எல்லோருக்குமான துயரம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 5,178 
 
 

ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் வாகனங்களின் இரைச்சல் ஒருமித்து அவனைத் தாக் குவது போலிருந்தது. ஹோட்டலின் உள்ளிருந்த மெலிதான இருட்டும். சப்தமின்மையும் மனதில் வந்தது. ஆனால் உள்ளே சுந்தரியுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவன் மனது இப்படித்தான் இரைச்சல் போட்டுக் கொண்டிருந்த ஞாபகம் வந்தது,

பசியை நன்கு உணர ஆரம்பித் தான் ஹரி. கோபத்தை உதறிவிட்டு உள்ளேயே இருந்திருக்கலாம் என்று பட்டது. சுந்தரி ‘ஆர்டர்’ செய்த தக்காளி சூப்பும். வெஜிடபிள் பிரியாணியும் மேஜைக்கு இப்போது வந்திருக்கும்.

“என்ன மேடம் ரெண்டு செட் டுக்கு ஆர்டர் பண்ணினீங்க. இப் போ ஒண்ணு மட்டும் போதுங்கறீங்க.

“போதும்ப்பா …. அவர் போ யிட்டார்…” சர்வர் ஏனென்று கேள்வி கேட்பானா, கேட்டால் சுந்தரி என்ன பதில் சொல்வாள். தலை குனிந்துதான் பதில் சொல்வாள். சூப்பும், வெஜிடபிள் பிரியாணியும் நிதானமாயும். சுவையுடனும் இறங் காது. திணித்துக் கொள்ள வேண்டி யிருக்கும். ஓங்காரமாய் வாந்தி யாய் கூட வந்துவிடலாம். சுந்தரி யுடன் உட்கார்ந்திருக்கலாம் என்றுபட்டது.

மேகங்கள் வெளுத்துக் கிடந்தன. வெயில் உக்கிரமாகக் கறுக்கியது. வாகனங்களின் இரைச்சல் மூச்சை முட்டச் செய்தது அவனுக்கு. யாரு டைய அன்புமற்று, தான் இப்படித் தான் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியாத இரைச்சலை உடம்பினுள் கட்டிக் கொண்ட மனிதனாக ஆகி விட்டோம் என்றிருந்தது.

ஒரு வேலையற்ற இளைஞன் வேறு எப்படித்தான் இருக்க முடியும் என்றும் கேட்டுக் கொண்டான். சவரம் செய்யப்படாத முகம். ஆடையின் அழுக்கு சில சமயம் அவனுக்கு பயம் தரும். தெரிந்தவர் களிடமிருந்து விலக்கிக் கொள்ளச் செய்யும். வீட்டில் எவர் முகம் பார்ப் பதும் சங்கடமாகத்தான் இருந்திருக் கிறது. எத்தனை இன்டர்வியூக்கள்… எத்தனை பேரிடம் சிபாரிசு கேட்டு கைகட்டி நின்றது. யாரிடமாவது காலில் விழுந்து இறுதியில் கதறி விடத் தோன்றும். ஏதாவது பணத்தை தயார் ‘ செய்து கொள்ள அம்மாவும் தயார்தான். ஆனால் அதற் கும் அகப்படாத வேலை. பிச்சைக் காரனாய் திரிந்தாயிற்று. எல் லோரிடமும் அந்நியமாகிப் போய் விட்டது.

இன்னும் இரண்டு மூன்று நண்பர்கள் பாக்கி, அவர்கள் வேலையில்இருப்பதால் அவன் அவர்களுடன் அவ்வப்போது தங்குவான். சில நாட்கள் வீட்டிற்கே செல்லமாட்டான். சுந்தரியைப் பார்ப்பதும். பேசுவதும் ஒரு ஆறுதலான விஷயமாக இருந்தது அவனுக்கு. ஆனால் அவளும் தற்போதெல்லாம் தவிர்க்கிறாளா என்ற கேள்வி பலமாக அவன் மனதில் வர ஆரம்பித்து விட்டது.

“பேங்க்க என்னைத் தேடி வர வேணுமா..எங்காச்சிருந்து போன் பண்ணுனா வந்து பாக்க மாட்டானா?”

“அதுக்கு ஒரு ரூபாய் வேணுமே..மனிகைக் கடை மத்த எடம்ன்னா ரெண்டு ரெண்டரை வேணுமே…”

“எதுக்கு இந்த அழுக்கு டிரஸ்…”

‘வீட்டுக்கு போய் மூணு நாளாச்சு.. அதுதா..”

“இவ்வளவு அமுக்கு டிரஸ் ஸோட இங்க வர்ரது நல்லா யிருக்கா?”

“எனக்கு வாய்ச்சது இவ்வளவுதா.. சரி என்னை நீ ரொம்ப தவிர்க்கறே போலிருக்கு… நிஜம் தானா?”

சந்தரி பேசவில்லை. ஒன்றாய் படித்தவர்கள் என்றாலும் அவளுக்கு சுலபமாய் பேங்க் வேலை கிடைத்தது. அவன் நிறைய உதவியிருக்கிறாள். அவனுக்கு ஆறுதலாய் சாயங்காலங்களைக் கழித்திருக்கிறாள். “இதுக்கு அப்ளை பண்ணேன். இதுக்கும்’ என்று விண்ணப்ப பாரங்களுடனும், டிராஃப்ட் களுடனும் அவனை நிர்பந்தப்படுத்தி இருக்கிறாள். எல்லாம் இரண்டு வருடங்களில் சலித்துப் போனது போல் அவனைச் சந்திக்கிறபோது, சொந்தமா ஏதாச்சும் பண்ணக் கூடாதா என்று கேட்க ஆரம்பித்து விட்டாள்.

‘என்னோட டிரஸ், சோர்வானத் தனம் இதையெல்லாம் வெச்சிட்டு உன்னை பேங்குல மீட் பண்றதுக்கு சங்கடமாத்தா இருக்கு. நான் பிசிஓவிலே கியூவிலே நின்னு உன்னெப் பாக்கணும்ன்னு சொல்லின மூணாவது தடவைதா நீ வந்திருக்க… நிராகரிப்பு என்னு…”

‘நிராகரிப்பு இல்லே… எனக்குன்னு இருக்கற குடும்பம். பாரம்…”

“நானும் இன்னொரு பாரமா போவிடக் கூடாதேன்னு பயம் இருக்கா? ”

“தெரியலே…”

“அதுதா உண்மைன்னு நெனைக்கறேன்…. அதுதா என்னைத் தவிர்க்கறே…”
தவிர்க்க முடியாத சிநேகிதம்கர் போலே ஒரு வேலையில்லாதல் னோட சிநேகிதம் வெச்சு துரதிஷ்டம் உன்னை உறுத்த ஆரம் பிசிருக்கு. உன்னோட வாம். கையிலே இது குறுக்க எங்கயும் வந் இருக்கக்கூடாதுங்கறது உன்னோட பயம். சரிதா… சாரி. நான் உன்னை ரொம்பவும் தொந்தரவு பண்ணிட் டேன்…

நாற்காலியிலிருந்து எழுந்த வனை சுந்தரி பார்த்தாள். முகம் கறுத்தது.

“உட்காருங்க…ஆர்டர் பண்ணிட்டேன். சாப்பிட்டுட்டு போலாம்…..”

அவன் விறுவிறுவென வெளி யேறினான். ஹோட்டலின் மெல்லி சான விளக்குகளை யாரோ அணைத்துவிட்டது போலிருந்தது அவளுக்கு.

ரெண்டு நாட்களாய் வீட்டிற்குச் செல்லவில்லை ஹரி. நண்பன் ஒருவனுடன் தங்கியிருந்தான். இப் போது அண்ணன்கள் வேலைக்குப் போயிருப்பார்கள். எனவே வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை மனதில் உறுதியாக்கிக் கொண்டிருத் தான். பசி வேறு தடையை தாமத மாக்கிக் கொண்டிருந்தது. பெரிய அண்ணன் இருந்தால் அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொள் வார்.

“மனநோயாளி மாதிரி ஏண்டா இப்படி திரியறே… நீ ஃபிரண்ட் களோட தங்கறது சரி…. ஆனா வேலையில்லாதவன்னா இப்பிடித்தா இருக்கணுமா வாழ்க்கையை நல்லா பாக்க முடியாதா. கூச்சத்தை யோ, தாழ்வு மனப்பான்மையை யோ விட்டுத் தள்ளு…”

ஆனால் பணமென்று வரும் போது அவர் கறாராகத்தான் இருப் பார். சின்ன அண்ணன் பக்கத்தில் அண்டவிடமாட்டார். எல்லா அம்மாக்களும் பெரிய ஆறுதல்தான். அம்மாக்கள் இல்லாவிட்டால் முதிர்ந்த கிழவர்களின் உடல் நோய் களைப் போல திணற வேண்டி இருந் திருக்கும் என்று படும் அவனுக்கு.

முன் கதவு ஒருக்களித்து, சாத்தி வைக்கப்பட்டிருந்தது. லேசாகத் தள்ள திறந்து கொண்டது. கதவைத் தட்டி திறப்பதென்றால், திறப்பவர் யார் என்பதை முகம் எதிர்கொண்டு பார்க்கமுடியாது. கால்களை, சேலையின் நிறத்தை வைத்துக் கொண்டு அடையாளம் கண்டுபிடிக்க வேண்டிருக்கும். அம்மா என்றால் “என் நெனப்பு இப்பதா வந்ததா” என்பாள். கரகரத்த குரலில். இன்றைக்கு யாரும் கதவை திறக்க வராதது பெரிய ஆறுதலாகவே இருந்தது.

உள் அறைக் கதவுகள் சாத்தியே கிடந்தன. அண்ணிகள் அண்ணன் களை வரவேற்கிற ஆயத்தங்கள் எதுவுமின்றி ஓய்வெடுத்துக் கொண் டிருப்பது போலத் தோன்றியது. அம்மாவைக் கூடக்காணோம். இருந் திருந்தால் அவனின் வாசனையோ, உள் நுழைந்த சலசலப்போ அவளை இழுத்து வந்து அவன் முன் நிறுத்தி யிருக்கும். ஒரு நிமிஷம் தூணில் சாய்ந்து கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டான். மூச்சை மெல்ல இழுத்து வெளிவிட்டான். பசியை முழுமையாய் உணர முடிந்தது. வயிறு சட்டென கபகபவென்று எறிவது போலிருந்தது. வலது கையை வயிற்றின் மேல் வைத்துக் கொண்டான்.

அம்மா கண்ணில்பட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சமையலறை கண்ணில்பட்டது. அம்மா இருந்திருந்தால் இந்நேரம் சாப் பாட்டு தட்டு முன்னே வந்திருக்கும்.

“வேண்டாம்மா பசியில்லெ…. அப்புறம் சாப்படறேன்….”

“பொய் சொல்லாதடா… முகம் பசியெ சொல்லுதே. பசியில்லேன்னு சொன்னாலும் ஒரு வாய் நான் பெசஞ்ச சாதம்ன்னு போட்டுக் கோ” அம்மாவை எவ்வளவு கஷ்டப்படுத்துகிறோம் என்று அருவருப் பாய் இருக்கும் அவனுக்கு. இந்த அம்மாவை எப்போது சுகப்படுத்தப் போகிறோம் என்றிருக்கும்.

சமையலறைப் பக்கம் சென்றான். பரபரப்பில்லாமல் அடிகளைத் தீர்மானித்தவன் போல மெதுவாகச் சென்றான். குக்கர் தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. முன்னால் இருந்த பாத்திரத்தை திறக்க சாதம் இருப்பது தெரிந்தது. பிளேட் ஒன்றில் போட்டுக் கொண் டான். சாம்பாரை மாற்றினான். சாம்பார் மெல்ல வழிந்து அவனின் பேண்ட்டின் கீழ் பகுதியில் சற்று அப்பிக் கொண்டது.

விறுவிறுவென்று சாதத்தைப் பிசைந்தான். சாம்பாரின் வாச னையும், ருசியும் கவளங்களை சுலபமாக விழுங்கச் செய்தது. அம்மா பிசைந்து போட்டால் ருசியும், வாசனையும் நிஜமாகவே உணர முடியும். இப்போது பசிக்கான சாதம். அவ்வளவுதான். அவசர அவசரமாக விழுங்கினான், எதற் காக இந்த அவசரம் என்றும் கேட்டுக் கொண்டான். நிதானமாய் சமையலறை மூலையிலேயே உட் காரலாம் என்று தோன்றியது.

சிமெண்ட் தரையில் காசை போட்டு போட்டு எடுப்பது போல சப்தத்துடன் யாரோ வருவது போலிருந்தது. பெரிய அண்ணயின் மெட்டி சப்தம்தான் இப்படி கேட்கும். அவளின் முகத்தை மனதில் கொண்டு வந்து அந்தக் கவளத்தை விழுங்குவதற்கு முன், அவள் அவன் முன்னால் நின்றிருந்தாள்.

கைகளைக் கட்டிக்கொண்டு ஏதோ ஆச்சரியப்படுகிறவள் மாதிரிப் பார்த்தாள். “திருடு…. திருடு… திருட்டுக்குன்னு தனி ருசிதா” என்றாள் சாவகாசமாய்.

ஹரியின் கையிலிருந்த தட்டு தடுமாறி விழுந்தது போல சிமெண்ட் தரையில் விழுந்து சப்தமுண்டாக் கியது. சாதம் இரைந்து கிடந்தது. புரையேறியவன் வாயிலிருந்து சாதம் நிர்தாட்சண்யமின்றி விழுவது போல சாதம் வெளிவந்து விழுந்தது. திக்கென்றது பெரிய அண்ணிக்கு. ஆச்சர்யப்படுபவள்

போல நின்றிருந்தவள் ஐயோ என்ற பாவ னைக்கு மாறினாள். முகம் பயத்தால் சுறுக்கத் தொடங்கியது.

அவன் வலது கையின் இரண்டு விரல்களை வாயினுள் விட்டான். வாந்தியெடுத்து தின்றதை வெளி யேற்றுகிறதில் தீர்மானமானவன் போல் நாக்கை நீட்டினான். மீண்டும் மீண்டும் ரெண்டு விரல்கள் வாயினுள் சென்று வந்தன. குபுக் சென்று சாதம் ஒருவிதமான நீர் கலந்து வாத்தியாக வெளியேற ஆரம்பித்தது. தின்றதையெல்லாம்

வெளி யேற்றிவிடவேண்டும் என்ற ஆவேசம் முடிந்தது போல விரல்களை வாயினுள் இருந்து எடுத்தவன் பசி வயிற்றை உள்ளிழுப்பது போல இரண்டு கைகளையும் வயிற்றின் மேல் வைத்தான்.

அம்மா பரபரவென்று வந்தவள் “ஐயோ” என்றாள். “என்னாச்சு..” அவன் அருகில் வந்து நின்று கொண் டாள். பெரிய அண்ணியைப் பார்த்து “என்னாச்சும்மா”

என்றாள். அவள் பயத்தில் மூழ்கிப் போனவள் போல் நின்றிருந்தாள், அவளின் உதடுகள் ஏதோ சொல்ல முயல்வது போல துடித்துக் கொண்டிருந்தது.

ஹரியின் கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பித்தது. வாந்தியான தடம் சட்டை முழுவதும் தெரிந்தது. கடைவாயிலிருந்த

ஒழுகலை துடைத்துக்கொண்டான். அம்மா சட்டென உட்கார்ந்தவள் அவன் வாந்தியெடுத்ததை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

ஐயோ என்று கத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அதற் கான சக்தி கூட இல்லாதது போல சக்கையாக இருப்பதாக உணர்ந் தான். சாதமும், நீருமாக வாத்தி யெடுத்ததை வழித்துக் கொண்டிருந் தவளையே பார்த்தான். தன் துயரம் தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கும் ஆனதாவது பற்றின எண்ணம் வந்தது. இது பெரிய துயரம் என்று சொல்லிக் கொண்டான்.

– மே 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *