ஓடிப்போனவள் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 8, 2022
பார்வையிட்டோர்: 5,519 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதையைப் பற்றி

ஓடிப்போனவள் கதை அமானுஷ்யமான கற்பனை யல்ல. ராக்ஷஸக் கதையும் அல்ல. அன்றாட வாழ்விலே அல்லலுறுகிற எத்தனையோ அபாக்கிய வதிகளில் ஒருத்திதான் சிவகாமியும். அவளை – அவளைப்போன்றவர்களை ஏசி வசைபாடத்தான் தெரியும் சமூக மக்களுக்கு.

அடிப்படைக் காரணமே, சம்பிரதாயக் குட்டையிலே ஊறிக் கிடக்கும் அட்டைகளான சமூகப் பெரியார்களே என்பதை அவர்கள் உணரமாட்டார்கள்.

இன்றைய சமுதாயம் கரையான் புற்று. இடிந்து கொண்டிருக்கும் பாழ் வீடு. மேலே மினுமினுப்பான குழிதாமரையும், நீலோற்பலமும் தாமரை மலர்களும் மினுக்க ஆழத்திலே பாசியும் புழுக்களும் முட்களும் நிறைந்து சாக்கடையாக மாறி வருகிற தேக்க நிலை.

சமுதாயம் சீர்திருந்த வேண்டும் என்கிறார்கள். சமுதாயம் சீர்திருந்த முடியாது, சமூக தர்மங்களும், மூட நம்பிக்கைகளும், மக்களின் மடத்தனமும் அவற்றால் விளைகின்ற தீமைகளும் ஒழித்துக் கட்டப்படும் வரை.

‘பாபங்கள்’ என்று மதிக்கப்படுகிற அநேகம் செயல்கள் இல்லாக் குறையினால் எழுந்தது என்று எண்ணி ஏமாறுகிறார்கள். இருக்கின்ற ‘திமிர்’ காரணமாகவும் பாபங்கள் கொழுத்து வளரும் என்பதை உணர முடியாதவர்கள் பிரச்னையை ‘ஒண்ணரைக்கண் பார்வையோடு’ தான் பார்க்கிறார்கள் என்று கூறுவேன்.

வயிற்றுப் பசியினால் மட்டுமே ‘பாபங்கள்’ என்று கருதப்படுகிற செயல்கள் பிறக்கவில்லை. அவற்றுக்கு வகை செய்யும் வேறு பசிகளும் உண்டு. இயற்கையின் சிருஷ்டியான இந்தப் பசிகளுக்குச் சரியான ஆகாரம் கிடைக்காத போது தான் மக்கள் தறிக்கட்டு அலைய நேரிடுகிறது.

‘கிடைக்காத போது மட்டும்’ என்றும் சொல்லி விடுவதற்கு இல்லை. பார்க்கப் போனால், மக்கள் பசியை அடக்க வில்லை. பசிதான் மக்களை ஆட்டி வைக்கிறது. அது எந்த வகையான பசியாக இருந்தால் என்ன!

ஒவ்வொரு சிறு விஷயமும் வாழ்வை பாதிக்கிற பெரும் பிரச்னையாகி விடுகிறது – சமுதாயத்தை, உயிர்க்குல வளர்ச்சியை பாதிப்பதனால். ஆண் பெண் உறவு குடும்பப் பிரச்னையல்ல. சமுதாயப் பிரச்னை. உலகப் பிரச்னை. உயிர்க்குல மனோதத்துவப் பிரச்னை.

இவை சரியாக எடை போடப்பட்டு முடிவுகள் காணப்பட வேண்டும், சமுதாயத்தை – உயிர்க் குலத்தை ஓரளவுக்காவது அப்பழுக்கற்றதாக மாற்ற வேண்டுமானால், மனிதன் கடவுளாக வேண்டாம், அது மனிதனாக வளர்வது கிடக்கட்டும். முதலில் மனிதன் மனிதனாக வாழவேண்டும். வாழ வகை செய்ய வேண்டும்.

அதற்குத் தடையாக உள்ள இழிதகைமைகளை, சிறுமைகளைக் களைய அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியது சிந்தனையாளர்களின் கடமை. இலக்கியத்தின் ஜீவனே, இதய ஒலியே, அதாகத் தான் இருக்க வேண்டும். வாழ்வின் நிர்வாணத் தன்மையை சுட்டிக் காட்டி, சிறுமைகளை எடுத்துச் சொல்ல வேண்டியது எழுத்தாளன் கடமை. சிந்திக்கச் செய்யவேண்டியது அவன் எழுத்தின் லட்சியம்.

அதை அருமையாக அழகாக, இனிமையாக கலையாகக் கையாண்டு ரசிகர்களின் அமோகமான பாராட்டுதல்களையும் அன்பையும் பெற்றுவரும் எழுத்தாளர் சொக்கலிங்கம் தனக்கே உரிய தனி முறையில் ‘ஓடிப்போனவள் கதை’யை எழுதியிருக்கிறார். உண்மையை உள்ளபடி எழுதியிருப்பதற்காக உணர்ச்சிகரமாக – எழுதியுள்ளதற்காக சொக்கலிங்கத்தைப் பாராட்ட வேண்டும். அவர் துணிவை வியக்க வேணும்.

உண்மைகளை, புரட்சிகரமான புதுமையான சிந்தனைகளை, முன்னேற்ற இலக்கியங்களை வெளியிடும் சாந்தி நிலையத்தினரின் துணிவையும் வியக்காமல் இருக்க முடியாது.

‘ஓடிப்போனவள் கதை’ தமிழ் இலக்கியத்துக்கு புரட்சிகரமான புதுமை. ஆனால் நாட்டிலே அன்றாட நிகழ்ச்சி! இதை ஏட்டிலே பதித்த சொக்கலிங்கம் ‘பாபம்’ எதையும் செய்துவிடவில்லை. இப்படிச் செய்தது இலக்கியத் துரோகம் என்று கருதப்படுமானால், தீவிரமாக உள்ளதை உள்ளபடி எழுதுகிற முல்க்ராஜ் ஆனந்த், கே.அஹமட் அப்பாஸ் முதலிய இன்றைய எழுத்தாளர்களும், மாப்பஸன்ட், டி.எச்.லாரன்ஸ் போன்ற பிரபல இலக்கியாசிரியர்களும் எழுதியவை எல்லாம் ‘இலக்கியத்துரோகம்’ என்று ‘சித்திரபுத்திரக்கணக்கு’ எழுதட்டும் இலக்கிய சனாதனிகள்! கவிராயர் சுப்ரதீபமும் காளமேகமும் பிறபுலவர்களும் பாடிய பெண் அங்க வர்ணனைகளை ரசிக்கிறவர்களுக்கு இது இலக்கியமாகப் படவில்லை என்றால், நான் ஆச்சர்யப்பட மாட்டேன். குறை கூறுகிறவர்களை ‘கள்ள மனக்குள்ள நரிகள்’ என்று கூறுவேன். வெளிவேஷமாக புனிதத்தனம் பேசிவிட்டு மறைவிலே ருத்ராடிப்பூனை த்தனம் பயில்கிற எத்தர்கள் அவர்கள். அவர்களை நானோ நண்பர் சொக்கலிங்கமோ, எங்கள் நண்பர்களோ சட்டை செய்யப்போவதில்லை.

மனிதர்கள் மிருகங்களாக மாறிவிடுகிறார்கள் உணர்ச்சிச் சூறையிலே சிக்கி அல்லாடுகிறபோது அவ்வேளையில் அவர்கள் தங்களை, தாங்கள் வகுத்த தர்மங்களை முறைகளை மறந்துவிடுகிறார்கள். பிறரது குறை கூறல்களையோ வசைமாரிகளையோ கருதுவதில்லை. உலகத்தையே மறக்கடிக்கிற உணர்ச்சிக் கொதிப்பு மனிதர்களை வெறியர்களாக்கிவிடுகிறது. உணர்ச்சிக்கு அடிமைகள் அவர்கள். உணரச்சிக்கு தூபம் போடுகின்றன சந்தர்ப்பங்கள். மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால் சந்தர்ப்பங்கனில் சிக்கித் திணரும் சிறு துருப்பாகிவிடாமல் மிகை பட்ட உணர்ச்சிகளின் கருவியாகிவிடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய சிந்தனைகளை வலியுறுத்தும் சித்திரம்தான் ஓடிப்போனவள் கதை.

சாந்திநிலைய வளர்ச்சியிலே ஆர்வமும் ஒத்துழைப்பும் காட்டுகிற நண்பர்களுக்கு எங்கள் நன்றி,

கோரநாதன் (வல்லிக்கண்ணன்)

ஓடிப் போனவள் கதை

சிவகாமிக்கு அவனது கணவனைப் பிடிக்கவில்லை.

எப்படிப் பிடிக்கும்?

அவள் பெண். வயது பதினெட்டு ஆகிறது. போன வருஷம் தான் திருமணம் நடைபெற்றது.

ஜோதிட சிகாமணி ஜாதகம் பார்த்து பொருத் தங்கள் எல்லாம் ரொம்ப அருமையாக அமைந்திருக் கின்றன என்று உறுதி கூறி, ஐந்து ரூபாய் வாங் கிப் போன பிறகு அவள் தந்தைக்கு உற்சாகம் தாங்க முடிய வில்லை.

புரோகிதருக்கும் உவகையாகத் தானிருக்கும். ‘ஆயிரம் பொய் சொல்லியானாலும் ஒரு கல் யாணத்தைப் பண்ணி வை’ என்ற தர்மத்தின்படி நடந்ததற்காக அல்ல. இப்போ கிடைத்தது, இனி கல்யாணத்தின் போது அகப்படப்போகிற லாபத்துக்கு அச்சாரம் போட்டிருப்பது போல என்ற ஆசை நினைப்பு மகிழ்வைத் தூண்டியது.

சிவகாமியின் தந்தை ரொம்ப சந்தோஷமாக வீட்டுள் நுழைந்தார். அவருக்கு திருப்தி இராதா பின்னே!

‘சிவகாமி, உன் அதிர்ஷ்டம் தானம்மா. நல்ல சம்பந்தம். அவருக்கு சொத்து ரொம்ப இருக்கு!’ என்று இறுமாந்து போனார்.

பதினேழு வயசு நிரம்பாத பாவையின் மனம் ‘அவர் எப்படி இருப்பார்? வயசு என்ன இருக்கும்?’ என்று கேட்கத் துடித்தது, அவர் யார் என்று அறியத்துடித்தது ஆனால் அவள் பெண் இயல்பான வெட்கம் ஆசைக்கு அணை போட்டது.

தந்தை வெற்றிகரமாக வியாபார ஒப்பந்தத்தைப் பற்றினைத்துப் பூரிப்பது போலப் பேசிக் கொண்டு போனார். தன்னுடைய வாழ்க்கையையே பாதிக்கப்போகிற ஒப்பந்தம் பற்றி அவள் என்ன எண்ணுகிறான் என்பதை அறிய அவருக்கு நினைவு எழவில் அவர் சொன்னார்: ‘நிலம் புலம் வீடு வாசல் எல்லாம் இருக்கு. ஜட்கா வச்சிருக்கார். குதிரைகள் அட்டா என்ன அழகாக இருக்கு தெரியுமா அஸ்வகம் என்பார்களே அந்த அழகை அவர் குதிரைகள் டக் டக் டக் என்று நடை போட்டு வரும்போது தான் காண முடியும். தெருவிவே போறவன் எவனுமே நின்று திரும்பித்தான் பார்க்கணும்…’

தெருவியே எதிர்ப்படும் எவனுமே நின்று பார்ப் பதுடன் கண்ணிலே கண்ணிடத் தவிக்கும்படி தூண்டுகிற வளப்பு பெற்றுள்ள அந்தக் குமரி கேட்க விரும்பினாள் அப்பா, அவர் அழகாயிருப் பாரா அவருக்கு வயசு என்ன? அவர் யார்?

அவள் பென். இன்னும் பதினேழு வயசு நிரம்பாத பருவமங்கை. இயல்பான வெட்கம் குறுக்கே நின்று தடை போட்டது அவள் ஆசைக்கு.

‘என்னம்மா ஒண்னுமே சொல்ல மாட்டேன்கிறே என்ன யோசனை?’ என்று கேட்டது தந்தையின் வாய்.

‘ஊம்’ என்றாள் மகள். எப்படிச் சொல்வது தனது உள்ளத்து ஏக்கத்தை என்ற தவிப்பு அவளுக்கு.

‘சிவகாமி, உன் பாக்கியம் தான். கனகனேரிய பண்ணையார் வீட்டிலே சம்பந்தம் பண்ணுகிற தென்றால்…’

‘அவருக்கு மகன் கிடையாதே!’ என்று நினைத்தது நெஞ்சு. சொல்லத் துணியவில்லை அவள்.

‘அவராக வலிய வந்து கேட்பது என்றால்…’

அவள் இதயத்திலே யாரோ ஊசியால் குத்துவது போலிருந்தது. கவனித்தாள்.

‘நல்ல மனுஷன், வயசு என்ன பிரமாதமாகவா ஆகிவிட்டது! முப்பத்து மூணோ என்னவோ தான்…’

தந்தை தன் பேச்சை முடிக்கவில்லை. ஆனால், இன்னும் பதினேழு வயது முடியாத அவள் பெரு மூச்செறிந்தாள். இன்பக் கனவுகள் கிளுகிளுத்த அவளது பிஞ்சு இதயத்தை விஷப் பாம்பு கடித்தது போல- கடித்தும், விடாமல் கவ்விக்கொண்டிருப்பது போல, வலித்தது அவளுக்கு.

அவள் கனவு கண்டாள். எல்லாப் பெண்களையும் போல, பெண்களைப் பற்றி ஏங்குகிற எல்லா ஆண்களையும் போல, பருவ மங்கை அவள் எண்ணினாள், மனசுக்குப் பிடித்த மன்மதனுக்கு மாலையிடலாம் என்று.

இன்றைய சமூக தர்மத்தின்படி, மணமாக வேண்டிய மங்கைமார்களுக்கு எல்லாம் மன்மதர்களே மாப்பிள்ளையாகக் கிடைக்க இடம் உண்டா, அப்படி தப்பித் தவறிக் கிடைத்தாலும் அவன் மனசுக்குப் பிடித்தவனாக, மனைவியை அன்பாக. இன்பத் துணைவியாக, மதித்து நடத்துகிறவனாக இருப்பானா – இது போன்ற விஷயங்களை அவள் எண்ணிப்பார்க்கவில்லை.

அவன் எண்ணிக்கொண்டிருந்தது தன்னைப் பற்றி; தனக்கு வரப்போகும் இன்பம் பற்றி; அந்த இன்பத்தைத் தரவேண்டிய கட்டழகன் எப்படியிருப்பான் என்பது பற்றித்தான். அவள் பெண். எல்லாக் குமரிகளையும் போல – வயது வந்த வாலிபர் கனையும் போலத்தான் – அவளும்!

ஆனால், பெரியவர்களுக்கு இளம் உள்ளங்களின் எண்ணங்களைப் பற்றி என்ன கவலை? உனக்குச் சம்மதமா? இவனைப் பிடித்திருக்கிறதா?…இந்தப் பெண்ணை உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று மணமகளிடமும் மணமகனிடத்தும் கேட்க வேண்டுமா என்ன பரஸ்பரம் பார்வை பறிமாற வேண்டியது அவசியமா என்ன! கழுத்திலே தாலி ஏறினப் புறம் அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாள். அவன் தன் பக்கத்திலே வேண்டுமானாலும் சதா அவளை அமர்த்தி அழகு பார்க்கலாம். மாட்டுக்குத் தண்ணி காட்டுகிறமாதிரி ‘இந்தாம்மா பார்த்துக்கோ – இதுதான் மாப்பிள்ளை … மாப்பிள்ளை ராசாவே இதோ உம்ம பெண்ணு’ என்று ஒரு நாடகம் என்னத்துக்காக? மேலும், நாங்கள் கல்யாணம் செய்து கொண்ட போது பெரியவா எங்க இஷ்டத்தைக் கேட்டா செய்தாக? என்னவோ எல்லாம் சரியாகத்தான் போகும், – இளம் பருவத்தினரை அக்கினி சாட்சியா, மந்திரமோதி முடிச்சுப்போட்டு இணைக்கிற குடும்பப் பெரியார்கள் நினைப்பது இப்படித் தான். அவர்கள் வழியில் வந்தவர்தானே சிவகாமியின் அப்பாவும்.

ஆகவே, வாழ்க்கை என்பது கனவின் இனிமை நிறைந்தது இல்லை என்பதை சினகாமி உணர முடிந்தது. தனது வாழ்க்கையை வகுக்கும் உரிமைமக்களுக்கு இல்லை. பெற்றோர்கள் இஷ்டப்படி தான் பிள்ளைகளின் வாழ்வு பாழாக்கப்படும்; அதற்கு சமூக தியாயங்கள், கட்டுப்பாடு, புரோகித் அமைப்புகள், ஜாதகக் கட்டங்கள் எல்லாம் துணை புரியும் என்பன நிரூபணமாயிற்று அவளுக்கு. அவளது கல்யாணத்தின் மூலம்.

மாப்பிள்ளைக் கோலத்திலிருந்த பண்ணையார் பரமசிவம் பிள்ளையை பார்த்ததுமே சிவகாமி மயங்கிக் கீழே விழாமலிருந்தது பெரிய காரியம்!

‘வேறு என்ன பொருத்தம் இருக்கிறதா இல் லையா என்று எதற்காக ஐயா பார்க்க வேணும்? அருமையான பொருத்தம், பெயர்ப் பொருத்தம் – அட்டா / சுலபமாகக் கிடைக்கக் கூடியதா! அதிரஷ்டம் நிறைந்த பொருத்தம் அல்லவா – இருக்குது பாருங்களேன்…பரமசிவம் – சிவகாமி – இதை விட வேறு பொருத்தம் என்ன இருக்கும்?’ என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.

‘இன்றைய சமுதாயம் குட்டிச் சுவராக இடிபட்டு நிற்பதற்கு முக்கிய காரணமே இந்தக் கிழத்தைப் போல, எதையும் முன்னிருந்து செய்ய தான கவே வந்து விடுகிற பெரிய மனிதர்கள் தான்’ என்று ஒரு இளம் உள்ளம் குமுறியது. விருந்தினரில் ஒருவன் அவன். ஆனால், ஒன்றிரு இளைஞர்கள் புகைந்து குமுறுவதனால் மட்டும் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது!

பச்சைக்கிளி போலே, பூங்கொடி போல, நெளிகின்ற மின்னல் மாதிரி இருந்த சிவகாமி அருகிலே அமர்ந்திருந்த உருவம் அந்த இடத்துக்குப் பொருத்த மில்லாதது. இளந்தொந்தியும், தடி மூஞ்சியிலே ஆட்டுக் கொம்பு மீசையும் – காணவே சகிக்கவில்லை! பணபலத்தைக் கொண்டு மலர்ந்து சோபித்து காலத்தென்றலின் இன்ப ஸ்பரிசத்துக்காகக் காத்திருந்த அழகு மலரை, கொள்ளையடித்து விட்ட தோரம் அது. ‘அதற்கு’ வயது நாற்பது. சிவகாமிக்கு வயது பதினேழு. அவனுக்கு அவள் மூன்றாம் தாரம்.

‘தாவாத் சிறுமான் சிவகாமிக்கு கிழடு தட்டிய கணவனைப் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும்?’

பணத்தோடு பணம் சேர்ந்தது என்று சம்பந்தம் செய்த பெருமையில் திளைத்திருந்தார் தந்தை, ஆனால் மகளுக்குத் தான் மனநிறைவு இல்லை!

பண்ணையாரின் மனைவியாகி விட்ட சிவகாமிக்கு ககைகள் கிடைத்தன. பட்டுச் சேலைகள் கிடைத்தன ராஜ மரியாதை, சுக வாழ்வு எல்லாம் இருந்தன.

ஆனால், உள்ளத்தில் திருப்தி இல்லை.

என்ன ஆடம்பர சாதனங்கள் கிடைத்துத்தான் என்ன செய்ய உண்மையான இன்பம் – அவள் கனவு கண்ட வாழ்வின் பலன், மண வாழ்வின் திருப்தி மன மார்ச்சி – இட்ட வழியில்லை.

எப்படிக் கிட்டும்? இன்றைய சமூக திருப்திப்படி பெரியவர்களால் வியாபார ரீதியிலே நடத்தி வைக்கப் படுகிற எந்தக் கல்யாணத்திலேதான் பெண்ணுக்கு இன்பம் கிடைக்க வழியிருக்கிறது. ஆணுக்குத்தான் இன்பமும் அமைதியும் கிட்டி விடுகிறதா என்ன!

அதைப் பற்றி அவளுக்குத் தெரியாது. அவள் பெண். எல்லாப் பெண்களையும் போல, தன்னைப் பற்றியே தான் அவள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

கவலைப்பட்ட அவள் மனக் கொடி ஆடியது. நடுங்கியது. பற்றுக்கோடாக எதையாவது பிடித்துக் கொள்ளத் துடித்தது. சந்தர்ப்பக் காற்றும் சதி செய்தது.

ஒருகாள் சிவகாமி பம்பினடியிலே குளித்து விட்டு சேலை மாற்றி உடுத்தும் போது அவள் மேனி சுடர் விளக்கனைய ஒளி காட்டியது.

இன்றையப் பெண்களுக்கே உடல் வெளிச்சம் போடாமல் சேலை மாற்றிக் கட்டத் தெரியாது. அங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற் கென்றே சல்லாத்துணிப் புடவை கட்டுகிறார்கள். அவை நனைந்து விட்டாலோ, உடலொடு அப்பிக் கொண்டு கலையெழிற் காட்சியாகத் தானிருக்கும். ரசிகக் கண்களுக்கு விருந்து தான்!

அதை அறிந்த – அது போன்ற சமயங்களைப் பயன்படுத்தத் தவறாத – காத்தலிங்கம் அந்த வீட்டிலே கார் டிரைவராக இருந்தான். அவன் அங்கு வந்தது சந்தர்ப்ப வசத்தாலா! சதி நினைவாலா?

எதானால் என்ன! அவள் சட்டென அவன் முன் வந்துவிட்டான். பின் தவறை உணர்ந்தவன் போல விரலைக் கடித்தபடி தலையை தாழ்த்தி நின்றான் தயங்கினான். வெளியேறினான்.

அவள் முகம் சிவந்தது. வெட்கத்தால் சாம்பினாள். செயலற்று நின்றாள்…

மறுமுறையும் சந்தர்ப்பம் சதி செய்தது. சிவகாமி தொழுப் புறத்திலே, உடல் தண்ணீரை வெளியே வடித்துக் கொண்டிருந்தாள். அங்கு – வேண்டுமென்றோ, தெரியாமலோ – காத்தலிங்கம் போய் விட்டான். அவள் டக்’கென்று எழுந்து ‘டபக்’ கென்று சேலையைக் கீழே போடுவதற்குள் இதத் தண்டுகள் போன்ற அவளது பாலிஷ் தொடைகளை அவன் மிகவும் ரசிக்க முடிந்தது…

மீண்டும் சந்தர்ப்பம் துணை புரிந்தது. சிவகாமி வீட்டிலே கட்டில் மீது படுத்துக் கிடந்தாள். அவள் மார்புச் சேலை கீழே துவண்டு கிடந்தது. ரவிக்கை கூட தளர்ந்து கிடந்தது. தனிமை என்ற நினைவுத் திரையில் ஒளிந்து விட்ட துணிவு போலும்!

தற்செயலாகவோ – வேண்டு மென்றோ – அந்தப் பக்கமாக எதையோ எடுக்க வந்தான் காத்தலிங்கம், அம்மா என்றான். அவள் அழகை அள்ளிப்பருகியபடி. அவள் திடுக்கிட்டு எழுந்தாள். எவ்வளவோ ரசிக்க முடிந்தது அவனால். அவன் சிரித்தான், அவள் முகத்தைப் பார்த்தபடி,

அவளும் சிரித்தாள்.

ஆண் தானாகவே துணிவதில்லை. பெண்ணின் ஜாடைமாடையான வசியத் தூண்டுதல்களை ஏற்காமல். பெண் வெளிப்படையாக ஆசையை தூண்டுவதில்லை முதலில், ஆனால் அவளது ஒவ்வொரு செயலும் பார்வையும், அசைவும் இதய ஆழத்திலே மலர்கின்ற எண்ணத்தைப் பூர்த்தி செய்ய அவள் பரப்புகிறவலையேயாகும்.

அவள் பெண். அவளுக்கு வயது பதினேழு தான். திருப்தி தரும் கணவன் இல்லை. ஆகவே, குறுக்கே வந்து விளையாடுகிற ஆணழகைச் சுவைக்கத் தவித்தாள் சிவகாமி என்றால் தவறு உண்டோ?

அவன் என்னவோ சாமான் பற்றி வினவினான். அவள் எழுந்து போய் எடுத்து வந்தாள். போகும் போது தனி எழிலுடன் குலுங்கிய பின்னழகை ரசித்து வியந்த அவன், சிவகாமி திரும்பி வரும்போது தலைகுனிந்து நின்றான். அப்போது அவன் அழகை அவள் ரசித்தாள்.

அவனுக்கு வயது இருபத்தைந்து தானிருக்கும் கறுப்பு நிறம்தான். ஆனால் உழைப்பால் முறுக்கேறிய சதைத் திரட்சிகள் அங்குமிங்கும் துள்ளிய அவன் மேனியிலே தனி மினுமினுப்பு இருந்தது. அந்த உறமேறிய உடல் வனப்பையும் வலிவையும் எந்தப் பெண்ணும் வியந்துதான் ஆக வேண்டும். சிவகாமியும் பெண்தானே!

‘ஏ, இந்தா’ என்றாள் அவள்.

அவன் திடுக்கிட்டான். அவள் புன்னகைத்தாள் கவர்ச்சிக்கும் மோகனமென்னகை அவள் கண்களில் அசாதாரண ஒளி ஓடத்தான் செய்தது.

‘இதைப் பிடியேன். ஏன் முழுச்சுக் கிட்டே நிக்கிறே?” என்றாள் அவள். அவள் குரலிலே ஒரு குழைவு இருந்தது. ஒரு மிடுக்கு – உயர்ந்த ஜாதி என்கிற அந்தஸ்து அகந்தையிலே ஓவிக்கிற கர்வம் – தொனித்தது.

அவன் உள்ளத்திலே தைத்தது அது. இன்றைய சமுதாயத்திலே அவன் சிறுமிகளாலும் சின்னப் பயல்களினாலும் ‘எலே ஏண்டா’ என்று அழைக்கப்பட்டாலும் பொறுமுவது தவிர வேறொன்றும் செய்ய இயலாத நிலையில் தானிருந்தான். அவன் உழைப்பவன். வயிற்றுப்பாட்டுக்காக அடிமை வேலை செய்ய தேர்ந்த தொழிலாளி. அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் உழைப்போனும் மனிதன் – அவனுக்கும் இதயம் உண்டு: சுயமரியாதை உண்டு, தனிமனித கௌரவும் உண்டு, தேவை – என்று எண்ண மறந்துவிடுறார்கள்.

ஆகவே, பண்ணையார் மனைவி டிரைவரை – அவன் ஆண். அவனுக்கு வயது இருபத்தைந்து. அவளை விட மூத்தவன் என்றாலும் கூட – எப்படிக் கூப்பிட்டாலும், அலட்சியமாக மதித்தாலும் யாரும் குறை கூற முடியாது. அதில் அவளுக்கு ஒரு இன்பம் கூட இருந்தது.

‘இந்தா, இதை வாங்கிக்கோ’ என்றாள், மீண்டும் நீட்டினான். ஏந்திய கைகளில் போட்டாளில்லை. ‘போடுங்க’ அல்லது ‘கொடுங்கள்’ என்ற வார்த்தையை உதிர்க்கும் அவன் வாய் என எதிர்பார்த்தாள். ஏமாந்தாள்.

அவன் மௌனமாகத்தான் நின்றான், கைகளை நீட்டியபடி. அதிலே வைத்தாள் தனது கைகள் அவன் கைகளில் படும்படி கவனத்துடன் வசியச் சிரிப்பும் காந்தப் பார்வையும் சிந்தினாள், அவனை இழுக்க எறிந்த தூண்டில் மாதிரி.

அகனால் அவன், அந்தஸ்தில் மேலான அவளை உணர்ச்சிகளில் கீழாக்கியே தீர்த்துப் பழிவாங்கிவிடுவது என்று முடிவு கட்டி விட்டான்.

அவனுக்கு வெற்றிதான், அவளே இணங்கி வளைந்து வரும் போது அவனுக்கு சிரமமான காரியமா என்ன!

கிழட்டுக் கணவனால் மனோதிருப்தி பெறாத குமரி – கணவனை விரும்பாத இளம் மனைவி – சதை இன்பம் பெற முறுக்குத் தளராத வாலிபனை நாடினால் தவறு இல்லை, அது இயல்பு, ஆனால் சமூகம் பொறுக்காது. ஆகவே, விஷயம் மர்மமாகவே வளர்ந்தது. அவளுக்குக் கல்யாணமான மூன்றாவது மாதத்திலேயே ஆரம்பமாகி விட்டது மதனவிழா அரங்கேற்றம்!.

கல்யாணம் என்பது ஒருவகையில் பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்து விடுகிற லைசென்ஸ் என்றே சொல்லாம். வயிற்றிலே பாரம் வந்து விடும் என்று கன்னி கலங்க வேண்டியிருக்கும். மணமான மங்கை கவலைப்பட வேண்டாமல்லவா. கணவன் பெயர் ஒரு பாஸ்போர்ட் அவளுக்கு!

கனவனுக்கென்ன!

பண்ணையார் இஷ்டம் போல் அலைய சகல வசதிகளும் இருந்தன. குடிப்பார். கூத்தடிப்பார் தேவடியாள்களுடன், பண்ணையாருக்கு மனைவியில்லை, வீட்டுக்கு லக்ஷ்மியாக எஜமானியில்லை என்றால் சமூகத்தின் கண்களிலே அது ஒரு குறை. அதை தவிர்க்க அவரிடம் பணம் இருந்தது. சிவகாமி வந்து சேர்ந்தாள், குலவிளக்காக. அப்புறம் சமூகம் குருடுதானே குல விளக்கு காண்டு போவதை அது ஏன் கவனிக்கப் போகிறது! பண்ணையார் கண்டபடி அலைவதை அது ஏன் தடுக்க வேண்டும். அவர் ஊருக்குப் பெரியதனக்காரர். அவர் இஷ்டம் போல் செய்யலாம்.

கல்யாணம் செய்து கொண்ட புதிதில் பண்ணை யாருக்கு அந்தக் கனி இனித்தது. இல்லை, இனிப்பது போலிருந்தது. பிறகு, நாளாக ஆக சிவகாமி பழுக்காத கனி. பிஞ்சிலேயே வெம்பிப் போனது என எண்ணிவிட்டார் அவர், அவருக்கு விருந்தளிக்க அனுபவஸ்தர்களுக்குக் குறைவா! அனுபவ முற்ற அடுத்த வீட்டு அலமேலு, தாசி குஞ்சரம், சின்னத்தாயி, வண்டிக்காரன் மனைவி கறுப்பாயி முதலியவர்கள் ‘சரியான உருப்படிகள்’ என்று பட்டது அவருக்கு, எப்பவுயே உணர்ந்தது தானே! அவர்களை விலைக்கு வாங்கப் பணமும் பெரிய மனுஷப் பட்டமும் இருந்தன, அவருக்கு தெம்பு தர சீமைக் சாராயம் பாட்டில் பாட்டிலாக இருந்தன். அப்புறமென்ன!

பாவம், சிவகாமி!…

ஆனால், ‘ஐயோ பாவம்’ என்று இரங்க வேண்டிய நிலையிலா இருந்தாள் அவள். மணமான புதி தில் வதங்கிய மலர் மீண்டும் புதுச் சோபை பெற்றது. தணியாத அரிப்பு பெற்று ஏங்கிய சிவகாமிக்குக் கிடையாமல் கிடைத்த பாக்கியம் காத்தலிங்கம். அதனால், இன்பம் ஊற்றாகப் பொங்கிப் பிரவகித்து அவளையே ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது.

சமுதாயத்திலே விபசாரம் இல்லாத ஒரு சிலரது’ வயிற்றுப் பசியை தணிப்பதற்காக அவர்கள் செய்கிற உடல் வியாபாரம் என்று சொல்லப்படுகிறது. தரித்திரத்தினால் சதை காட்டிப் பிழைக்க நேர்ந்துள்ள தொழிற்காரி பலருக்குப் பொருந்தலாம் இந்தப் பேச்சு. ஆனால் தொழில் செய்யும் யுவதிகளாக மாறியவர்களில் பணத்துக்காக உடல் விற்பவர்கள் போக ‘சும்மா, ஜாலிக்காக, ரொமான்ஸ், அட்வென்ச்சர் என்பவைகளுக்காக’ விளம்பரச்சரக்குகளாகும் தளுக்குக்காரிகளும் உண்டு. தொழிலாகப் பயிலப்பெறுகிற இந்த வர்க்கத்தினால் மட்டும் தான் விபசாரம் வளர்கிறதா? கட்டிய கணவனும் குடும்பமும் சொத்தும் இருக்கிற ‘பூர்ஷ்வா ‘ இனத்திலே அழகி அம்புஜா அடுத்த வீட்டு அழகனுடன் கொஞ்சுவதன் காரணம் இல்லாத குறையினாலா?. பணம் பெற்றவர்கள் மிருக வெறியுடன் பலப்பல கன்னியரை சுகிக்க விரும்பி விபசாரத் திறப்பு விழா செய்து அதை வளரவிடுவது தரித்திரத்தினாலா? சதை வெறி பற்றியலையும் கணவனால் இன்பம் பெறாத இளம் மனைவி சதைப்பசி தணிக்க வீட்டு வேலைக்காரர்களைக் காதலர்களாக்குகிற காம நாடகம் பணக்காரவீடுகளிலே நடைபெறுவது எதன் பிசகு உணர்ச்சிகள் ஆட்டிவைக்கிற விளையாட்டு அல்லவா

உணர்ச்சியின் கைப்பாவையானான் சிவகாமி செல்லம் சுகவாழ்வு எல்லாவற்றுடன் – மனதுக் குப் பிடிக்காத கணவனிருந்தாலும் – மனதுக்குகந்த ஆசை நாயகன். வாழ்க்கை சொர்க்க போகம் தான்.

ஆனால், உண்மை வெளியாகாது போகுமா? ஒரு நாள் பட்டப் பகலிலே மத்தியானம் மூன்று மணிக்கு கட்டிலேறி சிவகாமியும் காத்தலிங்கமும் நடத்திக் கொண்டிருந்த காமநாடகத்தைக் கண்ணாரக் கண்டு விட்டார் பண்ணையார் அவர் அயலூரிலிருந்து இரவு பத்து மணி ரயிலுக்குத் தான் வருவார் என நம்பினார்கள் அவர்கள். ஆனால் பாழாய்ப் போகிற இரண்டு மணி வண்டி அவரைக் கொண்டு வந்து தள்ளிவிட்டதே!

பலன் என்ன?

அவரிடம் பணம் இருந்தது. பணமில்லாத காத்தலிங்கம் அவர் வீட்டிலே திருடிவிட்டான் என்று குற்றம் சுமத்தப்பட்டு நாலு வருஷக் கடுங் காவல் தண்டனையில் ஜெயிலுக்குப் போனான். அவனால் திருடப்பட்டது பணமல்ல. பணமும் நகையும் என்று தான் சொன்னார் பண்ணையார். ஆனால் திருடப்பட்டது. பண்ணையார் மனைவியின் ‘கற்பு’ என்கிற கணவனின் அனுபவ பாத்தியதை. பண்ணையாரின் மானம்.

அவளை அவர் கொன்றிருப்பார். ஆனால், துணிவில்லை. சவுக்கெடுத்து அடித்தார். அடி அடி என்று அடித்தார். சேலை அவிழ்ந்து விழும்படியாக அடித்தார். அவள் மேனியெங்கும் தடுப்பு தடுப்பாக கன்னிப் போவதைக் கண்டு சிரித்தார், பெண் முன்னால் பேசத்தகாது என்று சமுதாய தர்மம் சொல்கிற கேவலமான – மிருகத்தனமான வார்த்தைகளை யெல்லாம் பெண்ணிடமே சொல்லி ஏசிச் சிரித்தார் . அவளிடம் அவர் சொல்லலாம்! அவர் மனைவி அவள். மனைவி என்றால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அவளிடம் என்ன வேண்டுமானாலும் கூறலாம் என்று லைசென்ஸ் கொடுத்துள்ள சமுதாய ஜந்துக்களில் ஒருவரான கணவன் தானே பண்ணையாரும்!

கணவனை முன்பே விரும்பாத குமரி இப்பொழுது விரும்ப முடியுமா? அந்த வீட்டை விட்டு வெளியேறி தந்தையிடம் அடைக்கலமானாள்.

‘அவள் ஓடிப்போய்விட்டாள்’ என்று கதை எங்கும் பரவியது. வாழாவெட்டி என்று சமூகத்துப் பெரியார்கள் ஏசினார்கள். அவள் வாழ்வை பாழ்படுத்தி இன்பத்தை வெட்டி அவளை உருப்படாதவளாக மாற்றியது தாங்கள் தான் என்பதை உணரமுடியாத உத்தமர்கள் அவர்கள். பிறர் வம்பு பேசுவதே அவர்களுக்கு இன்பம்.

ஓடிவந்த மகளை ஏசிப்பேசி புருஷன் வீட்டிலே திரும்பச் சேர்க்காத தந்தை அவளை பயன்படுத்திக் கொள்கிறார் என்ற வதந்தி பரப்பப்பட்டது.

தந்தை – மனைவி யிழந்து, வயதேறிப் போனவர் – காதல் செயப் பெண்தேடி அலைபவர் தான் தனது இன்பத்துக்காக பக்கத்து வீட்டில் உள்ள ‘தாலியறுத்தவளை’ பதப்படுத்துவதும், திண்ணையில் ஒண்டுகிறவளை திண்டிலே சாய்ப்பதும் மகளுக்குத் தெரியாமல் போகுமா?

அவள் பெண். அவளுக்கும் இன்பப்பசி உண்டு. அவள் வாலிபத்தின் வளமையிலே மினு மினுத்த பாவை, வயது பதினெட்டு தானே ஆகிறது. அவளுக்கு ‘பசி’ அதிகம் உண்டாவது இயல்பு.

அவள் அழகி. பருவ மலர். கவர்ச்சி இருந்தது. சமூகத்தில் வண்டுகளுக்குக் குறைவா என்ன! அதனால் அந்த மலர் வண்டுகளை இழுத்து இன்பம் அனுபவிக்க சந்தர்ப்பங்கள் நிறையக் கிடைத்தன.

தந்தைக்கு மகள் பெயர் அடிபடுவது பிடிக்கவில்லை. அவரைப் பற்றி கேவலமாகப் பேசப்படுவதும் தெரியும். ஆனால் என்ன செய்வது?

‘பெயர் கெட்டதோ கெட்டுப்போச்சு பாபத்தைச் செய்யாமலிருக்கும் போதே என் பெயர் மீது எல்லோரும் பழிசுமத்தியாச்சு. செய்யாமல் வீண்பழி ஏற்பதும் ஒன்றுதான்; பாபம் செய்து விட்டு பழி சுமப்பதும் ஒன்று தான். மேலும், பெயர் எனக்கு இனி வரப் போவதில்லையே! முன்னால் சுமை மனதை உறுத்தியது – வீணாகப் பழி பிறந்துள்ளதே என்று அந்த மனச் சுமையாவது இல்லாமல் தீருமல்லவா இனி!’ என்று துணிந்து விட்டார் ஓரிரவில் .

சந்தர்ப்பம் தான் சதி செய்தது அன்றும். நல்ல நிலவு . நிலவிலே அவள் படுத்திருந்தாள். அசந்து கிடந்தாள். அவளையே ரொம்ப நேரம் கவனித்துக் கொண்டிருந்தார் அவர்.

மெல்லிய வெள்ளைப் பூந்துகில் உடுத்துக்கிடந்த அவளது பின் பாகம் கால்களை மடக்கி ஒருக் களித்துப் படுத்திருந்த அவளது சகன பாகங்களின் காம்பீர்ய வனப்பு – அவரது பார்வையை உறுத்திக் கொண்டிருந்தது…

அவள் திரும்பிப் படுத்தாள். மல்லாந்து கிடந்தாள். மேலாடை இழே நழுவி விழுந்து துவண்டது கால்கள் நீண்டன. அவள் புரண்டதனால் ஆடை விலகி விழுந்தது.

நல்ல நிலா. அவள் அழகி. அவள் பெண். அவள் கன்னத்தின் வாளிப்பிலே, மூக்கின் எடுப்பிலே, முகத்தின் சாயலிலே, அவள் கிடந்த கோலத்திலே சிந்தை தடுமாறிய அவர் தனது மனைவி அன்னம்மாளின் சாயலை உணர்ந்தார். அன்னம்மாளின் மகள் – தனது மகள் – அன்னம்மாளைப் போல் தனது அருமை மனைவியைப் போலவே, காட்சி தந்தாள். அவர் உள்ளம் அன்னத்தை எண்ணியதும் உணர்ச்சி வெறி பசியைத் தூண்டியது. எதிரே கிடந்தாள் பெண், அவள் அற்புத அழகி.

அவள் அவரது மகள் தான், தான் தந்தை – என்றாலும் என்ன! அவர் ஆண், அவள் பெண், உணர்ச்சியின் சந்நிதியிலே ஆண் பெண் என்ற முறை தவிர வேறு உறவுகளுக்கு இடம் கிடையாது…உள்ளம் அரித்தது, உடல் கொதித்தது, உணர்ச்சி குமுறியது. கொந்தளித்தது. பிரவகித்து அலைபாய்ந்தது. உந்தியது. உலுக்கியது. வெறியேற்றியது.

அவரால் தாங்கமுடியவில்லை. அவர் பறந்தார் அவள் மீது, அன்னப்பாளின் அருமை உருவத்தின் பிம்பமாய் திகழ்ந்த சிவகாமியின் கன்னத்திலே, உதடுகளிலே, முகத்திலே முத்தமிட்டுப் பல முத்தமிட்டுப் பல முத்தமிட்டு…

அவள் விழித்தாள், அசந்து தூங்கிக் கிடந்த சிவகாமி விழித்தாள். உணர்ச்சித் தாக்குதலுக்கு உள்ளான போது.

காத்தலிங்க அணைப்பிலே இருப்பதாகக் கனவு கண்டு விழித்த அவளது கண்கள் பண்ணையாரைக் காட்டின ஒரு கணம் – பிரமை!

நன்கு நோக்கினாள்.

‘அப்பா!’ என்றாள் மகள், அதிலே எவ்வளவோ உணர்ச்சி. எவ்வளவோ குற்றச்சாட்டு.

என்றாலும், பிரமாதமான பாபம் இல்லையே! பழக்கமான இன்பம் அவளுக்கு – மற்றுமோர் ஆணின் அணைப்புதானே! அது யாராக இருந்தால் என்ன!

சிவகாமிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. கணவன் மாதிரி கிழடு தட்டிப் போயிருந்த – கணவன் ஸ்தானத்தைப் பிடிக்க விரும்பிய – தந்தையை எப்படிப் பிடிக்கும்?

அவள் பெண். அவளுக்கு வயசு பதினெட்டு போன வருஷம் தான் அவளுக்குக் கல்யாணமாயிற்று. அழகு மலர் அவள். காமச் சுவையின் ரகங்களை ஒருவாறு உணர்ந்தவள் – உணர ஆரம்பித்திருந்தவள்.

கட்டுப்பாடு அவளை உறுத்தியது. ஆண்கள் அவளை தங்கள் உரிமைப் பொருளாக்கி, இஷ்டம் போல் ஆளவதை அவள் விரும்பவில்லை. தன் இஷ்டம்போல் இஷ்டப்பட்டவரை ஆட்டி வைக்க விரும்பினாள் சிவகாமி. பெண்களுக்கு இயல்பான ஆசைகளில் அதுவும் ஒன்று.

ஆகவே, அந்தப் பறவை – ஒரு முறை ஓடிக் கண்ட பறவை – மீண்டும் வெளியேறத் தவித்துக் கொண்டிருந்தது.

சந்தர்ப்பம் துணைபுரிந்தது. அடுத்த வீட்டிலே அமைந்திருந்த ஜவுளிக்கடையில் வேலைபார்த்த வாலிபன் – அவளைப் பிடிக்க வலைவீசிக் கொண்டிருந்தவன் – அவளை தட்டிக்கொண்டு போய்விட்டான். அவனுக்கும் அவளுக்கும் எத்தனை நாள் தொடர்போ! யாருக்கும் தெரியாது.

ஆனால் ஓடிப்போய் விட்டாள்! ஓடிப்போய் விட்டாள் – தட்டுவாணிச்சிறுக்கி’ என்று சமூகத்துப் பெரியார்கள் ஏசினார்கள். அவர்கள் தான் அவள் வாழ்வைப் பாழ்படுத்திய மூலகாரணவர் என்பது அவர்களுக்குத் தெரியாது.

அவள் எங்கு ஓடிப்போனாளோ அந்த விஷயமும் யாருக்கும் தெரியாது.

– சாந்தி நிலைய வெளியீடு, முதல்பதிப்பு:ஏப்ரல் 1947

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *