ஓப்பனைக்காரர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 19, 2022
பார்வையிட்டோர்: 2,492 
 

நான் தினமும் பூங்காவில் உலாவும்போது பல மனிதர்களை சந்திப்பேன் . இளம் யுவதிகள், மத்திய வயது உடைய பெண்கள், மூதாட்டிகள் அதோடு ஆண்களில் இளைஞர்கள் சுமார் 40 வயது உடையவர்கள். அவர்களில் அரவிந்தன் ஆகிய நான் ஒரு ஐம்பது வயது மனிதன். திருமணமானவன். பத்து வயது சந்திரனுக்கு தந்தை. எனக்கு முகத்தில் பவுடர் பூசுவது கண்ணுக்கு மை பூசுவது மற்றும் நகதை பளப்பளப்பாக்குவது போன்ற செயல்கள் பிடிப்பதில்லை. ஏன் காலுக்கு போடும் காலணியை கூட நான் பளப்பளப்பாக்குவது குறைவு.

எனக்கு கிடைத்த மனைவி விஜயா என்னை போல் அவளும் தன் முகத்தை அலங்கரிப்பதில் அக்கறை காட்டுவது கிடையாது. அதனால் கண்ணாடி மேசையில் வாசனைத்திரவியங்கள், பவுடர்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் இல்லை.

நாங்கள் இருவரும் ஒரு தமிழ் திரை படத்தை பார்த்தபோது, நான் அதில் வந்த கதாநாயகியை காட்டி விஜயாவுக்கு சொன்னேன்,

“விஜயா. இந்த படத்தின் கதாநாயகி எவ்வளவவு அழகாக இருக்கிறாள். நீண்டகண்கள், கருங்கூந்தல், மாம்பழம் போன்ற கன்னங்கள் அவளுடைய கைகளில் உள்ள நகங்களை பார்த்தீரா”? என்று நான் அவளுக்கு சொன்ன போது,

விஜயா சொன்னாள், “அத்தான் அதெல்லாம் திரைப்படத்துக்கு அவள் போடும் வேஷம் ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு ஒப்பனைகாரர் இருக்கிறான். இவர்களெல்லாம் நடித்து முடித்தபின் இந்த வேஷம் களைந்து விடும். அதன் பின் அவளுடைய சுய உருவம் தெரியும் அப்போது பார்த்து தான் அவள் அழகி இல்லையா என்று நீங்கள் தீர்மானிக்க முடியும்”.

அவள் சொன்னதில் உண்மை இருந்தது.

உலகமே ஒரு நாடக மேடை என்று ஷேக்ஸ்பியர் அந்த நாடகத்தில் நடிக்க வேண்டும். அதுவும் அரசியல்வாதிகள் சமயத்துக்கு ஏற்றவாறு வேஷம் போடுவார்கள்.

நான் பூங்காவில் சந்தித்த ஒரு சிலர் பூங்காவில் நடக்கும்போது வேஷம் போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

அதில் நான் சந்தித்த ஒருவருக்கு வயது 70 இருக்கும், பூங்காவில் உள்ள வாங்கில் அமர்ந்து பைக்குள் இருந்து எடுத்தத கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து நான் அழகாக இருக்கிறேனா என்று பார்த்தார். பல்லை இளித்துக்காட்டினார், கண்களை உருட்டி காட்டினர். புருவத்தை உயர்த்தி காட்டினார் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. ஏதோ ஒருசில பொருட்களை பையிலிருந்து எடுத்து கண்ணாடியில் பார்த்து தனது முகத்தை ஓப்பனை செய்ய தொடங்கினார். கண் இமைமைகளை, மீசை ஆகியவற்றை சரி செய்தார். அவர் கண்ணாடியில் திருபப் பார்த்தார். அவருக்கு திருப்தி இல்லை. உடனே திரும்பவும் பையுக்குள் இருந்து ஒரு பொய் முடியை எடுத்து அப்படியே தன் தலையில் வைத்தார். தன் முகத்தை திரும்பவும் கண்ணாடியில் பார்த்து சந்தோஷப்பட்ட ஆமாம் இப்போது அவருக்கு அவர் முகத்தில் ஒரு திருப்தி தென்பட்டது. இதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அட கடவுளே இந்த வயதிலும் இந்த மனிதனுக்கு அலங்காரம் அவசியம் வேண்டுமா? அவருடைய வாழ்நாட்கள் எண்ணிக் கொண்டு இருக்கின்றன. இவர் தான் மரணித்தால் தன் பிள்ளிகள் ஒப்பனை செய்த தன் முக்தையும் அலங்கரித்த உடலையும் சவப் பெட்டிக்குள் வேண்டும் என்று சொல்லியிருப்பாரோ என்னவோ.

அவள் என்னை பார்த்து சிரித்தார். நானும் சிரித்து, என் கை விரலை உயர்த்தி காட்டி பிரமாதம் என்றேன்.

நன்றி என்றார்.

தன்னை ராகவன் என்று அறிமுகப்படுத்தினார்.

எங்கேயோ அவர் பெயரை அடிக்கடி திரைப்பட ஆரம்பத்தில் வரும் பேர்களில் நான் பார்த்த நினைவு என்று என் மனதுக்குள் யோசித்துக்கொண்டே இவர் அந்த எழுத்துகளில் வந்த மேக்ஆப் காரன் ராகவன் தான். ஆனால் அவரிடம் கேட்க்க விருப்பமில்லை.

எண்ணெய் அரவிந்தன் என்று அறிமுகப்படுத்தினேன்.

என்ன தொழில் என்று அவர் கேட்டார், ஒரு கம்பெனியில் மேனேஜராக வேலை செய்கிறேன். இன்று ஞாயிற்றுக்கிழமை என்றபடியால் இந்த பூங்காவில் உலாவ வந்தேன் என்றேன்.

என் மனைவி வரவில்லையா என்று கேட்டார்.

அவள் சமையல் செய்யவேண்டும் என்பதால் வீட்டில் இருந்துவிட்டார்.

உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா என்று கேட்டார்.

ஒரு பையன் இருக்கிறான் என்றேன்.

என்னைப் பற்றி நான் கூறியபின் நான் அவரைப் பற்றி நான் கேட்க வேண்டும் அல்லவா?

“அது சரி ஐயா நீங்கள் உங்கள் பெயர் ராகவன் என்று சொன்னீர்களே? இப்போ உங்களுக்கு சுமார் 70 வயது இருக்கும் என்று நான் நினைக்கிறேன் சரியா”, என்று கேட்டேன்.

“எப்படி என் வயதை சொன்னீர்கள்” என்று அவர் கேட்டார்.

“ஐயா உங்களுடைய முகத்தில் சுருக்கு விட்டுது. உங்கள் தலை முடி நிறைத்திருந்தது அதனால் தான் உங்கள் வயது 70 இருக்கும் என்று நான் என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்”

“இப்போ பாருங்கள் இப்போது என் தலை முடி நரைக்கக்வில்லை. என்னுடைய முகத்தைப் பாருங்கள் சுருக்கு ஒன்றுமே இல்லை அல்லவா” அவர் சொன்னார்.

நான் சிரித்துவிட்டு சொன்னேன் “நீங்கள் செய்ததை நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்து முகத்திற்கு ஒப்பனை போட்டீர்கள் அதன்பின் அடிக்கடி முகத்தை கண்ணாடியில் பார்த்தால் உங்களுக்கு திருப்தி ஏற்பட்டது. உங்களின் இயற்கையான முகத்தை மாற்றி விட்டீர்கள்”.

அதுக்கு அவர் சொன்னார் “நான் ஒரு காலத்தில் எத்தனையோ நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் ஒப்பனை ஒப்பனை செய்தவன். திரைபடதுறைக்கு வரமுன் கிராமத்தில் நாட்டு கூததில் நடித்வர்களுக்கு ஒப்பனை செய்தவன். அது மிகவும் வேறு பட்ட ஒப்பனை. அந்த பழக்கம் என்னை விட்டுப் போகுமா. பலருக்கு ஒப்பனை செய்த நான் எனக்கு ஒருநாள் செய்து பார்த்தால் என்ன என்று ஒருநாள் செய்யத் தொடங்கினேன். அது பழக்கமாகி விட்டது “.

நான் சிரித்தபடி அவருக்கு சொன்னேன் “ஐயா! நீங்கள் சொல்வது சரி அதோ பாருங்கள் அங்குள்ள எதனை பெண்கள் தங்களை அடிக்கடி கண்ணாடியல் பார்த்து பவுடர் பூசிக் கொள்கிறர்கள். இவர்கள் பூங்காவில் நடந்தபின் வியர்வையில் போட்ட மேக்கப் எல்லாம் அழிந்துவிடும். திரும்பவும் வீட்டுக்கு சென்ற பின் ஒப்பனை போடப் போகிறார்களா என்று எனக்கு சந்தேகம்” என்றேன்

“வேஷம் போடுவதில் என்ன தவறு? இந்த உலகில் வேஷம் போட்டால் தான் வாழ முடியும் தம்பி”.

அவர் சொன்னதில் எனக்கு உண்மை என்று பட்டது. ஆனால் அதற்காக நான் வீட்டுக்குத் திரும்பியவுடன் வேஷம் போட தொடங்கவில்லை. அது எனக்கு சில சமயங்களில் சருமநோயை தந்து விடும் என்ற பயம்.

கிராமத்து பெண்கள் மஞ்சள் அரைத்து பூசிக் கொள்கிறார்கள். மூலிகை சத்து சருமத்துக்கு நல்லது என்று பல நூல்களில் வாசித்திருக்கின்றேன்.

“திரைப்பட உலகில் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தனியாக ஒப்பந்தக்காரர்கள் உண்டு அவர்கலி மட்டுமே தங்கள் முகத்தில் கைவைக்க விடுவார்கள் நடிகர்களோ நடிகைகளோ ஒப்பனை போடுவதே ஒரு தனிக்கலை”, அவர் சொன்னார்

நான் அவரிடம் இருந்து விடை பெற்று வீடு சென்றேன்.

****

திங்கள் மாலை கல்லூரியிலிருந்து வந்த என் மகன் ரவி எனது மனைவிக்கு சொன்னான் “அம்மா இன்னும் மூன்று நாட்களில் எங்கள் கல்லூரியில் வினோத உடை போட்டி நடக்கின்றது, அதில் நான் பங்கு கொள்ள வேண்டும் . நீங்கள் அல்லதுஅப்பா எனக்கு மேக் ஆப் போடுவீர்களா எல்லோரையும் கவரக் கூடியதாக இருக்க வேண்டும் நான் முதல் பரிசை பெற வேண்டும் “

அவன் சொன்னது எனக்கும் என் மனைவிக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது, நாங்கள் ஒருவரை ஒருவர் மாறி பார்த்தோம்.

விஜயா சொன்னாள் “ரவி! என்னால் உனக்கு இந்த வேஷம் போட முடியாது“.

நானும் சொன்னேன் “ரவி என்னாலும் முடியாது“.

எனக்கு திடிர் என்று ஒரு யோசனை வந்தது பூங்காவில் நான் சந்தித்த ஒப்பனைக்காரர் ராகவனிடம் உதவி கேட்டால் என்ன?

நான் சொன்னாதை கேட்ட விஜயா. “கேட்டுப்பாருங்கள், வேண்டுமென்றால் அவர் ரவிக்கு ஒப்பான செய்வதற்கு நாங்கள் காசு கொடுக்கலாம்“.

“எதுக்கும் விஜயா நான் அவரை கேட்டு பாக்கிறன்” என்றேன்

அடுத்த நாள் பூங்காவிற்கு சென்ற போது அந்த மனிதர் வாங்கில் உட்கார்ந்து கொண்டு தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தார்.

“எப்படி ராகவன் இருக்கிறீர்கள்” என்று கேட்டேன்

“நீ நேற்று என்னை சந்தித்த அரவிந்தன் அல்லவா”

“ஆமாம் அவன் தான் நான். எனக்கு உங்களிடம் ஒரு உதவி தேவை ஐயா “.

“என்ன உதவி என்னிடம் வேணும் “?

“நீங்கள்தானே ஒப்பனை செய்வதில் சிறந்தவர் என்று சொன்னீர்கள்”.

“என் மகனுக்கு இரண்டு நாட்களில் கல்லூரியில் வினோத உடை போட்டி நடக்கிறது. அவனுக்கும் அவன் முதல் பரிசு பெற வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறான். நீங்கள் என் வீட்டுக்கு வந்து என் மகன் ரவிக்கு ஒப்பனை செய்வீர்களா”

ஒரு நிமிடம் சென்று விட்டுராகவன் சொன்னார் “இப்போது புரிகிறதா ஓப்பனை போடுவதற்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்று. சரி நாளை காலை உங்கள் வீட்டுக்கு வருகிறேன். உங்கள் மகனுக்கு ஒப்பனை போடுவதற்கு நான் ஒப்பனை பொருட்களை கொண்டு வருகிறேன். அதற்கு நீங்கள் பணம் தரத் தேவையில்லை. இது என் பரிசாக இருக்கட்டும்” என்று அவர் சொன்னார்.

வினோத உடை போட்டி அன்று ராகவன் என் வீட்டுக்கு வந்து ரவிக்கு அழகான ஒப்பனை போட்டு போஜனம் உண்ட பின் சென்றார்.

என் மகனை அடையாளம் காண முடியாமல் போய்விட்டது, அப்படியான ஒரு ஒப்பனை .

இப்போட்டியில் அவன் கலந்துகொள்ள சென்றபோது, நானும் விஜயாவும் கூடவே சென்றோம்.

சுமார் 40 சிறுவர்கள் பங்கு கொண்டார்கள். அதில் முதல் பரிசு பெற்றது என்னுடைய மகன் ரவி.

நானும் நானும் விஜயாவும் எங்களுக்கு சொன்னோம்.

“முதல் பரிசு ரவிக்கு கிடைப்பதுக்கு அந்த ஒப்பனைகாரர் ராகவன் தான் முக்கிய காரணம். அவரை ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு கூட்டி வந்து நல்ல முறையில் விருந்தோம்பல் செய்ய வேண்டும்“ என்றேன்.

விஜயாவும் அதற்கு சம்மதித்தாள்.

Print Friendly, PDF & Email

ஒட்டாத உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

பணம் பிழைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *