கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 9,760 
 
 

சென்னையின் பன்னாட்டு விமான முனையத்தில் அந்த அமொpக்கன் ஏர் லைன்ஸ் விமானம் தரையிறங்கியது, ஆனால் மனம் முழுவதும் நிறைந்த பாரத்தோடு அதிலிருந்து அற்புதா இறங்கினாள், வழக்கமான சோதனைகளை முடித்து வெளியில் வந்தாள், அவளுக்கு சென்னை புதியதாக உருவாக்கப்பட்ட நகரமாகவே தோன்றியது, விடியற்காலை குளிர்ச்சியில் வாகனம் வெளியேற்றும் புகை காற்றில் கரைந்து மு்க்கில் முட்டியபோதுதான் தனது தாய்நாட்டின் வாசனையை மீண்டும் உணர்ந்தாள் அற்புதா.

“கால் டாக்ஸி மேடம்?” என்ற பவ்யமான குரல் கேட்டு

“ராயல் லீ மெரிடியன் போகனும்?”

“ஓ,கே, மேடம் போலாம்”, என்று காரோட்டி பயணப் பெட்டிகளை டிக்கியில் வைத்தான், உள்ளே அமர்ந்தவளின் மனதில் கரை சேர முடியாத குழப்ப அலைகள் nஉறh nஉறh வென்று இரைச்சலடித்தன,

மரக்காணம் சாம்பு ஐயரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது, வேத விற்பன்னர், சாஸ்த்திரங்களைக் கரைத்துக் குடித்தவர், மேல் நாடுகளில் கோயில் கைங்கர்யத்திற்கென்று டாலர்களின் கொட்டிக் கொடுக்கிறோம் என்று சொல்லியும், தன் சேவை இங்கே கோயில் கொண்டிருக்கும் மாதேஸ்வரனுக்கு மட்டுமே என்று உறுதியாக இருப்பவர்.

“ஏண்டா சாம்பு நாலு பெண்களை பெத்து வச்சிருக்கே. எப்படிடா கரையேத்துவ?” என்று ஊர்ப் பெரியவர் கேட்ட போது,

“இல்லய்யா இவனை விட்டு நான் பிரிஞ்சா என் பிராணன் போயிடும்* என்று பதில் கூறி விட்டார், அப்படிப் பட்டவரின் முதல் பெண்தான் இந்த அற்புதா. சங்கரி என்று தன் அம்மாவின் பெயரைத்தான் வைத்திருந்தார், அவள் அதிர்ஷ்டக்காரி, அந்தக் காலத்திலே ராணி மாதிரி வாழ்ந்தவள், தன் பெண்ணும் அப்படி இருப்பாள் என்ற நம்பிக்கையில் அம்மாவின் பெயரை வைத்தார், அது பலித்து விட்டது, ரமேஷ; ரூபத்தில், தூரத்து உறவினர் ஒருவர் முலமாக இவளைப் பார்த்து இவள் அழகில் மயங்கி பள்ளி இறுதி மட்டுமே தாண்டியவளை மணம் முடிக்கச் சம்மதித்து அதில் வெற்றியும் கண்டான், இருவருக்கும் பதிமுன்று வயது வித்தியாசம், அவன் செய்த முதல் மாற்றம் அவள் பெயரை அற்புதா என்று மாற்றியதுதான், நெகுநெகுவென்ற உயரம் வயதுக்கு மீறிய வளர்த்தி. ஊடுருவும் பூனைக்கண்கள். எடுப்பான நாசி. அந்த நாசிக்கும் உதடுக்கும் நடுவே அழகான கடுகு போன்றதொரு மச்சம். பளபளக்கும் உதடுகள். தொடையைத் தொடும் தலைமுடி…,,,, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

முதன் முதலில் பம்பாயில் வாசம், இரண்டு மாதங்களில்; ரமேக்ஷுக்கு ப்ராஜெக்ட் நியூஜெர்ஸியில், அவளுக்கு அது முற்றிலும் புதிது, அவள் வாழ்நாளில் மரக்காணத்தைத் தாண்டியதில்லை, அவளை ஒவ்வொரு விக்ஷயத்திலும் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்லிக் கொடுத்து. நடை உடை. பேச்சு நாகரிகம் எல்லாவற்றிலும் தான் விரும்பிய மாற்றத்தை அவள் மனது உடம்பு எல்லாம் ஏற்கும் வண்ணம் மிக மிகப் பொறுமையாக பயிற்சி கொடுத்து தனக்கேற்றவளாகவும் அதே சமயம் அவள் தன்னிச்சையாக செயல்படவும் பாடுபட்டான், இதை அவன் செய்து முடிக்கும் போது இரண்டு வருடங்கள் கழிந்திருந்தது, அமெரிக்கா வாசமும் வசதியான வாழ்க்கையும் அவனது அன்பும் அரவணைப்பும் அவளைப் பேரழகியாக்கியது, அது பற்றி அவன் கர்வமும் பெருமையும் கொண்டான்.

“அற்புத், இந்த கவுனைப் போட்டுக்கோயேன்*

“ஐய்ய்ய, இட்லித் துணி மாதிரி இருக்கு,,இதைப் போட்டுண்டா எல்லாம் தெரியற மாதிரி இருக்கும், ம்உறும் நான் மாட்டவே மாட்டேன், தாவணி கட்டும் போது இடுப்புத் தெரிஞ்சாலே அம்மா கத்துவா, இதெல்லாம் என்னைப் போட்டுக்கச் சொல்லி வற்புறுத்தாதேள்னா,,,சொல்லி முடிப்பதற்குள்ளாகவே விசும்பலுடன் அழுகை வந்து விட்டது.

ஆனால் ரமேஷ் கொஞ்சம் கூட அசரவில்லை, “ஓ.கே, ஓ,கே, நீ இதை இன்னைக்குப் போட்டுக்க மாட்டே அவ்வளவுதானே, லீவ் இட்”.

நீ முதலில் இந்த ‘ஏன்னா’ வரேளா இதெல்லாம் கட் பண்ணு, கால் மீ ரமேஷ், பேர் எதுக்கு வைக்கிறோம் தெரியுமா?. கூப்பிடத்தான், என்ன புரியுதா?”, கன்னத்தில் தட்டினான்.

“அதில்லேன்னா, நீங்க என்ன விட ரொம்பப் பெரியவா ஒங்களைப் போய் நான் எப்படி பேர் சொல்லி”.

அவள் கையை மெதுவாகப் பற்றித் தோளோடு அணைத்துக் கொண்டான், அருகில் அமர்த்திக் கொண்டு அவள் கைவிரல்களில் மெதுவாக ஒவ்வொரு விரலாக சொடுக்குப் போட்டுக் கொண்டே சொன்னான்,

“இதோ பார் அற்புத். ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான் உன்னைப் போல் ஒரு பெண்ணை என் மனைவியாக ஏன் தேர்ந்தெடுத்தேன் தெரியுமா? நீ எனக்கு மட்டுமே உன் அன்பு, பரிவு, பாசம், காதல் எல்லாவற்றையும் எப்போதும் தரவேண்டும், என்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் ஆஹா, ரமேஷ் ரொம்ப ரொம்ப லக்கிடா, எப்படிப்பட்ட பேரழகி வைஃப் ஆக வந்திருக்கிறாள், எல்லோருடனும் நன்றாகப் பழகுகிறாள், சொசைட்டி கல்சர் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாள் என்று என்னைப் பார்த்து எல்லோரும் பொறாமைப்படவேண்டும், அதுதான் என் ஆசை, நிறைவேற்றுவாயா அற்புத்?”, என்று நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான், விரல் சொடுக்கு முடிந்திருந்தது.

பிறகென்ன அப்புறம் நடந்தவைகள் அற்புதாவின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டன, நாணம் விலக்கி அழகழகான மாடர்டன் உடைகளை அணிந்தாள், நுனி நாக்கு ஆங்கிலம் பழகிக்கொண்டாள், நடனம் கற்றுக் கொண்டாள், ரமேஷ் உறுப்பினராக இருக்கும் கிளப்களில் நடக்கும் பார்ட்டிகளில் கலந்து கொண்டாள், எல்லோருடனும் ரமேஷின் விருப்பப்படி பழகத் தெரிந்து கொண்டாள், நட்பு வட்டம் விரிந்தது, நண்பர்களோடு முதலில் ரமேஷூடன், பின்பு நண்பர்களோடு தனியாக வெளிநாடுகளுக்குப் பறந்தாள், மது அருந்தவும் பழகிக் கொண்டாள்.

அற்புதா கொஞ்சம் கொஞ்சமாக கணவனை விட்டு விலகிப் போய்க் கொண்டிருந்தாள், புதிய வாழ்க்கையும் புதிய அழகான இளமையான அவள் வயதொத்த நண்பர்களும் அவளுக்கு வேறொரு உலகத்தை அறிமுகம் செய்தார்கள், வீட்டிலே நில்லாமல் வெளியிலேயே எப்போதும் சுற்ற ஆரம்பித்தாள், ஏற்கனவே தன் மனைவியை வெறிபிடித்தாற்போல் காதலிக்கும் ரமேஷ் எப்படி இதைத் தாங்குவான்?. 30 எம்,எம், திரையாக இருந்த சந்தேகக் கண், 70 எம்,எம், திரையாக விஸ்வருபம் எடுத்தது, மனநோய் உடலை பாதித்தது, அது ரமேஷ் விஷயத்தில் 100 சதவிகிதம் உண்மையாயிற்று, வயோதிகத் தோற்றம் அவனை ஆட்கொண்டது, அவளின் சாதாரண நட்பு கூட அவனின் சந்தேகத்திற்கு ஆளானது, உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் இருவருக்குமிடையே பெரிய இடைவெளி உருவானது, போதையில் சில சமயம் அவன் அவளைக் கை நீட்டி அடிக்கவும் செய்து விடுகிறான்.

ஹோட்டலின் அறைக்கு வந்ததும் கதவைத் தாளிட்டு விட்டு உடையை மாற்றிக்கொண்டு ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள், இடது கை தானாகவே வலது தோள்பட்டையைத் தடவியது, அங்கே பற்கள் பட்ட இரண்டு இஞ்ச் தழும்பு கண்களில் நீரை வரவழைத்தது, உதட்டைச் சுழித்துக் கொண்டாள்.

“அற்புத், இன்றைக்கு அஜய்யோடு கிளப்பில் நீ ஆடிய ஆட்டம் வெரி வெரி அக்லி, சே, டோண்ட் யூ ஃபீல் அசாம் அபௌட் இட்? அதுவும் என் எதிரிலேயே…”

“ஹல்லோ, மையிண்ட் யுவர் வொர்ட்ஸ் ரமோ, திஸ் ஈஸ் டு் மச், நீதானே என்னை இப்படியெல்லாம் இருக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தினாய்? இப்பொழுது பிடிக்கவில்லையா? ஒரு விஷயத்தைக் கட்டாயப்படுத்திக் கற்றுக் கொடுத்து விட்டு உனக்குப் பிடிக்கவில்லை என்றால் நான் விட்டு விட வேண்டுமா என்ன? என்னுடைய எல்லையை நான் தாண்டவில்லை, நீ அப்படி நினைத்தால் விவாகரத்தைத் தவிர வேறு வழியில்லை, வயது வித்தியாசம் பார்க்காமல் உன்னைக் கட்டிக் கொண்டது தப்பாகப் போயிற்று, யூ ஆர் அன்ஃபிட் ஃபார் எனிதிங், வார்த்தைகள் தடிக்க போதையின் உச்சத்தில் இருந்த அவன் ஆத்திரத்தில் அவளைக் காயப்படுத்திவிட்டான்,
ஸ்,ஸ், என்று பெருமு்ச்சு விட்டாள், உடம்பும் மனசும் நிம்மதியைத் தேடி அலைந்தது, மஞ்சள் காமாலையால் அவதிப்படும் அவனை விட்டு விட்டு வந்து விட்டேன், ஏதோ தோன்ற…..கைபேசியில் சந்தியாவை அழைத்தாள்.

“டாக்டர் சந்தியா, எப்படி இருக்கீங்க? நான் அற்புதா ஃபிரம் நியூஜெர்ஸி…”

“ஓ, நைஸ் என்ன இந்த நேரத்தில்?”

“நான் உங்களை உடனே பார்க்கவேண்டும், அப்பாயின்ட்மென்ட் வாங்கத்தான், நான் இப்பொழுது இந்தியாவில் சென்னையில்”, அவள் பேசிய தொனியில் பதட்டம் இருந்ததை சந்தியாவால் உணர முடிந்தது.

“ஓ,கே, காலையில் 9 மணிக்கு கோடம்பாக்கத்தில் இருக்கும் என்னுடைய வீட்டிற்கு வந்து விடுங்கள், முகவரி மெஸேஜ செய்கிறேன்,
அலைபேசியைத் துண்டித்தவுடன்தான் அவள் ஒரு மாதிரியாக அமைதியடைந்து கண்ணயர்ந்தாள்.

“சொல்லுங்க அற்புதா என்ன பிரச்சினை?”

“டாக்டர், உங்களுக்கே தெரியும், நானும் ரமேக்ஷும் எப்படி இருந்தோம் என்று. இப்பொழுது அவன் டார்ச்சர் தாங்க முடியவில்லை, எதற்கெடுத்தாலும் சந்தேகம் சந்தேகம் சந்தேகம், உச்சக்கட்டமாக அடித்துக் காயப்படுத்திவிட்டான், நானும் என்ன காரணம் கிடைக்கும் என்று காத்திருந்தேன் விவாகரத்து வாங்குவதற்கு, இது ஒன்று போதும், அவன் போதைக்கும் அடிமையாகியிருக்கிறான், அதற்கான ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன, எனக்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்”.

படபடப்பான அவளது பேச்சில் ஏதோ ஒரு இயலாமை தென்பட்டது,

“அற்புதா, ரிலேக்ஸ், நீங்கள் சொல்வதெல்லாம் சரி, ஆனால் ஒரு சராசாரி இந்தியப் பெண் தன் கணவருக்குப் பிரச்சினைகள் வரும் போதும் தவறான பாதையில் செல்லும் போதும் அவரை அதிலிருந்து மீட்கத்தானே முயற்சி செய்வார்கள், விட்டு விட்டு ஓடி விடமாட்டார்களே? நீங்கள் அப்படி ஏதும் முயற்சி செய்தீர்களா?”

“…………..”

“சரி அதை விடுங்கள், நீங்கள் திருமணமான புதிதில் இங்கு வந்த போது எப்படி இருந்தீர்கள்? இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் கணவர் ஒரு மிகப் பெரிய உலகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார், வாழ்க்கை. அந்தஸ்து எல்லாவற்றையும் உருவாக்கித் தந்திருக்கிறார், இருவருமே ஒரே நேரத்தில் அதை அனுபவித்து இருக்கிறீர்கள், இப்பொழுது அவர் நோய்வாய்ப்பட்டு வயோதிகமடைந்து விட்டார், நீங்கள் இந்த நேரத்தில் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் அவரை நல்வழிப்படுத்த முயற்சி செய்யவேண்டும், உணர்வு ரீதியாக அவரோடு இருந்து நான் உங்களுக்காகத்தான் என் அன்பு முழுவதும் உங்களுக்கே உரியது, நீங்கள் அறிமுகப்படுத்திய புதிய உலகத்தில் இதெல்லாம் சகஜம் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தும் என்னைச் சந்தேகிக்கலாமா? நீங்கள் எப்படி என்னை மாற்றி உங்கள் விருப்பப்படி சமுகத்தில் என்னை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்றீர்களோ, அதைப் போல் நானும் உங்களோடு இருந்து மீண்டும் உங்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவேன் என்று முயற்சி செய்யுங்கள் அற்புதா…”

“மனிதன் வாழ்க்கையில் சறுக்குவது சகஜம், கணவன் மனைவி உறவில் சறுக்கல்கள் வரும் போது ஒருவர் மற்றவரைத் தாங்கிப் பிடித்து விழாமல் காப்பாற்றுவதுதான் உண்மையான தாம்பத்தியம், நளாயினி கண்ணகி கதைகளெல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன,, முயற்சி செய்யுங்கள் ஆல் த பெஸ்ட்”, என்று கைகுலுக்கினாள் சந்தியா…

அதில் ஒரு அழுத்தத்தையும் கண்டிப்பையும் உணர்ந்தாள் அற்புதா, அவள் மனதில் மின்னல் கீற்றுப் போல் ஒரு ஒளி…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *