அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2022
பார்வையிட்டோர்: 3,722 
 

அழகிய குடும்பம் போதிய வருமானம் ஊடலும் கூடலும் நிறைந்த வாழ்க்கை. நகமும் சதையும் போல இணைப்பிரியா வாழும் காதல் தம்பதிகள் பாபுவும் ரமாவும்.

திருமணமாகி 5 வருடங்கள் கழிந்த நிலையில் குழந்தைக்காக ஏங்கிய இருவரும் மருத்துவமனையில் ஆலோசனை பெற்று வந்தனர்.

ஒரு நாள் மாலைப் பொழுதில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினான் பாபு, கொஞ்சலும் கெஞ்சலுமாய் திரியும் மனைவி அன்று சற்று மாற்றமாய் முகம் வாடி காணப்பட்டாள்,

ஏன் ஒரு மாதிரி இருக்க மா?என்ன ஆச்சு? என்றான் பாபு.

ஒன்னும் இல்ல மாமா! என்றாள்.

என்ன சொல்லுமா? என்றான்.

நான் ஒன்னு கேட்பேன் மறுக்காமல் தருவீர்களா? என்றாள்.

என் செல்லத்துக்கு தராமலா சொல்லுமா?

எனக்கு விவாகரத்து வேணும் மாமா!!

என்னடி பேசுற பைத்தியம் மாதிரி. என்னாச்சு?

இல்ல மாமா நிஜமாதான் சொல்றேன்!

நீ கொஞ்ச நாளா எதையோ யோசிச்சுட்டே இருக்க. என்கிட்ட எதாவது குறையா ரமா சொல்லுடி என்று இறுக்க அணைத்தான் பாபு.

இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க. என் வாழ்க்கை. நான் கேட்டத தாங்க என்று கண்டிப்புடன் பேசிவிட்டு நகர்ந்தாள்.

மறுநாளும் இதையே திரும்பி சொல்ல அவளின் பிடிவாத குணத்தாலும் வற்புறுத்தியதாலும் நிலைக்குலைந்த பாபு ஒரு கட்டத்தில் மனவலியுடன் உனக்கு விவாகரத்து தானடி வேணும் தருகிறேன் என்று கூறி விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்திட்டு் வீசி எறிந்து விட்டு் பித்தன் போல் அவளை விட்டு கிளம்பினான் பாபு.

புள்ளை இல்லனோ என்னமோ ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க என ஊரும் ஒருபுறம் இவர்கள் நிலையை புறம் பேச, பாபுவிற்கு மறுமணம் செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

அவளின் நினைப்பில் இருந்து மீளவும் முடியாமல், வயதான பெற்றோரின் வற்புறுத்தலால் வேறு வழியின்றி இரண்டாம் திருமணத்திற்கு மிகுந்த மனவலியுடன் ஒப்புக்கொண்டான்.

ஒரு வழியாய் இரண்டாம் திருமணம் முடிந்தது. நாட்கள் நகர்ந்தது, இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.

என்னங்க நாளைக்கு ஸ்கூல் அட்மிஷன் போடனும், பையனுக்கு என்று பாபுவின் இரண்டாம் மனைவி கூறினாள்.

சரி, நாளைக்கு போவோம் என்றான் பாபு.

மறுநாள் பாபு தனது மனைவி குழந்தை =யுடன் சேர்க்கைக்காக பள்ளிக்கூடம் சென்றனர்.பள்ளி அறைக்குள் நுழைந்ததும்,

உள்ளே வரலாமா மேடம் ?

வாங்க சார் என்று தலைமையாசிரியர் கூற பாபுவிற்கு பேரதிர்ச்சி

ரமா, தலைமையாசிரியரா?

மனதில் ஒருவகையான படபடப்பு இருப்பினும் வெளியில் காட்டாமல் அவன் சேர்ப்பு பணியில் மட்டுமே தீவிரம் காட்டினான்.

ரமாவின் கண்களிலும் ஆயிரம் ஏக்கங்கள் பார்வைகள் பரிமாறிக்கொள்ள வார்த்தைகள் பரிமாறாமல் பணிகளை முடித்து கொடுத்தாள் ரமா.

பாபுவும் அவரது மனைவியும் வெளியில் வர,

பாபுவின் மகனிடம் =உன் அப்பா போல நல்லா படிக்கனும்,அவரைப் போல நீயும் வரனும் என்று ரமா கூறியதை அறைக்கு வெளியே நின்றப்படி கவனித்தான் பாபு. அப்போது பாபுவை கடந்து சென்ற இரு ஆசிரியர்கள் புதுசா வந்த தலைமையாசிரியர் ரமா நல்லா பழகுறாங்க,எ ன்ன செய்றது எல்லாருக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்யுது டீச்சர்.

என்ன டீச்சர் சொல்றீங்க.

ஆமா டீச்சர். அவங்க புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது அன்பு கணவரின் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக விவாகரத்து செய்துவிட்டு தனது இறுதி வாழ்நாளை கல்விக்காக செலவழித்துக்கெண்டிருக்கிறார் என்று அவர்கள் பேசிக்கொள்வதை கேட்ட பாபுவின் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் கொட்ட தொடங்கியது.

அன்பு மனைவியை அணைக்க மனம் துடிக்க,

என்னங்க போலாமா,

அப்பா போலாமா என்றதும்,

செய்வதறியாது பிரியாவிடை பெற்றான்..

இல்லறம் என்பது இருவர் புரியும் அறம்.

காதலோடு பிணைக்கப்படும் இருமனங்கள் அமைவது அறிய வரம்.

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *