எங்கு இருந்தோ வந்தவ…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 4,102 
 
 

மடிப்பு கலையாத ஷர்ட் பேண்ட் போட்டுக் கொண்டு வேலைக்கு கிளம்பினான் ராஜா.

வெளியே இருந்த பைக்கை தள்ளி ‘ஸ்¡ர்ட்’ பண்ணினான்.பைக்கில் ஏறிய ராஜா ‘ஸ்டைலாக’ ‘கூலிங்க் க்லாஸை’ எடுத்து போட்டு கொண்டு பைக்கின் கண்ணாடியை சரி பண்ணி,“நான் போயிட் டு வரேன்” என்று சொல்லி விட்டு வேகமாக பைக்கை ஓட்டிப் போனான்.சினிமா ‘ஹீரோ’ போல் இருக் கும் தன் கணவனை தெருக் கோடி போகும் வரை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் கமலா.

ராஜா உண்மையிலேயே பார்க்க ரொம்ப அழகாய் இருந்தான்.சுருண்டு முன் நெற்றியில் விழும் தலை முடி,பொ¢ய கண்கள்,அகண்டநெற்றி,நல்ல ஆஜானுபாகுவான உடல் கட்டு,எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல ‘பர்ஸனாலிட்டியுடன்’ இருந்தான் அவன்.

உள்ளே வந்த கமலா தன் முகத்தை கண்ணாடி முன் நின்றுக் கொண்டுப் பார்த்தாள்.அவளு க்கே அவளைப் பார்க்க பிடிக்க வில்லை.கலைந்த தலை முடி,வேர்வை கசியும் முகம்,பழைய புடவையு டன் ஒத்த நாடியான உடம்புடன் இருந்தாள் அவள்.

உடனே அவள் ‘அவர் ‘பர்ஸனாலிட்டி’ எங்கே,நம்ப ‘பர்ஸனாலிட்டி’ எங்கே’ என்று தன் மனதுக் குள் நினைத்து வேதனை பட்டாள்.அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது.
கல்யாணத்தின் போது கமலாவும் நல்ல அழகாய் தான் இருந்தாள்.

கமலாவுக்கு முதல் குழந்தை மாலா பிறந்த போது அவளுக்கு பாதி அழகு போய் விட்டது. அடுத்து அவளுக்கு இரட்டை பெண்கள் பிறந்தார்கள்.இவர்கள் பிறந்த போது மீதி இருந்த அழகும் அவளுக்குப் போய் விட்டது.கூடவே அவளுக்கு காச நோயும் வந்து விடவே, அவள் உடல் இன்னும் மோசமாய் போய் விட்டது.

இரண்டு வேலை பண்ணாலே அவளுக்கு உடலில் அசதி வந்து விடும்.

தவிர காலை ஐஞ்சு மணிக்கு எழுந்து எல்லா வேலைகளையும் பண்ணி முடித்து விட்டு,கணவ ணுக்கு நாஷ்டா பண்ணிக் கொடுத்து,அவரை வேலைக்கு அனுப்பி விட்டு,மூன்று பெண்களையும் தயார் பண்ணி அவர்களை பள்ளிகூடம் அனுப்பும் வரை அவள் வாயில் ஈ போவது கூட அவளுக்கு தெரியாது.

அவர்கள் எல்லாம் பள்ளிக்குடம் போன பிறகு தான் அவள் தனக்கு என்று ஏதாவது சாப்பிட உட்காருவாள்.கணவன் சம்பளம் ஒன்று தான் வீட்டில் வரும்படி.அந்த சம்பளம் கைக்கும் வாய்க்கும் சரியாய் இருக்கும்.ராஜா ‘ஜாலி’ பேர்வழி.தனக்கென்று வேறு தாராளமாய் செலவழித்துக் கொள்வான்.

மாதம் வீட்டு செலவு பண்ணி,குடும்பத்தை கடன் இல்லாமல் ஏதோ ஓட்டிக் கொண்டு வரவே தவியாய் தவித்தாள் கமலா.இதை தவிர அவள் வைத்திய செலவுக்கு வேறு பணம் வேண்டி இருந்தது இந்த அழகில் அவள் தனக்கு போஷாக்கு பண்ணிக் கொள்ள ஏது பணம் வீட்டில்.

ராஜாவும் சரளாவும் ஹோட்டலில் நல்ல ‘டிபன்’ சாப்பிட்டு விட்டு ‘ஐஸ் க்ரீம்’ சாப்பிட்டுக் கொ ண்டு இருந்தார்கள்.’ஐஸ் க்ரீமை’ சாப்பிட்டுக் கொண்டே”நாம ரெண்டு பேரும் இன்னும் எத்தினி நாள் தான் இப்படியே காதலர்களா காலம் தள்ளுவது ராஜா.நாம சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமே” என்று கொஞ்சலாகக் கேட்டாள் சரளா.

“இன்னும் இரண்டு மாதம் போவட்டும் சரளா.எனக்கு ‘சீப் இன்ஸ்பெக்டராக’ ‘பிரமோஷன்’ கிடைச்சிடும்.அப்புறமா நாம் கல்யாணம் பண்ணிக் கிடலாம்.அப்போ எனக்கு சம்பளமும் இன்னும் கூட கிடைக்கும் சரள்” என்று சொல்லி ‘ஐஸ் க்ரீமை’ காலி பண்ணினான் ராஜா.

”சரிங்க” என்று சொல்லிக் கொண்டே இருவரும் ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்கள். ராஜா சரளாவை அவள் தங்கி இருக்கும் ‘ஹாஸ்டல்’ முன்னால் கொண்டு வந்து ‘ட்ராப்’ பண்ணி விட் டு சிட்டாய் பறந்தான் தன் வீட்டை நோக்கி.

“டீச்சர், நான் இந்த வருஷம் எட்டாவது முடிச்சவுடன் நின்னுப் போயிடப் போறேன்.அப்போ தான் தன் என் இரண்டு தங்கைகளும் என்னை போல் ஒரு எட்டாவதாவது க்ளா¡ஸாவது படிக்க முடியும்” சொல்லும் போதே மாலா கண்களில் நீர் துளித்தது.

டீச்சருக்கு தூக்கி வாரிப் போட்டது.

“ஏன் மாலா,நீ ‘க்ளாஸ் பஸ்டாய்’ மார்க் வாங்கி நல்லா படிச்சு வறே.போன வாரம் நடந்த ஸ்கூல் பேச்சுப் போட்டியிலே நீ பேசினப்போ ‘நான் நல்லாப் படிச்சு ஒரு கலெக்டராக ஆக விருப்பப் படறேன்’ ன்னு தானே பேசினே.இப்போ ஏன் திடீர்ன்னு நீ படிப்பை நிறுத்தி கொள்ளப் போறேன்னு சொல்றே” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் ‘க்ளாஸ் டீச்சர்’.

தங்கள் ஏழ்மை நிலையை ‘டீச்சரிடம்’ விளக்கி சொன்னாள் மாலா.பிறகு தன் அம்மா உடல் நிலையையும்,அவள் மருத்துவ செலவு,தன் இரண்டு தங்கைகள் படிப்பு செலவுக்கு பணம்,குடும்ப செலவு நாளுக்கு நாள் பெருகி வரும் சூழ் நிலையை எல்லாம் சொல்லி விட்டு,அதனால் தான் தன் படிப்பை நிறுத்தி விட்டு,எங்காவது வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டிய அவசியத்தையும் விவர மாகச் சொல்லி அழுதாள் மாலா.

“உங்க வீட்டு கஷ்டம் எனக்கு நல்லா புறிது.அழாதே மாலா” என்று தேத்தறவு சொல்லி மாலா வை அனுப்பி வைத்தாள் அவள் ‘க்ளாஸ் டீச்சர்’ சரளா.

‘கல்யாணம் ஆன ஆம்பிளைங்க இப்படி வீட்டு குடும்ப செலவுக்கு பணம் குடுக்காததாலே எவ் வளவு குழதைங்க பாவம் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடறாங்க‘ என்று எண்ணிக் கொண்டே ‘ஹாஸ்டலு’க்கு வந்து சேர்ந்தாள் சரளா.

அன்று ஹோட்டலில் டிபன் சாப்பிடும் போது ராஜா சரளாவிடம் ”சரள்,நான் அகில இந்தியா தொழிளாளர் மாநாட்டில் கலந்துக்க ஒரு பத்து நாள் டெல்லி போவ போறேன்.நாளைக்கு கிளம்பணும். உன்னை ஒரு ‘டென்டேஸ்க்கு மிஸ்’ பண்ணுவேன்ன்னு நினைச்சாலே,எனக்கு ரொம்ப கஷ்டமா இரு க்கு” என்று அவள் கையை பிடித்துக் கொண்டே சொன்னான்.

“இட்ஸ் ஓகேங்க.‘டென் டேஸ்’ தானே சீக்கிரமா ஓடிப்போயிடுங்க” என்று சொன்னாள் சரளா. இருவரும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.நேரம் ஆகி விடவே சரளா வை ‘ஹாஸ்டலில்’ ‘ட்ராப்’ பண்ணிவிட்டு வீட்டிற்கு வந்தான் ராஜா.

‘அட்டெண்டன்ஸ்’ எடுத்துக் கொண்டு இருந்த சரளா டீச்சரிடம் ஒரு பெண் மாலாவின் லீவு ‘லெட்டரை’க் கொடுத்தாள்.

சரளா அந்த லீவு ‘லெட்டரை’ப் பிரித்து படித்தாள்.

“டீச்சர்,என் அம்மாவுக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது.அதனால் நான் இன்னும் நாலு நாளை க்கு ஸ்கூலுக்கு வர முடியாது” என்று எழுதி இருந்தாள் மாலா.

‘க்ளாஸை’ முடித்து விட்டு சரளா தன் சீட்டுக்கு வந்து உட்காந்தாள்.

கொஞ்ச நேரம் யோஜனை பண்ணின சரளா எழுந்து ஆபீஸ்க்கு போய் மாலாவின் வீட்டு விலாசத்தை ஒரு பேப்பா¢ல் எழுதிக் கொண்டு ஒரு ஆட்டோ பிடித்து மாலா வீட்டிற்கு விரைந்தாள்.

ஹாலில் மாலாவின் அம்மா படுத்துக் கொண்டு இருந்தாள்.பக்கத்தில் மாலவும் அவள் தங்கை களும் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்

டீச்சரைப் பார்த்தவுடனே கமலா ஓடி வந்து “டீச்சர் நீங்க.”என்று பேச போன கமலாவிடம் “எவ்வ ளவு ஜுரம் இருக்கு உன் அம்மாவுக்கு”என்று கேட்டு விட்டு கமலாவின் அம்மாவைத் தொட்டுப் பார்த் தாள் சரளா.

“உன் அம்மாவுக்கு ரொம்ப ஜுரம் அடிக்குதே” என்று சொல்லி விட்டு சரளா தன் செல் போனை எடுத்து ‘ஆம்புலன்ஸ்’க்கு போன் பண்ண எழுந்தாள்.

அப்போது அந்த ஹாலில் மாட்டி இருந்த ‘போட்டோவை’ப் பார்த்த சரளாவுக்குத் தூக்கி வாரி ப் போட்டது.அவளுக்கு உலகமே சுற்ற ஆரம்பித்தது.கீழே படுத்து இருக்கும் பெண்ணோடு மாலையும் கழுத்துமாய் நின்றுக் கொண்டு இருந்தான் ராஜா.

இரண்டு நிமிஷம் ஆயிற்று அவள் தன் நிலைக்கு வருவதற்கு.

மனதில் திடத்தை வரவழைத்துக் கொண்டு ‘ஆம்புலன்ஸ்’க்கு போன் பண்ணி கமலாவை ஆஸ் பத்திரியில் கொண்டு போய் சேர்த்து,வைத்தியத்திகு பணமும் கட்டி ‘அட்மிட்’ பண்ணினாள் சரளா.

கமலாவை பா¢சோதித்த டாக்டர்கள் அவளுக்கு விஷ ஜரம் வந்து இருக்குதுன்னு சொல்லி விட்டு, அதற்கான ‘இஞ்செக்ஷனை’க் கொடுத்தார்கள்.சரளாவிடம் “இந்த அம்மா உடம்பு நல்லா ஆவ மூனு நாள் பிடிக்கும்” என்று சொல்லி வேளா வேலைக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளையும் எழுதிக் கொடுத்தார்.

சரளா ‘ஆஸ்பத்திரியில்’ இருந்த மருந்து ‘ஷாப்பில்’ டாக்டர் எழுதிக் கொடுத்த் மாத்திரைகளை வாங்கி மாலாவிடம் கொடுத்தாள்.

மாலாவுக்கும்,அவ தங்கைகளுக்கும் அருகாமையில் இருந்த ‘ஹோட்டலில்’ இருந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்தாள்.

“மாலா,உங்க அம்மா வீட்டுக்கு வர வரைக்கும்,இந்த பணத்தே நீ வச்சுக்க.அம்மாவையும் தங் கைகளையும் ஜாக்கிறதையா பாத்துக்கோ.நான் சாயங்காலமா வந்து உங்களே பாக்கறேன்”என்று சொ ல்லி விட்டு மாலா கையிலே கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டு கிளம்ப தயாரானாள் சரளா.

உடனே மாலா டீச்சரிடம் ”ரொம்ப ‘தாங்க்ஸ்’ டீச்சர்” என்று சொல்லி கண்களில் கண்ணீர் மல்க ‘டீச்சரை’ வழி அனுப்பி வைத்தாள்.

ஆட்டோவில் ஸ்கூலுக்கு வரும் வழியில் யோஜனை பண்ணிக் கொண்டே வந்தாள் சரளா.

“நம்ம ஆளா இந்த குடும்ப தலைவன்.மூனு குழந்தைங்க பெத்து இருக்கிற ஒரு அப்பா¨வா நாம இது வரை காதலிச்சு வந்து இருக்கோம்” என்று எண்ணும் போதே அவளுக்கு உலகமே இருண்ட டது போல இருந்தது.

தன் முட்டாள்தனத்தை எண்ணி வெட்கப்பட்டாள்.

தன்னை ஏமாற்றிய ராஜாவை மனதுக்குள் திட்டித் தீர்த்தாள்.

ஸ்கூல் வாசல் வந்து விடவே ஆட்டோவை விட்டு கீழே இறங்கிப் வேகமாக உள்ளே போனாள் சரளா.தொப்பென்று தன் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு யோஜனை பண்ண ஆரம்பித்தாள்.

“எந்த கோட்டையை பிடிக்க இப்படி யோஜனை பண்ணிக் கிட்டு இருக்கே சரளா,சாப்பிடப் போ கலையா”என்று சரளாவின் தோள் பட்டையை தட்டி கேட்டாள் உமா.
”மணி ஒண்ணாயிடுச்சா” என்று கேட்டுக் கொண்டே எழுந்தாள் சரளா.

”நீ இந்த உலகத்திலேயே இல்லையா.நான் வந்ததே ரொம்ப ‘லேட்’.மணி ஒன்ன¨றையாவப் போவுது.வா சீக்கிரம் சாப்பிட போவலாம்”என்று அவசரப் படுத்தினாள் உமா.
பள்ளிக் கூட வேலைக்கு நடுவிலே,நான்கு நாட்கள் ஆஸ்பதிரிக்கும்,கமலா வீட்டுக்கும்,அலை ந்து வந்து,கமலா உடம்பு நார்மலுக்கு வந்ததும்,அவளை வீட்டில் கொண்டு வந்து விட்டாள் சரளா.

“டீச்சர்,என் புருஷன் ஊரில் இல்லாத போது நீங்க இவ்வளவு உதவி பண்ணி என் உயிரே காப் பாத்தி இருக்கீங்க. நான் உங்களுக்கு என்ன கைம்மமாறு பண்ணப் போறேன்.நீங்க என் வைத்திய செலவுக்கு பணமும் குடுத்து என் குழந்தைங்களையும் இவ்வளவு அக்கறையா பார்த்துக் கிட்டீங்க. நீங்க ஒரு மனிதப்பிறவியே இல்லீங்க.நீங்க ஒரு தெய்வங்க” என்று தன் உடல் முடியாமையிலும் கமலா கையையைக் கூப்பி சரளாவை வணங்கிணாள்.

அவள் கண்கள் அழுத வண்ணமாய் இருந்தது.

“நீங்க என்னை தெய்வம்ன்னு எல்லாம் புகழாதீங்க.உங்க உடம்பை நல்லா கவனிச்சுக்கங்க. நான் போயிட்டு வரேன்”என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பினாள் சரளா.

வாசல் வரை வந்து நன்றி சொல்லி ‘டீச்சரை’ வழி அனுப்பினாள் மாலா.

ராஜா ஊரில் இருந்து வந்ததும் கமலா தனக்கு விஷ ஜுரம் வந்த விஷயத்தை சொல்லி, மாலா டீச்சர் வந்து செய்த உதவியைச் சொன்னாள்.உடனே ராஜா “மாலா டீச்சர் அவ்வளவு நல்லவங்களா. நல்ல வேளே அவங்க வந்து சமயத்லே உனக்கு உதவி பண்ணாங்க” என்று சொல்லி சந்தோஷப் பட்டான்.

அன்று சாயங்காலம் ராஜா “சரள்,நான் ஊரில் இருந்து வந்துட்டேன்.எங்க யூனியன் கோரிக்கை களே ‘கவர்மெண்ட்’ முழுமையா ஒத்துக் கிட்ட்டாங்க.எங்க யூனினியனுக்கு ‘புல் ஸக்ஸஸ்’ ”என்று சரளா ‘செல் போனில்’ சொல்லி சந்தோஷப்பட்டான்.

உடனே சரளா “அப்படியா பரவாயில்லையே. கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க” என்று

சொல்லி விட்டு தன் ‘செல் போனை’ ஆப் பண்ணினாள்..

கொஞ்ச நேரம் ஆனதும் ராஜா “இன்னைக்கு ‘ஈவினிங்க்’ நாம ‘யூஷ¤வலாக’ மீட் பண்ற ஹோ ட்டல்லே ஒரு ஆறு மணிக்கு மீட் பண்ணலாமா சரள்.நான் உனக்கு ரெண்டு ‘பியூடிபுல்’ ‘சூரிதார் கமீஸ்’ வாங்கி வந்து இருக்கேன்.கூடவே ஒரு ‘சர்பிரைஸ் கிப்ட்டும்’ வாங்கி வந்து இருக்கேன்.அந்த ‘கிப்ட்’ என்னன்னு நான் இப்போ போனில் நான் சொல்ல மாட்டேன் சரள்.நீ ஹோட்டலுக்கு வா. அந்த ‘கிப்ட்டை’ப் பார்த்தா’ நீஅசந்து போயிடுவே.என்ன நிச்சியமா வரணும்.நான் காத்துக் கிட்டு இருப்பேன் சரியா” என்று ‘செல் போனில்’ கெஞ்சினான்.

இப்போ ‘போனில்’ ஒண்ணும் சொல்ல வேணாம்.இப்போதைக்கு ‘சரி’ன்னு சொல்லிட்டு,நாம் என்ன பண்ணப் போகிறோம்ன்னு யோஜனை பண்ணி ஒரு முடிவு எடுப்போம்’என்று நினைத்து “சரிங்க,நான் நிச்சியமா வரேங்க” என்று சொல்லி ‘செல் போனை’ ‘கட்’ பண்ணினாள் சரளா..

யோஜனை பண்ணி ஒரு முடிவுக்கு வந்தாள்.

அவர்கள் இருவரும் வழக்கமாக உட்காரும் இடத்தில் உட்கார்ந்துக் கொண்டு சரளாவின் வர வை எதிர் பார்த்துக் கொண்டு இருந்தான் ராஜா.

”சார்”என்று குரல் கேட்டு திரும்பினான் ராஜா.

”உங்களோடு ‘டிபன்’ சாப்பிட வருவாங்களே ஒரு அம்மா,அவங்க இங்கே ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்து இந்த ‘லெட்டரை’ உங்க கிட்டே தரச் சொல்லிட்டு போனாங்க” என்று சொல்லி ஒரு கவரை ராஜாவிடம் நீட்டினான்.

”குடுப்பா” என்று சொல்லி கவரை வாங்கி கிழித்து ‘லெட்டரை’ படிக்கலானான் ராஜா.

அவன் உடல் வேர்த்து கொட்டியது.

“மிஸ்டர் ராஜா,உங்க மனசை திட படுத்தி கிட்டு இந்த லெட்டரை படியுங்க.

நீங்கள் டெல்லிக்கு போன ரெண்டு தினங்களுக்கு எல்லாம் உங்க மணைவிக்கு விஷ ஜுரம் வந்திச்சி.விஷயம் கேள்விப் பட்டு நான் உங்கள் வீட்டுக்கு ஓடிப் போனேன்.உங்க வீட்டு ஹாலிலில் மாட்டி இருந்த ‘போட்டோ லே’ நீங்க ரெண்டு பேரும் மாலையும் கழுத்துமா நின்னுக் கிட்டு இருப்பதை நான் பாத்தேன்.எனக்கு உலகமே இருண்டு விட்டதை போல இருந்திச்சு.ஏமாந்து போன நான் அப்படியே திரும்பிப் போயிட லாமான்னு தான் நினைச்ச்சேன்.ஆனா உங்க மணைவி ஜுரத்தில் சுருண்டு படுத்துக் கிட்டு இருந்த காட்சி,அவளை சுத்தி உங்க மூனு பொண்ணுங்க புருஷ துணை இல்லாம படும் வேதனை,எல்லாம் என் மனசை ரொம்ப உருக்கிடுச்சிங்க.என் உள் மனம் ’இவங்களை இப்படி நிராதரவாக விட்டுட்டு போவாதே’ன்னு சொல்லிச்சு.நான் உடனே உங்க மணைவியை ஆஸ்ப த்திரியிலே சேத்து,அவங்க வைத்திய செலவுக்கு பணம் குடுத்துட்டு,உங்க மூனு குழந்தைகளுக்கும் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிக் குடுத்து,அவங்க கை சேலவுக்கும் கொஞ்சம் பணம் குடுத்தேனுங்க.

நான் என் பள்ளீக் கூட வேலைக்கு நடுவிலே உங்க மணைவியையும்,குழந்தைகளையும் பாத்து க் கிட்டு வந்தேனுங்க.

நாலு நாள் ஆன பிற்பாடு, நான் உங்க மணைவி உடம்பு ‘நார்மல்’ ஆனதும்,அவங்களே ஆஸ்பத்திரிலே இருந்து ‘டிஸ்சார்ஜ்’ பண்ணி வீட்டுக்கு கொண்டு வந்து விட்டேங்க.

இத்தனை நாளா உங்க கூட நான் ஜாலியாக பழகினேங்க,எனக்காக நீங்களும் நிறைய பணம் செலவு பண்ணி இருக்கீங்க.அதனால் இதை என் கடமையாக எண்ணி நான் இந்த உதவியை செஞ்சேங்க.

ராஜா,எனக்கு தெரியாம இத்தனை மாசமா நான் உங்க மணைவிக்கு நான் ஒரு ‘வில்லியா’ இருந்து வந்தது போதுங்க.நீங்க ஒரு கல்யாணமானவரு.உங்க மணைவி உடல் நிலை சரி இல்லாத வங்க.நீங்க மூனு குழந்தைகளுக்கு அப்பா என்கிற விஷயம் எனக்கு முன்னமே தெரிஞ்சு இருந்தா, நான் உங்க கிட்டே இவ்வளவு மாசமா பழகியே இருக்க மாட்டேங்க.நான் இத்தனை நாள் உங்களோடு பழகின உரிமைலே நான் உங்களை கேட்டுக்கறது ஒன்னு தாங்க.உங்க மணைவி,உங்க குழந்தைங்க உங்க சொத்து.அவங்களுக்கு எந்த வித ஏமாத்தமும் இல்லாம அவங்களே சந்தோஷமாய் வச்சிக்கிட்டு வாங்க. எனக்கு அது போதுங்க.

தயவு என்னை செஞ்சு அடியோடு மறந்து விடுங்க.

இப்படிக்கு உங்களோடு சில காலம் சந்தோஷமாக பழகின சரளா.

லெட்டரை படித்து முடித்த ராஜாவுக்கு அவள் எழுதி இருந்த ஒவ்வோரு வரி யும் ஒரு சாட்டை யடி கொடுத்தது போல் இருந்தது.

‘எங்கு இருந்தோ வந்த ஒருத்தி என் குடும்பத்தின் மேலே இவ்வளவு அக்கறை எடுத்துகிட்டு, என் மணைவி உயிரை பணம் செலவு செஞ்சு காப்பாத்தி இருக்கா.நான் பழனினவ மாலா டீச்சரா.அவ எனக்கு ‘உங்க மணைவிக்கும்,குழந்தைகளுக்கும் ஏமாத்தம் தராம சந்தோஷமா வச்சுக் இட்டு வாங்க ன்னு எனக்கு அறிவுரை சொல்லி ‘லெட்டர்’ எழுதிக் கொடுத்து விட்டு இருக்காள்’என்று எண்ணி வெட்கமும் வேதனையும் அடைந்தான் ராஜா.

தன் தவறை உணர்ந்தான்.

புத்தி தெளிவு பெற்றவனாய் விருட்டென்று எழுந்தான்

புது மனிதனாக மாறினான்.

உடனே குழந்தைகளுக்கு நிறைய ஸ்வீட், காரம், மணைவிக்கு பூ,எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு ஓடினான் ராஜா.

ரொம்ப நாட்களுக்கு பிறகு சாயங்காலம் வீட்டுக்கு சீக்கிரமாக வந்து இருக்கும் ராஜாவைப் பார் த்து, கமலா “ஏங்க, இன்னிக்கு சீக்கிரமா வூட்டுக்கு வந்து இருக்கீங்களே.வெளியே எங்காச்சும் போவ ணுமா” என்று கேட்டாள்.

ராஜா சிரித்துக் கொண்டே“இல்லே கமலா,நான் வூட்லெ தான் உன் கூடவும்,குழந்தங்க கூடவு ம் இருக்கப் போறேன்.நான் தினமும் இப்படித் தான் சீக்கிரமா வூட்டுக்கு வரப் போறேன்” என்று சொ ன்னதும் கமலாவும்,அவன் குழந்தைகளும் சந்தோஷப் பட்டார்கள்.

மணைவி,குழந்தைகங்கள் முகத்திலே ஏற்பட்ட சந்தோஷத்தையும்,சிரிப்பையும், கண்டு மனம் நெகிழ்ந்துப் போனான் ராஜா.

மனதில் கடவுளுக்கும் சரளாவுக்கு தன் மனமார்ந்த நன்றி சொன்னான் ராஜா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *