(1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சில நாட்களுக்கு முன் வெளியான பத்திாகை செய்தி :-
தம்பதியை வழி மறித்து நான்கு கயவர்கள் மனைவியை மட்டும் இழுத்துச் சென்று அவரை மானபங்கப் படுத்தி அனுப்பி விட்டனர். வீடு திரும்பிய அவள் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டாள்.
இச்செய்தி பின்னால் மறுக்கப்பட்டது.
ஆனால் –
இதில் ஒரு கதை ‘கரு’ நமக்கு அகப்படுகிறது.
இதை ஆதாரமாக வைத்து எப்படி கதையைத் தொடரலாம் எவ்வாறு முடிக்கலாம்? சில திரைக்கதை வசனகர்த்தாக்களைக் கேட்டோம், அவர்கள் தங்கள் கற்பனையை ஓட விட்டுத் தங்கள், தங்கள் மனோதர்மப்படி கதைவை முடித்து வைக்க, சேகரித்து அளிப்பவர்: அன்பு.
இந்த வாரம் எழுதுகிறவர்: காரைக்குடி நாராமணன்.
வாசலில் ஸ்கூட்டர் சத்தம் – வீட்டின் கதவைத் தாரா திறக்கிறாள். யாரவள்? ராதா வின் தங்கைதான், அவளைப் போலலே அச்சிட்ட வார்ப்பு.
ஸ்கூட்டரிலிருந்து ராதா, ராதாவின் கணவன் விஜயராகவன், குழந்தை செல்வி மூவரும் இறங்கி வீட்டுக்குள் வருகிறார்கள். செல்வி தாயின் தோளில் அரவணைத்துக் கொண்டு சின்னப் புறா போல் தூங்குகிறாள். அவளுக்கென்ன இந்தப் பிரச்னையைப் பற்றி?
தாரா, ராதாவையும் விஜயராகவளையும் மாறி மாறிப் பார்க்கிறாள்.
“ஏக்கா ரெண்டு பேரும் ஒரு மாதிரியா இருக்கிங்க?”
“ஒண்ணுமில்லை தாரா, சினிமாப் பார்த்துப் பயத்திட்டா.” விஜயராகவன் தடுமாறிச் சமானித்தான்.
“அக்கா பொம்புளை – பயத்திட்டா, உங்களுக்கென்ன? நீங்களுமா பொம்புளை”
தன்னை ‘ஆம்புளை’ என்று ஒத்துக்கொள்ள முடியாத நிலையில் விஜயராகவன் படுக்கை யறைக்குச் சென்றான்.
“செல்விக்குப் பால் காய்ச்சி இருக்கியா தாரா?”
“காய்ச்சினேன் அக்கா. பால் திரிஞ்சு போச்சு; கெட்டுப்போன பாலைக் கீழே கொட்டிட்டேன்”
தாரா சாதாரணமான நிகழ்ச்சியை சாதாரணமாகச் சொல்லிவிட்டாள். ஆனால் ராதாவின் நெஞ்சில் அது விஷமாய் இறங்கியது.
படுக்கை அறையில் படுத்தும் தூக்கம் வராத நிலையில் இருவர் நெஞ்சமும் நினைவுகளைப் பம்பரமாய்ச் சுற்றியது.
“ராதா “
“ம்..”
“நான் ஆம்புளையா இருந்தா உன்னைக் கற்பழிக்க இழுத்துச் சென்றதை என் கண்ணாலே பார்த்துக் கிட்டிருப்பேனா. நான் கோழை, கையாலாகாதவன்.”
“அப்படிச் சொல்லாதீங்க. நீங்க ஆம்புளையா இருந்ததாலேதான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே இதே குழ்நிலையிலே என்னைக் காப்பாத்தினீங்க” – கண்கள் கலங்கிய நிலையில் அந்தச் சம்பவம் நிழலாடுகிறது.
வீதி விளக்குகள் அனாதைக் குழந்தைகள் போல் எரியாமல் நிற்கின்றன. ராதா இரவு ஆபீசிலிருந்து நடந்து வருகிறாள். திடீரென்று இரண்டு தெருப் பொறுக்கிகள் அரிவாளுடன் அவள் முன் தோன்றி அச்சுறுத்தி அவள் கற்பைச் சூறையாட முயலுகிறார்கள். இந்தச் சமயம் அங்கு ஸ்கூட்டரில் வத்த விஜயராகவன் அவளைக் காப்பாற்றுகிறான். அந்தப் போராட்டத்தில் விஜயராகவனின் இடது காலை அவர்கள் வெட்டி விடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் நெகிழ்ச்சிதான் இருவரின் வாழ்வுப் பிணைப்பு, இதை நினைத்தவள் அவன் கால்களைத் தடவி முத்தமிட்டு அழுகிறாள். கற்பைத் தெய்வமாக நினைக்கும் ஒரு பெண் அழாமல் என்ன செய்வாள்?
அடுத்த நாள் பொழுது நெருப்பாய்க் கொதித்தே புறப்படுகிறது. – திடீரென்று ‘பாத்ரூமில்’ தீயின் பிழம்பு பரவுகிறது. ராதாவில் அலறல் கேட்கிறது. விஜயராகவன் பதறிப்போய்க் கதவைத் திறக்கிறான், அங்கே மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீயில் அக்கினி புஷ்பமாய்க் கருகியிருக்கிறாள் ராதா.
அக்கினி வலம் வந்துஅன்பு வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவள் அக்கினியில் தன்னைச் சங்கமித்துக் கொண்டாள். அட்சதை அரிசி போட்டு ஆயிரம் ஆயிரம் பேர் வாழ்த்திய ராதாவின் பிணத்தில் வாய்க்கரிசி போட்டு வாழ்வரசியைக் காட்டிலே விட்டு வந்தனர்.
வீட்டில் நுழைந்ததும் ராதாவால் எழுதப் பட்ட ஒரு கடிதம் அஞ்சல் செய்யப்பட்டு வந்து கிடந்தது.
விஜயராகவன் பிரித்துப் படித்தான்.
“அன்புள்ள அத்தான்,
நீங்கள் ஆம்புளைதான். அதே நேரம் நான் கெட்டுப் போனவள்தாள். கெட்டுப்போன எந்தப் பொருளையும் வீட்டில் வைக்காதே, தூக்கி வெளியே எறி என்று எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறீர்கள். அப்படி இருக்க, கெட்டுப் போனவள் இருக்கலாமா? கற்பு பறிபோன பின் காலமும் மனிதர்களும் எவ்லளவுதான் ஆறுதல் சொன்னாலும் அதை வாழ்வாக என்னால் கருத முடியவில்லை. நீங்கள் என் மகள் செல்விக்காக என் தங்கை தாராவைத் திருமணம். செய்து கொள்ளுங்கள். என்ன யோசிக்கிறீர்கள்? எனக்கும் அவளுக்கும் மிகவும் வித்தியாசம் இல்லை. நான் ராதா, அவள் தாரா, ஒரு எழுத்துத் தான் வித்தியாசம்”
‘கற்பு என்ன மண்ணங்கட்டி. கடை தோறும் அது ஒரு ரூபாய்க்கு மூன்று கிடைக்கிறது! இதை வாங்கினால் போதும். கற்பு அரியாசனம் ஏறிவிடும்’ என்று உருவாகும் ஒரு சமுதாயத்தைச் சிந்திக்க வைக்கும் ஒரு சிறந்த புத்தகமாய் ராதா பெண்களின் மனத்தில் என்றும் வாழ்வாளாக!
– 22-06-1980
அவ பண்ணாத தப்புக்கு அவ என் சாகனும்.