வியாபாரத்தில் அகலக் கால் வைத்ததில் ஜனார்த்தனன் குடும்பம் நடுரோட்டுக்கு வந்துவிட்டது
“என்னங்க இன்னிக்கி கிருத்திகை கோயிலுக்குப் போவமா?”
“கடவுள்னு ஒண்ணு இருந்திருந்தா நமக்கு இந்தச் சோதனை வந்திருக்குமா?”
“எனக்காக கோயிலுக்கு வாங்க.”
திருப்பரங்குன்றம் சுவாமியைப் போய் தரிசிக்காமல் குளக்கரை படிக்கட்டில் அமர்ந்தாள் சுமதி
“தொழில் போச்சு… கௌரவம் போச்சு…பெயர் போச்சு.”
“ஆமா… ஆமா…” என்றார்.
“போகாதது ஒண்ணு இருக்குங்க. மறுபடி எழுந்திருவோம்கற தன்னம்பிக்கை. உங்களோட வியாபார மூளையும், கிரியேட்டிவிட்டியும், விடாமுயற்சியும் போகலையே. மறுபடி எழுந்திரலாங்க” என்றபோதே எழுந்த ஜனார்த்தனின் கைகள் கோபுரத்தை நோக்கி கும்பிட ஆரம்பித்தன.
– அக்டோபர் 2011