அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 2,950 
 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

“நான் சொல்ல மறந்துட்டேன்.நம்ப மாப்பிள்ளே கூட நான் முதல் தடவை அவா ஆத்துக்குப் போனப்ப அவர் என் கிட்டே ‘என் அப்பாவும்,அம்மாவும் திடீர்ன்னு ஒரே நாள்ளே ‘தவறிப் போனது க்கு’ அப்புறமா,அவா ‘காரியங்களே’ எல்லாம் நான் பண்ணின பிறகு,எனக்கு இந்த வியசாயத்தைப் பத்தின ஒரு விஷயமும் தெரியாம ரொம்ப கஷ்டப் பட்டேன்.அதனால் ரொம்ப நஷ்டமும் பட்டேன். எனக்கு மூனு வருஷமாச்சு விவசாயத்தேப் பத்தி எல்லா சமாசாரமும் தெரிஞ்சுக்க’ன்னு சொன்னார். எனக்குக் கேக்க ரொம்ப கஷடமா இருந்தது” என்று சொன்னான் சுந்தரம்.

கமலா கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு ”நேக்கு என்னவோ சுந்தரம் சொல்றது தான் ‘சரி’ன்னு படறது.அவன் சொல்றா மாதிரியே,அவன் உங்க கூட வந்து விவசாயத்தைப் பத்தின விஷய ங்களை எல்லாம் நன்னா கத்துண்டு வரட்டும்.உங்களுக்கு முடிஞ்ச அன்னிக்கு,நீங்கோ அவன் கூட போய் வாங்கோ.இன்னும் ஒரு சமாச்சாரம்.அவன் சொல்றா மாதிரி அவன் சிதம்பரம் போய் படிச்சுட்டு, அங்கேயே ஒரு வேலையைத் தேடிண்டான்னா,அவன் நம்மே வந்துப் பாக்கறது கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சிண்டு வரும் அவனோ நமக்கு ஒரே பையன்.அவனுக்கு ஒரு கல்யாணமும் ஆயிட்டா,அவன் நம்மே வந்துப் பாக்கறது இன்னும் குறைஞ்சுண்டே தான் வரும்.அப்புறமா அவனுக்கு குழந்தேங்க பொறந்துட்டா,அவன் நம்மே வந்துப் பாக்கறது…..” என்று சொல்லும் போது கமலாவுக்கு கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது.அவள் தன் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

உடனே கணேசன் “நீ கண் கலங்காதே கமலா.சுந்தரம் என்னோடு வந்து விவசாயத்தை நன்னா கத்துடுண்டு வரட்டும்.எனக்கும் அது தான் ‘சரி’ன்னு படறது” என்று சொன்னார். அடுத்த நாள் முதல் கணேசன் சுந்தரத்தை தன்னுடன் கூட அழைத்துப் போய்,தனக்கு இருக்கும் நஞ்சை,புஞ்சை நிலங்க ளை எல்லாம் காட்டி,கூடவே எல்லா வேலைக்காரர்களுக்கும் சுந்தரத்தை அறிமுகப்படுத்தினார் . சுந்தரம் தினமும் அவன் அப்பா கூட போய் விவசாய விஷயங்களை எல்லாம் கற்று வந்தான்.

ஒரு வாரம் போனதும் ஒரு நாள் “எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு.எனக்கு என்னமோ மேலே படிக்கறதிலே கொஞ்சம் கூட இஷ்டமே இல்லே.எங்கே அம்மா பிடிவாதம் பிடிச்சு என்னே மேலே படிக்க சொல்லுவாரோன்னு நான் பயந்துண்டே இருந்தேன்” என்று சொன்னான்.

”சுந்தரம்,நான் என்னிக்குமே உனக்குப் பிடிக்காததேப் பண்ண சொல்ல மாட்டேண்டா.உன் சந்தோஷம் தான் எங்க சந்தோஷம்.நீ இப்போ சந்தோஷமா இருக்கேன்னு கேக்க நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொன்னாள் கமலா.

அந்த வருடம் ராதா எட்டாவது ‘பாஸ்’ பண்ணினாள்.

ராதாவுக்கு சிதம்பரம் போய் மேலே படிக்க வேண்டும் என்கிற ஆசை அதிகமாக இருந்தது. ராமசாமி தம்பதிகள் ராதாவை தனியாக ஒரு ‘மினி பஸ்’ ஏறி சிதம்பரத்துக்கு அனுப்பி படிக்க வைக்க சம்மதம் இல்லாததால்,அவளை எட்டாவது படித்ததும் வீட்டிலேயே வைத்துக் கொண்டு வந்தார்கள் அப்பா,அம்மா எடுத்த இந்த முடிவை நினைத்து மிகவும் வருத்தப் பட்டாள் ராதா.

’நாம ஒரு பொண்ணாப் போனதால் தானே அப்பாவும்,அம்மாவும்,நம்மே தனியா சிதம்பரம் அனுப்பி படிக்க வக்கப் பயப் படறா.அதுவே நாம ஒரு புருஷ பையனா பொறந்து இருந்தா, நம்மே சிதம்பரம் அனுப்பி படிக்க வச்சு இருப்பா,நாம ஏன் ஒரு பொண்ணாப் பொறந்தோம். ஒரு பையனாப் பொறந்து இருக்க கூடாதா’என்று நினைத்து நிறைய நாட்கள் வருத்தப் பட்டுக் கொண்டு வந்தாள். ‘அடுத்த ஜென்மத்லேயாவது நாம ஒரு புருஷப் பையனாப் பொறந்து நிறைய படிச்சுண்டு வரணும்’ என்று நினைத்தாள்.

ராதா தன் அம்மா அப்பாவை பல முறைக் கேட்டும் அவர்கள் இருவரும் “ராதா,நீ ஒரு பொம்ம னாட்டிப் பொண்ணு.உன்னே நாங்க அவ்வளவு தூரம் தனியா எல்லாம் அனுப்பி எல்லாம் படிக்க வக்க முடியாது. நீ எட்டாவது படிச்சது போதும்.நீ ஆத்லேயே இருந்துண்டு வா” என்று சொல்லி வந்தார்கள்.

பல முறைக் கேட்டும் அம்மாவும், அப்பாவும் மறுத்து வந்ததால் ராதா அதற்கு அப்புறம் ஒன்றும் கேட்காமல் வீட்டிலேயே இருந்து வந்தாள்.

மஹதேவ குருக்களின் மணைவி மரகதம் தினமும் வீட்டில் பூஜைகள் பண்ணி வந்து காமாக்ஷ¢ அம்மன் படத்தின் முன் நின்றுக் கொண்டு “அம்பாளே,நான் தினமும் உனக்கு பூஜை பண்ணி வறேன்.என் ஆத்துக்காரர் தினமும் நடராஜருக்கு அபிஷேகம் பண்ணி, அலங்காரம் எல்லாம் பண்ணீ, நிறைய நிவேதனம் எல்லாம் பண்ணி உன்னே வேண்டிண்டு வறார்.உன் கண்ணேக் கொஞ் சம் தொறந்து எங்களுக்கு இன்னொரு குழந்தையைக் குடுக்க கூடாதா.நீ மனசு வச்சா எங்களுக்கு இன்னொரு குழந்தை பொறக்குமே.நீ கொஞ்சம் அனுக்கிரஹம் பண்ணக் கூடாதா.ஒரு பொண் குழந்தயே குடுத்தே.இன்னொரு பிள்ளைக் குழந்தயேக் குடுக்கக் கூடாதா.ஒரு பிள்ளேக் குழந்தேக் குத் தானே நானும் அவரும் இத்தனை வருஷமா ஏங்கிண்டு வறோம்” என்று மனம் உருகி வேண்டிக் கொண்டு வந்தாள்.

காமாக்ஷ¢க்கு ஐந்து வயது ஆனதும் மஹாதேவ குருக்கள் அவளை பணம் கட்டி ஒரு நல்ல பள்ளீ கூடத்திலே சேர்த்து படிக்க வைத்துக் கொண்டு வந்தார்.

காமாக்ஷ¢ எட்டாவது படித்துக் கொண்டு வந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் மரகதம் தன் கணவனிடம் “நான் தினமும் பூஜை பண்ணிட்டு காமாக்ஷ¢ அம்மனைப் பார்த்து ‘அம்பாளே,நான் தினமும் உனக்கு பூஜை பண்ணி வறேன்.என் ஆத்துக்காரர் தினமும் நடராஜருக்கு அபிஷேகம் பண்ணி, அலங்காரம் எல்லாம் பண்ணீ, நிறைய நிவேதனம் எல்லாம் பண்ணி உன்னே வேண்டிண்டு வறார்.உன் கண்ணேக் கொஞ்சம் தொறந்து எங்களுக்கு இன்னொரு குழந்தையைக் குடுக்க கூடாதா.நீ மனசு வச்சா எங்களுக்கு இன்னொரு குழந்தை பொறக்குமே.நீ கொஞ்சம் அனுக்கிரஹம் பண்ணக் கூடாதா.ஒரு பிள்ளேக் குழந்தேக்குத் தானே நானும் அவரும் இத்தனை வருஷமா ஏங்கிண்டு வறோம்’ன்னு உருகி வேண்டிக் கொண்டு வறேன். ஆனா அந்த அம்பாள் நமக்கு இன்னும் தன் கண்ணே தொறக்காம இருக்கா” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டாள்.

மஹாதேவ குருக்கள் தன் மணைவிக்கு பதில் ஒன்னும் சொல்லாமல் வெறுமனே சிரித்துக் கொண்டு இருந்தார்.கொஞ்ச நேரம் ஆனதும் தன் கண்களை மூடிக் கொண்டு இருந்தார்.

மஹா தேவ குருக்களுக்கு பொறுமை அதிகம்.ஆனால் மஹா தேவ குருக்கள் சம்சாரத்திற்கு கொஞ்சம் அவசர புத்தி.எல்லாம் உடனே ஆகி விடணும் என்று ஆசைப் படுவாள்.நாம ஆசைப்படு வதை எல்லாம் அந்த பகவான் நமக்குக் கொடுத்து விடுகிறாரா என்ன.இல்லையே!!.

எல்லாம் நம்ம தலை எழுத்துப் போலத் தானே அமைகிறது.ஆசைப் படுவது போல இல்லையே. அப்படி அமைந்து விட்டால் நமக்கு மன வருத்தமே இருக்காதே!!

மஹா தேவ குருக்கள் கண்னை மூடிக் கொண்டு இருந்து,தனக்கு ஒரு பதிலும் சொல்லாமல் வெறுமனே சிரித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்த மரகதத்துக்கு கோவம் வந்தது.

“ஏன்னா, நான் பாட்டுக்கு இங்கே புலம்பிண்டு இருக் கேன்.நீங்கோ என்னடான்னா யார் ஆத்து மாமியோ புலம்பறா.நமக்கு என்னன்னு நினைச்சு சிரிச்சு ண்டு இருக்கேள்.புலம்பறது யாரோ இல்லே.உங்க தர்ம பத்தினி மரகதம் அதுவாவது உங்க கண்லே தெரியறதா இல்லையா.நீங்க உங்க கண்ணே தொறந்தா தானேத் தெரியறதுக்கு.அவளுக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லலாமே உங்களுக்குத் தோணலையா.நான் யாரோ இல்லே.உங்க கண்ணேத் சித்தே தொறந்து என்னேப் பாருங்கோ” என்று உரத்தக் குரலில் சொன்னாள் கமலா.

மஹாதேவ குருக்கள் தன் கண்களை திறந்து “உனக்குத் தெரியாதது ஒன்னும் இல்லே மரகதம். நேக்கு மட்டும் இன்னொரு குழந்தே இல்லாத கஷ்டம் தெரியாம இருக்குமா.சொல்லு பாக்கலாம். இன்னும் கொஞ்சம் வருஷம் பொறுமையா இருந்துண்டு வா.நான் வேண்டிண்டு வர நடராஜர் அனுக் கிரஹத்தாலும்,நீ வேண்டிண்டு வர அம்பாள் அனுக்கிரஹத்தாலும்,இன்னும் ரெண்டு மூனு வருஷத் லே நமக்கு ஒரு குழந்தே பொறக்கறதான்னு பாக்கலாம்.அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருந்துண்டு வா” என்று சொன்னார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “மரகதம்,நான் கொஞ்சம் வெளீயே போயிட்டு வறேன்.என்ன நடக்க ணும் நம்ம ரெண்டு பேர் தலையிலும் எழுதி இருக்கோ,அது நிச்சியமா நடக்கப் போறது.எனக்கு ஒருத்தரை அவசரமாப் பாக்கணும்.நான் அவரை பாத்துட்டு சீக்கிரமா ஆத்துக்கு வறேன்” என்று சொல்லி விட்டு காலில் செருப்பைப் போட்டுக் கொண்டு,வெளியே கிளம்பினார் மஹா தேவ குருக்கள்.

தன் கணவன் அப்படி சொல்லி விட்டுப் போனது மரகதத்துக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ’நான் இவ்வளவு தூரம் சொல்றேன்.அவர் என்னமோ தலே எழுத்தேப் பத்தி பேசறார்.என்ன மனுஷன் இவர்’ என்று நினைத்து கமலா அலுத்துக்கொண்டாள்.

ராமசாமியின் பங்காளி பையன்கள் வரதனும்,கேசவனும் அந்த ஊரில் தான் வசித்து வந்தார் கள்.அவர்களிடம் இரண்டு ஏக்கர் வெறும் புஞ்சை நிலம் தான் இருந்தது.அதில் வரும் வருட வருமா னம் போதாததால் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து ‘பிராமணாள் மெஸ்’ என்று ஒரு ‘மெஸ்ஸை’ நடத்தி வந்தார்கள்.

அந்த ‘மெஸ்’ஸில் வந்த வருமானத்தை இருவரும் பாதி பாதியாக பிரித்து எடுத்துக் கொண்டு வந்தார்கள்.

அந்த ‘மெஸ்’ஸில் அந்த ஊருக்கு விசேஷ நாட்களில் வரும் யாத்¡£கர்கள் சுவாமி தா¢சனம் பண்ணி விட்டு,சாப்பிட வருவார்கள்.யாத்¡£கர்கள் வராத சாதாரண நாட்களில் ஒருவர் மட்டும் ‘மெஸ் ஸை’ப் பார்த்துக் கொண்டு,மற்றோருவர் யார் வீட்டிலாவது ‘சின்ன ·பன்ஷனுக்கு’ சமையல் பண்ணீ வந்தார்.

ராமசாமி தம்பதிகள் சாம்பசிவனுக்கு அவனுடைய பதினோராம் வயதில் வந்த மாசி மாதத்தில் ‘உபநயனம்’ போட்டார்.இந்த விழாவுக்கு கணேசன் தம்பதிகளும்,சுந்தரமும்,ராமசாமியின் நண்பர்களு ம் வந்து இருந்தார்கள்.இந்த விழாவுக்கு வரதனும்,கேசவனும் சமையல் செய்து விழாவுக்கு வந்த எல் லோருக்கும் பறிமாறினார்கள்.விழாவுக்கு வந்து இருந்த எல்லோரும் ஒரு வாய் வைத்தார் போல் சமை யல் ரொம்ப நன்றாக இருந்தது என்று புகழந்தார்கள்.

சாம்பசிவன் ரெண்டு நாள் வாத்தியார் உதவியுடன் ரெண்டு வேளையும் சந்தியாவந்தனம் பண்ணிக் கொண்டு வந்து,மூன்றாம் நாளில் இருந்து அவனே தனியாக ரெண்டு வேளையும் சந்தியா வந்தனம் பண்ணிக் கொண்டு வந்தான்.கூடவே நிறைய சுவாமி மந்திரங்கள் ஏல்லாம் சொல்லிக்கொண்டு வந்தான்.

சாம்பசிவனுக்கு ‘உபநயனம்’ நடந்த பிறகு அவன் மனதில் சிவ பக்தி அதிகம் ஆகிக் கொண்டு வந்தது.தினமும் ரெண்டு வேளையும் ரெண்டு வேளையும் தவறாமல் சந்தியாவந்தனம் பண்ணிக் கொண்டு வந்து,தனக்கு தெரிந்த சிவன் மந்திரங்களையும் சொல்லி சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணி வந்தான்.

சிவபுரிக்கு வரும் மினி ‘பஸ்ஸில்’ ஏறி,சிதம்பரத்துக்கு வந்து ஒன்பதாவது படித்து வந்தான் சாம்பசிவன்.

ராதாவுக்கு இருபது வயது ஆனதும் பத்மா தன் கணவரைப் பார்த்து “ஏண்ணா, நம்ம ராதாவுக்கு இந்த மார்கழி வந்தா இருபது வயசு ஆகப் போறதே.நீங்கோ அவ கல்யாணத்தேப் பத்தி யோஜனைப் பண்ணேளா” என்று கேட்டாள்.”பதமா,நான் இதேப் பத்தி யோஜனைப் பண்ணாத நாளே இல்லே.இந்த சிவபுரிலே இருக்கிறவா எல்லாம் விவசயம் பண்ற குடும்பம் தான்,உத்யோகம் பாக்கற பையனா நாம ராதாவுக்குப் பாக்கணும்ன்னா சிதம்பரத்லே தான் இருப்பா.அந்த சிதம்பரத்லே நமக்குத் தெரிஞ்சவா யாரும் இல்லே.என் அப்பாவுக்கு ஒரு ‘ஸ்னேகிதர்’ சிதம்பரத்திலே இருக்கார்.நான் வேணும்ன்னா அவரேப் போய் பாத்துட்டு வரட்டுமா” என்று கேட்டார்.

பத்மா தன் தம்பியை மனசிலே வைத்துக் கொண்டு “அவரேப் போய் பாத்துட்டு வறதிலே ஒன்னும் தப்பு இலே.அவர் கல்யாணத்துக்கு பையன் யாராவது இருந்தா நிச்சியமா சொல்லுவார்.ஆனா பத்மாவை சிதம்பரத்லே இருக்கிற பையனுக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்தா,அவளே பாக்கறது ன்னா,நாம சிதம்பரம் போய் தான் அவளே பாக்கணும்.அவளும் நம்மே பாக்கணும்ன்னா சிதம்பரத்லே இருந்து கிளம்பி சிவபுரிக்கு வரணும்.அதுக்கு அவ ஆத்துக்காரர்,மாமியார்,மாமனர் எல்லாம் ஒத்துக்க ணும் இல்லையா.அவா ஒரு தடவை ஒத்துப்பா ரெண்டு தடவை ஒத்துப்பா.ஆனா அடிக்கடி ஒத்துக்க மாட்டேளே” என்று இழுத்தாள் பத்மா.

“நீ சொல்றது எல்லாம் நியாயம் தான் நான் இல்லேன்னு சொல்லலே.இங்கே நமக்கு கல்யாணத்துக்குன்னு தெரிஞ்ச பையன் யாரும் இல்லையே.என் அத்திம்பேர் பக்கமும் யாரும் இருக்கறதா எனக்குத் தெரியலையே.எதுக்கும் நான் அவரே ஒரு தடவே விசாரிச்சுப் பாக்கறேன்” என்று சொன்னார் ராமசாமி.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணின பத்மா “ஏண்ணா,நான் சொல்றேன்னு என்னேத் தப்பா எடுத்துக்காதீங்கோ.பத்மாவே என் தம்பி சுந்தரத்துக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்தா,உறவாகவும் இருக்கும்,உள்ளுராவும் இருக்கும்.நேக்கு ஆசையா இருந்தா,நான் மட்டும் ஒரு எட்டு பத்மாவைப் பாத்துட்டு,அப்படியே என் அம்மா அப்பாவையும் பாத்துட்டு வரலாம்.உங்களுக்கு என்ன தோன்றது” என்று கேட்டு விட்டு கணவர் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அம்மா அப்பா பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தாள் ராதா.

பத்மா பேசுவதில் இருந்து அவளுக்கு இந்த ஆசை இருக்கு என்று புரிந்துக் கொண்டார் ராமசாமி.

”எனக்கு நீ சொல்றதிலே ஒரு ஆக்ஷபணையும் இல்லே.அவா அபிப்பிராயம் என்னவோ. அவாளேக் கேட்டாத் தான் தெரியும்”என்று சொல்லி விட்டு “பத்மா,நாம ரெண்டு பேர் மட்டும் பேசிண்டு இருக்கோம்.ராதா ஒன்னும் சொல்லாம இருக்காளே” என்று சொல்லி விட்டு ராதாவைப்

பார்த்து “ராதா,நீ உன் மாமா சுந்தரத்தை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறயா.உன் அம்மா அப்படி பண்ணனும்ன்னு ஆசைப் பட்டு,என் கிட்டே கேக்கறா.உன் அபிப்பியாயம் என்னம்மா.உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இருக்கா இல்லையா.உனக்கு விருப்பம் இல்லேன்னா என் கிட்டே தைரியமா சொல்லு” என்று கேட்டார் ராமசாமி.

உடனே ராதா “அப்பா,அம்மா நீங்கோ பெரியவா அது பண்ணாலும் எனக்கு சம்மதம் தான்” என்று சொன்னாள்.

ராதா தன் மனதில் ‘நாம யாயோ முன் பின் தெரியாத ஒருந்தரை கல்யாணம் பண்ணிக்கறதே விட,நமக்கு ரொம்ப தெரிந்த மாமாவை கல்யாணம் பண்ணீண்டா,நாளைக்கே ஏதாவது ஒரு பிரச்சி னைன்னு வந்தா,உறவுக்குள்ளே பேசித் தீத்துக்கலாமே.பிரச்சினையே சுமுகமா முடிச்சுக்கலாமே’ என்று நினைத்து சந்தோஷப் பட்டாள்.

ராதா அப்படி சொன்னதும் பத்மா “நான் எப்படியும் என் அம்மாவே நாளைக்குப் பாக்கணும். நாளைக்கு என் அம்மா பொறந்த நாள்.நான் என் அம்மாவேப் பாத்துட்டு,பொறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு,மொள்ள அவாளேக் கேட்டுப் பாக்கட்டுமா” என்று கேட்டாள்.உடனே ராமசாமி ”பத்மா, நீ அவா அபிப்பிரயத்தேக் கேட்டுண்டு வா” என்று சொல்லி விட்டு,வாசலில் வந்த ஒரு வேலைகாரன் கிட்டே பேசப் போனார்.

அடுத்த நாள் பத்மா காலையிலே ராதாவுக்கும்,கணவருக்கும் ‘கா·பி’யை போட்டுக் கொடுத்து விட்டு,அவளும் குடித்து விட்டு “நான் என் அம்மா ஆத்துக்குப் போய்,என் அம்மாவுக்கு பொறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு,அவா அபிபிராயத்தேக் கேட்டுண்டு வறேன்.இப்ப போனாத் தான் என் அப்பாவும்,சுந்தரமும் ஆத்லே இருப்பா” என்று சொல்லி விட்டு,கட்டி இருந்த புடவையை மாற்றிக் கொண்டு, செருப்பையும் போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போனாள்.

இத்தனை காலையிலே பத்மாவைப் பார்த்ததும் கமலா “என்ன பத்மா,இவ்வளவு காத்தாலேயே வந்து இருக்கே” என்று ஆச்சரியத்துடனும்,பயத்துடனும் கேட்டாள்.

கமலா கேட்டதைக் கேட்ட கணேசனும்,சுந்தரமும் ‘பெட் ரூமை’ விட்டு வெளியே வந்தார்கள்.

பத்மா சிரித்துக் கொண்டே” என்னம்மா நீ மறந்துட்டயா.இன்னிக்கு உனக்கு பொறந்த நாள். அதான் உன்னே நோ¢லே பாத்துட்டு ‘பொறந்த நாள் வாழ்த்துகள்’ சொல்லலாம்ன்னு தான் காத்தாலே யே நான் கிளம்பி வந்து இருக்கேன்.நீ பயப் படறா மாதிரி ஒன்னும் இல்லே” என்று சொன்னாள்.

கணேசன் பத்மாவைப் பார்த்து “பத்மா,மாப்பிள்ளே எப்படி இருக்கார்.ராதா எப்படி இருக்கா. அவளுக்கு வயசு ஏறிண்டே இருக்கே.சீக்கிரமா ஒரு நல்ல பையனாப் பாத்து அவளுக்கு கல்யாணத் தேப் பண்ணீ வைம்மா.நான் சொன்னேன்னு மாப்பிள்ளேக் கிட்டே சொல்லு” என்று சொன்னார்.

“அதேப் பத்தியும் பேசத் தான் நான் வந்து இருக்கேன்” என்று சொல்லி விட்டு தன் ஆசையை சொன்னாள் பத்மா.கணேசனும்,கமலாவும்,சுந்தரமும் பத்மா சொன்னதைக் கேட்டு கொஞ்ச நேரம் ஆச்சரியப் பட்டார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் கணேசன்” நீ ஆசைப் படறது இருக்கட்டும்மா.மாப்பிள்ளே என்ன சொறார்,ராதா என்ன சொல்றா” என்று கேட்டதும் பத்மா “அப்பா, நீங்கோ மூனு பேரும் சம்மதம்ன்னு சொன்னா,அவருக்கு எந்த பிரச்சினை இல்லேன்னு சொல்லிட்டார்.ராதாவும் ‘அப்பா,அம்மா நீங்கோ ரெண்டு பேரும் பெரியவா.நீங்கோ எது பண்ணாலும் எனக்கு சம்மதம் தான்’ சொல்லிட்டா” என்று
சொன்னாள்.

உடனே கணேசன் “சுந்தரம்,நீ உன் அக்கா பொண்ணு ராதாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறயா.உன்னுடைய எண்ணத்தே என் கிட்டே வெளிப் படியா சொல்லு.உனக்கு இஷடம் இல்லேன்னா தைரியமா சொல்லு”என்று கேட்டதும் சுந்தரம்”அப்பா,நானும் ராதா மாதிரி நீங்களும் அம்மாவும் பெரியவா.நீங்கோ எது பண்ணாலும் எனக்கு சம்மதம்” என்று சொன்னான்.

கணேசனும்,கமலாவும் சுந்தரம் சொன்னத்தைக் கேட்டு மிகவும் சந்தோஷப் பட்டார்கள். “ரொம்ப சந்தோஷம் சுந்தரம்.பத்மா,நீயும் உன் ஆத்துக்காரரும் ஒரு நல்ல நாளாப் பாத்து,எங்காத் துக்கு ஜாதகப் பா¢வர்த்தணைக்கு வாங்கோ.வாத்தியார் ஜாதகம் ரெண்டு நன்னா பொருந்தி இருக்கு ன்னு சொல்லி.அந்த பகவான் அனுக்கிரஹமும் இருந்தா,இந்த கல்யாணம் நடக்கட்டுமேம்மா” என்று சந்தோஷமாகச் சொன்னார் கணேசன்.

பத்மா தன் அம்மா,அப்பா,சுந்தரம் மூன்று பேர் கிட்டேயும் சொல்லிக் கொண்டு தன் வீட்டுக்கு வேகமாக வந்தாள்.

பத்மாவைப் பார்த்து ராமசாமி “போன காரியம் என்ன ஆச்சு,காயா பழமா” என்று கேட்டதும் ‘நல்ல பழுத்த பழம்தான்.அவா மூனு பேருக்கும் முழு சம்மதம்.என் அப்பா உடனே என்னேப் பாத்து ‘பதமா நீயும்,உன் ஆத்துக்காரரும் ஒரு நல்ல நாளாப் பாத்து,எங்காத்துக்கு ஜாதகப் பா¢வர்த்தணைக் கு வாங்கோ.வாத்தியார் ஜாதகம் ரெண்டு நன்னா பொருந்தி இருக்குன்னு சொல்லி.அந்த பகவான் அனுக்கிரஹமும் இருந்தா,இந்த கல்யாணம் நடக்கட்டுமேம்மா’ன்னு சந்தோஷமாகச் சொன்னார்” என்று சொன்னாள்.

ஒரு நல்ல நாள் பார்த்து ராமசாமியும்,பத்மாவும் கணேசன் வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,ராதாவின் ஜாதகத்தைக் கொடுத்து விட்டு,சுந்தரத்தின் ஜாதகத்தைக் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

ராமசாமி அடுத்த நாள் வாத்தியாரை வீட்டுக்கு வர வழைத்து ரெண்டு ஜாதகத்தையும் அவர் கிட்டே கொடுத்து ‘ஜாதகப் பொருத்தம்’ பார்க்க சொன்னார்.வாத்தியார் பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு,ஒரு அரை மணி நேரம் அலசிப் பார்த்து விட்டு “ரெண்டு ஜாதகமும் ரொம்ப நன்னா பொரு ந்தி இருக்கு” என்று சொன்னதும் ராமசாமி சந்தோஷப் பட்டு,வாத்தியாருக்கு தக்ஷணையைக் கொடுத்து அனுப்பினார்.
அடுத்த நாளே கணேசன் பத்மாவுக்கு ‘·போன்’ பண்ணீ “பத்மா,நான் நேத்திக்கு ரெண்டு ஜாதகத்தையும் நம்ம ஆத்து வாத்தியாருக்குக் கிட்டே காட்டினேன்.அவர் ரெண்டு ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குன்னு சொல்லிட்டாரு.இந்த சந்தோஷ சமாசாரத்தே நீ மறக்காம மாப்பிளேக் க்ட்டே சொல்லிடு” என்று சொன்னார்.

ஒரு நல்ல முஹ¤ர்த்தத்தில் ராதாவை,சுந்தரத்துக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்கள் ராமசாமி தம்பதிகள்.அந்தக் கல்யாணத்துக்கு வரதனும்,கேசவனும் நல்ல கல்யாண சமையலைப் பண்ணி எல்லோருக்கும் பறிமாறினர்கள்.அந்த சாப்பாடை சாப்பிட்ட அனைவரும் சமைலை மிகவும் புகழ்ந்தார்கள்.கல்யாணம் நல்லபடியாக நடந்ததை நினைத்து கணேசன் தம்பதிகள்சந்தோஷப் பட்டார்கள்
கல்யாணம் ஆகி மூன்று நாட்கள் ஆனதும்,ராதா அவ புக்ககம் போக ரெடி ஆனாள்.ராதா அம்மா அப்பா கால்லே விழுந்து நமஸ்காரம் பண்ணி விட்டு கண்களில் கண்ணீர் முட்ட ”அம்மா, அப்பா,நான் அவரோட போய் வறேன்.நீங்கோ ரெண்டு பேரும் உங்க உடம்பை நன்னா கவனிச்சு ண்டு வாங்கோ.சாம்பசிவனை நன்னா படிக்க வையுங்கோ.எனக்கு சதா உங்க மூனு பேருடைய ஞாபகமாகவே இருக்கும்” என்று சொன்னாள்.

உடனே பத்மா “நீ எங்கேயும் போகலே.உங்க புக்காத்துக்கு போறே.நல்ல வேளையா உன் மாமி யாரும்,மாமனாரும் என்னோட அம்மா,அப்பா.உன் ஆத்துக்காரர் என் சொந்தத் தம்பி.அவா மூனு பேரும் உன்னே ரொம்ப நன்னாப் பாத்துப்பா.நீ உன் புக்காத்லே சந்தோஷமா இருந்துண்டு வா.நீ புக்காத்துக்குப் போகும் போது கண்லே தண்ணி விடக் கூடாது.புக்காத்துக்கு நீ சந்தோஷமா போய் வரணும்”என்று சொல்லி ராதாவைக் கட்டிக் கொண்டு உச்சியிலே முத்தம் கொடுத்தாள்.

ராமசாமி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.

ராதா சாம்பசிவனைப் பார்த்து “சாம்பு,நீ ரொம்ப நன்னா படிச்சு முன்னுக்கு வரணும்.அம்மா, அப்பாவே ஜாக்கிறதையா பாத்துண்டு வா”என்று சொன்னாள்.உடனே சாமசிவன் ” நீ,நிம்மதியா இருந்துண்டு வாக்கா.நான் அம்மா அப்பாவை நன்னா பாத்துடுண்டு வறேன்” என்று சொல்லி அக்கா வை அவர் கணவருடன் அனுப்பி வைத்தாள்.

சாம்பசிவன் தினமும் ‘பஸ்’ ஏறி சிதம்பரம் போய் படித்து வந்தான்.அந்த வருடம் சாம்பசிவன் பத்தாவது ‘பாஸ்’ பண்ணீனான்.அவன் வருடாந்திர ‘லீவில்’ வீட்டில் இருந்து வந்தான்.

சாம்பசிவனுக்கு மேலே படிக்க ஆசை இல்லை.அவனுக்கு தினமும் சிவனுக்கு அபிஷேகம், பண்ணீ அலங்காரம் எல்லாம் பண்ணனும் என்கிற ஆசை மோலோங்கி இருந்தது.’நாம எப்படியாவது ஒரு சிவன் கோவில்லே ஒரு குருக்களாக ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது.ஆனால் ‘எப்படி ஒரு சிவன் கோவிலில் ஒரு குருக்களாக ஆவது’ என்று தெரியாமல் தவித்து வந்தான்.

சாம்பசிவன் தன் ஆசையை தன் அம்மா அப்பவிடம் சொன்னான்.அவன் சொன்ன ஆசை இருவருக்கும் ரொம்பப் பிடித்து இருந்தது.கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீன ராமசாமி “சாம்பு, நீ ஒரு சிவன் கோவில்லே ஒரு குருக்கள் ஆகும்ன்னா,அதுக்கு நீ ஒரு பெரிய குருக்கள் கிட்டே இருந்து ண்டு கத்துக்கணும்.நமக்கு அந்த மாதிரி பெரிய குருக்கள் யாரும் தெரியாதே.சிதம்பரம்பரத்லே இருக் கிற ஒரு பெரிய குருக்கள் உன்னை அவரோடு சேத்துண்டு குருக்கள் வேலையைக் கத்துக் குடுத்தார் ன்னா,நீ ஒரு குருக்கள் ஆகலாம்” என்று சொன்னார்.

“அப்பா,நான் சிதம்பரம் போய்,நடராஜர் கோவில்லே இருகிற ஒரு பெரிய குருக்களை சந்திச்சு,என் ஆசையைச் சொல்லி,அவரை கேட்டுப் பாக்கறேனே” என்று சாம்பசிவன் கேட்டதும், ”சாம்பு,நீ தீர்மானமா ஒரு குருக்களாத் தான் ஆகனும்ன்னு ஆசைப் படறாயா.நான் ஏன் இதேக் கேக்க றேன்னா,நீ ஒரு குருக்கள் ஆகறதுக்கு, நீ இந்த ‘கிராப்’ தலையை வெட்டிட்டு,ஒரு குடுமியே வச்சுக்க ணும்.குடுமி வச்சுக்க உனக்கு இஷடமா சொல்லு”என்று கேட்டார் ராமசாமி.

“எனக்கு குடுமி வச்சுக்க ரொம்ப ஆசையா இருக்கு.நான் ஒரு குருக்கள் ஆகனும்ன்னா,பாக்க ஒரு குருக்கள் மாதிரி தானே இருந்துண்டு வரணும்.ஒரு ‘கிராப்’ தலை யை வச்சுண்டு,நான் ஒரு குருக்கள்ன்னு சொல்லிக்க முடியாதேப்பா”என்று சந்தோஷமாகச் சொன்னான் சாம்பசிவன்.

சாம்பசிவனும்,அவள் கணவரும் பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்டுக் கொண்டு இருந்த பத்மா “சாம்பசிவா,உனக்கு அப்படி ஒரு ஆசை இருந்தா,நீ தைரியமா நடராஜர் கோவில்லே ஒரு குருக்களா வேலே பண்ணீ வா.நீ நடராஜர் சுவாமிக்கு தினமும் அபிஷேகமும்.அலங்காரமும்,பண்ணி விட்டு மந்திரங்கள் சொல்லி,அவருக்கு பூஜை பண்ணி வருவது நம்ப குடும்பத்துக்கு ரொம்ப நல்லது”
என்று சொன்னாள்.

“அப்படியாம்மா, உனக்கு என்னுடைய ஆசை உனக்குப் பிடிச்சு இருக்காம்மா” என்று மறு படியும் கேட்டதற்கு பதமா “ஆமாண்டா,நீ தினமும் அந்த நடராஜருக்கு அபிஷேகமும்,அலங்காரமும் பண்ண ஒரு பாக்கியம் இருக்கணும்டா.எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காதேடா” என்று சொன்னதும் சாம்பசிவன் மிகவும் சந்தோஷப் பட்டான்.

கொஞ்ச நேரம் ஆனதும் சாம்பசிவன் “அம்மா,அப்பா நான் சிதம்பரம் நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் ஆக ரொம்ப ஆசைப் பட சமாசாரத்தே,அக்கா அத்திம்பேர் கிட்டே போய் கேட்டுண்டு வரட் டுமா”என்று கேட்டான்.ராமசாமியும் பத்மாவும் “சாம்பு,நீ போய் அவாளேக் கேட்டுண்டு வா.அவா நீ சொல்றது ‘சரியா’,’தப்பா’ன்னு சொல்லட்டுமே”என்று ‘கோரஸாக’ச் சொன்னார்கள்.

உடனே சாம்பசிவன் ”சரி,நான் போய் கேட்டுண்டு வறேன்” என்று சொல்லி விட்டு தன் செரு ப்பைப் போட்டுக் கொண்டு அக்கா அத்திம்பேர் வீட்டுக்குப் போனான்.சாம்பசிவனைப் பார்த்ததும் ராதா “என்ன சாம்பு,என்ன விஷயம்.அம்மா, அப்பா உடம்புக்கு ஒன்னும் இல்லையே” என்று பதறிப் போய் கேட்டாள்.

உடனே சாம்பசிவன் “பயப் படாதேக்கா.அம்மா அப்பா ரெண்டு பேரும் சௌக்கியமா இருக்கா. நான் வந்த விஷயத்தே விவரமா சொல்றேன்.எனக்கு மேலே படிக்க ஆசை இல்லே.எனக்கு நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் ஆகி,தினமும் அந்த நடராஜருக்கு அபிஷேகமும் அலங்காரமும் பண்ணி வரணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு.நான் என்னுடைய ‘கிராப்’ தலையை எடுத்துட்டு,குடுமியே வச்சீண்டு,சிதம்பரம் போய் அங்கே இருக்கிற ஒரு பெரிய குருக்களைப் பாத்து என் ஆசையே கேக்க லாம்ன்னு நினைக்கிறேன்.நான் அப்படி பண்ணட்டுமா.அம்மாவுக்கு நான் சொன்னது ரொம்ப பிடிச்சு இருக்கு” என்று மூச்சு விடாமல் சொன்னான்.

சாம்பசிவன் சொன்னதைக் கேட்ட கணேசன் ஆச்சரியப் பட்டார்.”சாம்பு,இந்த சின்ன வயசிலே, உனக்கு இருக்கும் ஆசையை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.உன் வயசிலே இருக் கும் எல்லா பையன்களுக்கும் ஒரு ‘குருக்கள்’ ஆகணும் என்கிற ஆசை வறாது.ரொம்ப சுவாமி பக்தி இருந்தாத் தான் அந்த மாதிரி ஆசை வரும்.அதேத் தவிர சிதம்பரம் நடராஜர் கோவில்லே ஒரு குருக் கள் ஆக பூர்வ ஜென்ம வாசனையும் இருக்கணும்” என்று சொன்னார்.

கணேசன் அந்த மாதிரி சொன்னதும் கமலா “அப்படியாண்ணா.சாம்பசிவனுக்கு நிறைய சிவ பக்தி இருக்கும்.அதான் அவனுக்கு அந்த குருக்கள் வேலே ரொம்ப பிடிச்சு இருக்குன்னு நேக்குத் தோன்றது” என்று சொன்னாள்.

உடனே ராதாவும்,சுந்தரமும் ”சாம்பு, நீ உனக்குப் பிடிச்ச குருக்கள் வேலேயே பண்ணீண்டு வா.இந்தக் குடும்பத்திலே,நீ ஒருத்தன் நடராஜர் கோவில்லே ஒரு குருக்களா இருக்கறதே நினைச்சா எங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷமா இருக்கு.அப்பா சொன்னது போல,உனக்கு பூர்வ ஜென்ம வாசனை இருக்கும் போல இருக்கு”என்று ‘கோரஸாக’ச் சொன்னார்கள்.

கொஞ்ச நேரம் எல்லோரிடமும் பேசிக் கொண்டு இருந்து விட்டு சாம்பசிவன் தன் வீட்டுக்கு வந்தான்.

சாம்பசிவனைப் பார்த்ததும் பத்மா “என்ன சொன்னா அவா எல்லாரும்.உன் ஆசை ‘தப்பு’ ன்னு சொன்னாளா இல்லே,நீ பண்ணுன்னு சொன்னாளா” என்று ஆசையை அடக்க முடியாமல் கேட்டாள். “அவா எல்லாருக்கும் நான் சொன்னது ரொம்பப் பிடிச்சி இருந்ததது.ஆனா ராதா மாமனாரும்,மாமியாரும் சொன்னது தான் என் காதிலே ¡£ங்காரம் பண்ணீண்டேஇருக்கு” என்று சொன்னதும்,ராமசாமி “அவா என்னடா சொன்னா.அது உன் காதிலே ¡£ங்காரம் பண்ணீண்டு இருக்குன்னு, நீ சொல்றே” என்று ஆவலாகக் கேட்டார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *