அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2021
பார்வையிட்டோர்: 4,752 
 
 

அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 | அத்தியாயம்-25

“மாமா,நீங்கோ எனக்கு மாப்பிள்ளேக்கு எந்த ‘பேப்பர்’லேயும் ஒரு ‘அட்வர்ட்டும்’ தர வேணாம். நீங்கோ எனக்கு எந்த புருஷாளையும் கல்யாணத்துக்குப் பாக்கவே வேணாம்.நீங்களே என்னே கல் யாணம் பண்ணீண்டு,எனக்கு ஒரு நல்ல வாழக்கையையை அமைச்சுக் குடுங்கோ.அது போதும் எனக்கு” என்று சொல்லி பரமசிவத்தின் காலில் விழுந்து நமஸ்காரத்தை பண்ணீனாள் சரோஜா.’

”சரோஜா எழுந்திரு.நீ கேக்கறதே நான் நிச்சியமா பண்றேன். நான் நிச்சியமா உன்னேக் கல்யாணம் பண்ணீண்டு,உனக்கு ஒரு நல்ல வாழக்கையையை அமைச்சுக் குடுக்கறேன்.ஆனா அதுக்கு முன்னாடி,நாம வாத்தியாரேக் கேட்டு நம்ம ரெண்டு ஜாதங்களும் நல்ல பொருத்தம் இருக்கா ன்னு கேக்கணும்.நம்ம ரெண்டு போரோட ஜாதகங்களுக்கும் நல்ல பொருத்தம் இருக்கணும்ன்னு, நீ வேண்டிண்டு வர அம்பாளை தினமும் நன்னா வேண்டிண்டு வா.நானும் சுவாமியே வேண்டிண்டு வறேன்”என்று சொன்னார் பரமசிவம்.

“உங்களுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’.நீங்கோ சொல்றது ரொம்ப சரி.நீங்கோ சொன்னா மாதிரி நான் தினமும் அம்பாளை நன்னா வேண்டிண்டு வறேன்” என்று சொல்லி விட்டு வெக்கப்பட்டுக் கொண் டே தன் ‘பெட் ரூமு’க்குப் போனாள்.

பரமசிவம் வீட்டு வாத்தியாருக்கு ‘போன்’ பண்ணி “வாத்தியார் நிங்கோ எங்க ஆத்துக்கு சாயங்காலமா கொஞ்சம் வர முடியுமா.ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று சொன்னதும், வாத்தியார் “நான் ராகு காலம் முடிஞ்சப்புறமா,உங்க ஆத்துக்கு வறேன்” என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீனார்.

வாத்தியார் சரியாக ஆறே கால் மணிக்கு சாம்பசிவத்தின் வீட்டுக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினார்.சமையல் கார மாமி வாசல் கதவைத் திறந்து வாத்தியாரைப் பார்த்து “வாங்கோ,வாங்கோ வாத்தியார்” என்று வரவேற்றாள்.

உடனே பரமசிவம் வாத்தியாரைப் பார்த்து “நமஸ்காரம் வாத்தியார்.இந்த சேர்லே உக்காருங்கோ” என்றூ சொல்லி ஒரு சேரைப் போட்டான்.வாத்தியார் அந்த சோ¢ல் உட்கார்ந்ததும்,சமையல் கார மாமி வாத்தியாருக்கு ஆவி பறக்க ஒரு ‘டவரா டம்ளா¢ல்’ ‘காபியை’ப் போட்டுக் கொண்டு அவர் முன்னால் வைத்தாள்.

வாத்தியார் மாமி கொடுத்த காபியை ஆற்றிக் குடித்துக் கொண்டே” மாமி காபி ரொம்ப பேஷா இருக்கு.என் ஆத்துக்காரி கூட இவ்வளவு பேஷா ‘காபி’ போட்டுக் குடுத்ததே இல்லே” என்று சொல்லி மாமியை பாராட்டினார்.”ரொம்ப சந்தோஷம் வாத்தியார்” என்று சொல்லி விட்டு வாத்தியார் குடித்து வைத்த ‘டவரா டம்ளரை’ எடுத்துக் கொண்டு போனாள்.
கொஞ்ச நேரம் ஆனதும் “வாத்தியார்,நானும்,சரோஜாவும் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கோம்.இந்தாங்கோ எங்க ரெண்டு பேரோட ஜாதகங்கள்.இந்த ரெண்டு ஜாதங்களுக்கும் நல்ல பொருத்தம் இருக்கான்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்கோ” என்று சொல்லி விட்டு,தன்னுடைய ஜாதகத்தையும்,சரோஜா ஜாதகத்தையும் அவரிடம் கொடுத்தார் பரமசிவம்.

வாத்தியார் பரமசிவம் கொடுத்த ரெண்டு ஜாதகங்களையும் கையில் வாங்கிக் கொண்டு பரமசிவ த்தின் இடம் இருந்து,ஒரு வெள்ளை காகிதத்தையும் வாங்கிக் கொண்டு,தன் மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு,பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு,நிறைய கூட்டல் கழித்தல் கணக்குகளை எல்லாம் போட்டு விட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து “ரெண்டு ஜாதங்ககளுக்கும் ரொம்ப நல்ல பொருத்தம் இருக்கு.நீங்கோ ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணீக் கொள்ளலாம்” என்று சொன்னதும் பரமசிவமும்,சரோஜாவும் மிகவும் சந்தோஷப் பட்டர்கள்.

உடனே இருவரும் சுவாமிக்கு தங்கள் மனதில் சொல்லிக் கொண்டார்கள்.அந்த சமயம் பார்த்து வரதன் ‘கிரிக்கெட் மட்டையுடன் வீட்டுக்கு வந்தான்.

“நீங்கோ எங்க கல்யாணத்துக்கு ஒரு நல்ல முஹூர்த்த நாளா ப் பாத்து சொல்லுங்கோ.நீங்கோ, இன்னும் நாலு வாத்தியாரை எங்க ஆத்துக்கு அழைச்சுண்டு வந்து,அந்த முஹூர்த்த நாள்ளே எங்க ளுக்கு ஆத்தோட கல்யாணத்தே பண்ணீ வச்சுடுங்கோ” என்று பரமசிவம் சொன்னதும் வாத்தியார் ஒரு நல்ல முஹூர்த்த நாளாகப் பார்த்து சொல்லி விட்டு ”நான்,என்னோட இன்னும் நாலு வாத்தியார் களை உங்க ஆத்துக்கு அழைச்சுண்டு வந்து,உங்க ரெண்டு பேரோட கல்யாணத்தை அந்த ‘முஹூர்த்த நாள்ளே பண்ணீ வச்சுடறேன்” என்று சொன்னவுடன் பரமசிவம் “ரொம்ப சந்தோஷம் வாத்தியார்” என்று சொல்லி விட்டு வாத்தியாருக்கு தக்ஷணையைக் கொடுத்து அனுப்பினார்.

வாத்தியார் கிளம்பிப் போனதும் சமையல் கார மாமி “நேக்கு கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு சரோஜா கல்யாணம் பண்ணீண்டு,வேறே யார் ஆத்துக்கோ போய் இருந்து வறதே விட,உங்களே கல்யாணம் பண்ணீண்டு வந்து,அவ அம்மா அப்பா இருந்த இந்த ஆத்லே இருக்கிறது தான் ‘சிலாக்கியம்’.நீங்கோ யாரோ இல்லையே.அவ சொந்த மாமா தானே.அவளும் உங்க அக்காவுக்கு பொறந்தவ தானே.உங்க அக்கா அத்திம்பேர் இருந்தா ரொம்ப சந்தோஷப் படுவா” என்று சொல்லி சந்தோஷப் பட்டாள்.

“அத்திம்பேர்,நீங்கோ சரோஜாவே கல்யாணம் பண்ணீண்டா,அக்கா இந்த ஆத்லேயே இருந்து ண்டு வருவா.எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.இன்னிலே இருந்து நான் சரோஜாவே என் ‘அக்கா’ன்னு கூப்பிடப் போறேன்” என்று சொல்லி சந்தோஷப் பட்டான் வரதன்.

”நீங்கோ ரெண்டு பேரும் சொன்னதே கேக்க எனக்கு ரொம்ப சதோஷமா இருக்கு.எது நடக்க ணுமோ அதே அந்த பகவான் நடத்திண்டு போறார்.நாம எல்லாம் அவருக்கு ஒரு ‘கைப் பொம்மை’த் தானே” என்று பரமசிவம் சொன்னதும் சமையல் கார மாமி “ஆமாம்,நீங்கோ சொல்றது நூத்துக்கு நூறு நிஜம்.’எல்லாம் அவன் செயல்’ன்னு தானே பொ¢யவா எல்லாம் சொல்லி இருக்கா” என்று சொல்லி விட்டு சமையல் ரூமுக்குப் போனாள்.

வரதன் குளிக்கப் போய் இருந்தான்.

சரோஜா பரமசிவத்தைத் தனியாக சந்தித்து “நீங்கோ ‘சரோஜா தான் என்னே கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறா’ன்னு மாமி தொ¢லேயும்,வரதன் எதிரிலேயும் சொல்லிடப் போறேளோன்னு நான் ரொம்ப பயந்துண்டு இருந்தேன்.ஆனா நீங்கோ அப்படி சொல்லாம இருந்ததுக்கு உங்களுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’ ”என்று வெட்கப் பட்டுக் கொண்டே சொன்னாள்.

பரமசிவம் கல்யாணம் பத்திக்கை அச்சடிக்கக் கொடுத்தார்.கல்யாண பத்திரிக்கைகள் அச்சடித் து வந்ததும் பரமசிவம் தனக்குத் தொ¢ந்த ஒரு பத்து நண்பர்களுக்கும் கொடுத்து விட்டு சரோஜாவை ப் பார்த்து “சரோஜா,கல்யாணத்தே இந்த ஆத்லே வச்சுக்கறதாலே நான் ‘செலக்ட்டட்டா’ என்னுடைய ‘ப்ரெண்ட்ஸ்’களுக்கு குடுத்து இருக்கேன்.நீயும் ‘செலக்ட்டட்டா’ உன்னுடைய பத்து ‘ப்ரெண்ட்ஸ்’ களுக்கு மட்டும் கல்யாணப் பத்திரிக்கையே குடு” என்று சொன்னான்.

“நான் ‘செலக்ட்டட்டா’ என்னுடைய பத்து ‘ப்ரெண்ட்ஸ்’களுக்கு கல்யாணப் பத்திரிக்கையே குடுக்கறேன்” என்று சொன்னாள்.வரதன் அவனுக்கு ரொம்ப தொ¢ந்த மூன்று நண்பர்களுக்கு கல்யாணப் பத்திரிக்கையைக் கொடுத்தான்.

பரமசிவமும்,சரோஜாவும் ஒரு முஹூர்த்த நாளாகப் பர்த்து,கூரைப் புடவையும்,மாங்கல்யமும், இருவருக்கும் கல்யாண ஜவுளிகளையும் வாங்கிக் கொண்டு வந்தார்கள்.வரதன் அவனுக்குப் பிடித்த ‘டிரஸ்’களை வாங்கிக் கொண்டான்.

வீட்டுக்கு வந்து சரோஜா கடையில் வாங்கின எல்லாவற்றையும் எல்லாம் சமையல் மாமி இடம் காட்டி விட்டு,சமையல் கார மாமிக்கு வாங்கி இருந்த புடவையையும்,’ரெடி மேட் ப்ளவுஸையும்’ சமையல் கார மாமி இடம் கொடுத்தாள்.”என்னேயும் உங்க ஆத்து மனுஷாளா நினைச்சு,எனக்கும் ஒரு புடவையையும்,’ரெடி மேட் ப்ளவுஸையும்’ வாங்கிக் குடுத்து இருக்கேளே.உங்க ரெண்டு பேருக் கும் ரொம்ப ‘தாங்க்ஸ்’” என்று சொல்லி விட்டு,புடவையையும்,’ரெடி மேட் ப்ளவுஸையும்’ வாங்கிக் கொண்டாள் சமையல் கார மாமி.

”மாமி,இந்த ஆத்லே உங்களே ஒரு முக்கியனானவராத் தான் நாங்க எல்லாரும் நினைச்சுண்டு வறோம்.இப்போ எங்களுக்கு பொ¢யவான்னு நீங்கோ ஒருந்தர் தானே இந்த ஆத்லே இருக்கேள்”என்று பரமசிவமும்,சரோஜாவும் சொல்லும் போது இருவர் குரலும் தழு தழுத்தது.

வாத்தியார் சொன்ன முஹூர்த்த நாளில் ஐந்து வாத்தியார்கள் வேத மந்திரங்கள சொல்ல பரமசிவம் சரோஜாவுக்கு ‘மாங்கல்ய தாரணம்’ பண்ணீனான்.

பரமசிவதின் ‘ப்ரென்ட்ஸூம்’,சரோஜாவின் ‘ப்ரென்ட்ஸூம்’ அவர்கள் வாங்கிக் கொண்டு வந்து இருந்த ‘கிப்டை’க் கொடுத்தார்கள்.முதலில் வாத்தியார்கள் சமையல் கார மாமி பண்ணி இருந்த கல்யாண சமையலை ரசித்து சாப்பிட்டார்கள்.அடுத்த பந்தியில் மற்றவர்கள் எல்லோரும் மாமி பண்ணி இருந்த கல்யாண சாப்பாட்டை மிகவும் ரசித்து சாப்பிட்டார்கள்.

சரோஜாவை கைப் பிடித்த நாளில் இருந்தே பரமசிவதிற்கு ‘சுக்ர தசை’ ஆரம்பித்து விட்டது.

கல்யாணம் ஆன மறு மாசமே,பரமசிவம் ராமனைப் பார்த்து” சார்,நீங்கோ இத்தனை வருஷமா என்னை உங்க ‘ஜூனியரா’ வச்சிண்டு நல்ல சம்பளம் குடுத்துண்டு வந்து இருக்கேள்.எனக்கு இப்போ கல்யாணம் ஆயிடுத்து.அதனால் நான் தனியா ஒரு வக்கீல் வேலே பண்ணீண்டு வர ரொம்ப ஆசைப் படறேன்.உங்க பூரண ஆசீர்வாதம் எனக்கு வேணும்” என்று கையைக் கூப்பிக் கொண்டு கேட்டான்.

ராமன் உடனே சதோஷப் பட்டு “பரமசிவம் உன்னுடைய இந்த ஆசை ரொம்ப நியாயமானது தான்.நான் இல்லேன்னு சொல்லலே.நீ ரொம்ப ‘இண்டெலிஜெண்ட்’.உன்னால் தனியா வக்கீல் வேலே பண்ணீண்டு வர முடியும்.நான் தான் ஒரு ‘இண்டெலிஜெண்ட்ஜூனியரை’ இப்போ இழக்கப் போறேன்.’பெஸ்ட் ஆப் லக்.என் ஆசீர்வாதம் உனக்கு என்னைக்கும் உண்டு.நீ தைரியமா வக்கீல் வேலே பண்ணீண்டு வா.உனக்கு எப்போதாவது என் உதவி தேவைப் பட்டா,என் கிட்டே ‘ப்¡£யா’ கேளு” என்று சொல்லி பரமசிவத்தை அனுப்பினார்.

அடுத்த நாளில் இருந்து பரமசிவம் தனியாக ஒரு ‘வக்கீலாக’ வேலை செய்து வந்தார்.

பரமசிவத்திற்கு நிறைய ‘கேஸ்’கள் வந்து எல்லா ‘கேஸ்’களையும் ஜெயித்து வந்தார்.அவருக்கு நிறைய பணம் வர ஆரம்பித்தது.சரோஜா மிகவும் சந்தோஷப் பட்டு “நீங்கோ இப்படி நிறைய ‘கேஸ்க ளே’ ஜெயித்து வறதே பாத்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி பரமசிவத்தைக் கட்டிக் கொண்டாள்.’எல்லாம் உன்னே நான் கல்யாணம் பண்ணீண்ட வேளை தான் சரோஜா. உனக்குத் தான் அந்த ‘கிரெடிட்’ சேரணும்.எனக்கு இல்லே” என்று சொன்னார் பரமசிவம்.

ஒரு வாரம் ஆனதும் “சரோஜா,நான் இந்த வக்கீல் தொழிலிலே பிரபலம் ஆயி இருக்கேன்.நான் ‘பஸ்’லே போய் வந்தா கொஞ்ச கேவலமா இருக்கும்.அதனால்லே நான் ஒரு ‘காரை’வாங்கிண்டு அதிலே போய் வரலாம்ன்னு இருக்கேன்.‘கார்’லே நான் ‘கோர்ட்டு’க்குப் போற வழியிலே உன்னே ‘பாங்க்லே’ ‘ட்ராப்’ பண்ணிட்டு போறேன்.’கோர்ட் ‘முடிஞ்சு,நான் ஆத்துக்கு வரும் போது,உன்னே ‘பாங்க்லே’ இருந்து ஆத்துக்கு அழைச்சுண்டு வறேன்.நான் ஒரு ‘கார்’ வாங்கட்டுமா” என்று கேட்டார் பரமசிவம்.

சரோஜா ‘சரி’ என்று சொல்லவே பரமசிவம்,சரோஜாவை அழைத்துக் கொண்டு,ஒரு கார் ‘கம்பனி’க்குப் போய் இருவருக்கும் பிடித்த மாதிரி ஒரு காரைப் பார்த்தார்கள்.

பரமசிவம் ‘பாங்க்லே பாதி கார் பணத்துக்கு லோன்’ போட்டார்.

‘பாங்க்’ பரமசிவத்துக்கு ‘லோன்’ பணத்தைக் கொடுத்ததும்,அதை வாங்கிக் கொண்டு சரோஜா வை அழைத்துக் கொண்டு கார் கமபனிக்குப் போய்,’லோன்’ பணத்தையும்,கையில் இருந்த பணத்தை யும் கொடுத்து விட்டு ஒரு புது ‘காரை’ வாங்கினார் பரமசிவம்.

கார் கமபனியில் இருந்து காரை காரை வாங்கிக் கொண்டு,ஒரு ‘கால் டிரைவரை’ வைத்துக் கொண்டு,நேரே மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவிலுக்கு வந்து,அங்கு இருந்த ஒரு குருக்களைப் காருக்கு ஒரு பூஜை பண்ணச் சொன்னார் பரமசிவம்.

குருக்கள் பூஜையை பண்ணீ முடித்ததும்,அந்த குருக்களுக்கு தக்ஷணையைக் கொடுத்து விட்டு,’கால் டிரைவரை’ காரை வீட்டுக்கு ஓட்டி வரச் சொன்னார் பரமசிவம்.

அடுத்த நாளே ஒரு ‘டிரைவிங்க் ஸ்கூலுக்கு’ப் போய் காரை ஓட்ட கற்று வந்தார் பரமசிவம்.

பதினைத்து நாள் கழித்து பரமசிவத்திற்கு கார் ஓட்ட ‘லைஸன்ஸ்’ கிடைத்ததும்,அவர் தினமும் சரோஜாவை அவள் ‘பாங்க்லே’,விட்டு விட்டு ‘கோர்ட்டு’க்குப் போய் வந்துக் கொண்டு இருந்தார். ‘கோர்ட்’ முடிந்ததும்,பரமசிவம் வீட்டுக்கு வரும் வழியிலே சரோஜாவை ‘பாங்கில்’ இருந்து வீட்டுக்கு அழைத்து வந்துக் கொண்டு இருந்தார்.

இரண்டு வருடங்கள் ஓடி விட்டது.அன்று ஞாயிற்றுக் கிழமை.

”அத்திம்பேர்,என் ‘அகாடமியில்’ எனக்குக் குடுத்த ‘கோச்சிங்க்’ நேத்தியோடு முடுஞ்சுடுத்து. இனிமே நான் தனியா தான் எந்த ‘டீமிலாவது’ சேந்து ஆடிண்டு வரணும்.நான் ரெண்டு, மூனு, டீம் ‘மானேஜரை’ப் பாத்து ‘சான்ஸ்’ கேட்டு இருக்கேன்.அவா யாராவது ஒருத்தர் எனக்கு ‘சான்ஸ்’ குடுத்தாத் தான் நான் இனிமே கிரிக்கெட் ஆட முடியும்” என்று சொன்னான் வரதன்.

அவன் குரலில் ஒரு வருத்தம் தொ¢ந்தது.பரமசிவமும்,சரோஜாவும் ஒன்றும் சொல்லவில்லை.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும்,அத்திம்பேர் இடமோ,இல்லை சரோஜா இடமோ வரதன் எர நூரு ரூபாய் வாங்கிக் கொண்டு,’கிரிக்கெட்’ ஆட முயற்சி பண்ணீ வந்தான்.

நான்கு வருடங்கள் ஆகியும் வரதனுக்கு எந்த ‘டீம்லேயும்’ நிரந்தரமாக ஆடி வரவும்,அதற்கு சம்பளமும் கிடைக்கவில்லை.

கிரிகெட் மட்டையை பிடித்த எல்லோரும் ‘சுனில் கவாஸ்கரோ’ ‘ஆலன் பார்டரோ’ஆகி விட முடியுமா.இந்தியாவில் இருந்த 100 கோடி மக்களில் ஒரு ‘சுனில் கவாஸ்கர்’ தானே அந்தக் கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு ‘உலக நாயகனாக’ வந்தார்.

எந்த ஆட்டத்திலும் ஒரு ‘ப்லேயரா’ஆக தலையிலே “சுழி” இருக்க வேண்டுமே!!!அந்த ‘சுழி’ இல்லையே வரதனுக்கு!!.

வரதனுக்கு இந்த உண்மை தொ¢ய ஒன்பது வருடம் ஆயிற்று.

அவன் இளமை வாழ்க்கையிலே ஒன்பது வருடங்கள் ‘வீண்’ ஆகி விட்டது. கிரிக்கெட் ‘அகாடமிக்கு’ கட்டின பணமும்,வாரம் தோறும் பரமசிவத்திடமோ,சரோஜா இடமோ வாங்கிக் கொண்டு போன ‘பாக்கெட் பணம்’ வரதனுக்கு ஒரு பிரயோஜனத்தையும் தரவில்லை.

மூன்று மாதம் ஓடி விட்டது.

அன்று ஞாயிற்றுக் கிழமை.அழுதுக் கொண்டே,அத்திம்பேரையும்,அக்காவை யும் பார்த்து “எனக்கு,எந்த ‘டீமும்’ ‘சான்ஸ்’ தறலே.நான் வேறுமனே அங்கே போய் மத்தவா ஆடறதே பாத்து ண்டு தான் இருக்கேன்.எனக்கு நீங்கோ ஒரு வேலேயே வாங்கிக் குடுங்கோ.நான் பண்ணீண்டு வறேன்.இனிமே நான் கிரிக்கெட் ஆடப் போறதில்லே” என்று கெஞ்சினான் வரதன்.

இருவரும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

பரமசிவம் தனக்கு மிகவும் தொ¢ந்த ஒருவரிடம் வரதன் கதையை சொல்லி,ஒரு ‘பியூன்’ வேலையை வாங்கிக் கொடுத்தார்.வரதனும்,சரோஜாவும் பரமசிவத்திற்கு ‘தாங்க்ஸ்’ சொன்னார்கள்.
அடுத்த நாளில் இருந்து வரதன் அந்த ‘பியூன்’ வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தான்.

ஐந்து வருஷம் ஆனதும் பரமசிவத்திற்கும், சரோஜாவுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. வரதனும்,சமையல் கார மாமியும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

பத்தாம் நாள் அன்று காலையில் சமையல் கார மாமி,பக்கத்து ‘ப்லாட்’மாமி இடம் இருந்து ஒரு தொட்டிலை வாங்கிக் கொண்டு வந்தாள்.பரமசிவமும்,வரதனும் கடையில் இருந்து நிறைய பூ,மாலை கள்,வெத்திகை பாக்கு,ரெண்டு சீப்பு பூவம் பழம்,ஒரு டஜன் ஆப்பிள்,ஒரு டஜன் சாத்துக்குடிப் பழம் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

இருவரும் தொட்டிலுக்கு அவர்கள் வாங்கிக் கொண்டு வந்த பூ மாலைகளை எல்லாம் சுற்றி கட்டினார்கள்.சமையல் கார மாமியும்,பக்கத்து ‘ப்லாட்’ மாமியும் சரோஜாவின் குழந்தையைத் தொட்டிலில் விட்டு ‘தாலாட்டுப் பாட்டு’ப் பாடினார்கள்.பிறகு சரோஜா ரெண்டு மாமிக்கும் வெத்திலை பாக்கு,பழம் எல்லாம் வைத்துக் கொடுத்து விட்டு,ரெண்டு பேரையும் ‘தாங்க்’ பண்ணீனாள்.

பதினோராம் நாள் வாத்தியாரை வீட்டு வரச் சொல்லி,’ப்லாட்டை’ புண்யாவசனம் பண்ணி விட்டு,குழந்தைக்கு ‘ரமேஷ்’ என்று ‘நாமகரணம்’ பண்ணீனார்கள்.

சரோஜாவுக்கு ‘மகப் பேறு லீவு’ முடிய இன்னும் இரண்டு நாள் இருந்தது.

“எனக்கு லீவு இன்னும் ரெண்டு நாள் தான் பாக்கி இருக்கு.அப்புறமா நான் வேலேக்குப் போயா கணுமே.நாம சமையல் கார மாமி கிட்டே குழந்தயே பாத்துக் கொள்ளச் சொல்லி,மாமிக்கு இன்னும் கூட ஒரு ஆயிரம் ரூபாய் சம்பளம் ஒசத்தித் தரலாமா” என்று தன் மகப் பேறு லீவு முடிய இன்னும் இரண்டு நாள் இருக்கும் போது கணவனைப் பார்த்து கேட்டாள் சரோஜா.

“நான் மாமிக் கிட்டே நீ சொன்னதே கேட்டுப் பாக்க்கறேன்” என்று சொன்னார் பரமசிவன்.

அடுத்த நாள் காலையிலே சமையல் கார மாமி வேலைக்கு வந்ததும் “மாமி,சரோஜாவுக்கு நாளையோட அவளுக்கு ‘பாங்க்லே’ குடுத்து இருக்கிற ‘மகப் பேறு லீவு’ முடியறது.அப்புறமா அவ வேலேக்குப் போய் வரணும்.நீங்கோ கொஞ்சம் ரமேஷைப் பாத்துண்டு வர முடியுமா.நாங்க உங்களு க்கு ஒரு ஆயிரம் ரூபாய் சம்பளம் சேத்துத் தறோம்” என்று தயங்கிக் கொண்டே கேட்டார் பரமசிவம்.

உடனே அந்த மாமி “நான் குழந்தையையைப் பாத்துக்கறேன் மாமா.மாமி வேலேக்குப் போய் வரட்டும்.நீங்கோ எனக்கு இன்னும் ஆயிரம் ரூபாய் குடுத்தாப் போறும்”என்று சொன்னதும் இருவரும் சந்தோஷப் பட்டு மாமிக்கு ‘தாங்க்ஸ்’ சொன்னார்கள்.

பரமசிவமும்,சரோஜாவும் வரதனுக்கு ஒரு ஏழைப் பெண்ணாகப் பார்த்து அவர்கள் செலவிலேயே கல்யாணத்தைப் பண்ணிக் கொடுத்தார்கள்.வரதன் அக்கா வீட்டுக்குப் பக்க்த்திலேயே ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு குடித்தனம் பண்ணிக் கொண்டு வந்தான்.

வரதன் மணைவியை அழைத்துக் கொண்டு,ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அக்கா,அத்திம் பேர் ‘ப்லாட்டுக்கு’ வந்து,இருவரிடமும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,பிறகு தன் மணைவியுடன் வீட்டுக்கு போய் கொண்டு இருந்தான்.

ரமேஷ்க்கு நாலு வயது ஆனதும் பரமசிவம் அவனை ஒரு நல்ல பள்ளீ கூடத்திலே சேர்த்து படிக்க வைத்தான்.சமையல் கார மாமி தினமும் ரமேஷைப் பள்ளீ கூடத்திற்கு அழைத்து போய், பள்ளிக் கூடம் விட்டதும்,விட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து,ரமேஷ்க்கு சாப்பாடு போட்டு, அவனை தூங்கப் பண்ணி வந்தாள்.

ரமேஷ் தூங்கி எழுந்ததும் அவனுக்கு ‘காம்ப்லானும்’’பிஸ்கெட்டும்’ கொடுத்து வந்தாள்.

ரமேஷ¤க்கு எட்டு வயது ஆனதும் அவன் பக்கத்து வீட்டுப் பையன்களுடன் பள்ளி கூடம் போய் வந்தான்.பரமசிவமும்,சரோஜாவும் சமையல் கார மாமிக்கு முன்னம் கொடுத்து வந்த சம்பளத் தை குறைக்ககாமல் கொடுத்து வந்தார்கள்.

ரமேஷ் பரமசிவத்தைப் போல மிக நன்றாகப் படித்து வந்தான்.

ரமேஷ்க்கு பதினோராவது வயதில் மாசி மாதத்திலே,பரமசிவமும்,சரோஜாவும் வாத்தியாரை வீட்டு வரச் சொல்லி கிரமமாக ‘உபநயனம்’ செய்து வைத்து சந்தோஷப் பட்டார்கள் .

ஒரு வாத்தியார் வீட்டுக்கு வந்து ரமேஷ¤க்கு காலையிலும் மாலையிலும் ‘சந்தியாவந்தனம்’ மந்திரத்தையும்,’அபிவாத்யே’ மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்து வந்தார்.ரமேஷ் இரண்டே நாட் களில்,சந்தியாவந்தன மந்திரத்தையும்,’அபிவாதயே’ மந்திரத்தையும் நன்றாக கற்றுக் கொண்டு விட்டான்.

ரமேஷ் இரண்டு வேளையும் தவறாமல் சந்தியாவந்தனத்தை பண்ணி கொண்டு வந்து, ’அபிவாதயே’யையும் சொல்லி விட்டு,சுவாமிக்கு தனக்குத் தொ¢ந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி தவறாமல் சொல்லிக் கொண்டு வந்து நமஸ்காரத்தையும் பண்ணிக் கொண்டு வந்தான்.

அவன் தன் பாடங்களை மிகவும் கவனமாகப் படித்துக் கொண்டு வந்தான்.

பரமசிவத்தைப் போலவே ரமேஷ¤ம் ‘ப்லஸ் டூவில்’ சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாக ‘பாஸ்’ பண்ணீனான்.

“ரமேஷ்,நானும் உன்னேப் போலவே சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனா ‘பாஸ்’ பண்ணீணேன்ன்னு உனக்குத் தொ¢யுமோ” என்று சந்தோஷத்தில் கேட்டார் பரமசிவம்.”நான் ராத்திரி பகலா கஷ்டப் பட்டு படிச்சு வந்தேன்.ஆனா உங்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் அப்பா.நீங்கோ நம்ம ‘ஆம்’ கஷ்ட நிலைமையிலே இருந்தப்ப,பள்ளீக் கூட பாட புஸ்தங்ககள் கூட வாங்கிக்காம,வகுப் பிலே வாத்தியார் சொல்லிக் குடுத்ததை வச்சுண்டே, படிச்சு,சென்னை மாநிலத்திலேயே முதல் மாண வனா ‘பாஸ்’ பண்ணேள்.ஆனா நான் எல்லா பாட புஸ்தகங்களயும்,வாங்கிண்டு வந்து,சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாக ‘பாஸ்’பண்ணி இருக்கேன்.என்னே விட நீங்கோ தான்ப்பா உண்மையிலே ‘க்ரேட்’ “என்று சொன்னான் ரமேஷ்.

பரமசிவம் சந்தோஷப் பட்டு “உண்மை தாண்டா ரமேஷா” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

ரமேஷ¤க்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் ‘கம்ப்யூட்டர் சயன்ஸ்’ ‘கோர்ஸில்’ ஒரு சீட் கிடைத்தது.பரமசிவமும் சரோஜாவும் மிகவும் சதோஷப் பட்டார்கள்.

பரமசிவம் ரமேஷ்க்கு ஒரு ‘ஸ்கூட்டர்’ வாங்கிக் கொடுத்தான்.

ரமேஷ் அந்த ‘ஸ்கூட்டா¢ல்’ காலேஜுக்கு சந்தோஷமாகப் போய் படித்து வந்தான்.

காலிங்க் ‘பெல்’ அடித்தது.

பரமசிவம் வாசல் கதவைத் திறந்தார்.சமையல் கார மாமி நின்றுக் கொண்டு இருந்தாள்.அந்த மாமியின் கண்கள் கோவைப் பழம் போல சிவந்து இருந்தது.கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு இருந்தது.

பரமசிவம் பயந்துப் போய் “ஏன் மாமி,உங்க கண்ணு ரெண்டும் இப்படி கோவைப் பழம் போல சிவந்து இருக்கு.நீ வேறே அழுதுண்டு இருக்கேள்” என்று கேட்டார்.அந்த மாமி மெதுவாக வீட்டுக்கு உள்ளே வந்து “என் சோகக் கதயே ஏன் கேக்கறேள் மாமா.இந்த கடிதாசேப் படியுங்கோ உங்களுக்கே எல்லாம் புரியும்.நீங்கோ எல்லாம் ‘காபி’ சாப்பிட காத்துண்டு இருபேளே.சொல்லாம கொள்ளாம நான் சமையல் வேலேக்கு வராம இருக்கக் கூடாதேன்னு தான் வந்து இருக்கேன்” என்று சொல்லி விட்டு சமையல் ‘ரூமு’க்குப் போனாள் மாமி.

மாமி சொன்னதைக் கேட்ட சரோஜா,பரமசிவம் பக்கத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டாள். இருவரும் மாமி கொடுத்த ‘லெட்டரை’ப் படித்தார்கள்.

“அன்புள்ள அம்மா.நான் ‘டென்ந்த்’ படிச்சுட்டு இந்த ஆத்லே சும்மா இருந்துண்டு வறேன். எனக்கு அப்பா இல்லே.நீங்கோ சமையல் வேலே பண்ணீண்டு வந்து இந்த குடும்பத்தே காப்பாத்தி ண்டு வறேள்.தாத்தாவும்,அண்ணாவும் ஏதோ அவாளால் ஆனதே சம்பாதிச்சுண்டு வந்துண்டு இருக்கா.உங்க சம்பளமும்,தாத்தா,அண்ணா சம்பாதியமும்,நம்ம குடும்பத்துக்கு ‘கைக்கும்’ வாய்க்குமா’ இருந்துண்டு வறது.நீங்கோ எனக்கு ஒரு நல்ல பிராமணப் பையன பாத்து கல்யாணம் பண்றதுன்னா,பையன் ஆத்லே வைரத் தோடு,வைர மூக்குத்தி,ஆறு சவரன்லே ஒரு தங்க செயின் எல்லாம் போட்டு,முதல் நாள் விரதத்தில் இருந்து,அடுத்த நாள் கல்யாணம்,நலங்கு எல்லாம் பண்ணி, மூனாம் நாள் கட்டு சாதம் வரை எல்லம் கிரமமா பண்ணி கல்யாணம் பண்ணிக் குடுக்க சொல்லுவா. உங்களாலே அவ்வளவு செலவு பண்ணி,எனக்குக் கல்யாணம் பண்ணவே முடியாது.அதனால்லே என்னே ‘ரொம்ப பிடிச்ச’ பக்கத்து ஆத்து முதலியார் பையனோட, நான் திருச்சிக்கு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.நீங்கோ யாரும் என்னேத் தேட வேணாம்.

இப்படிக்கு இந்த ஆத்லே இருபத்திரண்டு வருஷமா வளந்த பொண்ணு லதா.

லெட்டரைப் படித்த பரமசிவத்துக்கும்,சரோஜாவுக்கும் ‘ஷாக்காக’ இருந்தது.உடனே சரோஜா “என்ன மாமி,உங்க பொண்ணு இப்படி பண்ணிட்டா” என்று வருத்ததுடன் கேட்டாள்.

சமையல் கார மாமி ரெண்டு ‘டவரா டம்ளா¢ல்’ ஆவிப் பறக்க காபியைப் போட்டுக் கொண்டு வந்து பரமசிவமும்,சரோஜாவும் உட்கார்ந்துக் கொண்டு இருந்த ‘டேபிளின்’ மேல் வைத்தாள்.

கண்ணைத் துடைத்துக் கொண்டே அந்த சமையல் கார மாமி “என்ன பண்ணச் சொல்றேள் சொல்லுங்கோ.ஏழை ஆத்லே ஒரு பொண்ணு பொறந்துட்டா,அவ ‘கன்னி கழிய’,அந்த பொண்ணேப் பெத்தவா,அவளுக்கு காலா காலத்லே ஒரு கல்யாணத்தேப் பண்ணீ வக்கணும்.என்னே கல்யாணம் பண்ணீண்டவர்,என்னே விட்டுட்டு வேறே ஒருத்தியே கல்யாணம் பண்ணீண்டு போயிட்டார்.நான் உங்க ஆத்லே சமையல் பண்ணீண்டு சம்பாதிச்சுண்டு வறேன்.என் பொண்ணு எழுதி இருக்கா மாதிரி எங்க வரும்படி ‘கைக்கும் வாய்க்கும்’ தான் இருக்கு.ஒரு பிராமணா கல்யாணம்ன்னா என் பொண்ணு எழுதி இருக்கிற மாதிரி தான் ‘எல்லாம்’ பண்ணச் சொல்லுவா பிள்ளையே பெத்தவா.இந்த நிலைமைய நன்னா புரிஞ்சிண்டு தான்,அவ அவளுக்கு பிடிச்ச ஒருத்தனோடு திருச்சிக்கு ஓடிப் போயிட்டா ” என்று சொல்லித் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தாள்.

பரமசிவமும்,சரோஜவும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

கொஞ்ச நேரம் போனதும் சமையல் கார மாமி “லதாவுக்கு கல்யாண ஆசையயே அடகிக்க முடியலே.அவ ஓடிப் போனது தப்பே இல்லே.ஒரு பிராமணப் பையனாப் பாத்து,அவனோடு அவ ஓடிப் போய் இருக்கலாம்.இத்தனை வருஷமா நம்ம சாப்பாடு சாப்பிட்டு விட்டு,இப்போ அந்த முதலியார் சாப்பிடற சாப்பாட்டை சாப்பிடுண்டு வரணும்.இதே நினைச்சாத் தான் எனக்கும்,என் அப்பாவுக்கும், பையனுக்கும் ரொம்ப கவலையா இருக்கு.அவ தலை எழுத்து அப்படி இருந்தா,அதே மாத்த யாரால் முடியும்”என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் ஆனதும்மாமா ”நீங்கோ ரெண்டு பேரும் எனக்கு ஒரு உதவியே பண்ணனும்” என்று கேட்டவுடன் பரமசிவமும்,சரோஜாவும் “சொல்லுங்கோ மாமி,உங்களுக்கு என்ன உதவி வேணும்” என்று ‘கோரஸாக’க் கேட்டார்கள்.

“எங்க அப்பாவுக்கு இப்போ எல்லாம் ரொம்ப தள்றதே இல்லே.அவர் நிறைய நேரம் படுத்துண்டு தான் இருக்கார்.இப்போ என் பொண்ணு ஓடிப் போன துக்கம் வேறே அவரே ரொம்ப வாட்டிண்டு வறது.என் பையன் சுந்தரம் நன்னா சமைப்பான்.நான் நாளேலே இருந்து உங்க ஆத்துக்கு என் பையன் சுந்தரத்தை சமையலுக்கு அனுப்பிட்டு,நான் எங்க அப்பா கூட இருந்து,அவர் ‘உசிர்’ போற வரைக்கும் அவருக்கு சமைச்சுப் போடலாம்ன்னு ரொம்ப ஆசைப் படறேன்.அவருக்கு வேண்டியதே பண்ணீக் குடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்” என்று சொல்லி,தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தாள்.

உடனே பரமசிவம் “மாமி நீங்கோ ஆசைப் படறா மாதிரி நீங்கோ உங்க அப்பாவோட இருந்துண் டு வந்து அவரே கவனிச்சுண்டு வாங்கோ.உங்க பையன் சுந்தரத்தை எங்க ஆத்துக்கு சமையலுக்கு அனுப்புங்கோ.நாங்கோ உங்களுக்குக் குடுத்து வந்த சம்பளத்தை குறைக்காம உங்க பையனுக்கு தறோம்” என்று சொன்னார்.“உங்களுக்கு ரொம்ப நன்றி.நான் நாளேலே இருந்து என் பையன் சுந்தரத் தை உங்க ஆத்து சமையலுக்கு அனுப்பி வக்கறேன்”என்று கைகளை கூப்பிச் சொன்னாள் அந்த சமையல் கார மாமி.

அன்று பூராவும் சமையல் கார மாமி சமையல் பண்ணி விட்டு,சாயந்திரம் எல்லா வேலைகள் முடிந்த பிறகு,பரமசிவமும்,சரோஜாவும் வீட்டுக்கு வந்த பிறகு அவர்களிடம் சொல்லிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்ப தயாரானாள்.பரமசிவமும்,சரோஜாவும் அந்த மாமிக்கு வெத்திலைப், பாக்கு, தேங்காய்,ஒரு சீப்பு வாழைப் பழத்துடன் ரெண்டாயிரம் ரூபாயை வைத்துக் கொடுத்தார்கள்.

சமையல் கார மாமி சதோஷத்துடன் அந்த வெத்திலை பாக்கு தட்டை வாங்கிக் கொண்டு “நீங்கோ எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருந்துண்டு வரணும்” என்று கண்களில் கண்ணீர் மலகச் சொல்லி விட்டு வீட்டுக்குப் போனாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *