இடி விழ…

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 1,916 
 
 

”ஐ… யோ … கடவுளே, உனக்குக் கண்ணில்லையா?” என்று மனத்தின் அடித்தளத்திலிருந்து விரக்தியினாற் கிளப்பப்பட்ட ஒரு குரல் காதிலே விழுந்து, கண்களைத் தான் வந்த வழியே அழைத்துச் சென்று, ஒரு சிறுகுடிசை யில் நிறுத்தியது. வெளியான ஓரிடத்தில் தனித்திருந்த தினாலும், தோற்றத்தினாலும், அதற்கும் மற்றைய வீடு களுக்கும் ஒரு வித பந்தமுமில்லையென் பதை அறிய முடிந் தது. உள்ளே – மரணத்தின் கடாட்சத்தைப் பெறும் பக்குவமடைந்த ஒரு வயோதிபன் கிடந்தான். அவனது சுருக்கு விழுந்த தேகமும், குழிவிழுந்த கன்னங்களும், மங் கிய கண்களும், தங்கள் சேவையிலிருந்து ஓய்வு பெறும் நாளை வெகு விரைவில் எதிர்பார்த்தன.

ஆழ்ந்த துக்கத்தின் அமுக்கத்தைக் குறைக்க, அவ னது கண்கள் துன்பத்தை நீராக்கி வெளியே தள்ளின. அப்பொழுது உலகின் பொதுவிளக்கு மறைந்து, வீட்டின் அகல்விளக்கு ஏற்றும் நேரமென்பதையோ, இயற்கையி னாலேற்பட்ட தரையின் தாகத்தை, இயற்கையே தீர்க்க முயன்றுகொண்டிருக்கின்ற தென்பதையோ, அறியாமற், கிழவன் சிந்தனைப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தான்.

“பளீர்” என்ற மின்னலைத் தொடர்ந்த பேரிடி யொன்று சிந்தனைப்படிகளில் ஏறிக்கொண்டிருந்த கிழ வனைத் தள்ளிவிழுத்தியது. “வெடுக்” கென எழுந்தவன் தன்னையே நினைத்துச் சிரித்தான். சேவையிலீடுபட்ட அவனது உடலுறுப்புக்களுக்குச் சக்தியளிக்கச் செலுத் தப்பட்ட தண்ணீருக்குத் தொண்டையிலிருந்த துன்பக் கறள், பிரவேசத்தடை விதித்தது. நிதானமாக மீண்டும் படுத்துக்கொண்டான்.

வாணவேடிக்கை பயங்கரமாகவிருந்தது. மரணத்தையும் அமைதியுடன் ஆலிங்கனம் செய்யவேண்டிய கிழவனது உள்ளத்திலே, பயமெனும் வித்து முளை விட்டு “ஆ…. கட வுளே? இதென்ன தொந்தரவு” என்ற கிளையை வாயினால் வெளித் தள்ளியது.

கண்ணாகிய வைத்தியனால் மாற்றமுடியாத துன்ப நோய்க்குச் சிகிச்சையளிப்பதில், அவனது வாய் ஈடுபட் டது: “ஆ! இதென்ன உலகம்! யார் தான் உலகத்திலே நல்லவங்க. எல்லாங் கொஞ்ச நாளைக்குத்தான் . ஆசை யோடே வளர்த்த மகனே இண்டைக்கு அடிச்சானே! ‘வெளியே போடா, நாயே!’ எண்டு தள்ளினானே. அட, நன்றிகெட்ட நாயே! உனக்கு இடிவிழ …” என்று பொ ரிந்து தள்ளினான். இடைவேளையில் இருமல் அவனை ஒரு கை பார்த்தது.

“அட, நான் இனியும் உன்ரை வீட்டுக்கு வருவ னெண்டு நினையாதேடா! இண்டைக்கு நான் கட்டின இந்தக் குடிசை எனக்குக் காணுமெடா! மண்ணாப் போவானே! உனக்கு இடிவிழுமெடா!”

சற்று நேரம் அமைதியாகக் கிடந்தான், கிழவன். கோபங் கனன்றெரிந்த அவனது உள்ளத்திற் பாசமழை பொழிந்தது. உலக விரக்தி கிளப்பிய புன்னகையைத் தொடர்ந்து, ”இதென்ன உலகம் என்ன தான் நிலைச்சி ருக்கு? யாரைக் கெட்டவனெண்ணுற? ஒருத்தன் ஒரு நேரம் நல்லவனாக இருக்கிறான்! ஒரு நேரம் கெட்டவனாக இருக்கிறான்! மனிதன் எல்லாம் அப்படித்தானே! அவ னைக் குறைசொல்லி என்ன? எப்படியும் அவன் என்ரை மோன் தானே! ஒரேயொரு குஞ்சு! ஆ… அவனைத் திட்டி விட்டேனே! அவன் குழந்தை; என்ன தெரியும்? ஐ…. யோ இடிவிழ எண்டு திட்டிவிட்டேன்! அப்படி நடக்கக்கூ டாது! கடவுளே, என்ரை குஞ்சைக் காப்பாத்து! அப்படி ஒருநாளும் நடக்காது. ‘நாத்திட்டு மடிமேல்’ என்னு வாங்க. அவன் வாழட்டும்…! ”இவை அவனது உள்ளத் திலூற்றெடுத்து, அலைமோதிய அன்பென்னும் பாலி லிருந்து, தெறித்த வெண்ணைத்துகள்கள்களாக, வாயினால் வெளியேறின.

“சோ…” வென்ற இசைச்சலுடன் பெய்த மழையும், பலமான காற்றும், உலகப் பிரளயத்திற் பங்குபற்றுவ தற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தன. இயற்கையின் காற்று வேகமாக வீசியது.

“அம்பா … ஆ ….” ஒரு மாடு மிகவும் அண்மையிற் கத்தியது.

“தொம்…. ம்” – கிராமத் தின் மற்றைய வீடுகளிருந்த திக்கில், ஒரு பனையோ, தென்னையோ முறிந்து விழுந்தசத்தம். அதைத்தொடர்ந்த கூக்குரல், “ஐயோ .. யாற்றையோ வீட்டிலே பனையோ தென்னையோ விழுந்துவிட்டது” என்ற வார்த்தையைக் கிழவனிடம் தோற்றுவித்தது. தொடர்ந்து கொண்டிருந்த கூக்குரலைக் காதுகொடுத்துப் பார்த்தான், கிழவன்.

“கட வுளே! என்ற மகன் வீட்டுப் பக்கமாகக் கேட்குதே” என் றவன் துடித்துப் பதைத்து எழுந்து, மகனது வீட்டை நோக்கிப் புறப்பட்டான். இருட்டிலே ஒன்றும் தெரிய வில்லை. கிழவன் குறிப்பிலே தள்ளாடித் தள்ளாடி நடந் தான். மழையும் பெய்துகொண்டிருந்தது. நிலத்திலே சிறு வெள்ளமிருந்ததினால், வேகங்குறைந்த கிழட்டு நடை யைக் கட்டுப்படுத்தியது. போசப் போகக் கூக்குரல் கூடிக்கொண்டு போனது. கிழவனது இதயம் ‘திக் திக்” கென்றது.

“ஐ…. யோ! நான் திட்டினபோல நடந்துவிட்டதோ ” என்று அழுதான்.

“ஆ…. என் மகனே…!” என்று நடையின் வேகத்தைக் கூட்டினான்.

“ப. k…ர்” — கிளை விட்ட ஒரு மின்னலைத் தொடர்ந்து, “படா…ர்” என்ற இடியேறு. “ஐயோ” வென்ற அலறலோடு, கிழவனது உடல் நிலத்தில் வீழ்ந்தது. கிழவனின் அமைதியைக் கலைக்க விரும்பாத மழையும் அமைதியடைந்தது.

மறுநாட் காலையில் “என்ரை அப்பா …!” என்று தந் தையைத் தழுவிய தனயனின் இதயத்திலூற்றெடுத்த அன்புப் பிரவாகம், கண்களில் உடைப்பெடுத்து, கிழவ னது உடலை நீராட்டியது.

– வெ.கோபாலகிருஷ்ணன் – கதைப் பூங்கா – பல்கலை வெளியீடு, பேராதனை, இலங்கை – முதற்பதிப்பு ஜனவரி 1962

வெ. கோபாலகிருஷ்ணன்: மண்டை தீவைச் சேர்ந்த இவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யின் பழைய மாணவர்; துடிப்பான இவ்விளைஞர் ஏற்க னவே சில சிறு கதைகளைப் படைத்துள்ளார் எனினும், ‘இடிவிழ ..’ அவரது உயர்ந்த சிருஷ்டிகளில் ஒன்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *