீழிறக்கப்பட்டன. இது அடிக்கடி நடக்கும் சம்பவம்தான்.

திருமணம் போன்றசுபகாரிய நிகழ்ச்சிகளில் மீதியாகும் உணவு வகைகளை இதுபோன்ற அனாதை இல்லங்களுக்கு அளித்து விடும் நல்ல மனம் கொண்டோர் நாட்டின் நிறையவே உண்டு. மண்டபம், மேளதாளம், கச்சேரி, கேளிக்கை என்று ஆடம்பரமாய் செய்வு செய்யாமல் அதற்கென செலவளிக்கப்படும் தொகையில் அனாதை இல்லங்களுக்கு வயிறார விருந்து சாப்பாடு போடும் எண்ணம் பலரிடம் வளர்ந்து வருகிறது. இது பாராட்டக்கூடிய விஷயம். பலரும் பின்பற்றக்கூடிய விஷயம்.

“ரேகா…வேன் வந்திருக்கு போலிருக்கே”ஆவலாய் கேட்டான் செல்வி.

ரேகா என்று அழைக்கப்பட்ட பெண் எங்கோ வெறித்து பார்த்தபடி மரத்தின் மீது சாய்ந்து நின்றிருந்தாள். இருபது வயதுதான் இருக்கும். அவள் முகத்தில் அமைதியும். நளினமான அழகும் குடி கொண்டிருந்தது.

“பிரியாணின்னு நினைக்கிறேன். முஸ்லிம் வீட்டு கல்யாணமாய் இருக்குமோ? வாசனை இங்கே வருது!”

“….”

ரேகாவிடமிருந்து பதில் வராமல் போகவே செல்வி வேன் பக்கமிருந்த பார்வையை பிடுங்கி இவள் மீது போட்டாள்.

“ரேகா..!

“….”

“ஏய்.. ரேகா!” அவள் தோளைப் பிடித்து உலுக்கினாள் செல்வி.

“அ.. எ.. என்ன?” திடுக்கிட்டு பார்த்தாள் ரேகா.

“ரேகா.. என்னாச்சு உனக்கு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

“ப்ச்!”

“என்ன ரேகா எப்பவும் கலகலன்னு சிரிச்சுக்கிட்டே இருப்பியே… இப்ப ஏன் உன் முகம் வாடிப்போயிருக்கு?”

“என்னோட கோட்டா நாளையோட முடியப்போகுது செல்வி!”

”என்ன சொல்றே நீ? ஒண்ணுமே புரியலே!” கண்கள் சுருக்கி அவளைப் பார்த்தாள்.

உற்றுப் பார்த்தால் ரேகாவின் கண்கள் கலங்கியிருப்பது புரியும்.

“நாளைவோட எனக்கு இருபது வயசு செல்வி!”

“ஓ!”

“இந்த ஹாஸ்டல் சட்டத்திட்டப்படி நாளைக்கு நான் வெளியேற்றப்படுவேன்“

“ரே..கா“ திகைப்புடன் அவள் கைகளை பற்றிக் கொண்டாள் செல்வி. அந்த அழுத்தத்தில் வாஞ்சை இருந்தது.

“நான் இங்கேயிருக்கறது..இன்னையோடக் கடைசி செல்வி!”

செல்வி இன்னும் அழுத்தமாய் பற்றினான்.

“நிஜமாவா?”

“ம்!” தலையாட்டினாள்.

“எங்கேப் போகப் போறே?”

“தெரியலே.. எனக்கு எங்கேயோ வேலைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கறதா பாதர் சொன்னார்”.

“என்னை மறந்திடுவியா ரேகா!”

“சேச்சே. என் செல்வி இப்படியெல்லாம் பேசறே?”

“நீயெல்லாம் அதிர்ஷ்டசாலி ரேகா! உன் சிறகுகள் வளர்ந்து… சுதந்திரமா பறக்க தயாராய்ட்டே! ஆனா…நான்? நான் என்னைக்குமே சிறகொடிந்த பறவை தானே ரேகா! விமோசனமே இல்லாத என்னைப் பார்த்தாவது நீ சந்தோஷப்படு ரேகா! கடவுள் உனக்கொரு பாதையை காட்டியிருக்கிறார்! உன் வாழ்க்கை சிறப்பாக அமையும்!” மனப்பூர்வமாய் வாழ்த்திய செல்வியின் கண்கள் கலங்கியிருந்தது.

“ஏன் செல்வி இப்படியெல்லாம் பேசறே?” என்றவள் செல்வியை கரிசனம் பொங்கப் பார்த்தாள்.

“இந்த இல்லத்தோட சட்ட திட்டமெல்லாம் என்னை மாதிரியான சிறகொடிஞ்ச பறவைக்கெல்லாம் கிடையாது இல்லையா?” கசப்புடன் தன்னை குனிந்து பார்த்துக் கொண்டாள்.

கால்களிரண்டும் கும்பிப்போய் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த செல்விக்கு முப்பது வயதிற்கு மேலிருக்கும்.

“அப்பா.. அம்மாதான் இல்லே… கடவுள் எனக்கு இந்த கால்களையாவது கொடுத்திருக்கலாமே ரேகா! ஏன் தரலே?”குரல் கம்மியது.

”சேச்சே… என்ன இது குழந்தையாட்டம்?”

“கடவுள் என்னை குழந்தை மாதிரி தானே படைச்சிட்டான்? பிறக்கும் போதே குறைகளோட பிறந்ததால் தானே.. என்னைப் பெத்தவங்க பெரும் சுமையா நினைச்சு… இங்கே போட்டுட்டுப் போனாங்க? ரேகா நாமெல்லாம் என்ன பாவம் பண்ணினோம்? ஏன் நாம அனாதைகளானோம்?” கன்னத்தில் கண்ணிர் கோடு போட்டது.

“நாம் அனாதைகளல்ல செல்வி! மத்தவங்களை விட நமக்கு தான் சொந்தபந்தம் அதிகம். தந்தையாய் இருந்து வழி நடத்தற கடவுள், தாயாய் பாதுகாக்கிற நம்ம பாதர். பிள்ளைகளால் உதாசீனம் படுத்தப்பட்டு கடைசி காலத்தை இங்கே கழிச்சிட்டிருக்கிற முதியோர்கள் தான் நம்ம தாத்தா பாட்டிகள். அக்கா, தங்கைகள்னு நம்ம சொந்த பந்தம் ரொம்ப அதிகமில்லையா செல்வி?” அன்புடன் அவள் தலையை தடவிக் கொடுத்தாள் ரேகா.

“சந்தோஷமாய் போய் வா ரேகா! உனக்கொரு பிரகாசமான வாழ்க்கை உனக்காக காத்துக்கிட்டிருக்குன்னு என் உள்மனசு சொல்லிக்கிட்டேயிருக்கு! அப்பப்ப வந்து போய்க்கிட்டுரு ரேகா”

“உங்க எல்லாரோடயும் சேர்ந்திருக்கறது இன்னையோட கடைசி. நாளைலேர்ந்து எனக்கும் இந்த ஆர்பனேஜுக்கும் உள்ள உறவு

பாதர் சாலமனின் எதிரே கண்குடி தின்திருந்தாள் ரோர் மூடிய கண்களிலிருந்து பொங்ல கன்னத்தில் இறங்கிக் கண்ணி கொண்டிருந்தது,

‘“உங்க எல்லாரோடயும் சேர்ந்திருக்கறது இன்னையோட கடைசி. நாளைலேர்ந்து எனக்கும் இந்த ஆர்பனேஜக்கும் உள்ள உறவு. முடியப்போகுது. ஆனாலும். என்னால் இந்த இடத்தையோ, உங்களையோ மறக்க முடியாது செல்வி! அப்பப்ப கண்டிப்பா வந்து பார்த்துட்டு போவேன்! பத்து வருஷமா இங்கே இருந்துட்டு பிரிஞ்சி போறதை நினைக்கறப்ப வேதனையா இருக்கு செல்வி!”

“எல்லாமே நல்லதுக்குன்னு நினைச்சுக்க! அப்புறம், நீ செங்கல்பட்டுக்கு தானே போகப்போறே?”

“எனக்கும் அங்கே போய் எல்லாரையும் பார்த்துட்டு வரணும்னுதான் ஆசையாயிருக்கு பட், நான் அங்கே போய் நின்னா. எப்படி வரவேற்பாங்களோ தெரியாது”

“உன்னை பார்த்தா நிச்சயம் சந்தோஷப்படுவாங்க ரேகா! என்ன கேட்டா நீ அங்கேயே போய்டறது நல்லதுன்னு தான் தோணுது?”

ரேகா அதைக்கேட்டு வேதனையுடன் சிரித்தாள்,

“இல்லே செல்வி! பாவம்… அவங்களால வச்சு காப்பாத்த முடியலேன்னு தானே… என்னை இங்கே விட்டுட்டு போனாங்க? ஏழு வருஷமா என் மேல அன்பை வாரியிறைச்சி வளர்த்துவாங்க… இந்த பத்து வருஷத்துல் ஒரு நாள் கூட வந்து எட்டிப் பார்க்கலையே செல்வி? அப்புறம் எப்படி என்னை எத்துக்குவாங்கன்னு சொல்றே? வேண்டாம்… என்னால யாருக்கும் பிரச்சினையோ, மனக்கஷ்டமோ வத்துடக் கூடாது!”

“நீ சொல்றதும் சரிதான்!”

“லன்ச்சுக்கு நேரமாயிடுச்சு. வா போகலாம்!” செல்லியில் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு சென்றாள் ரேகா.


பாதர் சாலமனின் எதிரே கண்மூடி நின்றிருந்தாள் ரேகா. மூடிய கண்களிலிருந்து கண்ணீ பொங்கி கன்னத்தில் இறங்கிக் கொண்டிருந்தது.

சாலமன் அவள் தலையை அன்புடன் தடவிக் கொடுத்தார்.

“பாதர்” குரல் நெகிழ்ந்தது.

“டோன்ட் க்ரை மை சைல்ட்..டோன்ட் க்ரை” அவள் கண்ணீரை துடைத்தார்.

“என்னை இத்தனை வருஷம் ஒரு நாயைப் போல பரிவோடும், பாசத்தோடும் பாதுகாத்திங்க! ரொம்ப நன்றி பாதர்!”

“நன்றியை எதிர்பார்த்து இதை செய்யலே ரேகா. இந்த காப்பகம் வெற்றிகரமா செயல்படறதுக்கும், ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆலமரமா நிழல் தர்றதுக்கும் காரணம் பல நல் உள்ளங்கள் தர்ற நன்கொடைகள் தான்! எப்படியோ…. உன்னுடைய புத்திசாலித்தனமும், நீ கத்துக்கிட்டிருக்கிற டெக்னிக்கல் குவாலிபிகேஷனும் உனக்கொரு நல்ல வேலையை வாங்கிக் கொடுக்கும். நான் ஒரு லெட்டர் தர்றேன்… அதை இந்த அட்ரஸ்ல உள்ள ஏகாம்பரம் என்பவரை பார்த்துக் கொடு! அவர் உனக்கொரு வேலைக்கு ஏற்பாடு செய்வார் ஏகாம்பரம்…சென்னையில் பெரிய தொழிலதிபர். இந்த காப்பகத்திற்கு கைகொடுக்கிற பல நல்ல உள்ளங்களில் ஒருவர்..”

“தாங்க்யூ பாதர்”

“கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார் போய் வாம்மா” அன்புடன் வழியனுப்பி வைத்தார் சாலமன்.

பிரிவு மனதை வாட்ட, நெஞ்சில் துக்கம் கனமாய் அடைத்துக் கொள்ள…சூழ்ந்திருந்த அத்தனை பேரிடமும் பிரியா விடைப் பெற்றாள் ரேகா!

இனி தனது ஒவ்வொரு நாளைய உணவிற்காகவும்… உழைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றெண்ணிய போது… உடம்பில் சுறுசுறுப்பு வந்தமர்ந்து கொண்டது. இனி, நம் வாழ்க்கை நம் கையில் என்ற உண்மை உணர்ந்த போது… பொறுப்பு வந்தமர்ந்தது. ஒரு பெண்ணான தனக்கு ஒரு நான்கு சுவரை இனிதான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெண்ணியபோது பயமும், எச்சரிக்கை உணர்வும் ஏற்பட்டது.

“ரேகா… மனுஷங்க நல்லவங்க தான்! ஆனா, எல்லோரும் ஒரே மாதிரி இருந்துட முடியாது? நீ இளம் பெண் கவனமாயிரு. உன் பெண்மைக்கு பங்கம் வராத அளவிற்கு மிக கவனமாய் நடந்துக் கொள்! உறக்கத்திலும் உன் கண்கள் திறந்திருக்கட்டும்!” பாதரின் வார்த்தைகள் காதில் ஒலித்தன.

சிட்டிக்கு புறப்படும். பஸ்கள் நிறுத்துமிடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். ரேகா விரைவாய் நடந்தாள்.

அவள் எண்ணமெல்லாம் தன் எதிர்காலத்தைப் பற்றியே இருந்ததால்… சாலையில் கவனம் செலுத்த தவறி விட்டாள். இடப்பக்கமாய் பார்த்தபடி சாலையை கடந்த ரேகா… வலப்பக்கமாய் வந்து கொண்டிருந்த காரை பார்க்க தவறி விட்டாள்.

கார்… கடைசி நொடியில் பிரேக் போட்டு பெரும் விபத்தை தவிர்த்தாலும்…. ரேகாவை இடித்து தள்ளிய பிறகே நின்றது.

எதிர்பாராத அதிர்ச்சியில் கீழே விழுந்த ரேகா உடனடியாக மயக்கத்திற்குப் போளாள்.

அத்தியாயம்-2

“மைகாட்!” காரிலிருந்து பதைபதைப்புடன் இறங்கினான் அந்த அழகான இளைஞன்.

அதற்குள் அங்கு சிறு கூட்டம் சேர்ந்துவிட்டது.

கீழே விழுந்ததில் நெற்றியிலும், கையிலும் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வடிந்துக் கொண்டிருந்தது.

“கார்ல உட்கார்ந்துட்டா.. சில பேருக்கு எண்ணு மண்ணே தெரியறதில்லே. பாவம் சின்னப் பொண்ணு. உயிர் இருக்கா பாருப்பா!” ஒரு நடுத்தர வயது மனிதன் முதல் தீயைப் பற்ற வைக்க, அந்த இளைஞன் திரும்பி பார்த்து முறைத்தான். வாயை கப்சிப்பென்று மூடிக் கொண்டான் அந்தாள்.

இளைஞன் ரேகாவின் அருகே குனிந்தாள். அமைதியான அந்த முகம் அவன் மனதை பிசைய.. அவளை அப்படியே இருகைகளால் தூக்கி திறந்திருந்த கதவின் வழியே காரில் கிடத்தினான். ஓரமாய் கிடந்த பெட்டியும் ஹேண்ட்பேகையும் எடுத்துக் கொண்டு காரை விரைவாக ஓட்டினான்.

சென்னை நகரின் மையப்பகுதியில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் அவளை சேர்த்தான்.

“டாக்டர்.. அந்த பெண்ணுக்கு?”

”நத்திங் சிரியஸ்! லேசான அடி. அதிர்ச்சியில மயங்கி இருக்காங்க. ஒன் ஆர்டு ஹவர்ஸ்ல மயக்கம் தெளிஞ்சிடும்.”

“ஓக்கே… தாங்க்யூ டாக்டர்” என்று அவள் கண் விழிப்பதற்காக காத்திருந்தான்.

‘யாரிந்த பெண்? இந்த ஊரைச் சேர்ந்தவளா? அல்லது வெளியூரை சேர்ந்தவளா? கையில் பெட்டி இருந்ததே. அப்படியானால் உறவினர் வீட்டிற்காக இங்கே வந்திருப்பாளோ? அல்லது எங்காவது போய் விட்டு சொந்த ஊருக்கு வந்திருக்கலாம். எது எப்படியிருப்பினும் இவள் வருகைக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இவளைப் பற்றி தகவல் தெரிவித்தாக வேண்டும். இவள் பெயர் என்னவென்று கூட தெரியவில்லை. எப்போது மயக்கம் தெளிந்து… தெரிந்து இவளை பத்திரமாய் உரியவரிடம் ஒப்படைப்பது?
ஒருவேளை அவள் பெட்டியை ஆராய்ந்தால் தகவல் கிடைக்கலாம்.

பிறர் உடைமையை அவர் அனுமதியின்றி ஆராய்வது தவறல்லவா? ஆபத்திற்கு பாவமில்லை. ஆராய்வது உத்தமம்” உள் மனசு சொல்ல.. ரேகாவின் பெட்டியை எடுத்தான்.

காப்பகத்தை விட்டு செல்வதால் பாதர் சாலமன் நினைவுப் பரிசாக சீக்ரெட் நம்பர் லாக் சிஸ்டம் உள்ள அழகிய சூட்கேஸை அளித்திருந்தார். அதில்தான் தன் உடைமைகளை பத்திரப்படுத்தி இருந்தாள். அதை ரேகா தவிர வேறு யாராலும் திறக்க முடியாது. அடுத்து அவளின் ஹேண்ட்பேகை திறந்தான். இரண்டு நூறு ரூபாய் நோட்டும். மூன்று பத்து ரூபாயும், கொஞ்சம் சில்லறையும் ஒரு பைபிளும் தவிர வேறெதுவுமில்லை.

அர்விந்தனுக்கு ஆச்சர்யமாயிருந்தது. ஒரு அழகிய இளம்பெண்ணின் ஹேண்ட்பேக் என்றால் பவுடர், க்ரீம், லிப்ஸ்டிக், கையடக்க கண்ணாடி, டெலிபோன் டைரி, கர்ச்சிப் என்றிருக்கும். சுபத்ராவின் பேகில் அப்படித்தானே. இருந்தது? கிட்டத்தட்ட பெரும்பாலான பெண்களின் பேக் இப்படித்தான் இருக்கும். ஆனால் இதென்னா இப்படிக் கூட துடைத்து வைத்தாற்போல் இருக்குமா? பைபிள் இருக்கிறதே! அப்படியானால் இந்த யெண் கிறிஸ்டியனாய் இருப்பாளோ?

“சார்…நீங்க கொண்டு வந்து சேர்த்த பெண்ணுக்கு கான்ஷியஸ் திரும்பிடுச்சு. டாக்டர் உங்களை வரச் சொன்னார்”.

அர்விந்தன் அரக்க பரக்க எழுந்து கொண்டான்.

அந்தப்பெண் இருந்த அறையை நோக்கி கிட்டத்தட்ட ஓடினான்.

“வாங்க மிஸ்டர் அர்விந்த்”

“டாக்டர், அவங்களுக்கு…?”

“டோன்ட் ஒர்ரி.. ஷி இஸ் ஆல் ரைட்”

அர்விந்தன் அந்த பெண்ணின் அருகே சென்றான். மருண்ட விழிகளால் சுற்று முற்றும் பார்த்து விட்டு அவன் முகத்தில் வந்து நிலைப்பெற்றது பார்வை.

“ஆர் யூ ஆல் ரைட்?” அர்விந்தன் அன்பாக கேட்டாள்.

ரேகா மிகவும் பயந்துப் போனாள்.

தான் காரில் அடிபட்டு விழுந்தது நன்றாக நினைவிருந்தது. அதன்பிறகு என்ன நடந்தது? எப்படி ஹாஸ்பிடலுக்கு வந்தேன்? யார் கொண்டு வந்து சேர்த்தார்கள்? இவன் யார்? என் பெட்டி எங்கே? அதில்தானே பாதர் கொடுத்த சிபாரிசு கடிதம் இருக்கிறது?

“எ… என் பெட்டி எங்கே?”

“இதோ பத்திரமாய் இருக்கிறது” எடுத்துக் காட்டினான் அர்விந்தன்.

“மேடம் இவர்தான் உங்களை ஹாஸ்பிடலில் கொண்டு வந்து சேர்த்தவர்” என்றார் டாக்டர்.

“தாங்க்ஸ்” கை கூப்பினாள் ரேகா.

“அது என்னோட கடமைங்க! என் கார் மோதிதான் உங்களுக்கு அடிபட்டது. அதுக்காக முதல்ல நீங்க என்னை மன்னிக்கணும்”

டாக்டர், அர்விந்தன் தோளை தொட்டார்.

”மிஸ்டர் அர்விந்த்,, அவங்க இன்னும் அதிர்ச்சியிலிருந்து விடுபடலே! இப்ப டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே ப்ளீஸ்.“

“ஓக்கே டாக்டர்… எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவீங்?”

“இன்னைக்கு ஒரு நாள் முழுக்க பெட்ரெஸ்ட்ல இருக்கட்டும். காலையிலே டிஸ்சார்ஜ் பண்ணிடறேன். நீங்க…போய்ட்டு நாளைக்கு வந்தால் கூட போதும்”

“தாங்கியூ டாக்டர்” என்றவன் அவளருகே குனிந்து “டேக் ரெஸ்ட் மேடம். நான் நாளை காலையிலே வந்து பார்க்கிறேன்” என்று விடை பெற்றுப் போய் விட்டான்.

டாக்டரும் நர்சும் அகன்றனர்.

ரேகா ஆயாசத்துடன் கண்களை இறுக முடிக் கொண்டாள்.

காப்பகத்தை விட்டு வெளியில் வந்ததுமே விபத்து ஏற்பட்டது எதை குறிக்கிறது? எனக்கு ஆபத்து காத்திருக்கிறது என்றுதானே? ‘உன் பெண்மைக்கு பங்கம் வராத அளவிற்கு மிக கவனமாய் நடத்துக் கொள். உறக்கத்திலும் உன் கண்கள் திறந்திருக்கட்டும்.’ பாதர் சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வந்தது.

நான் உடனே இங்கிருந்து போயாக வேண்டும். தவிர, ஏகாம்பரம் என்கிற தொழிலதிபரை இன்றே சந்திக்கும்படி பாதர் வலியுறுத்தி சொன்னாரே? கண்டிப்பாய் அவரை சந்தித்தே ஆக வேண்டும். யார் கண்ணிலும் படாமல் இங்கிருந்து போயாக வேண்டும். முடிவு செய்த ரேகா.. மெல்ல எழுத்தாள். தலையில் கல்லை கட்டி விட்டதுப்போல் பாரமாய் அழுத்திற்று.

முற்பகல் வேளையாதலால் ஹாஸ்பிடல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நர்சுகள் அங்குமிங்குமாய் நடந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கவனிக்காத நேரமாய் பார்த்து ரேகா வெளியேறி விட்டாள்.


ரேகா சரியான முகவரி தேடி கண்டுபிடித்து செல்வதற்குள் பிற்பகல் ஆகி விட்டது.

துங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடில் பெரிய பரப்பளவில் நட்ட நடுவில் அழகாக அமர்ந்திருந்தது அந்த பங்களா.

இதயம் தடதடக்க நடந்தவள்…அந்த பங்களாவினுள் காலடி எடுத்து வைத்ததும் ஏதோ ஒருவித இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. உடம்பெங்கும் சிலிர்த்தது.

பெரிய ஹால் அது. பத்து பனிரெண்டு பேர் மொத்தமாய் நின்றிருந்தனர். சுவற்றில் இரண்டு வயது பெண் குழந்தையின் போட்டோ மாட்டப்பட்டு புத்தம் புதிய ரோஜாப்பூ மாவை போடப்பட்டு இருந்தது. ஏகாம்பரமும், அவர் மனைவி அம்பிகா, மகன் தினேஷ். மருமகள் கனகா, மகள் சுபத்ரா மற்றும் உறவினர்கள் சூழ்ந்திருக்க அனைவரும் கண் மூடி கைகூப்பி நின்றிருந்தனர்.

”என் மகள் சுசீலாவின் பிறந்தநாளான இன்று அவள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் கடவுளே” ஏகாம்பரம் மனமுருக வேண்டிக் கொண்டார்.

ரேகா ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்றிருந்தாள்.

”அம்பிகா.. அன்னதானத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டியா?” என்றார் ஏகாம்பரம்.

“அப்பவே உதவும் கரங்களுக்கு அனுப்பியாச்சுங்க” என்றவள் அப்போதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தாள்.

நெற்றியிலும் கையிலும் போடப்பட்டிருந்த கட்டும், கையில் பெட்டியும், களையான முகமும்…அம்பிகாவின் கவனத்தை ஈர்த்தது.

‘இவளை.. இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறோமே!’ யோசனையுடன் அவளை நோக்கி வந்தாள். ஏகாம்பரமும் அவளை கவனித்து விட்டார்.

“யாரும்மா நீ? யாரை பார்க்கணும்?”

அம்பிகாவை பார்த்ததும் ரேகாவிற்கு கையும் காலும் பரபரத்தன.

‘எனக்கொரு அம்மா இருந்திருந்தால் இப்படித்தானே இருப்பாள்?’

“உன்னைத்தான் கேக்கறேன்.. யாரும்மா நீ?” அம்பிகா மறுபடி கேட்டாள்.

“நா.. நான் அன்னை தெரசா மகளிர் காப்பகத்திலேர்ந்து வர்றேங்க…”

”ஓஹோ.. பாதர் சாலமன் சொன்ன பொண்ணு நீதானா? உன் பேரென்னமா?” என்றார் ஏகாம்பரம்.

“என் பேரு ரேகா சார்” என்றபடி பாதர் தந்திருந்த கடிதத்தை நீட்டினாள்.

“அனாதை ஆஸ்ரமத்திலேர்ந்து வந்திருக்கியா? பாவம்” அம்பிகாவின் தாய் மனசு வேதனைப்பட்டது.

கடிதத்தை வாங்கிப் படித்தவர். “உக்காரும்மா” என்றார்.

ரேகா சோபாவில் பட்டும் படாமல் அமர்ந்தாள்.

“நெத்திலேயும், கைவிலேயும் என்ன கட்டு?”.

“வரும்போது ஒரு சின்ன ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சு சார்!”

“அடடா…ஏம்மா கவனமா வந்திருக்கலாமில்லோ ரொம்ப அடியா?”

“அதிகமில்லே சார்.. கொஞ்சம்தான்,”

“அம்பிகா இப்படி உக்காரு, பாதர் சாலமன் இந்தப் பொண்ணை நம்மளை நம்பி அனுப்பியிருக்காரு.”

“எதுக்குங்க?”

“ஏதாவது வேலை போட்டு கொடுக்கணுமாம். அந்த காப்பகத்துல இருபது வயசானதும் நம்மளை மாதிரியான ஆட்களிடம் சிபாரிசு பண்ணி வேலைக்கு சேர்த்து விட்ருவாங்க. அதுக்கு மேல அங்கே வச்சிருக்க பொருளாதாரம் இடம் தராது. உடல் ஊனமுற்றவர்களும் முதியோர்களும் மட்டும் இதுக்கு விதிவிலக்கு. இந்தப் பொண்ணுக்கு என்ன வேலை தர்றது? ஆபீஸ்லே இப்போதைக்கு எந்த வேகன்ஸியும் இல்லையே” யோசனையாய் நெற்றியை தேய்த்தார் ஏகாம்பரம்.

ரேகாவின் முகம் அதை கேட்டு சட்டென வாடிப் போனது. அதை கவனித்த அம்பிகாவின் மனசு வருத்தப்பட்டது.

“ஏங்க..எனக்கொரு யோசனை தோணுதுங்க.”

“என்ன?”

“நம்ம வீட்டை கவனிச்சுக்க.. வீட்டு கணக்கு வழக்குகளை கவனிச்சுக்க ஒரு ஆள் வேணும்னு சொல்லிட்டிருந்தேனே.. பேசாம இந்தப் பொண்ணை நம்ம வீட்லேயே வேலைக்கு வச்சுகிட்டா என்ன?”

சற்று நேரம் யோசித்தார் ஏகாம்பரம்.

“நீ சொல்றதும் சரிதான். ஆனா, இந்தப் பொண்ணு ஆபீஸ்லே வேலை போட்டு தருவாங்கன்னு எதிர்பார்த்து வந்திருக்கும். வீட்லே வேலைன்னதும் ஒரு மாதிரி பீல் பண்ணிட்டா?” என்றபடி ரேகாவைப் பார்த்தார்.

– தொடரும்…

– தேவியின் பெண்மணி, பிப்ரவரி 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *