ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2020
பார்வையிட்டோர்: 3,214 
 
 

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

தன் கடை ‘சுப்பர்வைஸர்’ சுந்தரம் சொன்னதைக் கேட்டு ராமசாமி ‘இவனுக்கும் ஒன்னும் தொ¢ யாதுன்னு சொல்றானே.அப்போ கடையிலே நஷ்டம் வர என்ன காரணம் என்று யோஜனைப் பண்ணி க் கொண்டே,அன்று இரவும் வீட்டுக்கு வந்து மணைவி விமலாவிடம்,பிள்ளை ராமநாதனிடமும் சொல்லி வருத்தப் பட்டார் ராமசாமி.

அவர்கள் இருவரும் ‘ரெண்டு மாசமா கடையிலே நல்ல லாபம் வந்துண்டு இருந்ததே, இப்ப இந்த மாசம் நஷ்டம் வர என்ன காரணமா இருக்கும்’ என்று யோஜனை பண்ணினார்கள்.

பன்னண்டு மணி நேரம் கடையிலேயே இருந்து வரும் ராமசாமிக்கே தன் கடையிலே இருப்பவர்கள் செய்யும் “திருட்டை”ப் பற்றி தொ¢யாமல் இருக்கும் போது பாவம் இவர்களுக்கு எப்படி தொ¢யப் போகிறது.இருவரும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

ரெண்டு மாசமாக ராமசாமியால் ‘பாங்கின்’ வட்டியை கட்ட முடியவில்லை.பாங்கு மானேஜர் அடிக்கடி ராமசாமிக்கு போன் பண்ணிக் கொண்டு இருந்தார்.கடைக்கு சரக்குப் போட்ட கம்பனி முத லாளி பாக்கி பணத்தைக் கேட்டு விட்டு “சார்,நீங்க பாக்கி பணத்தே தராவிட்டா,நாங்க இனிமே உங்க ளுக்கு சரக்கே போடமாட்டோம்” என்று பயமுறுத்தி வந்தார்.

ராமசாமிக்கு வீட்டு செலவும்,ராமநாதன் படிப்பு செலவும்,கடை ஆட்களுக்கு தரும் மாச சம்பள மும் அவரை அழுத்தி வந்தது,அவர் மிகவும் சிரமப் பட்டுவந்தார்.கணவன் படும் வேதனையைப் பார்த் து விமலா வருத்தப் பட்டாள்.

விமலா தன்னிடம் இருந்த வைரத்தோடு,நகைகளை எல்லாம் கணவனிடம் கொடுத்து “இதே எல்லாம் நீங்க வித்துட்டு,வரும் பணத்லே எல்லா செலவை சமாளிச்சுண்டு வாங்கோ” என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.ராமசாமியும் வருத்தப் பட்டுக் கொண்டே மணைவி கொடுத்த எல்லா நகை களையும் விற்று விட்டு,எல்லா செலவுகளையும் கவனித்துக் கொண்டு வந்தார்.

அடுத்த ரெண்டு மாசமும் கடையில் நஷ்டம் வந்தது.ராமசாமியும் விமலாவும் இனிமேல் இந்த் துணிகடையை வைத்து சமாளித்து வருவது சிரமமாக இருக்கும் என்று நினைத்து துணிகடையை விற்று விட முடிவு பண்ணினார்கள்.

துணிகடையை ஒரு சேட்டிடம் அவர் சொன்ன விலைக்கு விற்று விட்டார் ராமசாமி.

’பாங்க்’ ராமசாமியின் வீட்டை ஏலம் விட்டு அதில் வந்த பணத்தில் அவர்களுக்கு சேர வேண் டிய வட்டியையும்,அசலையும்,எடுத்துக் கொண்டு மீதி ஐம்பதாயிரம் ரூபாயை ராமசாமி இடம் கொடுத் தார்கள்.

துணிக்கடை விற்ற பணத்தையும்,’பாங்க்’ கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாயையும் பாங்கில் போ ட்டு விட்டு,ஊர் கோடியிலே ஒரு சின்ன வீடாக வாடகைக்கு எடுத்துக் கொண்டு வீட்டிலே இருந்து வந்தார் ராமசாமி.

ரகு¡மன் ரொம்ப சுமாராகத்தான் படித்து வந்தான்.

அவனுக்கு கணக்கே அவன் மண்டையிலெ ஏறவில்லை.கூட்டல் கணக்குகளை கூட அவன் தப்பு தப்பாகப் போட்டு வந்தான்.கழித்தல் கணக்குகள் அவனுக்கு சரியாகவே போட வரவில்லை. அவன் வகுப்பு வாத்தியார் கணக்கு நோட்டிலே “உங்க பையனுக்கு கூட்டல் கழித்தல் கணக்குகள் சரியாகவே போட வரவில்லை.நீங்கள் என்னை வந்து உடனே பார்க்கவும்” என்று எழுதி ரகுராமனை கூப்பிட்டு “ரகுராமா,நான் எழுதி இருக்கிறதே உங்க அப்பா கிட்டே காட்டி என்னை வந்து நாளைக்கு பள்ளிக் கூடத்திலே பாக்கச் சொல்லு” என்று சொல்லி அனுப்பினார்.

ரகுராமனும் வீட்டுக்கு வந்து கணக்கு வாத்தியார் கணக்கு நோட்டிலே எழுதி இருந்ததை வருத் தத்துடன் காட்டினான்.அவன் அப்பா கணக்கு வாத்தியார் எழுதி இருந்ததைப் படித்துக் கொண்டு இருந்த போது ரகுராமன் அப்பாவிடம் “அப்பா,வாத்தியார் கணக்கு நோட்டிலே எழுதி இருக்கிறது சரிப்பா.எனக்கு ஒரு கணக்கும் சரியாப் போட வரலே.எல்லா கணக்கும் தப்பு தப்பாத் தான் நான் போட றேன்.நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்கோ” என்று சொல்லி அழுதுக் கொண்டு இருந்தான்.

உடனே மரகதம் ரகுராமனை கட்டிக் கொண்டு “அழாதே,ரகுராமா.அப்பாவை நாளைக்கு பள் ளிக் கூடத்துக்கு வந்து உங்க கணக்கு வாத்தியாரை எல்லாம் விவரமும் கேக்கச் சொல்றேன்” என்று ஆறுதல் சொன்னாள்.

குப்புசாமிக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை.

அவர் பேசாமல் ரகுராமன் கணக்கு நோட்டை மூடி சிவராமனிடம் கொடுத்து விட்டு “என்ன பண்ணட்டும்.எல்லாம் என் தலை எழுத்து. பையனை பள்ளிகூடத்துக்கு அனுப்பினா அவன் பாட்டு க்கு நன்னா படிச்சு வரணும்.மங்களமும் உன்னாட்டும் தான் பள்ளிக் கூடம் போய் வறா.இது நாள் வரைக்கும் அவா வாத்தியார் அவ ‘நோட் புக்லே’ ஒன்னும் எழுதி அனுப்பலே.உனக்கு மட்டும் எழு தி அனுப்பி இருக்கார்.அப்படின்னா என்ன அர்த்தம்.உனக்கு கணக்கு நன்னா போட வறலேன்னு தான் அர்த்தம்.நான் நாளைக்கு வந்து உன் பள்ளிக் கூட வாத்தியாரைப் பாத்து என்ன சமாசாரம்ன்னு கேக்கறேன்” என்று சொல்லி விட்டு,தன் கண்களை மூடிக் கொண்டு பகவானைத் தியானம் பண்ணிக் கொண்டு இருந்தார்.

அடுத்த நாள் குப்புசா¡மி ரகுராமன் பள்ளி கூடத்திற்குப் போய் அவன் கணக்கு வாத்தியாரைப் பார்த்தார்.அந்த கணக்கு வாத்தியார் ரகுராமன் கணக்குகளில் பண்ணி வந்த தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டினார்.கூடவே குப்புசாமியைப் பார்த்து “நீங்க வீட்லே,நான் சொன்ன தவறுக¨ளை அவ ன் மறுபடியும் செய்யாம இருக்க அவனுக்கு கணக்கு நிறைய போட பழக்கி வாங்க” என்று சொல்லி அனுப்பினார்.

உடனே ராமசாமியும் அவா¢டம்”நீங்க சொன்னபடியே நான் செஞ்சு வந்து அவன் கணக்குகளை சரியாப் போடச் சொல்லி குடுக்கறேன் சார்” என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தார்.

ரகுராமன் பள்ளிகூடம் விட்டு வீட்டுக்கு வந்ததும் குப்புசாமி அவனுக்கு நிறைய கணக்குகள் கொடுத்துப் போடச் சொன்னார்.பள்ளி கூடத்தில் பண்ண தவறுகளையே மறுபடியும்,மறுபடியும் ரகு ராமன் பண்ணி வந்தான்.ராமசாமி தவறுகளை திருத்தி போடச் சொல்லிக் கொடுக்கும் போது ரகுரா மனுக்கு புரிந்தது போல இருந்தது.ஆனால் அவனாக அந்த கணக்குகளைப் போடும் போது மறுபடி யும் அதே தவறுகளை செய்து வந்தான்.

கோவம் வந்து குப்புசாமி ரகுராமனைப் பார்த்து “சுத்த ஞான சூன்யம்டா நீ.பண்ண தப்பையே மறுபடியும்,மறுபடியும் பண்ணி வறயேடா.இந்த ஜென்மத்திலே உனக்கு கணக்கே போட வறாதுடா” என்று சொல்லி கோவத்துடன் அவன் கணக்கு நோட்டை ஒரு மூலையிலே வீசி ஏறிந்து விட்டு வெளியே போய் விட்டார்.

வெளியே போய்க் கொண்டு இருந்த போது குப்புசாமி ‘நிறைய வேண்டி வந்தப்புறம்,அந்த பகவான் நமக்கு ஒரு புருஷக் குழந்தயே குடுத்தார். அது இப்படி கணக்கே போட வறாத ஒரு ‘ஞான சூன்யமா’ இருக் கே.அதுவே எங்களுக்குப் பொறந்த பொண் குழந்தை ரொம்ப நன்னா படிச்சு வறாளே. அவ படிச்சு எனக்கு என்ன லாபம்.கொஞ்ச வருஷம் ஆனா,அவ இன்னொருத்தர் ஆத்துக்குப் கல்யாணம் பண்ணிண்டு போகப் போறப் பொண்னு தானே.எனக்கு அவளால் ஒரு பிரயோஜனும் இல்லையே.புருஷ பையன் படிச்சு முன்னுக்கு வந்து,ஒரு நல்ல வேலைக்குப் போய் வந்தன்னா தான் எனக்கு பிரயோஜனப் படுவான்.அவன் சுத்த ‘ஞான சூன்யமா’ இருந்து வரானே.என்ன பண்றது. எல் லாம் என் தலை எழுத்து’ என்று வருத்தப் பட்டுக் கொண்டு தன் மனதிலே அழுதுக் கொண்டு இருந்தார்.

அழுதுக் கொண்டே ரகுராமன் அந்த கணக்கு நோட்டை எடுத்து வைத்துக் கொண்டு சும்மா உட்கார்ந்துக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்தான்.மரகதம் ஒன்னும் அதிகம் படிக்காததால், அவளுக்கு ரகுராமனுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்க முடியவில்லை.’நாம படிக்கலே.நாம ஒரு நாலு எழுத்து படிச்சு இருந்தாலாவது ரகுராமனுக்கு பொறுமையா இந்த கணக்குகளை எல்லாம் சொல்லிக் குடு த்து வரலாம்.அவருக்கு பொறுமையே இல்லையே.இன்னும் பொறுமையா இந்த கணக்குகளை எல்லா ம் சொல்லி குடுத்தா ஒரு வேளை ரகுராமன் இந்த கணக்குகளை எல்லாம் சரியா போடுவானோ என்ன வோ’ என்று தன் மனதில் நினைத்து மரகதம் மிகவும் வருத்தப் பட்டாள்.

’என் பையன் பாட கணக்குகளை எல்லாம் சரியாப் போட்டு வர அனுக்கிரஹம் பண்ணும்மா’ என்று அவள் சதா வேண்டி வரும் காமாக்ஷ¢ அம்பாளை தினமும் வேண்டி வந்தாள் மரகதம்.

அவளால் அது ஒன்னு தான் பண்ண முடிந்தது.அவள் வெறுமனே மூணாம் ‘க்ளாஸ்’ வரைக்கு ம் தான் படிச்சு இருந்ததை நினைத்து வருத்தப்பட்டாள்.
படிப்பு.

இது ஒரு நாலு எழுத்து வார்த்தை தான்.இந்த படிப்பு என்பது பள்ளி கூடம் போய் வரும் எல்லா படிக்கும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் சுலபமா வந்து விடுகிறதா என்ன?

அப்படி வந்தால் ஏன் சில மாணவர்களும் மாணவிகளும் வருடாந்திர பா¢¨க்ஷகளில் பெயில் ஆகி படிப்பை அத்தோடு நிறுத்திக் கொண்டு வந்து சாதாரண வாழக்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

நன்றாக படித்து எல்லா வகுப்பிலேயும் நல்ல ‘பாஸ்’ மார்க் வாங்கி வரும் மாணவர்களையும், மாணவிகளையும் நாம ‘புத்திசாலிகள்’ என்றும் படிப்பு ஏறாத மாணவர்களையும்,மாணவிகளையும் ‘சுத்த முட்டாள்கள்’ என்று தானே பேர் கட்டி விடுகிறோம்.“சரஸ்வதி கடாக்ஷம்” என்பது எல்லா மாண வர்களுக்கும் மாணவிகளுக்கும் இருப்பது இல்லையே. அந்த மாதிரி அந்த “சரஸ்வதி கடாக்ஷம்” இல் லாத ஒருவன் தான் ரகுராமன்.அவனை அவனை பெத்த அப்பாவே ஞான சூன்யம்’ என்று சொல்லி வருத்தப் படுவதில் உண்மை இருக்கிறதே .மூளைக்கு அதிக வேலை தரும் கணக்கும்,வேற்று பாஷை யான ‘இங்கிலிஷூம்’ அவனுக்கு வராதது அதிசியமே இல்லை.

அந்த ஊரில் சமையல் வேலை செய்து வரும் பாலு ஐயர்,குப்புசாமியின் பால்ய ஸ்னேகிதர். தனக்கு சமையல் வேலை எல்லாத நாட்களில் தன் ஆப்த நண்பன் குப்புசாமியின் வீட்டுக்கு வந்து அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்.மரகதம் போடும் ‘காபி’ ரொம்ப சுவையாக இருந்ததால், பாலு மகதததைப் பார்த்து “மன்னி,நீங்க போடற காபி ரொம்ப பேஷாக இருக்கும்.எனக்கு ஒரு ‘கப்’ காபி போட்டுத் தறேளா” என்று கேட்பார்.ஒரு சமையல் கார மாமாவே தன் காபியை ‘ரொம்ப பே ஷாக இருக்கும்’என்று சொன்னதைக் கேட்டு மரகதம் சந்தோஷப் பட்டு பாலுவுக்கும் அவர் கணவரு க்கும் ரெண்டு ‘டவரா டம்ளரில்’ ‘ஸ்ட்றாங்காக’ப் போட்டுக் கொடுத்தாள்.பாலு அந்த காபியை ருசி த்து குடித்து விட்டு “காபி ரொம்ப பேஷாக இருந்தது மன்னி” என்று புகழந்து விட்டு போய்க் கொண் டு இருந்தார்.

குப்புசாமியும் பாலு சமையல் வேலை இல்லாமல் கஷ்டப் பட்டு வந்துக் கொண்டு இருந்த போது தன்னிடம் இருந்த நெல் மூட்டை ஒன்றைக் கொடுத்து உதவி பண்ணி வந்தார்.மரகதமும் பாலு தன் வீட்டுக்கு வந்து தன் கணவா¢டம் பேச வரும் போதெல்லாம் தவறாமல் ‘டவரா டம்ளரில் ஸ்ட்றாங்காக’ ‘காபி’ போட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

மங்களம் ‘எலிமெண்டா¢ ‘பள்ளிகூடத்திலே எட்டாவது ‘பாஸ்’ பண்ணினாள்.

மங்களம் எட்டாவது ‘பாஸ்’ பண்ணி முடித்தவுடன் மரகதம் ‘ஒரு பொண் குழந்தையை ரொம்ப தூரமாக இருக்கும் திருவண்ணாமலைக்கு மேலே படிக்க வைக்க அணுப்பக் கூடாது.அப்படி அனுப்பி னால் அவள் திருவணாமலையிலே பத்தாவதாவது வரையாவது படிக்க வைக்க வேண்டும்.இப்பவே அவளுக்கு வயசு பதி மூனு ஆகி விட்டு இருக்கு.அவ இப்ப சின்னப் பொண்னு இல்லே.அவளுக்கு ‘நல்ல விதமா’ ஒரு நல்ல பையனைப் பாத்து ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்து விடவேணும்’ என் பதில் குறியாக இருந்ததால் மங்களத்தை திருவண்ணாமலைக்கு படிக்க வைக்க அனுப்பாமல் வீட் டிலேயே வைத்துக் கொண்டு இருக்க முடிவு பண்ணினாள்.

மங்களத்துக்கு மேலே படிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததால்,அவள் அடிக்கடி தன் அம் மா அப்பாவைப் பார்த்து “எனக்கு மேலே படிக்க வேனும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு.என் கூட படி ச்ச இந்த அக்கிராஹாரத்து மூனு பொண்கள் எல்லாம் திருவண்ணாமலைக்கு போய் படிக்கப் போறா. நானும் அவா கூட போய் படிச்சுட்டு வறேனே” என்று சொல்லி அடம் பிடித்து வந்தாள்.

குப்புசாமி பதில் ஒன்று சொல்லாமல் மங்களம் கேட்டதற்கு தன் மணைவி என்ன சொல்லப் போ கிறாள் என்று மரகதத்தின் வாயையே பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார்.
மங்களம் கேட்டு முடிக்கவில்லை மரகதம் ஹாலுக்கு ஓடி வந்து தன் கணவனைப் பார்த்து “மங்க ளம் திருவண்ணாமலைக்குப் போய் மேலே படிக்கப் போறேண்னு சொல்றா.நீங்க அதே கேட்டுண்டு சும்மா நிக்கறேளே.நீங்க அவளுக்கு சரியான ஒரு பதிலா சொல்ல வேணாமா.மங்களம் இன்னும் ஒரு ‘சின்னப் பொண்னு’ இல்லேன்னு உங்களுக்கு ரொம்ப நன்னா தொ¢யுமே.அவ தினமும் ஆத்துக்கு ‘நல்லபடியா’ வரணுமேன்னு,அந்த சிவனை நான் வேண்டிண்டு வறேன்.இந்த வயசிலே அவ திருவ ண்ணாமலைக்குப் ‘டவுன் பஸ்லே’ காத்தாலே எட்டு மணிக்குப் போய் சாயங்காலம் ஆறு மணிக்கு ஆத்துக்கு வற வரைக்கும் யார் கவலைப் பட்டுண்டு இருக்கப் போறா.நீங்களா நானா.ஒரு அப்பாவா இருந்துண்டு ஒன்னும் சொல்லாம,நீங்க சும்மா நின்னுண்டு இருக்கேளே.அவ திருவண்ணாமலைக்கு எல்லாம் போய் படிக்க வேணாம்.அவ ஆத்லேயே என் கண் முன்னாலே இருந்து வரட்டும்.அப்ப தான் நான் அவளுக்கு ‘ஒன்னும்’ ஆகாம பாத்துக்க முடியும்” என்று சொன்னாள்.

உடனே “மரகதம் அவ ரொம்ப ஆசை படறா.அவ திருவண்ணாமலைக்குப் போய் படிச்சுட்டு வரட்டுமே.நீ கொஞ்சம் யோஜனைப் பண்ணேன்” என்று மெல்ல பயந்துக் கொண்டே சொன்னார்.

குப்புசாமி சொல்லி முடிக்கவில்லை மரகதம்” உங்களுக்கு பயித்தியமா பிடிச்சு இருக்கு.காலம் ரொம்ப கெட்டு கிடக்கறது.’மேலே படிக்க போறேன்’,’மேலே படிக்கப் போறேன்’ன்னு சொல்லிண்டு, அவ பத்து கிலோ மீட்டர் தூரத்திலே இருக்கிற திருவண்ணாமலைக்கு போய்,அப்பு றமா ஏதாவது ‘ஏடா கூடமா’ ஆயிடுதுன்னா நாம் என்ன பண்றது சொல்லுங்கோ.’அந்த மாதிரி ‘எல்லாம் ஆனா இந்த அக்கிரஹாரத்திலே இருந்து நம்மை ஒதுக்கி ‘ஜாதி பிரஷ்டம்’ பண்ணி விடுவான்னு உங்களுக்கு தொ¢யாதா.அப்புறமா ‘இந்த மாதிரி’ ஆன ஒரு பொண்ணை வச்சுண்டு,நாம ரெண்டு பேரும் இங்கே இருக்கிற நிலம் புலங்களை எல்லாம் வித்துட்டு,வேறே ஊருக்குத் தான் போய் ‘அந்த மாதிரி’ ஆன ஒரு பொண்ணே நம்மோடு வச்சுண்டு காலம் பூராவும் கஷ்டப் பட்டுண்டு வாழ்ந்து வரணும் என்கிற தே நீங்க மறந்து ட்டேளா.நீங்க யோஜனையே ஒன்னும் பண்ணலையா” என்று அடித் தொண்டையில் கத்தினாள்.

மணைவி சொன்னதைக் கேட்ட ராமசாமிக்கு தலையை சுத்தியது.

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் முழித்துக் கொண்டு இருந்தார்.அவருக்கு தன் அருமை பெண் மங்களம் கேட்டதும் நியாயமாகப் பட்டது.மணைவி மரகதம் அதற்கு சொன்ன பதிலும் நியாயமாகப் பட்டது.’யார் பக்கம் நாம பேசுவது’ என்று புரியாமல் அவர் முழித்துக் கொண்டு இருந்ததும் அவருக்கு நியாயமாகப் பட்டது.ஒன்னே சொன்னா பொண்ணு கேக்க மா ட்டா,மத்த ஒன் னே சொன்னா பொண்டாட்டி கேக்க மாட்டா’ என்று அவருக்கு நன்றாகத் தொ¢யும்.

அந்த காலத்திலே வாழந்து வந்த எல்லா ஜாதிக் குடும்பங்களில் இருந்த அம்மாக்களும் தங்க ளுக்கு ‘வயசுக்கு’ வந்த பெண்கள் இருந்தால்,இதே ‘பாட்டை’ தானே பாடி வந்து இருகிறார்கள். மரக தம் அதற்கு ஒரு விதி விலக்கு இல்லையே.அவளும் ‘அதே பாட்டை’ பாடி கணவனையும் பெண்ணை யும் குழப்பத்தில் விட்டு விட்டு இருக்காளே!

சற்று நேரம் யோஜனைப் பண்ணின ராமசாமி “மரகதம்,நான் சொல்றதே நீ கொஞ்ச கவனமா கேளு.நீ மூணாம் ‘க்லாஸூ’க்கு மேலே படிக்கலே.ரொம்ப சுமாராத் தான் நீ படிச்சு வந்தே.உனக்கு படி ப்பு ஏறலேன்னு நினைச்சு,உன் அம்மாவும்,அப்பாவும் உன்னே பள்ளி கூடமே அனுப்பலே.நீ யோஜ னைப் பண்றா மாதிரி யோஜனைப் பண்ணி,உன்னே ஆத்லெ வெறுமனே வச்சுண்டு இருந்தா.என் அம்மா,அப்பா உன் படிப்பைப் பத்தி எல்லாம் ஒன்னும் விசாரிக்காம,உங்க குடும்பம் ஒரு ‘சுரேஷ்டமா ன’ குடும்பம்பமாச்சேன்னு நினைச்சு,உன்னே எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சா.நானும் என் அம்மா அப்பா சொன்னதே மீறி ஒன்னும் சொல்லாம உன்னே கல்யாணம் பண்ணிட்டுட்டேன்.ஆனா இந்த காலத்திலே கல்யாணம் பண்ணிக்கப் போற பையன் எனக்கு படிச்சப் பொண்ணு தான் வேணும் சொன்னா,அப்போ நாம என்ன பண்றது சொல்லுப் பார்க்கலாம். மங்களம் மேலே படிக்கட்டும்.அவளு க்குப் படிப்பும் இல்லேன்னு ஆயி,அவளை கல்யாணம் பண்ணிக் கொள்ள யாரும் முன் வரலேன்னா அப்புறமா நாம மங்களத்தே சும்மா ஆத்லே வச்சுண்டு கஷ்டப் பட்டுண்டு வரணும்.இதெ நீ கொஞ்ச மாவது யோஜனைப் பண்ணயா மரகதம்” என்று தன் சந்தேகத்தைக் கேட்டார்.

உடனே மரகதம்” நீங்க பேசறது ரொம்ப நன்னாவே இல்லே.’எதுக்கோ பயந்துண்டு,எதுவோ பண்ணாம இருந்தானா ஒருத்தன்’ என்கிற பழமொழியே போல,அவளே கல்யாணம் பண்ணிக்க வரப் போற பையன் கேக்கப் போறான்னேன்னு பயந்துண்டு,அவளை நாம திருவண்ணாமலைக்குப் படிக்க அனுப்பிட்டு,அப்புறமா அவளுக்கு ஏதாவது ‘நடக்கக் கூடாதது’ நடந்துட்டதுன்னா,அப்புறமா அவ ளுக்கு கல்யாணமே ஆகாதே.அப்புறமா நம்ப மங்களத்தே வெறுமனே ஆத்லே தானே வச்சுண்டு வரணும்.இதே நீங்க கொஞ்சம் யோசிச்சேளா” என்று கேட்டு விட்டு தன் கணவன் முகத்தைப் பார் த்துக் கொண்டு இருந்தாள்.

ராமசாமிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு ராமசாமி “மரகதம்,நீ சொல்றது எனக்கும் சரின்னு தான் படறது.மங்களம் படிப்பைப் பத்தி கேக்காத,வெறுமனே,நம்ம குடும்பம் ஒரு ‘சிரேஷ்டமான’ குடும்பம்ன்னு நினைச்சு,மங்களத்தே போல கொஞ்சமா படிப்பு படிச்ச பையனா,நாம பாத்து அவளுக் கு நல்ல விதமா ஒரு கல்யாணத்தே பண்ணி வச்சிடலாம்.நீ சொல்றா ‘மாதிரி’ எல்லாம் மங்களத்துக்கு ஆயி,பின்னிட்டு நாம கஷ்டப் படக் கூடாது” என்று சொல்லி மரகதம் சொன்னதை ஆமோதித்தார்.

ஆனால் மங்களம் திருவண்ணாமலைக்கு தன் சக தோழிகளுடன் பஸ்ஸிலே போய் படித்து வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து பிடிவாதம் பிடித்து வந்தாள்.அவள் வீட்டிலே தன் அம்மா, அப்பாவுடன் அடிக்கடி தன் மேல் படிப்புக்காக சண்டை போட்டு வந்தாள்.

’நாம மேலே படிக்கறதுக்கு இப்போ அப்பாவும் மறுப்பு சொல்றா.அம்மா என்னடான்னா ஒரு பெ ரிய ‘பிரசங்கமே’ பண்ணி அப்பா மனசே கலைசுட்டு இருக்கா,நாம எப்படியாவது சொல்லி இவா ரெண் டு பேருடைய மனசே மாத்தியே ஆகணும்.நாம திருவண்ணாமலைக்குப் போய் ஒரு பத்தாவதாவது ‘பாஸ்’ பண்ணணும்’ என்று மிகவும் ஆசைப் பட்டாள் மங்களம்.

மெல்ல அம்மாவைப் பார்த்து “அம்மா,நீ நினைக்கறாப் போல எனக்கு ஒன்னும் ஆகாது.நீ ‘பயப் படறா’ மாதிரி ஆகாம நான் பார்த்துப்பேன்.நான் எப்பவும் என் சக தோழிகளோட தான் இருந்து வரு வேன்.புருஷ பசங்க இருக்கிற பக்கமே நான் தனியா போக மாட்டேம்மா.அப்படி நான் இருந்து வந்தா, எனக்கு நீ நினைக்கிறாப் போல ‘அப்படி’ எல்லாம் ஆகவே ஆகாதும்மா,நீ வீணா பயப் படறே.என் தோழிகள்,விமலா,வசந்தி,கமலா எல்லாரும் இந்த அக்கிராஹாத்திலே இருந்து அடுத்த வருஷம் மே லே படிக்க திருவண்ணாமலைலே இருக்கிற ‘ஹை ஸ்கூல்லே’ சேந்து படிக்கப் போறா.நானும் அவா கூட போய் படிக்கறேம்மா.என்னை தயவு செஞ்சு மேலே படிக்க திருவண்ணாமலைக்கு அனுப்பும்மா. எனக்கு பொறக்கற குழந்தைகளுக்கு நான் ஒரு ஆறாம் ‘கிளாஸ்’ வரைக்குமாவது பாடம் சொல்லிக் குடுக்க வேணாமா.நான் வெறுமனே ஒரு எட்டாம் ‘கிளாஸ்’ படிப்போடு என் படிப்பை நிறுத்திண்டு ட்டா,நான் அவாளுக்கு ஐஞ்சம் ‘க்ளாஸ்’ கூட பாடம் சொல்லிக் குடுக்க முடியாதேம்மா.நான் ஒரு பத்தாம் ‘கிளாஸ்’ படிச்ச அப்புறமா வேணும்ன்னா,ஆத்லே இருந்துண்டு வறேன்.என்னை மேலே படிக்க அனுப்பும்மா” என்று அம்மாவின் தலைப்பை பிடித்து கொண்டு கெஞ்சினாள் மங்களம்.
பொண்ணு சொன்னதை கேட்டதும் உடனே ராமசாமி மரகததைப் பார்த்து ‘நேக்கு மங்களம் கே க்கறது ரொம்ப நியாயமாத் தான் படறது.இந்த அக்கிரஹாரத்துலே திருவண்ணாமலைக்கு போய் வர பொண் குழந்தைகளோட மங்களமும் போய் படிச்சு வரட்டுமே மரகதம்.நீ வீணாப் பயப் படறேன்னு தான் எனக்குப் படறது” என்று கொஞ்சம் பயந்த படி சொன்னார்.

“இதோ பாருங்கோ,என் பயம் எனக்குத் தொ¢யும்.நான் இந்த விஷப் பா¢¨க்ஷ எல்லாம் பண்ணி ப் பார்க்க தயாரா இல்லே.மங்களம் ஆத்லேயே இருந்து வரட்டும்.அப்போ தான் நிம்மதியா என் ஆத்து காரியங்களே எல்லாம் பண்ணி வர முடியும்” என்று சொல்லிக் கொண்டு இருக்கு போது,அந்த அக்கிர ஹாரத்திலே இருந்த மரகதம் கோவில் ‘ஸ்னேகிதி’ சரஸ்வதி அவர்கள் வீட்டுக்கு வந்தாள்.

ராமசாமியும்,மரகதமும் பேசிக் கொண்டு இருந்தது அவள் காதிலே விழுந்து இருக்கும் போல் இருக்கிறது.

உள்ளே வந்த சரஸ்வதி மரகத்தைப் பார்த்து “எங்காத்லேயும் இதே போராட்டம் தான்.ஆனா கொஞ்ச வித்தியாசம்.எங்காத்லே நான் விமலாவை மேலே படிக்க திருவண்ணாமலைக்கு அணுப்பணு ம்ன்னு சொல்லி வறேன்.ஆனா எங்காத்துக்காரர் ‘அவ பொம்மணாட்டி குழந்தே.அவ அவ்வளவு தூரம் அவ்வளவு நாழி வெளியே எல்லாம் இருந்து வரக் கூடாது.காலம் ரொம்ப கெட்டுக் கிடக்றது. நான் விமலாவை திருவண்ணாமலைக்கு எல்லாம் அனுப்ப மாட்டேன்’ன்னு பிடிவாதம் பிடிச்சு வறார். அதனால்லே இங்கே வந்து உன்னே கேக்கலாம்ன்னு தான் நான் வந்தேன்.ஆனா இங்கேயும் இந்த ‘“கன்ப்யூஷனா’ ” என்று சிரித்துக் கொண்டே இங்கிலிஷிலே சொன்னாள் சரஸ்வதி.
தன் கோவில் ஸ்னேகிதி’ சரஸ்வதி பத்தாவது வரை படித்து,அவளுக்கு இங்க்கிலிஷ் நன்றாக பேச வரும் என்று மரகதததுக்கு தொ¢யும்.சரஸ்வதி தன்னுடன் கோவிலில் பேசி வரும் போது அடிக்க டி நிறைய இங்கிலிஷ் வார்த்தைகளை உபயோகப் படுத்தி வருவதை கேட்டு வந்துக் கொண்டு இருக் கிறாள் மரகதம்.

கொஞ்ச நேரம் ஆனதும் சரஸ்வதி மரகதததைப் பார்த்து “இதோ பார் மரகதம்.நீ சொல்றது ரொம்ப சரி இல்லே.இப்ப காலம் எல்லாம் ரொம்ப மாறி வறது.பாரதியார் கூட பெண்கள் முன்னேற்றத் தை பத்தி நிறைய பேசி வறதே,நீ ரேடியோலே கேக்கலையா.எல்லா பொண்களும் ஒரு பத்தாவதாவது படிச்சு இருக்கணும்.இந்த அக்கிரஹாரத்திலே என் பொண்ணு விமலா,கோடி ஆத்து வசந்தி,உங்க ஆத் துக்கு எதிரிலே இருக்கிற ஜானகி எல்லாரும் அடுத்த வருஷம் மேலே படிக்க திருவண்ணாமலைக்கு ப் போய் வரப் போறா.நீ பயப் பட வேண்டிய அவசியமே இல்லே மரகதம்.உன் பொண்ணு மங்களத்தே மத்த மூனு பொண்களோட நீ ¨தா¢யமா அனுப்பு.நீ இதை ஒத்துக்கோ.நீ ஒத்துண்டே ஆகணும் மரக தம்.அவா மூனு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் எப்போவும் துணையா இருந்துண்டு வருவா. உங்காத் லே நான் சொன்னதே ஒத்துண்டு மரகதம் அவா பொண்ணு மங்களத்தே திருவண்ணாமலைக்கு அனு ப்பி மேலே படிக்க வைக்கப் போறான்னு சொல்லி,நான் எப்படியாவது பேசி,என் ஆத்துக்காரரை சம்மதி க்க வச்சு,என் பொண்ணை திருவண்ணாமலைக்கு அனுப்பி மேலே படிக்க வைக்கப் போறேன்.எனக் காக நீ கொஞ்சம் ஒத்துக்கோ மரகதம்” என்று மரகதத்தின் கைகளைப் பிடித்து கொண்டு கெஞ்சினாள் ’கோவில் ஸ்னேகிதி’.

சரஸ்வதி சொன்னதை யோஜனைப் பண்ணீனாள் மரகதம்.

மங்களத்துக்கும் ராமசாமிக்கும் மரகதம் ‘கோவில் ஸ்னேகிதி’ சரஸ்வதி சொன்னது மிகவும் பிடி த்து இருந்தது.

உடனே மங்களம் ‘நல்ல நேரத்லே இந்த மாமி நம்மாத்துக்கு வந்து இந்த ‘விஷயத்தே’ பேசினா. இல்லாட்டா அம்மாவாவது மனசு மாறதாவது.பிடிவாதம் பிடிச்சு தான் சொல்றதையே சொல்லிண்டு வந்து,அவ எண்ணப்படியே என் படிப்பு விஷயத்தையும் சாதிச்சுண்டு வந்து இருப்பா.அம்மாவை மீறி, அப்பாவாலே ஒன்னும் பண்ண முடியாதே’ என்று தன் மனதில் சொல்லி சந்தோஷப் பட்டுக் கொண்டு வந்தாள்.

’நாம சொல்லி மங்களம் கேக்க மாட்டா.அவள் ’கோவில் ஸ்னேகிதி’ சரஸ்வதி சொல்லியாவது மனசி மாறி மங்களத்தே மேலே படிக்க அனுபட்டுமே’ ராமசாமியும் சந்தோஷப் பட்டார்.

’கோவில் ஸ்னேகிதி’ சரஸ்வதி சொன்னதைக் கேட்ட மரகதம் “அதெல்லாம் சரி சரஸூ. நாளை க்கு என் பொண்ணு மங்களத்துக்கு ஏதாவது ‘நடக்கக் கூடாது’ நடந்துட்டதுன்னா,இந்த மாதிரி வாய் கிழியற பேசற பாரதியாரோ,காந்திஜியோ,நேத்தாஜியோ எங்கத்துக்கு வந்து என் பொண்ணுக்கு ஒரு வழியே பண்ணப் போறார்.அவாளுக்கு என்ன.அவா எல்லாம் அரசியல் தலைவா.இப்படித் தான் பேசி எல்லா ஜனங்க மனசையும் கலைக்கப் பாப்பா.அவா வேலையே அது தானே.எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு சரஸூ” என்று கோவத்து டன் கத்தினாள்.

ஆனால் சரஸ்வதி விடாமல் பேசி வந்து ஒரு வழியாக மரகதத்தை சம்மதிக்க வைத்தாள்.

உடனே மரகதம்”சரி சரசு,நீ சொல்றேன்னு நான் மங்களத்தை இந்த அக்கிரஹாரத்து மூனு பொண்களோட திருவண்ணாமலைக்கு அனுப்பி மேலே படிக்க வக்கிறேன்” என்று சொன்னதும்,‘கோ வில் ஸ்னேகிதி’ சரஸ்வதி சந்தோஷப் பட்டு “ரொம்ப ‘தாங்க்ஸ்’ மங்களம்.இன்னைக்கு சாயங்காலம் நீ கோவிலுக்கு வா.நாம இதைப் பத்தி நிறைய பேசலாம்.நான் இப்ப எங்காத்துக்குப் போய் ‘அவர்’ மன சை மெல்ல மாத்தி என் பொண்ணு விமலாவை மேலே படிக்க வைக்க சம்மதம் வாங்கணும்.நான் போய் வரட்டுமா,மறக்காம நீ சாயங்காலம் கோவிலுக்கு வா” என்று சொல்லி விட்டு தன் வீட்டுக்குக் கிளம்பினாள்.

சரஸ்வதி போன பிறகு மரகதம் தன் கணவனைப் பார்த்து “ஏன்னா,இவ இப்படி சொல்லிட்டுப் போறா.நானும் அவ பேசறதே கேட்டுட்டு,எனக்கு சம்மதம்ன்னு சொல்லி அவளை அனுப்பி இருக்கே ன்.நீங்க ஒன்னும் சொல்லாம இருக்கேளே” என்று கேட்டதும் குப்புசாமி மரகதத்ததைப் பார்த்து “ நீ சொன்னதிலே தப்பு எனக்கு ஒன்னும் தொ¢யலே.நாம மங்களத்தே திருவண்ணாமலைக்கு மேலே படி க்க அனுப்பலாம் மரகதம்” என்று சொன்னார்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு மரகதம் மங்களத்தைப் பார்த்து “இதோ பார் மங்க ளம்.உன்னே திருவண்ணாமலைக்கு மேலே படிக்க அனுப்பறதுன்னு நானும்,அப்பாவும் முடிவு பண் ணி இருக்கோம்.என்னைக்காவது திருவண்ணாமலையிலே அமக்களமா இருந்தாலோ,இல்லே நம்ம கிராமத்துக்கு வர ‘பஸ்’ ஒரு நாளைக்கு வர லேட்டானாலோ,நீ என் அண்ணா ஆத்லே பத்திரமா இருந்துண்டு வா” என்று சொன்னதும் உடனே குப்புசாமியும் “ஆமாம் மங்களம்,அம்மா சொல்றது ரொ ம்ப சரி.அந்த ஆத்லே தான் என் அக்காவும் இருக்கா.அவா உனக்கு ரெண்டு பக்க உறவு.எனக்கும் அம்மா உன்னே படிக்க திருவண்ணாமலைக்கு அனுப்ப மாட்டேன்னு சொன்னப்ப ‘சட்டுன்னு’ இந்த சமாச்சாரம் ஞாபகத்துக்கே வரலே” என்று சொன்னார் வருத்தப் பட்டுக் கொண்டே.

உடனே மங்களம் “எனக்கும்,என்னுடைய அத்தையும்,மாமாவும் திருவணாமலையிலே இருக் கிறது நன்னா ஞாபகம் இருக்கு. அம்மா சொன்னபடி என்னைக்காவது திருவண்ணாமலையிலே அமக்களமா இருந்தாலோ,இல்லே நம்ம கிராமத்துக்கு வர ‘பஸ்’ ஒரு நாளைக்கு வராட்டாலோ,நான் பத்திரமா அவா ஆத்லே இருந்துண்டு வருவேன்.நீங்க ரெண்டு பேரும் கவலை இல்லாம் இருந்துண்டு வாங்கோ.அது தான் எனக்கு முக்கியமா வேணும்.அப்ப தான் நான் நிம்மதியா அந்த ‘ஹைஸ்கூலுக்கு போய் படிச்சுட்டு வர முடியும்” என்று சந்தோஷத்தில் சொன்னாள்.

ரெண்டு வாரம் ஆனதும் திருவணாமலை ‘ஹையர் ஸ்கூல்’ திறந்தவுடன்,மங்களம் அந்த அக்கி ரஹாரத்து மூனு பெண் தோழிகளுடன் திருவண்ணாமலை “ஹை ஸ்கூலில்” சேர்ந்து படித்து வர ஆரம்பித்தாள்.

மரகதம் தினமும்,தன் பொண்ணு மங்களம் காலையிலே கிளம்பி பள்ளீக் கூடம் போனதில் இரு ந்து சாயங்காலம் வீட்டுக்கு வந்து சேரும் வரை வயத்திலே நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழந்து வந்துக் கொண்டு இருந்தாள்.ரெண்டு நாளைக்கு ஒரு தரம் பகவான் படத்திற்கு முன்னால் நின்றுக் கொண்டு “அம்மா தாயே.நான் சரஸூ ரொம்ப சொன்னாளேன்னு மங்களத்தே திருவண்ணாமலைக்கு படிக்க அனுப்பி இருக்கேன்.அவளுக்கு ஒன்னும் ‘ஆகாம’ அவ சௌக்கியமா ஆத்துக்கு வந்து சேரணு ம்.நீ தான் அவளுக்கு ‘ஒன்னும்’ஆகாம பாத்துண்டு வரணும்” என்று சொல்லி தினமும் வேண்டிக் கொண்டு வந்தாள்.

தன் கணவர் இடமும் ‘இதையே’ அடிக்கடி சொல்லி வந்து நச்சரித்து வந்தாள்.ஆனால் ராமசாமி ஒவ்வொரு தடவையும் மரகதத்தைப் பார்த்து ”மரகதம்,நீ வீணா கவலை பட்டுண்டு வறேன்னு எனக்கு தோன்றது.நம்ப மங்களத்துக்கு ஒன்னும் ஆகாது.நீ தினமும் வேண்டிண்டு வர அமபாள் அவ கூட இருந்துண்டு வந்து அவளுக்கு ஒன்னும் ஆகாம பாத்துப்பா” என்று நம்பிக்கை கொடுத்து வந்தார்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *