அப்பாவின் காதலி

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 20,540 
 
 

காலை பரபரப்பு வீட்டின் சுவற்றுக்குக் கூட தொற்றிக் கொண்டது போல் இருந்தது. பஷீமீளிக்குச் செல்லும் குழந்தைகளும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீட்டில் உஷீமீள பாத்திரங்கஷீமீ கூட பாவம் செளிணிதவையாக இருக்கும். பாத்திரங்களே சமைத்து விடுவது மாதிரியான ‘ரோபோ பாத்திரங்கஷீமீ’ கண்டுபிடிக்கப்பட்டால் எத்தனை ஈஸியாக இருக்கும்? என் இரண்டாவது மகன் நிலவு ‘ஸ்கூல் வேன் வந்துவிடுமே’ என்கிற அவசரம் கொஞ்சம் கூட இல்லாமல் ‘ஹாயாக’ உட்கார்ந்து இட்லியை கொஞ்சம் கொஞ்சமாக மூன்று விரல்களினால் மட்டும் பிட்டு சட்னியில் மெதுவாகத் தோளிணித்து அழகாக வாயில் வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

அவனுக்கு இட்லி பரிமாறிக் கொண்டிருந்த பெரியம்மா, ‘மலர் நம்ம நிலவு உங்கப்பா மாதிரியே சாப்பிடுறான் இல்ல… அழகா, பொறுமையா இப்படித்தான் சாப்பிடுவார் உங்கப்பா?’ பெரியம்மா என்னிடம் சொல்லிவிட்டு என் ரியாக்ஷன் எதையும் எதிர்பார்க்காதவளாக நிலவையே ரசித்துக் கொண்டிருந்தாஷீமீ. அந்த ரசிப்பில் அவஷீமீ முகம் புதிதாகப் பூத்த ரோசாவை போல் பிரகாசமாக இருந்தது. அந்த பிரகாசத்தில் அவஷீமீ முகம் மின்னுவது போல் தோன்றியது. அந்த மின்னலைப் பார்த்ததும் முதன் முதலில் நான் பெரியம்மாவைப் பார்த்த ஞாபகம் வந்தது. ஒரு
ஞாயிற்றுகிழமை மாலையில் அப்பாவுடன் பெரியம்மாவின் வீட்டுக்குக் போயிருந்தேன். கத்தரி பூ கலர் சேலைகட்டி இருந்தார். அதில் சிவப்புக் கலரில் பெரிய பெரிய பூவாக இருந்தது. என்னைப் பார்த்ததும் தூக்க முயன்றார். என் உடல் கனம் அவரது முயற்சியைத் தோல்வி அடையச் செளிணிதது. தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து என்னை தன் மடியில் உட்கார வைத்து நெற்றியில் முத்தம் இட்டார். எனக்கு ஏனோ அந்த முத்தம் ரொம்பப் பிடித்திருந்தது. அப்பா எனக்கு எப்போதும் இப்படித்தான் முத்தம் கொடுப்பார். அதனாலும் இந்த முத்தம் பிடித்திருக்கலாம். அப்போது நான் திருவெறும்பூரில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பெரியம்மா வீடு பிஹெச்இஎல் குவார்ட்டர்ஸ்ஸில் இருந்தது. அந்த வீட்டில் அவரைத் தவிர யாருமே இல்லை. ஆனால் வீடு எங்க வீட்டை விட ரொம்ப அழகாகவும் சுத்தமாகவும் இருந்து போல் எனக்குத் தோன்றியது.

‘‘என்ன மலர் சாப்பிடுற?’’ என்று பெரியம்மா கேட்டபோது, ‘என் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ என்ற என் கேஷீமீவியில் திகைத்துப் போகாமல் சிரித்துக் கொண்டே இருந்தார். ‘‘இந்த முறை அரையாண்டு பரீட்சையில தமிழ்ல எண்பது மார்க், சயின்ஸ்ல 59 மார்க், கணக்குப் பேப்பர் இன்னும் தரல, உங்க மேத்ஸ் மிஸ் கல்யாணத்துக்கு லீவு போட்டு இருக்காங்க..’ என்று அவர் ஒவ்வொன்றாகச் சொன்னதும் நான் என் முட்டைக் கண்ணை உருட்டி அப்பாவைப் பார்த்தேன். அப்பா
சிரித்தார். ‘‘உனக்கு காரப் பணியாரம் ரொம்பப் பிடிக்கும்தானே… இந்தா சாப்பிடு’‘ என்று சொன்னதும் நான் காரப் பணியாரத்தில் மேல் இருந்த ஆசையில் அப்பா என் மார்க்கை அடுத்தவரிடம் சொன்னதால் வந்தக் கோபத்தை மறந்து போனேன். பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையும் பெரியம்மா வீட்டில்தான் என் மாலைப் பொழுது கழிந்தது.

ஆனால் ஒருநாஷீமீ கூட அம்மா என்னிடம் பெரியம்மாவைப் பற்றிக் கேட்டதே இல்லை. நானும் ஏனோ ஒரு குழந்தைக்குரிய ஆர்வத்துடன் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி அம்மாவிடம் சொன்னது இல்லை. ஆனால் அங்கு போளிணி வந்தால்… ஒரு இரண்டு நாஷீமீ சின்ன அண்ணன் என்னிடம் பேசமாட்டான் என்பதே நான் ஏழாம் கிளாஸ் வந்த போதுதான் புரிந்தது. ஆனால், அவனிடம் ‘ஏண்டா பேச மாட்டென்ற’
என்று கேட்கிற தைரியம் வரவில்லை.

ஆனால், எனக்கு அப்போது எல்லாம் எனக்கு பெரியம்மாவைப் பிடிக்குமா என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால்… தெளிவில்லை. ஆனால், அப்பாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அம்மாவை விட அப்பாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். காரணம், என் அழுகை, கோபம், செல்லம், போராட்டம், அடம் எல்லாம் அப்பாவிடம் மட்டும்தான் செல்லுபடியாகும்.

அம்மா பஷீமீளியில் மட்டுமல்ல வீட்டிலும் டீச்சர் மாதிரியே இருப்பார்..கண்டிப்புடன்! ஒருவேளை அந்த கண்டிப்பும் தோரணையும் அப்பாவிடம் இல்லாததாலப்பாவை ரொம்பப் பிடித்ததோ என்னவோ? அன்புக்கு எதற்குக் காரணங்கஷீமீ!

நானும் அப்பாவும் பெரியம்மா வீட்டுக்கு போகும் போதெல்லாம் பெரியம்மா என்னிடம்தான் பேசிக் கொண்டே இருப்பார். அப்பா பிளாக் அண்ட் ஒயிட் டீவியில் புரியாத ஹிந்திப் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். பெரியம்மா திருச்சி வானொலி நிலையத்தில் போடுகிற நாடகங்களை கேட்பார். பிலிப்ஸ் டேப்ரிகார்டரில் ஒரே பி.சுசீலா பாடல்களை வைத்து தலையாட்டி தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருப்பார்.

அப்பா அந்த டிவியை விட்டு நகரவே மாட்டார். ‘இங்க வந்து இந்த டிவிய பாக்குறதுக்கு நம்ம வீட்டிலையே பார்த்துட்டு இருக்கலாம்ல இந்த அப்பா’ என்று மனதுக்குஷீமீ நினைத்துக் கொஷீமீவேன். ஆனால், ஒருநாளும் அதை அப்பாவிடம் கேட்டதில்லை. நமக்குப் பிடித்தவர்கஷீமீ எதைச் செளிணிதாலும் அது சரிதான் என்று நினைப்பதுதானே அன்பின் பலவீனம்!

நான் ஒன்பதாம் பகுப்பு படிக்கும் போது சின்ன அன்ணன் திருச்சி ஆர்.ஈ.சியில் என்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இரு ந்தான். ஒருநாஷீமீ அவன்தான் அம்மாவிடம் சண்டை ஆரம்பித்தான். ‘இவரு அங்க அடிக்கடி போயிட்டு வர்றது எனக்கு அசிங்கமா இருக்கு. நீ அவரை எதையும் கேக்கவே மாட்டியா? நீ கேக்குறியா இல்ல நான் மாவையெல்லாம் வரவழைச்சு கேட்கச் சொல்லட்டா…? என்று எகிறிக் குதித்தான். பெரிய அன்ணனும், அக்காவும் அதை ஆமோதிப்பது போல் மௌனமாக நின்று கொண்டிருந்தார்கஷீமீ. ‘இதுக்கு இந்த மூதேவி வேற சாட்சி’ என்றவன் என் தலையில் ஓங்கிக் கொட்டினான். எனக்கு அழுகை வந்தாலும்… அழுதால் இன்னமும் அடிப்பான் என்ற பயத்தில் அடக்கிக் கொண்டேன். அவன் சண்டைப் போட்டபோது அப்பா வீட்டில் இல்லை. என்னை அடித்தற்காக அம்மா சின்ன அன்ணன் கன்னத்தில் அறைந்தாஷீமீ. அம்மாவுக்கு சின்ன அண்ணனையும் அக்காவையும் தான் ரொம்பப் பிடிக்கும். அவர்கஷீமீ இருவரும் எது செளிணிதாலும் அம்மா அடிக்கவே மாட்டாஷீமீ. அதுதான் முதல்முறை சின்ன அண்ணனை அம்மா அடித்தது. அவன் அதிர்ச்சியாகிப் அம்மாவையே பார்த்தான். அம்மா முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, ‘‘எனக்கும் உங்கப்பாவுக்கும் கல்யாணம் ஆகி இருபத்தி ஒரு வருஷம் ஆகப்போகுது. எனக்கு அவர்கிட்ட எதைக் கேட்கμம் கேட்க கூடாதுன்னு எனக்குத் தெரியும். நீ சொல்லித் தர வேண்டாம். இது உங்கப்பாவும் நானும் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம். நீங்க யாரும் கேஷீமீவி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவரு உங்க நாலு பேருக்கும் என்ன செளிணியனுமோ அதை ஒழுங்கா செஞ்சுட்டு இருக்கார். எனக்கு என்ன வேμமோ அதை நான் வாளிணி விட்டு கேக்குற மாதிரி அவர் வச்சுக்கிட்டது இல்லை’’ என்று அம்மா சொன்னதும் சின்ன அண்ணன் விடுவதாளிணி இல்லை. அவர் எல்லாம் கரெக்டா செஞ்சுட்டா.. அவர் செளிணியிற கெட்டதும் சரினு ஆயிடுமா?’’ என்று அவன் கத்தியதும், அம்மா அலட்டிக் கொஷீமீளாமல் ‘‘அவர் செளிணியிறது சரினு நானே சும்மா இருக்கேன். நீ என்னடா கேஷீமீவி கேக்குற? உன்னைய இன்ஜினியரிங் படிக்க வைக்கிறது தான் தப்புன்னு நினைக்கிறேன். காலேஜ் போனதுல இருந்து உனக்கு பெரிய இவன்ன்னு நினைப்பு’’ என்று அம்மா அவன் மாதிரியே கத்த ஆரம்பித்ததும்…

அவன் கோபமாக வீட்டை விட்டு போளிணி விட்டான்.

இரவு அப்பா வந்ததும் மொட்டை மாடியில் அம்மா, அப்பா, சின்ன அன்ணன், அக்கா, பெரிய அண்ண்ன் எல்லாரும் உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசினார்கஷீமீ. என்ன பேசினார்கஷீமீ என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. ஆனால் அன்றிலிருந்து சின்ன அண்ணன் அப்பாவிடம் பேசுவதை முற்றிலும் நிறுத்திவிட்டான். இந்த விஷயத்தை பெரியம்மாவிடம் அப்பா சொன்ன அன்று…. பெரியம்மா, ‘மலர் உனக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்?’ என்று கேட்டபோது எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் கண்ணில் நீர் முட்டிக் கொண்டு நின்றது. நான் அழுதேன். பெரியம்மா என்னைக் கட்டிகொண்டு முத்தம் கொடுத்தார்.

அப்பாவின் கண்களிலும் நீர் கோர்த்திருந்ததைப் பார்த்தேன். எனக்கு அந்த கணம் பெரியம்மாவின் மேல் ஏதோ ஒருவிதமான நேசம் தோன்றுவதை உணர்ந்துகொஷீமீள முடிந்தது. அந்த கணத்திலிருந்துதான் அவரை காரணம்
இல்லாமல் நான் நேசிக்கத் தொடங்கி இருந்தேன்.

எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து பெரியம்மா அப்பா பக்கத்தில் நெருக்கமாளிணி உட்கார்ந்தது இல்லை. இன்று நானும் என் கணவரும் என் குழந்தைகஷீமீ முன்பு சின்னதாளிணி ஒரு தொடுதல், முத்தம் என்று பகிர்ந்துகொஷீமீவதுபோல் பகிர்ந்துகொண்டதே இல்லை. ஆனால் அப்பாவின் அருகில் இருக்கும் போதேல்லாம் பெரியம்மாவின் முகம் சந்தோஷமாகவே இருக்கும். சிரித்துக் கொண்டே இருப்பார். ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’ பாட்டு பெரியம்மாவுக்கு பிடிக்கும் என்பதை அப்பா அடிக்கடி சொல்லுவார். ஒருமுறை திருவெறும்பூர் எஸ்.எஸ் ரிகார்டிங் கடையில் நானும் அப்பாவும்தான் நிறைய பி.சுசீலா பாடல்களை எழுதிக் கொடுத்து ரிகார்ட் செளிணிது அந்த கேசட்டை பெரியம்மாவிடம் கொடுத்தோம். அன்று பெரியம்மா பிறந்தநாஷீமீ என்று இரவு வீட்டுக்கு வரும்போது அப்பா சொன்னார். அப்பா ஒரு சாப்பாட்டுப் பிரியர் என்பதை பெரியம்மா வீட்டில் சாப்பிடும்போதுதான் நான் முழுமையாக உணர்ந்து இருக்கிறேன். அசைவம் சமைப்பதில் பெரியம்மா கில்லாடி.

ஞாயிற்றுக்கிழமையானால் அசைவம் சாப்பிட வேண்டுமோ என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்ததே அவர்தான். அப்பா அளவாளிணித் தான் சாப்பிடுவார். அளவாக சாப்பிட்டாலும் ருசியாக சாப்பிட வேண்டும் என்பது அவரது கொஷீமீகை.

நான் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் படிக்கும்போது என்னைப் பார்ப்பதற்காக அப்பாவும் பெரியம்மாவும் வந்திருந்தார்கஷீமீ. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அப்பா என்னை பார்க்க வந்துடுவார். ஒரு முறை என் அம்மாவுடன் வந்தால் அடுத்த முறை பெரியம்மாவுடன் வருவார்.

அப்போது ஒருமுறை நான், அப்பா, பெரியம்மா எல்லாரும் திருக்கடையூர் அபிராமி கோயிலிக்குப் போயிருந்தோம். கோயிலை விட்டு வெளியே வரும்போது திடீரென அப்பாவிடம் கேட்டேன், ‘‘அப்பா நீங்க பெரியம்மாவுக்குப் பண்ணிட்டு இருக்கறது ஒருவிதமான சுரண்டல் இல்லியா?’’ என்றேன் ரொம்ப தைரியமாக. அப்பா சலனமே இல்லாமல் சொன்னார்… ‘‘அவங்க ஒருநாளும் என்கிட்ட அப்படி சொன்னதே
இல்லையே’’ என்றார். எனக்கு அந்த பதில் பூசிமெழுகும் பதிலாளிணித் தோன்றியது. ‘‘நீங்க அழகா இருக்கீங்க, கை நிறைய சம்பாதிக்கிறீங்க.. அப்புறம் ஏன் இப்படி ஒரு வாழ்க்கைக்கு சம்மதிச்சீங்க?‘‘ என்றேன். நான் என்றாவது இந்தக் கேஷீமீவியை கேட்பேன் என்று இருவருமே எதிர்பார்த்தர்கஷீமீ போல..

அலட்டிக் கொஷீமீளவே இல்லை இருவருமே! நான் தான் பதற்றமாளிணி இருந்தேன். ‘‘எல்லா உணர்வுக்கும் உலகம் எதிர்பாக்குற லேபிளைக் குத்த முடியாது மலர்’’ என்ற பெரியம்மாவின் பதிலில் ஒரு சொல்லமுடியாத கணம் இருந்ததாளிணி தோன்றியது. மூவருக்கும் இடையில் ஒரு கனத்த மௌனம் நிலைத்தது சிறிது நேரம். பிறகு மீண்டும் பெரியம்மாவே பேச்சை ஆரம்பித்தார். ‘‘மலர் நீ ஏழு வயசிலிருந்து என்ன பார்த்துட்டு இருக்க. இப்ப உனக்கு பத்தொன்பது வயசு. நான் சொல்றது உனக்குப் புரியும். சரியான அர்த்தத்துல எடுத்துக்குவேன்னு நம்புறேன். நீ இந்த கேஷீமீவியக் கேட்டதும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு’’ என்றார். அவர் முகத்தைப் பார்த்தேன் அது எப்பவும் போல் பிரகாசமாகவே இருந்தது. அருகில் அப்பா!

‘‘எனக்கு உங்கப்பாவைப் பிடிச்சிருந்த போது உங்கப்பாவும் பேச்சிலர்தான். கல்யாணம் ஆகல. உங்க்கப்பா பிஹெச்ஈஎல் குவாலிட்டி கண்ட்ரோல் என்ஜினியரா வேலை பார்க்கும் போது அவர் கிட்ட அப்ரன்டீஸ் ட்ரெயினியா இருந்தேன். அங்க உங்கப்பா என்கிட்ட நடந்துகிட்ட விதம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அது வரைக்கும் நான் ஆண்களை ரெண்டு விதமா பிரிச்சு வச்சிருந்தேன். ஒண்னு வாளிணிப்பு கிடைச்சவன்.. இன்னொ ன்னு வாளிணிப்புக் கிடைக்காததால் நல்லவனா இருக்கவன்னு ரெண்டு ரகம்.

ஆனா எல்லா விஷயங்களிலும் விதிவிலக்கா மனிதர்கஷீமீ இருக்க முடியும்னு உங்கப்பாவிடம் பழகியதும் புரிஞ்சுகிட்டேன். அந்த நிமிஷத்துல இருந்து அவர் மேல எனக்கு அளவுக்கு அதிகமான மரியாதை. மரியாதை அன்பா மாறுச்சு. ஏதோ ஒரு நிமிஷத்துல சட்டுனு முடிவெடுத்தேன்….

என் வாழ்க்கை நிம்மதியா, சந்தோஷமா இருக்கμம்னா இவர் கூட இருந்தா மட்டும் தான் அந்த சந்தோஷம் கிடைக்கும்னு தோனுச்சு. அதை நான் ஸ்ட்ராங்க.. எந்த குழப்பமும் இல்லாமல் நம்பினேன். நம்புறேன்.

நம்புவேன். அதனால தான் அவரே சகலமும்னு வாழ்ந்திட்டு இருக்கேன். என் உணர்வை உங்கப்பா புரிஞ்சுகிட்டார்; உங்கம்மா அதை ரொம்ப மதிக்கிறாங்க. அதனாலதான் இன்னவரைக்கும் அவங்க என்ன ஒரு கேஷீமீவி கேட்டது கிடையாது’’ என்றவரிடம்,

‘‘எங்கம்மாவோட லைப்பை நீங்க பங்கு போட்டதா தோணலையா.. அது உறுத்தவே இல்லையா? என்று கேட்டதும் அப்பா பதில் சொன்னார்…எல்லா விஷயங்களுக்கும், உணர்வுகளுக்கும் காரணம் தேடிட்டே இருந்தா அது முடிவே இல்லாம போயிடும். நாங்க மூனு பேரும் இந்த வாழ்க்கைக்கு பழகிட்டோம்.. அது யாரையும் எந்த விதத்திலயும் பாதிக்கல..காயப்படுத்தல மலர். இதுக்கு மேல என்ன வேμம்? நான் என்ன செளிணியிரேன்ன்னு உங்கம்மாவுக்கும் உங்களுக்கும் தெரிஞ்சுதான் செளிணியிறேன். ஐ நெவர் ஃபீல் கில்டி’’ என்று சொன்னஅப்பாவின் முகத்தின் சலனமே இல்லை. மிகத் தெளிவாளிணி இருந்தது.

‘‘மலர் இத்தன வருஷம் நீ என்ன பாக்குற, பேசுற ஆனா இன்னவரைக்கும் என்னை நீ அம்மான்னு கூப்பிட்டது இல்ல தெரியுமா? உனக்கு மலர்விழின்னு இந்த அழகான பேரை வச்சது யார் தெரியுமா? நான் தான். உங்கம்மாதான் என்ன பேர் வைக்கலாம்னு கேட்டப்போ நான் சொன்னேன்… மலர்விழின்னு வைங்கன்னு. உன்ன என்ன கோர்ஸ் சேர்க்கலாம்னு உங்கம்மா என்கிட்ட கேட்டப்போ நான் தான் சொன்னேன் மலருக்கு சயின்ஸ் படிக்கிறது கஷ்டமா இருக்கு. அதனால ஆர்ட்ஸ் க்ரூப் சேர்த்துவிடுங்கன்னு. நான் உங்க அப்பாவை மட்டும் நேசிக்கல… உன்னை உங்கம்மாவை, உங்க அண்ணன்களை, அக்காவைன்னு எல்லாரையும் நேசிக்கிறேன். உங்கப்பாவைவிட அதிகமா நேசிக்கிறேன். எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் நல்லா இருக்குமேன்னு நான் யோசிச்சதே இல்ல… யோசிக்கவும் தெரியல. ஆனா, நான் நாலு குழந்தைகளைப் பெற்ற அம்மாவாத்தான் ஃபீல் பண்μறேன். உனக்குத் தெரியுமா உன் சின்ன அன்ணன் வேலைக்கு போளிணி முதல் சம்பளம் வாங்கினதும் எனக்கு பச்சைகலர்ல பட்டுப் புடவை வாங்கி அனுப்பினான்’’? என்று சொன்னபோது அவர் முகத்தில் பெருமிதம் கொட்டிக்கிடந்தது.

‘‘மலர் நீ இன்னும் என்ன அம்மான்னு கூப்பிட்டதே இல்ல…’’ என்று இரண்டாம் முறையும் சொன்னார். நான் உதடு பிரியாமல் சிரித்தேன்.

அப்பா என்னை ஏக்கமாளிணிப் பார்த்தார்.

நான் காலேஜ் முடித்து வந்த நான்காவது மாதம் அப்பா ஹார்ட் அட்டா க்கில் இறந்து போனார். என் அம்மா நிலைகுலைந்து போனாஷீமீ. கூட்டத்தில் ‘‘இவ மேலதானே அவருக்கு உசிரு. இதுக்கொரு கல்யாணத்தை பன்ணி பார்க்காமப் போயிட்டாரே’’ என்று யாரோ குரலெ டுத்து அழுத போது பெரியம்மா உடைந்து நொறுங்கி அழுதாஷீமீ. ஆனால் அம்மாவை அவஷீமீதான் கொஞ்சம் கொஞ்சமாளிணித் தேற்றினாஷீமீ.

பதினாறாவது நாஷீமீ அப்பாவுக்கு காரியம். சொந்தபந்தங்கஷீமீ கருமாதி மொளிணி எழுதியதும் இறுதியாக அம்மாவின் பொட்டையும் பூவையும் எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் குகுசுவென பேசிக்கொண்டார்கஷீமீ. நடுவீட்டில் அம்மாவை உட்கார வைத்து சில பெண்கஷீமீ ஒப்பாரி வைத்து அழுது….

அம்மா கைநிறைய அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை உடைக்க அம்மாவை சூழ்ந்தார்கஷீமீ. கூட்டத்தில் அதுவரை ஒதுங்கி இருந்த பெரியம்மா… கூட்டத்தில் இருந்த என் அத்தையிடம் நெருங்கி வந்து ‘வேண்டாம்” என்று மெதுவாகச் சொன்னாஷீமீ. அத்தை அதையெல்லாம் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. அவர் அம்மாவின் இரண்டு கைகளையும் ஒன்றுடன் ஒன்று மோதி…. வளையல்களை உடைக்க முற்பட்ட போது ‘கூடவே கூடாது” என்று பெரியம்மா அத்தையிடம் பெருங்குரல் எடுத்துக் கத்தினாஷீமீ. வீட்டில் கூடியிருந்த ஊர்ப் பெரியவர்களைப் பார்த்து ‘‘அவங்களுக்கு எந்த சடங்கும் செளிணிய வேண்டாம்… அதெல்லாம் அவருக்கு சுத்தமாப் பிடிக்காது… பிடிக்கவே பிடிக்காது’‘ என்று உக்கிரமாளிணி சண்டைப் போட்டாஷீமீ. சண்டை வலுத்து.

என் தாளிணி மாமா பெரியம்மாவைத் திட்டினார். கோபம் மனிதனின் கண்ணையும் புத்தியையும் ஒரு சேர மழுங்கடிக்குமா? மாமா பெரியம்மாவை சொல்லக் கூடாத வார்த்தைகளில் திட்டினார். அதுவரை அழுதுகொண்டிருந்த அம்மா மெதுவாக எழுந்து மாமாவின் அருகில் வந்து ‘‘நீ அவங்கள இப்படி மரியாதை குறைவா பேசுறதுன்னா என் வீட்டு வாசப்படிய மிதிக்க வேண்டாம்’’ என்று அமைதியான ஆனால் மிக தீர்க்கமான வார்த்தைதைகளில் மாமாவின் அன்பை, ஆதரவை, உறவைத் துண்டித்தாஷீமீ. அம்மாவின் அருகில் நாங்கஷீமீ நான்கு பேரும் நெருங்கி
நின்றோம். கூடவே பெரியம்மா இன்னும் நெருக்கமாக!

1 thought on “அப்பாவின் காதலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *