ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 3,956 
 

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

குப்புசாமி தன் கண்களைத் துடைத்துக் கொண்டே” பாவம் மரகதம்அத்திம்பேர்.அவர் கடை க்கு பக்கத்லே சென்னை,காஞ்சீவரம்,மதுரைலே இருந்து நிறைய பணக்காரா பொ¢ய பொ¢ய கடை எல்லாம் போட்டுண்டு வந்து இருக்கா.அதனால் அவர் துணிக் கடை வியாபாரம் நாளுக்கு நாள் ரொ ம்ப குறைஞ்சுண்டு வந்துண்டு இருந்தது.உடனே அத்திம்பேர் அவா கடை மாதிரி என் கடையும் இரு க்கணும் நினைச்சு,ஆத்து பத்திரத்தே வச்சு பாங்கிலே ஒரு லக்ஷ ரூபாய் கடன் வாங்கிண்டு வந்து, அவர் கடையை ஒரு பதினைஞ்சு நாளைக்கு மூடிட்டு கடை பூராவும் ஏ.ஸி.போட்டு,மிக பிரகாசமான மின் விளக்குகள்,நிறைய முகம் பார்க்கும் கண்னாடிகள் எல்லாம் வச்சு,புதுப்பிச்சு இருக்கார்.கடையை புதுப்பிக்க செலவு ரொம்ப ஜாஸ்தி ஆயிடுத்து.அதனால்லே அத்தும்பேர் மறுபடியும் ‘பாங்கு’க்குப் போய்,இன்னும் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் ‘லோன்’ வாங்கி,நிறைய புது புது ‘பாஷன்’ டிரஸ்களை எல் லாம் வாங்கி வச்சு,ஒரு நல்ல நாளாப் பாத்து ஒரு வாத்தியாரை அழைச்சுண்டு வந்து கடையே மறு படியும் தொறந்து இருக்கார்.அவர் கடையிலே நாலு மாசம் தான் வியாபாரம் நன்னா போச்சாம்….” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.

குப்புசாமி சொன்னத்தைக் கேட்டு மரகதமும் மங்களமும் அதிர்ச்சி அடைதார்கள்.மரகதத்துக்கு அப்புறம் என்ன ஆயிற்று என்று தெரிந்துக் கொள்ள ஆசைப் பட்டு குப்புசாமியைப் பார்த்து’ நீங்க அழுதுண்டு இருக்கேளே.மேலே விஷயத்தே சொல்லுங்கோ” என்று அவசரப் படுத்தினாள்.

“சொல்றேன் மரகதம்” என்று சொல்லி விட்டு குப்புசாமி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “அத்திம்பேர்,அக்கா வைரத் தோடுகளையும், தங்க செயின்களையும் எல்லாம் வித்து கடை செலவை சமாளிச்சு வந்தாராம்.ஆனா கடை நஷ்டத்லே தான் போயிண்டு இருந்ததாம்.அவரால் பாங்கு ‘லோன்’ வட்டியே கட்ட முடியலையாம்.’பாங்கு’ காரா பொறுத்து பொறுத்துப் பாத்துட்டு,வேறே வழி ஒன்னும் இல்லாம அத்திம்பேர் ஆத்தை வித்துட்டு,அவாளுக்கு சேர வேண்டிய் வட்டிப் பணத்தையும் அசலையும் எடுத்துண்டுட்டு,மீதி பணத்தே அவர் கிட்டே குடுத்தாளாம்.உடனே அத்திம்பேர் தன் துணிக் கடையையும்,மீதி துணிகளையும் வித்துட்டு, இப்போ அந்த மொத்த பணத்தே கையிலெ வச்சுண்டு, ஊர் கோடியிலே ஒரு சின்ன ‘ஆம்’வாடகைக்குப் பாத்துண்டு,எங்கும் வேலேலக்குப் போகாம ஆத்லே சும்மா இருந்துண்டு வறார்” என்று சொல்லி விட்டு தன் கண்களை துடைத்துக் கொண்டு இருந்தார்.

உடனே விமலா ”அடப் பாவமே.அப்படி ஆயிடுத்தா.கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கே. இப் போ அவ எல்லாரும் ஊர் கோடியிலே ஒரு சின்ன ஆத்லேயா இருந்துண்டு வறா.இத்தனை வருஷம கடைக்குப் போய் வந்துண்டு இருந்த என் அண்ணா இப்போ ஆத்லே சும்மா இருந்துண்டு வறாரா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் போனதும் குப்புசாமி “மரகதம் அக்கா என்னேப் பாத்து ‘கவலையை விடுடா குப்பு.இந்த ‘எலிமெண்டா¢ ஸ்கூல்லே’ பாடங்களே ரொம்ப நன்னா சொல்லிக் குடுப்பா.ரகுராமன் நிச்சியமா இந்த வருஷம் எட்டாவது ‘பாஸ்’ பண்ணிடுவான்.அப்புறமா நீ அவனை மங்களம் படிச்ச ‘ஹை ஸ்கூல்லே’ சேத்து பத்தாவது வரை படிக்க வச்சு வரலாம்’ன்னு சொன்னா”என்று சந்தோஷமாக சொன்னார்.

உடனே மரகதம் “அப்பாடா,மன்னி சொன்னதை கேட்டதும் எனக்கு இப்போ மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.அந்த பள்ளிக் கூடத்லே பாடங்களே நன்னா சொல்லிக் குடுத்தா,நம்ப ரகுராமன் நிச்சியமா இந்த வருஷம் எட்டாவது ‘பாஸ்’ பண்ணிடுவான்னு எனக்கு தோன்றது.உங்களுக்கு என்ன தோன்றது.நீங்கோ ஒன்னும் சொல்லாம இருக்கேளே” என்று கேட்டு விட்டு ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டாள்.

உடனே குப்புசாமியும்” ஆமாம்,மரகதம் எனக்கும் அக்கா சொன்ன போதே அப்படித் தான் தோனித்து.பாடங்களே நன்னா சொல்லிக் குடுத்தா ‘பாஸ்’ பண்றது ரொம்ப சுலபமா இருக்கும்” என்று சொல்லி விட்டு அங்கு இருந்த சேரில் உட்கார்ந்துக் கொண்டார்.

அந்த ‘எலிமென்டா¢ ‘ஹை ஸ்கூல்’ திறந்தவுடன்,ரகுராமன் அந்த பள்ளிகூடத்தில் சேர்ந்து படித்து வந்தான்.வீட்டிலும் மங்களம் ரகுராமனுக்கு எல்லா பாடங்களிலும் அவன் கேட்ட சந்தேகங்க ளை சொல்லிக் கொடுத்து வந்தாள்.

அந்த வருஷ வருடாந்திர பரி¨க்ஷகளை எல்லாம் ரகுராமன் ரொம்ப சுமாராகத் தான் எழுதி இருந்தான்.ஆனால் அப்பா அம்மா கேட்டதற்கு “நான் எல்லா பரி¨க்ஷகளையும் ரொம்ப நன்னா எழு தி இருக்கேன்” என்று பொய்யை சொன்னான்.

சொன்ன “பொய்” எத்தனை நாளைக்கு நீடிக்கும்!

ரகுராமன் அந்த வருஷம் எட்டாவதில் ‘பெயிலாகி’ இருந்தான்.

குப்புசாமியும் மரகதமும் அவனைப் பார்த்து “ஏண்டா ரகுராமா,’நான் எல்லா பரிக்ஷகளையும் ரொம்ப நன்னா எழுதி இருக்கேன்’ ன்னு ஏண்டா பொய்யே சொன்னே”என்று கேட்டு அவனைத் திட்டினார்கள்.

ரகுராமன் “நீங்க ரெண்டு பேரும் என்னை கோவிச்சுக்கப் போறேள்ன்னு பயந்துண்டு தான் நான் அந்தப் பொய்யே சொன்னேன்.நான் பண்ணது ரொம்ப தப்பு தான்.என்னை நீங்க ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்கோ.என்னை மறுபடியும் எட்டாவதிலே சேர்த்து விடுங்கோ.நான் எப்படியாவது கஷ்டப் பட்டு படிச்சு வந்து,இந்த முறை நிச்சியமா ‘பாஸ்’ பண்றேன்” என்று அழுதுக் கொண்டே சொன்னான்.

உடனே மரகதம் “சா¢ போனது போகட்டும் ரகுராமா.நான் அப்பா கிட்டே சொல்லி உன்னே மறு படியும் பணம் கட்டி எட்டாவது சேக்கச் சொல்றேன்.நீ கஷ்டப் பட்டு நன்னா படிச்சு வந்து இந்த முறே ‘பாஸ்’ பண்ணிடு என்ன” என்று சொல்லி அவன் அழுவதை நிறுத்தச் சொல்லி விட்டு கணவனைப் பார்த்து “நீங்கோ,மறுபடியும் பணம் கட்டி ரகுராமனை எட்டாவதிலே சேருங்கோ.அவன் கஷ்டப் பட்டு படிச்சு வந்து இந்த வருஷம் நிச்சியமா “பாஸ்” பண்ணிடுவான்” என்று சொன்னாள்.

”சா¢.மரகதம்,நீ சொன்னா மாதிரியே நான் மறுபடியும் ரகுராமனை பணம் கட்டி அந்த பள்ளி கூடத்லே படிக்க வக்கிறேன்.அவன் எட்டாவதாது ‘பாஸ்’ பண்ணா கூட எனக்குப் போறும்” என்று சொன்னார்.

குப்புசாமி மறுபடியும் பணம் கட்டி ரகுராமனை அந்த ‘எலிமெண்டா¢ பள்ளிக் கூடத்லே சேர்த்து விட்டு வந்தார்.

ரகு¡ரமனும் இரவும் பகலும் கஷ்டப் பட்டு தன் பாடங்களை எல்லாம் படித்து வந்தான்.

மங்களம் மட்டும் தன் மனதில் ‘ரெண்டு வருஷமா நானும் ரகுராமனுக்கு எல்லா பாடங்களையும் சொல்லிக் குடுத்து வந்தேன்.பள்ளிக் கூடத்திலே வேறே சொல்லிக் குடுத்து வந்து இருக்கா.ஆனா இந்த ரகுராமன் மட்டும் பாஸ்’ஆகாம,பெயிலாகி வந்துண்டு இருக்கானே.என்ன காரணமா இருக்கும்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.
அந்த வருஷ கடைசியிலே நடந்த வருடாந்திர பரி¨க்ஷகளை ரகுராமன் எழுதி விட்டு,வீட்டுக்கு வந்து தன் அம்மா,அப்பா,அக்காவிடம் “நான் எல்லா பரி¨க்ஷகளை ரொம்ப சுமாராத் தான் எழுதி இருக்கேன்.எனக்கு என்னவோ நான் கணக்கிலே ‘பாஸ்’ பண்ணுவேன்னு தோணலே.என்னை நீங்க மன்னிசிடுங்கோ” என்று சொல்லி அழுதுக் கொண்டு இருந்தான்.

உடனே மரகதம் “அட அசடே.இப்ப ஏண்டா அழறே ரகுராமா.’ரிசல்ட்’ வரட்டுமே.ஒரு வேளே நீ ‘பாஸ்’ பண்ணாலும் பண்ணீ இருப்பே.நீங்க ரெண்டு பேரும் சித்தே சொல்லுங்களேன்.சும்மா இருக்கேளே.பாவம் ரகுரமான் அழறதே என்னால் பாத்துண்டு இருக்க சும்மாவே இருக்க முடியலே” என்று சொல்லி ரகுராமனுக்கு ஆறுதல் சொன்னாள்.

ரெண்டு மாசம் ஓடி விட்டது.

ரகுராமன் படித்து வந்த பள்ளி கூடத்திலே ‘ரிஸல்ட்’ போடுகிற தினத்தன்று குப்புசாமி ரகுரா மனை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்குப் போய். பள்ளி கூடத்திலே போட்டு இருந்த ‘ரிசல்ட்டை’ப் பார்த்தார்.

ரகுராமன் ‘பெயிலாகி’ இருந்தான்.

‘ரகுராமன் மூனு தடவையும் எட்டாவது சேந்து படிச்சும் அவன் ‘பாஸ்’ பண்ணலே’ என்கிற சமாசாரம் நம்ப அக்கா அத்திம்பேருக்குத் தெரிய வேண்டாமே.அவன் ‘பாஸ்’ பண்ணி இருந்தா வேணு ¡னா அவா கிட்டே பெருமையா சொல்லிண்டு இருக்கலாம்.’பெயிலா’ன சமாசாரத்தை சொல்லி,அவா ளையும் வீணா கஷ்டப் படுத்த வேணாமே.நம்ம அவமானம் நம்மோடு போகட்டும். பிறத்தியாருக்கு தெரிஞ்சு என்ன லாபம்.அவா வந்து ரகுராமனைப் ‘பாஸ்’ பண்ணி வக்கப் போறாளா என்ன’ என்று குப்புசாமி நினைத்து,அக்கா அத்திம்பேர் வீட்டுக்குப் போகாமல் ‘பஸ்’ ‘ஸ்டாண்டுக்கு’ வந்து அடுத்த ‘பஸ்’ஸைப் பிடித்துக் கொண்டு தன் கிராமத்திற்கு வந்து சேர்த்தார்.
வாசலிலியே காத்துக் கொண்டு இருந்தார்கள் மரகதமும் மங்களமும்.அவர்களிடம் ஒன்னும் சொல்லாமல் குப்புசாமி வீட்டிற்கு உள்ளே போய் அவர் வழக்கமாக உட்காரும் சேரில் உட்கார்ந்துக் கொண்டு தன் கண்களை மூடிக் கொண்டு பகவானை தியானம் பண்ணிக் கொண்டு இருந்தார்.

ரகுராமன் “நான் இந்த வருஷமும் பெயிலாகி இருக்கேன்” என்று அழுதுக் கொண்டே சொன் னான்.மரகதத்துக்கும் மங்களத்துக்கும் ரகுராமன் சொன்னது ஒரு ‘ஷாக்காக’ இருந்தது.

’இந்தப் பையன் இந்த வருஷமும் எட்டாவது “பாஸ்” பண்ணலையே.பாவம் நாம சொன்னோம் ன்னு அவர் மறுபடியும் பணம் கட்டி ரகுராமனை அந்தப் பள்ளிக் கூடத்லே சேத்தாரே’ என்று நினை த்து மரகதம் மிகவும் வருத்தப் பட்டாள்.

மங்களம் ‘தன் தம்பி இந்த வருஷமும் எட்டாவது ‘பாஸ்’ பண்ணலையே. அம்மாவும் அப்பாவும் அவன் எப்படியாவது படிச்சு ஒரு எட்டாவதாவது ‘பாஸ்’ பண்ணனும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டாளே. அவா ஆசையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டானே இந்த ரகுராமன்.நன்னா படிச்சு வந்து இந்த எட்டாவதை எப்படியாவது ‘பாஸ்’ பண்ணி இருக்கக் கூடாதோ’ என்று தன் மனதில் சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டாள்.

ஒரு மாசம் ஓடி விட்டது.

ரகுராமன் ஒன்றும் செய்யாமல் தினமும் அம்மா போடும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு,வீட்டில் ஒரு ஓரத்தில் சும்மா உட்கார்ந்துக் கொண்டு வந்தான்.

அன்று பகல் சாப்பாடு சாப்பிட்டு விட்டு குப்புசாமி அவர் வழக்கமாக உட்காரும் சேரில் உட்கார் ந்துக் கொண்டு இருந்தார்.அவர் தன் மணைவி மரகதத்தையும் மங்களத்தையும், ரகுராமனையும் தன் அருகில் அழைத்தார்.

“நான் நன்னா யோஜனைப் பண்ணிட்டேன்.ரகுராமனுக்கு படிப்பு சுத்தமா ஏறலே.இல்லாட்டா மூனு வருஷமா ஒரே ‘க்லாஸ்லே’ எல்லா வாத்தியார்களும் அந்த பாடங்களை சொல்லிக் குடுத்தும், போறாததுக்கு மங்களம் அவனுக்குக் சொல்லிக் குடுத்தும்,அவனால் எட்டாவது ‘பாஸ்’ பண்ண முடிய லே.அவனுக்கு இந்த ஜென்மத்லே அந்த ‘சரஸ்வதி கடாக்ஷம்’ இல்லே.அவ ‘கடாக்ஷம்’ இருந்தா தான் படிப்பு மண்டையிலே ஏறும்.அதே மங்களம் அவ ஒரு ‘க்ளாஸ்’லே கூட ‘பெயிலா’காம எல்லா ‘களாஸ் லேயும்’ ‘பாஸ்’ பண்ணீண்டு வந்து இருக்கா.ரகுராமனுக்கு இந்த புரட்டாசி மாசம் வந்தா,பேருக்கு பதி னாலாவது வயசு முடிஞ்சி,பதினைஞ்சாவது வயசு ஆரம்பிக்கப் போறது” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேரம் சும்மா இருந்தார்.

மரகதமும் மங்களமும் ‘அவர் மேலே என்ன சொல்லப் போகிறார்’ என்று அவர் வாயையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

குப்புசாமி தொடர்ந்தார் “என்ன பண்றது.எல்லாம் நம்ம தலை எழுத்து.போன ஜென்மத்திலே நம்ம ரெண்டு பேரும் என்ன,என்ன,பாவங்கள் பண்ணோமோ,அதுக்கு உண்டான பலன் தானே இந்த ஜென்மத்திலே அனுபவிச்சுத் தானே ஆகணும்.பூஜைகள் பண்ணி,விரதங்கள் இருந்து வந்து, ராமேஸ் வரம் போய் குளிச்சிட்டு,அந்த சுவாமியே வேண்டிண்டு வந்து நமக்கு ரகுராமன் ரொம்ப வருஷம் கழிச் சு நமக்குப் பொறந்தான்.அவனை மூனு தடவை எட்டாம் ‘கிளாஸ்’லே சேத்தும் அவன் அந்த எட்டாம் ‘கிளாஸை’ ‘பாஸ்’ பண்ணலே’.இனிமே நம்ம மூனு பேரும் அந்த பையனை நம்மோடு ஆத்லே வச்சு ண்டு தானே வாழ்ந்து வரணும்.எந்தப் பள்ளி கூடத்திலேயும் அவனை இனிமே மறுபடியும் எட்டாவது சேத்துக்கவும் மாட்டா” என்று சொல்லும் போது அவரை அறியாமலே அவர் கண்களில் கண்ணீர் வந் தது.தன் தோள் மேலே போட்டுக் கொண்டு இருந்த துண்டினால் துடைத்துக் கொண்டார் குப்புசாமி.

தன் கணவர் கண்களில் கண்ணீர் வந்து அதை அவர் துடைத்துக் கொண்டதைப் பார்த்த மரக தம் மிகவும் கவலைப் பட்டாள்.மங்களமும் அப்பா ரகுராமனை நினைச்சு அழுவதைப் பார்த்து வருதப்பட்டாள்.

கொஞ்ச நேரம் அனதும் மறுபடியும் குப்புசாமி பேச்சை ஆரம்பித்தார்.

”நாம பிராமணாளா பொறந்துட்டோம்.ரகுராமனுக்கு படிப்பு சுத்தமா ஏறவே இல்லே.அவனை ‘நீ மேலே படி,மேலே படி’ன்னு சொல்றதிலே எந்த பிரயோஜனமும் இல்லே.அவன் ஏதாவது ஒரு வேலை யே கத்துண்டு வறது தான் ‘சிலாக்கியம்’ன்னு எனக்குத் தோன்றது.அவன் ஒரு வேத பாடசாலையிலே சேந்து,வேதம் படிச்சு இருந்தான்னா,அவனை ஒரு வாத்தியார் வேலைக்கு சேத்து,திருவண்னாலைக் கு அனுப்பி ஒரு பத்து ஆத்துக்கு ‘உபாத்யாயம்’ பண்ணி வரச் சொல்லலாம்.இந்த வயசிலே அவனை ஒரு வேத பாட சாலைக்கும் அனுப்பவும் முடியாது.அவன் ஒரு ‘எலக்ட்ரிஷியனாவோ,தச்சனாகவோ, மோட்டார் மெக்கானிக்கவோ வேலை எல்லாம் செஞ்சு வர முடியாது.அவனுக்குத் தான் கணக்கும் இங்கிலிஷூம் சா¢யா வரலையே.எல்லா படிப்புக்கும் கணக்கும் இங்கிலிஷூம் ரொம்ப முக்கியம் ஆச்சே” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேரம் சும்மா இருந்தார்.
“அதனால்லே நான் என்ன சொல்றேன்னா,நம்ப ஆத்துக்கு அடிக்கடி வறா பாலு மாமா என் ஆப்த நண்பன்.இந்த தடவை அவன் நம்ம ஆத்துக்கு வந்தா,நான் அவனைப் பாத்து ‘பாலு,நீ என் பையன் ரகுராமனை உன்னோடு சேத்துண்டு அவனுக்கு இந்த சமையல் வேலை எல்லாம் கொஞ்சம் சொல்லிக் குடுக்க முடியுமா.ஒரு ஐஞ்சோ ஆறு வருஷமோ ஆனா அவன் ஒரு நல்ல சமையல் காரனா ஆயிவிடுவான்” என்று குப்புசாமி சொல்லி முடிக்கவில்லை மரகதம் “என்ன சொல்றேள் நீங்கோ.உங்க ளுக்கு பயித்தியமா பிடிச்சு இருக்கு.நான் என் அருமந்த பையனை ஒரு சமையல் காரன் வேலைக்கு அனுப்ப,உங்களுக்கு அனுமதி நிச்சியமா ஒரு நாளும் தரவே மாட்டேன்.என் பிள்ளையே ஒரு சமை யல் காரனா ஆக்க எப்படி உங்களுக்கு புத்தி போச்சு” என்று அடித் தொடையில் கத்தினாள்.

மங்களமும் “ஆமாம்ப்பா.அம்மா சொல்றது ரொம்ப சா¢.எனக்குக் கூட ரகுராமன் ஒரு சமையல் வேலைக்குப் போய், ஒரு சமையல் காரனா ஆகி வருவது சா¢ன்னு படவே இல்லே.நாம வேறே ஏதாவது யோஜனைப் பண்ணலாமே” என்று சொன்னாள்.’ரெண்டு பேரும் தான் சொன்னதுக்கு ஒத்துக் கொள் ளாம மறுப்பு’ சொன்னதைக் கேட்டு குப்புசாமிக்கு கோவம் வந்தது.

அவர் ரெண்டு நிமிஷம் ஒன்னும் பேசாமல் இருந்தார்.

இன்னும் கோவம் தணியாமல் அவர் தன் மணைவியையும் மகளையும் பார்த்து ”நீங்க ரெண்டு பேரும் என்ன பேசறேள்ன்னு தெரிஞ்சு தான் பேசறேளா.இல்லை நான் சொன்னது பிடிக்காம பேசறே ளா.ரகுராமன் படிச்சு இருக்கிற படிப்புக்கு அவனை நான் ஒரு ‘எலிமெண்டா¢’ பள்ளி கூடத்து வாத்தி யார் வேலைக்குக் கூட எடுத்துக்க மாட்டா.மத்த கஷ்டமான ‘டெக்னிக்கல்’ வேலை எல்லாம் பண்ணி வர அவன் அந்த ‘கோர்ஸிலே’ சேந்து படிக்கணும்.அதுக்கு அவன் குறைஞ்ச பக்ஷம் ஒரு எட்டாவதா வது ‘பாஸ்’ பண்ணி இருக்கணும்.அவன் தான் எட்டாவதே ‘பாஸ்’ பண்ணலையே.நான் சொன்னதே தவிர எனக்கு வேறே ஒரு வழியும் தெரியலே.அம்மா,பொண்ணு ரெண்டு பேரும் யோஜனைப் பண்ணி ‘இதை பண்ணுங்கோ,அதை பண்ணுங்கோ’ ன்னு எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன்.நான் நிச்சியமா பண்றேன்.நான் சொன்னதை தவிர எனக்கு வேறே வழி ஒன்னும் தெரியலே” என்று சொல்லி விட்டு மணைவியையும்,மகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தார்.

இருவரும் ஒரு அரை மணி நேரம் யோஜனைப் பண்ணினார்கள்.

இருவருக்கும் ‘என்ன வழி சொல்றது’ என்று தெரியாமல் விழித்தார்கள்.வேறே வழி ஒன்றும் தெரியாமல் போகவே இருவரும் குப்புசாமி சொன்ன ஒரு வழி தான் பண்ண முடியும் என்கிற முடிவு க்கு வந்தார்கள்.இருவரும் வருத்தப் பட்டார்கள்.

அரை மணி நேரம் கழித்து மரகதம்”நீங்க சொல்ற ஒரு வழி தான் பண்ண முடியும்ன்னு எனக்கு ம் சா¢ன்னு தோன்றது.என்ன பண்றது.வேறே ஒரு வழியும் தெரியலையே” என்று தன் கண்களில் வழி ந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.மங்களம் ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தாள்.ஆனால் அவள் மனம் மட்டும் ‘என் அருமந்த தம்பி ஒரு சமையல் கார வேலையே கத்துண்டு, ஒரு சமையல் காரனா வாழ்ந்துண்டு வரணும்’ என்று நினைத்து மிகவும் வேதனைப் பட்டது.

அம்மா,அப்பா, அக்கா மூனு பேரும் மாறி மாறி பேசி வந்ததை வெறுமனே ரகுராமன் கவனி த்துக் கொண்டு இருந்தான்.’நாம ஒரு சமையல் காரணா ஆகுணும்ம்னு நம் தலையிலே எழுதி இருந் தா,நாம ஒரு சமையல் காரனா தானே ஆகி வாழ்துண்டு வரணும்’ என்று நினைத்து வருத்தப்பட்டான்.

அவன் கதை தான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே.

’அப்பாவும் நம்மை மூனு தடவை எட்டாவது சேர்த்தா.நாம எட்டாவது ‘பாஸ் பண்ணலே. அதனால்லே அப்பா நம்மை ஒரு சமையல் காரணா ஆகணும்ன்னு விரும்பறா.அவரே சொல்லிக் குத்தம் இல்லே.நாம படிக்க வேண்டிய வயசிலே நன்னா படிக்கலே’ என்று நினைத்தான்.அவன் மனம் வருத்தப் பட்டது.

“எனக்கு மட்டும் ரகுராமன் சமையல் காரனா வேலை செஞ்சி வருவது பிடிச்சு இருக்கா என்ன. ரெண்டு வருஷமா மழையே இல்லே.நான் ஓரு ஏக்கர் புஞ்சை நிலத்தை வித்துட்டு தான்,ஆத்து செல வை கவனிச்சுண்டு வறேன்.இன்னும் மூனு வருஷமோ.நாலு வருஷமோ போனா மங்களத்துக்கு கல் யாணம் பண்ணணுமே.அவ காதுகளுக்கு, மூக்குக்கு போட நகைகளும்,மத்த நகைகளும் எல்லாம் வாங்கணும்.இதை தவிர பையன் ஆத்லே கேக்கற நகைகள் எல்லாம் பண்ணிப் போடணும்.அப்புறமா கல்யாண செலவு இருக்கு.பாக்கலாம்” என்று சொல்லி விட்டு சும்மா இருந்தர்.

கொஞ்ச நேரம் ஆனதும் “எது எது எப்படி போறதோ பகவானுக்குத் தான் தெரியும்.இப்ப ஒன் னும் சொல்ல முடியாது.இப்போதைக்கு பாலு வந்தா அவன் கிட்டே நான் இதைத் தான் கேக்கப் போறேன்.அவனும் நான் சொன்னதே ஒத்துக்கணும்.ரகுராமனுக்கும் சமையல் கார வேலை பண்ணீ வர பிடிச்சி இருக்கணும் இன்னும் எவ்வளவோ இருக்கே” என்று சொல்லி விட்டு தன் துண்டைத் தோளின் மேல் போட்டுக் கொண்டு “நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பி தயாரானார் குப்புசமி.

“நான் திருவண்ணாமலை ‘பஸ் ஸ்டாண்டிலே’ அன்னைக்கு சொன்னப்ப என்னமோ சொல்லி என் வாயை அடைச்சேளே.இப்ப பாருங்கோ.உங்க அப்பா அம்மா அவா சொத்தே பூராவும் உங்களுக் குத் தான்ன்னு எழுதி வச்சு இருநதா,ரகுராமனுக்கு இப்போ பிரயோஜனப் படுமே.இல்லையா சொல்லுங்கோ.என்னமோ ரொம்ப “தார்மீகமா” பண்றதா நினைச்சுண்டு,அவா பண்ணீட்டுப் பரலோகம் போயிட்டா.இப்ப கஷ்டப் பட்டுண்டு வரப் போறது,நீங்களும்,நானும்,ரகுராமனும் தானே” என்று மறு படியும் மாமனார்,மாமியார் எழுதி வைத்து விட்டுப் போன உயிலை பற்றி புலம்பினாள் மரகதம்.

மரகதம் சொன்னதும் குப்புசாமி உடனே ”மரகதம்,நீ சொல்றது ரொம்ப தப்பு.அவாளுக்கு எது சா¢ன்னு பட்டதோ அதே அவா பண்ணீட்டுப் போயிட்டா.நமக்கு இந்த மாதிரி எட்டாம் ‘க்ளாஸ்’ கூட ‘பாஸ்’ பண்ணாத ஒரு அருமந்த ஞான சூன்யமான பிள்ளை பொறப்பான்.அவனுக்கு நம்ம சொத்து உபயோகப்படும்ன்னு தெரிஞ்சு இருந்தா,அவா நிச்சியமா அப்படி ஒரு உயிலே எழுதி வச்சு இருக்க மாட்டா.பரலோகம் போயிட்ட ‘பொ¢யவாளை’இப்போ ஏன் வம்புக்கு இழுக்கறே.அதே இப்போ சொல்லி என்ன பிரயோஜனம் மரகதம்.அந்த விஷயத்தே மறந்து வந்து வாழப் பழகி வா”என்று கொஞ்சம் கோவ மாகச் சொல்லி விட்டு விரக்தியுடன் வெளியே கிளம்பிப் போனார்.

வெளியிலே இருந்து வீட்டுக்கு வந்த குப்புசாமி தன் மணைவி இடம்” மரகதம்,நான் வெளியே போனப்ப நீ கோவமா பேசினதே நான் யோஜனைப் பண்ணிடே போனேன்.அவா அப்படி ‘தார்மீகமா’ பண்ணியும், ஒத்தர், ஒத்தருடைய விதிப் பயன் படி தான் அவா வாழக்கை அமையும்.பாவம் இப்போ பார்.அக்காவும்,அத்திம்பேரும் அவா சொத்தே எல்லாம் இழந்து,அவா ஒரு சின்ன வாடகை ஆத்லே தானே இருந்துண்டு வறா.என் அம்மா அப்பா குடுத்த சொத்தெ வச்சுண்டு,அவ சந்தோஷமா வாழ்ந் துண்டு வறாளா.இல்லையே.அவாளும் தானே கஷ்டப் பட்டிண்டு வறா.இதே நீ சித்தே யோஜனைப் பண்ணிப் பார்.உனக்கு நன்னா புரியும்” என்று சொல்லி கண் கலங்கினார்.

உடனே மரகதம் “ஆமாண்ணா.நீங்க சொல்றது நூத்துக்கு நூறு நிஜம்.நமப பையன் ரகுராமன் ஒரு சமையல் வேலைக்குஅனுப்ப போறேள்ன்னு நீங்க சொன்னதும் என் புத்தி மழுங்கிப் போச்சு.நான் அப்படி சொல்லிட்டேன்.நான் சொன்னது ரொம்ப தப்பு.’தார்ம்மிகமா’ பண்ணி விட்டு ’பரலோகம்’ போயிட்ட ‘பொ¢யவாளை’ நான் ஒன்னும் சொல்லி இருக்கக் கூடாது தான்” என்று சொல்லி தன் கண வனிடம் மன்னிப்பு கேட்டாள்

“மரகதம்,உன் வயத்லே பொறந்த பையன் ஒரு சமையல் கார வேலேக்குப் போகப் போறானே ன்னு நினைச்சுநீ ரொம்ப வருத்தப் பட்டுண்டு தான் அப்படி சொல்லி இருப்பேன்னு எனக்கு நன்னா தெரியும்.நீ என் கிட்டே எல்லாம் மன்னிப்பு எல்லாம் கேக்க வேணாம்.நான் உன்னே தப்பாவே எடு த்துக்கலே.நீ நார்மலா இருந்துண்டு வா”என்று சொல்லி மணைவிக்கு தேத்தறவு சொன்னார் குப்புசாமி.

ரெண்டு நாள் போனதும் பாலுவுக்கு சமையல் வேலை ஒன்றும் இல்லாததால் தன் ஆப்த நண் பன் குப்புசாமியைப் பார்த்து விட்டு,அவர் மணைவி கொடுக்கும் காபி டிபனை சாப்பிட்டு விட்டு வரலாம் என்று நினைத்து பாலு குப்புசாமியின் வீட்டிற்கு வந்தார்.

தன் ‘ஸ்னேகிதன்’ பாலுவைப் பார்த்ததும் குப்புசாமி “வா பாலு.இன்னைக்கு உனக்கு சமையல் வேலை ஒன்னும் இல்லையா.பொழுது போகலேன்னு என்னைப் பாத்து பேச வந்து இருக்கியா” என்று கிண்டலாக கேட்டதும்” ஆமாம் குப்பு.சமையல் வேலை ஒன்னும் இல்லேன்னா,ஆத்லே பொழுது போக மாட்டேன்கிறது.உன் கிட்டே சித்தே நேரம் பேசிட்டு மன்னி குடுக்கற காபியையும் குடிச்சுட்டு போக லாம் என்று தான் நான் வந்தேன்” என்று உண்மையையை ஒத்துக் கொண்டார் பாலு.

தன் ‘ஸ்னேகிதன்’ ஒளிவு மறைவு இல்லாத பேச்சு குப்புசாமிக்கு மிகவும் பிடித்து இருந்தது. இருவரும் கொஞ்ச நேரம் லோகாபிராமமாக அந்த கிராமத்து விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் குப்புசாமி தன் ‘ஸ்னேகிதன்’ பாலுவிடம் சுவாதீனமாக” பாலு,நான் உன்னே ஒன்னு கேக்கறேன்.நீ எனக்காக மறுக்காம ஒத்துக்கணும்.பண்ணவும் பண்ணனும்.எனக்காக சித்தே பண்ணுவியா” என்று கேட்டுக் கொண்டு இருந்த போது மரகதம் ஆவி பறக்க,பறக்க,ஒரு டவரா டம்ளா¢ல் ‘காபி’ போட்டுக் கொண்டு வந்து பாலு எதிரே வைத்து விட்டு “எங்களுக்காக, நீங்க இதே சித்தே மறுப்பு சொல்லாம பண்ணனும்” என்று அவள் பங்குக்கு சொல்லி விட்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.

‘என்னடா இது இவா ரெண்டு பேரும் இப்படி கேக்கறா.இவா என்ன கேக்கப் போறா.அவா கேக் கறதே நான் மறுப்பு சொல்லாம பண்ணனும்னு வேறே சொல்றா.நாம் இப்படி அடிக்கடி அவா ஆத்துக் கு வறது அவாளுக்கு பிடிக்கலையா” என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார் பாலு.

பிறகு தன்னை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு “என்னை நீங்க ரெண்டு பேரும் என்ன கேக் கப் போறேள்.என்னால் முடிஞ்சா நான் உங்க ரெண்டு பேருக்காக அதை நிச்சியமா பண்ணுவேன். உங்க ஆத்துக்கு நான் ரொம்ப கடமைப் பட்டு இருக்கேன்.குப்பு எனக்கு எவ்வளவு உதவி பண்ணி இருக்கார்.மன்னி,நீங்க எத்தனை தடவை எனக்கு உங்காத்து ‘ஸ்பெஷல்’காபி எனக்குப் போட்டு குடுத்து இருக்கேள்.கேளுங்கோ.நான் நிச்சியமா பண்றேன்” என்று சொல்லி விட்டு,மரகதம் கொடுத்த ‘காபி’யை எடுத்து ஒரு வாய் உறிஞ்சிக் குடித்தார் பாலு.

குப்புசாமி தான் பேச அரம்பித்தார்.”அது ஒன்னும் இல்லே பாலு.என் பையன் ரகுராமன் மூனு தடவையா எட்டாவதிலே சேந்து படிச்சும்,அவனால் ‘பாஸ்’ பண்ண முடியலே.பாவம் அவனுக்கு அந்த பாழாப் போன கணக்கும்,இங்கிகிஷூம் சா¢யாவே வரலே.அவனுக்கு வயசு ஏறிண்டே போறது.அவ னை நானும் என் ஆத்துகாரியும் உன் கிட்டே சமையல் வேலை கத்துக்க சேத்துடலாம்ன்னு யோஜ னைப் பண்ணி இருக்கோம்.நீ மறுக்காம அவனை உன்னோடு சேத்துண்டு,அவனுக்கு இந்த சமையல் வேலை நுணுக்கங்களை எல்லாம் சித்தே எனக்காகவும்,மன்னிக்காகவும் கத்துக் குடு.ஒரு ஐஞ்சு,ஆறு வருஷத்துகுள்ளே அவன் ஒரு நல்ல சமையல்காரனா ஆக,நீ அவனுக்கு ‘ட்ரெயினிங்க்’ குடு.அப்புற மா அவன் ஒரு முழு சமையல் கார வேலை பண்ணி வரட்டும்.எங்க ரெண்டு பேருக்காக இந்த உதவி யே நீமறுக்காம பண்ணுவியா.எனக்கும் மரகதத்துக்கும் ரகுராமனை வேறே எதிலே சேக்கறதுன்னே தெரியலே” என்று பாலுவின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டார்.

உடனே பாலு “இது தான் சமாச்சாரமா.இதுக்கா நீயும், மன்னியும் இத்தனை பூர்வ பீடிகை போ ட்டேள்.நான் இந்த உதவியை உங்க ரெண்டு பேருக்காகவும் நிச்சியமா பண்ணுவேன்.நான் குடுக்கற ‘ட்ரெயினிங்க்’லே ரகுராமன் இன்னும் ஐஞ்சு ஆறு வருஷத்துக்குள்ளே ஒரு நல்ல சமையல் காரனா ஆயிடுவான்.அப்படி அவன் ஆயிட்டான்னா,நானே அவனை என் கூட மாட சமையல் பண்ண ஒரு ‘அஸிஸ்டெண்டா’ வச்சிண்டு வந்து ஒரு நல்ல சம்பளமும் போட்டுத் தறேன்.நீங்கோ ரெண்டு பேரும் உங்க கவலையே விட்டுட்டு இனிமே சந்தோஷமா இருந்து வாங்கோ.இன்னிலே இருந்து ரகுராமனை முன்னுக்கு கொண்டு வரும் பொறுப்பை என் கிட்டே விட்டுடுங்கோ.நான் பாத்துக்கறேன்.ஒரு நல்ல நாளா பாத்து ரகுராமனை எங்கத்துக்கு அனுப்புங்கோ.அன்னிலே இருந்து அவன் தினமும் எங்காத்து க்கு தினமும் வரட்டும்” என்று சொல்லி விட்டு மீதி காபியை உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தார்.

உடனே மரகதம் “நாங்க ரெண்டு பேரும் கேட்டுண்டதுக்கு நீங்க மறுப்பு ஒன்னும் சொல்லாம, அவனை முன்னுக்கு கொண்டு வரும் பொறுப்பையும் ஏத்துண்டு இருக்கேள்.உங்களுக்கு நாங்க ரெண்டு பேரும் எத்தனை முறை நன்னி சொன்னாலும் போறாது” என்று தன் கண்களில் வழித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

மங்களம் ‘அப்பா,அம்மா கேட்டதுக்கு அவர் ஒத்துண்டு இருக்காரே.ரொம்ப நல்லவரா இருப்பார் போல இருக்கே இந்த பாலு மாமா.எப்படியோ நம்ப ரகு¡மனுக்கு அவர் செஞ்சு வரும் சமையல் வேலை யை நன்னா கத்துக் குடுத்து,அவனை அவர் கிட்டே வேலைக்கு வச்சுண்டு வந்தா,அவன் வாழக்கை ஒரு வழியா நல்லபடியா அமையும்’ என்று நினைத்து சந்தோஷப் பட்டாள்.

குப்புசாமி தன் ‘ஸ்நேகிதன்’ பாலுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “ரொம்ப நன்றி பாலு. நாங்க கேட்டுண்ட உடனே,நீ ஒத்துண்டு அவனை முன்னுக்கு கொண்டு வந்து,உன் கிட்டேயே வேலைக்கு வச்சுக்க சம்மதிச்சு இருக்கே.ரொம்ப ‘தாங்க்ஸ்’ உனக்கு.நானும் மரகதமும் ஒரு நல்ல நாள் பாத்து சிவராமனை உங்காத்துக்கு அனுப்பறோம்.அப்புறமா அவனை முன்னுக்கு கொண்டு வரும் பொறுப்பு பூராவும் உன்னுடையது தான்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டார்.கொஞ்ச நேரம் குப்புசாமியின் வீட்டிலே பேசிக் கொண்டு இருந்து விட்டு பாலு தன் வீட்டுக்குப் போனார்.

குப்புசாமியும் மரகதமும் ஒரு நாள் ரகுராமன் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு,அவர்களுக்கு உபாத்யாயம் பண்ணும் வாத்தியார் வீட்டுக்குப் போய் ரகுராமனை பாலு மாமா வீட்டுக்கு சமையல் வேலைக்கு அனுப்ப ஒரு நல்ல நாள் பார்த்துக் கொண்டு வரப் போனார்கள்.

குப்புசாமியியும்,மரகதத்தையும் பார்த்த சீனு வாத்தியாரும்,அவர் சம்சாரமும் அவர்களை தன் வீட்டிற்கு உள்ளே வர சொல்லி வரவேற்றார்கள்.”வாங்கோ குப்புசாமி,எங்கே இவ்வளவு தூரம்.தம்பதி சமேதரா வேறே வந்து இருக்கேளே.என்ன சமாச்சாரம்” என்று விசாரித்தார்.சமையல் ரூமில் இருந்து வெளியே வந்த சீனு வாத்தியாரின் மணைவி குப்புசாமியையும் மரகத்ததையும் பார்த்து “வாங்கோ, நீங்கோ ரெண்டு பேரும்சௌக்கியமா இருக்கேளா” என்று விசாரித்தார்.

உடனே குப்புசாமி “நாங்க சௌக்கியமா இருக்கோம்.நாங்க எங்க பையன் ரகுராமனை சமையல் கார பாலு மாமாவிடம் சமையல் வேலைக்கு சேக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கோம்.நீங்க அவன் ஜாதகத்தைப் பாத்து,அவன் என்னைக்கு அந்த சமையல் வேலைக்கு சேந்தானா,அவன் வாழ்க்கை யிலே முன்னுக்கு வருவான்னு சித்தே பாத்து சொல்லுங்கோ” என்று கண்களில் கண்ணீர் தளும்பக் கேட்டார்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *