“ஏய்! ……வாட்ச்மேன்!…உள்ளேபோய்உங்கமுதலாளியைஉடனேவெளியே வரச்சொல்!….”
“ எதற்குசார்?…”
“ சொன்னதைச்செய்!…இல்லாவிட்டால்உனக்கு உதை கிடைக்கும்!…ஜாக்கிரதை!..” என்றுகைகளைஓங்கிக்கொண்டுஅந்தகோடவுன்வாசலில்வந்துசத்தம் போட்டான் முரளி. அந்தவயசானவாட்ச்மேன்பயந்துபோய்விட்டான்.
உள்ளேஓடிப்போய்முதலாளியிடம், “சார்!…யாரோஒருஆள்வாசலிலில்உங்களைக்கூப்பிடச்சொல்லிஅடிக்கவருகிறார்!”
ஆடி தள்ளுபடி விற்பனைக்காகஒருபெரியகோடவுனைவாடகைக்குப்பிடித்துதற்காலிகமாக ஜவுளிவிற்பனைக்கடையைப்போட்டிருந்தார் அருமைநாயகம். வடநாட்டுமில்களிலிருந்துஏகப்பட்டஜவுளிகளைக்கொண்டுவந்துகுவித்திருந்தார்! நிறையவிளம்பரம்செய்திருந்தார். அதனால்ஏகப்பட்டகூட்டம்!
அருமைநாயகம்ஒருஅமைதியானமனுஷன்! வாட்ச்மேன்சொன்னதைக்கேட்டுஎன்னவோஏதோஎன்றுவெளியேஓடிவந்தார்.
அவரைப்பார்த்தவுடன் “நீங்கஎன்னநெனைச்சிட்டிருங்கீங்க?….ரோட்டைஎல்லாம்விலைக்குவாங்கிட்டநெனப்பா?…கொஞ்சமாவதுஅறிவுவேண்டாம்?..”
“ தம்பி!….என்னவிஷயம்என்றுசொல்லு!…தப்பாஇருந்தாசரிசெய்திடலாம்!…”
“ உங்களுக்குகண்ணாஇல்லை?….அங்கேநீங்களேபாருங்க!…”
முரளிசுட்டிக்காட்டியபகுதியில்காம்பௌண்ட்சுவர்ஓரம்நிறையவாடிக்கையாளர்கள்தாங்கள்கொண்டுவந்தடூவீலர்களைவரிசையாகநிறுத்தியிருந்தார்கள். யாரோஒருவர்அந்தவரிசைக்குப்பின்னால்ரோட்டில் தன்டூவீலரைநிறுத்தியிருந்தார்.
“யாரோஅவசரத்தில்நிறுத்திவிட்டுப்போயிருக்காங்க…தம்பி! வேண்டுமானால்வாட்ச்மேனைவிட்டுத்தள்ளிவைக்கச்சொல்கிறேன்…நீங்கடூவீலரில்தானேவந்தீங்க..அப்படியேகொஞ்சம்தள்ளிஒதுங்கிப்போயிருக்கலாமே?..”
“ என்னசார்!.. நீங்கரோட்டைஅடைச்சுஉங்கவண்டியைநிறுத்துவீங்க!…நான்ஒதுங்கிப்போகவேண்டுமா?…. இப்படிஅறிவுகெட்டத்தனமாபேசறீங்க?…நான்அந்தவண்டிமேலஎன்வண்டியைஏற்றி அதைடேமேஜ்செய்திடுவேன்!..அல்லது .நடுரோட்டில்அனாமத்தாகிடந்ததென்றுஎடுத்திட்டுப்போய்போலீஸ்ஸ்டேசனில்விட்டுடுவேன்!…”
“ என்னதம்பி!..இந்தசின்னவிஷயத்திற்குபெரியவங்களை மரியாதையேஇல்லாமஇப்படிப்பேசுகிறாய்?..”
அதற்குள்வேடிக்கைபார்க்ககூட்டம்சேர்ந்துகொண்டது!. அந்தக்கூட்டத்தைதள்ளிக்கொண்டுஒருஇளம்பெண்வந்தாள். தமன்னாபோல்உடம்பு. சமந்தாவைவிடஅழகு! சினேகாமாதிரிசிரிப்பு.
“சார்!..அதுஎன்வண்டி…. அவசரத்தில்நிறுத்திவிட்டு உள்ளேபோய்விட்டேன்.. சாரி!..” என்றுசிரித்துக்கொண்டேவண்டியைஎடுத்தாள்!.
“ என்னம்மா!….இப்படிசெய்திட்டே?…உன்னால்இங்குஒரேபிரச்னை!…” என்றுஜவுளிக்கடைமுதலாளிஅந்தப்பெண்ணிடம்சலித்துக்கொண்டார்.
அதற்குள்முரளிஅந்தப்பெண்முன்வந்து, “நோ!…பிராப்ளம்மேடம்!…!.நீங்க..உங்கவண்டியைகொஞ்சம்ஓரமாகநிறுத்தியிருந்தால்.. எல்லோருக்கும்வசதிஎன்று தான் சொல்லிக்கொண்டிருந்தேன் பரவாயில்லை மேடம்!…நீங்க சாவியைக் கொடுங்க நானே ஓரமா கொண்டு போய் நிறுத்தி வச்சிடறேன்!…என்று சாரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்!….அதுக்குள்ளே நீங்களே வந்திட்டீங்க!….. நீங்க போய் பார்த்திட்டு மெதுவா வாங்க மேடம்! ..” என்றுசொல்லி, என்று அந்தப் பெண்ணிடம் சாவியை வாங்கிக் கொண்டு, டூ வீலரை கொண்டு போய் ஓரமாக நிறுத்தி விட்டு பய பக்தியோடு சாவியை கொண்டு வந்து மீண்டும் அந்தப் பெண்ணிடம் நீட்டினான்! அந்தப் பெண் சிரித்துக் கொண்டே “தேங்ஸ்!…….” என்று சொல்லி விட்டு மீண்டும் ‘சாரி செலக்ஸ’னுக்காக அந்த ஹாலுக்குள் போய் விட்டாள்
அவள் போய் ரொம்ப நேரமாகியும் “ஹி!……..ஹி!…….” என்று இளித்துக் கொண்டே முரளி நின்றதை பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைக் கூட அவன் உணரவில்லை!
– பாக்யா ஆகஸ்டு 12-18 இதழ்