இட்லித்துணி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 7,650 
 
 

காய வைத்திருந்த இட்லித்துணிகளை எடுத்து அதன் சுருக்கம் நீக்கி மடித்து வைத்துக்கொண்டிருந்தாள் மனைவி.

இது நாள்வரை அவள் அவித்தெடுத்த இட்லிகள் அந்தத்துணிகளின் துணையில்லாமல் வெந்ததில்லை,அது போல் அவள் அந்தத்துணிகள் போட்டு எடுக்கும் இட்லியைத்தவிர்த்து வேறெதையும் நினைத்துப் பார்த்ததில்லை.

அது அவள் கட்டியிருந்த புடவையைப் போலவே இருந்தது, இட்லித் துணியும்/

இட்லித்துணிகளை அலசி எப்பொழுதும் வெயிலில் காயப்போட மாட்டாள் மனைவி.

நிழல்க்காய்ச்சலாக வீட்டிற்குள்தான் காயப்போடுவாள்,அதுவும் சமை யலறை சிங்க் தொட்டியின் மேல்புறமாய் இருக்கிற கம்பியில்தான் உலர்த்தினால்தான் திருப்தி அவளுக்கு/

எதுவும்அவள் கண் பட இருக்க வேண்டும்.அப்பொழுதான் திருப்தி அவளுக்கு.சமையலறையில்அவளுக்குதோதானஇடங்களில்மட்டுமே சமையல் சாமா ன்களை வைத்துக் கொள்வாள்,

கைக்கு தோதான இடங்களில் பாட்டில்களிலும் பிளாஸ்டிக் கண்டெய் னெர்களிலும் அடைபட்டுக்கிடக்கிற ஜாமான்களை அவள் எடுத்துப் புழங்கி விட்டு எடுத்தது எடுத்த இடத்தில் வைத்து விடுவாள்.

ஒரு ஜாமான் கூட அனாவசியமாய் வெளியில் இருக்காது, அதது அதனதன் இடத்தில் இருந்தால்தான் திருப்தி அவளுக்கு/

சமையல் வேலைகளுக்கு அவள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கி றாளோ அதே அளவிற்கு சுத்தமாய் வைத்துக்கொள்வதற்கும் மெனக் கெடுவாள்.

அந்த மெனக்கெடுதலில் இட்லித்துணிக்கு தனி இடம் இருக்கும்,

மறந்தும் கூட வெளியில் வெயிலில் கொண்டு போய் காயப் போட்டு விடமாட்டாள்.

போன மாதத்தின் ஒரு நாளில் ஏதோ ஞாபகப் பிசகாய் அலசிய துணிக ளோடு துணிகளாய் வெளியில் கொண்டு போய் உலர்த்தக் கொண்டு போய் விட்டாள்,

“அதுனால என்ன இப்ப, வெளியில காய்ஞ்சா காய்ஞ்சிட்டுப் போகுது, வெயில்ல காய்ஞ்சா நல்லதுதான,,”எனச்சொல்கிற இவனை இடுப்பில் கைவைத்து முறைத்துப்பார்த்தவாறே சொல்வாள்.

இதுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்னு ஒங்களுக்குத் தெரியும், நீங்கவேணுமின்னேஏங்வாயக்கிண்டனுங்குறதுக்காககேக்குறீங்க,என்பவள் விழிகளை உருட்டிமுறைக்கிற போது விழிகளிரண்டும் கண்களிலி ருந்துகழண்டுதரைதொட்டோடிஇவன்மேனி வருடிதொட்டுச் செல்லும் ,

வருடிச்செல்கிற பார்வையை கொஞ்சம் செல்லம் காட்டி தட்டித் திருப்பி அனுப்பிவிட்டு வாஞ்சை மிகவாய் ஒரு பார்வை பார்த்து அப்படியே திருப்பி அனுப்பி விடுகிற கணங்களில் அவளை அப்படியே தூக்கிக்கொண்டு தூர தேசம் போய் விடலாம் போலிருந்தது.

ஆனால்அப்படிப்போவதற்கு தனியாய் ஒரு நாள்ஒருபொழுதாவது விடுமுறை எடுக்க வேண்டும்தான்,

அப்படி விடுமுறை எடுக்க அலுவலகங்கள் அனுமதிப்பதில்லைதில் லைதான், இதற்கென ஒரு சிறப்பு மனுபோட்டு சம்பந்தபட்டவர்களிட ம் அனுமதி கேட்க வேண்டும்.

”வெயில்ல காயப்போட்டா துணிக நல்லாக்காயுங்குறது எனக்கு தெரியாமயா இருக்கு,துணி எவ்வளவுக்கெவ்வளவு நல்லாக்காயுதோ அவ்வளவுக்கவ்வளவு தூசி படியும். அதுனாலத்தான நான் நெழல்க் காய்ச்சலா காயவைக்கிறேன் இட்லித் துணிய,,,” என்பது அவளது பதிலாய் இருக்கும்.என்கிற ,மனுப் போடு கிற நேரத்தில் அசை போட்ட போது நீங்களும் நானும் நம்ம துணிகளையோ புள்ளைங்க துணிக ளையோ ஏதாவது ஒரு யெடத்துல காயப்போடுவமா சொல்லுங்க என்றாள்.

அவளது பேச்சிலும் ஞாயம் உரைத்ததுதான்.

ஒரு துணியை ஒரு முறைதான் பயன் படுத்துவாள்.மிஞ்சிப்போனால் இரண்டு தடவை.அதற்கு மேல் வேறு புதுத்துணிதான்,

ஓரமெல்லாம்பூக்கள்பூத்ததுபோல்கரைபழுத்துபழுப்பேறி மக்கடித்துக் காண்பிக்க ஆரம்பித்து விட்டாலே”அந்தத்துணி வேண் டாம். வேறு மாற்றி விடுவோம்” என்பாள்,

கடை வீதியில் இருக்கிற ரத்தினசாமி ஜவுளிக்கடையில்தான்துணி எடுப்பாள் பெரும்பாலும்,

அது என்னவென்று தெரியவில்லை,ரத்தினசாமி கடை என்றாலே இட்லித்துணிக்கானது,அதற்குத்தான்அவர்கை ராசியானவர்என பெயர் எடுத்தவர் போலும்,

அவரும்அதற்கேபிறவிப்பலன்எடுத்தவர்போலஅவரதுகடைநம்பிவருகிறவர்க ளுக்கு நம்பினார் கைவிடப்படார் என்பது போல் பறந்து பட்டுக்காட்சி யளிப்பார்.

அவரது கடையை நம்பி இட்லித்துணி எடுக்கிற பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை.

தீர விசாரித்ததில் இட்லித் துணி விற்பதற்கென்ப தனி செக்‌ஷன் ஆரம்பிக்கப் போவதாய் சொன்னார்கள்.

அந்தக்கடையில் துணி எடுப்பதில் ஒரு சௌகரியம் இருக்கிறது அவளுக்கு, எதிர்த்தாற்ப் போல் இருக்கிற வத்தலகுண்டுக்காரர் கடையில்தான் குக்கர், மிக்ஸி,கிரைண்டர்,ஸ்டவ்என ரிப்பேருக்குக் கொண்டுவருவாள்.கொண்டுவந்துகொடுத்து விட்டு எதிர்த்த கடையில் இட்லித்துணி எடுத்து வைத்து விட்டு மார்கெட் போய் காய்கறி வாங்கி வரும்முன்ரிப்பேருக்குக்கொடுத்ததுரெடியாகிவிடும்,பலசமயங்களில் ரிப்பேரான குக்கரை தூக்கிக்கொண்டு வந்து ரிப்பேர் செய்து கொண்டு போய் மதியம் சாப்பாடு பொங்கியிருக்கிறாள்.

வாடிக்கையாளருக்குகடைக்காரரும்உடனடியாய்பண்ணிக்கொடுத்துவிடுவார்.

அவள் கொண்டு போய்க் கொடுத்ததை இவன்போய் வாங்கி வருவான் சமயா சமயங்களின் அலுவலகம் முடிந்து போன நாட்களில்.

கடைக்காரர்கூடச்சொல்லுவார்,”காலையிலஅக்காசொல்லீட்டுத்தான்போனாங்க, நீங்க வருவீங்கன்னு,வந்துட்டீங்க, இப்பத்தான் ஆபீஸ் முடிஞ்சி வர்றீ ங்களா சார் என்பார் கடைக்காரர், சிரித்துக் கொண்டே/

அவள் ரிப்பேருக்குக்கொடுத்ததை வாங்கும் பொழுதோ இல்லை ரிப்பேருக்கான பணத்தைக் கொடுக்கும் பொழுதோ சொல்லுவார் கடைக்காரர்,

“அக்கா மாதிரிதாங்க ஏங் வீட்டுக்காரியும் அவளுக்கு வீட்டுல குக்கர் மிக்ஸின்னுஏதாவதுரிப்பேர் ஆயி நின்னுறக்குடாது ,ஒடனே தூக்கீட்டு ஓடிவந்துருவாகடைக்கு,ஏன் நீவர்ற எனக்கு போன்பண்ணிச்சொன்னா கடையிலஇருந்துஆள்அனுப்புவேன்னுல்லன்னு சொன்னாலும் கேக்க மாட்டா, அவ வேலைய அவளே செஞ்சாத்தான் திருப்தின்னுவா,

“இது கூட பரவாயில்ல, கேஸ் ஸ்டவ்வு ரிப்பேரா போச்சின்னு ஒரு ஆட்டோ கீட்டோ பிடிச்சிட்டு வராம வீட்டுல இருக்குற சைக்கிள்ல கட்டி எடுத்துட்டு வந்துருவா,

“இத்தனைக்கும் வீட்டுல ஒரு வேலைக்காரம்மா இருக்காங்க, கடை யில இத்தனை பேரு இருக்கோம்,இருந்தும் அவ வேலையின்னா அவதான் வருவா, அவதான் எல்லாம் செய்வா,

“வீட்டு வேலைக்காரிம்மாக்குன்னா ரொம்ப வருத்தம் பாத்துக்கங்க இதுல, அவ என்ன சொல்றா தெரியுமா “அம்மா என்னைய நம்பாமத் தான இப்பிடி அவுங்களா போயிக்கிறாங்க கடைக்கின்னு” கேட்டு வருத்தப்பட்டா,

”இதுஏங்வீட்டம்மாவுக்கு தெரிஞ்சிஅவ வீட்டு வேலைக் காரம்மாவ சமாதானப்படுத்தீருக்கா,என்னக்காஎன்னைப்பத்திஒங்களுக்குத்தெரியாதா,ஏங் வேலைய நானே செஞ்சாத்தான் திருப்திங்குறதுன்னு,,/

இங்க கடைக்கி வந்துட்டு சும்மா போக மாட்டாஎதுத்தாப்புலஇருக்குற துணிக் கடையில நல்ல வெள்ளையான மல்லுத் துணியாப்பாத்து எடுத்துக்குவா ,மீட் டர் கணக்கா,

அந்தத்துணிக்கடைக்கல்லாவுல ஓனரய்யா இருக்குர நேரம் போக அவுங்க சம்சாரம் இருப்பாங்க,கிட்டத்தட்ட அம்பது வயசுக்கு மேல இருக்கும் அவுங்க ளுக்கு ஓனரு அம்மா உக்காந்துருப்பாங்க”,

இவளைப்பாத்ததும் இவள உக்காரச்சொல்லீட்டு கடைக்காரப்பையன விட்டு காப்பி வாங்கி வரச்சொல்லீட்டு இவமனசுல நெனைச்சிட்டுப் போன ஒரு மீட்டர் வெள்ளைத் துணியக்கிழிச்சிக்குடுத்துருவாங்க,“ என்ன இட்லிசட்டிக்கு போடுறதுக்குத்தானன்னு./

அவளும் ஆமாம்ன்னு தலையாட்டிக்கிட்டு ஓனரம்மா குடுத்த காப்பிய குடிச்சி ட்டு துணிய வாங்கீட்டுப்போயிருவா ,

“போகும்போது மறக்காம ஒண்ணு சொல்லீட்டுப்போவா பாருங்க,அது மனச தைக்கிறது போல இருக்கும்ன்னு அந்தம்மா ஏங்கிட்ட வந்து ஒரு நாள் ஆத்த மாட்டாம சொல்லிக்கிட்டு இருந்தாங்க,

“வீட்டுல நீங்க அவிச்ச இட்லிய வீட்டுக் காரரும் புள்ளைங்களும் சாப்பு டுட்டு போனதுக்கப்புறம் நீங்க சாப்புட்டீங்களா, இல்ல இன்னைக் கும் பட்னியாத்தான் கடைக்கு வந்தீங்களான்னு கேட்டாங்கன்னுவாங்க”,

”அதச் சொல்லும் போதே அந்த ஓனரம்மாவுக்கு மொகம் ஒரு மாதிரி ஆகிப் போகும்.எனச்சொல்கிறகடைக்காரர் ரிப்பேர்பண்ணிய பாத்திரங் களைகொடுத்த னுப்புவார்,

பரஸ்பரம் இட்லித்துணியும் இட்லிப்பானை விற்கிற கடையாகவும் அதுவே குக்கர் மிக்ஸி ரிப்பேர் செய்கிற கடையாகவும் இருப்பதில் இவன் மனைவிக்கு கொஞ்சம் சௌகரியம் இருக்கத்தான் செய்தது.

நான்ரத்தமும் சதையும் உயிரும் உணர்வுமா இருக்கேன் ,என்னையப் போலத்தான அதுவும்,நான் சட்டிக்கி வெளியில இருந்து வேகுறேன், அது சட்டிக்குள்ள இருந்துவேகுது,அவ்வளவுதான்வித்தியாசம், எனச் சொன்னமனைவி அடுப்பில் தோசை வார்த்துக்கொண்டிருந்தாள்/

வார்த்துக்கொண்டிருந்த தோசை இவனுக்கானது என நினைக்கிறான். மெல்லி சாய் தகடு போல ஊற்றிக்கொண்டிருந்தாள்.

ஒங்களுக்காகத்தான் ஊத்திக்கிட்டு இருக்கேன் தோசை,

என்னமோ இப்பத்தான் வாரி வளைச்சி திங்கப்போறவரு மாதிரிதான். திங்கப்பழகுற சின்னப் புள்ளைங்க தின்னு பழகுறது மாதிரி, கொஞ்சம் கொஞ்சமா பிச்சிப் பிச்சி வச்சி தின்பீங்க,

திங்குறதுரெண்டு,அதுக்கு தேங்காய்ச்சட்னி, மல்லிச் சட்னி இல்லைன் னா சாம்பாரு,

சாம்பாருதான் மதியச் சாப்பாட்டுக்கு ரெடியாயிருதில்ல, ஒங்களுக்கு இப்பிடி வேணும்,பெரியவளுக்குமெத்துமெத்துன்னுஊத்தப்பம்போலவார்த்துக் குடுக்கணும், அவளுக்கு தொட்டுக்கிற எது இருக்குதோ இல்லையோ இட்லிப்பொடியும்தேங்காய்ச்சட்னியும் வேணும்ன்னு வா, பிடிவாதமா, அதுல ஒண்ணு இல்லை ன்னாக்கூட சாப்புடாம எந்திர்ச்சிப் போயிரு வா பிடிவாதமா,

சரி சமயத்துல ஏதோ அப்பிடி கோபமா இருக்கான்னு நெனைச்ச முன்னா அவளோட வழக்கமே அப்பிடித்தான் இருக்கு, முன்னயெ ல்லாம்அப்பிடி இருக்க மாட்டா,ஆனாஇப்பைக்கிஇப்ப அது மாதிரியான பழக்கம் கூடிக்கிட்டே போகு து, ஏண்டி அப்பிடின்னு கேட்டா காலேஜீ, பிரண்ட்ஸீ,பழக்க வழக்கம்ன்னு இன்னும் ஏதோதோ சொல்லுறா,அவ சொல்றதெல்லாம் ஏங் வேலைகள கூட்டுற மாதிரி இருக்கே தவிர கொறைக்கிறது போல இல்ல,.” என்பாள்.

“இதுல எஞ்சினது நானும் சின்னவளும்தான், எனக்கு சரி இந்த வயசுக்கு மேல என்னத்தையாவது இருக்குறத சாப்புட்டுக்கிட்டு இருந்துக்கிருவேன். ஆனா வளர்ற புள்ள அவ,இப்பிடியே மிஞ்சுனத தின்னுக்கிட்டு இருந்தா வயிறு சுருங்கிப்போகாதா,ஒடம்பு எப்பிடி விருத்தியாகும்,,?சொல்லுங்க, பெரியவள நீங்க கவனிக்கிற அளவு கூட சின்னவ மேல கவனம் வைக்கிறதில்ல, அவ ளும் சரி நமக்கு இவ்வளவுதான் வாய்ச்சத்ன்னு சுங்கிப்போனா சுருங்கி/

“சாப்பாடு தண்ணி துணி மணி மத்த மத்த எல்லாவிஷயத்துலயும் அவளுக்கு அவளே ஒருகட்டத்தப்போட்டுக்கிட்டு வாழப்பழகிக்கிட்டா,,

”பெரியவ அப்பிடி ,சின்னவ இப்பிடி நீங்க அதுக்கெல்லாம்மேல காலை யில எட்டு மணிக்கு எந்திரிச்சி குளிச்சி முடிச்சி ஆபீசுக்கு கெளம்ப வேண்டியது, ஆபீஸீ முடிஞ்சி வந்து ராத்திரி பண்ணெண்டு மணி ஒரு மணி வரைக்கும் முழிச்சிருக்க வேண்டியது.அப்புறம் காலையில எட்டு மணிக்கு எந்திரிச்சி வழக்கம் போல குளிச்சி கெளம்பன்னு இப்பிடியேதான் இருக்குறீங்க,

“இதுல ஒரு நா ஒரு பொழுதாவது ஏங் செரமம் என்னன்னு கேட்டுருக் கீங்களா,அடுப்படிப்பக்கம் வந்துருக்கீங்களா,தோசைக்கி என்ன செய்யி றேன், இட்லிக்கு என்ன செய்யிறேன், சட்னிக்குஎன்ன சாம்பாருக்கு என்ன மதியம் சோறு எப்பிடி வருதுன்னு ஏதாவது யோசிச்சிருக்கீங்க ளா,,,,

“நீங்க வாட்டுக்கு மாசத்துக்கு ஒரு தடவை அரிசிக் கடையில அரிசி வாங்கிப் போடுறதோட சரி,அதுகூட நீங்க எங்க வாங்கிப் போடுறீங்க, போன் பண்ணிச் சொன்னதும் கடைக்காரங்க கொண்ணாந்து போட்டுர் றாங்க,அதுல கூட இட்லி அரிசி வேணுமுன்னு நான் பத்து தடவை ஒங்ககிட்டசொன்னதுக்கப்புறம்பதினொன்னாவது தடவையா வாங்கிக் கொண்ணாந்து தருவீங்க, அதுக்குள்ள ஏங் தொண்டத்தண்ணி வத்திப் போகும்,

“ஆனா அரிசி வர்றதுக்குள்ள நீங்களும் பெரியவளும் இன்னைக்கி இட்லிக்கு போடலையா தோசைக்கு போடலை யான்னு ஆயிரம் தடவை கேட்டுருவீங்க, நானும் தலை விதிய நொந்து சிரிச்சிக் கிறதத் தவிர்த்து அந்த நேரத்துல வேற எதுவும் செய்ய முடியாதவளாப் போயிருவேன்…”எனச்சொல்பவள் தெனசரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கசின்னவஒடம்புஅனுமிக்கா இருக்குறதுனாலஅவளுக்கு பீரியட் ஒழுங்காவரமாட்டேங்குது,மாசாமாசம் இர்ரெகுலராத்தான் இருக்கு, ஒண்ணு ரெண்டு நாளு தள்ளிப்போகுது,இல்லைன்னா ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி வந்துருது,

”இதப்பத்தி எப்பவாவது ஏங்கிட்ட கேட்டுருக்கீங்களா நீங்க,போன வாரத்துல இதச்சொல்லாமுன்னுவந்தப்ப பேசாமக்கெட,”நொய் நொய் ங்காம” ன்னு சொல்லி ஏங் பேச்ச அமிக்கீட்டீங்க,

இன்னைக்கித்தான் அதச்சொல்ல நேரம் கெடைச்சது சொல்றேன்.

அது மட்டுமில்ல,அவ ட்ரெஸ்ஸீ, போக்குவரத்து ,படிப்பு மார்க்கு, இன்னும்இன்னுமான எதுபத்தியுமே கவலைப்பாடாம நீங்க பாட்டுக்கு ஒங்கவேலைசம்பாத்தியமுன்னுமட்டும்இருக்கும் போது நான் ஒத்தை யாளாஎத்தனையத் தான் மல்லுக்கட்டி இழுக்குறது சொல்லுங்க, என்றவளை ஏறிட்ட போது,,,,,

மடித்து வைத்துக்கொண்டிருந்த இட்லித்துணிகளின் சுருக்கங்கள் அவளது முக ரேகைகளாய் பட்டுப் பிரதிபலிக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *