அம்மா என்றால் அன்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 4,998 
 
 

சித்ரா ஸ்கூல் முடிந்து வந்ததும், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அம்மா மல்லிகா எவ்வளவு சொல்லியும் காபி, டிபன் சாப்பிடாமல், தன் தந்தை திரவியம் வருவதற்காகக் காத்திருந்தாள்.

“சித்ரா, எந்த விஷயமாக இருந்தாலுகம் அப்பா வந்த பிறகு பேசலாம். ஒழுங்கா அடை சாப்பிட்டு விட்டு டியூசனுக்கு போ” என்றாள் அம்மா மல்லிகா.

“எனக்கு அடையும் வேண்டாம். காபியும் வேண்டாம். நான் டியூசனுக்கும் போக மாட்டேன்.”

“ஏன்”

“உனக்கு எதுவுமே தெரிய மாட்டேன் என்கிறது. நான் எல்லாவற்றிற்கும் டியூசன் டீச்சரிடமும் அப்பாவிடமும்தான் கேட்க வேண்டியிருக்கிறது. எங்க டீச்சர் கீதாவிற்கு எல்லாம் தெரிகிறது. அவர்கள் எவ்வளவு அழகான எஉனி நாக்கு “இங்லீஸ் பேசுவார்கள் தெரியுமா?”

“சித்ரா, நான் படிக்க வில்லை என்பதால் தானே கண்ணே உன்னை நன்றாகப் படிக்க வேண்டும் என்று திருமப்த் திரும்பச் சொல்கிறேன்”

“எனக்குப் படிக்கத் தெரியும். நான் ஒன்று டியூசனுக்குப் போக வில்லை”

“ஏன் உடம்புக்கு சரியில்லையா?”

“அப்படியெல்லா ஒன்றுமில்லை.” மல்லிகா குழந்தையின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். “காய்ச்சல் எதுவுமில்லையே, ஏன் டியூசன் போகவில்லை” என்றாள் பரியோடு.

அவள் கையைத் தட்டி விட்டவள் “நான் எல்லாம் அப்பா வந்த பிறகு பேசிக் கொள்கிறேன்” என்றாள்.

“சரி, உன் யூனிபார்மையாவது கழற்றி துணியை மாற்றுக்கொண்டு உட்கார்”\”நான் ஒன்று செய்ய முடியாது” என்ற சித்ராவை அவள் விருப்பப்படி விட்டு விட்டு தன் சமயலறைக்குச் சென்று மற்ற வேலைகளைக் கவனித்தாள் மல்லிகா.

திரவியம் வீட்டிற்கு வந்து டையை உருவிப் போட்டு விட்டு ஷுவையும் போட்டு விட்டு திரும்பிப் பார்த்தப்போது சித்ரா கோபத்தில் அமர்ந்திருப்பது புரிந்தது. அருகில் வந்து “என்னடா? சித்ரா குட்டி என்னாச்சு?” என்று அருகில் வந்து தலையை ஆதரவாகத் தடவினான்.

அவள் மறுபக்கம் திரும்பி அமர்ந்து கொண்டாள். டீ கொண்டு வந்த மல்லிகா, இன்றைக்கு டிபன் வேண்டம், காபி வேண்டாம். டியூசன் போஅக்மாட்டெனென்று அடம்பிடிக்கிறாள். என்ன என்று கேட்டால் கோபத்தில் பேச மறுக்கிறாள்” என்றாள்.

“சரி. சரி நாம் பார்த்துக் கொள்கிறேன்” என்று டீயை வாங்கிக் கொண்டு “சித்ரா குட்டிக்கு என்னாமா ஆச்சு?” என்றான் திரவியம்.

“நீங்கள் ஏன் படிக்காத இந்த அம்மாவை கல்யாணம் செய்து கொண்டீர்கள் அப்பா?” என்று கோபமாகக் கேட்ட போது திரவியத்திற்கு தூக்கி வாரிப்போட்டது. “ என்னம்மா சொல்கிறாய்” என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.

:நீங்கள், எங்க டீச்சர் கீதா மாதிரி படிச்ச பெண்ணாக கட்டியிருந்தால் நான் எதற்கெடுத்தாலும் டியூசன் டீச்சரிடம் போய்க் கேட்க வேண்டிய அவசியம் வராதில்லையா?”

“அது வந்து… சித்ரா..”

“இல்லையப்பா, எது கேட்டாலும் தெரியாதுங்கிறாங்க. இந்த அம்மா சரியில்லே, பாருங்க ஸ்டைலா பேசத் தெரிய வில்லைஎங்க கீதா டீச்சர் எவ்வளவு அழகாக நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவர்கள். தமிழில் கூட அழகாகப் பேசுகிறார்கள்; காடன் சேலையை எவ்வளவு நருவிசாகக் கட்டிக் கொண்டு வருகிறார்கள் தெரியுமா?”

“அது சரி சித்ரா, எல்லோரு கீதா டீச்சர் மாதிரி இருக்க முடியுமா? நம்முடைய அம்மா அளவிற்கு அவர்களுக்கு சமைக்கத் தெரியுமா?”

“சமக்கிறது ஒரு பெரிய விஷயமாப்பா?”

“இல்லையென்றால் இவ்வளவு ருசியாக நமக்கு சாப்படு போட முடியுமா? உங்க கீதா டீச்சருக்கு இந்த அளவிற்கு சமைக்கவோ, வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளவோ நேரம் இருக்காது. நம்முடைய அம்மா எவ்வளவு அழகாக வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். உன்னைத் தினமும் விடியற்காலம் எழுப்பி, துணி இஸ்திரி போட்டு, பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த அளவிற்கு உன் கீதா டீச்சரால் முடியாது சித்ராம்மா.”

“போங்கப்பா, உங்கலுக்கு ஒன்றும் தெரியாது. கீதா டீச்சர் மாதிரி நம்ம அம்மா கிடையாது.”

“சர், சரி யூனிபார்மைக் கழற்றி விட்டு டியூசனுக்கு ஓடு” என்றவன் மல்லிகா கண்ணீர் விடுவதை பார்த்து”சீ, அசடு சின்னக் குழந்தை ஏதோ சொல்கிறது. அதைக்கேட்டு நீயும் அழுது கொண்டிருக்கிறாயே” என்றான்.

“இல்லைங்க, உங்க படிப்புக்கு நீங்க படிச்ச பொண்ணப்பார்த்து கல்யாணம் செய்திருக்கலாம்.”

“சரியாப் போச்சு. இன்றைக்கு அம்மாவிற்கும் பொண்ணுக்கும் என்னாச்சு” என்றவாறு டீயைக் குடிக்க ஆரம்பித்தான்.

சிலநாட்கள் கழித்து சித்ராவிற்கு திடீரென்று பயங்கரமான டைபாய்டு காய்ச்சல் வர, அவளால் பள்ளிக்கு செல்ல முடியாமல் ஒருவாரமாக படுக்கையிலே இருந்தாள்.

மல்லிகா இரவு பகல் பாராமல் டாக்டர் சொன்ன மருந்துகளை எல்லாம் கொடுத்து அவள் சுகமாவதற்காக, பகவானைப் பிரார்த்தனை செய்து, பூஜை புனஸ்காரங்கள் செய்து, உபவாசமிருந்து பத்துப் போட சித்ரா கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினாள்.

அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த திரவியம் மெதுவாக சித்ரா அருகில் வந்து “இப்போது எப்படி இருக்கிறது? என்று கேட்டார்.

“நாளையிலிருந்து ஸ்கூலுக்குப் போகிறாயாம்மா?”

“ஆமாப்பா”

இந்நேரம் “உங்கள் கீதா டீச்சர் மாதிரி அம்மா இருந்திருந்தால் உன்னைப் போட்டு விட்டு ஸ்கூலுக்குப் போயிருப்பார்களே, நம்ம அம்மா மாதிரி ஒருவாரத்திற்கு லீவு போட்டு உன்னை அவர்களால் அருகிலிருந்து கவனிக்க முடியுமா?”

“ஆமாப்பா, நம்ம அம்மா மாதிரி நல்ல அம்மா யாரும் கிடையாது” என்று அருகில் நின்ற மல்லிகாவைப் பிடித்து கட்டிக் கொண்டாள் சித்ரா.

“இனி எப்போதும் அம்மாவிற்கு மனதை நோகடிக்கக் கூடாது. என்ன சித்ரா” என்று திரவியம் கேட்க, “ஸாரி, அம்மா “ என்று மல்லிகாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் சித்ரா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *