அம்மாவின் பார்வையில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 4,301 
 

என்னங்க! அத்தையை டாக்டர்கிட்டே அழைச்சுகிட்டுப் போயிட்டு வாங்க! அவங்க இரண்டு கண்களிலிருந்தும் தண்ணீ தண்ணீயா வருதாம், உருத்திக்கிட்டே இருக்காம், யாரையும் சரியாக தெரியலைனு சொல்றாங்க! எதுவாக இருந்தாலும் மங்கலாகவும், ஜடப்பொருளாகவும்தான் தெரியுதாம், என்னன்னு டாக்டர்கிட்டே போயி காண்பித்து விட்டு வாங்க, என் தன் கணவன் சேதுராமனை வற்புறுத்திக்கொண்டு இருந்தாள் மனைவி சீதா.

இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை செய்தாச்சு, டி வி பார்க்கிறதை குறைக்கனும், இல்லைன்னா கஷ்டம்தான்.

எனக்கு இருக்கிற வேலையிலே இப்ப முடியாது, ஏன் மதுரைக்கு சின்னவன் வீட்டிற்கு போயிருந்தாங்களே அங்கேயே டாக்டர்கிட்டே காண்பித்து மருந்து வாங்கி வரலாம் இல்லே, என அலுத்துக்கொண்டான்.

ஏங்க அவங்க உங்க அம்மாங்க! அவங்களுக்கு ஒன்னுன்னா மூத்தவர் நீங்க செய்யாம யாருங்க செய்வா?

சரி சரி, ஆரம்பிச்சுடாதே! மாலை வந்து நான் அழைத்துப்போகிறேன் என்றபடி அலுவலகத்திற்கு சென்றான்.

சேதுராமனுடன் வேலை பார்ப்பவர் மாசிலாமணி, இருவருமே அடுத்த வருடம் ஓய்வு பெறும் வயதில் உள்ளவர்கள்.

மணியின் தாயார் இறந்து காரியங்கள் முடிந்து இருபது நாளுக்குப் பிறகு அன்றுதான் வேலைக்கு வந்து இருந்தவர் கவலையில் இருப்பதைப் பார்த்து,

வருத்தப்படாதே மணி, கிடந்து உடம்புக்கு முடியாம, கஷ்டப்பட்டு இறக்காம, யாருக்கும் தொந்திரவா இல்லாம போனதை நினைத்து மனசை தேற்றிக்கொள், என்றார் சேதுராமன்.

தினமும் வேலையிலிருந்து வந்துட்டானா?சாப்பிட்டானா? என இன்னும் குழந்தையாகவே நினைத்து என்னைப் பற்றிக் என் மனைவியிடம், கேட்கும்போதெல்லாம் அப்படி ஒரு சந்தோஷமாக இருக்கும் எனக்கு.

உடம்புக்கு முடியலைன்னாலும் நான் தினமும் அவர்களை பார்த்துகிட்டாவது இருந்துருப்பேன், இப்படி பொசுக்குனு என்னை விட்டுப் போயிட்டு என வருந்தினார். இனி வாழ்நாளிலே அவங்களை பார்க்கவே முடியாதே, அதை நினைத்தால்தான் எனக்கு நெஞ்சை அடைக்குது என தேம்பி அழுதார்.

சீதா, டாக்டர்கிட்டே அப்பாயின்மென்ட் வாங்கிட்டேன், நீயும் வா அம்மா கூட போயிட்டு காட்டிட்டு வந்திடலாம் என்று கூப்பிட, அவளும் கிளம்பினாள்.

அம்மா பெயரு? கேட்டார் டாக்டர்.

எங்கோ பார்த்து பார்வதி அம்மாள்.என்றார்.

என்ன வயசாகுது?

என்பத்தி ஐந்து.

இரண்டு கண்களும் அறுவை சிகிச்சை செய்து எவ்வளவு நாளாகுது? என கேட்டார் டாக்டர்.

விழித்தார்கள்..

இடது கண் செய்து ஐந்து வருடமாச்சு, வலது கண் செய்து ஆறு வருடமாச்சு, என்றாள் சீதா,

எவ்வளவு சரியாக சொல்கிறாள்!? அம்மா மீதான மனைவியின் அக்கறைப் பற்றி பெருமிதமடைந்தார்.

பரிசேதனை செய்தவர், நரம்புகள் ரொம்ப பலவீனமாக இருக்கிறது, வயசு ஆகிட்டதால் அப்படித்தான் இருக்கும், மேலும் சிகிச்சை ஏதும் செய்வதற்கு வாய்பில்லை, சில சொட்டு மருந்துகளும், சில மாத்திரைகளும் ஒரு மாதத்திற்கு எழுதித் தருகிறேன் தொடர்ந்து சாப்பிட கொஞ்சம் சரியாகலாம்,என நம்பிக்கையில்லாமல் கூறினார்.

இதைக் கேட்ட அத்தை, சரிதான் என்பத்து ஐந்து வயசு வரை உழைச்சு இருக்கு. இதுவே அதிகம் தான் என்றார்.

வீடு வந்து சேர்ந்த சேதுராமன் சோகமாக இருந்தவரைக் கண்டு, படுக்கும்போது சீதா, என்னங்க என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?

ஒன்றுமில்லை என்று சொல்லும்போதே கண்கள் கலங்கிற்று சேதுராமனுக்கு.

எனக்குத் தெரியும் உங்களைப் பற்றி, உங்களாலே எதையும் மறைக்க தெரியாது. சொல்லுங்கள் என்றாள்.

மாசிலாமணியோட அம்மா இறந்திட்டாங்க, இனி அவர் அம்மாவை பார்க்க முடியாம போனதை நினைத்து வருந்தினார், நான் ஆறுதல் கூறினேன். ஆனால் என் அம்மாவிற்கோ கண் பார்வை குறைந்து போய் என்னை இனிமேல் அவர்களால் பார்க்க முடியாமல் போய்விடுமோ என பயம் எனக்கு வந்து விட்டது,

ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த அவர்களின் விழியின் பார்வையில் இனி நானும் மறைந்து ஒரு ஜடப்பொருளாகி விடுவேன், என்பதை நினைக்கும் போதே என்னை ஏதோ செய்கிறதே, என்று மனைவியின் மடியில் முகம் புதைத்து அழத்தொடங்கினார்.

ஏங்க, அத்தையே சரியாகிடும் என்று நினைத்து தேற்றிக்கிட்டாங்க, நீங்களும் உங்களை தேற்றிக்கொள்ளுங்கள் என்று தலையைக்கோதினாள் சீதா.

பிள்ளைகள் தாயை இழந்து காணமுடியாமல் இருப்பதும், தாய் இருந்தும் தன் கண்களால் பிள்ளைகளை காணமுடியாமல் இருப்பது, இரண்டுமே வேதனைக்குறியதுதான்.

விழிகள் இருக்கும்போதே விழித்துக்கொள்வோம்!

Print Friendly, PDF & Email

ஒட்டாத உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

பணம் பிழைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *